Showing posts with label aranmanai 2 - tamil film review. Show all posts
Showing posts with label aranmanai 2 - tamil film review. Show all posts

Friday, January 29, 2016

அரண்மனை 2 - சினிமா விமர்சனம்

ஊர்லயே பெரிய ஜமீன் தார் ராதாரவி. அவரோட வாரிசு  ஹீரோ. சொந்தத்துலயே  பொண்ணு நிச்சயம் ஆகிடுது. அப்போதான்   அந்த பங்களாவில் அசம்பாவிதமான சம்பவங்கள் நடக்குது

ஹன் சிகா பேய் ஜமீன் தார் ராதாரவியை  தாக்கி கோமா ஸ்டேஜ்க்கு கொண்டு போகுது.ஹீரோயின் டிரஸ் மாத்தும்போது வேடிக்கை பார்த்த பங்களா வேலையாளை ஒரு பேய் கொன்னுடுது. அந்த கொலை நடந்தப்ப அருகில் இருந்த ஆள் நம்ம ஹீரோ என்பதால் போலீஸ்  அரெஸ்ட் பண்ணிடுது.


ஹீரோவோட  வேண்டுகோளின் படி பங்களாவில் நடக்கும் மர்மங்களை துப்பு துலக்க படத்தோட டைரக்டர்  சுந்தர் சி  வர்றார் ( இவரோட  தங்கச்சி தான் த்ரிஷா, இதைத்தான்  ஹீரொ  மேரேஜ் பண்னப்போறார்)

அவர் வந்து பங்களா  ஃபுல்லா  கேமரா பொருத்தறார். பின் தான்  தெரியுது. பேய் வேற  யாரும் இல்லை. ஹீரோவோட தங்கச்சி ஹன் சிகா தான்.


இடை வேளை

 இதுக்குப்பின் ஏன் ஹன்சிகா சொந்த அப்பாவையே அப்டி படு காயப்படுத்துச்சு ? என்பது மிச்ச மீதி திரைக்கதை 


ஹீரோவா சமூக நல ஆர்வலரும் , ஹாலிவுட் பட சான்ஸ் கிடைச்ச தனுஷை ட்விட்டர் ல செம நக்கல் அடிச்சவருமான சித்தார்த். 2  டூயட் அவருக்கு . மற்றபடி பெரிய  வாய்ப்பு இல்லை 


 ஹீரோயினா  த்ரிஷா. செம கிளாமர். டூ பீஸ் டிரஸ் , டாட்டு சகிதமா கண்ணியமான கிளாமர் காட்டறார் ( காட்றது கிளாமர் , இதுல கண்ணிய கிளாமர், அகண்ணிய கிள்மார்னு 2 வெரைட்டி இருக்கா? )


பேயா ஹன்சிகா. பெருசா பயமுறுத்தலைன்னாலும் செண்ட்டிமெண்ட் சீனில்  லேடீஸ் உச் கொட்றாங்க. படத்தில் இவர் இவராகவே வரும் காட்சிகள் குறைவு தான்


ராதாரவி  கேர்கடர் ஆர்ட்டிஸ்ட்டா வந்து  ஃபிளாஸ்பேக்கில்  வில்லனா ஆகறார். அனுபவம் மிக்க நடிப்பு


 ரஜினி முருகனுக்குப்பின் வரும் சூரி படம்.  2 கெட்டப் ல  வர்றாரு ( கெட்டப்பே  மாற்றாத  ஹீரோக்கள் கவனிக்க )

அவரோட காமெடி களை கட்டலைன்னாலும்  தியேட்டர்ல ஆடியன்ஸ் அவங்களாவே சிரிச்சுக்கறாங்க 

 பின் பாதியில்  த்ரிஷா வின் உடம்பில் ஹன்சிகா ஆவி புகுவதால்  த்ரிஷா  பேயா வரும்  சூழ்நிலை. சும்மா மேக்கப்பை கலைச்சு விட்டிருந்தாலே போதும், இதுக்கு மேக்கப் எதுக்கு?

 கோவை சரளா  காமெடி சகிக்க வில்லை.  வழக்கமா காஞ்சனா டைப் படங்களில்  கோவை சரளா பெரிய பிளஸ் , இதில் மைன்ஸ்




மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  பரம்பரை பரம்பரையா உங்க கிட்டே தான் வைத்தியம் பார்க்கறோம்

ஆனா என் கிட்டே வைத்தியம் பார்த்த யாரும் அவங்க பரம்பரையை பார்க்க மாட்டாக.# அ2


2 வில்லன் = பொண்ணே வெட்கப்படாம காட்டும்போது ஆம்பளை பார்த்தா தப்பா? # அ 2


3 சூரி = தேனே தானா கொட்டும்போது யோசிக்ககூடாது.நக்கிடனும் #,அ 2

4 சூரி = ஜோக் அடிக்கறேன் கற பேர் ல சோத்தில மண் அள்ளிப்போட்றாதீங்க # அ2

5 சூரி = செல்ப் எடுக்காத வண்டி எல்லாம் செல்பி எடுக்குது.#,அ2


6 கோவை சரளா =,வெயிட் & ஸி

சூரி = வெறுமனாவே உன்னைப்பார்க்க முடியாதே.வெயிட் பண்ணி வேற பார்க்கனுமா? # அ 2


7 சூரி= என்னடா மூஞ்சி இது?பப்பாளிப்பழத்துக்கு பவுடர் அடிச்ச மாதிரி # அ2


8 சூரி = இவன்லாம் நலங்கு வெச்சாலே வீட்டை விட்டு வெளில போகமாட்டான்.எதுக்கு விலங்கு போட்டிருக்கீங்க?#,அ 2

9 ஆவிகளின் அகராதியில்  நியாயம், அநியாயம் கிடையாது, ரத்த சம்பந்த பாசம் கிடையாது # அ 2

10  ஏய்யா, எல்லாரும் பேயைப்பார்த்தா தான் ஒண்ணுக்குப்போவாங்க, உன் தங்கச்சி பேய் கூடவே  பாத்ரூம் போகுதே? # அ 2


11  அவ  பக்கத்துல தான் பேய்  இருக்கு, ஜாடைல கூப்பிடு


 எங்கே? ஜாடைல கூப்பிடறதுக்குள்ளே  பாடைல போய்டுவா போல # அ 2






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  அரண்மனை 2 @ திருவனந்த புரம் அஜந்தா.1100 சீட்ஸ் க்கு 890 ஸீட் புல்


2 அரண்மனை -130 நிமிசம்.13 ராசி இல்லாத நெம்பர் ஆச்சே?,சரி.சமாளிப்போம்

3 ஓப்பனிங் சீன் ல அம்மன் சிலை படுத்த வாக்கில் இருக்கு.படமும் படுத்துக்குமோ?படுத்தி எடுக்குமோ தெரியலயே


4 ஓப்பனிங் சீன் ல த்ரிஷா டூ பீஸ் ல வருது.பீச்ல. இன்னொரு பீஸ் கர்சீப் கைல கொடுத்தா 3 பீஸ் ஆகி 3 ஷா க்கு மேட்சுக்க்கு மேட்ச் # அ 2

5 அரண்மனை 2 - த்ரிஷா வின் கிளாமர் ,சூரி காமெடி காப்பாத்தி இருக்கு.இதுவரை.இனி பேய் வந்து காப்பாத்துமோ? @ இடை வேளை



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


 1 பேய்ப்படங்கள்  எப்படியும் மக்கள் மனதை கவரும் மினிமம் கியாரண்டி  என்பதால் அதை தேர்ந்தெடுத்து காசு பார்த்தது


2  த்ரிஷா வை  இந்த வயசிலும் கிளாமர் காட்ட வைத்தது

3  மனோபாலா  சூரி  காமெடி காட்சிகள் கன கச்சிதம்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 கோவை சரளா ஃபிளாஸ் பேக் சீன்ல  ரயில்ல காதலன் போகும்போது  மனோபாலா சரளா கை பிடிச்சு தடுக்கறார், காதலன் இருந்த ரயில் பெட்டி கிராஸ் ஆனதும் கையை விட்டுடறார், அப்போ ரயில்ல ஏறி போக சரளா முயற்சியே பண்ணலையே  ஏன்? காதலன் இருக்கும் அதே பெட்டில ஏறுனாத்தான் ஒத்துக்குவாங்களா? 3 பெட்டி தள்ளி ஏறி அந்த பெட்டிக்குப்போகக்கூடாதா?


2 ஹீரோ  ஓப்பனிங்  சீன் ல  பீச் , டான்ஸ் ஸ்டெப்  எல்லாமே  செல்லமே படத்தில் வரும் காதலிக்கும் ஆசை இல்லை கண்ணே உன்னைக்காணும் வரை பாட்டின் அப்பட்டமான தழுவல்


3  ஹன் சிகா  அந்த விஷ பாட்டில் ல இருக்கும் விஷத்தை ஏன் அண்ணாந்து குடிக்குது? கவ்விக்குடிச்சா விஷம்  ஏறாதா?


4  சொந்த அப்பா , அண்ணனையே பேய் பழி வாங்குவது  , கர்ப்பமான மகளை அப்பாவே விஷம் வைத்துக்கொல்வது எல்லாம்  ஓவர். டப்பிங்க் படம் பார்ப்பது போன்ற உணர்வு


சி  பி  கமெண்ட் -அரண்மனை -2  - அரதப்பழசான பழி வாங்கும் கதை, தெலுங்கு டப் படம் போல். காமெடி சுமார் , விகடன் மார்க் = 40 , ரேட்டிங் = 2.5 / 5 



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) =  சுமார்



 ரேட்டிங் = 2.5 / 5


 திருவனந்த புரம் அஜந்தா தியேட்டரில் படம் பார்த்தேன்