Showing posts with label SHAKUNTALA DEVI (HINDI)-2020- சினிமா விமர்ச்னம் ( அமேசான் ப்ரைம் ரிலீஸ்). Show all posts
Showing posts with label SHAKUNTALA DEVI (HINDI)-2020- சினிமா விமர்ச்னம் ( அமேசான் ப்ரைம் ரிலீஸ்). Show all posts

Sunday, August 02, 2020

SHAKUNTALA DEVI (HINDI)-2020- சினிமா விமர்சனம் ( அமேசான் ப்ரைம் ரிலீஸ்)



பூவே பூச்சூடவா (1985) படம் ரிலீஸ்  ஆனப்ப பாட்டி- பேத்தி  பாசப்பிணைப்பை அடிப்படையாக்கொண்டு இதுவரை இவ்வளவு தரமான  ஒரு படம் வந்ததில்லை என  ஃபாசில் புகழப்பட்டார், நதியா அறிமுகம் ஆனதும்,  பத்மினிக்கு ரீ எண்ட்ரி கிடைத்ததும்  அந்தப்படத்துலதான். தவமாய்  தவமிருந்து  (2005)ரிலீஸ் ஆனப்ப அப்பா , மகன்  பாசப்பிணைப்பில்  இப்படி ஒரு படம் இதுவரை ஆழமாக மனதை ஊடுருவ வில்லை என  இயக்குநர்  சேரன், ராஜ்கிரண் பாராட்டுப்பெற்றனர்.பாசமலர்(1961) அண்ணன் - தங்கை  பாசத்துக்கு  இன்று வரை ஒரு முன்னோடிப்படம்.. டி ராஜேந்தர்  படங்கள்  எல்லாமே   ( பெரும்பாலும்) அண்ணன் - தங்கை  பாசப்படங்கள் தான். அன்புள்ள அப்பா, (1987) தங்க மீன்கள் (2013)அப்பா- மகள்   கான்செப்ட்க்கு முன்னுதாரணப்படங்கள் .( இந்த 2ம் ஏனோ கமர்ஷியல் ஹிட் ஆகலை ) அந்த  வரிசைல  அம்மா - மகள்  பாசப்பிணைப்புக்கு  இவ்ளோ ஆழமான  படம் இதுவரை  வந்திருக்கா?னு தெரில .  1959 ல சி என் அண்ணாதுரை  எழுத்தில்  வந்து எம்ஜியார் நடிப்பில்  உருவான தாய் மகளுக்கு கட்டிய  தாலி கான்செப்ட்  வேற  தளம்


 இயக்குநர்  செல்வராகவனின்  காதல்  கொண்டேன்  படத்துல  க்ளாஸ்  ரூம்ல பாடம்  எடுத்துட்டு  இருப்பார் லெக்சரர் , அப்போ  ஹீரோ அதைக்கவனிக்காம இருப்பார், உடனே அவரை நோஸ்கட் பண்ண அவரை  வரவெச்சு  இந்த  கணக்கை   போர்டில்  எழுதி  விளக்கு  அப்டினு  கூப்பிடுவார். ஹீரோ  எழுந்து  போகும்போது ஆள்  பரிதாபமா  இருப்பார் . ஆனா  கரெக்டா  சம்மை  சால்வ் பண்ணுவார், தியேட்டரில்  கூஸ்பம்ப் மொமெண்ட்டில்  ஆரவாரம்  அடங்க  வெகு நேரம்  ஆனது. அந்த   மாதிரி  கூஸ்பம்ப்  சீன்கள்  பல  படத்தின்  முதல்  பாதியில்  கொண்டது  இந்தப்படம்


சகுந்தலா தேவி  ஸ்கூல்  லைஃபையே சரியா  அனுபவிக்காதவர்.  இயற்கையிலேயே அவருக்கு கணிதத்தின்  மீது  ஆழ்ந்த  ஈடுபாடு  உண்டு . கணப்பொழுதில்  சிக்கலான  கணிதங்களை  தீர்ப்பார்.  அதை வெச்சு  பல நிகழ்ச்சிகள்  நடத்தி  பேரும் , புகழும், பணமும்  சம்பாதிக்கிறார். உள்நாடு மட்டுமல்ல, வெளிநாட்டிலும்  இது மாதிரி  ஷோக்கள்  நடத்தி  கலக்கறார்

ஆனா பர்சனல்  லைஃப்ல  அவருக்கு ஏமாற்றங்களே. அம்மா, அப்பா  தன்னை  காசு சம்பாதிக்கும் மெஷினாகவே  நினைக்கறதா  அவர் நினைக்கறார். அவரோட காதல்  வாழ்க்கைலயும்  இந்தியாவில்  முதல் காதல்  தோல்வி. ஃபாரீனில் 2 வது காதல்  தோல்வி அதுவும்  இவரது  புகழும், பணமும்  கண்டு தாழ்வு  மனப்பான்மையில் விலகுகிறார்  காதலன். 3  வதாக  நன்றாகப்புரிந்த  ஒருவருடன்   காதல். அவர்  மூலம்  ஒரு பெண்  குழந்தை.

 அந்தக்குழந்தையை  தன்  கூடவே  வளர்க்கனும்னு  அவர்  நினைக்கறார். கணவரால் இவர் போகும்  இடத்துக்கு எல்லாம்  வர  முடிவதில்லை .அதனால்  அம்மா கூட பெண்  வளருது. . ஆனா  பெண்ணுக்கு  இண்ட்டீரியர்  டெக்கரேஷன்  ல ஆசை ., அவர்  ஆசைப்படியே  கேட்டபடி பங்களாக்களை   வாங்கித்தர்றார்/ பழைய வீடுகளை  வாங்கி  டெகரேட்  பண்ணி  சேல்ஸ்  பண்ணுவதுதான்   மகளின்  தொழில்

 பிரச்சனை  எப்போ ஆரம்பிக்குதுன்னா மகளுக்கு   மேரேஜ்  பண்ணும்போது தன் கூடவே  மகளும்  மாப்பிள்ளையும்  இருக்கனும்னு நாயகி ஆசைபப்டறார். மகள்  ஒத்துக்கலை . கிட்டத்தட்ட  வீட்டோட மாப்ளை மாதிரி.. எபடி  அவர்  ஒத்துக்குவார்?

 இருவரும்  பிரிகின்றனர். மகளைப்பிரிந்த  துக்கத்தில்  நாயகியால்  பழைய  படி ஷோக்கள்  சக்சஸ் ஃபுல்லா நடத்த  முடியல . இதனால  மனம்  தடுமாறிய நாயகி மகளை  தன்  பக்கம்  இழுக்க  ஒரு  வேலை  செய்யறார். அந்த திட்டம்  ஒர்க் அவுட் ஆச்சா? இல்லையா? எனப்து  சஸ்பென்ஸ்


 நாயகி  சகுந்தலா  தேவியா  வித்யா  பாலன் . 3  விதமான  கால கட்ட  தோற்றங்களிலும் பாந்தமாப்பொருந்துகிறார்.  எல்லா  ஷோக்களிலும்  இந்தியாவின் பாரம்பர்ய  உடையான  சேலையில்  தான்  தோன்றுவேன்  என இவர்  கூறுவது  அசத்தல். ஆனா  அதே  ஆள்   திருமண  விஷயத்தில்  மட்டும் இந்திய பாரம்பரியத்தன்மையில் இருந்து  விலகி  மகளிடமே “ஒரே ஆள் கூட வாழ்க்கை  பூரா  குடித்தனம்  இருக்கனுமா? போர்  என கூறுவது  முரண்”


நாயகியின்  மூன்று காதலர்கள்  நடிப்புமே  கனகச்சிதம் . அவரவர்  தரப்பில்  அவரவர் நியாயங்கள் . இயக்குநர்  விக்ரமன் , நகைச்சுவை  எழுத்தாளர்  குமுதம்  சிரி சிரி கதை  புகழ்  நந்து சுந்து  இவர்கள் இருவரும்  எப்போதும் நேர்மறை  சிந்தனைகளைக்கொண்டவர்கள் இவர்கள்  கதையில் வில்லன்  ரோலே இருக்காது.  ஆனா  சுவையான திருப்பங்கள்  இருக்கும். அதே  கான்செப்ட் தான்  இந்தக்கதையும்

ஒளிப்பதிவு , இசை   பக்கா . எடிட்டிங்   ஓவர் ஒர்க். பல  காலகட்டங்களை  நான் லீனியர் முறையில்  கட் பண்ணி  பண்ணி  தொகுத்திருக்காங்க ஆடை  வடிவமைப்பு  பிரமாதம், குறிப்பா  அம்மா மகள்  ஒரே மாதிரி  டிரஸ்ல வர்ற  காட்சிகள் எல்லாம் கலக்கல் ரகம் 

கடைசி  20   நிமிடகாட்சிகள்  செம  கலக்கல் . பெண்கள்  எல்லாம்  கண்ணீர்  விடாம  இருக்க முடியாது. . க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  அருமை 


சபாஷ்  இயக்குநர் 

1  நாயகி  தன்  அம்மாவுடன்  கருத்து வேறூபாடு  கொள்வதும்  தன் பெற்றோரை   சரியாகப்புரிந்து  கொள்ளாமல்  இருப்பதும்  நன்கு   சொல்லப்பட்டிருக்கு . அதே  போல் நாயகியின்  மகளும்  நாயகியைப்புரிந்து  கொள்ளாமல்  இருப்பது  அருமை 

2   அம்மா மரணத்துக்குப்பின்  ட்ரங்குப்பெட்டியில் அம்மாவின்  சேலையை அணைத்து நாயகி கதறும் காட்சி  ஃபெண்டாஸ்டிக். பொதுவாக  நம் பெற்றோர் உயிருடன்  இருக்கும்போது அவங்க  மதிப்பு நமக்குத்தெரிவதில்லை . நமக்காக அவங்க  எவ்வளவோ செஞ்சிருந்தாலும் நாம  அவங்களுக்காக எதுவுமே செஞ்சிருக்க  மாட்டோம், அவங்க மறைவுக்குப்பின் தான் அந்த  ஏக்கம் நமக்கு வரும், . அந்த  உணர்வுகளை  இந்தபப்டம்  பல  இடங்களில்  டச்  பண்ணின விதம் அழகு


3   திரைக்கதையை  வடிவமைத்த  விதம்  பற்றி பலரது  விமர்சனங்களில்  இருந்து  நான் மாறுபடுகிறேஎன், இப்போ  நடப்பது  , முன்பு நடந்தது  என  இரு விதமான  கால கட்டங்களாகப்பிரிந்து  கதை  சொல்லி இருக்கலாம், ஆனா எதுக்கு  அப்போ , இப்போ  என  அடிக்கடி  மாறி மாறி கால கட்டம்  காட்டப்படுது, குழப்புது  என  சிலர்  சொல்றாங்க . ஆனா  அதுதான்  சுவராஸ்யம் என எனக்குத்தோணுது. ஒவ்வொரு டைமும்  சப் டைட்டில்ல காலக்ட்டம் போட்றாங்களே? என்ன  குழப்பம்? அருமையான உத்தி அது 


நச்  வசனங்கள்


1   அம்மாவின்  தியாகத்துக்கு  ஆல்ட்டர்நேட்டிவாக  எதுவுமே இல்லை 

2   அப்பா  , எனக்கு ஸ்கூல் போக  ஆசை 

 நீ படிக்கற  ஆள் இல்லை , படிப்பிக்கற ஆள். உனக்கு எதுக்கு ஸ்கூல்? 


3   பொண்ணுங்க  பொதுவா  புருசனோட பிரச்சனைகளைத்தான் தீர்ப்பா

 ஆனா நான் மட்டும் மேதமேட்டிக்ஸ் பிரசனைகளை தீர்க்கறேன் 

4   இந்த  அபாரமான  திறமையை   வெளிக்கொணர  எதுனா ஸ்பெஷல்  யுனிவர்சிட்டில  படிச்சீங்களா?


  ஸ்கூல் வாசலையை மிதிக்கலை, இதுல  எப்டி யுனிவர்சிட்டி? 


5   ஒரு மேடைல  சர்க்கஸ் , மேஜிக் ஷோ , டாக்  ஷோ, ஸ்டேண்ட் அப்  காமெடி  இப்டி ஷோதானே  நடத்திப்பார்த்திருக்கீங்க ?மேத்ஸ்  ஷோ  நடத்துனா என்ன?



6   கத்துக்கொடுக்கறது  என்பது ஒவ்வொரு  நாளையும் நேசிக்க வைக்குது 


7   என்னை நடமாடும்  பேங்க்காகத்தான்  அம்மா,அப்பா  நினைக்கறாங்க , மகளா நினைக்கலை 


8   நாமெல்லாம்  மனுசங்க , மரங்கள்  கிடையாது, நமக்குக்கால்கள்  இருக்கு , வேர்கள் இல்லை , ஒரே இடத்துல  நிரந்தரமா  என்னால  இருக்க  முடியாது  , ஊர் ஊரா நாடு நாடா  சுத்திட்டே  இருக்கனும் 


9   நான்  உங்களுக்கு  தேவைப்படமாட்டேன் என ஆண்கள்  ஏன் சில சமயங்கள்ல  நினைக்கறாங்கனு  புரிய  மாட்டேங்குது

10  என் கனவுகள்  பெருசில்ல

 ஆனா அவை எல்லாம் உன் சொந்தக்கனவுகள் 

10  பார்ட்டிகள்ல, வீடுகள்ல  நான் எல்லா  டிரசும்  போடுவேன், ஆனா மேத்ஸ் ஷோல எப்பவும் சேலைதான் 




11   காதல் உலகில்  சிறந்த  முதல்  முட்டாளாக  இருக்கவே விருமப்றேன்

 அது  உன்னால  முடியாது. வேணும்னா  2  வது  முட்டாளா  இரு, ஏ னா நான் தான் முதல்


12   எந்த  நகரத்துலயும் நான்கு நாட்களுக்கு மேல் இருப்பது எனக்குப்பிடிக்காது 
‘13    என் கஷ்டம் நீ ஒரு மகளுக்கு அம்மாவாக இருக்கும்போது தெரியும் 

 உன்னைப்பார்த்த  பின் நான் ஒரு அம்மாவாகவே ஆகமாட்டேன்னு தோணுது , எனக்கு குழந்தைகள்னா விருப்பம் இல்லை 


14   ஒரு குழந்தைக்கு அம்மா ஆகிட்டா அவ மூளை ,  யோசிக்கும் திறன், திறமை  இதெல்லாம்  ஒரு படி குறைஞ்சிடும்னு  இந்த  உலகம் நினைக்குது , ஆனா உண்மை அதுவல்ல 

15  ஆண்களின்  உலகத்தில்  2 கேள்விகள்  தான்  அதிகம்  ஆக்ரமிக்கும்

‘1  எனக்குப்பணம்  கிடைக்குமா?

 2 எனக்குக்காதல்  கிடைக்குமா? 

15  ஒவ்வொரு அம்மாவும் பர்ஃபெக்டான  அம்மாதான்னு சொல்லிட முடியாது 


16  தன்  குழந்தை  நல்லா இருக்கனும்கறதுக்காக  ஒவ்வொரு அம்மாவும் தன்னைத்தானே  அழித்துக்கொள்கிறாள் 


17    இவ நார்மல்  தான்   அப்டினு சொல்லிச்சொல்லியே என்னை  இன்சல்ட் பண்றீங்க 


18  ஒரு பையனோட அம்மா  அவனோட திருமணத்துக்குப்பின்  மகன் மருமகளுடன் இருப்பதை  இந்த  உலகம் ஏத்துக்குது. அதே  ஒரு மகளோட  அம்மா  திருமணத்துக்குப்பின்  மகள், மருமகன் உடன் இருக்க ஆசைப்படுவது தப்பா? 


19   வயசு  என்பது  ஜஸ்ட்  ஒரு நெம்பர்  தான்.  அந்த  நெம்பர்கள்  தான் என்னை நேசிக்கின்றன


20   உங்க  வயசு என்ன ?

 நேற்றைய நாளை விட  இன்று ஒரு நாள்  கூடுதல், நாளைய நாளை  விட  ஒரு நாள்  இளையவள். கணக்கு  போட்டுக்குங்க 


21  என்னோட  வாழ்க்கை  பூராவும் என் அம்மாவை வெறுக்கவே காலம் கழிச்சிருக்கேன் 

22  மேடம், ஏதாவது  2 வார்த்தையாவது  பேசனும்

 தாங்க்யூ  வெரிமச்


சி.பி ஃபைனல்  கமெண்ட்  - இந்தப்படத்தை  நீங்க  2 வகைல  பார்த்தே  ஆகனும் . 1    நாம  வாழ்ந்த  இந்தியாவில் பிறந்த  சாதனையாளரின்  பயோ பிக்சர் .  , அம்மா  -மகள்  செண்ட்டிமெண்ட்டில் உச்சம் தொட்ட ஒரு திரைக்கதை . குறிப்பா  பெண்கள்  மிஸ்  பண்ணிடாதீங்க  ரேட்டிங்  3.5 / 5 

Shakuntala Devi Film.jpg
Poster
Directed byAnu Menon
Produced bySony Pictures Networks India
Vikram Malhotra
Written byAnu Menon
Nayanika Mahtani
Ishita Moitra
StarringVidya Balan
Jisshu Sengupta
Sanya Malhotra
Amit Sadh
Music byScore:
Karan Kulkarni
Songs:
Sachin–Jigar
CinematographyKeiko Nakahara
Edited byAntara Lahiri
Production
company
Abundantia Entertainment
Sony Pictures Networks India
A Genius Films Production
Distributed byPrime Video
Release date
  • 31 July 2020[1]
Running time
127 Minutes
CountryIndia
LanguageHindi