Showing posts with label BROTHER'S DAY - சினிமா விமர்சனம் பிரதர்ஸ் டே. Show all posts
Showing posts with label BROTHER'S DAY - சினிமா விமர்சனம் பிரதர்ஸ் டே. Show all posts

Tuesday, June 02, 2020

BROTHER'S DAY - சினிமா விமர்சனம் ( மலையாளம் - ஃபேமிலி த்ரில்ல்ர் )

BROTHER'S DAY - சினிமா விமர்சனம் ( மலையாளம் - ஃபேமிலி த்ரில்ல்ர் )




 வில்லனுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் என்றுமே சோடை போனதில்லை , காரணம் அப்பேர்ப்பட்ட வில்லனை ஹீரோ எப்படி வீழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு எகிறும். .ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஹீரோவும் வில்லனும் எந்தப்புள்ளியிலும்  நேரிலோ, ஃபோனிலோ சந்தித்ததே இல்லை என்ற வித்தியசமான ஒன் லைன் மிக பிடித்திருந்தது.  ( க்ளைமாக்ஸ் ஃபைட் விதி விலக்கு)2019 ஓணம் வெளியீடாக வந்த பிருத்விராஜ் - பிரசன்னா நடிப்பில் வெளிவந்த  பிரதர்ஸ் டே டைட்டில்  ஃபேமிலி சப்ஜெக்ட் மாதிரி தெரிந்தாலும்  இது ஒரு சைக்கோ த்ரில்லர் .


கேரளா - எர்ணாக்குளம் ( கொச்சின்) ல  ரிசார்ட்ல சமையல் பணியாளரா ஹீரோ ஒர்க் பண்றார். ஹீரோயினோட அப்பாவுக்கு 2ம் கல்யாணம் நடக்குது. அந்த விழாவில் ஹீரோ - ஹீரோயின்  அறிமுகம் நடக்குது. ஆனா ஹீரோயினுக்கு காதல் , கல்யாணம் இதுல எல்லாம் இஷ்டம் இல்லை 


ஹீரோவுக்கு ஒரு தங்கை. அவ ஒருத்தனை லவ்வறா. சில கலாட்டாக்களுக்குப்பின் தங்கையின் மேரேஜ்   நடக்குது

இப்போ வில்லன் இண்ட்ரோ . பச்சைக்கிளி முத்துச்சரம் ல வில்லன் தன் மனைவியை வைத்து ஹீரோவை வளைச்சு பணம் சம்பாதிக்கற மாதிரி இதுல வில்லன் யாரோ ஒரு லேடியை வெச்சு  ஒரு பணக்காரரை சதிவலையில்  சிக்க வைத்து  பணம் பறிக்கிறார்

வில்லனால பாதிக்கப்பட்ட  ஹீரோயின் , ஹீரொவின் தங்கை , இன்னும் 2 பேர்   இவங்க வாழ்வில் நடந்த  எதிர்பாராத குழப்பங்களுக்கு சைக்கோ வில்லனே காரணம்.


 ஹீரோவா ப்ரித்விராஜ், முதல் பாதி காமெடி கலகலப்பு  என ஃபேமிலி ஆடியன்சை குறி வெச்சு படம் போகுது. ஏகப்பட்ட கேரக்டர் டைரக்டர் முதல் பாதி திரைக்கதை எழுதும்போது தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே , ஹம் ஆப் கே ஹங் கோன் மாதிரி ஹிந்தில வந்த லவ், ஃபேமிலி சப்ஜெக்ட் எல்லாம் பார்த்திருப்பார் போல . ஏகப்பட்ட கேர்க்டர்கள் வந்து வந்து போகுது


 வில்லனா   புன்னகை இளவரசி சினேகாவின் காதல் கணவர் பிரசன்னா . கனா கண்டேன் பட ஹீரோ மாதிரி  வில்லனிசம்  அருமையான ஆடை வடிவமைப்பு , அட்டகாசமான கெட்டப் என ஆள் அசத்தி விட்டார் . சும்மா கத்தி  கூச்சல் எல்லாம் போடாமல் கமுக்கமாக வில்லன் வேலை பார்ப்பது பிரமாதம் 

 நாயகியாக மடோனா செபாஸ்டின். வில்லியாக மியா ஜார்ஜ். இருவரும் ஜவுளிக்கடை ஷோ கேஸ் பொம்மைகள் 

 இந்தக்கதையை நல்ல டீம் உடன் அமர்ந்து டிஸ்கஸ் பண்ணி இருந்தால் நல்ல க்ரிஸ்ப் ஆன திரைக்கதை அமைத்து இருக்க முடியும் 

 த்ரிஷ்யம் படத்துல சின்ன ரோலில் நடித்த கலாபவன் சாஜோன் தான் இந்தப்படத்தின் இயக்குநர். 


சபாஷ் இயக்குநர்


1  ஹீரோயினுக்கு ஒரு ஃபிளாஸ்பேக் சீன் , ஹீரோ தங்கைக்கு ஒரு  போர்சன் , வில்லனுக்கு தனி ஸ்பெஷல் போர்சன் , ஹீரோவுக்கு ஒரு போர்சன்  என ரெண்டே முக்கால் மணி படத்தை நாலால் வகுத்து தந்திருக்கிறார்

2  வில்லனுக்கான ஆடை அலங்காரம் அபாரம் . செம கெத்து . ஹீரோவுக்குக்கூட சாதா டிரஸ் தான். நம்ம ஊருல இப்படி நடந்தது புலன் விசாரணைல  ஆனந்த்ராஜ்க்கு 


3  பட போஸ்டர்களில் இது ஃபேமிலி சப்ஜெக்ட் போல காட்டிக்கொண்டு லேடீஸ் ஆடியன்சை தியேட்டருக்கு வரவைத்த  யுக்தி




நச் டயலாக்ஸ் 

1  பணக்காரன் எதைச்சொன்னாலும் , அது பைத்தியக்காரத்தனமா இருந்தாக்கூட  கை தட்ட ஒரு கூட்டம் இருக்கும் 


2  சண்டை , சச்சரவு இல்லாம  ஒத்துமையா ஜனங்க இருக்கும் இடம் கள்ளுக்கடை க்யூ தான்

3   சோபாக்கு உறை போட்ட மாதிரி ஒரு பொண்ணை வெச்சுக்கிட்டு கவர்மெண்ட் மாப்ளை கேட்குதோ?

4   பொண்ணு பார்க்க போறப்ப நம்மை விட பர்சனாலிட்டி கம்மியா இக்ருக்கற பசங்களை கூட்டிட்டுப்போறதுதான் நமக்கு நல்லது 


5 இந்தப்பொண்ணுங்களுக்கு மேரேஜ் பண்ண மட்டும் தான்  கவர்மெண்ட் ஜாப் மாப்ளை வேணும் , ஓடிப்போற பொண்ணுங்க பாருங்க  அயர்ன் பண்றவன் , கேஸ் சிலிண்டர் போடறவன் , டிரைவர் , எலக்ட்ரீசியன்  இப்டி எவன் கூட வேணாலும் போறாங்க 

6  ஒரு சந்தர்ப்பத்துல நமக்காக யாரும்  இல்லையேனு தோணும் , ஆனா அப்போ நமக்கு வயசாகி இருக்கும்


7   அண்ணா, ஓடிப்போறப்ப எங்கே போறோம்னு இன்ஃபார்ம் பண்ணனுமா? 

8  இந்தக்கொலைகளை பண்ணுனது ஒரு புலி தான்னு எப்படி சொல்றீங்க?

 எப்படியோ? சப்போஸ் இந்தக்கொலையை யாராவது திட்டம் போட்டுப்பண்ணி இருந்தா அவன் புலி தான் 


9 ஒரு குறிப்பிட்ட வயசைத்தாண்டுன பிறகுதான் நம்மை கவனிக்க யாரும் இல்லையே அப்டிங்கற எண்ணம் வரும் 


10  கோழியை விடாதே , போட்டுடு 

 வாட்?

 பிளேட்ல சிக்கன்  ஃபிரை போடுடா , என்ன சர்வரோ?


 லாஜிக் மிஸ்டேக்ஸ் 


 1 வில்லன் அந்த ஆள் கிட்டே இந்த பேக்ல 50 லட்சம் பணம்  இருக்கா?னு கேட்டு கன்ஃபர்ம் பண்ணிட்டு அந்த பேக்கை காருக்குள் வைக்கறாரு . 2000 ரூபா கட்டா இருந்தாக்கூட  25 கட்டு கூட வைக்க முடியாத சின்ன லேடீஸ் பேக் அது 


2  புகார் வாபஸ் வாங்க வந்தேன்னு சொல்லும் நாயகி போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு லெட்டர் தந்துட்டு கிளம்புது. வாபஸ் வாங்குன லெட்டர் எங்கே?னு வில்லனும் கேட்கல . நாயகியும் கண்டுக்கலை 


3  பொன் முட்டையிடும் வாத்துகளான 3 பேரை தொடர்ந்து பணம் பறிக்கும் வாய்ப்பு இருந்தும் வில்லன் ஏன் அவங்களைக்கொலை பண்றான்?னு காரணம் சொல்லலை


4   நாயகியை மாட்டிவிட அல்லது அதை வெச்சு மிரட்ட தான் செய்யும் ஒவ்வொரு கொலைக்கு முன்பும் கொலை செய்யப்படப்போகும் ஆளுடன் நாயகியை வைத்து ஒரு ஃபோட்டோ எடுக்கறான் வில்லன். அந்த  ஃபோட்டோவை ரிலீஸ் பண்ணா கொலை ஆன ஆளுக்கும் நாயகிக்கும் என்ன தொடர்பு?னு விசாரிக்கும் என்பதே அதன் லாஜிக், ஆனா ஒரு டைம் வில்லன் அவனையும் சேர்த்தே ஒரு செல்ஃபி எடுக்கறான். அதுல அவன் மாட்டிக்க மாட்டானா? 



 சி..பி கமெண்ட் =  ஃபேமிலி டிராமா பார்க்க விரும்புவர்கள் இடைவேளை வரை ஜாலியா சிரிச்சு பார்க்கலாம். க்ரைம் த்ரில்லர் பார்க்க விரும்புபவர்கள் பின் பாதியைப்பார்க்கவும், படத்துக்கு விமர்சனம் எழுதனும்னு நினைக்கறவங்க வேற வழி இல்லாம என்னை மாதிரி முழுசா படம் பார்க்கவும்