Showing posts with label FRACTURE - - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ). Show all posts
Showing posts with label FRACTURE - - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ). Show all posts

Friday, July 17, 2020

FRACTURE - - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )




வில்லன்  தன் மனைவி  இன்னொரு ஆள்  கூட ஜாலியா ஸ்விம்மிங் பூல்ல  விளையாடிட்டு  இருக்கறதைப்பார்த்துடறான், வழக்கமா கம்பெனில இருந்து  வீட்டுக்கு வர்ற டைம்க்கு  கொஞ்சம்  முன்னாடியே  வீட்டுக்கு  வந்து  வெய்ட்  பண்ணிட்டு  இருக்கான், இந்த  மேட்டர்  தெரியாம  மனைவி  வீட்டுக்கு  வந்து “ என்னங்க , இன்னைக்கு  நேர்த்துலயே வந்துட்டீங்களா?னு கேட்கும்போது  துப்பாக்கியால  அவளை  ஷூட்  பண்ணிடறான்

துப்பாக்கி சத்தம்  கேட்டு தோட்டக்காரன்  போலீஸ்க்கு ஃபோன் பண்ணிடறான், போலீஸ்  வந்து வில்லனை  கைது  பண்ணிடுது , வில்லன் அலட்டிக்கவே  இல்லை , ஆமா நான் தான் என் மனைவியை  சுட்டேன்னு  சொல்லிடறான். கேஸ்  நடக்குது

இந்த  கேஸ்ல வில்லனுக்கு எதிரா  வாதிடுவது  ஹீரோ. பிரபல  வக்கீல். ஆள்  தொழிலுக்குப்புதுசு , ஆனா செம  டேலண்ட். இதை  ஜட்ஜ்  வில்லன் கிட்டே  சொல்லி  உங்களுக்குத்தேவைன்னா  நீங்க  உங்களுக்கு  சாதகமா  வாதிட /சார்பாக  வாதிட  ஒரு வக்கீலை நியமிச்சுக்கலாம்கறாரு, ஆனா  வில்லன் அசால்ட்டா  அதல்லாம் வேணாம்ங்க , நானே  வாதாடிக்கறேன்கறான்

 பட,ம்  பார்க்கற  ஆடியன்சும்  கோர்ட்டில் இருக்கும்  ஆடியன்சும் , இவன் சரியான  மஞ்ச மாக்கானா  இருக்கானே, நல்லா  மாட்டிக்கப்போறான் அப்டினு நினைக்கும்போது வில்லன்  சாமார்த்தியமா  தப்பிப்பது  எப்படி?  பிறகு ஹீரோ  என்ன  பண்ணினார்  என்பது   திரைக்கதை

 மேலே நான்  சொன்ன  முதல்  3 பேராவும் 10 நிமிசத்துல  முடிஞ்சிடுது. மீதி 2  மணி  நேரம்  சுவராஸ்யமான  திரைக்கதை

ஹீரோவா  யங்கா  ஆர்யா  டைப்ல  வர்றவரு பெண்களைக்கவரும்  மென்மையான  மோகன், சுரேஷ், சித்தார்த்  வகையான முகச்சாயல் . ஈசியா  பார்ப்பவர் மனங்களில்  பதிகிறார். தொடர்ந்து  வெற்றியையே சந்திப்பவர்  முதன்  முதலா தோல்வி பெறும்போது  காட்டும்  முக இறுக்கம் செம  நுணுக்கம்

வில்லனா  வருபவர்  சைக்கோ டைப் . ஆள்  ஜெகஜ்ஜாலக்கில்லாடி . ஒவ்வொரு முறை  வில்லன் ஹீரோவை  ஜெயிக்கும்போதும்  லைட்டா  கண்  சிமிட்டும் ஸ்டைல் அபாரம் , மிஸ்டர்  பாரத்  படத்தில்  ரஜினி  - சத்யராஜ்  மோதல்  போல

ஹீரோவுக்கு  ஜோடியா வருபவர்  நயன் தாரா  சாயலில்  இருப்பது  எதேச்சையானதா? காட்சிப்பிழையா? மனப்பிரமையா? தெரில . ஹீரோ  கிட்டே  நீ இந்த  கேஸ்ல  ஜெயிச்சா  எனக்குப்பிரச்சனை  என சுயநலமாக  வாதிடுவது  அபாரம்

வில்லனுக்கு  ஜோடியா  வருபவர்  வில்லிதானே?  எந்த விதக்குற்ற  மனப்பான்மையும்  இல்லாமல்  இவர்  கள்ளக்காதலில்  ஈடுபடுவது வியப்பு

 வில்லியின்  கள்ளக்காதலன்  ஆக வருபவர்  பிரைவேட்  டிடெக்டிவ்  என்பது  திரைக்கதையின்  சுவராஸ்யம் எனில் வில்லி  சுடப்பட்டதும்  ஸ்பாட்டுக்கு  போலீஸ் விரையும்போது  கள்ளக்காதலன் அது  கள்ளக்காதலியின்  வீடு  என தெரியாமலேயே  நுழைவது  சிறப்பு

ஹீரோ  கோர்ட்  வாசலில்  ஒரு பெண்ணை  நிற்க வைத்து  நான்  சிக்னல்  குடுத்ததும்  நீ  கோர்ட் உள்ளே  வந்து  நான்  சொல்ற  மாதிரி  ஒரு டிராமா  போடு என  சொல்லும்போது  பாதரச பாப்பா கண்மணி  பள பளக்க  கேட்கும் அந்த  சைனீஷ்  பொம்மை  செம  அழகு 
‘ 
வசனம் ரொமப்  முக்கியமான  ரோல் ., பின் ஒளிப்பதிவு . கோர்ட்  காட்சிகள்  இன்னும்  அதிகப்படுத்தி  இருக்கலாம் .  கான்வோ காட்சிகள்  அதிகம் , அதைக்கம்மி பண்ணி  இருந்திருக்கலாம்



சபாஷ்  டைரக்டர்

1  வில்லன்  தன்  மனைவி  துரோகம்  செய்வதை பார்த்ததும் ஆன் த ஸ்பாட்லயே போட்டுத்தள்ளாம ஏன்  வெய்ட் பண்ணி  வீட்டில்   சுட்டு  மாட்டிக்கறார்  என்பதற்கான  விடை  ட்விஸ்ட் அபாரம்

2  வில்லன்  சிசிடிவி  காமரா  இருக்கும் இடங்களில் அநாயசமாக  தன்  முகத்தை  மறைத்துச்செல்வது  அழகு

3  வில்லன்  தன்  மனைவியிடம்  கடைசி  கடைசியா  ஒரு கிஸ்  அடிச்ட்டு  பின் சுடுவது  , பேசும் பஞ்ச்  டயலாக்  அற்புதம்

4  கோமாவில்  இருக்கும்  வில்லியை  ஹாஸ்பிடலில்  காப்பாற்ற  ஹீரோ  கோர்ட் ஆர்டருடன்  வருவதும்  அங்கே  வில்லன்    ஆல்ரெடி  இருப்பதும் கை தட்டல்  அள்ளும்  காட்சி . பூ விழி  வாசலிலே  படத்தில்  தான்  இது போன்ற  சீட் எட்ஜ் த்ரில்லர்  சீன்  பார்த்தேன்

5. கோர்ட் , கேஸ்  எல்லாம் தப்பிய  வில்லனை  மாட்ட  வைக்க  ஹீரோ  போடும்  பிளான்  அதை  எக்ஸ்யூட்டிவ்  பண்ணிய விதம்  குட்

6   வில்லன்  போடும்  ட்ரிக்சை  ஹீரோ  எப்படிக்கண்டுபிடிக்கிறார்? என்ற  உத்தி அபாரம்.   நண்பன்  தன்  ஃபோனை  அவர்  ஃபோன் என  நினைத்து  மாற்றி  எடுத்துப்போவதும்  இதே  மாதிரி  கேசில்  துப்பாக்கி  மேட்டரும்  ஏன் நடந்திருக்கக்கூடாது? என  நினைப்பதும், அதைத்தொடரும்  காட்சியும்  கலக்கல் 



நச்  டயலாக்ஸ்

1        வில்லன் = என் கிட்டே  பிடிக்காத  விஷயம்  என்ன?
 வில்லி =  என்னை  விட ஸ்மார்ட்னு நீங்களா  நினைச்சுக்கறீங்களே  அதுதான்

2        அதிகமான  நாலெட்ஜூம்  ஒரு வலி  தான், சின்னச்சின்ன சந்தோஷங்களை  இழக்க வைக்குது


3        நான்  தான் உன்னை  முதலிலேயே  எச்சரிச்சனே?

உன்  எதிரி  ஸ்மார்ட்னு  எச்சரிச்சே!  ஆனா   நீ  ஒரு முட்டாள்னு எச்சரிக்கலையே?

4        என்  ஃபோனை ஏன் அட்டெண்ட்  பண்ணலை? ஆன்சர்  பண்ணி  இருக்கலாமில்ல?

 அட்டெண்ட்  பண்ணாம  இருப்பதும்  ஒரு வகை  ஆன்சர் தான்

5        வாழ்க்கை  சில சமயம் நமக்கு எதிர்பாராத  பரிசுகளை  தரும்
6  உடை ஞ்சு ரிப்பேர்  ஆன கடிகாரம்   கூட  ஒரு நாளுக்கு  2  டைம்   சரியான  டைம் காட்டும், ஆக்டிவா இருக்கும்  நான்  புத்திசாலித்தனமா  இருக்க  மாட்டேனா?




லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1   கல்யாணம் ஆன பொண்ணு  பட்டப்பகல்ல  பப்ளிக்கா ஸ்விம்மிங் பூல்ல கள்ளக்காதலுடன்  நீச்சல்  அடிப்பாளா? தெரிஞ்சவங்க  யாராவது  பார்த்துட்டா என்ன  பண்ண?னு நினைக்க  மாட்டாரா? 

2   கொலை  பண்ண  மனைவியை சூட்  பண்ற  வில்லன்  அவ மூச்சு  நின்னுடுச்சா?  ஆள் அவுட்டா? அப்டினு செக்  பண்ண  மாட்டானா? 

3     வில்லன்  போலீசிடம்  ஒப்புதல்  வாக்குமூலம் தரும்போது  அதை  வீடியோ பண்ணி  இருக்கலாமே? கோர்ட்டில்  பிறழ்  சாட்சியாக  அப்ரூவர்  திரும்பும்போது  உதவுமே? 

  சி.பி  ஃபைனல்  கமெண்ட் -  டீசண்ட்டான  க்ரைம்  த்ரில்லர் . கன்வோ  அதிகம் இருப்பதால்  ஒரு 20 நிமிடங்கள்  ஸ்லோவா போகும் , மற்றபடி  நல்ல விறுவிறுப்பு   அமேசான்  பிரைம்ல  கிடைக்குது   ரேட்டிங்  3.25  /  5