Showing posts with label SERAN. Show all posts
Showing posts with label SERAN. Show all posts

Saturday, October 01, 2011

முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்


 http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/09/muran_review_cheran_muran_movie_review-300x254.jpg
அன்பே சிவம் படத்தில் வருவது போல் 2 மாறுபட்ட கேரக்டர்கள் சேரன் + பிரசன்னா ,இருவரும் ஒரு கார் பயணத்தில் எதேச்சையாக இணைகிறார்கள்.தனது காதலியை தன் தந்தையே கெடுத்து அவளது தற்கொலைக்கு காரணம் ஆகி விட்டார், அவரைப்பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன் பிரசன்னா, கோடீஸ்வரியாக இருந்தாலும் தன் மனைவி தன்னை மதிக்காமல் பார்ட்டி, குடி என ஊர் சுற்றுகிறாளே என்ற ஆதங்கத்தில் வேறொரு காதலியுடன் தன் கவனத்தை திருப்பிய சேரன் இருவரும் எந்தப்புள்ளியில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியும்?



எஸ்.. அதே தான்...பிரசன்னாவின் அப்பாவை சேரன் கொலை செய்வது, சேரனின் மனைவியை பிரசன்னா கொலை செய்வது.. யாருக்கும் சந்தேகம் வராது.. இது தான் பிரசன்னாவின் திட்டம்.. ஆனால் இதற்கு சேரன் உடன் பட வில்லை..


விறுவிறுப்பான திரைக்கதை மூலம் பல ட்விஸ்ட்களை சந்தித்து கடைசியில் என்ன ஆகிறது என்பதை வெள்ளித்திரையில் காண்க.. கதையோட  பேசிக் நாட் (BASIC KNOT) அமரர் சுஜாதாவின் எதையும் ஒரு முறை என்ற நாவலில் இருந்தும், திரைக்கதையை ஹாலிவுட்டின் திகில் கதை மன்னன் ஹிட்ச்சாக்-ன் STRANGERS ON THE TRAIN படத்தில் இருந்தும் சுட்டிருந்தாலும் , படத்தின் இயக்குநர் தமிழுக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.. பிரசன்னாவின் காதலி அவரது தந்தையால் ரேப் செய்யப்படவில்லை,பிரசன்னாதான் ரேப் செய்தார் என்ற ட்விஸ்ட் எழுத்தாளர் சுபாவின் நீ நான் நிலா நாவலில் இருந்தும் சுடப்பட்டுள்ளது.

யதார்த்த நாயகன் என்ற பெயர் எடுத்த சேரன் என்னதான் அண்டர்ப்ளே ஆக்டிங்க்கில் அசத்தினாலும், அசால்ட்டாக நடித்து பெயர் தட்டிக்கொண்டு செல்வதென்னவோ பிரசன்னா தான்.. அஞ்சாதே படத்துக்குப்பின் நல்ல வில்லன் வாய்ப்பு.. அவரது பாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்பு எல்லாம் அட்டகாசம்.. ஆர்யாவுக்குப்பிறகு தமிழில் அசால்ட்டாக நடிக்க ஒரு ஆள் ரெடி.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZI94K623jmkk-fZPC3IBMppGws8NNtYOf5PWzAo6gf5ruyMbjo2M_NMTHdWjnUk4SBTNvXD22q6GLHJjHtiXNmDt-xoOictx7YL_LO5UJGpkb6HfrxdqkpA8CQrz50QeNZVj6SSMQzfof/s1600/muran+movie+pictures.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. அப்பன் காசை அழிக்கறதுக்குன்னே ஒருத்தன் இருப்பான் இல்லையா? அதுல இவனும் ஒருத்தன்...

2. சாதாரண லெமன் சோடா .. எவ்ளவ் மப்புல இருந்தாலும் இவன் தமிழ்லயே தெளிய வெச்சுடுவான்

3. லைஃப்ல த்ரில்லிங்கா ஏதாவது செய்யனும்..

அப்படி செய்ய நான் ஒண்ணும் முட்டாள் இல்லை.. 

அப்படி செய்யாம இருக்க நான் ஒண்ணூம் கோழை  இல்லை..
4. நீங்க இப்போ பார்க்கப்போறது பயங்கர ஆக்சிடெண்ட்.. அல்லது மிரேக்கிள்..


5.  நான் எப்பவுமே லக்கை நம்பாதவன்.. அதுக்கு எல்லாம் கட்ஸ் வேணும்.. 

அப்போ என்னை தைரியம் இல்லாதவன்கறியா?

6. உங்க ஒயிஃபை ரொம்பவே லவ் பண்றீங்க போல.. 

சாரி..   அவள் என் ஒயிஃப் இல்லை..

உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு நினைச்சேன்...


மேரேஜ் ஆகலைன்னு சொல்லவே இல்லையே.. அவ எனக்கு ஒயிஃபா நடந்துக்கலை.. 

7.  லேடி - சார்.. நீங்கதான் என்னோட முதல் கஸ்டமர்.. 

வாட்?

ஐ மீன், இந்த சோப் பவுடர் வாங்க.. 

8. சார்.. உங்க வீட்ல லேடீஸ் இல்லையா?

எஸ்.. இருக்காங்க.. ஆனா இப்போ இல்லை.

சார்.. உங்க துணியை நீங்க தானே வாஷ் பண்றீங்க..?எப்டி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா?

9. ஏம்மா.. இந்த அபார்ட்மெண்ட்ல இத்தனை பேர் இருக்கறப்ப என்னை மட்டும் ஏன் செலக்ட் பண்ணுனே?

 வேற யாரும் என்னை உள்ளே வர அலோ பண்ணலை சார்.. 

10.  நைட் லேட்டா தண்ணி அடிச்சுட்டு இப்படி வீட்டுக்கு வர்றியே, நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

அதை நீ கேட்காதே , உனக்கு எந்த தகுதியும் இல்ல.. என்னை விட நாலுல ஒரு பங்கு கூட சம்பாதிக்க கையாலாகாத ஆம்பளை நீ...





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK6EMMSa3mnqyy-f3aNYLXylYpLJOg1KkMjxkjffZRGaLexLFsUiIQVklckiCDIK4Dp2hJO6vr4NsmDktx4lzqCM-krIhWavfKQdkJEUzwByK6PbnbpYALe2w-ozL5HIaqZwiSx7S3mEnb/s1600/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D.jpg

11.  என் கிட்ட அவ என் ஃபோன் நெம்பர் வாங்குனா... எனக்கு அவ கால் பண்ணுனா,அவளுக்கு நான் கால் பண்ணுனேன்.. 2 பேரும் லவ்வ ஆரம்பிச்சுட்டோம்...

12. உங்க கிட்டே ஒரு கஷ்டமான கேள்வி கேட்கப்போறேன்.. உங்க ஒயிஃபை நீங்க லவ் பண்றீங்களா?

விதி என் லைஃப்ல விளையாண்ட மாதிரி யார் லைஃப்லயும் விளையாடக்கூடாது..

13. ஹாய்... நீ அழகா இருக்கே.. அது உனக்கு தெரியும்.. ஆனா எனக்குத்தெரியும்கறது உனக்குத்தெரியனும் இல்லையா? அதான் சொன்னேன்.. இதை நான் தான் உன் கிட்டே முதல்ல சொல்லி இருப்பேன்னும் நான் நினைக்கலை.. ( டேய், என்னதாண்டா சொல்ல வர்றே? )

14.  உன்னை மாதிரி பணக்காரப்பசங்களுக்கு என்னை மாதிரி பொண்ணுங்க வெறும் ஃபன் தான்..

15.  ஆம்பளைன்னாலே ஒரு இண்டிவிஜாலிட்டி வேணும்.. அப்பன் காசுல உக்காந்து சாப்பிடக்கூடாது.. 

ஏய்.. யார்ட்டடி பேசிட்டு இருக்கே?

யார்ட்ட பேசுனா என்ன? சரியாப்பேசறேனா? இல்லையா?

16.  என்னால இதை ஜீரணிக்கவே முடியலை./..

ஏன், இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கலையே? எப்படி ஜீரணம் ஆகும்?

டோண்ட் ஜோக்.. நீங்க சொன்னதை ஜீரணிக்கவே முடியலைன்னு சொன்னேன்.. 

17.  நான் இப்படி ஒரு காரியம் பண்ணுனேன்னு லாவண்யா கிட்டே சொன்னா அவ நம்பவே மாட்டா...

சொல்லப்போறீங்களா?

நோ..

18.  உங்க மனைவியை கொலை பண்ணனும்னு உங்களுக்கு எப்பவாவது தோணி இருக்கா?

இல்லை..

தோணி இருக்கும்.. ஏன் பயப்படறோம்னா விளைவுகள்.. அதனால அப்புறம் போலீஸ்.. கேஸ், ஜெயில் இதான் பயம்..  வீ ஆர் ஸ்மார்ட் பியூப்பிள்..

19.  புரிஞ்சுக்காத பொண்டாட்டி இருந்தும் உங்க காதலி கூட நீங்க  வாழலை.. ஆனா புரிஞ்சுக்கற புருஷன் இருந்தும் உங்க மனைவி உங்க கூட வாழலை..

20.  அதுல ஒரே ஒரு பிராப்ளம் இருக்கு.. நீங்க ஷூட் பண்னப்போற அதே ரோட்ல தான் கமிஷனரும் வாக்கிங்க் வர்றார்.. 



http://cinema.dinakaran.com/cinema/CineGallery/Kollywood/Movie/Muran/vm-02.jpg

21. ஏய்.. இங்கே பாருடி.. உன் கிட்டே இருந்த அழகு திமிர் 2ம் எனக்கு பிடிச்சிருந்தது... இப்போ மேட்டர் ஓவர்,. என் த்ரில் குறைஞ்சிடுச்சு.. 

22. இங்கே பாரு... 24 வயசு வரைக்கும் கோடீஸ்வரனா வாழ்ந்துட்டு திடீர்னு பிச்சைக்காரனா என்னால வாழ முடியாது.. அதான் அப்பனையே போட்டுத்தள்ள முடிவு பண்ணிட்டேன்.. 

23. உன்னால முடிஞ்சதை பண்ணிப்பாருன்னு சவால் விட்டீங்க..  நான் பண்ரேன்.. நீ பாரு.. 

24. வாழ்றப்ப  யாரோட பரிதாபத்தையும் சம்பதிக்காம வாழறவன் வேஸ்ட்.. 
http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-movies/muran/muran_movie_new_stills_3080.jpg


இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. சேரனின் ஃபிளாஷ்பேக் கதைக்கு பி கே பி யின் நாவல் கரு, பிரசன்னாவின் ஃபிளாஷ்பேக்கிற்கு சுபாவின் கதைக்கரு, படத்தின் மெயின் நாட்டிற்கு (KNOT) சுஜாதாவின் கதைக்கரு என இயக்குநர் ரொம்பவே ஹோம் ஒர்க் பண்ணி தெளிவாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.. 

2.  இதுவரை என்னை தீண்டியதில்லை பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் கவிதை.. அதே போல் நான் கண்டேன் நேற்று இல்லா இன்று  பாடல் வரிகளும் லொக்கேஷன்களும் அழகு..

3. சேரன், பிரசன்னா இருவருக்குமான வாய்ப்புகள், கதாபாத்திரத்தின் தன்மை எல்லாம் அளந்து வைத்திருப்பது போல் சம வாய்ப்பு.. 

4. இடைவேளைக்குப்பின் கதை எப்படி பயணிக்கும் என்பதை எளிதில் யூகிக்க வைக்காத திரைக்கதை..

5. பின்னணி இசை, ஒளிப்பதிவு இரண்டும் இந்த மாதிரி   த்ரில்லர் படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து பயன்படுத்திய விதம்.. சபாஷ்!!

http://mimg.sulekha.com/tamil/muran/stills/muran-stills-0204.jpg

இயக்குநரிடம் சில  கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்


1. சேரனின் மனைவியின் சகோதரன் ஒரு இன்ஸ்பெக்டர்.. அவருக்கு சேரன் மீது டவுட்.. ஓப்பனாக கேட்கிறார்.. கொலை செஞ்சியா? என, விரைவில் ஆதாரத்துடன் பிடிப்பேன் என்கிறார்.. ஆனால் அந்த இன்ஸ்பெக்டரே கொலை ஆன பின்னும் போலீஸ் நிர்வாகம் எப்படி சேரனை சந்தேகப்படவில்லை?

2.  பிரசன்னா செமயா பிளான் பண்ணி சேரனின் மனைவி, இன்ஸ்பெக்டர் என இருவரையும் கொலை செய்பவர் அதே போல் வேறு ஏதாவது பிளான் பண்ணி அப்பாவை கொன்றிருக்கலாமே? ஏன் படம் பூரா சேரன் பின்னாலயே தொங்கிட்டு இருக்கனும்?

3. கதைப்படி பிரசன்னா ஒரு லேடீஸ் செலக்டர். அதாங்க பொம்பள பொறுக்கி.. சேரனின் மனைவி ஒரு கில்மா லேடி.. சேரனின் மனைவியை கொலை செய்ய 2 மாசம் அவரை ஃபாலோ செய்யும் பிரசன்னா அவரை ஏன் யூஸ் பண்ணிக்கலை?

4. கதைல ஒரு டர்னிங்க் பாயிண்ட் வேணும்கறதுக்காக சேரனின் காதலி பிரசன்னாவுக்கு காதலி மாதிரி ஒரு பிட்டை டவுட் வர்ற மாதிரி போட்டு ஏன் இயக்குநர் பேக் அடிச்சுட்டார்? அது இன்னும் செம த்ரில்லிங்காவும், ட்விஸ்ட்டாவும் இருந்திருக்குமே?

5. சேரன் வீட்டுக்குள்ள தெரியாம ரிவால்வரால நிலைக்கண்ணாடியை சுடறப்ப காதலி வீட்டுக்கு வர்றாங்க... என்ன சத்தம்?னு கேட்டதுக்கு கண்ணாடி விழுந்து உடைஞ்சிதுன்னு அவர் சமாளிக்கிறார்..காதலி வீட்டுக்குள்ள வந்தும் அந்த உடைஞ்ச கண்ணாடியை கண்டுக்கவே இல்லை.. குண்டு சத்தம் பற்றி எதுவும் கேட்கலை.. ஏன்?

6.  பிரசன்னாவின் காதலியின் தோழிக்கு பிரசன்னாவின் கேரக்டர் தெரிந்தும் அவ ஏன் தோழியை எச்சரிக்கை பண்ணலை?

7. தனது எல்லா வண்டவாளங்களும் தெரிந்த காதலி லிண்டாவின் தோழியை பிர்சன்னா ஏன் உயிரோட விட்டு வெச்சார்? அந்தப்பொண்ணு சேரனை பார்த்து உண்ஐயை சொல்றப்ப  பிரசன்னா ஏன் தடுக்க முயற்சி பண்ணலை?

8. பிரசன்னாவின் தந்தையை கொலை செய்ய சேரன் ரிவால்வரை நீட்டிக்கிட்டே வர்றப்ப திடீர்னு கமிஷ்னர் பிரசன்னாவின் தந்தையை பார்க்க வந்துடறார்..அப்போ சேரன் டக்னு ரிட்டர்ன் ஆகறாரே? அப்போ கமிஷனருக்கு டவுட் வராதா? ஏன் கண்டுக்கவே இல்லை?

http://600024.com/gallery/cache/events/muran-press-meet/muran-press-meet_08_w531_h800_600024.jpg

ஆனா இந்தக்குறைகளெல்லாம் பெரிசாத்தெரியாத அளவுக்கு படம் செம விறு விறுப்பா போகுது.. 

ஏ செண்ட்டர்கள்ல 50 நாட்கள், பி செண்ட்டர்கள்ல 30 நாட்கள் ( தீபாவளி வருதே? ), சி செண்ட்டர்கள்ல 20 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - சஸ்பென்ஸ் த்ரில்லர் ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம்..

ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் படம் பார்த்தேன்

டிஸ்கி -1

வாகை சூடவா - மண்வாசனை,ஒளிப்பதிவு ஸ்பெஷல் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்

டிஸ்கி 3 -

வெடி - ன் கிளாமர், விவேக்கின் மொக்கைகாமெடி - சினிமா விமர்சனம்

 

 




http://www.nakkheeran.in/AllImages/Gallerys/12331_1.jpg

Sunday, September 25, 2011

முரண் படம் ஃபாரீன் பட ரீமேக் அல்ல - சேரன் முன்னுக்குப்பின் முரண் ஆன பேட்டி காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGWU-O5LxvkhnuQYsjGyTX0kNB4xRQgM4LbbWvCmtURPW6umiBJERKnmyVP-xob45_cvMw-XopLln8tsktSnbAbELtB8yMrQ_ahSsw7fJJrVCDHfoPQjVyH7-c_T2YDr6UIBQLk3rQmxQ/s1600/muran_movie_wallpapers_posters_01.jpg

தியேட்டருக்குப் போகாதீங்க!

சேரனின் புது ரூட்!

சேரனுடன் ஒரு சந்திப்பு...

 '1. ' 'முரண்’ என்ன மாதிரியான படம்?''


 சி.பி - ஒரு மாதிரியான படம்னு டைட்டிலைப்பார்த்து யாரும் ஏமாந்துடாதீங்க.. படம் பக்கா ஆக்‌ஷன் கதை, பாதி படத்துக்கு சேரனும், பிரசன்னாவும் கார்ல போய்ட்டே தான் இருக்காங்க.. 




''இந்தப் படம் ஒரு கதையா ரசிகர்களுக்கு புது அனுபவத்தைத் தரும். 'அடுத்து இப்படித்தான் போகும்’ என்ற ரசிகனின் யூகத்துக்கு எதிர் திசையிலேயே படம் பயணிக்கும். பல இடங்களுக்குப் பயணம் போகிறோம். அப்போது யாரோ ஒருவரைச் சந்திக்கிறோம். சில சந்திப்புகள் உறவாக, நட்பாக, காதலாக மாறுகிறது. சில சந்திப்புகள் பிரச்னைகளாகவும் மாறும். தெளிவான ஒரு மனிதனும் புதிரான ஒரு மனிதனும் சந்திக்கும்போது நடக்கும் விஷயங்களும் அதற்குப் பிறகான நிகழ்வுகளும்தான் முரண்!''

சி.பி -படம் ரிலீசுக்குப்பிறகு முன்னுக்குப்பின் முரணா பேசிட்டார்னு யாரும் சொல்லாத அளவு படம் இருந்தா சரிதான்

http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-movies/muran/muran_movie_new_stills_3080.jpg


2. ''படத்தில் என்ன ஸ்பெஷல்?''

சி.பி - பேட்டி எடுக்கற வெள்ள சொக்கா போட்டிருக்கற அண்ணே..  சம்பளம் சரியா தர்றதில்லையா?ஹைக்கூ மாதிரி குட்டி கேள்வியா கேட்டு பதிலை மட்டும் எஸ்ஸே டைப்ல வாங்க நினைச்சா எப்படி?


''முதலில் பிரசன்னா. அர்ஜுன் என்ற அவர் கேரக்டர் ஒரு புதிர். ஆனால், நந்தா என்ற என் கதாபாத்திரமோ, எதையும் அழகாக முடிவு எடுத்து நிதானமாகப் போகக் கூடிய தெளிவான ஆள். உண்மை யைச் சொல்ல வேண்டும்    என்றால், இருவருமே அழகாகப் பொருந்தி இருப்பதாகச் சொல்கிறார் கள். படத்துக்குச் சில பெரிய கேமராமேன்களின் பெயர் களைச் சொன்னேன். 'இல்ல சார், என்னைப் புரிஞ்சிக்கிட்டு தயக்கம் இல்லாமல் வொர்க் பண்றவரா இருந்தா நல்லா இருக்கும்’ என்ற இயக்குநர் ராஜன் மாதவ், பத்மேஷ் என்பவரை ரெகமெண்ட் பண்ணினார். அதேபோல் இசையமைப்பாளராக சாஜன் மாதவைச் சொன்னார். அவர், இயக்குநரின் சகோதரர்.

சி.பி - ஓஹோ. அப்போ இது ஒரு குடும்பப்படமா?  அண்ணன் டைரக்டர், தம்பி மியூசிக் , அக்கா பொண்ணு எடிட்டரா/?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-CkNTZR8rWr6d9PibbyTGZ2OJpNrLMZLTgxDcdaOhEPKWOTR1LAlvCWECisfzCKzw1ZBCJgksNA7FeaYK_JSMzK7gVddmEiCw8eqn2OQDk9XVQpfqRe9D7J7RfPGP4tEOQBMJCrCdJ28L/s1600/Muran+Press+Meet+Photos+Stills+Gallery+Cheran+in+Muran+Media+Meet+Pics+%252810%2529.jpg

இருவரும் ரவீந்தரன் மாஸ்டரின் மகன் கள். அவர் மலையாளப் படங்களின் இசையமைப்பாளர். நான் முன்னேறணும் என மனதளவில் என் அண்ணன்தான் நினைப்பான். என் இயக்குநரின் அந்த எண்ணம் எனக்குப் பிடிச்சிருந்தது.  கதை முதல் 20 நிமிடங்கள் ஹைவேயிலேயே நடக்கும்.

 சி.பி - படம் ஓடலைன்னா புரொடியூசர் எங்கே வரனும்னு வழி காட்டுதலா படம் இருக்கும் போல!!!!!!!!!

இரண்டே இரண்டு கேரக்டர் கள்தான். 20 நிமிடங்கள் பயணத்தி லேயே கதை சொல்வது கடினம். அங்கு தான் எங்கள் இருவரின் கதாபாத்திரங்கள் விவரிக்கப்படும். காண்பித்த ஷாட்டையே திரும்பக் காட்டக் கூடாது, எடுத்த இடத்திலேயே திரும்ப எடுக்கக் கூடாது எனப் பெரிய சவால். அந்தக் காட்சிகளை இப்போது பார்க்கும்போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது!''


சி.பி - பார்த்தவங்களே திரும்ப பார்க்கக்கூடாதுன்னு சொல்வீங்களோ? அப்புறம் ரிப்பீட் ஆடியன்ஸ் பற்றாக்குறை ஆகி ஹிட் பாதிக்கப்படுமே.?


http://www.kollywoodimages.com/wp-content/uploads/2011/09/muran-press-meet-08.jpg

'3' 'முரண்’ ஆங்கிலப் படம் ஒன்றின் தழுவல் என்கிறார் களே?''


சி.பி -  TWO STRANGERS  படத்துல வர்ற அனைத்துக்காட்சிகளும் தவறாது இடம் பெறும், எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா 2 ஹீரோக்களுக்கும் தலா ஒரு டூயட், ஒரு குத்தாட்டப்பாட்டு உண்டு.. ஹி ஹி  ( கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடுச்சு கோவிந்தா!!!!)



''தழுவல் இல்லை. எப்போதோ பார்த்த ஒரு படத்தின் இன்ஸ்பிரேஷன் என ராஜன் என்னிடம் முதலிலேயே சொன்னார்.


சி.பி - அண்ணே!!!!! தழுவல் இல்லை இன்ஸ்பிரேஷனா? இது எப்படி இருக்குன்னா ...... ஒரு ஜோக் சொல்றேன் பாருங்க.


” அந்தப்பொண்ணை கையைப்பிடிச்சு இழுத்தியா?”

”அப்டி சொல்ல முடியாது, இங்கே வான்னு கூப்பிட்டப்ப லேசா கை பட்டிருக்கலாம்.”



ஆனால், அந்த விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு முழுக்க முழுக்க தமிழ்ச் சூழலுக்குத் தகுந்த மாதிரி திரைக் கதை அமைத்திருக்கிறார். இன்ஸ்பிரேஷன் தவறு கிடையாது. எல்லோருக்கும் வருவதுதானே?''


சி.பி - குங்குமத்துல செல்வராகவன் பேட்டி படிச்சீங்க இல்ல.? ஃபாரீன் டி வி டி பார்த்து படம் எடுக்கறவங்களை மண்ணைக்கவ்வ வையுங்கள்னு கோபமா சீறி இருக்காரு.. அநேகமா அவர் உங்களை த்தான் தாக்கறார்னு நினைக்கறேன். http://tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Movies-Gallery/Muran-Movie-Stills/Muran-Movie-Stills-0002.jpg




4. ''எந்த விஷயமாக இருந்தாலும் தயங்காமல் கருத்து சொல்பவர் நீங்கள். தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?''

சி.பி - இப்படி உசுப்பேத்தி  உசுப்பேத்தி....................


''தொலைக்காட்சி சேனல்களை அரசு கேபிள் டி.வி-யின் மூலம் குறைந்த வாடகையில் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டுசெல்லும் முனைப்பு முதல் சாதனை. அதைச் செயல்படுத்து வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். அரசால் அவை களையப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.


சி.பி =- ஜிங்க் ஜக் சிங்க் ஜக்


இந்த கேபிள் டி.வி. திட்டத்தின் மூலம் அரசு சிறு தயாரிப்பாளர்களின் பிரச்னையையும் தீர்க்க முடியும். எல்லாத் திரைப்படங்களும் லாபம் ஈட்டச் செய்து நஷ்டத்தில் இருந்து அவர்களைக் காக்க முடியும். அதற்கு என்னிடம் சில திட்டங்கள் இருக்கின்றன. இன்று மக்கள் அனைவரும் படம் பார்க்கிறார்கள். ஆனால், அதற்கான பணம் உரிய தயாரிப்பாளர்களிடம் போய்ச் சேர்வது இல்லை. யாரோ எங்கேயோ தொடர்ந்து திருடியபடி இருக்கிறார்கள். குடும்பத்தினர் புதுப் படங்களைப் பார்க்க திரையரங்கம் செல்ல வேண்டியது இல்லை. ஒரு படத்துக்கு 25 ரூபாய் கொடுத்தால் போதும். அந்தப் பணம் தயாரிப்பாளர்களுக்கு கேபிள் டி.வி. மூலமாக வர வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அரசுக்கும் வருமானம் வரும். முதல்வர் அவர்கள் மனதுவைத்தால் அவரிடம் இதுபற்றி விளக்கத் தயாராக இருக்கிறேன்!''


சி.பி - நீங்க விளக்கி அவங்க கேட்டுட்டாலும்.. போங்க அண்ணே போங்க போய் புள்ள குட்டிகளை நடிக்க வைங்கண்னே!!!!!

நன்றி விகடன்