Sunday, October 03, 2010

எந்திரன் என்றால் எளக்காரமா போச்சா?


1.எந்திரன் மெகாஹிட்டாம்.

இருக்கட்டும், அதுக்காக சன் டிவி லெட்டர் பேட்ல
எந்திரன் துணைனு எழுதனுமா?




2.எந்திரன் ஓடும் தியேட்டர்களுக்கு ரஜினி, ஐஸ் விசிட் ஓகே. அபிஷேக் பச்சன்
எதுக்கு?

யோவ்.... சும்மாவே நம்மாளுங்க பாய்வானுங்க, ஐஸைப் பார்த்தா விடுவாங்களா? ஒரு பாதுகாப்புக்குதான்.





3.நாடோடி மன்னன் ரிலீசின் போது 

MGR- இந்தப் படம் ஓடுனா நான் மன்னன்.ஓடலைன்னா நாடோடி.

எந்திரன் ரிலீசின் போது ரஜினி- இந்தப் படம் ஓடுனா என் சம்பளம் ரூ50கோடி.
ஓடலைன்னா தியேட்டர் ஓனர் போகனும் தெருக்கோடி. (உலகமே அழிஞ்சாலும் சன் டிவியை அழிக்க முடியாதுய்யா)




4.காலைல 11 மணிக்கு வந்த ஆடியன்ஸ் அப்படியே தியேட்டர்ல உட்கார்ந்திருக்காங்களே. கிளம்பலை?

சார், ரிப்பீட் ஆடியன்ஸாம். மறுபடி டிக்கெட் வாங்க Q-ல நிக்கமுடியாதாம்.




5.இவன் யாரு?     நண்பேண்டா.

எங்கே போறிங்க?     எந்திரன்டா.





6.எந்திரன்ல பஞ்ச் டயலாக்ஸ் இல்லையே?

யோவ், எதுக்கு எடுத்தாலும் நுனை(நொட்டு) சொல்லிட்டு. படமே பஞ்சிங்கா இருக்கு,  அப்புறமென்ன?






7.எந்திரன்ல கமல் நடிச்சிருந்தா ரோபோ கேரக்டரை இன்னும் நல்லா காட்டலாம்.

நல்லா காட்டலாம், கல்லா கட்டமுடியுமா?





8.அந்த மேஜிக்மேன் ரஜினி ரசிகர்னு எப்படி சொல்றே?

’மந்திரவாதி’னு நேம்போர்டு வெச்சிருந்தவர் எந்திரன் ரிலீஸ்க்குப் பிற்கு ‘மந்திரன்’னு மாத்தி வெச்சுட்டாரே?





9.இந்த பட்டி மன்றம் ரஜினி ரசிகர்களால் நடத்தப்படுது-னு எப்படி சொல்றே?

“எந்திரனில் விஞ்சி நிற்பது ரோபோ ரஜினியா? சயின்ட்டிஸ்ட் ரஜினியா?” அப்டினு  டைட்டில் வெச்சிருக்காங்களே?





10.சந்திரனுக்குப் போக ராக்கெட் தயாரா?

தலைவரே! எந்திரனுக்கு போக எல்லாரும் ரெடி. சந்திரனுக்குப் போகனும்னா
பம்பறாங்க.




11.  கவுண்டமணி - எந்திரனுக்கு 2 டிக்கெட் வாங்கிட்டு வரச்சொன்னேன். ஒரு  டிக்கெட் இங்கே இருக்கு.இன்னோரு டிக்கெட் எங்கே?

செந்தில் - நான் போய்ட்டு வந்துட்டேன் அண்ணே.




12.மன்னா! கஜானா காலி ஆகிவிட்டது!

அமைச்சரே! அரண்மனை வாசிகள் அனைவரும் எந்திரனுக்கு குடும்பத்தோடு போய்  கும்மி அடிச்சா பின்னே என்ன ஆகும்?




13.மன்னா! என்ன ஆச்சரியம்? போருக்குத் தயாராகிவிட்டீர்களா?

ம்ஹீம். எந்திரனுக்கு தயாராகிவிட்டோம்.



டிஸ்கி 1 -- எளக்காரம் எனும் வார்த்தை தமிழில் இல்லை.இளக்காரம் தான்.எந்திரன் - எளக்காரம் என் எனாவுக்கு எனா போட்டதால் அப்படி ஆகிவிட்டது,(பெரிய எதுகை மோனைக்கவிஞர் இவரு..)தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்க.

டிஸ்கி 2 - மைனஸ் ஓட்டு போடும் நண்பர்கள் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையைத்தேடி குழம்ப வேண்டாம்,டைட்டிலை க்ளிக் பண்ணவும்

Saturday, October 02, 2010

நாட்டுநடப்பும் நையாண்டி சிரிப்பும்

 
1.  முதல்வர் கருணாநிதி: வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள, வெள்ளைப் புலிக் குட்டிகள் மூன்றில் ஆண் புலிக்குட்டிக்கு, செம்பியன் என்றும், பெண் புலிக் குட்டிகளுக்கு இந்திரா, வள்ளி என்றும் பெயர்கள் சூட்டப்பட்டன.

நையாண்டி நாரதர் - தலைவரே,காங்கிரசுக்கும் புலிக்கும்தான் ஆகாதே,எதுக்கு தேவை இல்லாம இந்திரா பேரை இழுக்கறீங்க.என்ன கோபமோ காங்கிரஸ் கூட.


2.  பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இனி தமிழகத்தை, "தமிழ்நாடு என்ற குடிகார நாடு' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கை அமல்படுத்தி முதல் ஆணை வெளியிடப்படும்.



நையாண்டி நாரதர் - முதல்ல அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.


 

3.  இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா. பாண்டியன் பேச்சு: டில்லியில், நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக துவக்கத்தில் 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், காங்கிரசுக்குள்ளிருந்து கூட எதிர்ப்பு வந்ததால், 71 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஆனாலும், பாலம் இடிகிறது, மேற்கூரை சரிகிறது. அந்தளவிற்கு ஊழல் நடந்துள்ளது. குற்றத்தை மூடி மறைப்பது நாட்டிற்கு நல்லதல்ல.

நையாண்டி நாரதர் -விடுங்க,காமன்வெல்த்னா என்ன ?காமனா (common) யார் யாருக்கு வெல்த் (wealth) பார்க்கறதுதானே.


4.  தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதி பேச்சு: தகவல் கேட்பவர்கள் தாக்கப்படுகின்றனர் என்றால், அதை ஆணையம் வன்மையாகக் கண்டிக்கிறது. தாக்கப்படுவது என்பது ஒரு குற்ற நிகழ்வு. இது குறித்து போலீஸ் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்குப் புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம்.

நையாண்டி நாரதர் -மனசுக்குள்ள ஈரோடு என் கே கே பி ராஜானு நினைப்பா?அண்ணனே இப்ப ஆஃப் ஆகி இருக்காரு,உங்களுக்கென்ன?




5.  ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: மக்களின் மத உணர்வுகள் சம்பந்தப்பட்ட பிரச்னையில், சட்டத்தின் அளவுகோலை மட்டும் வைத்து தீர்வு காண இயலாது. எனவே, அயோத்தி தீர்ப்பில் வெற்றி பெற்று விட்டோம் என்று ஒரு தரப்பினர் கொண்டாடுவதோ, விழா எடுப்பதோ நிரந்தர சமாதானத்துக்கு குந்தகம் ஆகிவிடக் கூடாது. இந்து - முஸ்லிம் ஒற்றுமைதான், இந்தியாவின் எதிர்கால அமைதிக்கு அடிப்படை என்பதை நினைவில் கொண்டு இரு தரப்பினரும் செயல்பட வேண்டும்.

நையாண்டி நாரதர் - அதெல்லாம் இருக்கட்டுங்க,2011 ல உங்களுக்கு எத்தனை சீட்னு அம்மாகிட்ட பேசீட்டீங்களா?


6.  இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து: நாட்டின் அமைதிக்கும், ஒருமைப்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கும் ஊறு விளைவிக்காமல், இரு தரப்பினரிடையே சுமுக உறவை ஏற்படுத்தும் வகையில் தீர்ப்பு உள்ளது. தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய மூன்று மாத கால அவகாசம் என்பதும் ஜனநாயக கண்ணோட்டத்தில் பாராட்டத்தக்கது. மதச் சார்பற்ற நாடு இந்தியா என்பதற்கு முன்னுதாரணமாக விளங்க இந்த தீர்ப்பு வழிவகை செய்யும்.

நையாண்டி நாரதர் - மதச் சார்பற்ற நாடு இந்தியாஎன்பது சரிதான்,ஆனா இங்கேதானே மதத்துக்காக அடிச்சுக்கறாங்க?




7  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் பேட்டி: நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு பார்வையாளராக இருக்கக் கூடாது. மத்திய அரசில், மாநில அரசும் அங்கம் வகிக்கும் சூழலில், இந்த பிரச்னையை துரிதமாக முடிவிற்கு கொண்டு வருவது தமிழக அரசிற்கு நல்லது


நையாண்டி நாரதர்   -பார்வையாளர் என்பதற்கு ஆங்கிலத்தில் ஆடியன்ஸ் எனில் கலைஞர் இதில் ரிப்பீட் ஆடியன்சாக இருப்பார்.கூட்டணி முடிவாகும்வரை.

 


8.  வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் ராமமூர்த்தி அறிக்கை: தி.மு.க., அரசின் தொடர் மின் வெட்டால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இலவச மின் மோட்டார் என்ற அரசின் அறிவிப்பு விவசாயிகளின் காதில் பூ சுற்றும் வேலை. அரசு வழங்கும் மின் மோட்டார்களை, "3 பேஸ்' மின்சாரம் இருந்தால் தான் பயன்படுத்த முடியும் என்று, மின் வல்லுனர்கள் கூறுகின்றனர். தற்போது பயன்படுத்தும் மோட்டாருக்கு, "2 பேஸ்' மின்சாரம் இருந்தால் போதும்.

நையாண்டி நாரதர்   - அரசியல்வாதிகளும் மின்சாரம் போல பல ஃபேஸ்கள் உண்டு.அவங்களோட மறுமுகம் எலக்‌ஷன் முடிந்த பிறகு தெரியும்.



9. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன்: குடிசைகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடு கட்டித் தரும் தமிழக அரசின் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், தற்போதைய கட்டுமானப் பொருட்களின் விலையோடு ஒப்பிடும்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு ஒதுக்கியுள்ள தொகையைக் கொண்டு, கோழிக்கூண்டு அல்லது புறாக்கூடு கட்டுவதற்கு கூட முடியாது.


நையாண்டி நாரதர்   - பேர் சொல்ல திட்டம் கொண்டுவருவதை விட சும்மா பேருக்குதான் நிறைவேத்தறாங்க.



10. எந்திரன் பட வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் மொட்டை அடித்தனர். _சன் டி வி செய்தி.


நையாண்டி நாரதர்   - அடடா,அவசரப்பட்டுட்டாங்களே,அதுதான் தியேட்டர்லயே ரூ 300க்கு டிக்கட் குடுத்து அவங்களே  மொட்டை அடிச்சு விடறாங்களே/?




ட்விட்டர்,தியேட்டர்,குவாட்டர்,மேட்டர் (ஜோக்ஸ்)





   
  1  .குடிசை மக்களுக்காக தலைவர் என்ன செஞ்சிருக்கார்?      
’குடி’ மக்களுக்குத்தான் ஏகப்பட்ட சலுகைகள் அறிவிச்சிருக்காரே,போதாதா?   ------------------------------- 
 
2  .தலைவரே,ரூ 400 கோடி செலவுல பிளட் பேங்க் ஆரம்பிக்கப்போறாங்களாம்.  
அப்போ லோன் கேட்டா தருவாங்களா?  -----------------------------------  
3.  தலைவரே!அரசியல்வாதிகள்ல 3 பேருக்கு ஒரு ஆள் ஊழல்வாதியாம்,ஒரு புள்ளி விபரம் சொல்லுது.   
அப்போ நம்ம கட்சில 2 துரோகிகள் இருக்காங்களா?  -------------------------------  
4.  நிருபர் - மேடம்,இந்தப்படத்துல உங்க டிரஸ்ஸிங்க் சென்ஸ் ரொம்ப கம்மி.
   
    நடிகை - இவ்வளவுதானா?டிரஸ்ஸே ரொம்பக்கம்மியா போட்ட மாதிரி ஏன் ஃபீல் பண்றீங்க?  -----------------------------------  
5.  முன்னே மாதிரி ஈரோடு அமைதியான நகரமா இருக்கறது இனி டவுட்தான். எப்படி சொல்றே?   
புது கலெக்டர் பேரு சவுண்டய்யாவாம்.  ----------------------------------  
6.  மேனேஜர் சார்,3 மணி நேரம் பர்மிஷன் குடுங்க.   
எதுக்கு?   
டைட்டானிக்ல பாட்டியா நடிச்ச பாட்டி இறந்துட்டாங்களாம்,டைட்டானிக் போய் மவுன அஞ்சலி செலுத்தனும் -----------------------------
7.  டைரக்டர் சார்,உங்க படத்துல கிராஃபிக்ஸ் காட்சிகள் சின்னப்பிள்ளத்தனமா இருக்கே,ஏன்?   
அது வந்து.... ம்..,சின்னப்பசங்க கூட ரசிக்கட்டும்னுதான்.  --------------------------  
8.  ஜோசியரே,எனக்கு டைம் சரி இல்லை,கல்யாணத்துக்குப்பிறகு எனக்கு டைம் எப்படினு ஜாதகம் பார்த்து சொல்லுங்க.   
பாக்கவே தேவை இல்லை,மேரேஜ் ஆனாலே எல்லா ஆண்களுக்கும் கெட்ட நேரம்தான்.  ---------------------------------  
. 9.  அயோத்தி தீர்ப்பு டைம்ல மாயவரம்,அயனாவரம் இந்த ஏரியாக்கள்ல மட்டும் போலீஸ் பந்தோபஸ்து ஜாஸ்தியா இருக்கே,ஏன்?   
கலவரம்க்கு பக்கமா இருக்கே?(RELATED)  -------------------------------  
10.  குவாட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்துட்டேன்.   
ஏன்? 
மல்லாக்கப்படுத்தா மச்சினி ஞாபகம் வருது .  ----------------------------  
11.தலைவர் சிறந்த இந்தியக்குடிமகனா?   
ஃபாரீன் சரக்கும் அடிப்பாரு.அதனால இண்ட்டர்நேஷனல் குடிமகன்னு சொல்லலாம்.  ------------------------------  
12.  டெய்லி தண்ணி அடிச்சாதான் எனக்கு தூக்கமே வருது,உனக்கு?   
போரிங்க் பைப்ல (அடி பம்பு) தண்ணி அடிச்சுக்குடுத்தாதான் மனைவிட்ட இருந்து எனக்கு சாப்பாடே வருது.  -----------------------------  
13.  தண்ணி அடிச்சா எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுதே ,அது ஏன்?   
அது தெரியல,எனக்கு தண்ணி அடிச்ச பிறகு எதுவுமே தெரியறதில்லை,ஃபிளாட் ஆகிடறேன்.  --------------------------------  
14.திருப்பூர் குமரனுக்கும்,நம்ம தலைவருக்கும் என்ன வித்யாசம்?   
அவர் கொடி காத்த குமரன்,இவரு குடி காத்த தலைவரு.  -------------------------------  
15.என்னை 3 ஃபிகருங்க லவ் பண்ணுதுடா மாப்ள.   
பெரிய அயோத்தி லாண்ட் பிராப்ளம்.3 பேருக்கும் டிவைட் பண்ணி தரச்சொல்வாங்கனு நின்ச்சியா?  -----------------------------  
16.  தலைவரே,அயோத்தி தீர்ப்பு பற்றி என்ன நினைக்கறீங்க?   
மூணா பிரிச்சதுல ஒரு பங்கை பொறம்போக்கு நிலமா அறிவிச்சிருந்தா நாமலாவது வளைச்சுப்போட்டிருக்கலாம்.  -------------------------  
17.  காதல்,போலீஸ் என்ன வித்யாசம்?   
அது சப்ப மேட்டரு,இது தொப்ப மேட்டரு.  ------------------------------  
18  தலைவர் சரியான கஞ்சனா இருக்காரே?   
ஏன்?   
தண்ணி அடிக்கக்கூப்பிட்டா சரக்கு செலவு உன்னுது,முறுக்கு செலவு மட்டும் என்னுதுங்கறாரே? ----------------------------------

Friday, October 01, 2010

சூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடைத்தெறிந்த கோலிவுட் செண்ட்டிமெண்ட்ஸ்

எதிர்பார்த்ததைவிட எந்திரன் மெகா ஹிட் ஆகி இருக்கிறது.ரஜினி ரசிகர்கள்,பொதுமக்கள்,பதிவுலக நண்பர்கள்,பத்திரிக்கை உலக விமர்சகர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி கமெண்ட்ஸ்தான் வருகிறது.அது - படம் சூப்பர்,பின்னிட்டாங்க என்பதுதான்.

படம் ரிலீஸ் ஆகும் முன் ஆளாளுக்கு ஒரு மாதிரி கதை சொல்லி குழப்பினார்கள்.பிரம்மாண்டமாக எடுத்தாலும் கதையில் சொதப்பி கோட்டை விடுவார்கள்,எடுபடாது என.எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி சூப்ப்ர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது.

கோலிவுட்டில் பல செண்ட்டிமெண்ட்ஸ் இருக்கிறது.அவற்றை எல்லாம் எப்படி எந்திரன் முறியடித்தது என பார்ப்போம்.


1.ஐஸ்வர்யாராய் ஹீரோயினாக நடித்த எந்த தமிழ்ப்படமும் சூப்பர்ஹிட் ஆனதில்லை.ஜீன்ஸ் படம் ஷங்கருக்கே லேசான சறுக்கல்தான்.இருவர் மணிரத்னத்தின் நல்ல முயற்சி என்றாலும் கமர்ஷியல் ஹிட் இல்லை.கண்டுகொண்டேன் .கண்டுகொண்டேன் படம் நல்ல கதை ,ஆனால் ஓடலை .முக்கியக்காரணம் அதில் அஜித்துக்கு ஜோடியாக போடாமல் அப்பாஸ்க்கு ஐசை ஜோடியாகப்போட்டது என பலர் சொன்னார்கள்.ராவணன் அட்டர்ஃபிளாப்.இத்தனையையும் மீறி ஐஸ் நடித்த முதல் மெகா ஹிட் தமிழ்ப்படம் எந்திரன்.

2.ஷங்கருக்கு பர்சனாலாக ஒரு செண்ட்டிமெண்ட் உண்டு.அவருக்கு ராசியான எண் 8.அவர் ரிலீஸ் செய்யும் அனைத்து படங்களையும் 8 அல்லது கூட்டுத்தொகை 8 வரும் தேதிகளில் மட்டுமே ரிலீஸ் செய்வார்.அதாவது  8, 17, 26 இப்படி.ஆனால் முதன் முதலாக 1 ந்தேதில வந்து ஹிட் ஆகி இருக்கு.

3.ஷங்கர் படம் என்றால் இரண்டே ஃபார்முலாதான் ஒன்று ஊழல்,அநீதியை தட்டிக்கேட்கும்ஹீரோவின் கதை(ஜெண்டில்மேன்,இந்தியன்,முதல்வன்,அந்நியன்,சிவாஜி) அல்லது ஜாலியான லவ் ஸ்டோரி(காதலன்,ஜீன்ஸ்,பாய்ஸ்).இந்தப்படம் 2 சப்ஜெக்ட்டும் இல்லை.சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்.தமிழில் வந்து ஹிட் ஆன முதல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்.

4.அண்ணாம்லை படத்துக்குப்பிறகு ரஜினி பஞ்ச் டயலாக் பேசாத படமே இல்லை.அதற்கு அமோக வரவேற்பு இருந்ததால் அதே ஃபார்முலாவை ஆளாளுக்கு பின்பற்ற ஆரம்பித்தார்கள்.ஆனால் சந்திரமுகியில் பன்ச் டயலாக் இல்லாவிட்டாலும் அவர் பேசிய சூப்பர் ஹிட் டயலாக்கான லகலக லக பன்ச் டயலாக் என்ற கேட்டகிரியில்தான் சேர்த்த வேண்டும்.ஆனால் எந்திரனில் நோ பஞ்ச் டயலாக்.நோ ஸ்டைல்.ஒன்லி கேரக்டர்.
5.அதிக எதிர்பார்ப்பைக்கிளப்பிய எந்தப்படமும் ஹிட் ஆனதே இல்லை,அதே போல் நீண்ட காலத்தயாரிப்பில் இருந்த படங்களும் தோல்வியையே தழுவி இருக்கின்றன.(விதிவிலக்கு -கேப்டன் பிரபாகரன்.,இணைந்த கைகள்)ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என கமல் ரசிகர்கள் கிண்டல் அடித்தபோது நான் கூட கொஞ்சம் பயந்தேன்.ஆனால் அனைத்து எள்ளல்களையும் தவிடு பொடி ஆக்கி எந்திரன் ஹிட் ஆகி இருக்கிறது.


1.ஆளவந்தான் (2 வருடங்கள் தயாரிப்பு)ரிசல்ட் டப்பா
2.நாட்டுக்கு ஒரு நல்லவன் (1 வருடதயாரிப்பு) ரிசல்ட் ஃபிளாப்.
3.குற்றப்பத்திரிக்கை(16 வருடங்கள் சென்சார் பிரச்சனை)குப்பை
4.பீமா(3 வருடங்கள் )சுமார் ஓட்டம்
5.ராவணன் (2 வருடங்களுக்கு மேல்) அட்டர் ஃபிளாப்

6.கடந்த 20 வருடங்களில் ஈரோடு அபிராமி தியேட்டர் ரஜினி படத்தை மிஸ் பண்ணியதே இல்லை.எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் ரஜினி படம் கண்டிப்பாக எடுத்து விடுவார்கள்.சிங்கம் படம் ஓடும்போது சன்  பிக்சர்ஸ் நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக எந்திரன் படத்தை எடுக்காமல் கோட்டை விட்டது அபிராமி நிர்வாகம்.செண்ட்டிமெண்ட்டாக அதை சொல்லி சிலர் பயமுறுத்தினார்கள்.அதையும் தவிடுபொடி ஆக்கியது எந்திரனின் மெகா வெற்றி.


7.தீபாவளி,பொங்கல்.தமிழ்ப்புத்தாண்டு போன்ற பண்டிகை தினங்களில் வெளிவாராமல் சாதாரணமாக வந்து ஹிட் ஆன படம் என்ற பெருமையும் உண்டு.ரஜினி படம் ரிலீஸ் ஆனாலே அது தான் ரசிகர்களுக்கு தீபாவளி என்பது வேறு விஷயம்.

8.தமிழ் எழுத்தாளர்களின் நாவலோ,சிறுகதையோ இதுவரை படமாக்கப்பட்டு சூப்பர்ஹிட் எதுவும் ஆனதில்லை.(விதிவிலக்கு -உதிரிப்பூக்கள்,தில்லானா மோகனாம்பாள்)அமரர் எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா,மீண்டும் ஜீனோ இரண்டின் கலவை தான் எந்திரன்.(ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்து ஹிட் ஆனது)

1. கல்கி வார இதழில் கரையெல்லாம் செண்பகப்பூ எனும் தொடர் சூப்பர்ஹிட் ஆனது,அது சுஜாதாவின் சம்மதத்தின் பேரில் பிரதாப்போத்தன் ஹீரோவாக நடிக்க அதே டைட்டிலில் படமாக்கப்பட்டு தோல்வி அடைந்தது,காரணம் ஹீரோ செலெக்‌ஷன்.கணெஷ் மாதிரி ஒரு புத்திசாலி கேரக்டர் பிரதாப் மாதிரி ஒரு லூஸ் தனமான (மீண்டும் ஒரு காதல் கதை)ஆள் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

2.மோகமுள் (தி.ஜானகிராமன்) அதே பெயரில் படமாக்கப்பட்டு விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வியாபார ரீதியில் தோல்வி.

3.அதே போல் காயத்ரி,ப்ரியா, 2ம் ரஜினி படங்கள் சுஜாதா கதை .இதில் 2 படங்களும் ஹிட் தான் என்றாலும் சூப்பர்ஹிட் இல்லை.

4.சுஜாதாவின் சூப்பர்ஹிட் நாவலான பிரிவோம் சந்திப்போம் கதையில் வந்த மதுமிதா,ரத்னா கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பை தமனாவோ,ருக்மணியோ,டைரக்டரோ ஏற்படுத்தமுடியவில்லை.அதனால் படம் வந்த சுவடே தெரியாமல் போனது.

5.தங்கர் பச்சானின் கல்வெட்டு கதை  (அழகி)ஹிட்.

6நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் கதை சேரனின் சொல்ல மறந்த கதை யாகி ஜெயித்தது.

7/ஜேயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் கதை படமாகி ஹிட்.

8.எழுத்தாளர் லட்சுமி எழுதிய சிறை கதை அதே பெயரில் படமாகி ஹிட்.

9.பாக்யராஜின் பவுனு பவுனுதான் தொடராக பாக்யாவில் வந்து பாராட்டை அள்ளினாலும் படம் படுதோல்வி.

இப்போது ஒரு எழுத்தாளரின் கதை சூப்பர் ஹிட் ஆகி ஓடுவதில் சந்தோஷம்.அமரர் சுஜாதா ஆத்மா சாந்தி அடையவும்,அவரது குடும்பம் பெருமைப்படவும்,புதிய எழுத்தாளர்களின் கதைக்கு டிமாண்ட் ஏற்படவும் இப்பட வெற்றி துணை புரிந்தால் மகிழ்ச்சி.

எந்திரன் விமர்சனத்தை முதன்முதலில் எழுதி பதிவிடுவது எப்படி?

போட்டி நிறைந்த இந்த உலகில் நாம் தனித்துத்தெரிய எதிலும் முந்திக்கொள்ள வேண்டும்.டாக் ஆஃப் த டவுன் ,கிராமம் எல்லாம் இப்போ எந்திரன்தான்.அந்தப்படத்தை முதல் ஷோவே நிறைய பேர் பார்த்தாலும் அவர்களை முந்திக்கொண்டு முதல் விமர்சனத்தை எப்படி பதிவு போடுவது என்று (இல்லாத)மூளையை கசக்கி யோசித்தேன் 3 ஐடியாக்கள் தோன்றின.


வழி 1.விடிகாலை 3 மணிக்கு எழவும்.(என்ன எழவுடா இது என புலம்பாமல்..)குளித்து மாற்றுத்துணி எடுத்துக்கொள்ளவும்.(கூட்ட நெரிசலில் மீண்டும் ஒரு முறை டிரஸ் மாற்ற நேரிடும்.)ஓ சி யில் ஒரு லேப்டாப் ஏற்பாடு செய்துகொள்ளவும்.அதில் முதலில் படத்தின் ஸ்டில்ஸை டவுன்லோடு பண்ணி ஸ்டோர் பண்ணி வைத்துக்கொள்ளவும்.டைட்டிலை ரெடி பண்ணி பக்காவாக தயாராகவும்.
தியேட்டரின் ஓரமாக சீட் பிடித்துக்கொள்ளவும்.(அப்பதான் சார்ஜ் போட பிளக்பாயிண்ட் கிடைக்கும்.)பொதுவாக தமிழ் சினிமாவில் படம் போட்ட 20 நிமிடத்தில் உத்தேசமாக கதை தெரிந்துவிடும்.அது தெரிந்ததும் படத்தோட கதை என்னன்னா ...... என டைப் செய்து 10 லைனுக்குள் எழுதி இடுகையை வெளியிடவும்.பொதுவாக தமிழ் மணத்தில் அரைமணி நேரம் கழித்தே இடுகை ஜாயிண்ட் ஆகும்.அதற்குள் இடைவேளை வந்து விடும்.
இடைவேளை 15 நிமிஷம் இருக்கும்.அதற்குள் மீதிக்கதையை டைப் செய்து இடுகையை எடிட் செய்து மீண்டும் ரீ ரிலீஸ் செய்யவும்.ஈரோட்டில் விடிகாலை 4.30 மணிக்கு முதல் காட்சி.காலை 6 மணிக்குள் விமர்சனம் வந்து விடும்.

நீங்கள் படம் பார்த்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு உட்கார்ந்து விமர்சனம் எழுதினால் மதியம் ஆகி விடும்,நான் சொன்ன வழியில் செய்தால் நீங்கள்தான் நெம்பர் ஒன்.

 
வழி 2. பணம் செலவு செய்யாமலேயே விமர்சனம் செய்ய ஆசையா?அதற்கும் வழி உண்டு.ஏர்செல் டூ ஏர்செல் 24 மணி நேரமும் ஃப்ரீ கனெக்‌ஷன் எடுத்த ஒரு நெம்பர் உங்களிடமோ உங்கள் நண்பரிடமோ இருக்கும்.(மாதம் ரூ 500 வாடகை).அந்த சிம் உள்ள ஃபோனை படம் பார்க்கப்போகும் ஒரு நபரிடம் உங்கள் இன்னொருஏர்செல்  நெம்பருக்கு கால் செய்து ஆன் பண்ணி ஸ்பீக்கர் ஃபோன் ஆன் செய்து குடுத்து விடவும்.(ஜாக்கிரதை இந்த ஐடியாவில் செல்ஃபோன் அபேஸ் ஆகும் ரிஸ்க் உண்டு.படம் ஓட ஓட கதை வசனம் நீங்கள் டைப் பண்ணலாம்.இடைவேளையின் போது நபரிடம் ஃபோட்டோகிராஃபி எப்படி என கேட்டுக்கொள்ளவும்.ஏனெனில் ஒளிப்பதிவை நீங்கள் பார்க்கும் வாய்ப்பு இல்லை.


வழி 3 - லேப்டாப்பும் ஓசியில் கிடைக்கவில்லை,செல்ஃபோனும் கிடைக்கவில்லையா?கவலை வேண்டாம்.படம் எத்தனை மணிக்கு விடும் என தியேட்டர் வாட்ச் மேனிடம் கேட்டுத்தெரிந்து கொண்டு வாசலில் காத்து நிற்கவும்.படம் முடிந்து வெளியே வரும் நபர்களில் தோதான ஒரு நபரை தேர்ந்தெடுக்கவும்.பெரும்பாலும் அவர் வேலை வெட்டி இல்லாத வெட்டாஃபீசாகத்தான் இருப்பார்,அவரை டீக்ககடைக்கு அழைத்து செல்லவும்.ஒரு டீயும் ,பஜ்ஜியும் வாங்கிக்குடுத்து படத்தை பற்றி அபிப்ராயம் கேட்கவும்.டைரியில் மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ளவும்.பிறகு எதற்கும் இருக்கட்டும் என தியேட்டர் ஆப்பரேட்டரை போய் பார்க்கவும்,அண்ணே,படம் தேறுமா என ரிசல்ட் கேட்டு வைத்துக்கொள்ளவும்.அப்பாடா,இனி விமர்சனம் ரெடி.




டிஸ்கி- மேற்கூறிய வழிமுறைகளில் ஏதேனும் பிழை ஏற்பட்டு விமர்சனம் மிஸ்கால்குலேஷன் ஆனால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.