Showing posts with label 36 வயதினிலே - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label 36 வயதினிலே - சினிமா விமர்சனம். Show all posts

Friday, May 15, 2015

36 வயதினிலே - சினிமா விமர்சனம்

ஹிந்தியில்  ரிலிஸ்  ஆன  இங்க்லீஷ் விங்க்லீஷ்  ஸ்ரீதேவிக்கு  எப்படி   ஒரு  கம் பேக்  ஃபிலிமாக  இருந்ததோ அதே  போல்  ஜோதிகாவுக்கு  இது ஒரு  கம்பேக்  ஃபிலிம்  என்பதில்  மாற்றுக்கருத்து  இல்லை  என்றாலும்  மலையாளத்தில்  சூப்பர்  ஹிட் ஆன  HOW OLD ARE YOU  படம்  போல் இது  சூப்பர்  ஹிட் ஆக  வாய்ப்பு  இல்லை  என்பதற்கு என்ன காரணம்  என்பதை  முதலில் பார்த்துடுவோம். விமர்சனத்துக்கும்  இதுக்கும் சம்பந்தம்  இல்லை. 


மஞ்சு வாரியர்  மலையாள  ஹீரோ  திலீப்புடன்  லவ்  மேரேஜ்  பண்ணிக்கிட்டு 16 வருசம் ஒத்துமையாக்குடித்தனம்  பண்ணார். ( பக்கத்தில்  இருந்து  பார்த்த  மாதிரியே சொல்றேனா? ) அதுக்குப்பின்  திலீப்  காவ்யா மாதவனுடன்  கனெக்சன் ஆகி  கள்ளக்காதலில்  பிசி  ஆனதும்  டைவர்ஸ்  வாங்கிட்டார். அப்போ  அவர்  பொண்ணும்  திலீப்  உடன்  போயிடுச்சு. அந்த  சமயத்தில்  வந்ததால் அனுதாப  ஓட்டில்  படம்  செம  ஹிட் அடிச்சது. ஆனால்  சூர்யாவுடன்  ஜோதிகா  அழகிய தாம்பத்ய வாழ்வு  வாழ்ந்து  வரும்  வேளையில் அது  போல்  பரபரப்பு  ஹிட் அடிக்க  வாய்ப்பு இல்லை.


சரி  , படத்தோட  கதை  என்ன? 




நாயகி  கல்யாணம்  ஆன  பொண்ணு , அவருக்கு 13 வயசுல  ஒரு  பொண்ணு ( திரைக்கதைல  பொண்ணுக்கு 16  வயசுன்னு  காட்டி  இருந்தா தமிழன்  கொஞ்சம்  கிளுகிளுப்பா  இருந்திருப்பான்) .செண்ட்ரல்  கவர்மெண்ட்  ஜாப். தான் உண்டு  தன்  வேலை  உண்டு அப்டினு  இருக்கு. ஆனா  அவரை அவரோட  புருசனோ  பொண்ணோ  புரிஞ்சுக்கலை. எடுத்தெறிஞ்சு  பேசிடறாங்க . 

புருசனும் , பொண்ணும்  ஃபாரீன்  போக வேண்டிய  சூழ்நிலை.  நாயகி  இங்கே  தனியா  இருக்கு. மொட்டை  மாடியில்  இயற்கை  விவசாயம்  பண்ணி  ஜனாதிபதியே பாராட்டும் அளவுக்கு  ஃபேமஸ்  ஆகிடுது. புருசன்  ரிட்டர்ன்  வந்து  மனைவியையும்  ஃபாரீன்  கூப்பிடும்போது  அவ  என்ன  முடிவு  எடுக்கறா? என்பதுதான்  திரைக்கதை. 


நாயகியா  ஜோதிகா. வாலி படத்தில்  துறுதுறுப்பா  ஷைனிங்க்கா  பார்த்துட்டு  இப்படி  டல்லா  பார்க்க  மனசுக்கு கஷ்டமாத்தான்  இருக்கு. அதுவும்  இல்லாம கல்யாணம்  ஆன  பொண்ணுங்களை  தமிழன்  ரசிக்கவும்  மாட்டான். இப்படி  பல சிரமங்களுக்கு  இடையே தான்  ஜோதிகாவை  ரசிக்க  வேண்டி  இருக்கு . 

ஆனா  ஜோதிகாவின்  நடிப்பு  பாடி  லேங்குவேஜ்  டயலாக்  டெலிவரி  எல்லாமே  அழகு .  மொழி படத்துக்குப்பின்  மிக  இ யல்பான  நடிப்பு .  பூக்கள்  தூவிய  வரவேற்பு 


நாயகனா  ஒப்புக்குச்சப்பாணியா  ரகுமான் .தாடியுடனே  ஏன்  எல்லா சீனிலும்  வர்றார்  என  தெரியல. சூர்யா ஷூட்டிங்  ஸ்பாட்டிலேயே   இருந்தார்  போல . நாயகியிடம் ஒரு  மீட்டர்  தள்ளி  நின்னே  டயலாக்  பேசறார்


மகளாக  வருபவர்  நடிப்பு  கன கச்சிதம்.  விருமாண்டி  அபிராமி  முகத்தில்  பரவசம்  பொங்க  வர்றார்.

,
டெல்லி கணேஷ் ,  எம்  எஸ்  பாஸ்கர்  ,  நாசர்  இவர்களின்  கெஸ்ட்ரோல்    கனகச்சிதம்


பாடல்கள்  இசை  சுமார் தான்.  பின்னணி இசை  ஓக்கே ரகம் .


இயக்கம்  ஓக்கே , அசிச்டெண்ட்  டைரக்டர்ஸ்  பெரும்பாலும்  பெண்கள்  போல  . ஆண்களை   மட்டம்  தட்டும்  காட்சிகள்  அதிகம்




மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1   யார்டி அவன்? என்னை ஆன்ட்டி னு கூப்பிடறான்?

35+ எல்லாரும் எங்களுக்கு ஆண்ட்டிதான் #36


2 பிகரு = ஆம்பளைங்களுக்கு 36ன்னா அங்க்கிள்னு கூப்டுவீங்களா?

ஹாய் கூட சொல்ல மாட்டோம் #36


3  எங்க காலத்துல 1 ,2 பிஞ்சில் பழுக்கும்.இப்போ எல்லோரும் இன்ட்டர்நெட்டால பழுத்துட்டாங்க



4 எனக்குத்தெரியாது ங்கற ஒரே பதிலை வெச்சுக்கிட்டு மொத்த ஆயுசையும் கழிப்பது உலகத்துலயே இந்தப்பொண்ணுங்கதான் #36 (எடிட்டட்)


5 கண்ணை மூடி தூங்கிட்டா எல்லாருக்கும் கனவு வரும்.ஆனா கனவு காண மினிமம் குவாலிபிகேசன் வேணும்


6   அப்பா அம்மா யாரும் இல்லாததுதான் அவ பிரச்னை.அம்மா அப்பா இருப்பதுதான் என் பிரச்னை #36


7 AC ரூமில் பாட்டி = பிரிட்ஜூக்குள்ள பால் தான் வைப்பாங்க.நம்மையே கொண்டு வந்து வெச்சிருக்காங்களே?#36



8 வாழனும்கறதை விட சுய மரியாதையுடன் வாழனும்கறது முக்கியம் #36


9 முதல்முறை ஒருவரைப்பார்த்து மயங்கினேன்.மனைவியானென்.2வது முறை மயங்கினேன்.தாய் ஆனேன்..மயக்கம் எல்லோருக்கும் உண்டு #36

10 நமக்குன்னு ஒருத்தர் இருக்காங்கங்கற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கனும்.அப்டி ஒரு ஆள் இருக்கனும்.அப்போதான் நிம்மதியா இருக்க முடியும்#36


11 மொட்டை மாடில விவசாயம் பண்ணப்போறேன்
அது சரி வருமா? மொட்டை மாடில சரக்கடிக்கலாம் .சீட்டாடலாம் 


12 பிரசவ வலியை விட ஒரு பொண்ணுக்குபெரிய வலி எது தெரியுமா?அவ புருசன் அவளை அவமானப்படுத்துவதுதான் #36 ,வாட் எ ஒன்டர்புல் டயலாக்


13 மானிய விலையில் விஷம் கிடைக்கும் ஒரே நாடு இந்தியாதான் #36 ( எடிட்டட்)

14 ஒரு பொண்ணோட கனவு ஆசை லட்சியம் எல்லாமே கல்யாணத்துக்குப்பின் எக்ஸ்பயர்டு ஆகிடும் #36



15 இவ்ளவ் மருந்து அடிச்சா எப்டி ஜனங்க சாப்பிடுவாங்க?விஷம்.
விஷத்தைப்பார்த்துக்கூட பயப்படமாட்டான்.விலையைப்பார்த்தா பயப்படுவான் # 36



 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  திருமணம் ஆன பெண்கள் ,ஆகப்போகும் பெண்கள் ,ஆகி ஜோடி மாறி வரும் பெண்க்ள் என தியேட்டரில் பெண்கள் கூட்டம் #36 வயதினிலே@ ஈரோடு அபிராமி


2 பிரமாதமாக பேசப்பட்ட வாடி ராசாத்தி பாடல் படமாக்கிய விதம் சுமார் தான்.செயற்கையான நடிப்பு துணை நடிகர்களுடையது #36


3 10 லட்சம் ரூபா சம்பளம் வாங்கி 75 லட்சம் ரூபா ஒர்த்க்கு நடிக்கும் ஜோதிகா மிக இயல்பாக நடித்ததில் பிடித்தது =மொழி ,காக்க காக்க , சந்திரமுகி,பச்சைக்கிளி முத்துச்சரம்,36 வயதினிலே


4 திரைக்கதை அமைப்பு ,நாயகியின் கேரக்டரைசேசன் எல்லாத்திலும் இங்க்லீஷ் விங்க்லீஷ் பாதிப்பு தூக்கலா இருப்பது பலவீனம்#36


5 தயாரிப்பாளரின் மனைவியே நாயகி என்பதால் நாயகன் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் #36


6 நிஜ வாழ்வில் காவ்யாமாதவன் ,திலீப் பால் வஞ்சிக்கப்பட்ட மஞ்சுவாரியரின் இயல்பான நடிப்பு போல் ஜோதிகாவால் தரமுடியவில்லை.


7  பேமிலிமேன் ஒருவர் 18 பேருக்கும் வீல் சிப்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வர்றார்.18*25=450 ரூ.இந்த காசுக்கு 19 கிலோ கோதுமை மாவில் பக்கோடா செய்யலாம்



8 பாபநாசம் தியேட்டரிக்கல் ட்ரெய்லரில் பெரிய வரவேற்பு இல்லை.கவுதமி தவறான தேர்வு.ஒப்பனை சரி இல்லை.கமல் லால் அளவு இயல்பா நடிக்க முயற்சி

9 சென்ட்ரல் கவர்மென்ட் ஜாப்பில் இருக்கும் நாயகி கழுத்தில் கையில் காதில் அதீத ஆபரணம் இல்லாமல் வேலைக்காரி ரேஞ்சுக்கு இருப்பது செயற்கை#36





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  பெண்கள்   கூட்டம்  கூட்டமாக  தியேட்டருக்கு  வருவது  போல்  போஸ்டர்  டிசைன்  மிக பாந்தமாக  அமைத்தது , அதுக்கான  மார்க்கெட்டிங் , டி வி  ப்ரமோ  எல்லாம்  அருமை 


2 இங்க்லீஷ்  விங்க்லீஷ்  படம்  ஹிட் ஆனதும்  அதே சாயலில்  ஆனால்  காப்பி என  சொல்ல  முடியாத  படி  திரைக்கதை  அமைத்தது 


3   ஆடை வடிவமைப்பு  ஆர்ட்  டைரக்‌ஷன்  அற்புதம்


4  இயற்கை  விவசாயம் , பெண்களுக்கு  தன்னம்பிக்கை ஊட்டுதல்  என  பாசிட்டிவ்  அம்சங்கள்  குட் \

5   ஃபேஸ்புக்  போலி  போராளிகளை  நக்கல்  அடித்த  விதம் 



இயக்குநரிடம்  சில கேள்விகள்




1   படம்  2  மணி  நேரம்  கூட  ஓடலை . வழக்கமா  ரெண்டே  முக்கால் மணி நேரம் அல்லது  ரெண்டரை  மணி  நேரம்  பார்த்தே பழக்கப்பட்ட  தமிழன்  இவ்வளவு  சின்ன படத்தை  ஏத்துக்குவானா? ( 117  நிமிடங்கள் ) 


2  சும்மா  ட்விட்டர்ல கடலை  போடும்  பொண்ணுங்களே  டெய்லி  ஒரு டி பி  மாத்திட்டு  புதுப்புது  நகை  எல்லாம் போட்டுட்டு  இருக்கும்போது  செண்ட்ரல்  கவர்மெண்ட்  ஜாப்பில்  இருக்கும்  நாயகி  தாலிச்செயின், பிரேஸ்லெட்,  ஜிமிக்கி , நெக்லஸ்  எதுவும்  இல்லாமல்  வெறும்  கழுத்துடன்  வருவது  உறுத்துது


3   மேரேஜ்  ஆன  எல்லா ஆண்களும்  பொண்டாட்டியை  மதிப்பது  இல்லை  என்பது போல்  காட்சி  அமைப்பும்  , வசனமும்  வருது . தவிர்த்திருக்கலாம். 

4  பொதுவா  குழந்தைங்க  அம்மா  கோண்டாத்தான்  வரும்  , அப்பா  பாசம்  டாமினேட்  ஆவகதைய்து  ரொம்ப  ரேர். ஆனா  எந்தவிதமான சிறப்புத்தகுதியும்  இல்லாத  அப்பாவை  அம்மாவை  விட அதிகமா  மகள்  நேசிக்கக்காரணமே  சொல்லப்படலை 


5  ஜனாதிபதி  , பிரதமர்  எல்லாம்  எப்பவும்  டூர்லயே தானே  இருப்பாங்க இந்தியாவில்?  ஆனா   கதையில்  ஜனாதிபதி  எப்பவும்   இந்தியாவில்  தான்  இருக்கார் .  இதை  ஏத்துக்கவே  முடியலை 


6  பின் பாதி  திரைக்கதைக்கு இன்ஸ்பிரேஷனே  நம்மாழ்வார்  தான். அந்த இயற்கை  விவசாயியை  நினைவு  கூறவே  இல்லையே? உரிய  மரியாதை  தந்திருக்கலாம்


7  ஜோதிகா  ஆஃபீஸ்  கொலீக்  ஒருவருடன்  சந்திப்பது  படத்துக்குத்தேவை  இல்லாதது . இங்க்லீஷ்  விங்க்லீஷ்  ல  அப்படி  ஒரு  சைடு  நட்பு ( கள்ளக்காதலின்  டீசண்ட்  வார்த்தை ) இருப்பதாலா? 


சி  பி  கமெண்ட்  = 36 வயதினிலே = பெண்களைக்கவரும் விக்ரமன் டைப் படம்.ஏ பி சென்ட்டரில் ஓடி முதலீட்டைப்போல் 3 மடங்குலாபம்.விகடன்=43,ரேட்டிங் =3.25 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  43



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே



 ரேட்டிங்  =  3.25 / 5




ஈரோடு  அபிராமியில்  படம்  பார்த்தேன் 



டிஸ்கி -  புறம்[போக்கு - சினிமா   விமர்சனம்