Showing posts with label LUDO ( HINDI) –சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி க்ரைம் த்ரில்லர் ). Show all posts
Showing posts with label LUDO ( HINDI) –சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி க்ரைம் த்ரில்லர் ). Show all posts

Saturday, November 21, 2020

LUDO ( HINDI) –சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி க்ரைம் த்ரில்லர் )

 


LUDO ( HINDI) –சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி க்ரைம் த்ரில்லர் )

6 சிறுகதைகள் தனித்தனியாக சொல்லப்படாமல் கலந்து கட்டி சொல்லப்பட்டு ஒரே நேர்கோட்டில் ஐந்து கதைகளையும் இணைக்கும் திரைக்கதைதான் இந்த லூடோ . நெட் ஃபிளிக்சில் கிடைக்கிறது .ஹிந்தி , தெலுங்கு , தமிழ் என 3 மொழிகளில் கிடைக்குது
சம்பவம் 1 ஹீரோ ஒரு ரவுடி . பாஸ் சொல்லும் அடிதடி வேலைகளை எஸ் பாஸ்னு செஞ்சுட்டு வர்ற ஆள். ஒரு கட்டத்துல ஒரு கேஸ்ல மாட்டி 6 வருசம் ஜெயில் தண்டனை அனுபவிச்ட்டு வெளில வந்து பார்த்தா ஹீரோவோட சம்சாரம் வேற ஒரு ஆள் கூட குடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்காப்டி, அது கூட பரவால்லை , குழந்தைங்க கிட்டே அப்பா யார் என்கிற உண்மையை மறைச்சு தன் புது ஜோடியை அப்பாவா காட்டிடுது, ஏன்னா அப்பா ஜெயில் கைதின்னா கேவலம் அது போக தன் வண்டவாளம் தெரிஞ்சிடும்
ஹீரோவோட பாஸ் ஹீரோவோட சம்சாரத்தோட புது புருசனை கடத்திட்டுப்ப்போய் மிரட்றாப்டி. தன்னிடம் பழையபடி வேலைக்கு வரனும், இல்லைன்னா ஹீரோவோட சம்சாரத்தோட புது புருசனை போட்டுத்தள்ளிடுவேன்கறான்.அதுக்கும் மசியலைன்னா அடுத்த கட்டமா ஹீரோவோட சம்சாரம், குழந்தைகளையும் கடத்திடுவேன்னு மிரட்றாப்டி .ஹீரோ பாஸ்க்கு அடி பணிஞ்சாரா? என்ன செஞ்சார் என்பதை மிச்சக்கதை
சம்பவம் 2 இது வேற கதை . இந்தக்கதை ஹீரோ ஒரு ரெஸ்டாரண்ட்ல சர்வர் . இவருக்கு ஒரு முன்னாள் காதலி உண்டு. காதலிக்கு வசதியான ஆஃபர் வந்ததும் ஆண்டாண்டு காலமா பெண்கள் செய்யும் அதே சேஃப்டி சைடு எஸ்கேப் செஞ்சுடறாப்டி. இந்த மாதிரி காதலனுக்கு துரோகம் செய்யும் பெண்கள் வாழ்க்கைல ஆண்டவன் அல்லது விதி எதுனா தண்டனை கொடுப்பார் இல்லையா? அதன் படி நாயகியின் புருசன் வேற ஒரு கள்ளக்காதல் வெச்சிருக்காரு
ஒரு நாள் டவுட் வந்து நாயகி புருசனை ஃபாலோ பண்றா. முதல்ல கள்ளக்காதலி வீட்டுக்குப்போகும் புருசன் சம்சாரம் ஃபாலோ பண்றதைப்பார்த்து சுதாரிச்சு காரை டேக் டைவர்சன்னு திருப்பி நண்பன் வீட்டின் முன் காரை நிறுத்தறான். அந்த பேக்கு நாயகி பரவால்ல, நம்ம புருசன் நல்லவன் போல அப்டினு கிளம்பிடறா. அதுக்குப்பின் காரை அங்கேயே விட்டுட்டு புருசன் கள்ளக்காதலி வீட்டுக்குப்போறான்
காரை எங்கே போய் நிறுத்துனாரோ அந்த நண்பன் அன்று கொலை செய்யப்படறார். அதனால புருசன் அந்தக்கொலைக்கேசில் மாட்டிக்கறார்.
கொலைக்கேசில் இருந்து தப்பிக்க தன் மனைவி கிட்டே கள்ளக்காதலி விஷயம் உண்மைதான். அன்னைக்கு நான் அவ வீட்டில் தான் இருந்தேன். அவ அட்ரஸ் தர்றேன், அவ வந்து சாட்சி சொன்னாதான் நான் இந்தக்கேசில் இருந்து தப்பிக்க முடியும்கறான்
நாயகி உடனே தன் பாய் பெஸ்டியின் உதவியை நாடறா.அந்த இளிச்சவாய் பாய் பெஸ்டியும் உயிரைக்குடுத்து உதவறான்.
வெளீல வந்த புருசன் உனக்காக இவ்ளோ செய்யறானே உன் முன்னாள் காதலன் அதுக்கு பரிகாரமா , பிராயசித்தமா நீ அவனுக்கு என்ன செஞ்சே?னு கேட்கறான். அதுக்குப்பின் மனைவி எடுக்கும் முடிவு தான் க்ளைமாக்ஸ்
சம்பவம் 3 -முதல் சம்பவத்தில் ஹீரோ ஒரு பாஸ் கிட்டே அடியாளா வேலை செஞ்சார்னு சொன்னனே அந்த பாஸ் ஒரு விபத்தில் மாட்டி ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்கார் . அவரைப்பார்த்துக்கற நர்ஸ் மேல பாஸ்க்கு இன்சிடண்ட் லவ். அங்கே வரும் டாக்டர் நர்சை தனியா கூட்டிட்டுப்போய் சில்மிஷம் பண்ண அந்த பேசண்ட் நிலையிலும் பாஸ் அந்த டாக்டரை அடி பின்னி எடுக்கறார் . இதைப்பார்த்து நர்சுக்கும் பாஸ் மேல லவ் . இவங்க லவ் இறுதியில் என்ன ஆச்சு?
சம்பவம் 4 - பணத்துக்காக பலரும் அடிச்சுட்டு இருக்கும்போது எதிர்பாராத விதமா வேற ஒரு க்ரூப்புக்கு சொந்தமான பணப்பை ஒரு நர்சுக்கும், ஒரு இளைஞரனுக்கும் கிடைக்குது. அவங்களை ஒரு க்ரூப் துரத்துது . இவங்க வாழ்க்கைல நடந்தது என்ன?
சம்பவம்5 - ஒரு குழந்தை தன் பெற்றோர் தன்னை சரியா கவனிக்கறதில்லை , கண்டுக்கறதில்லைனு ஏங்குது . ஆக்சுவலா குழந்தையின் எதிர்காலம் கருதிதான் பணம் சேமிக்க அம்மாவும், அப்பாவும் ஓடி ஓடி உழைக்கறாங்க . அது பாப்பாவுக்கு புரியல. டி வி ல பார்த்த ஒரு காட்சி அது மனசுல ஆழ பதியுது / அதாவது குழந்தையைக்கடத்தி ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டுது . உடனே பதறிப்போன பெற்றோர் விழுந்தடிச்ட்டு குழந்தையைக்காப்பாத்த களம் இறங்கறாங்க . இதைப்பார்த்த அந்த பாப்பா நாமும் இதே போல் ஒரு கடத்தல் டிராமா போடலாம்னு நினைக்குது . இதுக்குப்பின் நடந்தது என்ன?
சம்பவம் 6 - காதலன் ஏழை. காதலிக்கு நல்ல பணக்கார ஆஃபர் கிடைச்சதும் காதலனைக்கழட்டி விட்டுட்டு மேரேஜுக்கு சம்ம்மதிக்கறா. மேரேஜுக்கு இன்னும் 5 நாட்கள்: தான் இருக்கு . அப்பதான் காதலன் ஒரு போர்ன் வெப்சைட்ல அவங்க 2 பேரும் அப்டி இப்டி இருந்த வீடியோ க்ளிப் அப்டேட்டப்பட்டிருப்பதைப்பார்க்கறான், காதலி கிட்டே சொல்லப்போனா அவன் பிளாக்மெயில் பண்ண ட்ரை பண்றதா தப்பா நினைக்கறா. பின் இருவரும் போலீஸ் கேஸ் ஃபைல் பண்ணப்போனா அவங்க எந்த ஹோட்டல்ல தப்பு செஞ்சாங்களோ அந்த ஹோட்டலைக்கண்டு பிடிச்சாதான் லாக் பண்ன முடியும்னு போலீஸ் சொல்லுது
உடனே அவங்க இதுவரை எந்த எஃந்த ஹோட்டல்ல எல்லாம் தப்பு செஞ்சாங்கனு ஒரு லிஸ்ட் எடுத்து அந்த ஹோட்டல்களுக்கெல்லாம் போய் கேமரா ஒளிச்சு வெச்சிருக்கா ங்களா?னு செக் பண்ண கிளம்பும் பயணம் நீண்டுக்கிட்டே போகுது , இந்தப்பயணத்தில் மறுபடி தப்பு பண்ணாங்களா? இல்லையா? மீண்டும் சேர்ந்தாங்களா? மாப்ளைக்கு விஷயம் தெரிஞ்சதா? என்பது எல்லாம் சஸ்பென்ஸ்




இதுல நமக்கு தெரிஞ்ச முகம்னு பார்த்தா அபிஷேக் பச்சன் தான் அவர் தான் மெயின் ஹீரோ. அருமையான நடிப்பு .மனைவி தனக்கு துரோகம் செய்ததை முக பாவனைகளாலேயே வலியை கடத்துவது கலக்கல் என்றால் அந்த குழந்தைக்கதையில் அவருடனான ஒட்டுதல் அபாரம். அந்த பேபி போர்ஷன் பெண்கள் கண்களை குளம் ஆக்கிடும்
அபிஷேக் பச்சனை விட அதிக காட்சிகள் வருவது அந்த பாய் பெஸ்டி கேரக்டர். அட்டகாசமான கேரக்டர் ஸ்கெட்ச், காதலி தனக்கு கிடைக்கலை , இனியும் கிடைக்க மாட்டா என்று தெரிந்தும் காதலிக்காக தன் வாழ்நாள் சேமிப்புப்பணத்தை தியாகம் செய்வது , உயிரை பணயம் வைத்து காதல்கியின் புருசனை ஜெயிலில் இருந்து காப்பாற்றுவது என ஏகப்பட்ட இடங்களில் இளைஞர்கள் மனதில் நங்கூரம் போட்டு அமர்கிறார். அ வரது ஹோட்டல் மெனு ஒப்பிக்கும் காட்சி கலக்கல் ரகம் என்றால் காதலியை வழி அனுப்பி விட்டு சோகமாக டான்ஸ் ஆடுவது அருமை
மூன்றவதா நம்மைக்கவர்பவர் பாஸ் தான். வில்லத்தனமான நடிப்பு ஒரு புறம் , நர்சுடனான காதல் ஒரு புறம் , பின்னி இருக்கிறார் நடிப்பில்.
4 வதா அந்த பாஸ் மனம் கவர்ந்த நர்ஸ் நடிப்பு . கூச்சப்படாதீங்க , நர்ஸ் எல்லாரும் அம்மா மாதிரி என்று சொல்பவர் அடுத்த 3 வது காட்சியிலேயே அவர் மீது காதலில் விழுவது அருமை
5வதா 6 வதா நம் மனம் கவர்பவர்கள் அந்த இளைஞன் கேரக்டர் , இன்னொரு நர்ஸ் கேரக்டர் . அந்த இளைஞன் செம பர்சனாலிட்டி
7 வதா நம் மனதைக்கவர்பவர் பாய் பெஸ்டியை உபயோகப்படுத்திக்கொள்ளும் நாயகி . முகத்தில் குற்ற உணர்ச்சி, ஆனா காரியவாதி கிட்டத்தட்ட உன்னை நினைத்து லைலா கேரக்டர் ஸ்கெட்ச். 8 வதா நம் மனம் கவர்பவர் அந்த குழந்தை/ சிறுமி. இயல்பான நடிப்பு
திரைக்க்தை பற்றி சிலாகிச்சே ஆகனும்., இதுக்கு திரைக்கதை அமைப்பது ரொம்ப சவாலானதே. அனாயசமா பண்ணி இருக்காங்க . கடைசி 20 நிமிடங்களை இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம். ஒளிப்பதிவு, இசை அருமை .
சி.பி ஃபைனல் கமெண்ட் - பெண்கள் செய்யும் துரோகங்கள் அதிகமாக காட்டப்படுவதால் இது ஆண்களுக்கு ரொம்ப பிடிக்கும், குறிப்பாக பெண்களால் வஞ்சிக்கப்படும்/பட்ட ஆண்களுக்கு ரொம்ப பிடிக்கும், பெண்கள் மனதை அந்த குழந்தை போர்சன் மட்டும் கவரும், நெட் ஃபிளிக்சில் காண்க . ரேட்டிங் 3 / 5




நச் வசனங்கள்
1 பாவ , புண்ணிய கணக்கெல்லாம் உண்மைதானா? புரிய மாட்டேங்குதே?
அப்போ கொரோனாவால உயிர் இழந்தவங்க எல்லாம் பாவம் செஞ்சவங்களா?
2 ஃபாரீன்ல எல்லாம் பசு பால் மட்டும் தான் தருது , நம்ம நாட்டில் மட்டும் தான் ஓட்டு வாங்கவும் யூஸ் ஆகுது
3 கோபத்தோட கலரும் சிவப்புதான் , காதலோட கலரும் சிவப்புதான்
4 குழந்தையோட எதிர்காலத்துக்காக ஓடிஓடி உழைப்பவர்கள் அவங்க நிகழ்காலத்தை இழந்துடறாங்க
5 ஆர்டினரியா இருக்கறவங்களை இந்த உலகம் கண்டுக்காது , எக்ஸ்ட்ரா ஆர்டினரியா இருக்கறவன் தான் இந்த சமூகத்தால் உற்று கவனிக்கப்படுவான்
6 இவனோட கனவுகள் பெருசு , ஆனா பர்ஸ் சிறுசு
7 யூ ஆர் நாட் எ ஃபோட்டோஜெனிக் ஃபிகர்
யூ மீன்ஸ்?
நேர்ல ரொம்ப அழகா இருக்கீங்க
8 சேர்த்து வைக்கற அளவுக்கு என் கிட்டே சொத்தும் இல்லை , கடன் வாங்கற அளவுக்கு பற்றாக்குறையும் இல்லை
9 இந்த கிட்நாப்ல எனக்கு ஏதும் தொடர்பு இருக்குமா?னு போலீஸ் என் மேல சந்தேகப்படுது
ஏன்?
லெட்டர்ல சைன் என்னுது போலவே இருக்காம்
அப்போ லெட்டரை எழுதுனது யாரு?
ஹிஹி நான் தான்
10 உன்னை ஏன் கல்யாணம் பண்ண முடியாதுன்னா ப்ராப்ளம் நீ பணக்காரன் இல்லை என்பதால் இல்லை , உன்னால என்னைக்குமே பணக்காரன் ஆக முடியாது என்பதுதான்
12 ஏழை கிட்டே பணம் இல்லை , பணக்காரன் கிட்டே நிம்மதி இல்லை
13 சில உறவுகளுக்கு லாஜிக் கிடையாது ப், ஒன்லி மேஜிக்
14 யானை சறுக்கி விழுந்தா எலி கூட ஏறி செய்யுமாம்
15 ஆபத்துக்காலத்துல எவன் உன் கூடவே இருக்கானோ அவனை கெட்டியா பிடிச்சுக்கோ
16 உன் புருசனைக்காப்பாத்தனும்னு நீதானே சொன்னே? நீ எது சொன்னாலும் நான் செய்வேன்னு உனக்கு தெரியாதா?
நீ ஒரு எமோஷனல் ஃபூல்
17 மிஸ்1 அவன் உங்க பாய் ஃபிரண்டா? கணவனா? அப்பாவா?
அது நான் குடிக்கற சரக்கைப்பொறுத்தது
18 யூ ஆர் மாஸ்டர் ஆஃப் ஆர்ட் ஆஃப் லீவிங். கழட்டி விட்டுட்டுப்போறதுல மன்னி ( மன்னன் பெண்பால்)
19 ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் ஒரு பிசாசு ஒளிஞ்சிட்டு இருக்கும், நேரம் வரும்போது தன்னை வெளிப்படுத்திக்கும்