Showing posts with label ACTION. Show all posts
Showing posts with label ACTION. Show all posts

Thursday, November 01, 2012

skyfall - சினிமா விமர்சனம்

http://7tab.in/wp-content/uploads/2012/10/Skyfall-wallpapers-James-Bond-Movie-15-500x299.jpg 



ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வந்து 50 வருஷங்கள் ஆகுது.டெக்னிக்கலா சினி ஃபீல்டு எவ்வளவோ முன்னேறிடுச்சு. கோடிக்கணக்கில் செலவு பண்றவங்க கதை , திரைக்கதைல கவனம் செலுத்துனா மட்டும் போதாது. இந்த மாதிரி ஆக்‌ஷன் படங்களுக்கு வெரைட்டி லொக்கேஷன்ஸ், ஆக்‌ஷன் சீக்குவன்ஸ் காட்டிட்டே பர பரனு படத்தை நகர்த்தனும். இந்த உண்மையை இந்நேரம் புரிஞ்சிருப்பாங்கன்னு நினைக்கறேன்.


உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள்  பற்றிய தகவல்களை  ஒரு ஹார்டு டிஸ்க்ல வெச்சிருக்காங்க ஜேம்ஸ்பாண்ட் பணி புரியும்  உளவுத்துறைல.. அதை வில்லன் அபேஸ் பண்ணிடறான்.உடனே நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த உளவுத்துறை மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் போட்டு இதை கலைச்சுடனும்னு சொல்றாங்க.. கூட்டம் நடக்கும்போதே வில்லன் அங்கேயே வந்து அட்டாக் பண்றான்.


 வில்லன் வேற யாரும் இல்லை. அதே உளவுத்துறைல ஆல்ரெடி பணி ஆற்றியவன் தான். அவன் டார்கெட்டே  அந்த லேடி எம் என்பவரை போட்டுத்தள்ளத்தான் ஐ மீன் கொலை பண்றது.  ஜேம்ஸ் பாண்ட்  அவரை காப்பாத்துனாரா? என்பதுதான் மிச்ச சொச்ச கதை.. 


படத்தோட ஓப்பனிங்க் சீன் செம கலக்கல். 17 நிமிடங்கள் ஓடும் ஒரு சேசிங்க் சீன். விக்ரம் படத்துல கமல் , பிராஜக்ட் ஏ படத்துல ஜாக்கிசான் வீட்டின் மொட்டை மாடிகளில் , கூரைகளில் ஓடி துரத்துவது போல இதுல் ஹீரோ சேஸ் பண்றாரு . இவர் ஜேம்ஸ் பாண்ட் ஆச்சே.. அதனால பைக்ல.. எல்லா ஓட்டு வீட்டின் கூரையில் பைக்கில் போகும் காட்சி அப்ளாசை அள்ளுது.. 


அந்த சேசிங்க் முடியறப்ப ரயிலில் ஜம்ப் பண்ணும் சீன் கலக்கல். அந்த சேசிங்க்கை ஹீரோயின் அப்பப்ப லைவ் அப்டேட் பண்ணும் உரையாடல் காமெடி.. 

இந்த ஓப்பனிங்க் பிரம்மாண்டம் முடிஞ்ச உடனே நயன் தாரா - பிரபுதேவா இனி இணைய மாட்டாங்க, பிரிவுதான்னு நியூஸ் வந்தப்ப நயன் முகம் எப்படி வாடிப்போச்சோ அப்படி ஆகிடுது படம்.


 அதுக்குப்பிறகு வரும் சம்பவங்கள் எல்லாம் ரொம்ப சாதாரணமா கேப்டன் பட ரேஞ்சுக்குத்தான் இருக்கு.. 


http://hdfreewallpapers.com/walls/2012/10/08/berenice_marlohe_in_skyfall-wide.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. படத்தின் முதல் 20 நிமிட ஆக்‌ஷன் கலக்கல்ஸ், அந்த காட்சிக்கு ஒளிப்பதிவு, பின்னணி இசை அபாரம்


2. ஜேம்ஸ் பாண்ட் ஒரு பந்தயத்தில் கையில் தேள் வைத்து சரக்கு அடிக்கும் ஸ்டைலிஸ் சீன்


3. வில்லன் லிஃப்ட்டில்  போகும்போது பின்னாலயே அதுவரை பூனை போல் ஃபாலோ பண்ணியவர் லிஃப்ட் கிளம்புனதும் புலி போல் பாய்ந்து லிஃப்ட்டின் கம்பியை பிடித்து தொங்கியபடி செல்லும் லாவகம்.. நோ டூப், நோ கிராஃபிக்ஸ்.. செம ஆக்‌ஷன்


4. வில்லன் ஹீரோவுக்கு பின்னால் கூரையில் பாம் வீசி ஒரு பெரிய ஓட்டையை போட ஹீரோ “ இதனால எனக்கு என்ன பாதிப்பு? : என ஹீரோ நக்கல் அடிக்கும்போது வில்லன் “ இப்போ பாரு கண்ணா” என்பது போல பார்க்க அந்த ஓட்டை வழியே ஒரு பெரிய ரயிலே வந்து விழும் காட்சி.. 


http://image.buzzintown.com/files/movie/upload_14000/upload_original/342490-skyfall.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஏன் கார் ரியர் வ்யூ மிரரை உடைச்சே? 

  ஹீரோயின் - முன்னாடி பார்க்கறவங்களுக்கு கண்ணாடி  பின்னாடி  தேவையில்லை  ( என்னாடி சொன்னே/?)



2. லேடி எம் - ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணு.. பாண்ட் இப்போ பைக்ல அவனை துரத்தி போய்ட்டு இருக்காரா? 


 இப்போ 2 பேரும் ரயில்ல போய்ட்டு இருக்காங்க.. 


 வாட்? 

 ஐ மீன் ரயில் மேல 


3. பாண்ட் - நான் வீட்டுக்குப்போய் ஃபிரெஸ் ஆகிட்டு வர்றேன்


 உன் வீட்டை வித்தாச்சு, மேரேஜ் ஆகாத ஒரு உளவாளி செத்துட்டா உடனே அவன் வீட்டை ஜப்தி பண்ணிடுவாங்க.. இது ரூல்


4. பாப்பா , என் எக்ஸ்பீரியன்ஸ் வெச்சு சொல்றேன், ஃபீல்டு ஒர்க் ரொம்ப கஷ்டம். வேணாம், நீ வேற வேலை பார்ப்பது நல்லது 


5. சாப்பாடு ருசியா இருக்கனும்னா சமையற்காரனா இருக்கனும்னு அவசியம் இல்லை ( ஓஹோ நல்ல சமையற்காரிக்கு புருஷனா இருந்தா போதுமா? ) 


6. உங்க கைரேகை மேட்ச் பண்ணி  ரெடி பண்ணின துப்பாக்கி இது.. உங்களால மட்டும்தான் சுட முடியும்.. 



7. மிஸ்டர் பாண்ட், குடுத்ததை எல்லாம் போறப்ப திருப்பிக்குடுத்துடனும் 


ஹூம், உலகம் ரொம்ப மாறிடுச்சு 


8. மிஸ்.. நான் எதையும் ஆர்டர் பண்ணலையே? இன்க்ளூடிங்க் யூ.. 


9. மிஸ்டர் பாண்ட், என்ன கத்தியால ஷேவிங்க் பண்றீங்க? நாகரீக உலகத்துல ஏகப்பட்ட நவீன வழிமுறைகள் வந்தாச்சே? 


மிஸ்.. பல விஷயங்களை பழைய முறைல செஞ்சாத்தான்  நல்லாருக்கும் ( டபுள் மீனிங்க் ) 


10. பயம்னா என்ன?னு உனக்குத்தெரியுமா? 


 தெரிஞ்சுக்க சந்தர்ப்பம் இதுவரை வாய்க்கலை.. 



11. மேடம்,  பாதுகாப்பு அமைச்சகத்துல உங்களை கூப்பிடறாங்க.. 

 வேலை செய்ய வேண்டிய நேரத்துல  மீட்டிங்க் அட்டென்ட் பண்ணி டைம் வேஸ்ட் பண்ண சொல்றீங்களா? 


12. இந்த உலகத்துல எல்லாருக்கும் ஒரு விலை இருக்கு.. உன்னோட விலை என்ன? 


 உன்னை கொல்றது


13. இந்த சிஸ்டத்துல குறிப்பிட்ட  சில ஃபைல்களை யாராவது சர்ச் பண்ணாலே ஆட்டோமெட்டிக்கா எரேஸ் பண்ற மாதிரி செட் பண்ணி வெச்சிருக்கு.. யாராவது உள்ளே புகுந்து ஏதாவது செய்ய நினைச்சா எரேஸ் ஆகிடும் . உலகத்துலயே 6 பேருக்கு மட்டும்தான் அந்த கலை தெரியும்


 அடடா, உங்களுக்கு ஏதும் தெரியாதா?

 ஹா ஹா, அந்த 6  பேருக்கு கத்துக்குடுத்ததே நான் தானே? 


14. ரயிலை ஓடி துரத்தி வில்லனை பிடிக்க ரயிலில் ஜம்ப் பண்ணும் பாண்டிடம் ஒரு அப்பாவிப்பயணி - வீட்டுக்குப்போக இவ்வளவு அவசரமா? 



15. நீங்க பண்றது அஃபீசியல் வேலை இல்லையே? 

 அதே சமயம் அது என் பர்சனல் வேலையும் இல்லை.. 

 என் வேலைக்கு உலை வைக்காம இருந்தா சரி


16. உளவாளி ஆக அநாதையாக இருப்பதே ரொம்ப பெரிய தகுதி 


http://www.moviedeskback.com/wp-content/uploads/2012/05/James-Bond-Skyfall-007-wallpapers-1.jpg



 இயக்குநருக்கு திரைக்கதையில் சில ஆலோசனைகள், சில சந்தேகங்கள்



1. படத்தோட ஓப்பனிங்க் சீன் ஆக்‌ஷன்ல ஓடும் ரயிலில் ஹீரோவும் , வில்லனும் கட்டிப்புரண்டு ஃபைட்டிங்க். ஹீரோயின் ரைபிளால் குறி வெச்சுக்கிட்டே மேலிடத்துல ஐடியா கேட்கறா. இப்போ சுட்டா ஜேம்ஸ் பாண்ட் மேல பட்டுட வாய்ப்பு இருக்குங்கறா. உடனே மேலிடம் “ வேற வழியில்ல ஷூட். அப்டினு ஆர்டர் குடுக்க அவ ஷூட் பண்றா. நெஞ்சுக்கு குறி வெச்சு. கரெக்டா வில்லன் விலக  பாண்ட் குண்டு பட்டு கடல்ல விழறாரு. 

 இந்த மாதிரி ரிஸ்க்கான டைம்ல எதுக்கு நெஞ்சுக்கு குறி வைக்கனும்? காயப்படுத்தி பலவீனப்படுத்த கால்லயோ, தோள்லயோ கைலயோ , உயிருக்கு ஆபத்தில்லாத  பகுதில சுட்டா யார் மேல குண்டு பட்டாலும் பரவாயில்லையே? 



2. ஜேம்ஸ் பாண்ட் கடல்ல விழும் இடம் அந்த லேடிக்கு தெரியும். அங்கே போலீஸ் ஆட்களை விட்டு தேடாமயே அவர் செத்துட்டதா எப்படி முடிவுக்கு வர்றாங்க? டெட் பாடி கிடைக்காம ஒரு ஆள் செத்துட்டதா முடிவுக்கு வரக்கூடாதுன்னு சட்டம் சொல்லுதே?அப்புறம் எப்படி பாண்ட் செத்துட்டதா அவர் வீட்டை ஜப்தி பண்ண முடியும்?


3. உயிர் பிழைச்ச பாண்ட்  மேலிடத்துக்கு ஏன் தகவல் தெரிவிக்கலை? மறுபடி பணியில் சேரும்போது யாரும் அது பற்றி கேட்கவே இல்லையே? எங்க ஆஃபீஸ்ல எல்லாம் கம்யூனிகேஷன் கரெக்டா இருக்கனும். லீவோ, பர்மிஷனோ மேலிடத்துக்கு தகவல் சொல்லிடனும்.


4. ஜேம்ஸ் பாண்ட் மீண்டும் டியூட்டில ஜாயின் பண்றதுக்கு முன்னால அவருக்கு ஃபிட்னெஸ் டெஸ்ட் நடக்குது. அந்த காட்சிகள் செம போர்.  வைஜயந்தி ஐ பி எஸ் , சத்ரியன் போன்ற தமிழ்ப்படங்களில் கூட இண்ட்ரஸ்ட்டிங்கா எடுத்திருந்தாங்க.. அவர் ஃபிட்னெஸ் இல்லைன்னு தெரிஞ்சும் மேடம் எம் எப்படி ராங்கா ஜாயினிங்க் ஆர்டர் குடுக்க முடியும்? கலைஞர் மாதிரி ஊழல் பண்ண வழி இல்லை. எல்லா ரிக்கார்ட்சும் கம்ப்யூட்டரைஸ்டு. என்ன தைரியத்துல அப்பாயிண்ட் பண்ணுனாங்க..? 


5. சாதாரண அவதூறு  வழக்குல கைதானவங்களையே  நம்ம ஆளுங்க ஜாமீன்ல வர முடியாத படி பாதுகாப்பா வெச்சு விசாரிக்கறப்ப , ஒரு நாட்டின் பாதுகாப்பையே அசைத்த வில்லனை போலீஸ் கஸ்டடில அப்படியா அசால்ட்டா வெச்சிருப்பாங்க? கை விலங்கு கால் விலங்கு எல்லாம் போட்டு சங்கிலியால் கட்டி 50 போலீஸ் பாதுகாப்பு குடுத்திருக்க வேணாம்? என்னமோ ராமநாராயணன் எடுக்கும் லோ பட்ஜெட் படம் மாதிரி 3 போலீஸ்.  குருவி சுடற மாதிரி சுட்டுட்டு அவன் எஸ் ஆகறான்.. ஹய்யோ அய்யோ 



6. வில்லன் போலீஸ் யூனிஃபார்ம் போட்டு மாறு வேஷத்துல ரயில்ல தப்பிக்கறான். மத்த எல்லா போலீஸ் ஆஃபீசரும் க்ளோஸ் கட்டிங்க் பண்ணி இருக்காங்க. இந்த தத்தி ஃபங்க் விட்டிருக்கான்,. அவ்ளவ் முடி இருக்கு. ஆனா போலீசாலே கண்டு பிடிக்க முடியலை. ஷேம் ஷேம் பப்பி ஷேம்.. 


7. க்ளைமாக்ஸ்ல ஒரு வீடு. அதுல ஹீரோவும் மேடம் எம் லேடியும் பதுங்கி இருக்காங்க.. தத்தி வில்லன்  பல ஆளுங்களை நடராஜா மாதிரி நடக்க வெச்சு அனுப்பறான், மாட்டிக்கறாங்க. 20 பேரையும் பாண்ட் போட்டுத்தள்ளறாரு. டெக்னிக்கலா எவ்ளவோ டெவலப் ஆகியாச்சு. பெரிய டைம் பாம் போட்டா மேட்டர் ஓவர். இதை எவனும் கேள்வி கேட்டுடக்கூடாதுன்னு “ அவன் எனக்கு உயிரோட வேணும்”னு டெம்ப்ளேட் வசனம் வேற. சகிக்கலை.. ஹீரோ என்ன நமீதாவா? உயிரோட பிடிச்சு ஜப்பான் அழகி பட்டம் தரப்போறாரா வில்லன்..? 


8. க்ளைமாக்ஸ்ல சுரங்கப்பாதைல போகும் ஜேம்ஸ் பாண்ட் எதுனால கதவை மூடாமயே போறாரு? அந்த வீட்டுக்கு பாம் வெச்சிருக்காரு. வெடிக்கப்போகுது, தீ பரவும்னு தெரியும். கதவை மூடுனா பாதிப்பு கம்மியா இருக்குமே?



9. க்ளைமாக்ஸ் காட்சிகள்ல ஜேம்ஸ் பாண்ட் படங்கள்லயே இதுதான் செம மொக்கை.. அர்ஜூன் படங்கள்ல கூட இப்படி காட்ட மாட்டாங்க/... 



10. படத்துல ஷாங்காய் ,  மக்காவ் என 2 லொக்கேஷன்கள் மட்டும்தான். அதிக இடங்கள் காட்டவே இல்லை.. 2 ஹீரோயின் பேருக்கு.. அதுல ஒரு ஹீரோயின் டிக்கெட் ( அயிட்டம் ). பொதுவா ஜேம்ஸ் பாண்ட் படங்கள்ல அவர் எப்படி ஹீரோயினை மடக்கப்போறாரு? வளைக்கப்போறாரு? அப்டினு ஆர்வமா பார்ப்பாங்க ஆடியன்ஸ். இதுல பல கை பட்ட பஞ்சாமிர்தமா வரும் டிக்கெட்டை அவர் வளைச்சா என்ன? வளைக்காட்டி என்ன?


11. அவ்ளவ் பெரிய மீட்டிங்க் நடக்கும் ஹாலில் பாதுகாப்புக்கு 4 போலீஸ் தானா? நம்ம இந்தியாவிலேயே 100 போலீஸ் இருக்குமே? தனி ஆளாய் வரும் வில்லன் தன்னிடம் இருக்கும் சாதா துப்பாக்கியால் அனைவரையும் வீழ்த்தறான்



12. ஜேம்ஸ் பாண்ட் படம்னா வித்தியாசமான சாகச ஆயுதங்கள் வித விதமா வெச்சிருப்பாரு. இதுல எதுவுமே இல்லை..  இது மாபெரும் மைனஸ் 


http://www.bangersandnash.com/wp-content/uploads/2012/10/berenice-marlohe-in-skyfall-wallpaper.jpeg



இந்தப்படத்தை பல ஆங்கில வலைப்பூக்கள் ஆஹோ ஓஹோன்னு பாராட்டி இருக்கு. ரேங்க் கூட 10 க்கு 8 என போட்டிருக்கு.. ஏன்னு தெரியல. 



 சி. பி கமெண்ட் -  ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். ஆக்‌ஷன் விரும்பிகள் பார்க்கலாம். ஆனா எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்னு சொல்லிட முடியாது . ரெண்டே கால் மணி நேரம் போர் அடிக்காம படம் போனாலும்  ஜேம்ஸ் பாண்ட் ஆக்‌ஷன் காட்சிகள் மொத்தமே 17 நிமிடங்கள் தான்.  ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன். 2 இடத்துல ரொமான்ஸ் நடக்கற மாதிரி இருக்கு. ஆனா சென்சார் கட், ஸ்டில்லை நம்பி போகாதீங்க


 இந்தப்படத்தை பத்தி ஆஹா ஓஹோ பேஷ் பேஷ். இதுதான் ஜேம்ஸ் பாண்ட் சரித்திரத்திலேயே அப்படியாக்கும் இப்படி ஆக்கும் என படத்தின் ஹீரோ அள்ளி விட்ட பேட்டியின் தமிழாக்கம் காண 




diski -twitter sent a dm -
Udhayakumar Durai Udhayakumar Durai
@soundparty

அது ரிவர் வ்யூ மிரர் இல்லை, ரியர் வ்யூ மிரர், rear view mirror. தமிழில் தவறாகவே எழுதுகிறோம், நிறய நாவல்களில் இதை பார்த்திருக்கிறேன்
அட..ஒருவாட்டி கேட்டுப் பாருங்க..
சும்மா அதிருதில்லே
http://www.puradsifm.com/

அட..ஒருவாட்டி கேட்டுப் பாருங்க..
சும்மா அதிருதில்லே
http://www.puradsifm.com/

Wednesday, June 06, 2012

THE RAID REDEMPTION -ஹாலிவுட் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்

http://www.entertainmentwallpaper.com/images/desktops/movie/the-raid-redemption04.jpg

ஒரே ஒரு வீட்டுல, அல்லது ஒரே ஒரு அறைல  முழுப்படத்தையும் ஷுட் செஞ்சு அதை ஹிட் கொடுத்தவங்க கோலிவுட்ல பலர் இருக்காங்க..சம்சாரம் அது மின்சாரம் விசு,ஒண்ணா இருக்கக்கத்துக்கனும் வி சேகர் இவங்க எல்லாம் லோ பட்ஜெட்ல  செம ஹிட்ஸ் கொடுத்தவங்க.. இவங்களுக்கெல்லாம் முன்னோடியா ஸ்ரீதர் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் படம் பூரா ஒரே ஒரு ஹாஸ்பிடல் வார்டில் ஷூட் செய்து மெகா ஹிட் கொடுத்தார்.. அந்த வரிசையில் இந்தப்படமும் சேரும்.. அதிக செலவு ஏதும் இல்லை.. ஒரே ஒரு பில்டிங்க்குள் நடக்கும் ஆக்‌ஷன் ஃபைட் ஸ்டோரி.. 37 பேரு தான் மொத்த நடிகர்களே... ஆனாலும் பார்க்கும்படி இருக்கு..

ஒரு பில்டிங்க்.. அதுல கள்ளக்கடத்தல் மன்னன் இருக்கான்.. அவன் கூட சாணக்யன் மாதிரி புத்திசாலி.. அவன் தான் எல்லா ஐடியாவும் தர்ற ஐடியா டிப்போ .. அப்புறம் ஆக்‌ஷன்க்கு ஒருத்தன்.. இவங்க 2 பேரும் வில்லனுக்கு பக்க பலம்.. அது போக அடியாளுங்களும் இருக்காங்க.. இவங்க அந்த பில்டிங்கை போதைப்பொருள் ஆராய்ச்சிக்கூடமா யூஸ் பண்றாங்க..

இந்தத்தகவல்  போலீஸ்க்கு தெரிய வருது.. ஹீரோ உட்பட 20 பேர் கொண்ட குழு அந்த பில்டிங்கை ரவுண்ட் அப் பண்ணுது.. ஹீரோவோட தம்பி அந்த  வில்லன் குரூப்ல ஒரு அடியாள்.. 


என்ன நடக்குது? எப்படி வில்லன்க மாட்டறாங்க என்பதை ஒரே ஃபைட் மயமா, ஆக்‌ஷன் மயமா சொல்லி இருக்காங்க.. அதிரடி சண்டைப்பிரியர்கள் பார்க்கலாம்.. 



http://content7.flixster.com/rtmovie/88/51/88517_gal.jpg
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. பில்டிங்க்குள்ள போலீஸ் கேங்க் நுழைஞ்சதும் ஒரு பையன் எதிர்ல வர்றான்.. அவன் வில்லன் குரூப்ல ஒரு ஆள்.. போலீஸ் அவனை அசையாதே அசைஞ்சா ஷூட் பண்ணிடுவேன்னு சொல்லுது.. அவன் கண்டுக்கலை.. ஓடிப்போய் ஒரு ரூமை திறந்து கதவை சாத்தி வில்லன் ஆளுங்களை வார்ன் பண்றான், “ போலீஸ் வந்துடுச்சு.. தப்பிச்சிக்கோங்க”ன்னு , அப்போ போலீஸ் அந்தப்பையனை ஷூட் பண்ணுது.. .. ஸ்லோமோஷன்ல போற புல்லட் ரூம் கதவை துளைச்சுக்கிட்டு துல்லியமா அந்தப்பையன் கழுத்தை ஊடுருவுது.. பிரில்லியண்ட் ஷாட்.. 

2. ஹீரோவோட ஃபிரண்ட்  ஃபைட்ல துப்பாக்குக்குண்டு பட்டு காயத்தோட இருக்கான்.. அந்த பில்டிங்க்ல குடி இருக்கற பொது ஜனம் வீட்ல அவனைத்தங்க வைக்க ஹீரோ பிளான் பண்றான்.அப்போ வில்லனோட ஆட்கள் கதவைத்தட்டறாங்க.. உடனே அந்த வீட்டில் இருக்கும் ரகசிய அறைல 2 பேரையும் ஒளிச்சு வைச்சுட்டு ஹவுஸ் ஓனர் கதவைத்திறக்கறாரு.. வில்லன் ஆளுங்க அந்த வீட்டையே புரட்டிப்போட்டுடறாங்க.. 6 அடி நீளமான வாளை அங்கங்கே சொருகி செக் பண்றாங்க..அப்போஹீரோவோட கன்னத்துல வாள் பட்டு நிக்குது..


3. வில்லன் வாளை ரிட்டர்ன் உருவுனா அதுல ரத்தம் இருக்கறது தெரிஞ்சுடும்.. ஹீரோ அங்கே இருக்கும் ஒரு பழைய துணியை எடுத்து வாள் ஓரத்துல  பிடிச்சுக்கறாரு.. வில்லன் வாளை உருவும்போது ரத்தம் எல்லாம் துடைக்கப்பட்டு நீட்டா வருது.. சாத்தியம் இல்லாத காட்சி என்றாலும் படமாக்கப்பட்ட விதம் அருமை..

4. இணைந்த கைகள் படத்துல குள்ளமா இருந்தாலும் ஹீரோவை கதிகலங்க வைக்கும் அளவு ஃபைட் போடுவாரே அது மாதிரி இதுலயும் ஒரு ஆள் ஹீரோ, ஹீரோவோட தம்பி 2 பேரையும் சமாளிக்கும் ஃபைட் அசத்தல் சீன்.. தியேட்டரே கை தட்டுகிறது.. கிராஃபிக்ஸ் காட்சியே இல்லாத ஒரிஜினல் ஃபைட் ..

5. வில்லன் துப்பாக்கி முனையில் போலீசிடம் மாட்டியதும் அவன்  போலீசிடம் குருதிப்புனல் நாசர் போல் மூளைச்சலவை செய்யும் விதமாக பேசிக்குழப்புவதும் ஒரு கட்டத்தில் தாங்க முடியாத கோபத்தில் போலீஸ் வில்லனை ஷூட் செய்வதும் பிரமாதம்..





http://www.hollywoodreporter.com/sites/default/files/2012/03/october_baby_a_l.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்,திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1.க்ளைமாக்ஸில் வில்லன் ஹீரோவிடம் “நீங்க இங்கே வர்றது ஏற்கனவே எனக்குத்தெரியும், அதனால தான் பிளான் பண்ணி எல்லா போலீஸையும் சிக்க வெச்சு கொலை செஞ்சேன்”அப்டினு வசனம் பேசறான்.. ஆனா ஓப்பனிங்க் ஷாட்ல  அந்தப்பையன் ஏன் எல்லாரையும் உஷார் பண்றான்? பில்டிங்க் பூரா கேமரா இருக்கு.. வில்லன் அதை கண்ட்ரோல் ரூம்ல உக்காந்து பார்த்துட்டு இருக்கான்.. அப்புறம் எதுக்கு தேவை இல்லாம அந்த உயிர்ப்பலி?

2. வில்லனோட ரைட் ஹேண்ட் ஹீரோவோட தம்பியை கட்டி வெச்சிருக்கான்.. ஹீரோ அங்கே எண்ட்டர் ஆகறார்.. வில்லனோட ரைட் ஹேண்ட் ஆள் கைல துப்பாக்கி இருக்கு.. அவன் நினைச்சா ஈசியா ஹீரோவை முடிச்சிருக்கலாம், ஏன்னா ஹீரோ நிராயுதபாணியாத்தான் வர்றாரு,ஆனா அந்த லூஸ் என்ன பண்றான், கைல இருக்கற கன்னை தூக்கிப்போட்டுட்டு, ஹீரோவோட தம்பியை ஹீரோ ரிலீஸ் பண்ற வரை வேடிக்கை பார்த்துட்டு அப்புறமா 2 பேர்கிட்டேயும் ஃபைட் பண்ணி சாகறான்.. ஏன் அந்த தலை எழுத்து? எதுக்கு இந்த வறட்டு கர்வம்?

3. க்ளைமாக்ஸ்ல வில்லனை பணயக்கைதியா வெச்சு போலீஸ்ல ஒருத்தர் அந்த பில்டிங்கை விட்டு தப்பிக்க நினைக்கறாரு.. அவர் கைல கன் இருக்கு, வில்லன் நிராயுதபாணியா இருக்காரு.. அப்போ வில்லன் மிரட்டறாரு, உன்னால எஸ் ஆக முடியாது.. அப்டினு.. உடனே குழப்பம் ஆன போலீஸ் வில்லனை ஷூட் பண்ணி தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கறாரு.. எதுக்கு அவ்ளவ் ரிஸ்க்? வில்லனை கை, கால்ல மட்டும் ஷூட் பண்ணிட்டா அவன் ஆபத்தில்லாத ஆள் ஆகிடுவான், அவனை நாயை இழுக்கற மாதிரி இழுத்துட்டுப்போய் இருக்கலாமே?

4. ஹீரோ போலீஸ் யூனிஃபார்ம்ல அந்த பில்டிங்க்ல இருக்காரு, கடத்தல் கும்பல்ல ஒரு ஆளும், ஹீரோவின் தம்பியா வர்றவனும் “ அண்ணே, இந்த யூனிஃபார்மை முதல்ல மாத்துங்க.. சாதா டிரஸ் போட்டுக்குங்க.. அப்போதான் அவங்களுக்கு சந்தேகம் வராது.. “ அப்டினு நியாயமான  ஐடியா தர்றான்.. ஆனா ஹீரோ பெரிய  பட்டர் ஹேர் ஆண்டி போல “ நான் இந்த யூனிஃபார்மை எப்பவும் கழட்டவே மாட்டேன்”னு வசனம் பேசி மாட்டிக்கறான்.. பாத்ரூம்ல குளிக்கறப்பக்கூட யூனிஃபார்ம் போட்டுக்கிட்டே குளிப்பாரோ? தேச பக்தி, தொழில் பக்தி, பணி பக்தி இருக்க வேண்டியதுதான், அதுக்காக  இப்படியா முட்டாள் தனமா நடப்பான்? இடம் பொருள் ஏவல், சாணக்கியத்தனம் வேணாமா?





அடிதடி, சண்டைப்பிரியர்கள் பார்க்கலாம். வ்ழக்கமா ஆங்கிலப்படங்கள்ல வர்ற லொக்கேஷன்ஸ் பார்க்க ஆசைப்படறவங்க  ஏமாந்து போவாங்க. மற்றபடி  படம் ஓக்கே .. 



ஈரோடு அன்னபூரணியில் படம் பார்த்தேன்

 படத்தை டவுன்லோடு  பண்ணி பார்க்க - http://www.hnmovies.com/2012/05/raid-redemption-2012-720p-hdrip-800mb.html

இந்த லிங்க்கை உங்களுக்கு வழங்கியவர்  -ட்விட்டர் நண்பர்

Sunday, April 29, 2012

Marvel's The Avengers (2012) - ஹாலிவுட் ஆக்‌ஷன் சினிமா விமர்சனம்

http://www.indiewire.com/static/dims4/INDIEWIRE/6493cfe/4102462740/thumbnail/680x478/http://d1oi7t5trwfj5d.cloudfront.net/1c/dd6c708edf11e1bcc4123138165f92/file/Avengers-Movie.jpgஹாலிவுட்காரங்க இப்போ வெச்சிருக்கற புது ட்ரெண்ட் என்னான்னா பூமி ஒரு கிரகம்.. வேற ஒரு கிரகத்துல இருக்கற சில கிரகங்களுக்கு வேலையே பூமியை தாக்கறதுதான்... உடனே பூமியை அழிவுல இருந்து காப்பாத்த அவங்கவங்க பட்ஜெட்டுக்கு தகுந்தா மாதிரி  சிங்குலர்லயோ, ப்ளூரல்லயோ ஹீரோக்களை களம் இறக்கி காப்பாத்துவாங்க.. சின்னக்குழந்தைங்க எல்லாம் கை தட்டி படம் பார்க்கறாங்க.. எனக்கு செம எரிச்சல்..


அடையாலம் தெரியாத சில எதிரிகள் பூமியை தாக்கறாங்க... அப்போதான் நிக்ஃபெரி என்பவர் (Director of the international peacekeeping agency known as S.H.I.E.L.D.,) நம்ம ஹீரோஸ் iconic Marvel Super Heroes 1. Iron Man, 2. The Incredible Hulk, 3. Thor,  4. Captain America, 5. Hawkeye and  6.Black Widow  இவங்க 6 பேரையும் வர வெச்சு அவங்களை முடிச்சுக்கட்டறார்.. அதான் கதை.. 


பசங்களை கவர்ந்தது ஹல்க் எனும் பச்சை மனிதன் தான்.. சம்சாரம் மேல கோபப்பட்ட புருஷன் துணி துவைக்கற மாதிரி அவர் வில்லனை நிஜமாவே துவைப்பது செம கலக்கல்.. கால்ல 2 ராக்கெட்டை பற்ற வெச்சது மாதிரி வர்றவரும் குழந்தைகளை குதூகலப்படுத்தறார்.. கைல சுத்தியை வெச்சு அலையறவர் செம காமெடி. 

 கிராஃபிக்ஸ் காட்சிகள் பல இடங்களீல் கலக்கல் என்றாலும் சில இடங்களீல் சலிப்பு..  எப்போ பாரு யாராவது ஷூட் பண்ணிக்கிட்டே இருப்பது கண் வலியைத்தான் தருது.. 


http://vegetarianstar.com/wp-content/uploads/2012/04/jeremy-renner-scarlett-johansson-avengers-hot-tin-roof.jpg

 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள் 


1.  டென்சனே இல்லாம இருக்க இந்த இடம் தானா உனக்கு கிடைச்சுது?

 நோ நோ 

 பின்னே , இங்கே எதுக்கு வந்தே? யோகா பண்ணவா?


2.  ஹல்க்கா மாறாதவரை அவன் கிளவராத்தான் இருந்தான்


3. மனித இனத்தின் மாபெரும் விஷயம் அடிமைத்தனத்தை உள்ளூர விரும்புவதே 


4. சரித்திரம் என்னை மாதிரி யாரையும் பார்த்திருக்காது

 உன்னை மாதிரி பலரைப்பார்த்ததால தான் அது சரித்திரம் 


5. தாக்கறதுக்கு முன்னால திட்டம் போடனும் 

 திட்டம் ஆல்ரெடி போட்டாச்சு.. இப்போ தாக்கப்போறேன்.. 

6.  கூடிய சீக்கிரம் உனக்குத்தெரிய வரும்.

கூடிய சீக்கிரம்னா எத்தனை நாள்?


http://www.belfasttelegraph.co.uk/multimedia/archive/00674/b1d81d48-62f7-44c0-_674800a.jpg

7. உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சா?

 ஆமா, சீரியஸான விளையாட்டு

8. நீ கூப்பீட்டேங்கறதுக்காதுக்காக நான் இங்கே வர்லை. எனக்கே  வேலை இருந்தது ஹி ஹி 

 ஓஹோ நீ கூமுட்டை இல்லைங்கறே..


9.  ஹல்க் - ஒரு ரகசியம் சொல்லவா? பிறந்ததுல இருந்தே நான் பயங்கரக்கோபக்காரன்  ( நர்சை கடிச்சு வெச்சுட்டியா?) நன்னாரிப்பயலே.. )

10.  மனித நேயம் இல்லாதவன் வாழ்ந்தா என்ன? செத்தா என்ன?


11. எங்க மக்கள் எல்லாருமே அமைதியை விரும்பறாங்க . 


ஆனா சிலர் ஃபைட்டையும் விரும்பறாங்களே.. 

 12.  ஹீரோ மாதிரி நடிக்காதே .. 

 அப்போ நீங்க பண்ணிட்டு இருக்கறதுக்குப்பேரு என்ன?

13.  உங்களால என்னைக்கொல்ல முடியாது, ஏன்னா என்னாலயே என்னை கொல்ல முடியலை.. ஒரு தடவை என்ன நானே கன் ல சுட்டேன்.. அப்போ எனக்குள்ள இருந்த இன்னொரு ஆள் அந்த குண்டை துப்பீட்டான்


http://www.boomtron.com/wp-content/uploads/Scar-Jo.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

 1.  ஓப்பனிங்க்ல ஒரு ஃபிகரு சேர்ல கயிறால கட்டி உட்கார வைக்கப்பட்டிருக்கு. ( தல அஜித் பில்லா - 2 ல போஸ் குடுக்கறாரே அது போல ) அவளை சுத்தி 3 பேரு. அப்போ அவளுக்கு ஒரு ஃபோன் வருது.. பேசரவ 2நிமிஷம் லைன்ல வெயிட் பண்ணுனி சொல்லி ஒரு ஜம்ப் பண்ணி  செம ஃபைட் போடறா பாருங்க.. தியேட்டரே அதிருது கிளாப்ஸ்ல.. செம சீன்.. ( பி கு - அந்த சீனில் ஃபிகர் லோ கட் டி சர்ட் ஹி ஹி )


2. மெஷின் மேன் நடந்து வரும்போதே ரோபார்ட்  அவரோட எல்லா பார்ட்ஸையும்  டக டக என உள் வாங்கி க்ளோஸ் ஆவது கலக்கல் ஸ்பீடு

3. கடலில் பயணீக்கும் பிரம்மாண்ட கப்பல் திடீர்னு ஹெலிகாப்டரா மாறி பறப்பது சூப்பர்

4.  சாதா மனுஷன்  நீ என்ன பண்ன முடியும் ? என வில்லன் கேட்கறப்ப ஹல்க் எனும் பச்சை மனிதன் அவனை காலை பிடிச்சு ஒங்கி தரைல அடிக்கறாரே ஆக்‌ஷன் செம 


http://www.metalmachine.net/blog/wp-content/uploads/2012/04/black-widow.jpg
இயக்குநர் சொதப்பிய இடங்கள்


1. சாதா   மனுஷனா இருக்கும் ஆள் 42 சைஸ் சர்ட்டும், 90 சைஸ் பனியனும் அணீஞ்சிருக்கார். ஹல்க்கா மாறூம்போது அவர் சட்டை , பனியன் எல்லாம் கிழியுது.. ஏன்னா அவர் ராட்சச மனுஷனா ஆகிடறார்.. ஆனா பேண்ட் மட்டும் கிழியல/./  அது எப்படி? ஹி ஹி ( குழந்தைங்க எல்லாம் பார்க்கறதுக்காகவா இருக்கும் )


2.  ஹல்க் ஒரு ஜெட் விமானத்துல போற வில்லனை பிடிச்சு டக்னு விமானியா இருக்கற அந்த ஆலை தூக்கி எறிஞ்சுட்டா மேட்டர் ஓவர்.. அதை விட்டுட்டு வேலை மெனக்கெட்டு விமானம் இஞ்சினை டேமேஜ் பண்ணி 10 நிமிஷம் கழிச்சு விமானியை ஏன் தூக்கிப்போடனும்?



3.  ஹல்க் ஒரு இடிஞ்ச கட்டடம் அருகே விழுந்ததும் ஒரு ஆள் நீங்க இரு மாறுனா  யூஸ் ஆகும்னு எடுத்து வெச்சேன்னு அந்த பேண்ட்டை குடுக்கறார்..  அவருக்கு எப்படி ஹல்க் பற்றி தெரியும்? அதே சீனில் அவர் ஹல்க்கை நீங்க ஏலியனா? என விசாரிக்கும் சீன் வருது.. அப்போ அவரைப்பற்றி தெரியாதவர் எப்படி ஆர்டினரியா மாறுவார்னு கண்டு பிடிச்சார்>?

http://static.ibnlive.in.com/ibnlive/pix/slideshow/12-2011/first-look-the/av_630.jpg



சில படங்களை கேள்வி கேட்காம ரசிக்கனும்பாங்க.. அந்த வகைல இதுவும் குழந்தைங்க , பசங்க ரசிக்கும் படமே 

 ஈரோடு ஆனூரில் இந்தப்படம் பார்த்தேன்.. 

டிஸ்கி  - http://www.hotlinksin.com

திரட்டி குறித்து நேற்றே நாம் எழுதியிருந்தோம். நேற்று ‘மாலைச்சுடர்’ மாலை நாளிதழில் www.hotlinksin.com
திரட்டி குறித்து வெளியாகியிருந்த கட்டுரையில் இந்த திரட்டி பதிவுகளை எழுதும் பதிவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. விரைவில் இதற்கான அறிவிப்புகளை www.hotlinksin.com
திரட்டி அறிவிக்க உள்ளது. எனவே பதிவுலக நண்பர்கள் உடனே ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து பரிசுகளை வெல்லத் தயாராகிக் கொள்ளுங்கள்
 
 

Tuesday, February 21, 2012

காட்டுப்புலி - தியேட்டருக்குப்போனவன் பலி - சினிமா விமர்சனம் காமெடி கும்மி

http://www.cinemaaajtak.com/wp-content/uploads/2012/02/Biyanka-Desai-And-Sayali-Bhagat-In-Kaattu-Puli-Movie-WallPapers-Images-4.jpg

உல்டா பண்றதுன்னு முடிவெடுத்துட்டா இங்க்லீஷ் படத்துல இருந்த மாதிரி அட்டக்காப்பி அடிக்கனும்.. சொந்த சரக்கை படம் எடுக்க நினைச்சா ஒழுங்கா திரைக்கதை அமைச்சு படம் எடுக்கனும்.. ரெண்டுங்கெட்டானா  ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வெச்சா இப்படித்தான்.. படம் ஊத்திக்கும்.. 

படம் ஓப்பன் பண்ணுனதும் ஒரு காட்டுல ஒரு லவ் ஜோடியை யாரோ கொலை பண்ற மாதிரி காட்டிட்டுதான் டைட்டிலே போடறாங்க.. அப்போ எனக்கு தெரியலை படம் கொலையா கொல்லப்போகுதுன்னு அவ்வ்வ்வ்வ்வ்

அடுத்த ஷாட்ல 2 லவ் ஜோடிங்க கார்ல அதே ஏரியாவுக்கு போகுது கார் பஞ்சர் ஆகிடுது.. ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன், அவர் சம்சாரம், ஒரு குழந்தை 3 பேரும் அதே இடத்துக்கு வர்றாங்க.. இப்போ 3 லவ் ஜோடி ( ஆஹா கணக்குல புலிடா நாங்க )

இப்போ அர்ஜுன் கார் அவங்க கார்மேல இடிச்சுட்டதால 2 காரும் கிளம்பலை.. செல் ஃபோன் டவர் எடுக்கலை.. ( லாஜிக் கரெக்ட்டா மெயிண்ட்டெயின் பண்றாங்களாம் ந்க்கொய்ய்யால)

 இப்போ என்ன செய்யனும்? அதே மெயின் ரோட்ல நின்னு போற வர்ற வண்டிகள்ட்ட லிஃப்ட் கேட்கலாம், அல்லது அவங்க கிட்டே யாரோ ஒருத்தர் கொஞ்சம் பணம் கொடுத்து போற வழில எங்கே டவர் கிடைக்குதோ அங்கே போய் ஃபோன் போட்டு இங்கே ஒரு மெக்கானிக்கை அனுப்ப உதவுங்கன்னு கேட்கலாம்.. அதை எல்லாம் விட்டுட்டு லூசுங்க மாதிரி காட்டுக்குள்ளாற போறாங்க.. ( ஏன் அந்த ரூட்னு கடைசி வரை சொல்லலை.)


அங்கே  ஒரு லூசு வில்லன் குதிரைல வர்றான்.. அவன் லூசுன்னு எப்படி கண்டு பிடிச்சேன்னா யாரையாவது கொலை செஞ்சு அவங்க ரத்தத்தை  வலது சைடுல மட்டும் பூசிக்குவான் ( ஒரு வேளை ரைட் சைடோ பிளட்டோ பூசியோ போபியா வியாதி இருக்கோ என்னவோ?)

அவன் தன் அடி ஆட்களோட காட்டுக்குள்ள வர்ற ஆட்களை கொலை செஞ்சு மனித உடல் உறுப்புகளை மட்டும் தனியா எடுத்து வேற ஒரு கேங்க்குக்கு அனுப்பிட்டு மீதியை இவர் டிஃபனாவோ , லஞ்சாவோ, டின்னராவோ சாப்பிட்டுக்குவார் உவ்வே.


காட்டுக்குள்ளே வழி தவறிப்போனதும் டைரக்டருக்கு ஒரு டவுட்.. கதையே இல்லாத இந்தப்படத்துல  மீதி படத்தை எப்படி நகர்த்த?

 அசிஸ்டெண்ட் டைரக்டர் ஐடியா தர்றார்.. அது ரொம்ப சிம்ப்பிள் சார் 3 லவ் ஜோடிங்க இருக்கு , ஆளுக்கு ஒரு குட்டி ஃபிளாஸ் பேக் அப்டிங்கற பேர்ல 3 டூயட் வைச்சா போதும்கறார்..

3 லூஸ் ஜோடிங்களும் பாட்டு பாடிட்டு அலையுதுங்க.. 13 ரீல் வரை ஃபைட்டே போடாம ஒப்புக்கு சப்பாணியா வர்ற அர்ஜூன் க்ளைமாக்ஸ்ல மட்டும் ஒரே ஒரு ஃபைட் போட்டு படத்தை. முடிச்சு வைக்கறார்.. உஷ் அப்பா சாமி.. சோடா ப்ளீஸ்..


http://www.telugucinemasite.com/live/wp-content/uploads/2012/01/Kaattu-Puli-6.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. இது ஒரு டப்பிங்க் ப்டம்னு தெரியாத மாதிரி நீட்டா போஸ்டர் ஒட்ட வெச்சது

2.  படத்துல வர்ற 3 ஜோடிகளையும் ஹாயா பழக விட்டு ஷூட் பண்ணது..

3. ஏதோ மலையாள பிட்டுப்படம் மாதிரி  படம் எடுத்தாலும் குடும்பப்படம் மாதிரி ஏமாத்த அர்ஜூன் குழந்தைக்கு  ஏதோ நோய் இருக்குன்னு செண்ட்டிமெண்ட் சீனெல்லாம் புகுத்துனது..

4. சென்சார்ல படம் மாட்டி 14 கிஸ் சீன் கட்னு ஒரு வதந்தியை இவரா பரப்பி விட்டது ( ஆனா நான் அதை நம்பி போகலை. )



http://reviews.in.88db.com/images/Kaattu-puli-hot/Kaattu-puli-movie-hot-photo.jpg

இயக்குநர் செய்த லாஜிக் மிஸ்டேக்ஸ் ( அண்ணன் புடுங்குனது எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான் )


1. ஓப்பனிங்க் ஷாட்ல அந்த ஃபிகரு மலை ஏறும்போது மேலே உச்சில வில்லன் இருக்கறதை பார்த்துடுது. மேலே போனாலாவது பிழைக்க ஏதோ சான்ஸ் கிடைக்கும், 60 அடி உயரத்துல இருந்து யாராவது குதிப்பாங்களா? ஆள் அவுட் அவ்வ்வ்

2.  அர்ஜூன் சம்சாரம் எக்ஸ்கர்ஸன் வர்ற இடத்துல கைல 84 பிளாஸ்டிக் வளையல் போட்டிருக்கே அது எதுக்கு? ( டாக்டர் சம்சாரம் பிளாஸ்டிக் வளையல் போடுமா? இப்போ எல்லாம் குப்பாத்தா கூட பிரேஸ்லெட் போடுது. )


3.நடு காட்ல பாழடைஞ்ச பங்களாவைப்பார்த்தா படிப்பறிவே இல்லாத மஞ்ச மாக்கான் கூட அங்கே போகமாட்டான், ஆனா டாக்டர் அர்ஜூன் போறாரே எபடி?

4. வில்லன் கிட்டே இருந்து தப்பிச்சு ஒருத்தன் ஓடறான், வில்லன் மனசுக்குள்ள விஜய்னு நினச்சுக்கிட்டு பார்த்துட்டே இருக்கான், அவன் ஒரு கி மீ ஓடுன பின் சுடறான் அவ்வ்வ்வ்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhGTWFbo-1CMAwO_NvWabGX3boIP3tA_v7QgZQMAPIqH1x8E0GJWWtMn6eHgY-MFkHcF0z3Yz2Z9BDqypinU2KZ5_gp9NMfnnLXVr2nd-2m1nVEXwmDcSMrDO3uS7O-Rlc4tFcOweW7ubm/s1600/Kaattu+Puli+Movie+New+Stills+Mycineworld+Com+(1).jpg

5. க்ளைமாக்ஸ்ல ஒரு உயரமான இடத்துல கட்டப்பட்ட மர வீட்ல அர்ஜூன் அண்ட் கோ இருக்காங்க.. கீழே வில்லன் தீ வெச்சுட்டான்.. உடனே ஒரு லவ் ஜோடி மட்டும் கீழே குதிச்சு ஓடி வில்லனை டைவர்ட் பண்றாங்க.. டவுட் 1. அவ்லவ் உயரத்துல இருந்து குதிச்சு கால் உடையாம இருப்பது எப்படி? அவங்க ஓடுனதும் வில்லன் உடனே லூஸ் மாதிரி எல்லா அட்களையும் கூட்டிட்டு பின்னாலயே நாய் மாதிரி ஏன் ஓடனும்? 2 ஆட்களை இங்கே விட்டுட்டு போக மாட்டானா?

6. வில்லன் ஆட்கள் குதிரைகள் ல ஓடைல இறங்கி தேடறாங்க. அப்போ அதனோட ஆழம் 2 இஞ்ச் தான்.. நல்லாவே தெரியுது.. ஆனா க்ளோசப் ஷாட்ல காட்டறப்ப 5 அடி ஆழத்துல தண்ணிக்குள்ள கேமராவை வெச்சு காட்றப்ப குதிரைங்க எல்லாம் மூழ்கி இருக்கற மாதிரி இருக்கே , அது எப்படி?

7. ஒரு சீன்ல வில்லன் அம்பு விடறான்.. வேகமா வந்த அவனோட ஆள் அந்த அம்பை தான் நெஞ்சுல வாங்கிக்கறா.. அதுக்கு அவனை தள்ளி விட்டிருக்கலாம்..

8. தப்பு செய்வோம், பூவுலகம், பாவாடை பூக்களே அப்டினு 3 பாட்டு உருப்படியா இருக்கு ஓக்கே அந்த பாட்டுக்கெல்லாம் என்ன வேலை.. தேவையே இல்லை//


http://www.tamilnow.com/movies/gallery/kaattu-puli/kaattu-puli-actress-hot-photo-620.jpg

மொக்கை படத்துலயும் மனதில் நின்ற வசனங்கள்

1. உன் பிள்ளைகளும், என் பிள்ளைகளும் வளர்றப்ப இந்தக்காட்டையே பிளாட் போட்டு வித்திருப்பாங்க.

2.  காலேஜ்ல எனக்கு எம் எம் ஜி ( MMG) -னு பேரு

 அப்டின்னா?

 மோஸ்ட் மிஸ்டீரியஸ் கை.. ( MOST MYSTERIOUS GUY)

3.  சூறாவளி பற்றி உனக்குத்தெரியலை.. அது ஒரு நிமிஷத்துல  15 கி மீ வேகத்துல தாக்கும்


4. எப்பவும் புயல் வீசறப்போ நம்ம கண்ணை சேஃப்ஃபா வெச்சுக்கனும்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwBMSxwBVgqcTGfRAvKh_nUWSPs6qnAckCUSYtAiD4qGObR9bJ9K_mMZfzrfaeSrBkKUMO6rTpHzUAcuQ4GEpuQiN9o1ksnK8CLHR83gJEs1SJthXBPge63gb73xb30VUYMhFXm022XkY/s1600/kattu+puli+movie+hot+stills+%25281%2529.jpg

5.  பசி இருக்கற வரை தான் வாழ்க்கைல  வெறி இருக்கும்.

6.  வேட்டை ஆடுனாத்தான் அது சிங்கம்.. உயிரை பறிச்சாத்தான் அது ருத்ரன் ( யாரும் டாக்டர் ருத்ரனை தப்பா நினைக்காதீங்க, வில்லன் பேரு இதுல ருத்ரன் )

7.  சட்டத்துக்கு எப்பவும் சம்பாதிக்கறவன் விரோதிதான்.. சம்பாதிக்கறவனுக்கு சட்டம் விரோதி ( யோவ் 2ம் 1 தான் யா)

இந்த கேவலமான படத்தை பார்த்தே தீரனும்னு யாராவது நினைச்சா டி வி ல அடுத்த வாரம் போடுவாங்க, அப்போ பார்த்துக்குங்க

 எதிர்பார்க்கும் விகடன் மார்க் - 35 ( ஆனா டப்பிங்க் படத்துக்கு  நோ விமர்சனம்)

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - கேவலமா இருக்கு, இந்த மாதிரி டப்பா  படம் பார்த்து விமர்சனம் எழுத அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://www.apden.com/images/content/2012/02/10/1328892913_biyanka%20desai%20&%20Sayali%20Bhagat%20hot%20Aantham%20kattu%20puli%20sabhotcom54df7%20(8).jpg

Saturday, January 14, 2012

வேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம்

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/01/vettai-arya-300x294.png 

அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி ஆபத்பாந்தவனாய் கை கொடுப்பது நம்ம எம் ஜி ஆர் ஃபார்முலாதான்.. அதை கையில்  எடுத்து சக்சஸ் அடைஞ்சவங்களும் உண்டு, கையை சுட்டுக்கிட்டவங்களும் உண்டு./.. இந்த முறை கயில் எடுத்திருப்பது என் லிங்குசாமி... சாஃப்ட் ஹீரோ மாதவனையே ரன்னில் ஆக்‌ஷன் ஹீரோ ஆக்கியவர்.. கேட்கவா வேணும்.. மசாலா பொங்கல் படைச்சிருக்கார்.. 

எங்க வீட்டுப்பிள்ளை பயந்தாங்கொள்ளி எம் ஜி ஆர் கேரக்டர் மாதவனுக்கு.. போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் இருந்த அப்பா இறந்ததும் ஆட்டோமேடிக்காக இவருக்கு எஸ் ஐ போஸ்ட் வருகிறது.. கலைஞருக்குப்பிறகு ஸ்டாலின் சி எம் ஆக முயற்சிப்பது போல். ஆர்யா அழகிரி மாதிரி ஒரு அதிரடி பேர்வழி.. வேலை ஏதும் இல்லா வெட்டாஃபீஸ்.. ஆனா இவங்க 2 பேரும் கலைஞர் பசங்க மாதிரி அடிச்சுக்கலை,.. ஒத்துமையா இருக்காங்க.. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்தாலும் எல்லா கேஸ், சண்டை எல்லாத்தையும் டீல் பண்றது ஆர்யா. அதுக்கான பலனை அனுபவிப்பது மாதவன்.. லோக்கல் பாஷைல சொல்லனும்னா  கெடா வெட்றது ஆர்யா, பொங்கல் சாப்பிடறது  மாதவன்...

ஹீரோக்கள் 2 பேரு.. அண்ணன் , தம்பின்னா ஹீரோயின் எப்படி இருக்கனும்? கரெக்ட்.. அவங்களும் அக்கா தங்கை தான்.. ஆர்யாவுக்கு அமலா பால், மாதவனுக்கு சமீரா ரெட்டி.. மாதவன் சார்பா பொண்ணு பார்க்க போன ஆர்யா அண்ணியை ஓக்கே சொல்ல தங்கை அமலா பால் ஆர்யாவுக்கு த்ரட் விடறார்.. அதாவது நூல் விடறாரு.. 





http://images.news.pluzmedia.com/slide/big_Vettai__The_season_of_celebration_begins-f50d7d5ae3ea639eb139216bc3dd496e.jpg

படம் ஃபேமிலி, லவ் , ஜாலியா போனா அதுல என்ன இண்ட்ரஸ்ட் இருக்கு? அந்த ஏரியாவுல 2 தாதாங்க.. ( ஆனா 2 பேரும் பக்கா சோதாங்க.. )அந்த தாதாவோட சரக்கு லாரியை ஆர்யா மடக்கி மாதவன்கிட்டே ஒப்படைக்க மாதவன் நல்ல பேர் வாங்கறார்.. நாளா வட்டத்துல மாதவன் டம்மி, ஆர்யா தான் மம்மி அப்டிங்கற மேட்டர் வில்லன் குரூப்க்கு தெரிஞ்சுடுது.. சசிகலாவை ஜெ  கூப்பிட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கற மாதிரி மாதவனை அடிச்சு துவைச்சு காயப்போட்டுடுது வில்லன் குரூப்..

 நாட்டுக்கு ஒரு நல்லவன்ல ரஜினி குஷ்பூ கிட்டே சொல்வாரே அந்த மாதிரி ஆர்யா சொல்றாரு , எத்தனை நாளைக்கு  நானே உன்னை காப்பாத்திட்டு இருப்பேன், நீயும் வீரன் ஆகு  படத்தை சீக்கிரம் முடிக்கனும்கறாரு.. 

வைஜயந்தி ஐ பி எஸ் படத்துல வர்ற மாதிரி 4 கி மீ ரன்னிங்க், 18 பஸ்கி எடுத்து  உடனடி சேமியா, திடீர் இட்லி மாதிரி மாதவன் வீரன் ஆகிடறார்.. இப்போ எண்ணி பாருங்க, மொத்தம் 2 வீரன்க, வில்லன்களும்  2 , ஹீரோயின்களும் 2 .. ஹி ஹி  ( எனக்கு என்ன குறைன்னா 2 வில்லிகளையும் காட்டி இருந்தா  இன்னும் செமயா இருந்திருக்கும்.. )



http://www.boxoffice9.com/gallery/var/albums/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Vettai-Stills,Photos,Pictures/Vettai%20Movie%20Stills00.jpg?m=1307983153

இடைவேளை வரை ஜாலியா ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம்னு போகுது, அதுக்குப்பிறகு ஆக்‌ஷன் அதிரடி தான்.. பக்கா கமர்ஷியல் மசாலா.. இந்தப்படத்தை ஹிந்தில வேற பண்ணப்போறாராம் அவ்வ்வ்வ் , ஆனா அங்கேயும் ஹிட் ஆக்கிடுவார்னு தோணுது.. 

இப்போ இருக்கற ஹீரோக்கள்ல ஆர்யா மாதிரி ஒரு அசால்ட் கேரக்டரை நான் பார்த்ததே இல்ல.. எதுக்குமே அலட்டிக்காம சர்வ சாதாரணமா பாடி லேங்குவேஜ்ல தெனா வெட்டு, முகத்தில் எப்போதும் ஒரு அலட்சியம் , நல்லா கேரக்டர்ல மேட்ச் ஆகறார்.. அமலா பால் குளிச்சுட்டு டர்க்கி டவல் மட்டும் கட்டிட்டு வந்து அவரை கிராஸ் பண்ணி போன பின் தாங்க்ஸ் சொல்றாரே செம.. ஒரே அப்ளாஸ்தான் தியேட்டர்ல.. 

மாதவன்.. இயல்பாவே சாஃப்ட் கேரக்டர் என்பதால் அவர் போலீஸ் யூனிஃபார்மில் பயந்துநடுங்குவது செம காமெடியாக இருக்கு.. ஆர்யா செய்யும் வீரசாகசங்கள் எல்லாம் இவர் செஞ்சதா மக்கள் நினைக்கறது இவருக்கு  தெம்பையும், பயத்தையும் ஒரு சேரத்தர்றதை அவர் நல்லாவே காட்டி நடிச்சிருக்கார்.. 

vettai tamil movie stills00-5


அமலா பால் தான் ஹீரோயின், ஏன்னா அவருக்குத்தான் 2 டூயட்.. அதுவும் இல்லாம கார்ல சரச சலாபம் , லிப் டூ லிப் கிஸ் அடிக்கறதுன்னு பாப்பாவுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை, பாவம் நாம தான் பயந்து பயந்து பார்க்க வேண்டி இருக்கு..  நடன காட்சிகளில் அவருக்கு நளினம் சரியாக வரவில்லை.. ( ஒரு வேளை இயற்கையாவே அவருக்கு நளினம் வர்லையோ என்னவோ?)

சமீரா ரெட்டி கொஞ்சம் முற்றல் முகம் தான் ( முகம் மட்டுமா? நடிப்பும் தான்னு சொல்ல வந்தேன் ஹி ஹி ) அவர் பல காட்சிகளில் ஓவர் ஆக்டிங்க்.. நடன காட்சிகளில் இவர் ஸ்கோர் பண்ணிடறார்.

2 ஹீரோயின்களுக்கும், இயக்குநருக்கும் பொதுவான ஒரு அட்வைஸ்,, கிராமத்துப்பெண் கேரக்டர்னா  இயல்பான மேக்கப்பில் கொஞ்சம் வெட்கம், நாசூக்கு எல்லாம் முகத்துல, பாடி லேங்குவேஜ்ல காட்டனும்..  அரை கிலோ பவுடர், கால் கிலோ ரோஸ் பவுடர், கால் லிட்டர் ஃபேரன் லவ்லி எல்லாம் போட்டுக்கிட்டு தாவணி போட்டா அது வில்லேஜ் கேர்ள் ஆகிடுமா? ( வாகை சூடவா இனியாவை ஒரு முறை பார்க்கவும்)

தூத்துக்குடி தான் கதைக்களன் என்பதால் வழக்கம் போல் அரிவாள், அடிதடி. வெட்டு எல்லாம் உண்டு என்றாலும் இயக்குநர் சாமார்த்தியமாக லவ் , ஃபேமிலி மேட்டர் கொஞ்சம் சேர்த்து போர் அடிக்காமல் க்தையை நகர்த்துகிறார்.. 




Vettai Movie Stills00-15

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  ஓப்பனிங்க் ஷாட்ல ஆர்யா சினிமா தியேட்டர்ல் பண்ற ஆக்‌ஷனை திரைல ஓடற ரவுத்திரம் பட ஹீரோ ஜீவா ஆச்சரியமா பார்க்கறதை காட்ன விதம்.. 

2.  முதல் பாடல் காட்சியில் ஏகப்பட்ட பனை மரங்களை ஒரே ஷாட்டில் அழகாக ஏரியல் வியூவில் காட்டியது , ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு ( நீரவ் ஷா)

3.  மாதவன் எஸ் ஐ ஆக  ஜாயின் பண்ணும்போது உயர் அதிகாரியாடு சல்யூட் அடிக்கும் 3 முறையும் அவர் ஸ்டிக் தவறி கீழே வழிவதும் அவர் வழிவதும் செம காமெடி..

4.  மாதவனை நாசர் பாராட்டி அடுத்த பிராஜக்ட்க்கு தயார் செய்து அனுப்ப முயற்சிக்கையில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பலி ஆட்டை சிம்பாலிக்காக காட்டுவது கல கல காமெடி.. 

5.  கட்டிப்புடி பாடல் காட்சியில் அமலா பாலின் அழகை  எல்லாம் அள்ளிகொள்ளும் விதமாய் ஆடை வடிவமைப்பு செம..  க்ளை மாக்ஸ் குத்துப்பாட்டான பப்பாறப்பா பாட்டில் நடன அமைப்பு அள்ளிக்கொள்கிறது.. லொக்கேஷன் செலக்‌ஷனும் செம.. 

6. யுவன் சங்கர் ராஜா இசையில் தைய தக்கா தக்க, டம டம  பாடல்கள் ஒன்ஸ்மோர் சொல்ல வைக்கிறது.

7 . தாதா கதை என சலித்துக்கொள்ளாதபடி புத்திசாலித்தனமாய் திரைகதையில் ஆர்யா - அமலா பால் காதலை நுழைத்த விதம்.. 


Vettai Movie Stills00-5

.
இயக்குநர் கோட்டை விட்ட  சில இடங்கள்

1.  தனக்குப்பிடிக்காத அமெரிக்க மாப்ளையுடன் காரின் பின் சீட்டில் வரும் அமலா பால் ஜன்னல் ஓரம் உக்கார வேண்டியதுதானே, ஏன் அப்படி ஒட்டி உக்காந்துட்டு வரனும்? இந்த லட்சணத்துல காதலன் ஆர்யா டிரைவிங்க் த கார்.. 


2. அமெரிக்க மாப்ளையை போலீசில் மாட்டி விட ஆர்யா கோக் என சொல்லி சரக்கை கொடுக்கறா... என்ன தான் அவன் கேனை மாப்ளையா இருந்தாலும் சரக்கு வாசத்துக்கும், கோக் வாசத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருக்குமா?

3. ஒரு சீன்ல வில்லன்கள் புடை சூழ நிற்கும்  ஆர்யா தன் அண்ணன்மாதவன்க்கு ஃபோன் போட செல் ஃபொன்ல நெம்பரை டைப் பண்றார்.. அது அவர் ஃபோன், மாதவன் அவர் சொந்த தம்பி. ஆல்ரெடி ஸ்டோர் ஆகி இருக்காதா நெம்பர்? வழக்கமா பிரதர்னோ, அவர் பேரோ வரனும்.. ஆனா ஏன் அவர் ஒவ்வொரு நெம்பரா டைப் பண்றார்?

4.  மாதவனுக்கு ஆக்சிடெண்ட் ஆகி 3 நாள்  வீட்டுக்கே வர்லை.. சமீரா ரெட்டி அப்போ எல்லாம் கண்டுக்காம ஆர்யா மாதவனை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றப்போ  பதர்றாரே அது எப்படி? அதே போல் விபத்து நடக்கும்போது நெற்றியில், காது அருகில் பயங்கர காயங்களோட இருந்த மாதவன் 3 நாள்ல வீட்டுக்கு வர்றப்ப முகம் டென்னிஸ் கோர்ட் மாதிரி நீட்டா இருக்கே அது எப்படி?

5.  க்ளைமாக்ஸ்ல  வில்லன் ஆட்கள்  சமீரா வீட்டுக்குள்ள நுழைஞ்சிடராங்க..  உடனே சமீரா மாதவனுக்கு தகவல் தெரிவிக்க , அவர் வீட்டை தாழ் போட்டுட்டுஅங்கேயே இரு, நான் வந்துடறேன்கறார்.. கொஞ்ச நேரத்தில் சமீராவின் தங்கை அமலா பால் பர்ச்சேஸ் முடிச்சு வீட்டுக்கு வந்து வில்லன் கிட்டே மாட்றார்.. மாதவனுக்கு ஃபோன் செஞ்ச சமீரா தன் தங்கைக்கு ஃபோன் செஞ்சு இப்போ வராதே என ஏன் சொல்லலை?

Vettai Movie Stills00-2


பம் பம்  பாடல் காட்சியில் ரன் பட தேரடி வீதியில் தேவதை வந்தா பாட்டின், நடன அமைப்பின் பாதிப்பு தெரியுது.. 

ஏ செண்ட்டர்களில் 60 நாட்கள், பி செண்டர்களில்  40 நாட்கள், சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று 

சி,பி கமெண்ட் - ஆக்‌ஷன், ஜாலி டைம் பாஸ் பிரியர்கள் பார்க்கலாம்

ஈரோடு ஆனூர் தியேட்டரில் படம் பார்த்தோம் ( வித் நல்ல நேரம் சித்தோடு சதீஷ் )


Vettai Movie Stills00-23


டிஸ்கி -1

நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

 

டிஸ்கி 3

கொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்