Wednesday, September 01, 2010

ராமர்-சினிமா விமர்சனம் -நித்யானந்தாவின் கதை?

அன்புள்ள இயக்குநர் ஆதிராஜா அவர்களுக்கு வணக்கம்.உங்க படம் ராமர் டைட்டிலும்,படத்தோட ஒன்லைன் ஸ்டோரியும் நல்லாருக்கு.ஆனா படத்தோட திரைக்கதை,ட்ரீட்மெண்ட் எல்லாம் ரொம்ப சொதப்பல் ஆகிடுச்சே?பகவத்கீதைல கிருஷ்ணன் சொன்ன மாதிரி நல்ல விஷயங்களை முதல்ல பார்ப்போம்.

முதல்ல படத்தோட ஒன்லைன் ஸ்டோரி..ராமருக்காக சீதை தீ குளித்தாள் அன்று.சீதை சொன்னதுக்காக ராமர் தீ குளித்தார் இன்று.கேட்கவே ரொம்ப நல்லாருக்கு.ஒரு நல்ல காதல் கதைக்கான கான்செப்ட் இதுல அடங்கியிருக்கு.
ஹீரோ கற்றது தமிழ் ஜீவா மாதிரி தோற்றத்திலும்,கெட்டப்பிலும்.முதல் படம் என்ற அளவில் ஓகே தான்.ஹீரோயின் கேரளத்துப்பைங்கிளி.நந்திதாதாஸ் மாதிரி சாயல்,கண்ணியமான தோற்றம்,நல்ல நடிப்புத்திறமை,டீசண்ட் லுக்.

ஹீரோவுக்கு நித்யானந்தா என பெயர் வைத்தது சும்மா ஒரு பரபரப்புக்காக என நினைக்கிறேன்,மற்றபடி அவருக்கும் ,படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஹீரோயினின் பெயரும்,கேரக்டரும் பூ வேலி கவுசல்யா மாதிரி.(மஹா ).

படத்தோட ஓபனிங்லயே ஒரு நல்ல காமெடி சீன் வெச்சு இருக்கீங்க.501 சோப் வேணும்னு கேட்பதற்கு மவுன விரதம் இருக்கும் ஒரு அப்பாவிபையன் ஒரு மளிகைக்கடை மலையாளக்குட்டியிடம் எப்படி கேட்பான்?அது ஒரு டீசண்ட்டான ஏ காமெடி.


RAMAR

அவ்வளவுதான் படத்துல 

இருக்கற பிளஸ்.இனி எல்லாம் மைனஸ்தான்.கோகுலத்தில் சீதை கார்த்திக் மாதிரி இந்தப்பட ஹீரோவும் பார்க்கற பொண்ணை எல்லாம் அடைய நினைக்கறவன்.ஹீரோயினிடம் அவனே அதை ஒத்துக்கொள்வது போல் ஒரு சீன் வேற வெச்சிருக்கீங்க.”மனசுக்குப்பிடிச்ச எந்தப்பெண்ணை பார்த்தாலும் நான் கேட்கற முத கேள்வி படுக்க வர்றியா?” என ஹீரோ சொல்லும்போது நமக்கே அவன் மேல் கோபம் வருது,ஹீரோயினுக்கு எப்படி இருக்கும்?ஹீரோவுக்கு 20 வயசுதான் இருக்கும்,ஆனா ஹீரோயின் ரொம்ப மெச்சூர்டா 28 வயசு மதிக்கத்தக்கவங்களா வர்றாங்க.இதை நீங்க கவனிசிருக்கலாம்.


கேமரா ரொம்ப சுமார் 1980 களில் வந்த படங்கள் போல் ரொம்ப பழைய ஸ்டைல் கேமரா ஆங்கிள்கள்.ஹீரோ வரும்போது நீங்க யூஸ் பண்ணி இருக்கற பேக்கிரவுண்ட் மியூசிக் கொடி பறக்குது படத்துல ரஜினிக்கும்,ரெட் படத்துல அஜித்துக்கும் யூஸ் பண்ணுனது.


காதல் தேசம் படத்தில் வருவது போல் 2 நண்பர்கள் ஒரே பொண்ணை காதலிக்கிறார்கள்.கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் வருவது போல் காட்சி அமைப்புகள்.நண்பனின் காதலி என தெரிந்ததும் அவனை போட்டுத்தள்ளும் அளவு ஹீரோவுக்கு வெறி.இந்த இடத்தில்தான் நீங்க ஸ்லிப் ஆகிட்டீங்க.பிரியமுடன் படத்துல காதலுக்காக கொலையே செய்யற அளவு ஹீரோ போனாலும் படம் பார்க்கறவங்க அதை ஏத்துக்கற மதிரி ட்ரீட்மெண்ட் இருந்தது,ஆனா இந்தப் படத்துல அது சுத்தமா இல்லை.

நீட்டான காதல் கதையா இதை எடுத்திருக்கலாம்.எதுக்கு தேவை இல்லாம ஹீரோ தாதாவின் அடியாள் என காண்பித்து தேவை இல்லாமல் வன்முறை,சண்டை,கத்திக்குத்து?நண்பனின் காதலிதான் தன் காதலி என ஹீரோவுக்கு ஏன் 6 ரீல் வரை தெரியாமலே போச்சு எனதற்கு நீங்கள் படத்தில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ஒளிப்பதிவாளர் மிக முக்கியமாக 2 தவறுகள் செய்திருக்கிறார்.1.ஹீரோயினுக்கு வலது புருவத்துக்கு கீழ் ஒரு தழும்பு இருப்பது தெரிந்தும் ஏன் க்ளோசப் ஷாட்களை அங்கேயே வைத்து அழகியல் பதிவு மரபை உடைக்க வேண்டும்?ரைட் க்ளோசப் ஷாட்டே வைக்காமல் ,லெஃப்டிலேயே கடைசி வரை வைத்திருக்கலாம்.அடுத்து வில்லன் க்ரூப் அடிக்கடி சரக்கு அடித்து,நான் - வெஜ் சாப்பிடுவதை டைட் க்ளோசப்பில் அடிக்கடி ஏன் காண்பிக்கறீங்க?சைவப்பார்ட்டிகளுக்கு குமட்டுது.(ஒரு சீனில் கேமரா எச்சில் இலை மீது மீந்து போன சிக்கன் பீஸ்களை 20 செகண்ட் காண்பிக்கிறது)

ஒரு சீனில் ஹீரொ ஹீரோயினை கடலில் தள்ளி கொலை செய்வதாய் பயமுறுத்துகிறார்.அப்போ 6 இஞ்ச் ஆழம் மட்டும் உள்ள கடற்கரையோரம் எடுத்தது செம காமெடி.பேட்ச் ஒர்க்கிலாவது லாங்க் ஷாட் வைத்து சமாளித்திருக்கலாம்.

மஹாவா?உன் உயிரா? என ஹீரோவிடம் நண்பன் கேட்கும் சீன் விஜய் நடித்த லவ் டுடே படத்தில் வரும் ஃபேமசான ”ஃபிரண்டா?ஃபிகரா?” டயலாக்கின் காப்பி.

நல்ல எமோஷன் பாட்டு என நீங்கள் வைத்த அடி உனக்குள் பாட்டு முகவரி படத்தில் ஏ நிலவே ஏ நிலவே, நீ விண்ணை விட்டு பாட்டின் சுடப்பட்ட வடிவமே. 






காதலை சொல்லும் அந்த முக்கியமான சீனில் ஹீரோயின் 80 % நடிப்பை

வெளிப்படுத்தும்போது ஹீரோ மட்டும் 10% நடிப்பை மட்டுமே கொடுத்து சொதப்பியதை நீங்கள் கவனிக்கவில்லையா?

காதல் வெண்ணிலா சோகப்பாட்டில் எதற்கு ஸ்டெப் டான்ஸ் வைத்தீர்கள?ஸ்டோரி டிஸ்கஷனில் டான்ஸ் மாஸ்டரிடம் சிச்சுவேஷனை நீங்கள் சரியாக சொல்லவில்லையா? 

படத்தில் வரும் ரசிக்கத்தக்க வசனங்களில் சில.

1.டேய்,அப்படி அவ கிட்டே நீ என்னத்தை கண்டே?

முதமுதலா நான் என்னை ரசிச்சதே நான் அவளைப்பார்த்த பின்புதான்.

2.அன்பால சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை,அதுவும் ஒரு பொண்ணோட அன்பால..

3.யார் மேல நாம அதிகம் அன்பு வைக்கிறமோ ,அவங்க நம்மை விட்டு சீக்கிரமே பிரிஞ்சிடறாங்க.

4.ஆண்கள் அழிஞ்சு போறது ஏன் தெரியுமா? 5 நிமிஷ சுகத்துக்காக 24 மணி நேரமும் பொண்ணு பின்னாலயே அவன் சுத்தறதாலதான்.

5. ஆத்திரத்தோட அலசற எந்த விஷயமும் தீர்வைத்தராது

6.சில பேர் கண்ணீ ர்க்கு ஆறுதல் கிடைக்கும்,ஆனா என் கண்ணீ ரே உனக்கு ஆறுதலா இருக்கு ,இது விதியின் விளையாட்டு.

7. ஒருத்தன் சந்தோஷமா இருக்கறதே அவனுக்குப்பிடிச்ச பொண்ணோட மடியில படுத்திருக்கறதுதான்.



சவுண்ட் ரிக்கார்டிங் முடித்து பின் எடிட்டிங் டேபிள்க்கு நீங்க போகவே இல்லைனு நினைக்கிறேன்.ஒரு சீன்ல ஹீரோயின் பளார்னு அறையறா.25 செகண்ட் கழிச்சு சத்தம் கேட்குது.வில்லனின் கொடூரத்தைக்காட்ட கை நீட்டிப்பேசியவன் கையை ஹீரோ வெட்டுவ்து கொடூரம்+தேவை இல்லாத சீன்.

சோகம் ஆகட்டும்,கோபம் ஆகட்டும் அதை படத்தின் பாத்திரங்கள் வெளிப்படுத்துவது ரொம்ப அளவுக்கதிகம்.ஓவர் எக்ஸ்போஷன்.இது சினிமாவா?டிராமாவா?

சத்ரியன் படத்தில் திலகன் விஜய்காந்திடம் நீ பழைய ஏ சி பன்னீர் செல்வமா வரனும் என்பார்.மிக ரசனையான சீன் அது.அந்த சீனை இந்தப்படத்தில் வைத்திருக்கிறீர்கள்.எடுபடவில்லை.

புதிதாய் ஒரு பூகம்பம் என் நெஞ்சில் பூத்தது பாட்டு கூட அமர்க்களம் படத்தில் சத்தம் இல்லாத பாட்டின் உல்டாவே.

பொதுவாக காதலி கத்திக்குத்து பட்டுக்கிடக்கையில் காதலன் அவளைக்காப்பா
ற்றுவானா?வில்லன் க்ரூப்பை அழித்து விட்டு பிறகு சாவகாசமா போவானா?லாஜிக் இல்லா மேஜிக் அது.
ஹீரோவைத்தேடி வில்லன் க்ரூப் லிஃப்டில் போவதும்,ஹீரோ படிக்கட்டில் இறங்குவதும் தூள்,ரன்,தில் என பல ஹிட் படங்களில் துவைத்துக்காயப்போட்ட சீன் ஆச்சே.

கடைசியாக க்ளைமாக்சில் ஒரு பெரிய தவறு செய்துவிட்டீர்கள்.
நான் என்ன செஞ்சா எனக்கு உன்னை பிடிக்கும்? என ஹீரோ கேக்கறான்,அதுக்கு ஹீரோயின் செத்துப்போடா என்கிறாள்.ஏனெனில் ஹீரோ நிச்சயம் ஆன நிலையில் ஹீரோயினின் காதலனை கொன்றவன்.நமக்கே சீக்கிரம் படத்தை முடிங்கப்பா என தோன்றுகிறது,ஹீரோ பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துகொள்கிறான்.அப்போது ஹீரோயின் ஏன் அவ்வளவு தூரம் கதற வேண்டும்?தன் கண் எதிரே ஒரு உயிர் அநியாயமாக போகிறதே என்ற அதிர்ச்சி மட்டும் கண்ணில் கான்பித்தால் போதாதா?10 வருஷம் குடும்பம் நடத்திய புருஷன் செத்துப்போனது மாதிரி அவரது கதறல் பாத்திரப்படைப்பில் குழப்பத்த்தை ஏற்படுத்துகிறது.இது ஹீரோயினின் தவறா?அதை கவனிக்காமல் விட்ட டைரக்டரான உங்கள் தவறா?

இறுதியாக ஒரு வார்த்தை .காதல் படம் எடுக்கும் எல்லா இயக்குனர்களும் கவனிக்க வேண்டியது.காதல் என்பது ஒரு மிக மெல்லிய உணர்வு,அது தானாக வர வேண்டும்,கட்டாயப்படுத்தி வராது.

இந்தப்படம் பி ,சி செண்ட்டர்களில் ஒரு வாரம் ஓடலாம்.ஏ செண்ட்டர்களில் இன்னும் போடவே இல்லை என நினைக்கிறேன்.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சார்.