Showing posts with label TIPS. Show all posts
Showing posts with label TIPS. Show all posts

Sunday, November 29, 2015

இரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு

ரேவதி, படங்கள்: உசேன், ர.வருண் பிரசாத்
''காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம் சேவகனைப் போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு'' என ஒரு பழமொழி உண்டு. காலையில் எல்லா சத்துக்
களும் நிரம்பிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிட வேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சோறு, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். மாறாக நாம் காலையில் சாப்பிடாமல், ஒரு நாளை ஆரம்பிக்கிறோம். இரவில் கொழுப்புச்சத்து நிரம்பிய வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவில் உண்டு விடுகிறோம். பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், பரோட்டா தான் இன்றைக்கு பெரும்பாலானோரின் இரவு உணவு. எடை அதிகரிப்பதற்கும், நோய்கள் உள்ளே வருவதற்கும் முக்கியக் காரணமே இந்த உணவுமுறைதான்.
ஆரோக்கியமான, எளிதான உணவை இரவில் எடுத்துக்கொள்வதன் மூலம், பல்வேறு நோய்களில் இருந்து காக்க முடியும். அப்படியான உணவு வகைகள் சிலவற்றை டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி சொல்லித்தர, அவற்றை செய்து காட்டியிருக்கிறார் சமையல் கலை நிபுணர் பத்மா.  
என்ன சாப்பிட வேண்டும்?
உப்புமா, சுக்கா ரொட்டி, சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், தோசை, சாலட் என வயிற்றுக்குப் பங்கம் விளைவிக்காத, மிதமான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். கூடவே பருப்பு சாம்பார், கொத்தமல்லி, தேங்காய், புதினாவில் செய்த சட்னி வகைகளைச் சிறிதளவு சாப்பிடும்போது, நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.
எவற்றைச் சாப்பிடக்கூடாது?
நூடுல்ஸ், பரோட்டா, அசைவ உணவுகள், வறுத்த பொரித்த உணவுகள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட், கூல் டிரிங்ஸ் இவற்றைத் தவிர்க்கவேண்டும். மசாலா உணவுகள் அசிடிட்டியை ஏற்படுத்தும். அசைவம், பரோட்டா உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
எப்படிச் சாப்பிடுவது?
இரவு 7  8 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். லேட் நைட்டில் சாப்பிடுவதால் காலையில், மலச்சிக்கல் பிரச்னை வரலாம். காலையில் பசி எடுக்காது. இரவு உணவை அதிகமாகவோ குறைவாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. தூங்கச் செல்கையில், அரை வயிறாகத்தான் இருக்க வேண்டும். அப்படியே பசித்தாலும், ஒரு டம்ளர் பாலுடன் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம்.
சப்பாத்தி  தால்
சப்பாத்திக்குத் தேவையானவை: கோதுமை மாவு  200 கிராம், வெண்ணெய்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் வெண்ணெய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு மிதமான வெப்பத்தில் சுட்டு எடுக்கவும். வெண்ணெய்க்குப் பதிலாக மிதமான சூட்டில் இருக்கும் பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பிசையலாம். இதனால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
தால்  தேவையானவை: பாசிப்பருப்பு  100 கிராம், இஞ்சி  ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய், தக்காளிப்பழம்  தலா 1, எண்ணெய்  ஒரு டீஸ்பூன். கடுகு  ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி  சிறிதளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, ஒரு டீஸ்பூன் கடுகு போட்டுத் தாளித்து, துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.
ஜவ்வரிசி உப்புமா  வெங்காயச் சட்னி
தேவையானவை: ஜவ்வரிசி  100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், வறுத்த வேர்க்கடலை  தலா ஒரு கப், பச்சைமிளகாய்  1, துருவிய இஞ்சி  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, பொட்டுக்கடலை  2 டீஸ்பூன், கொத்தமல்லி  சிறிதளவு, விருப்பப்பட்டால் நெய்  1 டீஸ்பூன், எலுமிச்சம்பழம்  அரை மூடி.
செய்முறை: ஜவ்வரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவிடவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு வெங்காயம், பொட்டுக்கடலை, இஞ்சி, கேரட் துருவல், வேர்க்கடலை எல்லாவற்றையும் சேர்த்து, ஊறிய ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். உப்பு சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்ததும் நறுக்கிய கொத்துமல்லி எலுமிச்சம் பழச்சாறு கலந்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
வெங்காயச் சட்னி: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 10 சின்ன வெங்காயத்தைத் தோல் உரித்துச் சேர்த்து வதக்கவும். 2 காய்ந்த மிளகாய், 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடுகு தாளித்து நன்றாகக் கலக்கவும்.
அவல் தோசை  தேங்காய் சட்னி
தேவையானவை: அவல்  200 கிராம், அரிசி  100 கிராம், உப்பு  தேவையான அளவு, கடுகு, இஞ்சி துருவல்  சிறிது, மிளகாய்  1.
செய்முறை: அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.
தேங்காய் சட்னி: ஒரு கப் தேங்காய்த் துருவலுடன், 1 பச்சை மிளகாய், 4 டீஸ்பூன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்துத் தண்ணீர் விட்டு அரைக்கவும். அவல் தோசைக்கு அருமையான சைடுடிஷ்.
இடியாப்பம்  சொதி
தேவையானவை: இட்லி அரிசி  கால் கிலோ, எண்ணெய்  ஒரு ஸ்பூன், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து, சிறிது தண்ணீர் விட்டு, கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மாவை, தோசைமாவுப் பதத்தில் கரைத்து உப்பு சேர்த்து மிதமான வெப்பத்தில் அடுப்பில் வைத்து கெட்டியாகக் கிளறவும். ஆறியதும் நீளவாக்கில் மாவை நன்றாகப் பிசைந்து உருட்டிவைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் (உருண்டைகள் மூழ்கும் அளவுக்கு) விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். உருண்டைகளைப் போட்டு நன்றாக வெந்ததும், இடியாப்ப அச்சில் ஒவ்வொன்றாகப் போட்டுப் பிழிந்துகொள்ளவும்.
சொதி: 6 பீன்ஸ், 1 கேரட், 1 குடமிளகாய் மூன்றையும் நீளவாக்கில் நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் 100 மி.லி தேங்காய்ப்பால் சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து இறக்கவும்.
குழிப்பணியாரம்  சட்னி
தேவையானவை: இட்லி அரிசி  200 கிராம், வெந்தயம்  2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு  4 டீஸ்பூன், தேங்காய்ப்பால்  100 மி.லி, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம்  தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி  ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய்  1, கடுகு  ஒரு ஸ்பூன், எண்ணெய், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: இட்லி அரிசியுடன் வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து, இரண்டு மணிநேரம் ஊறவைத்துக் களைந்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து, தேவையான உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கேரட், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி மாவுடன் கலந்து, தேங்காய்ப் பால் விடவும். பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றிப் பொன்னிறமாக  இருபுறமும் திருப்பி வேகவிடவும். புதினா, தேங்காய், வெங்காயம், கொத்தமல்லி என இதற்குத் தொட்டுக்கொள்ள எல்லா வகைச் சட்னியும் அருமையாக இருக்கும்.
கேழ்வரகு தோசை  சட்னி
தேவையானவை: கேழ்வரகு மாவு  200 கிராம், கடுகு, சீரகம்  தலா ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, பெருங்காயத்தூள்  சிறிதளவு, எண்ணெய்  100 மி.லி
செய்முறை: கேழ்வரகு மாவுடன் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள்,கடுகு  சேர்த்துத் தாளித்து, தோசைமாவுப் பதத்தில் கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மிதமான வெப்பத்தில் தோசை மாவைப் பரவலாக ஊற்றி இருபுறமும் எண்ணெய்விட்டு வெந்ததும் எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள, தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
ஆலு சப்பாத்தி கொத்தமல்லி சட்னி
தேவையானவை: கோதுமை மாவு  200 கிராம், வெண்ணெய்  2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, சிறிய உருளைக்கிழங்கு  3, மிளகாய்த்தூள்  ஒரு டீஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவிட்டு தோல் உரித்து நன்றாக மசிக்கவும். இதில், கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, வெண்ணெய், மிளகாய்த்தூள் சேர்த்துத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இதைச் சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு சுட்டெடுக்கவும்.
கொத்தமல்லி சட்னி: கொத்தமல்லி, பச்சைமிளகாய், உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து, கடுகு தாளித்துக் கலக்கவும்

thanks vikatan

Saturday, November 21, 2015

வெள்ளத்தில் கார்/பைக் சிக்கினால்...

‘‘மழைத் தண்ணியில வண்டி ஓட்டுறது செமையா இருக்கு மச்சான்...’’ என்று புளகாங்கிதம் அடைபவரா நீங்கள்? அப்படியெனில், இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்.
‘‘ஏரியா இருந்ததெல்லாம் ஏரியாவா மாறி, மறுபடியும் ஏரியா மாறிடுச்சு!’’ என்று ஃபேஸ்புக், வாட்ஸ் அப்களில் கவிதை எழுதுவதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, இதைக் கொஞ்சம் படியுங்கள். கார்/பைக் விஷயங்களில் மழை வெள்ளத்திடம் ஈரத்தை எதிர்பார்க்க முடியாது. சிக்கிவிட்ட உங்கள் வாகனத்தை வெள்ளத்திடம் இருந்து காப்பாற்ற... மழை நேரங்களில் கவனமாக வாகனத்தைச் செலுத்த இதோ சில டிப்ஸ்...
பைக் ஓட்டிகளுக்கு...

1. வாகனங்களுக்கு முதல் சிம்ம சொப்பனமே தண்ணீர்தான். அதுவும் சைலன்ஸருக்கும் தண்ணீருக்கும் சுத்தமாக ஆகாது. எனவே, சைலன்ஸர் மூழ்கும் அளவு உள்ள நீர்ப் பகுதிகளில், ‘‘கொஞ்ச தூரம்தானே.. அப்படியே ஓட்டிடலாம்’’ என்று நினைத்தீர்கள் என்றால், இன்ஜினுக்கு கண்டம். அதன் காரணமாகவே இப்போது சைலன்ஸர் உயரமாக உள்ள பைக்குகள் வர ஆரம்பித்துவிட்டன. லேட்டஸ்ட் யமஹா, ஹோண்டா, சுஸூகி பைக்குகளுக்கு எல்லாமே இப்போது சைலன்ஸர் உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக பைக் வாங்க இருக்கிறீர்கள் என்றால், அதைக்கூட நீங்கள் பரிசீலிக்கலாம்.

2. மழை வெள்ளத்தில் பார்க்கிங் செய்யப்பட்ட கார்/பைக்குகளை, வெள்ளம் வடிந்தபிறகு, ஸ்டார்ட் செய்யவே கூடாது. முடிந்தால், பெட்ரோலையும் காலி செய்வது சாலச் சிறந்தது. சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்வதுதான் பெஸ்ட்.

3. மழை நேரங்களில் மட்டுமல்ல; வெயில் நேரங்களிலும் ஸ்பார்க் ப்ளக்கைக் கழற்றிச் சுத்தம் செய்துவிட்டு பொருத்துவது நல்ல பலன் தரும். ஸ்பார்க் ப்ளக் எக்ஸ்ட்ரா ஒன்றை எப்போதுமே டூல் கிட்டில் வைத்துக்கொள்வது இன்னும் பெஸ்ட். பைக்குகளின் ஸ்பார்க் ப்ளக் விலை 90 முதல் 100 ரூபாய்தான்.

5. செயின் கார்டு உள்ள பைக்குகளில் பிரச்னை இல்லை. நேக்கட் பைக்குகளில் செயின் ஸ்பிராக்கெட்டுகள் ‘கார்டு’ இல்லாமல், ஓப்பனாகவே இருக்கும். இவை ஓரளவு பிசுபிசுப்புத்தன்மையுடன் இருந்தாலும், மழை நேரங்களில் மெக்கானிக்குகள் மூலம் ‘செயின்  ஸ்ப்ரே’ செய்து கொள்வது நல்லது.

6. மழை நேரங்களில் பெட்ரோல் டேங்க்கில் மிகவும் கவனம் தேவை. என்னதான் டேங்க் மூடி நன்றாக கவர் செய்யப்பட்டிருந்தாலும், ஓரம் வழியாக சில சொட்டு நீர்த்துளிகள் பெட்ரோல் டேங்கினுள் கலக்க வாய்ப்புள்ளது. பெட்ரோலில் தண்ணீர் கலந்து விட்டால், ஸ்பார்க் ஏற்படுவதில் பிரச்னை ஏற்பட்டு... வழியில் ஆஃப் ஆகி... (இன்ஜின் ஸ்டாப்) வேறென்ன..? ஸ்டார்ட்டிங் டிரபுள்தான்!

கார் ஓட்டிகளுக்கு...

1. பைக்கைவிட, வெள்ளத்தின் பாதிப்பு கார்களுக்குத்தான் அதிகம். இதிலும் சைலன்ஸர்/ஏர் இன்டேக்குக்குள் தண்ணீர் புகாத வரை எல்லாமே ஸ்மூத்தான். வேறு வழியில்லை என்றால், முதல் கியரில் 1,200 முதல் 1,500 ஆர்பிஎம்-முக்குள் குறைவான வேகத்திலேயே மெதுவாகச் சென்று வெளியேறுங்கள்.

2. அதிக தண்ணீருக்குள் இருக்கும்போது கார் ஆஃப் ஆகிவிட்டால், காரை ஸ்டார்ட் செய்யாதீர்கள். இது கனெக்டிங் ராடுகளில் பிரச்னை ஏற்படுத்தி, மிகப் பெரிய செலவுக்குக் கைகாட்டி விடும். தள்ளிச் செல்வதுதான் பெஸ்ட்.

3. வெள்ள நேரங்களில் எங்கெங்கு, எத்தனை அடி பள்ளம் ஏற்படும் என்பது மாநகராட்சியினருக்குக்கூடத் தெரியாது. கார்களில் சென்று சின்னப் பள்ளங்களில் விழுந்தால்கூட, சேதாரம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். வீல்கள் அடிவாங்குவதோடு இன்ஜின் சம்ப், சேஸி, பம்பர் பகுதிகள் நிச்சயம் அடி வாங்கும்.  

4. பிரீமியம் கார்களில் பிரச்னை இல்லை; ஹேட்ச்பேக் கார்களில் முன் பக்க விண்ட்ஷீல்டில் என்னதான் வைப்பர் பயன்படுத்தினாலும், மழை நேரங்களில் விசிபிளிட்டி அவ்வளவாக இருக்காது. வெளியே நிறுத்தப்பட்ட காரை எடுக்கும்போது, உடனே வைப்பர் பயன்படுத்துவதால், விண்ட் ஷீல்டுகளில் ஸ்க்ராட்ச்கள் ஏற்படுவதுடன், மழை நேரங்களில் இது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, டிஷ்யூ பேப்பர், மைக்ரோ ஃபைபர் துணி அல்லது நல்ல வளவளப்பான நியூஸ் பேப்பரைக் கொண்டு அழுந்தத் துடைத்துவிட்டு வைப்பர் பயன்படுத்துவது பெஸ்ட்.

5. மழை நீர், கார்களில் பெரும்பான்மையாக கை வைப்பது எலெக்ட்ரானிக் பாகங்களில்தான். எனவே, ஜன்னலை மூடிவிட்டு, ஏ.சியை ஆன் செய்யாமல் பயணிப்பதுகூட நல்லதுதான். 

6. எலெக்ட்ரானிக் விஷயங்கள் எவ்வளவு ஆபத்து என்பதற்கு ஓர் உதாரணம்: சென்னை டிராஃபிக்கில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஒருவர், காரை ஐடிலிங்கில் விட்டு, ஏ.சியை ஆன் செய்துவிட்டுத் தூங்க ஆரம்பித்து விட்டார். எக்ஸாஸ்ட் வழியாக வெளியேற முடியாத காற்று, உள்ளுக்குள்ளேயே சுழன்று தீப்பிழம்பை ஏற்படுத்த, கார் தீப்பிடித்து உயிரை இழந்திருக்கிறார் ஓர் அப்பாவி. 

7. பவர் விண்டோஸ் பட்டனும் எலெக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இதிலும் கவனம் தேவை. கார் முழுவதும் மூழ்கிய நிலையில் உள்ளே மாட்டிக் கொண்டால், பின் பக்க விண்ட்ஷீல்டை உடைத்து வெளியே வருவது நல்லது. கண்ணாடியை விட, உயிர் முக்கியம் இல்லையா?

8. மழையில் நிறுத்தப்பட்ட காரை, மறுநாள் ஸ்டார்ட் செய்து உடனே ஆக்ஸிலரேட்டரை மிதித்து, அவசர அவசரமாகக் கிளம்புவதைத் தவிருங்கள். எப்போதுமே காரை ஸ்டார்ட் செய்துவிட்டு, ஐடிலிங்கில் சிறிதுநேரம் வைத்திருந்தபிறகு கிளம்புங்கள். டர்போ சார்ஜர், பெட்ரோல் மிக்ஸிங் என்று எல்லாமே அப்போதுதான் சீராக நடக்கும்.

9. மெக்கானிக் பாகங்களுக்கு ஏதும் பிரச்னை வராதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஸ்டீயரிங், கியர்பாக்ஸ், கிளட்ச், பிரேக், ஹேண்ட்பிரேக் போன்றவை ஜாம் ஆக வாய்ப்புண்டு. எனவே, கிளம்பும் முன் இவற்றை நன்றாக பரிசோதித்து விட்டுக் கிளம்புவது நல்லது.

10. ரொம்ப முக்கியமான விஷயம் - ஈரமான சாலைகளில் வேகம் வேண்டாமே!

- தமிழ் தென்றல்

thanks vikatan

Saturday, August 06, 2011

என்னை விரட்டும் சங்கீதம் நீ, எண்ணெய் மிரட்டும் சங்கடம் நான் -30 வகை எண்ணெய் இல்லாத சமையல் டிப்ஸ்

30 வகை எண்ணெய் இல்லாத சமையல் !

'ஹெல்த் கான்ஷியஸ்னஸ்' அதிகமாகி வரும் இக்கால கட்டத்தில், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் வழிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது... எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதுதான். இதற்கு உங்களுக்கு கைகொடுக்க வருகிறார் 'சமையல்கலை நிபுணர்’ நங்கநல்லூர் பத்மா.


 புரோட்டீன் ரிச் உசிலி, வடிகஞ்சி சூப், குழல் புட்டு என்று சத்தும், சுவையும் மிக்க ரெசிபிகளை அள்ளித் தந்து அசத்தியிருக்கும் அவர், ''சிலவற்றைத் தாளிப்பதற்கு மட்டும் சில துளி எண்ணெயைப் பயன்படுத்தியிருக்கிறேன். மற்றபடி எண்ணெய் பயன்பாடு ஜீரோதான்.

அதேசமயம், சுவையில் துளியும் குறை வைக்காமல் விதம்விதமான அயிட்டங்களை தந்திருக்கிறேன். குறிப்பாக, மல்டி கடலை உருண்டை, வெஜிடபிள் ஸ்பெகட்டி, மல்டி பழ டெஸட் போன்றவற்றைச் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், தட்டு காலியாகும் வேகத்தைக் கண்டு மூக்கில் விரல் வைத்து ஆச்சர்யப்படுவீர்கள்'' என்று உத்தரவாதம் தருகிறார். அவருடைய ரெசிபிகள், செஃப் ரஜினியின் அலங்கரிப்போடு இங்கே இடம்பெறுகின்றன.

களத்தில் இறங்குங்கள்... அப்ளாஸ்களை அள்ளுங்கள்!

1.  மல்டி கடலை உருண்டை 


தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா 100 கிராம், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10, வெல்லம் - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, உருட்டும் பதம் வந்ததும் (தண்ணீரில் போட்டால் உருட்டும் பதம்) இறக்கவும். பாதாம், பிஸ்தாவை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து... உடைத்த பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலையுடன் சேர்த்து, பாகுடன் கலக்கவும். ஏலக்காய்த்தூள் தூவி, சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.


குறிப்பு: பள்ளிக் குழந்தைகளுக்கு மாலை வேளைக்கேற்ற சத்தான உருண்டை இது.


2.  வெஜிடபிள் கலவைக் கூட்டு 


தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், கேரட், சிறிய புடலங்காய், பச்சை மிளகாய் - தலா 1, பீன்ஸ் - 10, பச்சைப் பட்டாணி - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். புடலங்காய், பீன்ஸையும் தனித்தனியே சிறு துண்டுகளாக நறுக்கவும். கேரட், பீன்ஸ், புடலங்காய், பச்சைப் பட்டாணி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகத்தை தண்ணீர் விட்டு அரைத்துச்  சேர்க்கவும். பாசிப்பருப்பை வேக வைத்து கூட்டுடன் சேர்த்துக் கலந்து, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்தில் இந்தக் கூட்டை கலந்து சாப்பிடலாம் சைட் டிஷ் தேவை இல்லை.

3.  மேத்தி ரொட்டி 

தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், வெந்தயக்கீரை - ஒரு கட்டு,  பால் - 100 மில்லி, உப்பு -   தேவையான அளவு,

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். வெந்தயக் கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு வாட்டி எடுக்கவும்.

குறிப்பு: பால் சேர்ப்பதால் எண்ணெய், நெய் எதுவும் வேண்டாம். இதற்கு ஆனியன் ரெய்தா சிறந்த காம்பினேஷன்.

4.  தேன் நெல்லிக்காய்

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, தேன் - 100 மில்லி, சர்க்கரை - 200 கிராம்.

செய்முறை: நெல்லிக்காயை வில்லை வடிவமாக சீவவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறி பாகு காய்ச்சி நெல்லிக்காயும் சுருங்கும் சமயம் அடுப்பை நிறுத்தவும். நன்கு ஆறியவுடன் தேன் விடவும்.

குறிப்பு: தினமும் இரு துண்டு சாப்பிட்டால்... ரத்த சோகையைத் தடுக்கும்.

5.  நீர்க் கொழுக்கட்டை

தேவையானவை: புழுங்கல் அரிசி - கால் கிலோ, தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு சேர்த்துக் கிளறி, கொதிக்கும் நீரில் சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: தேங்காய் சேர்த்து அரைத்து இருப்பதால், சுவையாக இருக்கும். ஊறுகாய், இட்லி மிளகாய்ப்பொடி ஆகியவை இதற்கு சிறந்த காம்பினேஷன். சட்னியும் நன்றாக இருக்கும்.

6.  வெஜிடபிள் குருமா

தேவையானவை: தக்காளி - ஒன்று, கேரட் - ஒன்று, பச்சைப் பட்டாணி  - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி.... பச்சைப் பட்டாணி,  நறுக்கிய கேரட், தக்காளி, உப்பு சேர்த்து வேகவிடவும், தனியாத்தூள், கரம் மசாலாதூள் சேர்த்துக் கலந்து, மிளகாய், தேங்காய் துருவலை அரைத்துச் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும். தேங்காய்க்கு பதில்   தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.

குறிப்பு: கரம் மசாலா பிடிக்காதவர்கள்... புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சிறிதளவு சேர்த்து அரைத்து கொதிக்கவிடலாம்.

7.  எள் உருண்டை

தேவையானவை: கறுப்பு எள் - 100 கிராம், வெள்ளை எள் - 100 கிராம், வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: கறுப்பு எள், வெள்ளை எள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும்.  வெல்லத்தை கரைத்து கடாயில் விட்டு கெட்டியாக வரும் பதத்தில் பாகு காய்ச்சவும். வறுத்த எள்ளை   தனித்தனியாக பாகுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.

குறிப்பு: எள் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பருவ வயது வரும்போது எள்ளை  பெண் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களை வலுவடைய செய்யலாம். எள்ளை  துவையல், பொடி என்று சமையலில் பலவிதமாக பயன்படுத்தலாம்.

8.  வெஜிடபிள் இடியாப்பம்

தேவையானவை: இட்லி அரிசி - அரை கிலோ, பொடியாக துருவிய கேரட் - அரை கப், பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கப், கோஸ் (துருவியது) - அரை கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: அரிசியை நன்கு ஊற வைத்து, கெட்டியாக அரைத்து, உப்பு சேர்த்துக் கிளறவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கொதிக்கும் நீரில் போட்டு, உருண்டைகள் வெந்து மேலே மிதந்துவரும் சமயத்தில் எடுத்து சேவை அச்சில் போட்டுப் பிழியவும். நன்றாக சுத்தம் செய்து துருவிய மற்றும் நறுக்கிய காய்கள், நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை அப்படியே  சேவையின் மேல் தூவி சாப்பிடலாம். தேங்காய்ப்பாலை மேலே ஊற்றி சாப்பிடால் சூப்பர் டேஸ்ட்டில் இருக்கும்.

குறிப்பு: பச்சைக் காய்களும் வெந்த இடியாப்பமும் தனி ருசிதான்!  பச்சையாக சாப்பிடக்கூடிய பயிறு வகைகள், இனிப்பு சோளம் சேர்த்தும் கலந்து கொடுக்கலாம். வேக வைத்த காய்களும் சேர்த்து சாப்பிடலாம்.

9.  வடிகஞ்சி சூப்

தேவையானவை: அரிசி - கால் கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நறுக்கிய தக்காளி - அரை கப், துருவிய கேரட் - ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சோள மாவு - ஒரு சிட்டிகை, பொடியாக துருவிய கோஸ் - 4 டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,  ரஸ்க் - 4, உப்பு -    தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் களைந்து, தண்ணீரில் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து வரும்போது கஞ்சி  வடிக்கவும். அதில் தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், உப்பு சேர்க்கவும். பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து, சிறிது சோள மாவை கரைத்து சேர்த்துக் கொதிக்கவிட்டு, நறுக்கிய கொத்தமல்லி போட்டு இறக்கவும். சாப்பிடும்போது ரஸ்க்கை சிறு துண்டுகளாக உடைத்து சேர்த்துச் சாப்பிடவும்.

குறிப்பு: சூப்பை சூடாக சாப்பிட வேண்டும். கஞ்சி உடலுக்கு குளுமை தரும். சூப்பில் கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்தால் சுவை கூடும். சூப் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.

10.  மல்டி பழ டெஸட்

தேவையானவை: கிர்ணிப்பழத் துண்டுகள் - 6, சப்போட்டா - இரண்டு, ஆரஞ்சு - ஒன்று, ஆப்பிள் - ஒன்று, வாழைப்பழம் - ஒன்று, தேன் - 4 டீஸ்பூன், பைனாப்பிள் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: எல்லா பழங்களையும் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு பிளேட்டில் பரவலாக போட்டு, தேன் ஊற்றி அப்படியே சாப்பிடவும்.

குறிப்பு: குழந்தைகள் பிறந்தநாள், விருந்தினர்களை உபசரிக்க இந்த மல்டி பழ டெஸட் ஒரு சூப்பர் டிஷ். தயாரிப்பது எளிது... கிடைக்கும் பாராட்டு பெரிது!



11.  புரோட்டீன் ரிச் உசிலி

தேவையானவை: முளைகட்டிய பயறு - ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், முளைவிட்ட சோளம் - ஒரு கப், முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், பூண்டு - 2 பல்,காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, சோளம், கறிவேப்பிலை, பூண்டுப் பல், காய்ந்த மிளகாய், தோல் சீவிய இஞ்சி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து...  உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக அல்லது இட்லி வடிவத்தில் தட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறியவுடன் நன்கு உதிர்க்க வரும்.

குறிப்பு: சூடான சாதத்தில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு இந்த உசிலி சேர்த்துச் சாப்பிடலாம்.

12.  ராகி இனிப்பு உருண்டை

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை: கேழ்வரகு மாவை வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு நைஸாக கரைக்கவும். சர்க்கரையை தனியாக அரைத்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் கலந்து உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு: கேழ்வரகு மாவை கொதிக்கும் நீரில் சிறிது சிறிதாக போட்டுக் கிளறி... வெல்லம், தேங்காய் சேர்த்து உருட்டி, ஆவியில் வேக வைத்தும் கொடுக்கலாம்.

13.  வெஜிடபிள் சொதி

தேவையானவை: கேரட் - 1, பீன்ஸ் - 10, குடமிளகாய் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு,  தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்.


செய்முறை: கேரட்டை நீளவாக்கில் நறுக்கவும். பீன்ஸ், குடமிளகாயையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, காய்கறிகளை கடாயில் போட்டு, மூடி  வேக வைக்கவும். பின்பு தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துச் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷனாக இருக்கும் இந்த ரெசிபி, இலங்கையில் வசிப்பவர்களின் ஸ்பெஷல் ரெசிபி.

14.  குழல் புட்டு

தேவையானவை: சிவப்பு அரிசி புட்டு மாவு - 250 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், நேந்திரம்பழம் - ஒன்று.

செய்முறை: புட்டு மாவில் இளம் சூடாக தண்ணீரைத் தெளித்து, நன்கு பிசிறிக் கொள்ளவும். பிறகு புட்டு வேக வைக்கும் குழாயில் சிறிது மாவை நிரப்பி. அதன் மேலே தேங்காய் துருவல், பிறகு மாவு, பிறகு நேந்திரம்பழத் துண்டுகள்... இப்படி மாற்றி மாற்றி அடைத்து, வேக வைத்து எடுக்கவும். குழல் வடிவத்தில் இருக்கும் இந்தப் புட்டை கைகளால் பிசைந்து சாப்பிடலாம்.

குறிப்பு:  மாவை மட்டும் தனியே வேக வைத்து எடுத்து... பழத்துண்டுகள், தேங்காய் துருவல் கலந்தும் சாப்பிடலாம்.

15.  பயறு கறி

தேவையானவை: சிவப்பு காராமணி - 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காராமணியை லேசாக வறுத்து 2 மணி நேரம் ஊற வைத்து... குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பை வறுத்து அரைத்து, வேக வைத்த காராமணியில் சேர்த்து, உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு: இது, குழல் புட்டுக்கு ஒரு சிறந்த காம்பினேஷன். சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.

16.  வெஜிடபிள் இட்லி

தேவையானவை: இட்லி மாவு - அரை கிலோ, துருவிய கேரட் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, பொடியாக துருவிய கோஸ் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்.

செய்முறை: இட்லி மாவுடன் துருவிய கேரட், கோஸ், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். சிறிய இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, ஒரு ஸ்பூனால் மாவை ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு: இந்த மினி இட்லிக்கு வெங்காய சாம்பார் சிறந்த காம்பினேஷன். ஒரு பவுலில் சாம்பார் ஊற்றி, இட்லிகளை சற்று ஊறவைத்தும் சாப்பிடலாம்.

17.  அகத்திக்கீரை பொரியல்

தேவையானவை: அகத்திக்கீரை - ஒரு கட்டு, பாசிப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய்- ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய் - முக்கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அகத்திக்கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும். சிறிது வெந்தவுடன் உப்பு சேர்த்து மேலும் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து,  தேங்காய் துருவல், வேகவைத்த கீரை சேர்த்து வதக்கவும்.

குறிப்பு: அகத்திக்கீரை, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது... குடல் புண்னை ஆற்றும்.   கீரையை அளவாக தண்ணீர் வைத்து வேகவிடவும். அதிகம் தண்ணீர் வைத்து வடித்தால் சத்துக்கள் குறையும்.

 18. பைனாப்பிள் ரசம்

தேவையானவை: புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, பைனாப்பிள் துண்டுகள் - 6, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - அரை ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: புளியைக் கரைத்து கடாயில் விட்டு, சாம்பார் பொடி உப்பு சேர்த்து, பச்சை மிளகாயை நறுக்கிப்    போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது கொதித்ததும் பைனாப்பிள் துண்டுகள் போட்டு, வேக வைத்த பருப்பை கரைத்து விட்டு, கடுகு தாளித்து, பெருங்காயத்தூள், கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

குறிப்பு: பைனாப்பிள் ஃப்ளேவருடன் வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும் இந்த ரசம்.

19.  நெல்லிக்காய் பச்சடி

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பெரிய நெல்லிக்காயை சீவி... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து, தயிரில் கலக்கவும்.  எண்ணெயில் கடுகு தாளித்து இதில் கொட்டவும்..

குறிப்பு: நெல்லிக்காயில் விட்டமின் 'சி’ உள்ளது நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் குளுமை அடையும்.

 20. முருங்கைக் கீரை கூட்டு

தேவையானவை: முருங்கைக்கீரை (ஆய்ந்தது) - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், வேக வைத்த பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காய்த்தூள்- சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.


செய்முறை: முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாயை அரைத்து சேர்த்து கொதிக்கவிடவும். வேக வைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து இதில் கொட்டவும். நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

குறிப்பு: முருங்கைக் கீரை குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அடங்கியது.



 21. கத்திரிக்காய் கொத்ஸு

தேவையானவை: கத்திரிக்காய் (பெரியது) - ஒன்று, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, தனியா. கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - ஒன்று, வெல்லம் - ஒரு சிறு துண்டு, உப்பு - தேவையான அளவு

செய்முறை: தனியா, காய்ந்த மிளகாய்,  கடலைப்பருப்பு மூன்றையும் வறுத்து பொடித்துக் கொள்ளவும். கத்திரிக்காயை சுட்டு, தோல் உரித்து, நன்கு பிசையவும். புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து, பிசைந்த கத்திரிக்காய், உப்பு சேர்க்கவும். வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து, வெல்லத்தை போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: அரிசி உப்புமாவுக்கும்,  பொங்கலுக்கும் சிறந்த காம்பினேஷன் இது.

22  காராமணி சுண்டல்

தேவையானவை: சிவப்பு காராமணி - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப்.

செய்முறை: சிவப்பு காராமணியை வறுத்து, ஊற வைத்து, வேகவிடவும். வெல்லத்தை பாகுகாய்ச்சி, வடிகட்டி, உருட்டும் பதம் வந்ததும் வேக வைத்த காராமணி சேர்த்துக் கிளறவும். ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து மேலும் கிளறி இறக்கவும்.

குறிப்பு: வெல்லம் சேர்த்திருப்பதால், இந்த சுண்டல் இரும்புச் சத்து மிக்கது. நவராத்திரி கொண்டாட்டத்தில் இதற்கு தனி இடம் உண்டு.

23. மல்டி பருப்பு பொடி

தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் வெறும் காடயில் வறுத்து, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

குறிப்பு: குழம்பு வைக்காத சமயங்களில் இந்தப் பொடி கைகொடுக்கும்.

24. மல்டி மாவு கேக்

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், உப்பு தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து... தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து... அடுப்பில் வைத்து கூழ் பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டவும். கூழ் நன்கு ஆறியவுடன் விருப்பப்பட்ட வடிவத்தில் வெட்டி சாப்பிடலாம். இதை கூழாகவும் சாப்பிடலாம்.

குறிப்பு: விரத நாட்களில் இந்தக் கூழ் பசி தாங்கும். மோர் மிளகாய் தாளித்து சேர்க்கலாம்.

 25. பாசிப்பயறு சுண்டல்

தேவையானவை: பாசிப்பயறு - 200 கிராம், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.


செய்முறை: பாசிப்பயறை பொன்னிறமாக வறுத்து, உப்பு சேர்த்து வேக வைக்கவும். பயறு குழையாமல் வேக வேண்டும். காடயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, பயறு, தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: இதே சுண்டலில் மாங்காய் துருவல், கேரட் துருவல் போட்டும் தயாரிக்கலாம்.

26.  மூலிகைப் பொடி

தேவையானவை: சீரகம் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, வேப்பம்பூ - 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் - 6, கடுகு - 4 டீஸ்பூன், சுக்கு - ஒரு சிறு துண்டு, மிளகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கறிவேப்பிலை, வேப்பம்பூ, சீரகம், உளுத்தம்பருப்பு, சுண்டைக்காய் வற்றல், கடுகு, சுக்கு, மிளகு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

குறிப்பு: வயிறு மந்தமாக இருக்கும்போது, இந்தப் பொடியை  சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். சளித் தொல்லை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.

27.  பால் அவல்

தேவையானவை: அவல் - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், பால் - 250 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிஸ்பூன்.

செய்முறை: அவலை நன்கு களைந்து தண்ணீரை வடிகட்டவும். வெல்லத்தை தூள் செய்து சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள் போட்டுக் கலக்கவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்து, அவலுடன்   சேர்க்கவும்.
குறிப்பு: விரதம் இருப்பவர்களுக்கு இந்த அவல் பசியை அடக்கிவிடும். இந்த அவலும் ஒரு பழமும் போதும்... ஒரு நாள் பசி தாங்கலாம்.

28.  புதினா - சீரக ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், புதினா - ஒரு கட்டு, சீரகம் - 6 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம்  - ஒரு கப், பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - 6 டீஸ்பூன். எண்ணெய் - அரை டீஸ்பூன்


செய்முறை: அரிசியை ஒரு மடங்குக்கு இரு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும்   இறக்கவும். புதினாவையும் வெங்காயத்தையும் வதக்கவும். வதக்கிய வெங்காயம், புதினா,பொட்டுக்கடலை, வேர்க்கடலை, நெய் ஆகியவற்றுடன் சாதத்தைச் சேர்க்கவும். கடுகு, சீரகத்தை எண் ணெயில் தாளித்து சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: கலந்த சாத வகைகளில் இது வித்தியாசமானது. புதினா - சீரகம் தனி ருசி தரும். முந்திரி, பாதாம், பிஸ்தா வறுத்துப் போட்டால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

 29. காரப்பொரி

தேவையானவை: அரிசிப்பொரி -  மீடியம் சைஸ் பாக்கெட், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், பூண்டுப் பல் - 2, மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், பெருங்காய்த்தூள் - சிறிதளவு. தாளிக்க கடுகு - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை: பூண்டை தோல் உரித்து, நசுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காய்த்துள் போட்டு... பொரி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: மாலை வேளையிலும் மழைக் காலத்திலும் சாப்பிட இந்தக் காரப்பொரி மிகவும் உகந்தது.

 30. வெஜிடபிள் ஸ்பெகட்டி

தேவையானவை: ஸ்பெகட்டி (சேமியாவில் ஒருவகை) - 100 கிராம் , குடமிளகாய் - ஒன்று, கேரட் - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லி - சிறிதளவு தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, பச்சைப்  பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஸ்பெகடியை உடைத்து வேகவிட்டு தண்ணீரை வடிக்கவும். தக்காளி, குடமிளகாய், கேரட்,       வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி, பச்சைப் பட்டாணி சேர்த்து எண்ணெயில் வதக்கவும். பிறகு உப்பு போட்டு, வேக வைத்த ஸ்பெகட்டியுடன் சேர்த்து, கொத்தமல்லி தூவவும்.

குறிப்பு: ஸ்பெகட்டி டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுக்க புதுமையானது. கலர் குடமிளகாய் சேர்த்தால் பார்க்கவும் அழகு!

 நன்றி - விகடன்

Saturday, July 30, 2011

30 வகை ஊறுகாய் ரெ சிபி ! ( பெண்களே!அட்லீஸ்ட் இதையாவது சமைங்க )

30 வகை ஊறுகாய் ரெ சிபி !

'ஊறுகாய்' என்றதுமே... பசிக்காத வயிற்றுக்கும் பசி எடுக்கும்; ருசிக்காத உணவும்... ருசிக்கும். அதனால்தான் பெரும்பாலானவர்களின் வீட்டு சமையல் அறையில் ஜம்மென்று இடம்பிடித்து உட்கார்ந்திருக்கிறது ஊறுகாய் ஜாடி!
 வெயில் 'சுள்'ளென்று சுட்டெரிக்கும்போதே.... வடாம், ஊறுகாய் என்றெல்லாம் தயாரித்து வைத்துக் கொண்டால், அடுத்து வரும் அடை மழைக் காலத்தை அட்டகாசமாக சமாளித்துவிடலாம், சமையல் சிம்பிளாக இருந்தாலும்!
அதற்காகவே இங்கே 30 வகை ஊறுகாய்களை சூப்பராக தயாரித்து வழங்கியிருக்கும் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். கூடவே அசத்தல் டிப்ஸ்களையும் தந்தார். அவை -
''ஊறுகாய் ரொம்ப நாள் கெடாம இருக்கணும்னா, கட்டாயம் கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்துக்கணும். அதேபோல், தூள் உப்புக்குப் பதிலா... கல் உப்பு சேர்த்தா, காலமெல்லாம் சுவையும் மாறாம இருக்கும். அப்புறம்... தாளிக்கறதுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினா, டேஸ்ட் சூப்பரோ... சூப்பர்தான்!''

இங்கே இடம் பெற்றிருக்கும் அத்தனை அயிட்டங்களையும் தனது கற்பனை வளத்தில், மிக அழகாக அலங்கரித்திருக்கிறார் 'செஃப்’ ரஜினி!
ச்ச்ச்சப்புக் கொட்டி... என்ஜாய் பண்ணுங்கோ!!! 

'மீல் மேக்கர் 65’ செய்ய முடியுமா..?
உப்புக் கலந்த தண்ணீரில் மீல் மேக்கரை பத்து நிமிடம் ஊற வைத்து... பிறகு, அவற்றைத் தனியாக எடுத்து நன்றாகப் பிழிந்து கொள்ளவும். கலந்து வைத்துள்ள மசாலாத்தூளில் மீல் மேக்கரைத் தோய்த்து எண்ணெயில் போட்டு, பொரித்து எடுத்தால்... 'மீல் மேக்கர் 65’ எனும் சூப்பர் டிஷ் ரெடி! தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

பலாக்கொட்டை ரோஸ்ட் சாப்பிட்டிருக்கிறீர்களா? 
பலாக்கொட்டைகளை வேக வைத்து தோல் நீக்குங்கள். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகப் பிசறிக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, பிசறிய பலாக்கொட்டைகளைச் சேர்த்து வறுத்தெடுங்கள். அபாரமான டேஸ்ட்டுடன் அசத்தல் ரோஸ்ட் ரெடி!

சுவையான மோர்க் குழம்பு தயாரிக்க வேண்டுமா?
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து... அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயம் தாளித்து இந்தக் கலவையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியதும், அடுப்பை அணைக்கவும். உடனே, மோரைச் சேர்த்து நன்கு கலக்கி விட, ருசியான மோர்க்குழம்பு தயார். தேவைப்பட்டால்... வெண்டைக்காய், பரங்கிக்காய் என்று சேர்த்தும் தயாரிக்கலாம்.

1,   தக்காளி ஊறுகாய் 
தேவையானவை : தக்காளி - ஒரு கிலோ, காய்ந்த மிளகாய் - 150 கிராம், வெந்தயம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு.
தாளிக்க : கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :  தக்காளியை நன்றாகக் கழுவி, துடைத்து... நான்காக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, ஒருநாள் மூடி வைக்கவும். அடுத்த நாள், அதனை வெயிலில் வைத்து எடுக்கவும். அடுத்தடுத்த நாட்களில், நறுக்கிய தக்காளியை 'பிளாஸ்டிக்’ பேப்பர் மேலே பரப்பிக் காய வைக்கவும். பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரையும் வெயிலில் வைக்கவும். தக்காளியில் உள்ள தண்ணீர் உலர்ந்ததும், பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை தக்காளியின் மேல் தெளித்துக் காய விடவும். பாத்திரத்தில் இருக்கும் மொத்த தண்ணீரும் தீரும் வரை இதேபோல் செய்து, தக்காளியை நன்கு உலர்த்தி, காயவைத்து எடுக்கவும். 
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். கடுகையும் வெந்தயத்தையும் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும். காய வைத்த தக்காளியுடன் வறுத்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதை அதில் சேர்த்து... மஞ்சள்தூள், பொடித்த கடுகு, வெந்தயத்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி ஆறவைக்கவும். பிறகு, ஈரமில்லாத பாட்டிலில் போட்டு காற்று புகாதபடி சேமித்து வைக்கவும்.
இந்த ஊறுகாய் 3 மாதம் வரையிலும் கெடாது.
 2.  காய்கறி ஊறுகாய் 
தேவையானவை : நறுக்கிய கேரட் - அரை கப், பாகற்காய் - கால் கப், பீன்ஸ் - கால் கப், பஜ்ஜி மிளகாய் - கால் கப், பச்சை மிளகாய் - 100 கிராம், பெங்களூர் கத்திரிக்காய் - கால் கப், காய்ந்த மிளகாய் - 100 கிராம், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், வினிகர் - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : காய்ந்த மிளகாய், கடுகு இரண்டையும் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும்.  நறுக்கிய காய்கறிகளுடன் பொடித்த கடுகு, பொடித்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை பெரிய பாட்டிலில் சேர்த்து நன்கு குலுக்கிக் கலந்து கொள்ளவும்.  பிறகு அவற்றுடன் எலுமிச்சம் பழச் சாறு, வினிகர் விட்டுக் கலந்து கொள்ளவும். பின்னர் பெருங்காயத் தூள், கடுகு எண்ணெய் சேர்த்துக் கலந்துகொள்ளவும். காய்கறிகள் அந்தக் கலவையில் நன்கு கலக்கும் வரை ஊறவிட்டு, பிறகு ஊறுகாயைப் பயன்படுத்தலாம். 
இதனை காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
3. புளி - இஞ்சி ஊறுகாய் 
தேவையானவை: நார் இல்லாத இஞ்சி - கால் கிலோ, பச்சை மிளகாய் - 50 கிராம், புளி, பொடித்த வெல்லம் - தலா 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். இஞ்சியை நன்றாகக் கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், புளிக்கரைசல் சேர்த்து, நன்றாகக் கொதிக்க விடவும். இஞ்சி நன்கு வெந்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறி இறக்கி ஆறவிட... புளி - இஞ்சி ஊறுகாய் 'கமகம’வென ரெடி
4.பிளம்ஸ் ஊறுகாய் 
தேவையானவை:  நறுக்கிய பிளம்ஸ் பழம் - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கடுகு, வெந்தயப்பொடி - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய பிளம்ஸ் பழங்களை அதில் சேர்க்கவும். லேசாக வதங்கியதும்... உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து நன்கு வதக்கி, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி, ஆறவிடவும்.
இரண்டு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
5. மாங்காய் திடீர்    ஊறுகாய்
தேவையானவை : தோலுடன் சேர்த்து பொடியாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - ஒரு கப், பச்சை மிளகாய் - 5, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய மாங்காயுடன் பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயம் தாளித்து மாங்காய்க் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.
இந்த திடீர் ஊறுகாய் இரண்டு, மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
6.பச்சை மிளகாய் - எலுமிச்சை ஊறுகாய்
தேவையானவை: எலுமிச்சம்பழம் - 10, இஞ்சி - 100 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைக் கழுவி, நீளமானத் துண்டுகளாக நறுக்கவும். கண்ணாடி பாட்டிலில் நறுக்கிய எலுமிச்சம் பழத்துண்டுகள், நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாயுடன் உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பாட்டிலை நன்கு குலுக்கவும்.  ஒரு வாரம் வரை, இரண்டு மூன்று முறை பாட்டிலைக் குலுக்கவும். அப்போதுதான் எல்லாப் பொருட்களும் ஒன்றாகக் கலந்து நன்றாக ஊறி, ஊறுகாய் சுவையாக இருக்கும்.
இதை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
7. நெல்லிக்காய் ஊறுகாய்
தேவையானவை: நெல்லிக்காய் - 20, வறுத்துப் பொடித்த மிளகாய்த்தூள் - 50 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெல்லிக்காயை நன்றாகக் கழுவி, ஆவியில் இரண்டு நிமிடம் வேக வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... அதில் வேக வைத்த நெல்லிக்காய்களை சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும், மஞ்சள் தூள், உப்பு, வெந்தயப்பொடி சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். 5 நிமிடம் கழித்து மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி எடுக்கவும். ஆறியதும், அந்தக் கலவையில் எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்கு கலந்துகொள்ள... விட்டமின் 'சி’ நிறைந்த நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி!
இந்த ஊறுகாய் ஒரு வாரம் வரைதான் கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைத்தால், கூடுதலாக சில நாட்கள் இருக்கும்.
 8.நாரத்தங்காய் ஊறுகாய்
தேவையானவை : நாரத்தங்காய் - 10, பொடித்த மிளகாய்த்தூள் - 50 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை : நாரத்தங்காயை கழுவி, துடைத்து சுருள் சுருளாக நறுக்கி... அதனுள் கல் உப்பை அடைத்து ஊறுகாய் ஜாடியில் வைக்கவும். நாரத்தங்காயின் தோல் தடிமனாக இருப்பதால் நன்கு ஊறுவதற்கு 3 நாட்கள் ஆகும். நன்கு ஊறியதும், அதை தனியாக எடுத்து வெயிலில் காய வைக்கவும். ஈரம் போகக் காய்ந்ததும் மீண்டும் பாத்திரத் தில் இருக்கும் உப்புத் தண்ணீரிலேயே போடவும்; மீண்டும் காயவைக்கவும். தோல் நன்றாக ஊறும்வரை இதேபோல் செய்யவும்.
பிறகு வெந்தயத்தை வறுத்து, மிளகாய்த்தூளுடன் சேர்த்து... ஊறவைத்த நாரத்தங்காயில் பிசறி நன்றாகக் கலந்து வைக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வாசம் வந்ததும் பயன்படுத்தலாம்.
ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
9. மாகாளி ஊறுகாய் 
தேவையானவை: மாகாளிக் கிழங்கு - அரை கிலோ, விரலி மஞ்சள் - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 10, வறுத்த வெந்தயம் - அரை டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாகாளிக் கிழங்கினை நன்றாகக் கழுவி, தோல் நீக்கி... நடுவில் இருக்கும் வேரை எடுத்துவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். காய்ந்த மிளகாயுடன் விரலி மஞ்சள், வறுத்த வெந்தயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் தண்ணீர் விட்டு அரைத்து, அந்த விழுதினை நறுக்கிய மாகாளிக் கிழங்குடன் சேர்ந்து நன்கு கலந்து கொள்ளவும். இறுதியாக, எலுமிச்சம்பழச் சாற்றை சேர்த்துக் கலந்து சில நாட்கள் ஊறவிட்டால்... ஊறுகாய் ரெடி!
இதனை ஒன்றிரண்டு மாதங்கள் வரை  வைத்திருந்து பயன்படுத்தலாம்.
10. ஓமம் - மாங்காய்    ஊறுகாய்
தேவையானவை: நீளவாக்கில் மெல் லியதாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - 15 அல்லது 20, கீறிய பச்சை மிளகாய் - 4, ஓமம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் (அல்லது) கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நறுக்கிய மாங்காயுடன் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு ஓமம் சேர்த்துப் பொரிக்கவும். அதனுடன் கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி மாங்காய் - உப்புக் கலவையில் சேர்த்து நன்கு கிளற... ஓமம் - மாங்காய் ஊறுகாய் உடனடியாக சுவைக்க ரெடி!
இதனை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
11. மாங்காய் இஞ்சி ஊறுகாய்
தேவையானவை: மாங்காய் இஞ்சி - 200 கிராம், பச்சை மிளகாய் - 5, எலுமிச்சம்பழம் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை: மாங்காய் இஞ்சியை மண் போகக் கழுவி, மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை நறுக்கிய இஞ்சியுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு எலுமிச்சம் பழத்திலிருந்து சாறு பிழிந்து, அதையும் சேர்த்து நன்கு கலந்து, ஒருநாள் முழுக்க ஊறவிட... சிம்பிள் மாங்காய் இஞ்சி ஊறுகாய் ரெடி!
தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
இரண்டு வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.
12.  பச்சை மிளகு ஊறுகாய்            
      
தேவையானவை : பச்சை மிளகு - 250 கிராம், எலுமிச்சம்பழம் - 10, உப்பு - தேவையான அளவு.
செய்முறை : பச்சை மிளகினை காம்பிலிருந்து உதிர்த்துக் கழுவி... ஈரம் போகக் காய விடவும். எலுமிச்சம் பழத்தை நறுக்கிச் சாறு எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழச்சாற்றில் பச்சை மிளகு, உப்பு சேர்த்து நன்கு குலுக்கி வைக்கவும். மிளகில் எலுமிச்சை சாறு ஊறி, ருசியாக இருக்கும்.
இது தயிர்சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சூப்பர் ஊறுகாய்! இரண்டு வாரங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
13.மாங்காய் தோல் ஊறுகாய்
தேவையானவை : மாங்காய் தோல் - அரை கப், வறுத்துப் பொடித்த மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தோல் தடிமனாய் உள்ள 7-8 மாங்காய்களை துண்டுகளாக நறுக்கி,  கல் உப்பு சேர்த்து குலுக்கி வைக்கவும். அது, இரண்டு நாட்கள் ஊறியதும்... வெயிலில் காயவைத்து எடுத்து வைக்க... மாங்காய் தோல் ரெடி! சரியான அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் மாங்காய் தோலைப் போட்டு வேக விடவும். வெந்ததும், தண்ணீரை வடிகட்டி விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அதில் சேர்த்துக் கலந்த பிறகு, பொடித்த மிளகாயையும்  சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து கொள்ளவும்.
மாங்காய்த் தோலை பூஞ்சணம் பிடிக்காமல் 'ஸ்டாக்’கில் 6 மாதம் வரை வைத்திருக்க... இந்த திடீர் ஊறுகாயை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
14. துருவிய மாங்காய் ஊறுகாய் 
தேவையானவை: புளிப்பு மாங்காய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 50 கிராம், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாங்காயை தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து மாங்காய்த் துருவலைச் சேர்க்கவும். சிறிது வதங்கியதும்... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கிக் கிளறவும். கடைசியாக, பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இரண்டு வாரங்கள் கெடாமல் நன்றாக இருக்கும்.
15. பூண்டு ஊறுகாய்
தேவையானவை : தோல் உரித்த பூண்டு - ஒரு கப், கடுகுப்பொடி - 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய். உப்பு - தேவையான அளவு
செய்முறை : தோலுரித்த பூண்டுடன் மிளகாய்த்தூள், கடுகுப்பொடி, உப்பு, மஞ்சள் தூள், வெந்தயப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு, நல்லெண்ணெய் விட்டு, மீண் டும் ஒருமுறை எண்ணெய் சீராக பரவுமாறு கலந்து வைக்கவும். பூண்டு அந்தக் கலவையில் ஊற ஊற, ஊறுகாய் சுவையுடன் இருக்கும்.
ஒரு மாதம் கெடாமல் இருக்கும் இந்த ஊறுகாய்.
16. ஊறவைத்த எலுமிச்சை ஊறுகாய்
தேவையானவை :  எலுமிச்சம் பழம் - 25, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை :  எலுமிச்சம்பழத்தை எட்டுத் துண்டுகளாக நறுக்கி,  உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குலுக்கி வைக்கவும்.  இப்படி, தினமும் குலுக்க... அவை உப்பில் நன்கு ஊறி மிருதுவாக மாறும். இதற்கு, எலுமிச்சம் பழம் அதிக சாறு உள்ள பழமாக இருப்பது அவசியம்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து ஊறவைத்த எலுமிச்சம்பழம் சேர்த்துக் கிளறவும். பிறகு மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கவும்.
எலுமிச்சம் பழம் நன்கு ஊறிஇருப்பதால், அதிக நேரம் அடுப் பில் வைத்திருக்கத் தேவையில்லை.
இந்த ஊறுகாயை மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்த முடியும்.
17. மாவடு ஊறுகாய்
தேவையானவை : மாவடு - ஒரு கிலோ (கீழே விழுந்த மாவடு கூடாது), கடுகுத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், விளக்கெண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மாவடுவை நன்றாகக் கழுவி, தண்ணீர் இல்லாமல் துடைத்து துணியில் பரப்பி 2 மணி நேரம் காய விடவும். ஊறுகாய் ஜாடியில் மாவடுக்களைப் போட்டு, விளக்கெண்ணெய் விட்டுக் குலுக்கவும். பிறகு, கல் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு குலுக்கவும். இதேபோல் நான்கு நாட்களுக்குத் திரும்பத் திரும்பக் குலுக்கவும். அப்போது மாங்காயுடன் உப்பு சேர்வதால், ஜாடிக்குள் நிறைய தண்ணீர் பிரிந்து வந்திருக்கும்.
ஜாடியில் உள்ள மாவடுக்களை வெளியே எடுத்து வேறொரு ஜாடியில் போடவும். மாவடு ஊறிய  ஜாடியிலிருக்கும் தண்ணீரை வடிகட்ட வேண்டும். இன்னொரு ஜாடியில் உள்ள மாவடு உடன் கடுகுத்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து... வடிகட்டி வைத்துள்ள உப்பு நீரையும் விட்டு நன்கு குலுக்கி வைத்து விட்டால் மாவடு ஊறுகாய் உங்கள் நாவில் எச்சில் ஊறவைக்கும்.
இது மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
18. ஆவக்காய் ஊறுகாய்
தேவையானவை : முற்றிய புளிப்பு மாங்காய் - 10, வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 கப், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : புளிப்பு மாங்காயை நடுவில் இருக்கும் ஓட்டுடன் சேர்த்து நறுக்கி, ஒவ்வொரு துண்டையும் நன்றாகத் துடைத்துக் கொள்ள வேண்டும். கடுகு, உப்பு இரண்டையும் சில மணி நேரம் வெயிலில் காயவைத்து, தனித்தனியாகப் பொடித்துக் கொள்ள வேண்டும். மாங்காய் தவிர, மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக்  கலந்து கொள்ளவும்.
வாயகன்ற ஒரு ஜாடியில் மாங்காய் துண்டுகளை ஒரு கை போடவும். கலந்து வைத்திருக்கும் பொடிக் கலவையை அதன்மீது ஒரு 'லேயர்’ தூவவும். மீண்டும் மாங்காய் துண்டுகள் ஒரு 'லேயர்’, பொடிக்கலவை ஒரு 'லேயர்’ என மாற்றிமாற்றிப் போடவும். கடைசியில், நல்லெண்ணெய் விட்டு மூடி வைக்கவும். அடுத்த நாள் கிளறி விடவும். ஜாடியின் வாய்ப்பகுதியை வெள்ளைத் துணியால் மூடி இறுகக் கட்டிவிட வேண்டும். ஒரு வாரம் கழித்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். 2-3 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
19. மா இஞ்சி - மாங்காய் ஊறுகாய்
தேவையானவை : தோல் சீவிப் பொடியாக நறுக்கிய மாங்காய் இஞ்சித் துண்டுகள் - அரை கப், மாங்காய் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - 10, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மாங்காய் இஞ்சியுடன், மாங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து... அரைத்த மாங்காய் - இஞ்சி விழுதையும் சேர்த்துக் கிளறினால், சுவையான மா இஞ்சி - மாங்காய் ஊறுகாய் ரெடி!
இதனை, ஒரு மாதம் வரையிலும் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
20. வெங்காய ஊறுகாய்
தேவையானவை : சின்ன வெங்காயம் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, புளி - 25 கிராம், கடுகு - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து, கழுவி எண்ணெய் விட்டு வதக்கவும். ஆறியதும், அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் போது, இறக்கி ஆறவைத்து, ஈரமில்லாத பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
21. ஸ்டஃப்டு மிளகாய் ஊறுகாய்
தேவையானவை : இளம் பச்சை நிற மிளகாய் (பெரியது) - 20, கடுகு - 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மிளகாயின் காம்பு நீக்கி, இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடுகைப் பொடித்து, அதனுடன் உப்பு, சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒவ்வொரு மிளகாயின் உள்ளே வைத்து அடைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு ஜாடியில் போட்டு, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலந்து, குலுக்கி வைக்கவும். அவையெல்லாம் ஒன்றாகக் கலந்து, நன்றாக ஊற... மிளகாயின் காரமும் எலுமிச்சையின் புளிப்பும் கலந்து மிகுந்த சுவையுடன் இருக்கும்.
காற்றுப்புகாத, ஈரமில்லாத ஜாடியில் வைத்திருந்தால், ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
22.புளியங்காய் ஊறுகாய்
தேவையானவை : இளம் புளியங்காய் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 15, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், வறுத்த வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : புளியங்காயைக் கழுவித் துடைத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இடித்து, பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.தேவைப்படும்போது, இதில்இருந்து சிறிது எடுத்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கி, வெந்தயப்பொடியைச் சேர்த்து நன்கு கிளறவும்.
எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி சேமிக்கவும். ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
23. காய் - கனி ஊறுகாய் 
தேவையானவை: துருவிய ஆப்பிள் - கால் கப், துருவிய கேரட் - கால் கப், துருவிய பரங்கிக்காய் - கால் கப், புளி - 25 கிராம், காய்ந்த மிளகாய் - 10, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துருவிய கேரட், பரங்கிக்காய், காய்ந்த மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து துருவி வைத்துள்ள ஆப்பிள் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... அரைத்த காய்கறி விழுதைச் சேர்த்து மீண்டும் சுருள வதக்கி இறக்கவும்.
இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்று சுவை கலந்து இருப்பதால் வித்தியாசமாக இருக்கும். இதனை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
24. எலுமிச்சை திடீர் ஊறுகாய்
தேவையானவை : எலுமிச்சம் பழம் - 10, நறுக்கிய பச்சை மிளகாய் - கால் கப், நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : எலுமிச்சை பழத்தைக் கழுவி, கொதிநீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருக்கவும். பிறகு, வெளியே எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி... கால் கப் தண்ணீர் விடவும். நறுக்கிய எலுமிச்சம் பழம் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி, இறக்கவும்.
இந்த திடீர் ஊறுகாயை அதிக பட்சம் ஒரு வாரம்  வைத்திருந்து பயன்படுத்தலாம்.
25. பச்சை மிளகாய்  ஊறுகாய்
தேவையானவை: பச்சை மிளகாய் - 200 கிராம், கடுகுத்தூள், ஆம்சூர்பொடி (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன்,   மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாயை வட்ட வடிவில் கொஞ்சம் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் கடுகுப்பொடி, மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கடைசியாக, கடுகு எண்ணெய் விட்டுக் கலந்து... ஈரமில்லாத பாட்டிலில் போட்டு, தினமும் குலுக்கி விட வித்தியாசமான சுவையில் பச்சை மிளகாய் ஊறுகாய் தொட்டுக்கொள்ள தயார்.
இந்த ஊறுகாய் இரண்டு, மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.
26. மிளகாய் வடை ஊறுகாய்
தேவையானவை : பச்சை மிளகாய் - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 100 கிராம், வெந்தயம் - 2 டீஸ்பூன், கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : காய்ந்த மிளகாயை அரை மணிநேரம் ஊறவைக்கவும். கறுப்பு உளுந்து, வெந்தயம் இரண்டையும் தனியாக அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு பச்சை மிளகாய் ஊறவைத்த காய்ந்த மிளகாய், உளுந்து, வெந்தயம், உப்பு, தயிர் இவற்றுடன் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். இந்த விழுதை சிறிய கரண்டியில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து 'பிளாஸ்டிக் ஷீட்’டில் இடவும். ஈரம் போக வெயிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்தவுடன், ஈரமில்லாத, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்கலாம்.
தேவைப்படும்போது எண்ணெயில் இட்டுப் பொரித்து... சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
மிளகாய் வடையை இரண்டு, மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
27. கதுப்பு மாங்காய் ஊறுகாய்
தேவையானவை : சதைப்பற்றுள்ள புளிப்பு மாங்காய் - 2, காய்ந்த மிளகாய் - 50 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கடுகு - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மாங்காயை தோல் நீக்காமல் பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து 2 நாட்கள் ஊறவிடவும். அவ்வப்போது நன்றாக குலுக்கி விடவும். அதில் தண்ணீர் பிரிந்து வந்ததும், மாங்காய் கதுப்புகளை மட்டும் எடுத்து... வெயிலில் காயவைக்கவும். இதே போன்று 2 நாட்கள் செய்யவும். (மாங்காயில் சிறிது ஈரம் இருக்க வேண்டும்; மொட மொடப்பாக காய வைக்கக்கூடாது.)
வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துப் பொடிக்கவும். கடுகையும், மிளகாயையும் வெயிலில் காயவைத்து தனித்தனியாக பொடிக்கவும். காய வைத்துள்ள மாங்காயில் கடுகுப்பொடி, வெந்தயப்பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். இந்த ஊறுகாய்க்கு எண்ணெய் தேவை இல்லை. இரண்டு, மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
28. வெந்தய மாங்காய்     ஊறுகாய்
தேவையானவை : மாங்காய் - 2, வறுத்துப் பொடித்த வெந்தயம் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
உடனடியாக செய்யக்கூடிய இந்த ஊறுகாயை அதிகபட்சம் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.
29. மாம்பழ ஊறுகாய்
தேவையானவை : மாம்பழம் - 3, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை : மாம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், தாளித்து மாம்பழத்தில் சேர்க்கவும். இறுதியாக, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள மாம்பழ ஊறுகாய் ரெடி!
சாம்பாருக்கும், தயிர் சாதத் துக்கும் சரியான ஜோடி, இந்த ஊறுகாய்!
30. கிடாரங்காய் ஊறுகாய்
தேவையானவை : பழுத்த கிடாரங்காய் - 2, மிளகாய்த்தூள் - 50 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை : கிடாரங்காயை பொடிப்பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய கிடாரங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். பாதிக்குப் பாதியாக வதங்கியதும் மிளகாய்த்தூள், பொடித்த வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறி இறக்கவும்.
இது, ஒன்றிரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


டிஸ்கி -  டைட்டில் சும்மா அட்ராக்‌ஷனுக்காகவும், காமெடிக்காகவும் வைக்கப்பட்டது, அதைப்பார்த்து யாராவது பொங்கி எழுந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.. ஹி ஹி

நன்றி - விகடன்