Showing posts with label tamil film reivew. Show all posts
Showing posts with label tamil film reivew. Show all posts

Sunday, September 03, 2017

புரியாத புதிர் - சினிமா விமர்சனம்

Image result for puriyatha puthir posterஹீரோ இசைப்பொருட்கள் விற்பனையகத்தில் நண்பருக்கு உதவியாக இருக்கார், ஹீரோயின் இசைக்கருவி வாங்க கடைக்கு வர்றார்.2 பேருக்கும் லவ் ஸ்டார்ட் ஆகுது ( மெல்லிசை தான் ஆதி டைட்டில், அதுக்கு மேட்ச் ஆக வேணாமா? அதுக்குதான் 2 பேரும் இசை சம்பந்தப்பட்ட ஃபீல்டு), முதல் 30 நிமிசம் இவங்க லவ் எபிசோடு ஓவியா பிக்பாஸ் போர்சன் போல சுவராஸ்யமா போகுது.

திடீர்னு காயத்ரி மாதிரி ஒரு வில்லத்தனம் திரைக்கதை ல நுழையுது, அதாவது ஹீரொயின் ஜவுளிக்கடைல டிரஸ் மாத்தறது , பாத்ரூம்ல குளிக்கறது இதை எல்லாம் யாரோ வீடியோ எடுத்து  நித்தமும் ஆனந்தமே மாதிரி ஹீரோசெல்லுக்கு அனுப்பறாங்க. அதை அனுப்ச்சது  யாரு?எதுக்காக அப்டி ஹீரோவை மெண்ட்டல் டார்ச்சர் பண்றாங்க என்பது தான் பின் பாதி திரைக்கதை 


தங்க மீன்கள் , தரமணி ஆகிய படங்களில் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணி ஆற்றிய  ரஞ்சித் ஜெயக்கொடி தான் இதன் இயக்குநர் , முதல் படம் என்ற நெர்வஸ் இல்லாமல் அசால்ட்டாக திரைக்கதை அமைத்திருக்கிறார்

ஹீரோவா நேச்சுரல் ஆக்டர் விஜய் சேதுபதி,ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி  பதட்டமான சீன்களிலும் சரி மனிதர் சிக்சர் அடித்திருக்கிறார். அந்த போலீஸ் ஸ்டேஷன் சீனில் புகார் கொடுக்கும் காட்சி அபாரம்.இயக்குநர் போலீசால் ஏதோ ஒரு வகையில் பர்சனலாக பாதிக்கப்பட்டிருப்பார் போல . அவர்களது மாமாத்தனமான எச்சை புத்தியை தோல் உரித்துக்காட்டி இருக்கார் , சபாஷ்


ஹீரோயினா நடுவில கொஞ்சம் பக்கம் காணோம் புகழ் காயத்ரி. இதை ஏன் இவ்ளோ விளக்கமா சொல்றேன்னா நம்மாளுங்க பிக் பாஸ் காயத்ரி. மேல இருக்கற கடுப்புல இந்தப்படத்தை தவிர்த்துடக்கூடாதுனுதான். அந்த வில்லி வேற , இந்த கில்லி வேற . படத்தின் மொத்த பாரத்தையும் தாங்க  வேண்டிய ஆள் , குருவி தலையில் பனங்காய் கதை தான், ரொமான்ஸ் காட்சியில் கலக்கியவர் , த்ரில்லர் காட்சியில் பாஸ் மார்க் தான் வாங்கி இருக்கிறார்


இன்னொரு நாயகியாய் வரும், மஹிமா நம்பியார் ஒரு சராசரி 50  மார்க் ஃபிகர் தான் , ஆனா அவர் அதி அற்புத அழகி போல் வசன்ங்ளில் முன் மொழியப்படுவது ஏனோ?ஃபிளாஸ்பேக் காட்சிகளில் அழுத்தம் இல்லை

பாடல்கள் 3 தேறுது , பின்னணி இசை பக்கா . ஒளிப்பதிவு குட்

எடிட்டிங் அருமை , மொத்தமே 2 மணி நேரப்படம்தான் , ஆனால் பின் பாதி இழுவை போல் தோணுது 

Image result for puriyatha puthir poster


சபாஷ் டைரக்டர் 

1 முதல் 30 நிமிட  ரொமான்ஸ் காட்சிகள் , ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி பயாலஜி , பிசிக்ஸ் எல்லாம் ஒர்க் அவுட் ஆனது 


2 யார் அந்த வீடியோவை அனுப்பறாங்க என்ற சஸ்பென்சை கடைசி வரை காப்பாற்றியது

3  ப்ளூவேல் கேம் போல் ஹீரோவுக்கு கட்டளைகள் பிறப்பித்து அதை நிறைவேற்ற வைக்கும் உத்தி 

4  இயக்குநர் ட்விட்டரில் இருப்பதால் படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களும் பிரபல ட்வீட்டர்கள் பேர் தான் உதா நாயகி மீரா , நாயகன் கதிர் )

Image result for naduvula konjam pakkatha kaanom gayathri

இயக்குநரிடம் சில கேள்விகள் 


1 பெண்களின் அந்தரங்க செயலை  செல் ஃபோனில் படம் பிடித்து அனுப்புவது தவறு என்பதுதான் படத்தின் மெசேஜ், ஆனால் அதை வலியுறுத்தும் நாயகியே ஒரு பழி வாங்கலில் அவருக்கு எந்த  எதிர் வேலையும் செய்யாத ஒரு பெண்ணின் கில்மா போஸ்ட்டை ஃபேஸ்புக்கில் பதிவேற்றுவது ஏன்?


2 ஹீரோ மற்றும் அவரது நண்பர்கள் பற்றிய ஃபிளாஸ்பேக் காட்சியில் அழுத்தமான சம்பவங்கள் இல்லை

3  ஹீரோவின் ஒரு நண்பர் அவரது ஆஃபீஸ் எம் டி யின் மனைவியை கரெக்ட் பண்ணியதை அறிந்த எம் டி ஃபேஸ்புக்கில் அந்த ஃபோட்டோ வந்ததும் ரகசியமாக அவரை வெளி இடத்துக்கு  வரச்சொல்லி செட்டில் பண்ணாமல் ஆஃபீசிலேயே கத்தி கூப்பாடு போடுவது ஏனோ? ( இதை பார்த்து ஆஃபீசில் மற்ற “கேட்ச் பாண்டியன்கள்” ட்ரை பண்ண மாட்டாங்களா?)


4  ஹீரோயின் செல் ஃபோனை எடுக்கும் ஹீரோ அதில் உள்ள கேலரி ஃபோட்டோவை எப்படி ஃபார்வார்டு பண்ண முடிந்தது . பொண்ணுங்க ஃபோனை லாக்  பண்ணி வெச்சிருப்பாங்களே?


5  டவல் கட்டிக்கொண்டு தான் மஹிமா நம்பியார் பேசுகிறார், அதை வீடியோ எடுக்கும் நாயகி இதான் கான்செப்ட். ஆனால் மார்ஃபிங்க் செய்யப்பட்டு டாப்லெஸ் போல் காட்டப்படுவது எப்படி?

6  அந்த கருத்த ஒல்லிய  உருவம் நாயகியின் செட்டப் ஆளா? கதைக்கு சம்பந்தம் இல்லாதவரா? விளக்கம் இல்லை ( எடிட்டிங்கில் கட் ஆகி இருக்கும்)

7 நாயகியின்  அபார்ட்மெண்ட் அவ்ளோ பிரம்மாண்டமா இருக்கு , ஆனா அதுக்கு ஒரு வாட்ச்மேன் கூடவா இல்லை ?

8 நாயகனை ஃபோனில் மிரட்டும் ஆண்குரல் யார்? 


Image result for ranjit jeyakodi


டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி


நச் டயலாக்ஸ்

 1 சுவராஸ்யம் மட்டும் வாழ்க்கை இல்லை,நிம்மதிதான் வாழ்க்கை

நமக்கு நடக்கறவரை நிஜத்தோட வலி எப்பவும் நமக்கு முழுசா தெரியாது

3 உனக்கு என்ன டிரஸ் பிடிக்கும்?

 ஸ்கூல் யூனிஃபார்ம்

போட்டுக்காட்டுவியா?

ம் 

போடாம காட்டுவியா? 

டேய்  #PuriyaathaPuthir 

4 தனியா ஒரு பொண்ணு இருக்கறது  தெரிஞ்சா போதும் , நம்மாளுங்க கிளம்பிடுவாங்களே லவ் பண்ண #PuriyaathaPuthir 


5 ஒரு அழகிய இதயத்துக்குள் நுழைவதற்காக திருட்டுச்சாவி போடப்பட்டுள்ளது  #PuriyaathaPuthir 

6 டியர், நான் ஒண்ணு சொல்லட்டா?

 ம் 

அது வந்து....

வேணாம், சொல்லாத , சிலது சொல்லாம இருப்பதும் அழகுதான்  #PuriyaathaPuthir 

7  உலகத்துக்கு முன்னாடி  நிர்வாணமா இருப்பது, நிக்கறது எவ்ளோ வலினு இப்போ புரியுதா?


8  மீரா  , யார் கூட இருக்கே?

 வாட்?

இப்போ எங்கே இருக்கே? யார் கூட இருக்கே?


Image result for ranjit jeyakodi

சி பி கமெண்ட் -  - செல்போன் வீடியோ பதிவு பரப்பல் பற்றிய பெண்களுக்கான விழிப்புணர்வுப்படம்.ரஞ்சித் ஜெயம்.விகடன் 42 ,ரேட்டிங் 3/5

ஏ செண்ட்டரில் ஹிட் ஆகும், பி சி செண்ட்டர் ஆடியன்சை கவர்வது சிரமம்
கேரளா - கோட்டயம் - அனுசுரா தியேட்டரில் படம் பார்த்தேன்

Saturday, May 21, 2016

மருது - சினிமா விமர்சனம்




இயக்குநர் முத்தையா தன் முதல் படத்தை எம் சசிகுமாரை வெச்சு குட்டிப்புலின்னு எடுத்தாரு, சுமாரா போச்சு , அதனால அதே கதையை பட்டி டிங்கரிங்க் பண்ணி ஹீரோவை மட்டும் மாத்தி கொம்பன் எடுத்தாரு. இது இன்னும் நல்லா போகவே அதே கதையை இன்னும் பட்டி டிங்கரிங் ப|ண்ணி விஷாலை வெச்சு பண்ணி இருக்காரு. மாமூல் ஆக்சன் மசாலா பழி வாங்கும் சப்ஜெக்ட் தான் என்றாலும் படம் போர் அடிக்காம போகுது.


ஹீரோ ஒரு கூலி. மூட்டை தூக்கற ஆள்.இவரு ஹீரோயினோட அம்மாவை சதிக்க|றாரு. லோக்கல் ரவுடிகளால் அநியாயமா தன்  வருங்கால மாமியார் கொலை செய்யப்படறதைக்க|ண்டு பொங்கி எழறாரு,அதே வில்லன் க்ரூப் தன் அப்பத்தாவையும் கொலை செய்ய ஹீரோ அந்த கும்பலை பழிக்குப்பழி வாங்க|றாரு.\
\


 ஒன்லைன் ஸ்டோரியா கேட்க போர் அடிச்சாலும் திரைக்கதை போர் அடிக்காம தான் போகுது. முன் பாதி  ஃபுல்லா  ஹீரோ , நண்பர் நாயகி கலாய்ப்பு படலம்  காதல் அப்டி போகுது. லேடீசைக்கவர அப்பத்தா செண்ட்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகுது. பின் பாதியில் ஆக்சன் காட்சிகள் அதகளம்.  விஷால்க்கு இப்படம் வெற்றிப்படம்.

ஹீரோவா விஷால்  ஜிம் பாடி  , ராஜ் கிரன் லுங்கி சிவகார்த்திகேயன் பாணி கலாய்ப்புக்காதல் என மனிதர் கை தட்டலை அள்ளறார். அவரு எலக்சன்ல ஜெயிச்சாலும் ஜெயிச்சாரு அவருக்கான பஞ்ச் டயலாக் எல்லாம் ஓவரோ ஓவர் ஆனானப்பட்ட புலியே இப்போ பதுங்கி இருக்கும்போது இவர் ஏன் இப்படி துள்ளிக்குதிக்கறாருன்னு தெரியல . தெக்க பூரா நம்ம ராஜ்யம் தான் எனும் டயலாக் அடிக்கடி வருது.


இவரோட அடுத்த படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆகலாம்.

 நாயகியா  அஞ்சடி தங்க நிற வெள்ளரிப்பிஞ்சு ஸ்ரீ திவ்யா.சிவகார்த்திகேயனுக்கு சரியான ஜோடியா தெரிஞ்ச இவர் 43 வயசு விஷால் க்கும் அவரோட ஹைட் வெயிட்டுக்கும் தங்கச்சி போல் தெரியறார்.இருந்தும் ஹீரோ விடலையே உப்பு மூட்டை சீன் முதல் இரவு சீன் அப்டினு புரட்டி எடுத்துட்டார். பாவம் திவ்யா


ஹீரோவின் அப்பத்தாவாக வரும் பாட்டி செம ஆக்டிங் . அவரது நடிப்பும் அவருக்கான காட்சிகளும் லேடீஸ்க்கு பிடிக்கும்


வில்லனாக தாரை தப்பட்டை வில்லன். பெருசா எதும் செய்யலை , சும்மா முறைச்சுக்கிட்டே இருக்காரு கேப்டன் மாதிரி .

சூரி காமெடிக்கு , மோசம் இல்லை. 12 ஜோக் சொல்லி 2 ல் சிரிக்க வைக்கிறார். ராதா ரவி எப்பவும் போல் கம்பீர நடிப்பு

பாடல் காட்சிக|ள் ஓக்கே . 2 பாட்டு செம ஹிட்டு இமான் ஏமாற்றவில்லை. பிஜிஎம் இன்னும் பட்டாசை கிளப்பி இருக்கலாம்.
\\


ஆக்சன் காட்சிக\ள் செம . ஸ்டண்ட் மாஸ்டருக்கும் விஷாலுக்கும் ஒரு ஷொட்டு








தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்

மருது U/A =145 நிமிடம் @ திருவனந்தபுரம் தன்யா

2 ஸ்ரீ திவ்யா இன்ட்ரோ -சூரி கமென்ட்.= பூ வெச்ச புரூஸ்லி இவ தான்


சிவகார்த்திகேயன் ஸ்ரீ திவ்யா கிட்டே என்னென்ன லூட்டி அடிச்சாரோ அத அப்டியே டிட்டோ காப்பி விஷால் # மருது

4 மருது இடை வேளை வரை ஓகே.சிவகார்த்திகேயன் பார்முலா =50% விஜய் பார்முலா = 25% விஷால் பார்முலா =25%


5 ஹீரோயினை காப்பாத்தினா சாதா தளபதி
ஹீரோயின் அம்மாவையும் காப்பாத்துனா புரட்சித்தளபதி மாமியாருக்கு உதவறாப்டி.

6 வருங்கால மாமியாரைக்கொலை செய்த லோக்கல் ரவுடிகள் ,அரசியல்வாதிகளை பழி வாங்கும் மாப்ளை யின் கதை தான் மருது


7 விஜய் ரசிகர்களை பாராட்டுகிறேன்.மருதுவில் 4 இடங்களில் விஜயை கிண்டல்.அடித்தும் ஒரு இடத்தில் "புலி"யை வெட்டுவேன் என சொன்ன பின்னும் கோபப்படலை

8 சூர்யா.+ விஜய் = விஷால்
இதை நான் சொல்லலை.விஷால் தான் சொல்றாரு. நான் சிங்கம் மாதிரி.தேவைப்பட்டா புலியாவும் மாறுவேன் @ மருது பஞ்ச்




நச் டயலாக்ஸ்

1 சல்லிப்பசங்களுக்குத்தான் இப்போ பதவி கிடைக்குது

மருது இனத்தில் சிங்கம்
குணத்தில் புலி # மருது பஞ்ச்


3 ஜெயிலுக்குள்ளே போக வேண்டிய பயலுக எல்லாம் சட்டசபைக்குள்ளே போறானுக

வாழ்க்கைல எல்லா காரியத்தையும் துணிஞ்சு செய்யனும்னு இல்லை.சில விஷயங்களை பணிஞ்சு தான் செய்யனும் # மருது


5 மருது யார் தெரியுமா?முதல்ல எதிரி தட்டுல இட்லி போடுவான்.அப்பறம் தலைல இடியைப்போடுவான்


அடியாளா இருக்கும்போது யோசிக்காம எது வேணாலும் செய்யலாம்.ஆனா அரசியலுக்கு வந்துட்டா யோசிச்சு எதையும் செய்யனும்


லவ்வுக்கு காமெடி தான் தேவை.கலவரம் தேவை இல்லை


பொண்ணுங்களை கும்பிட்டுதான் பழக்கம்.கூப்பிட்டு பழக்கம் இல்லை # மருது


9 கல்லா இருக்கறவ தான் பொம்பளை.அதை கரைக்கறவன் தான் ஆம்பளை சூரி பஞ்ச்


10 சூரி = ஸ்ரீ திவ்யாவை உனக்கு பிடிச்சிருக்கா?
விஷால் =ம் சூரி =லட்சுமிமேனன் மாதிரி எதிர்பார்ப்பேனு நினைச்சேன் # மருது

11 சூரி டூ விஷால் = நீ அர்னால்டு மாதிரி இருக்கே # நல்லவேளை அர்னால்டுக்கு தமிழ் தெரியாது


12 ஸ்ரீதிவ்யா = ஜீன்ஸ் போட்டா சான்ஸ் கிடைக்கும்னு எந்த கூமட்டையன் உனக்கு சொன்னான்?
விஷால் = இவன் தான் சூரி = அடேய்.# மருது


13 மருது க்கு யாரும் பதவி தரத்தேவை இல்லை.அவன் நினைச்சா எந்தப்பதவிலயும் போய் உக்காருவான் # ரைட்டு விஷால் க்கு அடுத்த விஜய் ஆக ஆசை போல



14 சூரி = பனியாரச்சட்டி மாதிரி இருந்துட்டு பழமொழி பேசறா # மருது


15 சம்பாதிக்கற மாப்ளை கேப்பாக.நீ சமைக்கற மாப்ளை கேட்கறே?
சமைக்கற பையன் தான் பொறுப்பானவனா இருப்பான்


16 உழைக்கறவன் மனசு அடுப்புல இருக்கற உலை மாதிரி
எப்பவும் கொதிச்ட்டே இருக்கும்


17  பொண்ணுக்கு ஒண்ணுன்னா புலி மாதிரி அடிப்பேன்.தேவைப்பட்டா "புலி"யையே அடிப்பேன் (விஷால் VS விஜய் மோதலா?)

18 நமக்குப்பிடிச்ச பொண்ணு நம்மைத்தேடி வந்தா நாம தரமானவன்னு அர்த்தம்
வர்லைன்னா? தகுதி இல்லாதவன்னு அர்த்தம் # மருது



19 சும்மாவா போட்டீங்க.காசு வாங்கிட்டுதானே ஓட்டு போட்டீங்க?# மருது

20 ஒத்தை ஆளை போட பத்து பேரோட நீ போவே.மருது பத்து பேரை அடிக்க ஒத்தை ஆளா போவான் #,மருது விஷால் பஞ்ச்





சபாஷ் டைரக்டர்

1 சிவகார்த்திகேயன் ஃபார்முலாவை அப்டியே விஷாலை காப்பி அடிக்க வைத்தது

2 இயக்குநர் ஹரி ஃபார்முலாவை பல இடங்களில் ஃபாலோ பண்ணி படத்தை ஸ்பீடாக கொண்டு சென்றது



லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 பாட்டி ஏன் ஹீரோவிடம் தன்னை வில்லன் கொடுமை செய்ததை சொல்லவில்லை? ஹாஸ்பிடலுக்கு போய் இருந்தால் அப்போதே காப்பாற்றி இருக்கலாமே|?


2 உடல் முழுக்க நனைந்து வில்லன் இடத்தில் இருந்து மீட்டு வந்த பாட்டிக்கு என்ன ஆகி இருக்கும் என கிராமத்து ஹீரோவால் யூகிக்க முடியாதா?


3 சின்னதம்பி படத்தில் கேவலமான ஒரு சீன் வரும் . விதவையான மனோரமாவை வில்லன் ஆட்கள் கொடுமைப்படுத்தும் காட்சி., அதற்கு அடுத்த கேவலம் இந்த பட க்ளைமாக்சில் பாட்டியை சித்ரவதைப்படுத்துவது


4 ஹீரோவுக்கு தன் வருங்கால மாமியாருடன் பரிச்சயம் ஏற்ப்டுவது சரி ,ஆனால் அவர் நாயகியை அப்போது சந்திக்காமல் இருந்தது எப்படி?



சி.பி கமெண்ட் -மருது = முன் பாதி காதல் ,காமெடி பின் பாதி அரிவாள் வெட்டு குத்து பழி.சி சென்ட்டர் ஹிட்.விகடன் =41 ,ரேட்டிங் =2.5 / 5

Friday, May 13, 2016

பென்சில் - சினிமா விமர்சனம்

ஸ்கூல்ல நடக்கற வழக்கமான காதல் கதை இல்லை. இதுல வழக்கு எண்  18/9 , விசில் , சிநேகிதியே  எல்லாத்தையும் மிக்சில போட்டு அரைச்சு ஒரு கதை. 1980 கள்ல ராஜேஷ் குமார் நாவல்ல ஒரு டெக்னிக் வெச்சிருப்பாரு ( ஃபாரீன் நாவல் சாயல் தான்} அதாவது  ஒரு கொலை நடக்கும். கொலைசெய்யப்பட்ட நபருக்கு ஏகப்பட்ட எதிரிங்க இருப்பாங்க. கடைசில கொலையாளி நாம் யூகிக்காத நபர்.


ஸ்கூல்ல ஒரு  வில்ல்ன் ஸ்டூடண்ட், இவரு சினிமா ஹீரோவோட பையன் என்பதால் ஸ்கூலுக்கு செல்லப்பிள்ளை. இவன் என்ன பண்றான்? லேடீஸ் டாய்லெட் ல கேமரா வெச்சு  அதில் பதிவாகும் பிம்பங்களை ரசிப்பவன். 

அந்த ஸ்கூல் வாத்தியாரும்,  டீச்சரும் ஒரு டைம் பிராக்டிகல் ரிகர்சல் பண்றது எதேச்சையா வீடியோவில் பதிவாகிடுது. அதை வெச்சு  டீச்சரை மிரட்டி மார்க் வாங்கறான் ( தத்திவில்லன் போல ஹிஹி )

லவ் பண்றதா சொல்லி ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி அவங்க கில்மா ல இருக்கும் போது எடுத்த வீடியோவை காட்டி அந்த ஃபிகரை மிரட்டி பணம் சம்பாதிக்கறான்

படிப்பே வராத குமார சாமியான வில்லன் நல்லா படிக்கும் ஹீரோவை அடிக்கடி எதிர்க்கறான்.ஹீரோவோட ஆராய்ச்சிக்குறிப்பை போட்டு எரிச்சுடறான்

இதெல்லாம் பத்தாதுன்னு ஹீரோயினோட தோழியை கரெக்ட் பண்ணி மிரட்றான்



இந்த மாதிரி பலரது வெறுப்பை சம்பாதிக்கும் வில்லன் திடீர்னு ஸ்கூல் ல க்ளாஸ் ரூம்லயே கொலை செய்யப்படறான். அவனைக்கொன்னது யார்? என்பதை ஹீரோயின் துப்பறிந்து கண்டு பிடிக்குது. அப்போ ஹீரோவுக்கு என்ன வேலை? அவரு ஹீரோயின் நல்ல ஃபிகரா? நமக்கு செட் ஆகுமா?ன்னு துப்பறிஞ்சுட்டு இருப்பாரு



ஹீரோவா   ஜி வி பிரகாஷ், இவரோட ஸ்கூல் பாய் கேரக்டருக்காக இவரது  முக அமைப்பையே மாற்றி இருக்காரு.3 படத்துல தனுஷ் போல் யூத்  தோற்றம் குட். நடிப்பு சுமாரா வந்தாலும் சமாளிக்கிறார்

ஹீரோயினா  பஞ்சு மிட்டாய் உதட்டழகி பால் கோவா கன்ன அழ்கி , பாதுஷா கழுத்தழகி ஸ்ரீ திவ்யா. அழகழகான டிரஸ்கள்ல வந்து போகிறார், இவர் தான் லேடி ஜேம்ஸ்பாண்ட். போலீஸ் ஆஃபீசரொட பொண்ணுன்னு காட்டிட்டதால  அவர் எது செஞ்சாலும் கேக்க ஆள் இல்லை

வில்லனா  அனிரூத் முகச்சாயல்ல வேணும்னே ஒரு பையனை செலக்ட் பண்ணி ஜிவிபியை திருப்தி பண்ணி  இருக்காங்க

பின் பாதியில்  ஊர்வசி , டி பி கஜேந்திரன் காமெடி களை கட்டுகிறது. ஸ்கூலில் இன்ஸ்பெக்சன் நடக்கும்போது  கொலை நிகழ்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டதால் அதை வைத்து ஒப்பேற்றப்படும் காமெடி டிராக் ஒர்க் அவுட் ஆகிறது.

 முன் பாதியில்  ஹீரோ ஹீரோயின்  வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக பிரமாதம் என சொல்லும்படி இல்லை என்றாலும் ஓக்கே ரகம் தான் 

 அந்த கிளு கிளு  டீச்சர் கேரக்டர் யார்னு தெரியலை ( தெரிஞ்சா மட்டும்  நீ என்ன பண்ணிடப்போறே?)


இசை , பின்னணி இசை  குட் . ஒளிப்பதிவு  சூப்பர். 





நச் டயலாக்ஸ்

நம்ம மனசுக்குப்பிடிச்சவங்க நம்மைத்திட்டினாக்கூட நமக்குப்பிடிக்குது

சரஸ்வதியை விக்க நினைச்சா நம்மை விட்டு அவ போய்டுவா

சிவா.ஒரு உதவி.நீ ரெகுலரா லைப்ரரி எப்போ வருவே னு சொல்லு


சரி மாயா
நான் வர்ற டைமை மாத்திக்கறேன்




டியர்.எப்போ நம்ம மேரேஜ்?
காதல் மேல நம்பிக்கை இல்லாதவங்கதான் மேரேஜ் பத்தி பேசுவாங்க


டேய்.உங்க 2 பேருக்கும் இன்னும் லவ்வே வர்ல.அதுக்குள்ளே டவுட் வருதா?


அவளுக்கு என்னை சுத்தமாப்பிடிக்கலை.ஆனா எனக்கு அவளை மட்டும்தான் பிடிச்சிருக்கு



எதிர்பாராத விதமா ஆக்சிடென்ட் நடந்திடுச்சு.
எதிர்பாராத விதமா நடந்தா அது தான் ஆக்சிடென்ட்.திட்டம் போட்டு நடந்தா அது 20-20


டீச்சர்ஸ் ஒவ்வொரு காலகட்டத்துலயும் மாறிட்டே இருப்பாங்க.ஆனா பேரன்ட்ஸ் மாறவே மாட்டாங்க


தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்



1  ஜிவிபி க்கு அனிரூத் மேல என்ன காண்டோ?வில்லன் அனிரூத் சாயல்

 லாஜிக் மிஸ்டேக்ஸ்



1  எல்லார் முன்னாடியும் என்னை அவமானப்படுத்திட்டே என ஹீரோயின் ஹீரோ முன் சொல்லும்போது 1 ஏக்கரா ரேடியசில் “ எல்லாரையும்” தேடி ஏமாந்தேன். யாருமே இல்லை


2   பள்ளி கொல்லைப்பக்கத்தில் பன்றிகள் நடமாட்டம் இருப்பதும் அவைகள் கூட ஏ செண்ட்டர் ஸ்டூடன்ட்ஸ் ஓடிப்பிடித்து விளையாடுவதும்  ஓவர் , உவ்வே


3  டீச்சரும் , ஆசிரியரும் கில்மா பண்ணும் வீடியோ லட்டு போல் வில்லன் கைல இருக்கும்போது அவன் அதை வெச்சு என்ன என்னமோ சாதிக்கலாம். அவன் லூசா? இல்லை வில்லன் வேலைக்கு லாயக்கு இல்லாதவனா?


4 ஸ்கூலில்  பல வருசம் சர்வீஸ் உள்ள ஆசிரியர்  டீச்சரைக்கரெக்ட் பண்ண ஏகப்பட்ட க்ளாஸ் ரூம் காலியாக  / பூட்டப்பட்டவை/ சும்மா இருப்பவை  எல்லாம் இருக்கும்போது பாத்ரூமில் கரெக்ட் பண்ணுவது ஏனோ?


5  ஊர்வசியிடம் டி பி கஜேந்திரன் “ எங்க ஸ்கூல்ல மொத்தம் 10,000 மாணவர்கள்  இருக்காங்க என வசனம் பேசறார். அடுத்த சீனில்   ஹீரோ 4000 பேர் படிக்கும் ஸ்கூல் அப்டிங்கறார் . படத்துக்கு டயலாக் குமார சாமியா?


6  ஒரு சூப்பர் ஸ்டாரின் மகனாக காட்டப்படும் வில்லன் ஸ்டூடண்ட் பிச்சைக்காசு 10,000 ரூபாய்க்காக  ஒரு பொண்ணை மிரட்டுவது நம்பும்படி இல்லை

7 ஸ்கூல் பூரா   வாட்சிங்க் கேமரா இருக்குனு டயலாக் வருது, ஆனா பப்ளிக்கா வில்லன் நீச்சல் குளத்தில்  கொலை செய்த பேபியின் டெட் பாடியை காட்டி ஒரு பொண்ணை  மிரட்றான், எப்படி?

8 செல் ஃபோன்  வீடியோவில்  லேடீசை கில்மா போசில் பார்த்து மகிழும் வில்லன் வாய்ப்பிருந்தும் எந்த லேடீசிடமும் தவறாக அதிகம் நடந்து கொள்ள வில்லை, அட்லீஸ்ட்  ஹீரோயினைக்கூட கையைப்பிடிச்சு இழுக்கலை

9  விசாரணைக்கு வரும்  போலீஸ் ஆஃபீசர் அரை மணி நேரமா ஸ்கூலுக்குள்ளே சுத்திட்டு இருக்கேன் ஆனா பார்க்க வந்த ஆளை பார்க்க முடியலைங்கறார். பொதுவா அவர் கூட பியூனை அனுப்பி விடுவாங்க, ஏன் அனுப்பலை?


10  ஹீரோ ஹீரோயின் காதல் காட்சிகள்  ஏனோ தானோ என நகருது. அதில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகலை ( நல்ல வேளை ஆகலை )


 சி.பி கமெண்ட் - பென்சில் = முன் பாதி ஸ்கூல் லவ் பின் பாதி க்ரைம் த்ரில்லர் - காமெடி மிக்சிங் ஒர்க் அவுட்.பிஜிஎம் குட் ,விகடன் =43,ரேட்டிங் =3 / 5