Showing posts with label PARVADHI. Show all posts
Showing posts with label PARVADHI. Show all posts

Friday, July 19, 2013

மரியான் - சினிமா விமர்சனம்



ஹீரோ   சரக்கு  அடிக்கும்  நல்ல (!?) மீனவர். இவர் அதே ஊரில் மீனவரொருவரின் மகளை லவ்வறார். அவருக்கு   ஊருக்குள்ளே கடன். சொந்த அம்மா அப்பா கடன்  வாங்குனாக்கூட தமிழன் அதைப்பத்திகவலைப்பட  மாட்டான். ஆனா காதலிக்கு கடன்னா? துடிச்சுடுவான். 


 வில்லன்  கொடுத்த  பணத்தை  கரெக்ட் பண்ண ஹீரோயினை   மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படறான் . ( மேரேஜ் பண்ணிட்டா அவன் என்ன வில்லன் ? ) ஆனா  ஹீரோ விடலை .  2 வருஷ காண்ட்ராக்ட்ல   ஃபாரீன் போறார்.  திரும்பி வரும்போது   2 ஜி யை  அடிச்ச ஆ ராசாகுரூப்பை  விட பயங்கர கொள்ளைக்காரங்க கிட்டே  மாட்டிக்கறார். அப்புறம் என்ன ஆச்சு? இதுதான் மரியான் .


சும்மா சொல்லக்கூடாது , கமல் , விக்ரம்க்குப்பிறகு நடிப்புக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும்  ஹீரோக்கள் லிஸ்ட்ல்  தனுஷ்  சர்வசாதாரணமா  சைன்  பண்ணிட்டார் .  பிரமாதமான நடிப்பு . ஆங்காங்கே  கமல் ( நாயகன் ) ரஜினி ( தளபதி )  சாயல்  இருந்தாலும் சந்தேகமே இல்லாம தனுஷ்க்கு இது ஒரு மைல் கல் படம் தான் . வெல்டன் சார் 




ஹீரோயின் பூ பட நாயகி பார்வதி . தமிழ் சினிமா   உலகம் வெட்கப்படும் அளவுக்கு பிரமாதமான நடிப்பு   இவருடையது.  திறமையை மட்டும் காட்டிட்டு இருந்தா தமிழன் ஒத்துக்க மாட்டான்னு பூ படம் கத்துக்குடுத்த பாடத்தை மறக்காம   ஒளிப்பதிவாளர்  உதவியுடன்    தாவணி  இல்லாம வெறும் ஜாக்கெட் மட்டும் போட்டு   லோ ஆங்கிள் ஷாட்ஸ் மட்டும் 45இடங்கள் ல  வர்ற மாதிரி செம காட்டு காட்டி இருக்கார் .  முழு நிலா மாதிரி முகம் இருக்கும் பார்வதி   பிறை நிலாக்கள்  தெரிய ஓடி வரும் காட்சிகள் காம்ப்ளான்


கவிதாயினி குட்டி ரேவதி  படத்துக்கு  சீனியர்  அசோசியேட் டைரக்டர்  ஜாப் . டைட்டில் ல அவர் பேரைப்பார்த்ததும்  பெண்ணிய காட்சிகள் வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா  ஹீரோ   ஹீரோயினை  தேவையே இல்லாம இடுப்புல ஓங்கி உதைக்கும்  பழம் பஞ்சாங்க காட்சி தான் வருது . காம்ப்ரமைஸ்? 


முக்கியமான ஆள் ஏ ஆர் ரஹ்மான் . 2 பாட்டு சூப்பர் ஹிட்டு .  பி ஜி எம் ல உழைப்பு பத்தாது ( இளையராஜா  மாதிரி ஃபேமஸ் ஆகனும்னா  பி ஜி எம் ல சைன் பண்ணனும்-இது எல்லா இசை அமைப்பாளருக்கும் பொருந்தும் ) படம்  பாலைவனத்துல பயணம் செய்யும்போது    பின்னணி இசைல கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கார். ஒளிப்பதிவு பக்கா,. கடல் அடியில்  காமரா வெச்சு எடுக்கப்பட்ட காட்சிகள் அழகு . 


இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள்



1.  ஏ ஆர் ரஹ்மானை புக் பண்ணி படத்துக்கு சர்வதேச மார்க்கெட்டை பிடிச்சது . ராஞ்சனா ஹிந்தில ஹிட் ஆன பின் சாமார்த்தியமா   இப்போ ரிலீஸ் பண்ணியது . 



2.   போஸ்டர்  டிசைன்ல  நல்ல லவ் ஸ்டோரி மாதிரி பில்டப் கொடுத்தது .  பார்வதியை   முழுக்க முழுக்க  கிளாமராவும் , கேரக்டர்வைஸும் நல்லாஆஆ யூஸ் பண்ணிக்கிட்டது



3. பின் பாதியில்   படம் ரொம்ப ட்ரை ( dry )  தெரிந்தும் தைரியமாய்    படத்தை   ரியலிஸ்ட்டிக்காய் எடுத்தது


4.   பாலை வனத்தில்  ஹீரோ புல் சாப்பிடும் காட்சி . 2 புலிகளிடம் மாட்டிக்கொள்ளும் லைஃப் ஆஃப் பை உல்டா காட்சி  . தியேட்டரில்; செம ரெஸ்பான்ஸ் 


5.  நமீபியா  , சூடான் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியது


 இயக்குநரிடம் சில கேள்விகள்  



1. மீனவரா வரும் ஹீரோ படகில் கடல் ல போறார். இன்னொரு படகு அருகில் வந்ததும் கிட்டே போய் தீப்பெட்டி வாங்கிட்டா மேட்டர் ஓவர் . அவர்   உடனே  கடல்ல  டைவ் அடிச்சு    நீந்தி அந்த படகு கிட்டே போய் தீப்பெட்டி வாங்கி வாய்க்குள்ளே அடக்கிட்டு   கடப்பாறை நீச்சல் அடிச்சு இந்த படகு வந்து ஏறுவது தான் ஹீரோயிசமா? செம காமெடி பாஸ். சிரி சிரினு சிரிக்கறாங்க .. படு கேவலமான ஹீரோயிச மேக்கிங்க்



2. வில்லன்  ஹீரோ கிட்டே ஃபோனை கொடுத்து கம்பெனில பேசி பணம்கேளு அப்டிங்கறார் . ஹீரோ டக்னுஹீரோயினுக்கு  ஃபோனைப்போட்டு  கடலை போட்டுட்டு இருக்கார் கட்டதுரை மாதிரி.  வில்லன் பே -னு பார்த்துட்டு இருக்கான் . பெண் குரல் எதிர் முனைல இருந்து கேட்காம போகுமா?  ( மொழி தான் புரியாது ,  பாவனை கூட தெரியாதா? )  அதைவிடக்காமெடி வில்லன் அவன் வீட்டு ஃபோனைஎதுக்கு  டமால்னு உடைக்கனும்? 


3. பணயக்கைதியா   3 பேரை  பிடிச்சு வெச்சவங்க  எதுக்கு  ஹீரோ வைக்  கொல்லாம    இன்னொரு ஆளை டக்னு கொல்றாங்க ? ஆளுங்க இருக்கற வரை அவங்களுக்கு லாபம் தானே?  ( அதிக பணயத்தொகை கேட்கலாம்)


4. இடைவேளைக்குப்பின்   அந்த நீக்ரோ பசங்க ஏன் லூசுங்கமாதிரிவானத்துல  துப்பாக்கியால  சுட்டுட்டே இருக்காங்க ? விலை வாசி எப்படி ஏறிக்கிடக்கு>? கொஞ்சம்   கூட பொறுப்பே   இல்லாம வேஸ்ட் பண்ணுவாங்களா?


5. ஹீரோ ஹீரோயினை லவ் பண்றார். ஆனா அதை வெளிக்காட்டிக்கலை . ஹீரோயின்  ஹீரோவைப்பார்க்க வரும்போது   ஹீரோவோட நண்பர் செத்திருக்கார் . ஹீரோயின்   வானு கூப்ட்டது ஒரு குத்தமாய்யா? வில்லனை விட கேவலமா   ஹீரோ தான்  உயிராய்  காதலிக்கும் காதலியை இடுப்புலஓங்கி  உதைக்கிறார்  . படு கேவலமான   ஆணாதிக்ககாட்சி மட்டுமல்ல . லாஜிக் மீறல் . பொண்டாட்டியை புருஷன் அடிப்பான் . ஆனா  காதலியை   காதலன்  அப்டி உதைக்க மாட்டான் 


6.   படத்தின்    திரைக்கதைக்கு தேவையே இல்லாமல்   ஹீரோ எதுக்கு தண்ணி அடிச்சுட்டே , தம் அடிச்சுட்டே  இருக்காரு ?  இதுதான் சாக்குன்னு தயாரிப்பாளர் செலவுல  சரக்கா?




7. பாலை வனத்துல பசி உள்ள   இரு புலிகளுக்கு நடுவில்   ஒரு ஆள் மாட்டினா   முதல்ல புலி ஆளை அடிச்சு கொன்னுடும். அதுக்குப்பின் தான்   அந்த 2 புலிகளும் தங்களுக்குள்ளே அடிச்சுக்கும் . ஆனா ஹீரோ வை புலிங்க கண்டுக்காம   அதுங்க 2ம் முறைச்சுக்கிட்டு  இருக்கு



8.  வில்லன்   ஹீரோயின்  கோயிலுக்குப்போய்  இருக்கும்போது ஹீரோயின்  செருப்பை தடவிப்பார்க்கறான் . அட பரதேசி . நீ லட்சக்கணக்குல ஹீரோயின் அப்பாவுக்கு கடன் கொடுத்திருக்கே . ரவுடி . டைரக்ட்டா  ஹீரோயினையே   பலவந்தமா தடவலாமே? கேவலம் அவ செருப்பை தடவி ஆம்பளைங்களையே அவமானப்படுத்திட்டியே?  மனசுக்குள்ளே   ராவணன் -னு நினைப்பா? 


9. வில்லன் ஹீரோயின்  செப்பலை காலால தடவிட்டு இருக்கும்போது 1 கிமீ தூரத்துல இருக்கும்   ஹீரோவுக்கு வில்லன் தன் காதலியோட செப்பலைத்தான் தடவறான்னு எப்படித்தெரியுது? பைனாகுலர் வெச்சிப்பார்த்தாரா?


10.  கதைப்படி   ஹீரோ  உள்ளூரில் இருந்து வெளியூரில் வந்து வேலைக்காக அல்லது  வேலையில்  சேர்ந்து  என்ன  கஷ்டம் எல்லாம் அனுபவிக்கறார் என்பதை  டீடெய்லாக சொல்லனும் . அப்போத்தான் பரிதாபம் வரும் .  ஆனா   அந்த எப்பிசோடே இல்லை படத்துல . திரைக்கதையின் பெரிய பலவீனம் அதுதான்


11 . ஹீரோவின் அம்மா , ஹீரோயின் பேசும்  மாமியார் மருமக சண்டை வ்சனங்கள்  மண் வாசனை காந்தி மதி  டூ ரேவதி , சின்னக்கவுண்டர்   மனோரமா டூ சுகன்யா வசனங்களின் அப்பட்டக்காப்பி . # ஏம்மா தேவிப்ரியா நோட்  இட்


12.   அப்புக்குட்டி , இமான்  இருவரும்  வீணடிக்கப்பட்டிருப்பது ஏனோ?


13. வில்லன் எப்பவும் பாலை வனத்திலேயேஇருப்பவன் . ஹீரோ  கடல் வாசி . ஆனா ஹீரோ வில்லனை சர்வசாதாரணமா  அடிச்சு ஜெயிப்பது எப்படி ?


14. ஹீரோ  சுறா மீன் ,திமிங்கிலம் வகையறா மீன்களை பிடிப்பதில் கில்லாடி . அப்படி வாரம் 2 மீன் பிடிச்சா செம காசு வருமே? எதுக்கு பிஸ்கோத்த்து 2 லட்சம் ரூபாய்க்காக அடிமையா சூடான் போகனும்?


15.  ஏ ஆர் ஆர் வழக்கமா வம்பு தும்புக்கு போகாதவர் , ஆனா பாடல் வரிகளில்   என்ன ஆச்சுராசா உனக்கு?  நான் தான் கடல் ராசா என இளைய ராஜாவை வம்புக்கு இழுக்கும் வரிகள் எதுக்கு?


மனம் கவர்ந்த வசனங்கள் 


1. ஆம்பளையோட வீராப்பெல்லாம் பொம்பளை மூச்சுக்காத்து படற வரைக்கும் தான்.பட்டுட்டா அவன் கோலிசோடா தான்



2. யாரையாவது பிடிச்சிருந்தா ஒண்ணா குத்தகைக்கு எடுக்கனும்.இல்ல கொள்முதல் பண்ணிடனும். பம்மிட்டு இருக்கப்படாது



3. கடலும் பொண்ணும் ஒண்ணு.எத்தனை தடவை பார்த்தாலும் புதுசுதாம்லே


4.  ஹீரோயின் - உன் கண்ணுல என்னை நான் பார்த்துட்டேன்யா.மறைக்காத # நீ தாம்மா மறைக்காம ஓப்பனா இருக்கே.அவர் சர்ட் போட்டிருக்காரு



5. யோவ்.என்னை பிடிக்காதுன்னே.ஆனா என்னையவே பார்த்துட்டு இருந்தே? உன் கூட இருந்தவளையும் தான் பார்த்தேன்.அதுக்கு ?


6. தீக்குச்சி தீப்பெட்டிலயே இருந்தா எப்டி பத்திக்கிம்? உரசனும்.போ.அவனை உரசு # அடேங்கப்பா கண்டுபிடிப்பு அடேய் -))



7. ஹீரோ பஞ்ச் - மரியான் பிடிக்காத வேலையை செய்ய மாட்டான்.பிடிச்ச வேலையை செய்யாம விடமாட்டான் # தியேட்டரை விட்டு வெளியே போக விடமாட்டான் ( ஹீரோ ஃபிரண்ட் பேசும் வசனம்)


8. எங்காளுக்குப்போட்டியா ஷாருக்கான் ரா ஒன் எடுத்தாரு.ஊத்திக்கிச்சுல்ல? # மாப் ளை சப்போர்ட்டிங் டூ மாமா


9.   எல்லாரும்  நம்மை  மாதிரி மனுஷங்க  தானே?   புது ஊர்னாலும்  பழகிடும்


10 மரியான்னா   சாவே இல்லாதவன்னு அர்த்தம்  # சாகடிக்கப்போறான்னு அர்த்தம் இல்லையா? ஹி ஹி


11. சாதனை பண்றவனுக்கு பொம்பளை வாசனை பட்டுகிட்டே இருக்கணும்




படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட்ஸ் 


1. ஏ ஆர் ஆர் க்கு பாடலில் வரும் ஹம்மிங்னா செம கொண்டாட்டம் போல


2. அய்யய்யோ.தனுஷ்க்கு பார்வதி வலியனாப்போய் லிப் கிஸ் தருது.தடுக்க முடியல :-(


3. ஆஹா.தனுஷ் கமல் மாதிரி ரஜினி மாதிரி எல்லாம் ட்ரை பண்றாரே


4. இடைவேளை விட்டாச்சு.ஆனா வெளில விடமாட்டாங்களாம் # மாட்டிக்கிட்டாங்க ஜனங்க.இது வரை படம் சுமாரு தான் குமாரு


5.  பம்பாய் பி ஜி எம் மை மரியான் ல எ ஆர் ஆர் சுட்டுட்டாரு.தேவிப்ரியாவுக்கு போன் போடேய்





ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  40

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் =  3  / 5


சி பி கமெண்ட் - - ஹீரோ ஹீரோயினுக்கு விருது நிச்சயம்.ஸெம ஆக்டிங் - ஆனா படம் அட்டர் பிளாப் - தனுஷ்  ரசிகர்கள் பார்க்கலாம் . பார்வதியை மேலோட்டமா ரசிக்க நினைப்பவர்கள் பார்க்கலாம் . மற்றவர்கள் டி வி யில் போட்டபின் பார்க்க. ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்