Showing posts with label POLICE. Show all posts
Showing posts with label POLICE. Show all posts

Saturday, January 05, 2013

டெல்லி - சம்பவம் - மக்கள் கருத்து

பாலியல் பலாத்கார பாரதம்

தலைநகர் டெல்லி...தலைகுனிவு காட்சிகள்
 
 
ஆர்.ஷஃபி முன்னா 
 
 
டெல்லியில், பாராமெடிக்கல் கல்லூரியில் பிஸியோதெரபி பயிலும் 23 வயது மாணவி சீமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக் கப்பட்ட சம்பவம், நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்களின் உச்சகட்டம். இதைச் சமூகமும் உச்சபட்சமாக உணர்ந்ததால்... தலைநகரே ஸ்தம்பிக்க, நாட்டின் பல இடங் களிலும் பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.


தெற்கு டெல்லியின் சாக்கேத் பகுதியிலிருக் கும்
மால் ஒன்றில், தன் 'பாய் ஃப்ரெண்ட்' அர்விந்த் பிரதாப் பாண்டேவுடன் சினிமா பார்த்துள்ளார் சீமா. வீடு திரும்புவதற்காக, இரவு 9.30-க்கு தனியார் பேருந்தில் இருவரும் ஏறியுள்ளனர். உள்ளே இருந்த சில பயணிகள், அடுத்த ஸ்டாப்பிங்குகளில் இறங்கிவிட, சீமா, அர்விந்த், டிரைவர் மற்றும் ஐந்து ஆண்களுடன் பயணம் தொடர்ந்துள்ளது. 



அவர்கள் சீமாவை சீண்ட, இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம். கோபம் அடைந்தவர்கள்... அர்விந்தை இரும்புத் தடியால் தாக்கியுள்ளனர். பிறகு, டிரைவர் ஸீட்டின் அருகே உள்ள கேபினில், ஓடும் பேருந்திலேயே அனைவரும் சீமாவை மாறி மாறி வல்லுறவு கொண்டுள்ளனர். சுமார் 30 கி.மீ தூரம் வரை பயணப்பட்ட அந்தப் பேருந்தில் அரங்கேற்றப்பட்ட கொடூரம்... சினிமாக்களில்கூட பார்த்தறியாத உச்ச கொடூரம். அதன்பிறகு, இருவரையும் ஓடும் பஸ்ஸில் இருந்து தூக்கி எறிந்தது... கொடுமையிலும் கொடுமை! இதைப் பார்த்த ஒருவர் தந்த தகவலை அடுத்து, இருவரையும் மீட்டு அருகிலுள்ள சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் சேர்த்தது போலீஸ்.


குற்றவாளிகள் ஆறு பேரில் இருவர் மறுநாள் கைது செய்யப்பட்டாலும், மீதம் உள்ளவர்களை கைது செய்வதில் போலீஸ் வழக்கம்போல் சுணக்கம் காட்டியது. சம்பவம் தலைப்பு செய்தியாக மாற.... டெல்லியின் கல்லூரி மாணவ -மாணவிகளும், பொதுமக்களும் கைகோக்க... போராட்டக்களமாக மாறியது இந்தியா கேட். நாடாளுமன்றத்திலும் விஷயம் எதிரொலிக்க... 'குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை' என்கிற குரல் உரக்க ஒலிக்கிறது.



''பஸ்ஸிலிருந்து தூக்கி எறியப்பட்ட மாணவி, காயங்களுடன் நிர்வாணமாக நடுரோட்டில் கிடந்துள்ளார். போலீசார் வரும்வரை ஒரு துணியை அவர் மீது போர்த்தவும் யாரும் முன்வரவில்லை. நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் குற்றங்களில் இந்தச் சம்பவமே கடைசியாக இருக்க வேண்டும். இதற்கு ஒரு முடிவு கட்டாமல் எங்கள் போராட்டம் ஓயாது'' என நம்மிடம் ஆவேசப்பட்டவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி பிரதீபா சர்மா.


பொதுமக்களின் ஆவேசப் போராட்டம் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி... ஏன், ஜனாதிபதியின் வீட்டையும் விட்டு வைக்கவில்லை. இதன் பிறகே... மீதம் இருந்த நான்கு குற்றவாளிகளையும் கைது செய்தது டெல்லி போலீஸ். அமைதி காக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சியில் தோன்றி கோரிக்கை வைக்கும் அளவுக்கு போராட்டம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது!


''பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் பலவும், பத்து வருடங்களுக்கு மேலாக, முடிவடையாமல் நிலுவையில் உள்ளதாக செய்திகள் வருகின்றன. இவர்கள் விஷயத்தில் மனித உரிமைகளைப் பார்ப்பது பாவமாகிவிடும். குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், குற்றவாளிகளுக்கு துணைபோகாமலிருக்கவும் போலீஸார் உறுதி எடுக்க வேண்டும். அப்போதுதான் என் மகள் மற்றும் பேரக் குழந்தைகள் இந்த நகரத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும்'' எனச் சீறினார் போராட்டத்திலிருந்தவர்களில் ஒருவரான முதியவர் சாய்ராம் ராத்தோட்.



போராட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் லாபம் தேட முனைந்த சில அரசியல் கட்சிகளை, போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. எனினும், போராட்டக்காரர்களுக்கு இடையே ஊடுருவிய சமூக விரோதிகள் சிலரால், எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.


போராட்டக்காரர்களை அடக்கும் பணியில் திடீர் என மயக்கம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து போயிருக்கிறார் ஒரு போலீஸ்காரர். ஆனால், 'மாரடைப் பால் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் இறந்துபோயிருக்கிறார். போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்த விஷயத்தை போலீஸ் பெரிதாக்குகிறது' என்று இந்த மரணத்தையும் சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார்கள் இப்போது.


''சீமா மருத்துவ மாணவி என்பதால், உடலின் தன்மையை அறிந்து சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கிறார். ஐந்து முறை கோமா நிலைக்குச் சென்று திரும்பியபோதும் அவருக்கு மனஉறுதி அதிகமாக உள்ளது. இது, தான் உயிருடன் இருந்தால்தான் குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என்பதற்காகவும் இருக்கலாம். ஒருமுறை நினைவு திரும்பியபோது, 'அம்மா... நான் வாழ விரும்புகிறேன்!’ என ஒரு பேப்பரில் எழுதிக் காட்டினார்.


ஒரு கட்டத்தில் ஒருசில அடிகள் நடக்கவும் செய்தார். ஆனால், இப்போது அவரால் எதுவும் முடியவில்லை. வெறி கொண்ட அந்தக் கொடூரர்கள் அவருடைய பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியையும் நுழைத்துள்ளனர். அது வயிற்றுக்குள்ளும் சென்று பல உறுப்புகளையும் பாதித்துள்ளது. இதனால், உடல் முழுவதும் பரவிவிட்ட இன்ஃபெக்ஷன்தான் தற்போது மாணவிக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது. முதுகிலும் பல எலும்புகள் முறிந்துள்ளன. அவரு டைய முழு நிலைமையையும் விளக்கமாகக் கூறினால்... மருத்துவர்களாகிய எங்களுக்கே மனது வலிக்கிறது. இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் மனிதர்களே அல்ல?'' என ஆதங்கப்பட்டார் சப்தர்ஜங் மருத்துவமனையின் சூப்பிரண்டென்டன்ட் பி.டி.அத்தானி.



விவகாரம் தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே போகும் நிலையில், ஒரு சமயம் நன்றாக.... மறுசமயம் மோசமாக என மாணவியின் உடல் நிலையும் மாறிக் கொண்டே போனதால்... மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு, அரசு செலவில் அனுப்பப் பட்டார் சீமா. ஆனால், உடல்உறுப்புகள் ஒவ் வொன்றாக செயல் இழக்க... டிசம்பர் 29-ம் தேதி அதிகாலை சிங்கப்பூரிலேயே, 13 நாள் போராட்டத் துக்குப் பின் இறந்து போனார்.


தேசிய குற்றவியல் ஆவணப் பதிவுகளின்படி, நம் நாட்டின் 53 பெரு நகரங்களில், மிக அதிகமான பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் பதிவாகியிருப்பது... டெல்லியில்தான். 2011-ல் இங்கே மட்டும் 572 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள் ளனர். மும்பை-239, பெங்களூரு-96, சென்னை-76, கொல்கத்தா-47 என இந்த பட்டியல் நீள்கிறது!


டெல்லியில் இரண்டு நாட்களுக்கு, மூன்று கற்பழிப்பு வழக்குகள் சராசரியாகப் பதிவாகின்றன. கற்பழிப்பு குற்றங்கள் சம்பந்தமான டெல்லி போலீஸின் குற்றப் பதிவுகளின் புள்ளிவிவரங்கள், 'பெண்களுக்கு, அவர்களை அறிந்தவர்களால்தான் அதிக ஆபத்து' என்கின்றன. 


2011-ம் வருடத்தில் பதிவான வழக்குகளில் மட்டும் 97.54 சதவிகித குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள்தான். இதில், 58.28 சதவிகித குற்றவாளிகள் உறவினர்கள். 36.46 சதவிகித குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுடைய தெருவிலேயே வசிப்பவர்கள். வெறும் 2.8 சதவிகித குற்றவாளிகள் மட்டுமே முன்பின் தெரியாதவர்கள். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல!


'பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு' என்ற பட்டியலில் இந்தியா இருப்பது, காந்தி பிறந்த தேசத்துக்கு எத்தனை பெரிய கேவலம்!     

பஸ் டிரைவர் ராம்சிங், இவனுடைய சகோதரன் முகேஷ் சிங், பாடி பில்டரான வினய் சர்மா, தள்ளுவண்டியில் பழங்களை விற்கும் பவண் குப்தா (இந்த இருவரும்... டிரைவரின் நண்பர்கள்), ப்ளஸ் டூ படித்துவிட்டு வேலை தேடி பீகாரிலிருந்து டெல்லி வந்திருக்கும் அக்ஷய் தாக்கூர், கூலி வேலை செய்து பிழைக்க ராஜஸ்தானில் இருந்து வந்திருக்கும் ராஜு ஆகிய ஆறு பேரும், இந்தக் கொடூரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.



 மக்கள் கருத்து 

1. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு.....இப்போதுதானா? மாபெரும் இதிகாசமென இந்த நாடு கொண்டாடுகிறதே அந்த 'மகாபாரத'த்தில் மனைவியை வைத்து சூதாடுகிறார்கள் பாண்டவர்கள்.அறிவிற் சிறந்த பெரியோரும்,மூத்தோரும் கூடியிருக்கும் சபையில் துகிலுரியப்படும் போது ஐந்து கணவர்களோ,அல்லது வீரத்திலும்,அறிவிலும் சிறந்த பெரியோர்களோ காப்பாற்றும் திறனை இழந்து விட்டதால் கடவுளைக் கூப்பிடுகிறாள்.....


.
இப்போது இந்தியப் பெண்களை பாஞ்சாலியின் நிலையில் வைத்துப் பாருங்கள் இரண்டு காட்சிகளுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை.

நல்லவேளை குறைவாக அணிந்திருந்ததால் பாஞ்சாலி பலாத்காரத்திற்கு உள்ளாட்கப்பட்டாள் என யாரும் இதுவரை யாரும் கருத்து சொல்லவில்லை.
இங்கு பெண் என்பவள் ஆணின் உடமை,அவள் ஒரு நுகர்பொருள்.... அவ்வளவுதான்.அப்படித்தான் இந்த கலாச்சாரம் சொல்லிக்கொடுத்திருக்கிறது.இங்கு பெண் தெய்வங்கள் வணங்கப்படுவதும்,
பெண்களின் பெயரால் நதிகளும்,மலைகளும் போற்றபடுவதும் நிஜத்தில் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமைகள் ஏற்படுத்தும் குற்ற உணர்வினால் மட்டுமே தவிர வேறு காரணம் ஏதுமிருக்க முடியாது.

கற்பழிப்பு என்பது கடைந்தெடுக்கப்பட்ட வன்முறையே.இந்தக் கொடுமையை செய்த அந்த இளைஞர்கள் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள என்ன தூண்டியது,எது தைரியம் கொடுத்தது என்பதை யோசிக்கவே இயலவில்லை.
இந்த தேசத்து ஆண்கள் மனதில் பெண்களின் மீது இவ்வளவு வ்ன்மமா?
இதை பாலியல் இச்சை என்று மட்டும் எடுத்துக்கொண்டால் மிகக் குறுகிய வட்டத்துக்குள் சிக்கிக்கொள்வோம்.

எதுவென்றாலும் இந்த தேசம் முழுதும் மாறவேண்டிய தருணம் வந்து விட்டது...மாறுங்கள்,இல்லயென்றால் மாற்றப்படுவீர்கள்.

இத்தனை அவமானத்திலும்,துயரத்திலும் ஆறுதல் வீறு கொண்டு போராடும்
இளைய சமுதாயம். நாளைய வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது...!!!



2. இந்த அரசியல்வாதிகள் பேசி முடித்து சட்ட்ம இயற்றுவதற்கு வருடங்கள் ஆகலாம். சவுதியில் வழங்கப்படும் தண்டனையே (கட்டி வைத்து குற்றவாளிகளின் மேல் கல்லெறிதல்) சிறந்த தண்டனை. அதற்கு பயப்படாதவர்கள் குறைவே. கர்ஜிக்கும் மனித ஆர்வலர்கள் இந்த பெண்ணின் உயிரை கொண்டு வர மாட்டார்கள்.



3. பாலியல் வன்முறை வழக்குகள் டெல்லியில் அதிகம் என்றாலும், உண்மையில் மற்ற மாநிலங்களில் குடும்ப கௌரவத்திற்காக உண்மை வெளியே வந்து விடாமல் மறைத்து விடுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள்..இனிமேல் தைரியமாக சட்ட நடவடிக்கைகளுக்கு முன் வருவார்கள் என்பதுடன், தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலும் தைரியமாக நடந்து கொள்வார்கள் என நம்புவோம்.


நன்றி - விகடன்

டெல்லி ரேப்டு கேர்ள் சாவுக்குக்காரணம் டெல்லி போலீஸ் தான் - பர பரப்பு தகவல்கள்

டெல்லி சம்பவம்: உதவ வராமல் சண்டை போட்ட போலீசார்'

Posted Date : 11:48 (05/01/2013)Last updated : 11:49 (05/01/2013)
புதுடெல்லி: டெல்லியில்  
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி  சாலையில் வீசப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த போலீசார்  உதவ வராமல் அந்த இடம் எந்த காவல் நிலைய எல்லைக்குள் உட்பட்டது என்பது குறித்து  தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக மாணவியின் நண்பர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் மாணவியை இரும்பு  கம்பியால் தாக்கி பலாத்காரம் செய்த கும்பல்,அவரையும், அவருடன் வந்த ஆண்  நண்பரையும் பலமாக தாக்கி சாலையில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்துவிட்ட மாணவி உயிரிழந்துவிட்ட  நிலையில்,அவருடன் வந்த ஆண் நண்பர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை  பெற்று 

இந்நிலையில் சாலையில் ஆடைகளின்றி காயங்களுடன் தானும், மாணவியும் உயிருக்கு  போராடிக் கொண்டிருந்தபோது தங்களுக்கு யாருமே உதவவில்லை என்றும்,போலீசாரும்  உதவ வராமல் காவல் நிலைய எல்லை குறித்து தங்களுக்குள்  சண்டையிட்டுக்கொண்டிருந்ததாகவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள  பேட்டியில் அந்த ஆண் நண்பர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,"அவ்வழியாக காரிலும்,பைக்கிலும்,  ஆட்டோ ரிக்ஷாவிலும் சென்றவர்களை தடுத்து

நிறுத்தி உதவி கேட்க  முயற்சித்தேன்.ஆனால் தங்களது வாகனங்களில் மெதுவாக அருகில் வந்து வேடிக்கை  பார்த்து விட்டு சென்றனரே தவிர,யாருமே உதவவில்லை.இதிலேயே 25 நிமிடங்கள்  கழிந்துவிட்டது.

பின்னர் அந்த வழியாக சென்ற யாரோ ஒருவர் போலீசுக்கு இது குறித்து தகவல்  அளித்தபின்னர்,45 நிமிடங்கள் கழித்து 3 வேன்களில் ரோந்து போலீசார் வந்தனர்.

நாங்கள் ஆடையிலாமல் கிடந்த நிலையில்,போலீசார் உட்பட யாரும் ஒரு சிறிய  துணியை கூட கொடுக்கவில்லை.ஆம்புலன்ஸையும் அழைக்கவில்லை.அவர்கள்  வெறுமனே எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

எங்களுக்கு உதவ முன்வராமல் இந்த வழக்கு எந்த காவல்நிலைய எல்லைக்குள் வரும்  என தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.இதிலேயே 45 நிமிடங்கள்  விரயமாகிவிட்டது.

பின்னர் பலமுறை நான் கேட்டுக்கொண்ட பின்னர் யாரோ ஒருவர் ஒரு போர்வையை  கிழித்துக்கொடுத்தார்.அதனைக்கொண்டு மாணவியின் உடலை நான் மூடினேன். 

பின்னர் நானே எனது தோழியை போலீஸ் வேனில் தூக்கி வைத்தேன். காவல்துறையினர்  அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நீண்டதூரம் பயணித்து சப்தர்ஜங்  மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்" என்று தெரிவித்துள்ளார். 



நன்றி - விகடன் நியூஸ்

Tuesday, December 25, 2012

டெல்லி சி எம் VS போலீஸ் டிபார்ட்மெண்ட் மோதல் , தலைநகரில் பர பரப்பு

டெல்லி சம்பவம்: முதல்வர் ஷீலா தீட்சித் - போலீஸ் இடையே மோதல்!
Posted Date : 16:03 (25/12/2012)Last updated : 16:06 (25/12/2012)
புதுடெல்லி: டெல்லியில் பலாத்காரத்திற்குள்ளான மாணவியிடம், மாஜிஸ்திரேட் வாக்கு மூலம் பெற்றது குறித்த விவகாரத்தில் முதலமைச்சர் ஷீலா தீட்சித்திற்கும்,  காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியிடம் டெல்லி துணை டிவிஷனல் மாஜிஸ்திரேட் உஷா  சதுர்தேவி,அண்மையில் வாக்கு மூலம் பெற்றார்.

அதனை தாம் விடியோவில் பதிவு செய்தபோது, டெல்லி காவல்துறையை சேர்ந்த 3  அதிகாரிகள் அதனை தடுத்ததாகவும்,தாங்கள் தயாரித்து வைத்துள்ள கேள்வி-பதில்  அடங்கிய கேள்வித்தாளை கொடுத்து அதனை வாக்கு மூலமாக பெறுமாறு  வற்புறுத்தியதாகவும், அதனை ஏற்க தாம் மறுத்தபோது, போலீஸ் அதிகாரிகள் தம்மை  மிரட்டி தவறாக நடந்துகொண்ட்தாகவும் மாஜிஸ்திரேட் உஷா சதுர்தேவி புகார்  கூறியிருந்தார். 
இது மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில்,டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்  இது தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார்  ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


ஏற்கனவே மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் வெடித்தபோது,டெல்லி காவல்துறை  மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இச்சம்பவத்திற்கு தாம்  பொறுப்பேற்க முடியாது என்று தீட்சித் கூறியிருந்தார்.


டெல்லி காவல்துறையை மற்ற மாநிலங்களில் உள்ளதுபோன்று,மாநில அரசு பொறுப்பின்  கீழ் ஒப்படைக்க வேண்டும் என்று ஷீலா தீட்சித் நீண்ட காலமாகவே மத்திய அரசை  வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் மாஜிஸ்திரேட்டை தடுத்ததாக, மத்திய உள்துறை அமைச்சருக்கு ஷீலா  தீட்சித் எழுதிய கடிதத்தை ஊடகத்திற்கு கசியவிட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள  டெல்லி காவல்துறை, இதுகுறித்து உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிட  வேண்டும் என கோரியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த காவல்துறை செய்தி  தொடர்பாளர் ராஜன் பஹத், மாஜிஸ்திரேட்டை  போலீஸ் அதிகாரிகள்  மிரட்டவோ,தடுக்கவோ இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் காவல்துறைக்கும், முதலமைச்சர் ஷீலா தீட்சித்திற்கும் இடையே  ஏற்பட்டுள்ள இந்த மோதல் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


thanx - vikatan

Wednesday, March 07, 2012

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் திரிபாதி பேட்டி



http://www.hindu.com/2006/04/11/images/2006041105010301.jpg 

இந்தியாவிலேயே முதன்முதலில் சர்வதேச காவல் சமூக விருதும் சிறந்த காவல் நிர்வாகத்துக்கான தங்கப் பதக்கமும் பெற்ற அதிகாரி என்ற பெருமை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதிக்கு உண்டு. இளம் வயதிலேயே குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் இவர். நேர்மையானவர், கண்டிப்பானவர் என்றெல்லாம் கூறப்பட்டாலும் மனித உரிமைகளுக்குத் துளியும் மதிப்பு அளிக்காதவர் என்ற குற்றச்சாட்டும் உண்டு


 சி.பி - கொள்ளையர்களும், கொலையாளிகளும் மனுஷங்களே கிடையாது.. அவனுங்களை அவனுங்க பாஷைலயே போட்டுத்தள்ளனும்.. அதை விட்டுட்டு வாரா ராசா திருந்துடு.. என் செல்லம் இல்ல?ன்னு கொஞ்சிட்டு இருக்க முடியாது.. பெரும்பாலான குற்றங்கள் போலீஸ் பயம் காரணமாத்தான் நடக்காம இருக்கு..

 தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்தஎன்கவுன்டர் களில் இவருடைய பங்கு கணிசமானது. சென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள் ஐந்து பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விவாதங்களைக் கிளப்பியிருக்கும் நிலையில், திரிபாதி  பேட்டியில் இருந்து...  


''வேளச்சேரி என்கவுன்டருக்கு என்ன தேவை இருந்தது?''



''எல்லா என்கவுன்டர்களுக்கும் என்ன தேவையோ அதே தேவைதான்!''


சி.பி - ஓப்பனிங்க்ல ஃபர்ஸ்ட் பாலே சிக்சர்.. நிருபர் பாவம் ஹா ஹா 

 
''உங்கள் முதல் என்கவுன்டர் எது? இதுவரை எத்தனை என்கவுன்டர்கள் உங்கள் தலைமையில் நடந்திருக்கின்றன?''

சி.பி - அஃபீசியலா? எத்தனை? அன் அஃபீசியலா? எத்தனை?னு கூட கேட்பாங்க போல. எல்லா மேட்டரையும் ஓப்பனா சொல்லிட்டு இருக்க முடியுமா?


''ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். யாரைக் கொல்வதும் எங்கள் நோக்கம் இல்லை. அதற்கு எங்களுக்கு அதிகாரமும் இல்லை. நீங்கள் கேட்பதைப் பார்த்தால், இதையே நான் வேலையாக வைத்துக்கொண்டு அலைவதுபோல் அல்லவா இருக்கிறது? ஆபத்தான சூழலில், தவிர்க்கவே முடியாத சூழலில்தான் துப்பாக்கியை எடுக்கிறோம். ப்ளீஸ்... நம்புங்கள்!''

சி.பி - என்கவுண்ட்டர் டிபார்ட்மெண்ட்னு தனியா ஒண்ணு ஆரம்பிக்கலாம், தப்பே இல்லை 

http://www.hindu.com/2009/08/05/images/2009080560190401.jpg




''என்கவுன்டர்களுக்குச் செல்லும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?'

சி.பி - இன்னைக்கு எத்தனை ஆடு சிக்கப்போகுதோ.. இந்த பிரஸ்காரங்களுக்கு என்ன பதில் சொல்லி சமாளிக்கனுமோன்னு தான் வேறென்ன?

 


(சிரிக்கிறார்... பின் ஆழமான பார்வையோடு...) ''போகும்போது என்கவுன்டருக்காகச் செல் கிறோம் என்றே தெரியாதே?''


சி.பி - ஆனா எனக்கென்ன தோணுதுன்னா எல்லாம் ஆல்ரெடி பிலான் பண்ணி மேலிடத்துக்கு தகவல் சொல்லி அப்ரூவல் வாங்கித்தான் பண்றாங்க போல.. 

 
''சரி, என்கவுன்டர் முடிந்து வரும்போது..?''


''ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கும். ஏனென்றால், செத்தவர்களுக்கும் - அவர்கள் எவ்வளவு பெரிய கொடியவர்களாக இருந்தாலும் - ஒரு குடும்பம், உறவினர்கள் எல்லோரும் இருப்பார்கள் இல்லையா?''

 சி.பி -திருடனோ,கொள்ளைக்காரனோ சம்பாதிக்கற பணத்தை வீட்டுக்கு தரும்போது அதை அனுபவிக்க எந்த அலவு அந்த குடும்பத்துக்கு உரிமை இருக்கோ அதே அளவு அவன் சுடப்பட்ட பிறகு அதுக்கான பின் விளைவுகளுக்கும் தயாரா இருக்கனும்..

''உங்களுக்குக் குடும்பம் இருக்கிறதா?''


''ம்... ஆனால், இந்தப் பேட்டி என் வேலை சார்ந்தது மட்டும்தான் இல்லையா? நான் இங்கு குடும்பத்தைப் பற்றிப் பேச விரும்பவில்லை!''

சி.பி - அதுவும் சரிதான்.. போலீஸ்காரங்க ஃபேமிலி மேட்டர் வெளீயே தெரிஞ்சா சினிமால வர்ற மாதிரி லாக் பண்ணி கார்னர் பண்ணுவாங்க 




''உங்களுக்குப் பாவ - புண்ணியங்களில் நம்பிக்கை உண்டா?''

சி.பி - கொள்ளைக்காரங்க, கொலைகாரங்க பண்றதெல்லாம் பாவம்.. அந்த மாதிரி சமூக விரோதிகளை போட்டுத்தள்ளறது புண்ணியம்..

 
''நான் ஒரு போலீஸ். வேலை என்று வந்துவிட்டால் சாதி, மதம், கடவுள்... இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் எனக்குக் கிடையாது!''

 http://liveindia.tv/wp-content/uploads/2011/06/images/17VBG_POLICE_660338f.jpg

''சரி, வேலைக்கு அப்பாற்பட்டு... ஒரு தனிப்பட்ட மனிதனாக?''


''அப்படிப் பார்த்தாலும், என் கையில் எதுவும் இல்லை. (மேலே கையைக் காட்டி) அவனுக்கு முன் நாமெல்லாம் யார்? அவன்தான் எல்லா வற்றையும் செய்கிறான் என்று நினைத்துக்கொள்வேன்!''


சி.பி - இவர் ஏ ஆர் ரஹ்மான், அல்லது ரஜினியின் ரசிகரா இருப்பார் போல.. ஆண்டவரை கை காட்டறாரு.. நாட்டை ஆள்பவரை பற்றி ஒண்ணூம் சொல்லலை. 

 
''போலி என்கவுன்டர்களை நடத்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''


சி.பி - 10 என்கவுண்ட்டர் நடந்தா அதுல ஒண்ணுஅப்படி ஆகிடுதுன்னு சொல்றாங்க..  அவங்கவங்க தனிப்பட்ட விரோதிகளை தீர்த்துக்கட்ட இதை பயன் படுத்திக்கறதா பேசிக்கறாங்க..   




''யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அவ்வளவுதான். ஒரு என்கவுன்டர் நடந்தால் யாரையும் யாரும் சும்மா விட்டுவிடுவது இல்லையே? மனித உரிமை ஆணையம், விசாரணை எல்லாம் இருக்கிறது. தவறு செய்துஇருந்தால் தண்டனை கொடுங்கள். அவ்வளவு தான். நாம் பேட்டியை முடித்துக்கொள்ளலாம்!''

Friday, December 09, 2011

போலீஸ் போலீஸ் போலீஸ் போலீஸ் போலீஸ் (5)

நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த கற்பை திரும்பப் பெற முடியாது எனக் கூறிய சென்னை ஐகோர்ட், சாதாரண மக்களுக்கு பொருந்தக் கூடிய சட்டத்தை, போலீசாருக்கு மட்டும் ஏன் அமல்படுத்தவில்லை என, கேள்வி எழுப்பியுள்ளது.


சி.பி - போலீஸ்னா மாமூல் தான் வாங்குவாங்க, இப்போ ரேப் பண்றதையும் ஆரம்பிச்சுட்டாங்க போல.. 


பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த நான்கு பெண்களை, யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக, திருக்கோவிலூர் போலீசார் மீது குற்றம் சாட்டப்பட்டது. 


சி.பி -பழங்குடி, ஆதி திராவிடர்கள்னாலே இவனுங்களுக்கெல்லாம் கேவலமா போயிடுது.. 



கடந்த மாதம் 22ம் தேதி நள்ளிரவில், இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.



சி.பி - நல்ல வேளை, எஸ் பி யாவது நல்லவரா இருந்திருக்காரு


இச்சம்பவம் தொடர்பாக, ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நான்கு பெண்களுக்கும், தலா ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, தமிழக அரசும் உத்தரவிட்டது.

சி.பி - ரேப் கேஸ்க்கு 10 வருஷமாவது தீட்டனும்,இது ரேட் ஆகிடும், அப்புறம் ஆளாளுக்கு பணம் இருக்குங்கற தைரியத்துல விளையாட ஆரம்பிச்சுடுவாங்க.. 


"இரவு நேரத்தில், பெண்களை போலீசார் அழைத்துச் சென்றது தவறு; பாலியல் பலாத்காரம் செய்த போலீசார் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை; இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்' எனக் கோரி, வழக்கறிஞர் புகழேந்தி மனு தாக்கல் செய்தார். 


 சி.பி - நைட்லதான் மப்புல இருந்திருக்கும் நாய்ங்க..


இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், கடந்த மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வந்தது. சம்பவம் தொடர்பாக, நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என, அட்வகேட்-ஜெனரல் தெரிவித்தார். 

 சி.பி - ஒரு வருஷம் சஸ்பெண்ட் பண்ணுனா ஆச்சா? டிஸ்மிஸ் செஞ்சாத்தானே மற்றவங்களூக்கு ஒரு பயம் இருக்கும்?


இதையடுத்து, நான்கு பெண்களையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசார் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கக் கூடாது எனவும், ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.


சி.பி - வேற மாவட்டத்துக்குப்போய் இதே வேலையைத்தான் அங்கேயும் செய்வானுங்க, கட் பண்ணி விட்டுடனும் நந்தா படத்துல வர்ற மாதிரி.. 

விழுப்புரம் எஸ்.பி., தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: ஒரு கிரிமினல் வழக்கில் புலன் விசாரணை செய்வதற்காக இன்ஸ்பெக்டர் சீனிவாசன், கான்ஸ்டபிள்கள் கார்த்திகேயன், பக்தவத்சலம் ஆகியோர் ஜீப்பில், இரவு 8 மணிக்கு டி.மண்டபம் என்ற இடத்துக்குச் சென்றுள்ளனர்.

 சி.பி - இவனுங்களே பக்கா கிரிமினல்ஸ்.. இந்த லட்சணத்துல கிரிமினல் கேஸை விசாரிக்க இவனுங்களை அனுப்பி?

இருளர் சமூகத்தைச் சேர்ந்த காசி, வெள்ளிக்கண்ணு உள்ளிட்ட சிலரை தேடியுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க முடியாததால், ஐந்து பெண்கள், மூன்று சிறுவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, மானம்பூண்டி பை-பாஸ் வரை சென்றுள்ளனர்.

சி.பி - போலீஸ்க்கு இதே பொழப்புதான்.. கைது செய்ய வேண்டிய ஆளுங்களை தப்பிக்க விட்டுட வேண்டியது.. அப்புறம் அவங்க வீட்ல இருக்கற அப்பாவி பெண்களை மானபங்கப்படுத்தவேண்டியது, இதுக்கு சரியான தண்டனை என்னான்னா  அவனுங்க மனைவி அல்லது மகளை அவன் கண் முன்னால தான் என்ன செஞ்சோம்கறதை ஒப்புதல் வாக்குமூலம் தரச்சொல்லி, பாதிக்கப்பட்டவங்க கால்ல விழ வெச்சு, கழுதை மேல உக்கார வெச்சு நகர் வலவ் வர வைக்கனும்

சீனிவாசனுக்கு தலைமை கான்ஸ்டபிள் தனசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் உதவியதாகத் தெரிகிறது. புலன் விசாரணைக்குப் பின், அனைவரும் பகல் இரண்டு மணிக்கு வீட்டில் விடப்பட்டனர். சம்பவம் தொடர்பாக ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

 சி.பி - துறை நடவடிக்கைன்னாலே ட்ரான்ஸ்ஃபர்னு அர்த்தம், இங்கே செஞ்ச அதே கேடு கெட்ட வேலையை அங்கே போய் செய்வானுங்க./.


இவ்வழக்கு நேற்று, "முதல் பெஞ்ச்' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அரசு தரப்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியன் ஆஜராகினர். வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "இரவு நேரத்தில் பெண்களை அழைத்துச் சென்றதை போலீசார் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை' என்றார்.


சி.பி - மாலை 6 மணீக்கு மேல லாக்கப்ல பெண்களை வெச்சிருக்கக்கூடாதுன்னு விதி இருக்கே? அப்புறம் என்ன இதுக்கோசரம் அதை மீறினாங்க?




அதற்கு அரசு தரப்பில், "போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது' என தெரிவிக்கப்பட்டது. உடனே நீதிபதிகள், "இரவு நேரத்தில் பெண்களை அழைத்துச் சென்றுள்ளனர். உடன், எந்த பெண் போலீசாரும் இல்லை. இது விதிமுறை மீறல் இல்லையா? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சாதாரண மனிதர்களுக்கு ஒரு சட்டம், போலீசாருக்கு ஒரு சட்டமா? கைது செய்யுமாறு ஏன் உத்தரவிடக் கூடாது?' என கேள்விகள் எழுப்பினர். இதையடுத்து, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், "நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த கற்பை பெற முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறப்பட்டது.



சி.பி - நஷ்ட ஈடுங்கற பேச்சே இருக்காக்கூடாது.. அப்புறம் ஆளாளுக்கு  கைல பணத்தை வெச்சுக்கிட்டு அட்டூழியம் பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க..   அட்லீஸ்ட் 10 வருஷமாவது தீட்டனும்..


சாதாரண நபருக்கான சட்டம் போலீசாருக்கு பொருந்தாதா: "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: போலீஸ் வாகனத்தில், பழங்குடியின பெண்கள் ஐந்து பேர் மற்றும் மூன்று சிறுவர்கள், இரவு 8 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். போலீசார் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஒரு பெண் புகார் அளித்துள்ளார். கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட பின், குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என, நாங்கள் கேட்டோம். அதற்கு, அரசு குற்றவியல் வழக்கறிஞர், "விசாரணையின் போது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல், அவர்களை கைது செய்ய முடியாது' என்றார்.


சி.பி - ஆமா, நீங்க எல்லாம் கிழிக்கறதுக்குள்ள அவங்க எங்கயாவது எஸ் ஆகிடுவானுங்க.. 



அரசு குற்றவியல் வழக்கறிஞரின் வாதத்தை, எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு பற்றி, ஒருவரது பெயரை குறிப்பிட்டு போலீசில் ஒரு பெண் புகார் அளித்தால், அந்த நபரை உடனடியாக கைது செய்ய, போலீசார் தயக்கம் காட்ட மாட்டார்கள். அப்படியிருக்கும் போது, சாதாரண நபருக்கு பொருந்தக் கூடிய சட்டத்தை, போலீஸ் அதிகாரிகளுக்கு ஏன் அமல்படுத்தவில்லை?

சி.பி - சட்டம்னா எல்லாருக்கும் பொதுதான், அதில் இவனுங்களுக்கு மட்டும் என்ன விதி விலக்கு ?



அரசு இந்த விஷயத்தை கடுமையாக கருதுகிறது என்றும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கியதாகவும், அட்வகேட்-ஜெனரல் குறிப்பிட்டார். நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த கற்பை பெற முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு வாரங்களுக்குள் விசாரணை முடிந்து விடும் என, அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே, மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்க, இந்த வழக்கு நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. புலன் விசாரணை திருப்திகரமாக இல்லை என்றால், தகுந்த உத்தரவை இந்த கோர்ட் பிறப்பிக்கும். இவ்வாறு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


சி.பி - இன்னிம் ஒரு  மாசம் போச்சுன்னா இதை அப்படியே மூடி மறைச்சுடுவானுங்க பாருங்க..  அப்புறம் அடுத்து வேற ஏதாவது பரபரப்பு வரும்.. அதை பிடிச்சுக்குவாங்க , இதை விட்டுடுவாங்க.. 


Tuesday, February 22, 2011

சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?

http://www.cinemaexpress.com/Images/article/2010/3/17/15suntv.jpg 
எனது சொந்த ஊரான சென்னிமலையில் ஊரின் செண்ட்டரான இடமான வண்டிப்பேட்டை பஸ் ஸ்டாப்பில் குமரன் சிலை எதிரே கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஃபேன்சி ஸ்டோர்  & ஜவுளிக்கடை வைத்திருப்பவர் ஆறுமுகம் என்பவர்.ஆறுமுகம் கடை என்றால் ஊரில் தெரியாத ஆள் இல்லை. அந்தளவு ஃபேமஸ்.

இவரது மகன் நாகராஜன்.இவரது மகள் சங்கீதா. இவர் எம் எஸ் சி விசுவல் கம்யூனிகேஷன்  ( VISUAL  COMMUNICATION)படித்து சென்னையில் சன் டி வியில் நிருபராக வேலை பார்த்து வந்தார்.19.2.2011 சனி அன்று இவர் ரயிலில் அடிபட்டு மரணம் அடைந்ததாக 21.2.2011 தேதி இட்ட தினத்தந்தி நாளிதழில் படித்து அதிர்ச்சி அடைந்தேன்.( 2-ம் பக்கம்).

நான் விசாரித்த தகவல் மற்றும் எனது சந்தேகங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

1. சன் டி வி-யின்  ஐ டி கார்டு  TAG எப்போதும் இவர் அணிந்திருப்பார்,அல்லது இவரது கைப்பையில் அது இருக்கும்.விபத்து இரவு 7 மணிக்கு  நடந்ததாக கூறப்படுகிறது.ரயில்வே போலீஸ் இவரது ஹேண்ட்பேக்கை பார்த்து அவரது அட்ரஸ்,வேலை பார்க்கும் நிறுவனம் என எங்கேயும் தகவல் சொல்லாமல் விட்டது ஏன்? இரவு 10 மணிக்கு அவரது அறைத்தோழிகள் விசாரித்த பிறகே செய்தி அவர்களுக்கு தெரிந்திருக்கிரது.

2. போலீஸ்-இன் F I R  காப்பியில் (FIRST INFORMATION REPORT) விபத்தைப்பார்த்த ஆட்களின் சாட்சியம் பதிவு செய்யப்படவில்லை,ரயில்வே ஊழியர் ஒருவரின் கூற்றுப்படி செல் ஃபோனில் பேசியபடி வந்ததாகவும்,அது ரயில்வே டிராக்கில் விழுந்திருக்கலாம் எனவும்,அதை எடுக்க இவர் முயலும்போது அனந்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாகவும் தெரிகிறது.ஆனால் எல்லாம் ஒரு அனுமானமே (ASSUMPTION). ஏன் ரயில் நிலையத்தில் உள்ள பொது மக்களிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கவில்லை?

3. சாதாரணமாக ஒரு யானை இறந்தாலே புகைப்படம் போடும் பத்திரிக்கைகளில் இந்த விபத்தில் ஏன் டெட் பாடியை ரயில்வே டிராக்கில் இருப்பது போல் காட்டவில்லை.?

4. செய்தியில் தனியார் தொலைக்காட்சி என்றுதான் போட்டு இருக்கிறார்கள். சன் டி வி பெயரை இருட்டடிப்பு செய்தது ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiosT4fVGQzPnf7fhTWql-m9Mh3NPp21jkFmEsWTjlMcF7kyOQvy7DJx0xtge1M952v1IhbY0eiSLfBGQfGZZSeJfq0Xu_WlTxY28Ri4MN0ARch3tPxvDH1dBYUf_Te3duLxazewqypLyYV/s1600/Train.jpg
5. கடைசியாக அவர் யாருடன் செல் ஃபோனில் பேசினார் என்பதை போலீஸ் ஏன் ட்ரேஸ் அவுட் செய்யவில்லை?

6. சங்கீதாவுக்கு வரும் மார்ச் மாதம் 7-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.அவர் மன ஒப்புதலுடனே இந்த மேரேஜ் நடக்கிறது என்பதற்கு ஆதாரம் உள்ளது.( கல்யாணப்பத்திரிக்கைகளை நண்பர்களுக்கு கொடுத்திருக்கிறார்,வருங்கால கணவருடன் ஃபோனில் அடிக்கடி பேசி இருக்கிறார்). எனவே தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை.

7. மாதம் ரூ 30,000 சம்பளம் வாங்கும் இவர் ஏன் ரயிலில் பிரயாணம் செய்து ஆஃபீசுக்கு போறார்?பத்திரிக்கை செய்தியில் ஸ்கூட்டி வைத்திருப்பதாகவும் அவர் குடி இருக்கும் காவேரி நகரில் இருந்து சைதாப்பேட்டை வரை ஸ்கூட்டியில் போய் அங்கே வண்டியை பாஸ் போட்டு நிறுத்தி விட்டு ரயிலில் ஆஃபீசுக்கு போவார் என கூறுகிறார்கள்.இது பற்றி போலீஸ் ஏன் எதுவும் விசாரிக்கவில்லை?

8. பத்திரிக்கை செய்தியில் தனியார் டி வி சப் - எடிட்டர் மரணம் என உள்ளது.ஆனால் அதே பேப்பரில் இரங்கல் செய்தியில் அவர் நிருபர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எங்கும் சன் டி வி பெயர் இல்லை. இந்த முரண்பாடு ஏன்?நிருபர் என போடும்படி நிர்ப்பந்தம் ஏதாவது நடந்ததா?