Showing posts with label 3 மாணவிகள் தற்கொலை. Show all posts
Showing posts with label 3 மாணவிகள் தற்கொலை. Show all posts

Monday, January 25, 2016

கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி'-3 மாணவிகள் இறந்த விவகாரம் பின்னந்தலையில் அடித்துக் கொலையா?

எஸ்.கீதாலட்சுமி | கோப்புப் படம்
எஸ்.கீதாலட்சுமி | கோப்புப் படம்

மூன்று மாணவிகள் இறந்த விவகாரம்: 'அனுமதியின்றி இயங்கி வந்தது கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி'

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் சந்தேகத்துக்கு இடமான வகையில் இறந்தனர்.
இதனையடுத்து அக்கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டு அக்கல்லூரியின் முதல்வர் கலாநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி, "விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அந்தக் கல்லூரி இயங்கியுள்ளது.
இது குறித்து விசாரணைக் குழு அமைத்து தகுந்த விசாரணை மேற்கொள்ளப்படும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலேயே சேர்க்க வேண்டும்" என்றார்.


மாணவிகள் மூவர் சந்தேக மரணம்: கள்ளக்குறிச்சி கல்லூரி முதல்வர் கைது

மாணவிகள் 3 பேரின் சந்தேக மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி தனியார் சித்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கலாநிதி, கல்லூரி நிர்வாகியின் மகன் சுவாகத் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
15 நாள் நீதிமன்றக் காவல்:
கைது செய்யப்பட்ட எஸ்.வி.எஸ். கல்லூரி முதல்வர் கலாநிதியையும், கல்லூரியின் தாளாளர் மகன் சுவாகத்தையும் 15 நாள் காவலில் வைக்கும்படி கள்ளக்குறிச்சி ஜெ.எம். 1 நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு எதிரே தனியார் நிலத்தில் உள்ள தரைக் கிணற்றில் இக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவிகளான காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரை சேர்ந்த ஏழுமலை மகள் சரண்யா, திருவாரூர் வ.உ.சி தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் பிரியங்கா, சென்னை எர்ணாவூரை சேர்ந்த தமிழரசன் மகள் மோனிஷா ஆகியோர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.
தகவலறிந்த சின்னசேலம் போலீ ஸார், மாணவிகளின் உடல்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விழுப்புரம் டிஐஜி அனிசா உசேன், எஸ்பி நரேந்திரன் நாயர் வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
கல்லூரிக்கு சீல்:
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி, கல்லூரிக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் (பொறுப்பு) பத்ரிநாத் தலைமையிலான அதிகாரிகள் கல்லூரிக்கு சீல் வைத்தனர். அப்போது ஏடிஎஸ்பி அனிஷ்யா டெய்சின், டிஎஸ்பி மதிவாணன், கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் சையத்காதர் உடன் இருந்தனர்.
தாளாளர் தலைமறைவு:
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கல்லூரி தாளாளர் வாசுகி தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது கணவர் சுப்பிரமணியன் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கல்லூரி தாளாளர் வாசுகி மற்றும் அவரது கணவரை கைது செய்ய கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னைக்கு விரைந்துள்ளனர்.
தற்கொலை இல்லை:
"கள்ளக்குறிச்சி அருகே தனியார் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கல்லூரி நிர்வாகம் அவர்களை அடித்து கொலை செய்துள்ளது" என மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து ஞாயிற்றுக்கிழமை கல்லூரிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.


சீல் வைக்கப்பட்ட தனியார் கல்லூரி | படம்: சிறப்பு ஏற்பாடு.
சீல் வைக்கப்பட்ட தனியார் கல்லூரி | படம்: சிறப்பு ஏற்பாடு.
தனியார் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவி களின் பெற்றோர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 3 மாணவிகளின் தலையின் பின்புறத்தில் அடித்ததற் கான காயம் இருந்துள்ளதால் அவர் கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மாணவி மோனிஷாவின் தந்தை தமிழரசன் கூறியதாவது: பொங்கல் விடு முறை முடிந்து கடந்த 22-ம் தேதி சென்னையில் இருந்து வந்த மோனி ஷாவுடன், செய்யூரை சேர்ந்த சரண்யா மேல்மருவத்தூரில் இணைந்து கல்லூரிக்கு சென்றார். திருவாரூரை சேர்ந்த பிரியங்கா, கள்ளக்குறிச்சியில் இவர்களோடு இணைந்து கொண்டார். மூவரும் ஒன்றாகவே மாலை 5 மணிக்கு கல்லூரி விடுதிக்கு சென்றுள்ளனர். அதுவரை இயக்க நிலையில் இருந்த அவர்களது மொபைல் பின்னர் இயங்கவில்லை. நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு 3 மாணவிகள் இறந்துவிட்டதாக கல்லூரி நிர்வா கம் தகவல் தெரிவித்தது. மேலும் மாணவிகள் எழுதியதாகக் கூறப் படும் கடிதத்தில் 3-ம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதம், இறந்த மாணவிகள் எழுதியது இல்லை. 2 பேர் ஸ்மார்ட் போனும், ஒருவர் சாதாரண போனும் வைத்திருந்தனர். இதில் 2 ஸ்மார்ட் போன்கள் காணாமல் போய் உள்ளன. இறந்த மாணவிகளின் பின்னந்தலையில் பலத்த அடிபட் டுள்ளது. கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டால் ஒரே இடத்தில் அடிபட வாய்ப் பில்லை. கல்லூரி நிர்வாகமே கடந்த 22-ம் தேதி அடித்து கொன்று, அன்று இரவே கிணற்றில் வீசிவிட்டு நேற்றுமுன்தினம் மாலை தகவலை வெளிப்படுத்தியுள்ளனர், இவ்வாறு கூறினார்.
இறந்த மாணவி சரண்யாவின் உறவினர் மஞ்சுளா கூறும்போது, “எங்களுக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸார் மற்றும் இங்கு பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர் கள் மேல் நம்பிக்கை இல்லை. எனவே சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும். இதுவரை இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் ஒருவர்கூட பட்டம் பெறவில்லை” என்றனர்.
சாலை மறியல்
இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி மருத்துவக் கல்லூரிக்கு வெளியே வந்த மாணவிகளின் பெற்றோர்கள், கல்லூரியில் படிக் கும் மாணவர்களுடன் இணைந்து சாலை மறியல் நடத்தினர். இதனால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீ ஸார் அவர்களை சமாதானப்படுத்தி சாலை மறியலை கைவிட செய் தனர்.
இதுதொடர்பாக போலீஸ் வட் டாரங்களில் விசாரித்தபோது, “கள் ளக்குறிச்சியில் உளவுத்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதர வாக போலீஸாரின் நடவடிக்கை களை கூறி வருவதால், சில நட வடிக்கைகளை யாரிடம் சொல்ல இயலாத நிலையில் உள்ளோம்” என்றனர்.
இதைத்தொடர்ந்து ஆட்சியர் லட்சுமி, டிஐஜி அனிஷா உசேன், எஸ்பி நரேந்திரன் நாயர், கோட்டாட்சியர் செந்தில் ஆறுமுகம், மருத்துவத்துறையின் இணை இயக்குநர் ஜோதி உள்ளிட்டோர் மாணவிகளின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இதுவரை எந்த முடிவும் எடுக் கப்படவில்லை.
இறந்த 3 மாணவிகளுக்கும் அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையில் இக்கல்லூரியில் இடம் கிடைத்துள் ளது. மேலும் மாணவிகளின் பெற்றோர் தரப்பில் இருந்து இது வரை போலீஸில் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ராமதாஸ் கண்டனம்
பாமக நிறுவனர் டாக்டர் ராம தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவிகளின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி அதற்கு கார ணமான அனைவர் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும். உயிரி ழந்த மாணவிகளின் குடும்பங் களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப் பீடு வழங்க வேண்டும். சித்த மருத்துவக் கல்லூரியை மூடி முத்திரையிட்டு அதில் படித்து வரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்க வேண்டும்.
வைகோ கோரிக்கை
எஸ்.வி.எஸ் இயற்கை மருத் துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கி யது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசு விதி முறைகளை காற்றில் பறக்கவிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாணவிகளின் தற்கொலைக்கு காரணமான கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
திருமாவளவன் ஆறுதல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாணவி களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மாணவியரின் குடும் பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.


நன்றி - த இந்து