Thursday, July 29, 2010

ஓ பக்கங்கள் ஞானிக்கு குமுதத்தில் கல்தா ஏன்?

ஆனந்த விகடன் இதழில் சில காலம் அரசியல் சாட்டையடிகளை நிகழ்த்தி,வாசகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றவர் ஞானி.
பிறகு ஆனந்த விகடன் இதழின் ஆசிரியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கே இருந்து வெளியேறினார்.
அண்ணன் எப்போ எந்திரிப்பாரு,திண்ணை எப்போ காலியாகும் என்று எதிர்பார்த்திருந்த குமுதம் அப்படியே அவரை தன்னகத்தே இழுத்துக்கொண்டது.
தொடர்ந்து 3 வருடங்களாக காரசாரமாக குட்டு.திட்டு,ஷொட்டு என அரசியல் உலகை விமர்சித்தவர் சில வாரங்களாக உருளைக்கிழங்கு சாப்பிடுவதாலேற்படும் நன்மைகள்,வாக்கிங் போனால்.. என்பது மாதிரி மருத்துவக்குறிப்புகள் எழுத ஆரம்பித்தார்.
அப்போதே வாசகர்கள் சந்தேகப்பட்டனர்.ஏதோ உள் குத்து நடக்கிறது என்று.
பதிவர் சவுக்கு கைதுக்கு முன் அந்த பிளாக்கில் தரப்பட்ட சில விஷயங்களை
குமுதத்தில் பகிர முற்பட்ட ஞானியை பிரியாகல்யாணராமன் அழைத்து ஆளுங்கட்சிக்கு எதிராகவோ,கலைஞர் குடும்பத்தை தாக்கியோ இனி எழுத வேண்டாம் என நிபந்தனை விதித்திருக்கிறார்.
வெகுண்டு எழுந்த ஞானி வெளியேறி விட்டார்.ஆனால் குமுதத்தில் அதை பற்றி எந்த அறிவுப்பும் இல்லை.

ராகுல்காந்தி கலைஞருக்கு வைத்த முதல் செக்

கோவை செம்மொழி மாநாடு நடத்தி காங்கிரசை வியக்க வைத்து கூட்டணிக்கு மாற்று யோசனை இல்லாமல் பண்ண வேண்டும் என கலைஞர் நினைத்தார்.ஆனால் ஜெ அதிரடியாக அதே கோவையில் அதே அளவு கூட்டத்தை கூட்டி தி.மு.க வின் வயிற்றில் புளியை கரைத்தார்.
பதிபக்தி இல்லாதவர் என ஜெ சோனியாவை விமர்சித்ததை காங்கிரசார் மறந்துவிடக்கூடாது என கலைஞர் புலம்பும் அளவுக்கு ஜெவின் கோவைக்கூட்டம் அபரிதமான பாதிப்பை ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ராகுல் ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார்.
கவர்னரை மாற்றுவது என.தேர்தல் சமயத்தில் தி.மு.க கள்ள ஓட்டு தில்லுமுல்லுகள் செய்துவிடக்கூடாது எனும் நோக்கத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே 2 முறை அதிகாரப்பூர்வமாகவும்,ஒரு முறை ரகசிய விசிட்டாகவும் ராகுல் தமிழகத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாகக்கூட கலைஞரை சந்திக்காமல் சென்றது பரப்ரப்பாக பேசப்பட்டது.கலைஞரை,அவர் கூட்டணியை அவர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.விஜய் தானாக முன் வந்து இளைஞர் காங்கிரசில் இணைவதாக சொன்னபோது கூட அவர் மறுத்தது
தமிழகத்தில் அவர் தனித்து கோலோச்ச விரும்புகிறார் என்றே நினைக்க வைக்கிறது.
விஜய்காந்துக்கு 12% ஓட்டு பரவலாக தமிழகம் முழுக்க அனைத்து தொகுதிகளிலும் இருப்பது அவர் கவனத்துக்குகொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே ராகுல் விஜய்காந்த் கூடவோ ஜெ கூடவோ ,அல்லது இருவருடனும் ஒரே கூட்டணி ஏற்படுத்த விரும்புகிறார் என்றே அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது்
ஜூனியர் விகடனில் வெளியான “அரசியல் எனக்கு சலித்து விட்ட்து,ஆளை விடுங்க” என கலைஞர் சலித்துகொண்டது ராகுலின் இந்த கவர்னர் மாற்றம் ஐடியாவின் அடிப்படையில் தான்.
கூட்டணியை தொடர விரும்புவர்கள் ஏன் கவர்னரை மாற்ற வேண்டும் என கலைஞர் அன்பழகனிடம் புலம்பியதாகதெரிகிறது.
ஆ.ராசாவின் அபாரமான ஊழலும் ராகுலின் அதிருப்திக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.எது எப்படியோ தமிழக அரசியல் வானில் ஒரு பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.யார் வந்தாலும் தமிழனின் த்லை எழுத்து மாறப்போவதில்லை.

Wednesday, July 28, 2010

குமுதம் மீது ஜெ தொண்டர்கள் ஆத்திரம்

4.8.10 தேதி இட்ட குமுதம் வார இதழில் தமிழருவி மணியன் பேட்டி இடம் பெற்றது.அதில் குமுதம் கேட்ட கேள்விகளுக்கு சற்று காரசாரமாகவே பதில் அளித்து இருந்தார்.
காங்கிரஸ் தனித்து போட்டி இடுமா?காமராஜர் ஆட்சி கனவு என்னாச்சு ?போன்ற கேள்விகளுக்கு அவருக்கெ உரித்த நடையில் பதிலளித்து இருந்தார்.பேட்டி திடீரென திசை திரும்பியது.ஜெ பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்ட போது அவர் நிதானம் தவறி ,வார்த்தையை விட்டார்.
எதிர்க்கட்சிக்கான எந்த தகுதியும் இல்லாதவர் ஜெயலலிதா.அவ்ர் ஒரு நடிகை.ஒரு ஷாட்டுக்கும் ,அடுத்த ஷாட்டுக்கும் இடையே கிடைக்கும் கேப்பில்,கேரவுனுக்குள் போய் ரெஸ்ட் எடுக்கும் நடிகை போல் ஜெ
ஆட்சியில் சுகமாக இருப்பார்.ஆட்சி முடிந்ததும் கொட நாட்டுக்கு போய் விடுவார்,பிறகு தேர்தல் ஷாட் ரெடி என்றதும் பிரச்சாரத்துக்கு வருவார்
கேரவுனில் உட்கார்ந்து ஓய்வு எடுக்கும் நடிகைக்கும்,ஜெ வுக்கும் பெரிய வித்யாசம் ஏதும் கிடையாது  என்று பேட்டியில் தெரிவித்தார்.

28.7.10 அன்று வெளியான குமுதத்தில் இந்த பேட்டி வெளியானது அ.தி.மு.க தொண்டர்களுக்கு அன்று இரவே தெரிய வந்தது.ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது.ஏற்கனவே குமுதம் நிர்வாகத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.ஒரு முறை கே.பாலச்சந்தர்-குஷ்பு கல்யாணம் என ஏப்ரல் ஃபூல் நிகழ்ச்சி நடத்தி வாசகர்களிடம் நன்கு வாங்கிக்கட்டிக்கொண்டது.
இந்தப்பிரச்சனையால் அவருக்கும்,அவரது இல்லத்திற்கும் பாதுகாப்பு வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.பொதுவாக தமிழருவி மணியன்அழகான தமிழ் நடைக்கும்.பிரவாகமான பேச்சாற்றலுக்கும் பெயர் போனவர்,சிறந்த பேச்சாளர்.யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் ஏதோ ஒரு ஆவேசத்தில் அவர் அளித்த பேட்டி இப்பொது அவருக்கே எதிரி ஆகிப்போனது.

Monday, July 26, 2010

சுஹாசினியா இப்படி நடித்தார்?திரை உலகம் அதிர்ச்சி


 http://www.manoranjanmovies.com/images/suhasini_laura_2.jpg


கடைசியாக உயிர் படத்தில் அண்ணி கேரக்டரில் நடித்த சங்கீதா சர்ச்சையில்
சிக்கினார்,சர்ச்சைக்கு காரணம் கணவனின் தம்பியை அடைய கணவனையே போட்டுத்தள்ளும் கேரக்டர்.அந்தப்படம் வந்த போது அதிர்ச்சி அலைகள் எழுந்தன.கண்டனங்கள் விழுந்தன.மாதர்சங்கங்கள் பொங்கின.
இப்போது அதே மாதிரி சர்ச்சையில் சிக்கியுள்ளவர் நடிகை சுகாசினி.இவர் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாக பெயர் எடுத்தவர்.கே.பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தில் நர்ஸ் கேரக்டரில்,சிந்துபைரவியில் பாடகியாக வாழ்ந்து காட்டியவர்.ஜெயா டி வி யில் ஹாசினி பேசும் படம் என நல்ல விமர்சனகர்த்தாவாகவும் பன்முகம் காட்டியவர்.இந்தியாவின் சிறந்த டைரக்டர் மணிரத்னத்தின் மனைவி.ராவணன் படத்தின் வசனகர்த்தா.

இவ்வளவு திறமைசாலி இப்போது  தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்படும் “உள்ளமெல்லாம் தள்ளாடுதே” எனும் படத்தில் சர்ச்சைக்குரிய
கேரக்டரில் நடிக்கிறார்.நந்திதாதாஸ் ஃபயர் படத்தில் நடித்தபோது எழுந்த
சர்ச்சை இப்போது கோடம்பாக்கத்தை ஆட்கொண்டுள்ளது.

இந்த வார குங்குமம் இதழ் கூட தன் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.அப்படி என்ன கேரக்டர்?
தன் மகளின் காதலனை ஆசைப்படும் கேரக்டராம்.
அட ராவணா!



Friday, July 23, 2010

SALT - சினிமா விமர்சனம்

சால்ட்-அ”சால்ட்”டா ஒரு அதிரடி-ஹாலிவுட் திரை விமர்சனம்-  சால்ட்-உலகின் சிறந்த உதட்டழகி என்று பெயரெடுத்த SIN பட புகழ் ஏஞ்ஜலினாஜூலி நடித்த சுத்த சைவப்படம்.அவ்ர் நடித்த படங்களிலேயே லோகட்,லோஹிப் என ஒரு சின்ன சீன் கூட
இல்லாமல் நடித்த படமும் இதுதான்.



உயிரே படத்தின் ஹீரோயின் ம்ணீஷாகொய்ராலாவின் கேரக்டர்மாதிரிதான் ஏஞ்ஜலினாஜூலி யின் கேரக்டரும்.அமெரிக்காவில் வேலை செய்யும் ரஷ்ய உளவாளி.காதல் கணவனை பிணைக்கைதியாக்கி ,மிரட்டி அமெரிக்க அதிபரை கொல்லப்பணிக்கப்படுகிறாள்.ஒரு கட்டத்தில் கணவனை அவர்கள் கொன்று விட அவள் எடுக்கும் முடிவுதான் படம்.

படத்தின் ஓப்பனிங் சீனே பரபரப்பாக குருதிப்புனல் கமல்-நாசர் சந்திப்பு மாதிரி தொடங்குகிறது.தீவிரவாதி-சால்ட் விசாரணைக்காட்சிகள் செம டெம்ப்போவை ஏற்றுகிறது.விசாரனை  செய்யப்படும் குற்றவாளி சால்ட்டின் மேல் பழி சுமத்த திடீர் என அந்த ஆஃபீசே அவருக்கு எதிராக மாறுவது நல்ல டர்னிங்க் பாய்ண்ட்.அப்போ ஓட ஆரம்பிக்கும் ஜூலி படம் பூரா வெற்றிவிழா கமல் மாதிரி ஓடிக்கொண்டே இருக்கிறார்.

தப்பிக்கு ம் ஒரு சீனில் கண்காணிப்புக்கேமராவை செயலிழக்க வைக்க அவர் தன் உள்ளாடையை அகற்றி செய்யும் சாகசம் ரொம்ப நாசூக்கு+நளினம்.
என்ன தான் அவர் சாகசங்கள் செய்தாலும் சிரிப்பழகி சினேகாவை எப்படி நம்மால் வைஜயந்தி ஐ.பி.எஸ் ஆக பார்ப்பது சிரமமாக இருக்குமோ அப்படி ,மனசு கேட்காமல்தான் இருக்கு.

சேசிங் காட்சிகள் உயிரோட்டமாக இருந்தாலும் ஏஞ்ஜலினாஜூலியிடம் துடிப்போ,துள்ளலோ இல்லை.வயது மேக்கப்பை மீறி முதிர்ச்சியை காட்டுகிறது.நடு ரோட்டில் அவர் 50 போலீஸ்களூக்கு  டேக்கா கொடுக்கும் காட்சிகள் நம்பும்படி இல்லை.ஒரு ஜாக்கிசானோ,ஒரு ஜீன் ஹிலாடு வேண்டம்மோ செய்யவேண்டிய ஆக்‌ஷன் காட்சிகளை இவர்  சர்வசாதாரணமாக செய்வது குருவி தலையில் பனைமரத்தையே வைத்தது போல் ஓவெர் லோடு. மாடியில் தொங்கிக்கொண்டே ஒரு வீட்டு ஜன்னலை அவர் தட்டி சைகையால் ஜன்னல் கதவை திறக்கும்படி சொல்ல அந்தக்குழந்தை அவருக்கு டாட்டா காட்டுவது புன்ன்கையை வரவைக்கிறது.


ரயிலிலிருந்து தப்பிக்கும் சீன் செம விறு விறு ப்பு.கைவிலங்குடன் காரில் இருந்து தப்பிப்பது காதில் பூகூடையை வைப்பது போல் உள்ளது.
பிரசிடெண்ட்டை டார்கெட் வைத்து அவர் துரத்துவதும்,போலீஸ் காவலை மீறி கச்சிதமாக அவர் வேலையை முடிப்பது வரை பரபர ஆக்‌ஷன் காட்சிகள்.
ஆண் வேடத்தில் வரும் சீன் அருமை.அவ்ர் மாஸ்க்கை கழட்டும்போதுதான் நமக்கே அடையாளம் தெரிகிறது.”நான் சொல்றபடி நீங்க செய்யலைனா நீங்க பார்க்கற கடைசி ஆள் நானாகத்தான் இருக்கும்” என்று ஜூலி வசனம் பேசும்போது உயிரே படத்தில் மறக்கமுடியாத வசனமான “பார்த்துக்கோ நீ பாஅர்க்கற கடைசி சூர்யோதயம் இதுவாத்தான் இருக்கும்” ஞாபகம் வருகிறது.
க்ளைமாக்சில் நிராயுதபாணியாக ஜூலி,காயம் பட்டு போலீஸின் பார்வையில் நல்லவனாக காட்சி அளிக்கும் வில்லன்.என்ன நடக்கபோகிறதோ என எதிர்பார்க்கும்போது ஒரு ஜம்ப் பண்ணி கை விலங்கு சங்கிலியால் வில்லனின் கழுத்தை இறுக்கி அந்தரங்கத்தில் தொங்கும்போது தியேட்டரே அதிர்கிறது கை தட்டலால். நடப்புக்காட்சி வரும்போதே அதனோடே பயணிக்கும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கவிதை,பிண்ணனி இசை ஒரு ஆக்‌ஷன் படத்திற்கு எவ்வ்ளவு முக்கியம் என உணர்ந்து டைரக்டர் பணீ ஆற்றி இருக்கிறார்.

படத்தில் கம்யூனிச வசனங்கள்,தீவிரவாதம்,நாட்டின் உளவாளிகள் பற்றிய சர்ச்சைக்குரிய வசனங்கள் உண்டு என்பதால் த்மிழில் பார்ப்பது சாலச்சிறந்தது.
காமெடி மருந்துக்கு கூட இல்லை.மூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் கேரக்டர்கள் ஓடிக்கொண்டு இருக்கும்போது காதல் ,காமெடி எல்லாம் வைத்தால் படத்தின் டெம்ப்போ குறைந்து விடும் என டைரெக்டர்
நினைத்திருக்கலாம்.மிகச்சரியான முடிவு


பிரமாதமான ஆக்‌ஷன் படம் எனக்கொண்டாட முடியாவிட்டாலும் பார்க்க போரடிக்காத ஆக்‌ஷன் படம் என சொல்லலாம்..