Showing posts with label cable shankar. Show all posts
Showing posts with label cable shankar. Show all posts

Monday, March 28, 2011

கேபிள் சங்கரை வம்புக்கு இழுத்த செந்தில்


http://www.kollywoodtoday.com/gallery/actress/anjali/images/anjali_027.jpg 

1. பத்திரிகைச் செய்தி: தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும் ஏப்ரல் 13க்கு, இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் உள்ள, "டாஸ்மாக்' கடைகளை மூடும்படி, தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கி உள்ளது. அதனால், கமிஷனின் உத்தரவுப்படி, கடைகளை மூடுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

சட்டப்படி கடையை மூடுனா கடைல ஒர்க் பண்றவங்க செட்டப்படி சைடுல கடையை திறந்து வெச்சு டபுள் மடங்கு லாபம் பார்த்துடுவாங்க..நட்டம் கவர்மெண்ட்டுக்கும், குடிமகனுக்கும் தான்.. 


--------------------------------------------------

2. தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்: கடந்த பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி உள்ளது. அதன் அடிப்படையில், மக்கள் எங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால், தேர்தல் அறிக்கை, மக்களின் நம்பிக்கைக்குரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அண்ணே.. அப்புறம் ஏன் நீங்களும், கலைஞரும் சென்னைல போட்டி போடாம இடத்தை மாத்தறீங்க..?போடா வெண்ணை அப்படின்னு சொல்லக்கூடாது,,


-----------------------------------------------------
http://www.cinespot.net/gallery/d/370379-1/Tapsi+photos+_19_.jpg
3. பா.ம.க., தேர்தல் அறிக்கை: பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்துவோம். புகையில்லா தமிழகம், பூரண மதுவிலக்கு ஆகியவற்றை அமல்படுத்த பாடுபடுவோம்.

தமிழகத்தை குஜராத் ஆக்க பாடுபடுவோம்னு சொல்றீங்க.. சந்தோஷம்.. ஆனா நீங்க கூட்டணி வெச்சிருக்கறது தி மு க கூட.. தமிழகத்தை பீகார் மாதிரி ஆக்காம கலைஞர் ஓய மாட்டார் போல... 


----------------------------------------

4. மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேட்டி: ஊழல், விலைவாசி உயர்வு, மின் வெட்டு போன்ற பலவற்றால், தி.மு.க., அரசு தோல்வியை சந்தித்திருக்கிறது. கடந்த, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கூறப்பட்ட இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டம், இந்த முறை கூறப்படவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்தல், வன்முறை போன்ற தி.மு.க.,வினரின் தில்லுமுல்லு செயல்களை வாக்காளர்கள் நிராகரித்து, முறியடிப்பர்.

எல்லா இடங்களையும் இலவசமா மக்களுக்கு கொடுத்துட்டா மந்திரிங்க என்ன பண்ணுவாங்க..இருக்றதை அள்ளிக்குடுத்துட்டு தொண்டு செய்ய அவங்க என்ன இளிச்ச வாயர்களா? 

----------------------------------
http://www.teluguflavours.com/gallery/allgallerys/Models/876/Tapsi%20Panu%20(3).jpg
5. பார்லிமென்ட் பா.ஜ., தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி கூட்டாக அளித்த பேட்டி: நம்பிக்கை ஓட்டெடுப்பில், எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை எனக் கூறி, பார்லிமென்ட்டை தவறாக வழி நடத்துகிறார் பிரதமர். இந்த விஷயத்தில், பார்லிமென்ட் கமிட்டி கண்டறிந்த உண்மைக்கு மாறான கருத்தை பிரதமர் தெரிவித்திருக்கிறார். நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றிபெற லஞ்சம் கொடுக்கப்பட்டது, தற்போது நிரூபணமாகியுள்ளது. லஞ்சம் கொடுத்து, கட்சி மாறி ஓட்டளிக்க வைத்ததன் மூலம் ஆதாயமடைந்த முதன்மை பயனாளிகள் பிரதமரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் தான்.

ஆமா.. இது வரை நடந்த எல்லா நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் இது மாதிரி நடந்திருக்கே.. என்னமோ புதுசா சொல்றீங்க.. காலம் காலமா நடந்துட்டு வர்ற சம்பிரதாயத்தை மாத்த முடியுமா? நம்ம இந்தியா பழம்பெரும் பாரம்பரியம் மிக்கதாச்சே.. ?

---------------------------------------

6. லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பேச்சு: காங்கிரஸ், பா.ஜ., கூட்டணியில் இடம் பெறாமல், சில கட்சிகள் உள்ளன. மூன்றாவது அணி அமைக்க வேண்டியதன் அவசியத்தை, இந்த கட்சிகள் உணர்ந்துள்ளன. இதை செயல்படுத்த, அனைத்து கட்சித் தலைவர்களும், வேறுபாடுகளை மறந்து, ஓரணியில் திரள வேண்டும்.

மூன்றாவது அணியும்,ராமராஜன் படமும் ஒண்ணு தான்.. வேலைக்காகாது...

----------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP1U86zMIPEkcZkcj4mbxYH9Sjmu35JmSNunYDCnnIs1-jAqCuzpdBcQi_vuaNH13Rh0TcKyiK-9aeYNAhZ5FCeOGGYmAf6ltsigDHQIyCmm6d5jQcGcfIV9Kvq9WQx2WL711VkYraTvRe/s640/Tamanna+47852+(17).jpg
7. நகைச்சுவை நடிகர் செந்தில் பேட்டி : தமிழகத்தில் திருக்குவளை மன்னராட்சியை ஒழிக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். இலவச, "டிவி'களை கொடுத்து மக்கள் வரிப்பணத்தை வீணாக்கியவர் ஏன், "கேபிள்' இணைப்பை இலவசமாக வழங்கவில்லை?

கேபிள் சங்கர் பிளாக்ல போய் சப்ஸ்கிரைப் பண்ணிக்கிட்டா இலவசமா அவரோட படைப்புகள்  ரீடர்ல வருமே... இதுக்கு எதுக்கு கலைஞர் லெவலுக்கு போறீங்க? 

---------------------------------------

8. தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் பேச்சு: உண்டு கொழுத்த முதலைகளாக, மக்களை ஏமாற்றி பிழைக்கும் கட்சிகளாக திராவிடக் கட்சிகள் உள்ளன. "இலவசம்' என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, முட்டாளாக்கி, பிச்சைக்காரர்களாக்கி வருகின்றன. அவர்களுக்கு நமது கூட்டணி சிம்மசொப்பனமாக உள்ளது.

முதல்ல சொன்ன மேட்டர் சீரியஸா யோசிக்க வேண்டியதுங்கண்ணா.. கடைசியா சொன்னீங்களே.. சிம்ம சொப்பனம், ( SIM  ம சொப்பனம்) பேட்டரி சொப்பனம், செல்ஃபோன் சொப்பனம்னு .. நீங்க ஒரு தமாஷ்காரர்ங்கண்ணா.. 

------------------------------------

9. கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேச்சு: கள் இறக்க விதித்திருக்கும் தடையை நீக்க தமிழக அரசு மறுத்து விட்டது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கையில் நியாயமில்லை என முதல்வரும், அவர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களும் நிரூபித்து விட்டால், எங்களது கோரிக்கையைக் கைவிட்டுவிடுவோம்.

கள் இறக்க அனுமதி கொடுத்துட்டா அரசுக்கு வரக்கூடிய வருமானங்கள் குறைஞ்சிடும்.எல்லா பயனையும் விவசாயிங்களே அடைவாங்க.. அந்த அளவு அரசியல்வாதிகளை இளிச்ச வாயர்கள்னு நினைச்சீங்களா?


டிஸ்கி 1 - முத ஸ்டில்லுல அஞ்சலி சேலை கட்றக்குள்ள ஃபோட்டோகிராஃபருக்கு அவசரம் போல.. ஆனா அவர் ஃபோட்டோ எடுக்கறப்ப நியாயமா அஞ்சலி கையை குறுக்க தானே கட்டி பதட்டப்படனும்? சிரிச்சுக்கிட்டே போஸ் குடுக்குதே ? #டவுட்டு


டிஸ்கி 2  - ரெண்டாவது ஸ்டில்லுல தப்ஸி போட்டிருக்கற சேலை ஹீரோக்களுக்கு ரொம்ப சிரமத்தை குடுக்கும்.. டூயட் சீன்ல குத்தும்...அதனாலதான் ஒரு பாதுகாப்புக்காக அப்படி டிரஸ் போட்டிருக்காங்க போல.. பொது நலன் கருதி  வெளியிடுவோர்  அட்ரா சக்க அல்டாப் பேர்வழி.. ஹி ஹி

டிஸ்கி 3  - மூணாவது ஸ்டில்லுல தப்ஸியைப்பார்த்ததும் எனக்கு 2 மேட்டர் நினைவு வருது. 1. ஊட்டி, கொடைக்கானல் ரோட்ல வைக்கப்ட்ட போர்டுகளான அபாய வளைவுகள் ஜாக்கிரதை, குறுகிய சாலை கவனமாக செல்லவும்.. ஹி ஹி . 2. அவர் அவுட் ஆஃப் ஃபேஷனான ரப்பர் வளையல் போட்டிருந்தாக்கூட அதுலயும் மேட்சுக்க்கு மேட்ச் போட்டிருக்கார் பாருங்க..

டிஸ்கி 4.   - கடைசி ஸ்டில்லுல பாருங்க தமனா கை கழுத்து வெறுமையா இருப்பதை.. பாப்பாவுக்கு எக்ஸ்ட்ரா அணிகலன்கள் பிடிக்காது போல..அந்த இமேஜ் எல்லையை மீறி ஓவர்லேப் ஆகற மாதிரி இருக்கு கரெக்ட் பண்ணுங்க (தமனாவை அல்ல அவரோட இமேஜை)  அப்படின்னு கமெண்ட் போட நினைப்பவங்க.. கவனிக்க நான் வேணும்னு தான் அப்படி போட்டேன்.. அவங்க நம்மை ஆக்ரமித்த விதத்தை விளக்கும் சிம்பாலிக் ஷாட் அது.. ஹி ஹி  ( இவனுக்கு மனசுல கே பாலச்சந்தர்னு நினைப்பு)

டிஸ்கி 5  - பதிவின் டைட்டிலுக்கும், பதிவுக்கும் சமபந்தம் இல்லையே என யோசிப்பவர்கள் கமெண்ட் 7 ஐ பார்க்கவும்.. ஹி ஹி இப்படிக்கு சமாளிஃபிகேஷன் சண்முகராஜன்.

டிஸ்கி 6 - சனி ,ஞாயிறு நெட் பக்கமே வராதவங்களுக்கு

டிஸ்கி A - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி B - சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம் 

டிஸ்கி C SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்