Sunday, August 01, 2010

பருத்தி வீரனை படுத்தி எடுத்த பெண்ணிய அமைப்புகள்

நடிகர் கார்த்தி சமீபத்தில் தினத்தந்தி இதழில் ஒரு பேட்டி அளித்தார்.அதில் நடிகை தமனாவுடன் காதலா? என கேட்டதுக்கு இல்லை வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்றார்.அத்துடன் விட்டிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது.
வேலைக்குப்போகாத,வீட்டிலேயே இருக்குற அடக்கமான பெண்ணாக பார்க்கறோம் என்றார்.
அப்படியானால் வேலைக்கு போகிற பெண்கள் அடக்கமில்லாத பெண்களா? எனக்கேட்டு சில பெண்ணிய அமைப்புகளும்,மாதர் சஙங்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அவரது பேட்டியின் தொனி வீட்டிலேயே இருக்கும் பெண்கள் குடும்பத்துக்கு ஏற்றவர்கள்.வேலைக்கு போகிற பெண்கள் அடங்கமாட்டார்கள் என அர்த்தம் வருவதால் மாதர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.


யாகாவராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப்பட்டு
 என வள்ளுவர் சொன்னது போல் லைம் லைட்டில் இருப்பவர்கள் சமூகம் தங்களை உற்று கவனிக்கிறது என்பதை உணர்ந்து எந்தக்கருத்தை சொல்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு 2 முறை யோசித்து பின் பேசுவது நல்லது.

ஏற்கனவே குஷ்பு கற்பு பிரச்சனையில் சிக்கி கோர்ட் கோர்ட்டாக அலைந்தார்.
வி ஐ பி கள் எப்போதும் ஜாக்கிரதையாக பேசுவது நல்லது.