Showing posts with label FACE BOOK. Show all posts
Showing posts with label FACE BOOK. Show all posts

Sunday, July 24, 2011

ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் -உண்மை சம்பவம்

snowstorm-china-yamashita_25988_600x450

ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இயங்கிகொண்டேதான் இருப்பார்கள்.ஆண் பெண்னை ஏமாற்றுவதும்,பெண் ஆணை ஏமாற்றுவதும் இந்த உலகில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.மொத்தத்தில் மனிதம் செத்துக்கொண்டு இருக்கிறது.. 

எனது முன் தினப்பதிவுகளில் சென்னைப்பதிவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றி பதிவு போட்ட பிறகு பலர் தனி மெயிலில், ஃபோனில் தங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை பகிர்ந்தார்கள்.. அவற்றில் என் மனதை மிகவும் பாதித்த சம்பவங்களை உங்களுடன் வருத்தத்தோடும், கண்ணீரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

அவன் பெயர் பரத், இருப்பது மதுரை.ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் இறுதியில் சந்திக்கும் இடத்தின் பெயர் கொண்ட பிளாக் ,அதை நடத்தி வருவது சுந்தரி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). 

இவர் தனது பிளாக்கில் கதை ,கவிதை,ஜோக்ஸ்,கட்டுரை என கலந்து கட்டி பதிவுகள் போடுவார்.. தனது ஃபோட்டோவை பப்ளிக்காக புரோஃபைல்லில் போட்டிருக்கிறார். ஃபேஸ் புக்கிலும் தன் ஃபோட்டோ,மெயில் ஐ டி எல்லாம் ஓப்பனாக பகிர்ந்திருக்கிறார்.

பரத் இவரது பிளாக்கில் ஆரம்பத்தில் எல்லா பதிவுகளுக்கும் கமெண்ட் போட்டு சாதாரண வாசகனாக  அறிமுகம் ஆகி இருக்கிறான்.. 

சுந்தரி திருமணம் ஆனவர், வயது 34 . பரத் திருமணம் ஆகாதவன், வயது 29. படைப்புகளை பற்றி பாராட்டி ஆரம்பத்தில் தனி மெயிலில் பகிர்ந்திருக்கிறான்.

பாராட்டுக்கு மயங்காத படைப்பாளியும், ஊதிய உயர்வு கேட்காத உழைப்பாளியும் உலகில் இல்லை என்ற தத்துவத்திற்கு  ஏற்ப சுந்தரி நல்ல ஒரு தோழியாக பழகி இருக்கிறார். பரத் ஆரம்பத்தில் அக்கா என்றே அழைத்து வந்திருக்கிறான்.. 

பரஸ்பரம் இருவரும் செல் ஃபோன் நெம்பர், ஃபோட்டோக்கள் பகிர்ந்திருக்கிறார்கள்.4 மாதங்கள் எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் சாதாரணமாக இவர்கள் நட்பு வளர்ந்திருக்கிறது.. 


Highway Throgh Qidam Basin In Western China


4வது மாத முடிவில் “ அக்கா, உங்களை நேரில் சந்திக்க ஆசையாக இருக்கு, எங்கே ,எப்போ பார்க்கலாம்? என கேட்டிருக்கிறான்.

சுந்தரி தனது வீட்டு அட்ரஸ் கொடுத்து குறிப்பிட்ட தேதியில் மாலை 6 மணிக்கு வரச்சொல்லி இருக்கிறார். தனது கணவரிடமும் இப்படி ஒரு நண்பர் இருப்பதாகவும் வரப்போவதாகவும் சொல்லி விட்டார்.

இங்கே தான் பரத் தன் குயுக்தி மூளையை  பயன் படுத்தி இருக்கிறான்.சுந்தரி சொன்ன அட்ரஸ்க்கு காலையில் 9 மணிக்கே போய்ட்டான்.. வீட்டுக்கு போகாமல் தெருவோரம் நின்று வேவு பார்த்திருக்கிறான்.சுந்தரியின் கணவர் 9.30 க்கு வீட்டை விட்டு ஆஃபீஸ் கிளம்பியதை பார்த்து விட்டு எதேச்சையாகப்போவது போல் 10 மணிக்கு வீட்டுக்கு போய் இருக்கிறான்.. 

ஏன் இவன் மாலையில் வராமல் காலையில் வந்தான்? என்ற சந்தேகக்கேள்வி மனதில் தொக்கி நின்றாலும் சுந்தரி அவனை வரவேற்று ஹாலில் உட்கார வைத்தார். கிச்சன் ரூமில் போய் காபி போட்டு வருவதற்கு அவர் உள்ளே போனதும் பரத் பட பட என்று ஹால், பெட்ரூம், கிச்சன் ரூம் என ஃபோட்டோக்களாக எடுத்து தள்ளி விட்டான்.(இந்த மேட்டர் பின் போலீஸ் விசாரணையில் அவனே ஒப்புக்கொண்டு சொன்ன வாக்குமூலம்)

cormorant-palette_25982_600x450

சுந்தரி கிச்சனில் காபி போடுவதை பேக்கில்  (BACK)இருந்து அவருக்கே தெரியாமல் ஃபோட்டோ எடுத்துக்கொண்டான் பரத்.பின் ஏதும் தெரியாதவன் போல் ஹாலில் வந்து அமர்ந்து கொண்டான்.சுந்தரி ஹாலுக்கு வந்து காபி குடுத்ததும் காபி குடித்துக்கொண்டே 30 நிமிடம் பேசி இருக்கிறார்கள். 



பின் பாத்ரூம் போகனும் என்று அவரிடம் சொல்லி  பாத்ரூம் போய் அங்கேயும் சில ஸ்நேப்ஸ் எடுத்துக்கொண்டான் பரத். பின் சுந்தரியிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டான்.. வேறு எந்த தவறான முயற்சியோ, மோசமான பார்வையோ  காட்டாமல் நல்லவனாகவே நடந்து கொண்டான்.... 

பிறகு 10 நாட்கள் கழித்து பரத் தன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தான்..

அக்கா என அழைப்பதை கட் பண்ணி பெயர் சொல்லி அழைத்திருக்கிறான்.. அவரது உடல் அழகை ஆபாசமாக வர்ணித்து மெயிலில் கடிதம் அனுப்பி இருக்கிறான்.. 

டேய். என்னடா இது? நல்லாதானே இருந்தே? உனக்கு என்னாச்சு? நான் கல்யாணம் ஆனவ, உன்னை விட 5 வயது  சீனியர், உனக்கு அக்கா முறை.. ஆகுது. இனியும் இது போல் பேசுவதாக இருந்தால் நம் ஃபிரண்ட்ஷிப் கட் பண்ணிக்கலாம்”

என்று வார்னிங்க் பண்ணி இருக்கிறார் சுந்தரி.. 

ஆனால் அவன் அதை சட்டை செய்யவில்லை.. தொடர்ந்து பாலியல் ரீதியில் மெயில் அனுப்பி இருக்கிறான்.. (ஒன் சைடு மட்டும்.. சுந்தரி நோ ரிப்ளை)

பொறுத்துப்பொறுத்துப்பார்த்த சுந்தரி தன் மெயிலை மெயில் ஐ டி யை மாற்றி விட்டார். தன் செல் ஃபோன் நெம்பரையும் லாக் பண்ணி புது நெம்பர் வாங்கிக்கொண்டார். 

தனது இரு வழிகளும் தடை பட்டதும் பரத்துக்கு செம டென்ஷன் ஆகி விட்டது. 

சுந்தரியின் பிளாக்கில் போய் சுந்தரியும், பரத்தும் தாம்பத்ய உறவு கொண்ட மாதிரி மிக ஆபாசமான நடையில் கதை போல ஒரு பெரிய கமெண்ட்டை அவரது 217 போஸ்ட்களிலும்  ஒரே நேரத்தில்  போட்டு விட்டான்.. கமெண்ட் மாடரேஷன் வைக்காத தளம் அது. 


swan-wyoming-blair_25989_600x450
சுந்தரிக்கு செம ஷாக்.. உடனே அவனை ஃபோனில் கூப்பிட்டு நியாயம் கேட்டிருக்கிறார்.. அவன் சினிமாப்பட வில்லன் போல அவரையே மிரட்ட ஆரம்பித்திருக்கிறான். 

இது ஆரம்பம் தான்.. நீ என் ஆசைக்கு இணங்கலைன்னா இன்னும் பல தாக்குதல்கள் வித்தியாசமா வரும்..

 எந்த பதிலும் சொல்லாமல்  கோபமாக கட் பண்ணி விட்டார் சுந்தரி.. 

அடுத்த நாள் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது... 

அவரது ஃபேஸ் புக்கில் அவரது மேலாடை இல்லாமல் அமர்ந்திருக்கும் படம் வெளியானது.. ( ஒரிஜினல் அல்ல) அதுவும் அவரது பெட்ரூமில், பாத்ரூமில் இருப்பது போல.. 

சுந்தரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அது மார்ஃபிங்க் செய்யப்பட்டது என்று சொன்னால் யார் நம்ப போகிறார்கள்?

சாதாரணமாக அந்த ஃபோட்டோ வந்திருந்தால் பிரச்சனை இல்லை, அனைத்துப்படங்களும் அவரது வீட்டில் இருப்பது போல வந்ததால் பிரச்சனை.

கணவரிடம் சொல்லவும் வழி இல்லை, யாரிடம் பகிர்வது என்ற குழப்பத்தில் 2 நாட்கள் ஆஃபீசுக்கே போக வில்லை.ஆனால் அதற்குள் அவரது ஃபோனுக்கு ஏகப்பட்ட கால்கள்? அது நீங்களா? என கேட்டு.. 

நொந்து போன சுந்தரி அந்த ஆஃபீஸ்க்கு போவதையே தவிர்த்தார்.. வேறு ஒரு ஆஃபீஸில் ஜாயின் பண்ணிக்கொண்டார்.

உருப்படியாக அவர் செய்த ஒரே காரியம் ஒரு எஸ் ஐ அவர்களிடம் புகார் செய்ததுதான். தான் காலேஜ் டைமில் தன்னுடன் படித்த ஒரு நண்பன் போலீஸில் பணி புரிகிறார் சென்னையில் . அவரிடம் எல்லா விஷயங்களையும் சொன்னார்.. 

பரத் கொடுத்த முகவரி போலி.  செல் ஃபோன் நெம்பர் ஸ்விட்ஸ் ஆஃப்.. அந்த செல் எண்ணில் ஒரு ஃபோர்ஜரி அட்ரஸ். மெயில் ஐ டி வைத்து அவன் அட்ரஸை ட்ரேஸ் அவுட் பண்ணினார்கள்.

அவனை நையப்புடைத்ததில் அவன் பல உண்மைகளை வெளியிட்டான்.

அவனுக்குத்தொழிலே இதுதான்.. பெண்களிடம் செட் செய்வது.. இன்பம் அனுபவிப்பது, பின் பணம் கேட்டு மிரட்டுவது..

அவன் மேல் கேஸ் போடப்பட்டது. வழக்கு நடந்து வருகிறது. 

வழக்கு தீர்ப்பு வந்த பிறகு முபாரக் ஃபோட்டோவும் பரத் ஃபோட்டோவும் வெளியிடப்படும்.

1238

நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை



1. பெண் பதிவர்கள் கண்டிப்பாக கமெண்ட் மாடரெஷன் வைத்துக்கொள்ள வேண்டும்..

2. புரோஃபைலில் அவர்கள் படம் போடுவதை தவிர்க்கலாம், மீறிப்போட்டால் அதை காப்பி பண்ண முடியாதபடி லாக் சிஸ்டம் வைக்கலாம்.

3. சேட் செய்யும் ஆண்களிடம் பர்சனல் தகவல்கள் சொல்லாமல் இருக்கலாம். கணவர் ஆஃபீஸ் போகும் டைம்,  தன் வீட்டு முகவரி இப்படி.


4.  சேட்டிங்க்கில் பழக்கமான நண்பர்களை தனிமையில் சந்திப்பதை தவிர்க்கலாம். தன் தோழிகளோடோ, ஆஃபீஸ் கொலீக்கோடோ சந்திக்கலாம். 

5.  முதல் முறை சந்திக்கும்போது எடுத்தவுடன் தன் வீட்டுக்கு வர சொல்லாமல் பொது இடத்தில் பப்ளிக் நடமாடும் இடத்தில் சந்திக்கலாம்.

6.  வீட்டுக்கு அழைக்கும் பட்சத்தில்  அவர் எந்த ஃபோட்டோவும் எடுக்காமல் கண்காணிக்கலாம்..

7. சேட்டிங்க் செய்யும் நபர் சந்திக்க ஆசைப்படும்போது தன் வீட்டுக்கு வர சொல்லாமல் அவர்கள் வீட்டுக்கு போய் பார்க்கலாம். ஒரு க்ளான்ஸ் பார்த்தால் அவர்கள் குடும்ப சூழல் தெரியும்.

8. எல்லாவற்றையும் விட பெஸ்ட் வழி ஒன்று உள்ளது. அது நோ சேட்டிங்க்.. நோ பர்சனல் சந்திப்புகள்.. இது தான் நிம்மதியான வாழ்வை தரும்..  படைப்பு நல்லாருக்கா? பப்ளிக்கா கமெண்ட் போடு. போய்ட்டே இரு.. தேவை இல்லாமல் தனி மெயிலில் நோ கடலை..

9. மீறி சேட்டிங்க் பண்ணி இது போன்ற பிரச்சனைகள்  வந்தால் மனசுக்குள்ளேயே போட்டு புழுங்கிக்கொண்டிராமல் யாரிடமாவது பகிர்ந்து கொள்ளுங்கள்.போலீஸ்க்கோ, சைபர் க்ரைம்க்கோ உடனே புகார் கொடுங்கள்.

உங்கள் பெயர் வெளியே வராமல் குற்றவாளிகளை பிடிக்க சட்டத்தில் இடம் உள்ளது, நோ பயம். அதை விடுத்து தற்கொலை எண்ணத்திற்கோ , வேறு விபரீத முடிவுகளுக்கோ போய் விட வேண்டாம்.

10. பதிவர் சுந்தரி தன் கணவரிடம் எல்லா விபரங்களையும் சொல்லி விட்டார். இனி சேட்டிங்க் செய்யும்போது கவனமாக இருக்கவும் என கணவராலும் ,நண்பர்களாலும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

11. ஃபேஸ்புக்கில் பர்சனல் விபரங்கள் போடும்போது கவனமாக பகிரவும்.. 

டிஸ்கி - கமெண்ட் போடும் நண்பர்கள் தங்கள் கருத்துக்களை கூறும்போது பாதிக்கப்பட்ட பெண் பதிவர் மனம் புண்படாத மாதிரி  கமெண்ட்ஸ் போடவும், மீறி ஏதாவது டவுட்ஸ் இருந்தால் என் தனி மெயிலில் மெயிலிடவும்..