Showing posts with label THE CONJURING. Show all posts
Showing posts with label THE CONJURING. Show all posts

Tuesday, October 01, 2013

THE CONJURING (2013) -சினிமா விமர்சனம்

The Conjuring (2013) Poster 
தழுவாத கைகள் படத்துல  “ஒரு குடும்பத்தை  உருவாக்கச்சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித்தந்தார் எங்கப்பா”ன்னு ஒரு சூப்பர் ஹிட் பாட்டு வரும் ,அந்த பாட்டுக்குத்தக்கபடி ஹீரோவுக்கு 5  குழந்தைங்க , ஒரே ஒரு சம்சாரம் .இந்த  குடும்பம்  ஒரு   பெரிய வீட்டுக்கு புதுசா  குடி வர்றாங்க . இந்த இடத்துல தான் நாம ஒண்ணை நல்லா  கவனிக்கனும் , பெரும்பாலான பேய்ப்படத்துல  புதுசா   குடி போற வீட்ல தான் பிரச்சனையே வரும் .


புது  வீட்டுக்கு குடி போனதும்  குழந்தைங்க  எல்லாம்  ஹைடு அண்ட்  சீக் அதாவது கண்ணா மூச்சி விளையாட்டு  விளையாடுதுங்க . தம்பதிகள்  என்னமோ அப்போதான் மேரேஜ் ஆன மாதிரி  கில்மாவுக்கு பிட் போடறாங்க . புது வீட்ல அதுதான்  முதல் இரவாம் , அடேய் ;-)) 

எல்லாரும்  வீட்டுக்குள்ளே  இருக்கும்போது அவங்க  வீட்டு நாய் மட்டும் உள்ளே வர்லை . இதுக்கு என்ன காரணம்னா அந்தக்காலத்துல  இருந்தே  கிராமங்களில் நிலவி வரும் நம்பிக்கை என்னான்னா  நமக்கு நம்ம கண்ணுக்குத்தெரியாத  தீய சக்திகள்  உருவம்  நாய்  , பூனை மாதிரி   விலங்குகளுக்குத்தெரியும் , இயற்கைச்சீற்றங்கள் கூட மாடு , அணில் ( உண்மையான அணில் ) மாதிரி விலங்குகளுக்கு  முன் கூட்டியே உணர முடியுமாம் .



நாய் உள்ளே வர்லைன்னதுமே பார்ட்டி  உஷார் ஆகி இருக்கனும் . ஆனா  கூடவே சம்சாரம்  இருக்கறதால  ஹீரோவுக்கு   அது பத்தி ஏதும்  தோணலை , ஏன்னா  எப்பவும் ஆம்ப்ளைங்க தன் பக்கத்துல  சம்சாரம்  இருந்தா மூளைக்கு வேலை தர மாட்டாங்க 


வீட்டுக்குள்ளே ஒரு பாதாள அறை  இருக்கு . அதுல  ஏதோ மர்மம்  இருக்குன்னு  நினைக்கறாங்க . அப்போ  ஒரு பொம்மையை குழந்தை கண்டெடுக்குது , அது கிட்டே பேசுது . பார்த்த அம்மா வுக்கு திகில் . 

 இது வேலைக்கு ஆகாதுன்னு  பேய்களை விரட்டும் ஒரு தம்பதியை அழைச்சுட்டு வர்றாங்க . அந்த  ஜோடில  லேடிக்கு ஒரு உள்ளுணர்வு உண்டு . பின்னால நடப்பதை முன்னாலயே சம்பவமா பார்க்கும் சக்தி  ( அழகிய  தமிழ் மகன் ல இளைய தளபதிக்கு இருக்குமே ) அதன்  மூலமா   அவருக்கு  இந்த வீட்டில்  தீய சக்திகள் இருக்குன்னும் , சப்போஸ்  இவங்க  வீட்டை விட்டு வெளியேறுனாலும் அதுங்க இவங்களை விடாதுன்னும்   தெரிஞ்சுக்கறாங்க  .



இவங்க  எப்படி பேயை  விரட்னாங்க ?  அந்த பேய்களுக்கான ஃபிளாஸ் பேக் என்ன?  என்பதை வெண் திரையில் காண்க 


சும்மா  சொல்லக்கூடாது . கத்தியின்றி , ரத்தம் இன்றி  ஒரு நல்ல பேய்ப்படம் தான்  இது  . ( க்ளைமாக்ஸ் ல ஒரே ஒரு சீன்ல  ரத்தம் ) தியெட்டர்ல  ஆளாளுக்கு   சவுண்ட்  கொடுத்துட்டே  படம் பார்த்தது  செமயான அனுபவம் . ஏன்னா அமைதியா படம் பார்த்தா   டக்னு பயந்துக்குவோம்.. ஏஎய்  ஆய் ஊய்னு கத்திட்டே படம் பார்த்தா  கொஞ்சம்  தெம்பா  இருக்கும் 




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. தகவல் தொடர்பு சாதனங்கள்  இருக்கே , ஏன் இந்த மாதிரி செய்யலாமே? அப்படி செஞ்சிருக்கலாமே ? அப்டினு ஆளாளுக்கு லாஜிக்  கொஸ்டின் கேட்கக்கூடாதுன்னு  கதை நடக்கும் கால கட்டம் 1971 என ஆரம்பத்திலேயே டைட்டிலில் போட்டு விட்ட புத்திசாலித்தனம் . 
2.  லொக்கேஷன்  செலக்‌ஷன்  பிரமாதம் . தனிமையான  கிராமம் , தனி  வீடு ( பங்களா ) , பக்கத்த்ல ஒரு ஆறு  , அதுல  கரை  ஓரம்  ஒரு மரம்  அந்த மரத்தில்   ஒரு உருவம் தூக்கில்  தொங்கும் காட்சி அந்த போஸ்டர் டிசைன் அட்டகாசம் .


3  அந்த  குழந்தைங்க  நடிப்பு  பிரமாதம் , எல்லாமே கண்ணுக்கு அழகு செல்லங்கள் . இதுல ஒரு தொழில் ரகசியம் என்னான்னா  இந்த மாதிரி கதைல  குழந்தைங்க கேரக்டர்  இருந்தா  குடும்ப ஆடியன்சை தியேட்டருக்கு இழுத்துட்டு வர்ரது  ஈசி 


4. இது  ஃபாரீனில் நடந்த உண்மைச்சம்பவம் என்பதால்  திரைக்கதையில்  ஒரு  நம்பகத்த்ன்மை  இயல்பாகவே அமைஞ்சிடுச்சு   படமாக்கம் , எடிட்டிங்க் , ஒளிப்பதிவு  என  டெக்னிக்கல் அம்சங்கள் எல்லாமே  எபவ் ஆவரேஜ் 



5  ஜேம்ஸ் வான்  இயக்கிய   இன்சீடியஸ் , எக்சார்சிசம் , போல்டர் கோஸ்ட் படங்களின் கலவையான உல்டா தான்  என்பது  எளிதில்  தெரிஒயாத வண்ணம்  காட்சிகளை வேகமாக நகர்த்தியது படத்துக்கு பலம் 


6  ஒரு பேய்ப்படத்துக்கு  பின்னணி இசை எவ்வளவு  முக்கியம்  என்பதை உணர்ந்து  தேவையான இடத்தில் அமைதி  , அலறல்  , திடீர் சத்தம் என பார்த்து பார்த்து படம் ஆக்கிய விதம் 





 இயக்குநரிடம்  சில கேள்விகள்



1.   பொதுவா  பேய் குழந்தைங்க கிட்டே தன் வீரத்தைக்காட்டாது  இந்தப்படத்துல வர்ற  பேய்  ஒரு கையாலாகாத பேய் போல  , குழந்தைங்க  கிட்டேப்போய் தன் வீரத்தைக்காட்டுது ஆசாராம் பாபு மாதிரி  ஆள் போல 


2  என்ன தான்  லோ  பட்ஜெட்  படமா  இருந்தாலும்  படத்தில் வரும்  2 ஹீரோயின்களை   குறைந்த பட்சம்  சுமார்  ஃபிகர்களாகத்தேர்வு செய்ய வேணாமா? 2  ஃபிகர்களும் அட்டு  ஃபிகர்களே ! 


3  பேய்  வரும்பொது  கெட்ட வாடை வரும்னு  அந்த லேடி சொல்லுதே ,. ஏன்? பேய்  குளிக்காதா?  செண்ட் போடாதா? அட்லீஸ்ட் மல்லிகைப்பூ கூட வைக்காதா? 


4  பொதுவா பேய்ங்க மேக்கப் போடாது , ஆனா இதுல வர்ற பேய்  ஃபேரன் லவ்லி அரைக்கிலோவை எடுத்து முகத்துல சுண்ணாம்பு மாதிரி தடவிட்டு வருதே ஏன் ? 


5  அந்த பேய்  ஓட்டும் லேடி   ஏதோ  ஒரு க்ண்ணாடியில் அதை சுத்த விட்டு பார்க்கும்போது கண்ணாடியில்  தெரியும் பேய்  திரும்பிப்பார்த்தா   தெரிய்றதில்லை .கண்ணாடி பின்னாடி நிக்கும் பேய் ஏன் அப்டி எஸ் ஆகுது ? 


6  பேரா நார்மல் இன்வெஸ்டிகேட்டர்ஸா வரும் அந்த தம்பதிகள் ல புருஷன் டம்மி மாதிரி  இருக்கான் , பொண்டாட்டி தான் மெயினா எல்லா வேலையும் செய்யுது ஃபாரீன்லயும் புருஷங்க டம்மிதானா? 


7. அந்த  பொம்மையை வெச்சு பயமுறுத்த நினைத்த காட்சிகள் எடுபடலை




மனம்  கவர்ந்த வசனங்கள்


1.தனக்கு ஏதாவது ஆகிடுமோங்கற பயம் தான் மனிதனை ஆட்டுவிக்குது #



2 மனைவி - நீங்க இப்போ டயர்டா இருக்கீங்களா? 



க்ணவன் - எவன் சொன்னான்? இதுக்கெல்லாம் யாராவது டயர்ட் ஆவாங்களா?


சி பி கமெண்ட் - எல்லாரும் ஃபேமிலியோட  பார்க்கும் தரத்தில் படம் இருக்கு . எப்போ போனாலும்  நைட்  ஷோ போங்க . பகல் ல போனா அடிக்கடி கேட் நீக்கி  வெளிச்சம் உள்ளே வந்து கடுப்பேத்துவாங்க 

 ரேட்டிங்க் - 3.25 / 5 


டிஸ்கி - புதுக்கோட்டை விஜய் தியேட்டரில் ட்விட்டர் நண்பர் உடன் THE CONJURING ஸெகண்ட் ஷோ @ 10 pm (28 9 13 )

 தியேட்டரைப்பத்தி சொல்லியே ஆகனும் , டிக்கெட் ரேட் 100 ரூபாய்க்கு ஒர்த்தான் , தியேட்டர் மெயிண்ட்டெனன்ஸ் அருமை . ஏ சி படம் பூரா போட்டாங்க. ஈரோட்ல எல்லாம் பிச்சைக்காரத்தனமா படம் போட்ட 20 நிமிஷத்துல ஆஃப் பண்ணிடுவாங்க , அப்புறம் படம் விடும் நேரத்துக்கு 10  நிமிஷம்  முன்னால ஏ சி ஆன் பண்ணுவாங்க . அந்த மாதிரி பித்தலாட்டம் ஏதும் புதுக்கோட்டைல இல்லை . செகண்ட் ஷோ என்றாலும்  பலர்  ஃபேமிலியோட  வந்தது ஆச்சரியம் . அவங்க கத்துன கத்தல்கள்   படத்தை  விட சுவராஸ்யம் . இந்த மாதிரி  திகில் , பேய்ப்படங்களை  தியேட்டர்ல தான்  பார்க்கனும்