Showing posts with label bang bang. Show all posts

Saturday, October 04, 2014

ஹைடருக்கும் - பேங் பேங் படத்திற்கும் மோதல் கிடையாது : ஷாகித் கபூர் பேட்டி!

க்யூட் அண்ட் சாக்லேட் ஹீரோ என பெயரெடுத்த ஷாகித் கபூர், அந்த சாக்லேட் ஹீரோ என்ற இமேஜை உடைக்கும் விதமாக, ஒரு சீரியசான ரோலில் நடித்து வெளிவந்து இருக்கும் படம் தான் ''ஹைடர்''. அக்டோபர் 2ம் தேதி வெளியான இப்படம் பற்றியும், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொள்கிறார் ஷாகித் கபூர்.

மொட்டை அடித்தது எனது சொந்த முடிவு

ஹைடர் படத்தில் மேக்-அப் உதவியுடன் என்னால் மொட்டை போன்ற தோற்றத்தில் நடித்து இருக்க முடியும். ஆனால் நான் அப்படி நடித்து என்னையும், ரசிகர்களையும் ஏமாற்ற விரும்பவில்லை. அதனால் நானே முன் வந்து ஹைடர் படத்திற்காக மொட்டை அடித்து கொண்டேன். ஹைடர் படம் எனது கனவுப்படம், இதுப்போன்ற படங்களில் நடிக்க, நான் எந்தவிதமான தோற்றத்திலும் நடிக்க தயார்.

ஹைடர் படத்திற்காக சம்பளமே வாங்கவில்லை

ஹைடர் படத்திற்கு இதுவரை நான் ஒரு நயா பைசா கூட சம்பளம் வாங்கவில்லை. ஏனென்றால் இந்தப்படத்தில் நானும் ஒரு அங்கம். இதுபோன்ற படங்களை மிக குறைந்த பட்ஜெட்டில் எடுத்துள்ளோம். நான் சம்பளம் வாங்கியிருந்தேன் என்றால் இந்தப்படத்தின் பட்ஜெட் இன்னும் அதிகரித்து இருக்கும். எனக்கு படத்தின் பட்ஜெட் முக்கியமல்ல, படத்தின் தரம் தான் முக்கியம். ஹைடர் படத்தை வெறும் 54 நாட்களில் எடுத்து முடித்துள்ளோம்.

என் கேரீயரில் கமினே சிறந்த படம்

என் சினிமா கேரீயரில் நிறைய படங்கள் நடித்துள்ளேன். அதில் கமினே படத்தை தான் என் வாழ்வில் மிகச்சிறந்த வெற்றி படமாக கருதுகிறேன். சினிமாவில் கமினே தான் எனக்கு ஒரு புதிய பாதையை ஏற்படுத்தி கொடுத்தது. கமினே படத்திற்கு முன்பு, நான் இதுபோன்ற ரோல்களில் நடிக்க முடியுமா என்று எண்ணியதுண்டு, ஆனால் இந்தப்படத்திற்கு பிறகு இதுபோன்ற ரோல்களில் நடிக்க வேண்டும் என்று அதிகமாக தோன்றுகிறது. அந்த வகையில் கமினே படத்தை போன்று ஹைடர் படமும் வந்துள்ளது. அதற்காக இயக்குநர் விஷால் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவருடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.

ஹைடர் உருவாக ஹேம்லட் ஒரு முன்மாதிரி

ஹைடர் படம் உருவாக வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஹேம்லட்டும் ஒரு முக்கிய காரணம். ஹேம்லட்டை முன்மாதிரி வைத்து ஹைடர் படத்தை உருவாக்கினோம். ஹைடர் படம் குடும்ப பழிவாங்கும் படம். இந்திய குடும்பங்களில் பழிவாங்கும் போன்ற உணர்வு அதிகம் இருக்கிறது. ஆனால் இந்தப்படம் மகன், அம்மா மற்றும் காதலிக்கு இடையேயான உணர்வை சொல்லியுள்ள படம். அதனால், ஹேம்லட் படம் ஒரு முன்மாதிரி என்று தான் சொல்வேன்.

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே

ஒவ்வொரு நடிகனும் , தன்வாழ்வில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பது அவர்களது கடமை. அதைத்தான் நானும் செய்கிறேன். மற்ற நடிகர்களில் இருந்து வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். மேலும் இன்னொரு நடிகரின் சாயல் எனது நடிப்பில் தெரியக்கூடாது என்பதற்காக மிகவும் கவனமுடன் நடிக்கிறேன். கீதையில், பகவான் கிருஷ்ணன் சொல்லியிருப்பது, உன் கடமையை சிறப்பாக செய், பலனை எதிர்பார்க்காதே என்று.. அதை நான் கடைபிடிக்கிறேன்.

சாரதாவுக்கு நல்லதொரு வாய்ப்பு

ஹைடர் படம் எனக்கு மட்டுமல்ல, என்னுடன் நடித்த நடிகை சாரதா கபூருக்கும் முக்கியமான படம். இப்படம் அவருக்கு நல்லதொரு வாய்ப்பை பெற்று தரும் படம். இது அவரது ஐந்தாவது படம், நிச்சயம் இந்தப்படம் அவரது சினிமா கேரீயரை மாற்றும் படமாக இருக்கும். இந்தப்படத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளார், அவருக்கு என் வாழ்த்துக்கள்.

ஹைடருக்கும் - பேங் பேங்கிற்கும் மோதல் கிடையாது

பேங் பேங் படத்தின் புரொமோவை நானும் பார்த்தேன், ஹிருத்திக் ரோஷனுக்கு எனக்கு வாழ்த்துக்கள். ஹைடர், பேங் பேங் படங்கள் ஒரேநாளில்(அக்.,2ம் தேதி) ரிலீஸாகியுள்ளன. ஆனால் இரண்டு படங்களுக்கும் எந்தவித மோதலும் கிடையாது. ஏனென்றால் இரண்டு படமும் வித்தியாசமான கதையம்சம் உடைய படங்கள். பேங் பேங் படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படமாக இருக்கும். ஆனால் ஹைடர் படமோ, வழக்கமான சினிமா படம் கிடையாது. ரசிகர்களுக்கு தெரியும் எந்தப்படத்தை அவர்கள் சிறந்த படமாக தேர்ந்தெடுப்பார்கள் என்று...!

இவ்வாறு ஷாகித் கபூர் கூறியுள்ளார். 

thanx  - dinamalar 

- See more at: http://cinema.dinamalar.com/hindi-news/22569/cinema/Bollywood/There-is-no-clash-between-Haider-and-Bang-Bang.htm#sthash.iiAiLuV9.dpuf