Showing posts with label VINCI DA ( பெங்காலி) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ). Show all posts
Showing posts with label VINCI DA ( பெங்காலி) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ). Show all posts

Thursday, June 04, 2020

VINCI DA ( பெங்காலி) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

VINCI DA ( பெங்காலி) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )
சட்டத்தை எப்படி எல்லாம் வளைக்கலாம் என வில்லன்கள் சொல்ல ஹீரோ எப்படி அவங்களை ஜெயிக்கிறார் என படம் எடுக்கும் டைரக்டர் எஸ் . ஏ சந்திர சேகர் + சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் ஊழல்களை ஒரு சாமான்யன் ஜெண்டில்மேனாக , இந்தியனாக, முதல்வன் ஆக, அந்நியன் ஆக எப்படி எல்லாம் அவதரித்து மக்களை ரட்சிக்கிறான் என பிரம்மாண்டமாக படம் எடுக்கும் ஷங்கர் இந்த குரு சிஷ்ய காம்போ அமைந்தால் அந்தப்படம் எப்படி இருக்கும்? என்று கற்பனை செய்து பாருங்கள் அதுதான் இந்த பெங்காலி படம், உங்களை மாறுபட்ட ஒரு அனுபவத்துக்கு தயார் செய்யும்
17 வயசு முடிஞ்சு 18 வயசு ஆக இன்னும் 6 மணி நேரம் தான் இருக்கு.அப்போ அந்தப்பையனோட அப்பா அவனோட அம்மாவை அடிச்ட்டு இருக்காரு . வேணாம்ப்பா, அம்மாவை அடிக்காதேனு சொல்றான், அப்பா கேட்கலை , கிரிக்கெட் பேட் எடுத்து ஒரே போடு ஆள் அவுட் . இதுதான் ஒப்பனிங் சீன் , எபடி இருக்கும் ஆடியன்சுக்கு? கொலை செய்தவன் 18 வயது பூர்த்தி அடையாத மைனர் என்பதால் பெரிய தண்டனை இல்லாம தப்பிடறான், இவன் சட்டம் படிச்ச கிரிமினல் ஆகறான். இந்த கேரக்டர் இப்ப்டியே இருக்கட்டும், வாங்க , அடுத்த ஒரு கேரக்டர் அறிமுகம்
அவதாரம் படத்துல அரிதாரத்தைப்பூசிக்கொள்ள ஆசை அப்டினு பாட்டுப்பாடுன கேரக்டர் கொஞ்சம் சுதியை மாத்தி அரிதாரத்தைப்பூசி விட ஆசைனு பாடுனா? அதான் இந்த கேரக்டர் . மிகத்திறமையான ஒப்பனைக்கலைஞன். அவன் திறமை அபாரமானது . பலரிடம் சினிமா சான்ஸ் கேட்டுப்போறான் , எதுவும் சரியா அமையலை . விரக்தி அடைஞ்ச அவனை அந்த க்ரிமினல் யூஸ் பண்ணிக்க நினைக்கிறான்.
ஒரு பிரபலமான தொழில் அதிபர் , அவரைப்பற்றி பயோ பிக்சர் எடுக்கனும், அவரை மாதிரியே உருவ அமைப்பு , முக ஒற்றுமையுடன் கூடிய மேக்கப் போட்டு விடனும்னு ஹீரோ கிட்டே சொல்றான் வில்லனான கிரிமினல் லாயர் . அச்சு அசலா அந்த தொழில் அதிபர் மாதிரியே மேக்கப் போட்டு விடறான் ஹீரோ . அந்த தோற்றத்தில் ஒரு பேங்க் ஏ டி எம்ல கொள்ளை அடிச்சு கொலையும் செஞ்சு சிசிடிவி கேமராவில் ஆதாரம் ஆக்கி அந்த தொழில் அதிபரை சிக்க வைக்கறான் வில்லன்
இந்த மாதிரி 3 வெவ்வேற மேக்கப் , வெவ்வேற சம்பவங்கள் . தன்னை யூஸ் பண்ணி கொலை , கொள்ளை செய்யும் வில்லன் அடிப்படையில் நல்ல காரியம் தான் பண்றான் என்றாலும் அந்த சம்பவத்தால நல்லவங்களும் பாதிக்கப்படறாங்க என்பதை ஹீரோவால ஜீரணிச்சுக்க முடியல . தப்பு செஞ்சு சாட்சிகள் இல்லாம தப்பிக்கற பணக்கார கிரிமினல்களை அவங்க செய்யாத தப்புக்காக ஆதாரத்துடன் சட்டப்படி தண்டனை வாங்கித்தருவதுதான் வில்லனின் ஃபார்முலா
ஹீரோவுக்கும் , வில்லனுக்குமான இந்த செஸ் கேமில் செக் மேட் வைத்தது யார்? எப்படி? என்பது அமேஜான் பிரைமில் காண்க
ஓப்பனிங் சீன்லயே வில்லன் இண்ட்ரோ ஆடியன்ஸ் மனசுல பச்சக்னு ஒட்டிக்குது. கொலை பண்ணி தப்பியவனை அதே போல் ஒரு கொலை செய்து அந்த கேசில் மாட்டிவிடுவது, கொள்ளை , திருட்டு கேசில் தப்பியவனை அதே டைப் திருட்டுக்கேசில் மாட்டி விடுவது எல்லாம் ஓக்கே , ஆனா ரேப் கேசில் தப்பியவனை அதே போல் ஒரு ரேப் கேசில் மாட்ட வைப்பதற்காக வில்லன் அப்பாவிப்பெண்ணை ரேப் பண்ணுவது எல்லாம் கொடூரம் . சைக்கோத்தனமான இந்த கேரக்டரை நல்லா பண்ணி இருக்கார் .
ஹீரோவா , மேக்கப் மேனா வர்றவர் தனக்கு வருமானம் இல்லை , நிரந்தர வேலை இல்லை என்பதால் காதலியிடம் பம்மிக்கொண்டே பழகுவது , காதலில் கண்ணியம் காப்பது, மனசாட்சி உறுத்துவது , தன் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காதபோதும் கலைஞனுக்குரிய கர்வம், கெத்து மெயிண்ட்டெயின் பண்ணுவது என பாராட்டும்படியான நடிப்பு
நாயகியா வ்ர்றவர் மிக இயல்பான பக்கத்து வீட்டுப்பெண் போன்ற தோற்றம். ஒப்பனை மிகை இல்லாமல் உடலில் நகை இல்லாமல் எளிமையான அழகுக்கு சொந்தக்காரர்.
இந்த மூன்று மெயின் கேரக்டர்களை வைத்து எழுதப்பட்ட திரைக்கதை மிக சிறப்பு . ஒரு இடத்தில் கூட தொய்வில்லை
ஒளிப்பதிவு , பின்னணி இசை , எடிட்டிங் பக்கா
சபாஷ் இயக்குநர்
1 நாயகன் நாயகி சந்திக்கும் இடங்கள் ஆர்ட் டைரக்டர் ரசனை தெரிகிறது . பிரமாதமான பின்னணி . ஒவ்வொரு சந்திப்பிலும் வெவ்வேறு லொக்கேசன்கள் , ரசிக்கும்படி தேர்வு செய்த விதம் அருமை
2 எடுத்துக்கொண்ட கதை மாமூல் கமர்ஷியல் ,மசாலா படத்துக்கானது என்றாலும் அதை படமாக்கிய விதத்தில் தன் தனி திறமையை காட்டி இது கலை கலந்த கமர்ஷியல் என ஆங்காங்கே உணர்த்திய விதம் குட்
3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் யூகிக்க முடிந்தது என்றாலும் எக்ஸ்க்யூட் பண்ணிய விதம் சிறப்பு
4 பிரபல ஹிந்தி ஹீரோ நடைபாதை ஓர தொழிலாளர்கள் மேல் குடி போதையில் கார் ஏற்றி காயப்படுத்திய வழக்கை சாமார்த்தியமா திரைக்கதையில் கனெக்ட் பண்ணிய விதம்
நச் டயலாக்ஸ்
1 ஒரு சப்ஜெக்ட் பற்றி வாதாடும் முன் அதைப்பற்றிய டீட்டெய்ல்ஸ் படிச்சு வெச்சுக்கறது நல்லது
2 சுய மரியாதை உள்ள கலைஞன் வெறும் பணத்துக்காக மட்டும் வேலை செய்வதில்லை
3 என்னை மாதிரி தொழில் பக்தி உள்ள ஒரு ஒப்பனைக்கலைஞன் கிட்ட மாறுபட்ட வித்தியாசமான மேக்கப் போட முடியுமா?னு கேட்பது மானை ருசிக்க முடியுமா?னு பசிச்ச புலி கிட்டே கேட்பது மாதிரி
4 ஒப்பனை பண்றவனோட கை ஒப்பனை செய்யப்படுபவனின் முகத்தில் படும்போது காதலியின் நிர்வாண உடலில் கை படுவது போலே உணர்வான்
5 காதலியின் உடலை முதன் முதலாக தொட்டு உணரும் ஸ்பரிசம் தான் ஒப்பனை இடுபவன் ஒவ்வொரு முறை ஒப்பனை செய்கையில் உணர்வான்
6 அநியாயத்தை தட்டிக்கேட்க கடவுள் தயங்கறப்ப ஒரு மனிதன் கடவுள் அவதாரம் எடுக்க வேண்டிய தேவை உருவாகுது
7 அமைதிக்கான நோபல் பரிசு எங்கே இருந்து கிடைச்சது தெரியுமா? பாம் வித்த பணத்தில் இருந்து
8 , டியர், நீ என்ன பண்றே?ங்கறது எனக்கு முக்கியம் இல்லை , ஆனா உன் கூட நான் இருப்பேன்
9 எனக்கும் உனக்கும் செட் ஆகுமா?னு தெரில , ஏன்னா நான் கனவுகளை துரத்துபவன்
10 பேங்க்கை கொள்ளை அடிச்சதா என் மேல குற்றம் சாட்றீங்க, ஆனா நான் நினைச்சா ஒரு பேங்க்கையே வாங்க முடியும்
இருக்கலாம், ஆனா போலீசை வாங்க முடியாது
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 வில்லனோட கிரிமினல் மூளை போடும் திட்டப்படி ஒரு ஆளின் முகம் போல மேக்கப் போட்டு போலியான அலிபி ஏற்படுத்துவது ஓக்கே , ஆனா குறிப்பிட்ட அந்த ஆள் அதே டைம்ல வேற ஏரியாவில் வேற ஒருவர் கூட இருந்ததை நிரூபிக்கும் வாய்ப்பு இருப்பதைக்கூடவா சிந்திக்க மாட்டான்? அவனை ஒரு இடத்தில் அடைச்சு வெச்சுட்டு அதை செஞ்சிருந்தா பக்கா பிளான்
2 ஓப்பனிங் சீனில் மகன் அப்பாவை அடிக்கும்போது அம்மா அதை தடுக்க முற்படவே இல்லை . அப்போ மகன் செயலை விரும்புகிறார் அம்மா என்பது போல் தோணுது. ஆனா பிறகு மகனை ஏற்றுக்கொள்ள மறுத்து தனியே அம்மா செல்வது எப்படி?
3 வில்லனான கிரிமினல் தனது கடைசிக்குற்றத்தைப்புரியும்போது சிசிடிவி கேமராவைப்பார்த்து நக்கலாக சிரிப்பது சந்தேகத்தை விளைவிக்காதா?
4 க்ளைமாக்சில் முக்கியமான சீனில் ஹீரோ வில்லனைப்பார்த்து கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? என கேட்கும்போது வில்லன் எழுந்து ரூமில் இருந்து வாட்டர் பாட்டில் கொண்டு வரும் கேப்பில் ஹீரோ வில்லனுக்கான மது கோப்பையில் விஷம் கலப்பது போல சீன். ஓக்கே., ஆனா வில்லனிடம் சம்பளம் வாங்கும் வேலையாள் போன்ற ஹீரோ தண்ணி கேட்கும்போது உள்ளே இருக்கு , போய் எடுத்துக்கோனு ஓனர் சொல்வாரா? ஓனரே எந்திரிச்சுப்போய் தண்ணி எடுத்துத்தருவாரா?
சி.பி . கமெண்ட் = அச்சு பிச்சு காமெடி டிராக்கோ , டூயட் சீன்களோ வேகத்தடைகளாக இல்லாமல் ஒரு பெங்காலிப்படம் இவ்ளோ த்ரில்லிங்கா இருப்பது ஆச்சரியமா இருக்கு , அமேசான் பிரைமில் கிடைக்குது , டோண்ட் மிஸ் இட் . ரேட்டிங் 3.75 / 5