Showing posts with label CHOKED ( PAISAA BOLTHAA HAI )- HINDI - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி த்ரில்லர் ). Show all posts
Showing posts with label CHOKED ( PAISAA BOLTHAA HAI )- HINDI - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி த்ரில்லர் ). Show all posts

Saturday, June 06, 2020

CHOKED ( PAISAA BOLTHAA HAI )- HINDI - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி த்ரில்லர் )



நாயகி ஒரு வங்கியில் கேஷியராக பணி புரிபவர் . கணவன் வீட்டில் சும்மாதான் இருக்கார் . ஒரு மகன் . மிடில் கிளாஸ் ஃபேமிலி . அவங்க குடி இருக்கற அப்பார்ட்மெண்ட்ல ஒரு மந்திரியோட பி.ஏ குடி இருக்கிறார். கறுப்புப்பணத்தை சின்ன சின்ன பாக்கெட்ல கவர் பண்ணி பதுக்கி வைக்கிறார். 

 ஒரு நாள் எதேச்சையா  நாயகி கிச்சன் ரூம்  சிங்க்கை க்ளீன் பண்றப்பா அங்கே அந்த பணகட்டு பாக்கெட் கிடைக்குது  லாட்டரில பரிசு அடிச்சவன் , சீட்டு விளையாடி பணம் ஜெயிச்சவன் என்ன செய்வான்? மீண்டும் மீண்டும் லாட்டரி வாங்குவான் . தன் கிட்டே இருக்கும் பணம் காலி ஆகும் வரை சீட்டு விளையாடுவான் .அது மாதிரி நாயகி தன் கணவனிடம் சொல்லாமல் ரகசியமா தினமும் அதிகாலை எழுந்து   கிச்சன்ல இந்த பண வேட்டையை தொடர்கிறாள்


 திடீர் என வீட்டில் பல புதிய பொருள்கள் பர்ச்சேஸ் ஆகி வருவது , மனைவியிடம் அதிக பணப்புழக்காட்டம் இதை எல்லாம் கண்ட கனவன் மனைவியின் மேல் சந்தேகப்படறான்.


 இந்த டைம்ல தான் மோடி அறிவிச்ச  டிமாண்டிசே ஷன்  அறிவிக்கப்படுது.பேங்க் ஆஃபீசர்ஸ் எப்படி எல்லாம் அந்த திட்டத்தால பயன் அடைஞ்சாங்க என்பதை சுட்டிக்காட்டும் சில காட்சிகள் .ஒரு  புது வில்லன் நாயகியிடம்  பண பரிமாற்றத்துக்கு  டீலிங் பேசறான். அவ அதுக்கு ஒத்துக்கிட்டாளா? என்பதை நெட் ஃபிளிக்சில் காண்க . 


அனுராக் கஷ்யப் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமான படம் தான். இன்னும் பிரமாத,மா பண்ணி இருக்கலாம் . திரைக்கதையில் நகாசு வேலைகள் அதிகம் காட்டாமல் விட்டது பின்னடைவு 

நாயகியா நடிப்பவர் நல்ல உடல் மொழி . கணவனுடனான    வாக்குவாதங்களில் சராசரிப்பெண்ணாக மிளிர்பவர்  கைல காசு வந்ததும் கெத்து காட்டுவது ,புருசனை சட்டையே  பண்ணாம பேச்சாலேயே அவனை குத்திக்காட்டுவதும் அபாரம் 


 நாயகனாக நடிப்பவர் நார்மல்  ஆக்டிங் . பணி இல்லாத ஹவுஸ் ஹஸ்பெண்ட்  கேரக்டரை மிக இயல்பா பண்ணி இருக்கார் 

நாய்கி  தினசரி அதிகாலை 4 மணி க்கு எழுந்து புதையல் வேட்டையில் ஈடுபடுவது  ரிப்பீட்டாக வருவது அலுப்பு . வங்கிகளில் சிசிடிவி இருக்கும் என்ற நினைப்பே இல்லாமல்  நாயகி பயந்து பயந்து சுற்றும் முற்றும் பார்த்துட்டே திருட்டுத்தனமா சில வேலைகள் செய்வது   யூ  டூ டைரக்டர் என கேட்க வைக்கிறது 

 ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங் எல்லாம் பக்கா . திரைக்கதையை மட்டும் இன்னும் விறு விறுப்பு  கூட்டி இருந்தால் ....

 சபாஷ் டைரக்டர் 

1   மிட் நைட் . ஒரே கட்டிலில் தம்பதி. தங்கள் நடுவே படுத்து தூங்கிக்கொண்டிருக்கும்  மகன் தூக்கம் கலைக்காமல் மெல்லிய குரலில்  சண்டை போடுவதும் பின் அவனை அவர்களே எழுப்பி  விட்டு கலாட்டா பண்ணுவதும் ரசிக்க வைத்த காட்சி 


2 சமீப கால படங்களில் வழக்கமாகிவிட்ட காட்சியான நாயகி திருமணத்துக்கு முன் பாடகி ஆக விரும்பியவர். அதீத திறமை இருந்தும்  திருமணத்துக்குப்பின்  அதை  மறந்தவர் எனும் க்ளிஷேக்கள் இருந்தாலும் நல்லாதான் இருக்கு


3  வசனங்கள்  ஆங்காங்கே  எள்ளி நகையாடும் அங்கதம்


நச்  வசனங்கள்


`1   இந்தியர்களின் மனோபாவமே இதுதான் , கவுண்ட்டிங் மிஷின்ல 2 டைம் எண்ணிட்டு மேனுவலா நீங்க ஒருக்கா எதுக்கு என்றீங்க மேடம்?


மிஷின் 2 டைம் எண்றப்ப நான் ஒரு டைம் எண்ண வேணாமா? இப்போ வாங்கிட்டுப்போகும் முன் நீங்க எப்படி? எண்ணாமயே வாங்கிட்டுப்போவீங்களா? 


2  இந்த பொண்டாட்டிங்களே இப்படித்தான், புருசனுக்கு  டெய்லி ஏதாவது இன்ஸ்ட்ரக்சன் கொடுத்துட்டே இருப்பாங்க 


3   மேரேஜ் ஆன புதுசுல நீங்க 2 பேரும் எவ்ளோ சந்தோஷமா இருந்தீங்க, அவரு கிதார் வாசிப்பார், நீங்க பாடுவீங்க, இப்போ ? ஏன்? இப்டி?

 பணம்.  அல்ட்டிமேட்... 


4  நீ மனசுல நினைக்கறதை புருசன் கிட்டே சொன்னியா?

 அவர் கிட்டே சொல்வதும் சுவர் கிட்டே சொல்வதும் ஒண்ணுதான்


5   இந்த விஷயம் என் புருசனுக்கு தெரிய வேனாம்னு அவர் கிட்டே சொல்லி இருந்தேனே? எப்படி சொன்னாரு?

 அதான் சொல்லலை போல . எஸ் எ,ம் எஸ் தான் அனுப்பினார் 


6 எந்த  பொண்டாட்டியாவது  தன் புருசனை அப்ரிசியேட் பண்ணி பாத்திருக்கீங்களா? அட்லீஸ்ட் கேள்விப்பட்டிருக்கீங்களா?


7   நான்  தோத்துட்டேன் , எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?

 எப்பவும் போட்டியில்   தோற்கும்போது அதை ஒரு ரிகர்சலா  நினைக்கனும், நீ ஜெயிப்பே.. 


 லாஜிக் மிஸ்டேக்ஸ் 


1   கணவன் குடிகாரன் இல்லை , மாமியார் கூட இல்லை , பின் ஏன் மனைவி அந்த பண புதையல் விஷயத்தை கணவனிடம் மறைக்கனும? 


2   தன்  வீட்டில் கிடைத்த  பணம்  நல்ல நோட்டா? என்பதை கன்ஃபர்ம் பண்ண நாயகி தன் பேங்க் மேனேஜரிடம் தந்து மிசினில் செக் பண்ணச்சொல்றா. கேஷியர் கவுண்ட்டர்லயே அது  இருக்குமே/ ?

3   மேனேஜர் நாயகியிடம் பணத்தை  வாங்கி செக் பண்ணும்போது கஸ்டமர் இருக்கும்போதே  கொண்டுவராம இப்போ கொண்டு வந்திருக்கியே? கள்ள  நோட்டு என தெரிஞ்சா இனி  என்ன செய்ய முடியும்? அப்பவே ஏன் கொண்டு வரல?னு கேட்கவே இல்ல


4  தினமும் அதிகாலை ஒரு மணி நேரம் சிங்க் ல பணம் எடுக்கற நாயகி ஒரு நாள் ஃபுல் லீவ் போட்டு அதை முடிச்சிருக்கலாமே? பையன் ஸ்கூல் போன பின், புருசனை ஏதோ சாக்கு சொல்லி வெளியே அனுப்பிய பின்..

5   கிச்சன்  ரூமை டெய்லி  பேங்க் போறப்ப பூட்டிட்டுப்போற புது பழக்கத்துக்கு புருசன் எதும் பெருசா அலட்டிக்கலை .  அட்லீஸ்ட்  டூப்ளிகெட் கீ போட்டு திறந்து கூட பார்க்கல 

6   மனைவி மேல் சந்தேகப்படும் கணவன் அவளைக்கண்காணிக்க ஒரு ஆளை நியமிக்கிறான், அது அபாயம் ஆச்சே? புருசன் என்ன கலெக்டர் வேலையா பார்க்கறான்? வெட்டியா வீட்ல இருப்பவன் அவனே ஃபாலோ பண்ணி  வேவு  பார்த்திருக்கலாமே? 

7  க்ளைமாக்ஸ்ல இன்கம்ட்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் நாயகி வீட்டில் விசாரணை பண்ணிட்டு இருக்கும்போதே அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்கள்  மினிஸ்டர் பி ஏ வீட்டுக்கதவை கள்ளச்சாவி போட்டு திறந்து பணத்தை அபேஸ் பண்ணுவது எல்லாம் காதில் பூச்சுற்றல் 

8 மனைவி நடத்தைல சந்தேகப்படும் கணவன் அது பற்றி இன்னொருடவரிடம் முதல் முதலாக சொல்லும்போது ஒரு ஃபீலிங்கே இல்லாமல் “ மளிகைக்கடைல பொட்டுக்கடலை ஸ்டாக் இல்லை “ மாதிரி சாதாரணமா சொல்றார் 

9  பொதுவா பேங்க் கேஷியரை என்கொயரி பண்ண  பேங்க்குக்குதானே  வருவாங்க ? பெண் கேஷியர் வீட்டுக்கு என்கொயரி பண்ண லேடி ஸ்டாஃப் யாரும் இல்லாமல் கூட்டமாக  வருவார்களா?

10 பேங்க்கைம்கொள்ளை அடிக்க கொள்ளையர்கள் உள்ளே வந்ததும் அனைவரின் பார்வையும் கேஷ் கவுண்ட்டர்ல். பேங்க் மேனெஜரும்  கேஷியரை தான் பார்க்கறார். அந்த டைம்ல நாயகி நைசா தன் ஹேண்ட் பேக்ல  கொஞ்சம் பணத்தை போட்டு மறைக்க முடியுமா? 





சி.பி.. கமெண்ட் - வயலென்ஸோ , ரத்தமோ இல்லாமல் ஒரு சராசரி த்ரில்லர் மூவி கேட்டகிரில  இதை தாராளமா சேர்க்கலாம் . ரேட்டிங்   2. 75 / 5