Showing posts with label kalam-tamil film review. Show all posts
Showing posts with label kalam-tamil film review. Show all posts

Saturday, April 30, 2016

களம் - சினிமா விமர்சனம்

ஃபாத்திமா பாபு பக்கா ஃபிகரா இருந்த காலகட்டத்தில் எப்படி ஒரு அரசியல் தலைவரால் வளைக்கப்பட்டாரோ, நிழல் உலக தாதாவான மன்னார்குடி மாஃபியா , நடரஜனோட சோஃபியா சசிகலா எப்படி தியேட்டர் தியேட்டரா 1000 கோடி ரூபாய்க்கு வளைச்சுப்போட்டாரோ  அந்த  மாதிரி  ஹீரோவோட அப்பா கண்ணுக்கு தட்டுப்படும் பாழடந்த பங்களா , பொறம்போக்கு நிலம் எல்லாத்தையும் தன் பேரில் வளைச்சுப்போடும் அழகிரி டைப்  தாதா. 


 அப்படி அவர் ஒரு  பாழடைந்த பங்களாவை வளைச்சுப்போட்டு புதுப்பிச்சு அதை தன் மகனுக்கு பரிசா வழங்கறார். ஃபாரீனில்  இருந்து இந்தியா  வந்த ஹீரோ கம் வாரிசு  தன் சம்சாரம்  குழந்தையோட அந்த பங்களாவில் தங்கறாங்க . 

 அவங்களுக்கு ஏற்படும் திக் திக் அனுபவங்கள்  திகில் அடைய வைக்குது.  அது  நிஜமாவே  பேய் தானா?  இல்லை மனிதர்களின் சதித்திட்டமா? என்பதை க்ளைமாக்சில்  சொல்றாங்க.


  வில்லனா மதுசூதனன். நல்ல நடிப்பு . பக்கா அரசியல்வாதி கம் ரவுடி போலவே இருக்கார். மகனிடம் கெத்து காட்டுவது , பாசம் காட்டுவது , அடியாளிடம் பந்தா காட்டுவது எல்லாம் கன கச்சிதம். பேய் காட்சிகளில் மட்டும்  கொஞ்சம்  தடுமாற்றம் நடிப்பில்


ஹீரோவா  அம்ஜத்கான்  சுமாரான தோற்றம். ஃபாரீன் ரிட்டர்ன் மாதிரியே தெரியாத ஒரு  லோக்கல் லுக். நடிப்பும் சராசரிதான்

ஹீரோயினா  லட்சுமிப்ரியா.  நல்ல நடிப்பு. பல காட்சிகளில் ஸ்லீவ்லெஸ் டி சர்ட் போட்டு கிக் ஏற்றுகிறார். பாத்ரூம் குளியல் காட்சி ரசிகர்களுக்கு குளுகுளு


 வேலைக்காரப்பெண்ணாக வரும் அந்த  டீன் ஏஜ் ஃபிகர் மாநிற மந்தாகினி. குட் ஆக்டிங்


 ஆர்ட் கேலரி ஃபிகராக  வரும் அந்த  மூக்குத்தி போட்ட மூணாறு ஃபிகர் கலக்கல்  நடிப்பு 

ஒளிப்பதிவு கனகச்சிதம் , பின்னணி இசை மிரட்டவில்லை என்றாலும்  சொதப்பவில்லை.


நச் டயலாக்ஸ்

1  இந்தக்காலத்தில் நல்லது நடப்பதே சிரமம், நான் உங்களுக்கு நல்லது நடக்கனும்னு நினைக்கறேன்


அவரை நீங்க உங்க புருசனா பார்க்கறதால எதுவும் தப்பா தெரியல, ஆனா நான் மனுசனா பார்ப்பதால் செய்யும் எல்லாமும் தப்பா தெரியுதும்மா

அவர் நமக்கு எந்த துரோகமும் செய்யலை இல்ல?
நமக்கு மட்டும் தான் செய்யலை, ஊர்ல எல்லாருக்கும் கெடுதல்தான் செஞ்சிருக்கார் # களம்


4 காரணமில்லாம எந்த காரியமும் இந்த உலகில் நடப்பதில்லை,நாமதான் விசாரிச்சு கண்டுபிடிக்கனும்



கஷ்டமான சூழ்நிலைல பலர் மறந்து விடும் ஒரு விஷயம் நம்பிக்கை, எப்பவும் நம்பிக்கையை மட்டும் தளரவிடக்கூடாது


 சபாஷ்  டைரக்டர் 


1  முன் பாதி திரைக்கதை கன கச்சிதமான் கட்டமைப்பு


2  பாத்திரங்கள்  தேர்வு ஹீரோவைத்தவிர எல்லாமே  சூப்பர்.  குறிப்பா  ஹீரோயின் , உப ஹீரோயின் , துணை ஹீரோயின்  என 3 பேர் நடிப்பும் அருமை 


3  ரத்தக்களறி , கோரமுகம் என்றெல்லாம் ஜல்லி அடிக்காமல்  நீட்டாக பேய்ப்படம்   கொடுத்தது  குட் 


4  மேஜிக் மேனாக வரும் நாசர் நடிப்பு நச்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1   மகனுக்கு பரிசு அளிக்கும் வசதியான வில்லன் டைரக்டா புது பங்களா வாங்கித்தரமால்   பழைய பங்களா வாங்கி ஏன் அதை புதுப்பித்து மெனக்கெடனும்?

 2  யார் கிட்டயும்  விசாரிக்காம  புதுப்பெண்ணை பணிக்கு சேர்ப்பது எப்படி?


3  வேலை முடிஞ்சிடுச்சு கிளம்பலாமா? கிளம்பட்டுமா ? என்றுதானே வேலைக்காரி கேட்பா? வந்த முதல் நாளே   வேலை முடிஞ்சிடுச்சு கிளம்பறேன் என அசால்ட்டா சொல்வது எப்படி?


4   ஃபாரீன் ஃபிகராக வரும் நாயகி  ஒரு மென்சோகம் +ஏழை களை தெரியுது. ஆர்ட்  கம் ஓவியங்கள் வரையும் ஃபிகர்  பணக்காரத்தன்ம் வழியுது. மிஸ் மேட்ச் செலக்‌ஷன் . அப்படியே 2 பேரையும் ஆல்டர்நேடிவ்வா மாற்றி விட்டிருக்கலாம்.



5  அந்த  லேடி  பழங்கால ஓவியங்களை படங்களை அகற்றனும்னு தானே சொல்லுது? நாயகி ஏன் எரிக்குது?



6  ஹீரோயின்  தனிமைல பாத்ரூம் ல கதவு தாழ்ப்போட்டுட்டு குளிக்குது . எதுக்கு டர்க்கி டவல் கட்டிட்டு  குளிக்குது? எந்த ஊர்ல ஃபாரீன் ரிட்டர்ன் பணக்கார ஃபிகர் பாத்ரூம்ல குளிக்கும்போது டவல் கட்டிட்டு குளிச்சிருக்கு? ( இது கேள்வி அறிவுதான் நான் எந்த  வீட்டிலும் எட்டிப்பார்க்கலை )


7  ஷவர்ல  தண்ணீரோடு ரத்தம் கலந்து வருவது  தெரிந்ததும்  நாயகி ஏன் மேலே போய் வாட்டர் டேங்க் செக் பண்ணலை?

8   பங்களாவுக்கு வரும் புது ஆள் 
, லேடி எல்லாரும்   செப்பல் போட்டுட்டு வர்றாங்களே ஏன்? வெளில விடமாட்டாங்களா?

 9 லேப்டாப் யூஸ் பண்ணும் அந்த  ஃபிகர்    அதை ஆஃப் பண்ணாமயே டக்னு க்ளோஸ் பண்ணுவது  ஏன்?

The interior decoration of the maharaja multiplex is good





சி.பி கமெண்ட் -  களம் - ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கான சராசரி தரத்தில் ஒரு கோஸ்ட் த்ரில்லர்.105 நிமிடங்கள் மட்டுமே என்பதால் ஃபுல் மீல்ஸ் திருப்தி இல்லை. விகடன் = 41 , ரேட்டிங் = 2.75 / 5


Erode maharaja multiplex 5 screen ,near iti bus 🚌 stop,kaasipalayam