Showing posts with label rashi kanna. Show all posts
Showing posts with label rashi kanna. Show all posts

Sunday, May 12, 2019

அயோக்யா - சினிமா விமர்சனம்


ayogya tamil movie માટે છબી પરિણામபுதிய பாதை எனும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ஆர் பார்த்திபன்  பொண்டாட்டி தேவை  யில் சறுக்கினார் , பிறகு சுகமான சுமைகள் படத்தில்  செம லாஸ் , ஆர்ட் ஃபிலிம் டைப்பே வேணாம் என  இறங்கி அடிக்க ஒரு போலீஸ்  ஃபார்முலா படம் எடுத்தார் அதுதான் உள்ளே வெளியே , 16/4/1993   அப்போ  ரிலீஸ் ஆச்சு படம் செம ஹிட் வசூலை அள்ளிக்குவிச்சுது. ஐஸ்வர்யா வின்   கில்லி லோ கட் சீன் செம அப்ளாஸ் , படம்  பூரா டபுள் மீனிங் வசனம் தான்


அந்தப்படத்தின் கதையை அட்லீ வேலை ( திருட்டு வேலை) செஞ்சு  தெலுங்குல  ஜூனியர் என் டி ஆரை வெச்சு  டெம்ப்பர்-னு ஒரு படம் எடுத்தாங்க, படம் ஹிட் . அந்தப்பட தெலுங்கு  ரீமேக்கை  உரிமை வாங்கி எடுத்த மடத்தனமான படம் தான்  அயோக்யா. இதுக்கு ஆர் பார்த்திபன்கிட்டேயே 50,000  ரூபா தந்தா  ரீமேக்  உரைமை தந்திருப்பார் , மடத்தனமா 4 கோடி கொடுத்து தெலுங்கு  ரீமேக்  உரிமை தண்டச்செலவு


 இதுல இன்னொரு கொடுமை என்னான்னா உள்ளே வெளியே ஹீரோ பார்த்திபனையே  இந்தப்படத்துல வில்லனாப்போட்டதுதான் ( கதை கேட்டிருந்தா அவருக்காவது தெரிஞ்சிருக்கும்


ஹீரோவா புரட்சித்தளபதி விஷால் , சிங்கம்  சூர்யா  மாதிரி 6 மடங்கு சவுண்ட் , சாமி விக்ரம் மாதிரி போலீஸ்  கெத்து , சிலம்பாட்டம் , வல்லவன் ல சிம்பு போட்ட டான்ஸ் ஸ்டெப்ஸ்  இவ்ளோதான் விஷால் , அவரோட ஹேர்ஸ்டைல் படு கண்றாவின்னா  அவரோட மீசை இல்லா கெட்டப்   ரொம்ப கேவலம், அவன் இவன் படத்துல திருநந்கை கேரக்டர் பண்ணார், அதே  கெட்டப் 

rashi khanna hot માટે છબી પરિણામ
ஹீரோயினா ராசி கண்ணா , பாவம்  ராசி இல்லா கன்னி போல  கேனம் மாதிரி  சிரிக்குது  , சம்பந்தமே இல்லாம ஹீரோவை லவ்வுது, 2 டூயட்  அவ்ளோதான்


வில்லனா  ஆர்  பார்த்திபன்.. நானெல்லாம் சொர்ணமுகி படத்துல அவரோட வசனத்துக்கு கை தட்டுன ஆளு , இதுல பாவமா வந்து போறாரு 


க்:ளைமாக்ஸ்  ரமணா வில் இருந்து    உருவி இருக்காங்க 


 டெக்னிக்கல் மேட்டர்ஸ் எல்லாம் சராசரி தரம் 

 பாராட்ட வேண்டிய ஒரே நடிகர்  கே எஸ் ரவிக்குமார் தான் . கச்சிதமான நடிப்பு 


 அவரு ஓப்பனிங் சீன்ல ஹீரோவுக்கு சல்யூட் அடிக்க மாட்டேன்னு வீராப்பா சொல்லும்போது தியேட்டர்ல ஒரு 5 வயசுப்பொடியன் க்ளைமாக்ஸ்க்குள்ளே இவரு சல்யூட் அடிப்பார் பாருங்க அப்டிங்கறான் நடந்துச்சு 



raasikanna માટે છબી પરિણામ

நச் டயலாக்ஸ்


1  வர்றவன் பேருதான் கர்ணன்,ஆனா குடுக்க மட்டான்,காசு ,பணம்னு எடுத்துக்குவான்,சுருக்கமா சொல்லனும்னா கரப்ஷனுக்கே செல்லப்பிள்ளை.


சோறும் ,வயசும் சூடா இருக்கும்போதே சாப்பிட்டுடனும்


என் ego என்னைச்சுத்தி ஒரு பைப்லைன் மாதிரி ஓடிட்டிருக்கு.


எப்படிப்பிழைக்கனும்னு பாக்கக்கூடாது

எப்படி வாழனும்னு பாக்கனும்


5  இந்த பூமில பிறந்த ஒவ்வொரு வருக்கும் ஒரு கடமை இருக்கு,அந்தக்கடமை யை செய்துமுடிக்காம யாரும் சாகமாட்டாங்க



rashi khanna hot માટે છબી પરિણામ



தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  சிலம்பாட்டம் ல சிம்பு போட்ட ஸ்டெப்பை இன்னும் எத்தன பேரு தான் அட்லீ வேலை பார்ப்பாங்களோ?



புரட்சித்தளபதியோட ஓவர் ஆக்டிங்,கேரக்டர் ்ரொம்ப இரிடேட்டிங்கா இருக்கே? நமக்கும் தளபதிகளுக்கும் செட் ஆகறதில்ல



ஜூனியர் NTR ன் டெம்பர் தெலுங்குப்பட அதிகாரப்பூர்வ ரீமேக்கான அயோக்யா @ கேரளா பத்தணம்திட்டா செங்கன்னூர் சிர்ரி 1 pm ஷோ



raasikanna માટે છબી પરિણામ

சபாஷ் டைரக்டர்


சொல்லிக்க ஒண்ணுமில்ல








லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)


1   லாஜிக் மிஸ்டேக் 1 −− ஒரு பொண்ணைக்கடத்த பிராஜெக்ட் போடறவங்க பொண்ணோட போட்டோவை அடியாளுங்க கிட்டத்தராம குறிப்பிட்ட பைக் ல வருவா னு சொல்றது மடத்தனம்.ஆள்மாறாட்டம் நடக்கறதுக்கு ஒரு சால்ஜாப்பு



லாஜிக் மிஸ்டேக் 2 −− ரேப் கேசின் முக்கிய சாட்சியான வீடியோ டேப்பை கோர்ட்டில் சப்மிட் பண்ணும் முன் ஒரு செட் காபி பண்ணி வெச்சுக்க மாட்டாங்களா?


லாஜிக் மிஸ்டேக் 3− அந்த வீடியோவை காபி பண்ண முடியாதுனு ஒரு சமாளிபிகேஷன் டயலாக் வருது.அப்போ அந்த வீடியோவை முக்கிய ஆபீசர்கள் 4 பேருக்கு போட்டுக்காட்டி அதை ஒரு வீடியோவாக எடுத்து அதை ஒரு சாட்சியாக வைக்கக்கூடாதா?


4    போலீசின் சாட்சி கோர்ட்டில் செல்லாது , இந்த சட்ட நுணுக்கம் கூடத்தெரியாம திரைக்கதை எழுதி இருக்காரு 




rashi khanna hot માટે છબી પરિણામ
சி.பி கமெண்ட் -அயோக்யா − ரேப்பிஸ்ட்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தரப்போராடும் இன்ஸ்பெக்டரின் ஆக்சன் மசாலா.க்ளைமாக்ஸ் ரமணா சாயல் , படம் பூரா சவுண்ட் விட்டுட்டே இருக்காரு ஹீரோ,காது ஜவ்வுக்கு ஆபத்து,விகடன் 40 , ரேட்டிங் 2.25 / 5