Showing posts with label 3 பேர் 3 காதல்- டைரக்டர் வஸந்த் பேட்டி. Show all posts
Showing posts with label 3 பேர் 3 காதல்- டைரக்டர் வஸந்த் பேட்டி. Show all posts

Tuesday, April 30, 2013

3 பேர் 3 காதல் - டைரக்டர் வஸந்த் பேட்டி @ கல்கி

அறிமுகம்

3 பேர் 3 காதல்


ஆனால் காதல் கதையல்ல!

அர்ஜுன்
டைரக்டர் வஸந்த் பேட்டி...

தமிழ் சினிமாவுல புராண, இதிகாசங்கள்ல ஆரம்பிச்சு, இன்னைக்குவரை ஆயிரக்கணக்கான படங்கள்ல காதலைச் சொல்லியாச்சு. சொல்லப் போனா, தமிழ் சினிமா, காதல் என்ற வட்டத்துக்குள்ளேயே உறியடிச்சுக்கிட்டு இருக்கு. அப்படி இருக்கும் போது, உங்களோடமூன்று பேர் மூன்று காதல்படத்துல இதுவரை சொல்லாத எந்தக் காதலை புதுசா சொல்லப் போறீங்க? என்று படு சீரியஸாக டைரக்டர் வஸந்திடம் கேட்டால்...
அவரோ அசராமல், இதுவரை தமிழ் சினிமாவுல சொல்லாத காதல் கதையை நான் இந்தப் படத்துல சொல்லி இருக்கிறதா இதுவரை யார்கிட்டேயும் சொல்லவே இல்லை. ஏன்னா, இது ஒரு லவ் ஸ்டோரி கிடையாது," என்றார்.
என்ன டைரக்டர் சார்! படத்துக்குத் தலைப்பு மூன்று பேர் மூன்று காதல்னு வைப்பீங்களாம்; படத்துல அர்ஜுன், சேரன், விமல்னு மூணு ஹீரோக்களாம். அவங்களுக்கு ஜோடியாக முக்தா பானு, சுர்வீன் சாவ்லா, லாசினின்னு மூணு ஹீரோயின்களாம். ஆனா, ‘இது காதல் படம் இல்லைன்னு ரொம்பத் தான் கலாய்க்கறீங்களே! இது நியாயமா?
நான் பொய் சொல்லலை; நான் சொல்வதெல்லாம் .எஸ்.. தரச்சான்றிதழ் பெற்ற நிஜம்!"
அப்படீன்னா?
இது லவ் ஸ்டோரி இல்லை; ஆனா லவ் பத்தின படம். லவ்வுக்கு இந்த உலகத்துல, மக்கள் மத்தியில எவ்வளவு பவர் இருக்குன்னு காட்டற படம். காதலால இந்த உலகத்துல என்னென்ன எல்லாம் நடக்கலாம்னு காட்டி இருக்கேன். இன்னும் சொல்லணும்னா, ‘இந்த உலகத்துல லவ்வப் போல பைத்தியக்காரத் தனமான விஷயம் வேற ஒண்ணும் இல்லைன்னு விமல் ஒரு டயலாக்கூட பேசுவாரு."
என்னது?
யோசிச்சுப் பார்த்தா, இந்த உலகத்துல லவ்வப் போல பைத்தியக்காரத்தனமான விஷயம் வேற ஒண்ணும் இல்லை. ஆனா நாம யோசிச்சாதானே!’ன்னு விமல் ஒரு டயலாக் சொல்வாரு. அதைத்தான் சொன்னேன்."
அப்ப உங்க பார்வையில லவ்னா என்ன?
காதலை நான் எப்படிப் பார்க்கறேன்னா, பல வார்த்தைகள், உணர்வுகளோட ஒட்டுமொத்த உருவமாத்தான் பார்க்கறேன். அன்புகூட என்னைப் பொறுத்தவரைக்கும் காதல்தான். பெண்ணாசை, மது குடிப்பதால் வரும் பிரச்னைகள், உறவுகளில் வரும் சிக்கல்கள், ரொம்ப நெருக்கமானவங்களோட மரணத்தோட நம்ம வாழ்க்கை முடிஞ்சிடறதில்லைன்னு பல விஷயங்களை நான் என்னோட படங்கள்ல டீல் பண்ணி இருக்கேன். இதுமாதிரியான விஷயங்கள்தான் நான் படம் எடுக்கத் தூண்டுகோலாய் இருக்கு."
சரி! அது மாதிரி இந்தப் படத்துக்கு தூண்டுகோலாய் இருந்தது எது?
காதலைப் பத்தி ரொம்ப நாளா என் மனசுக்குள்ள ஒரு கருத்து இருந்துகிட்டு இருந்துச்சு. யதேச்சையா நா. பிச்சமூர்த்தியோட கவிதையைப் படிச்சேன். அந்தக் கவிதையில, அவரும் நான் நினைச்சுக் கிட்டு இருந்த விஷயத்தையே சொல்லி இருந்தார். எனக்கு அதைப் படித்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாக்கூட இருந்தது. அதிலிருந்து உருவானது தான் இந்தக் கதை. இந்தக் கதை எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும். ‘ஒரு கதை, நெய்தல் என்கிற கடலும் கடல் சார்ந்த இடத்துலயும், இன்னொண்ணு குறிஞ்சி என்கிற மலையும் மலை சார்ந்த இடத்துலயும், மூணாவது கதை, மருதம் என்கிற வயலும் வயல் சார்ந்த இடத்துலயும் நடக்குது. இன்னொரு விஷயம் என்னன்னா, படத்துல சொல்லி இருக்கிற மூணு பேரோட காதல்ல ஏதாவது ஒண்ணை நிச்சயமா படம் பார்க்கிற எல்லாரும், ‘அட! இது நம்ம லைஃப் கதை மாதிரியே இருக்கேன்னு ஐடென்டிஃபை பண்ணி ரசிப்பாங்க! இந்தப் படம் நிச்சயமா ஜனரஞ்சகமான, குடும்பத்தோடு ரசிக்கக் கூடிய ஒரு படமா இருக்கும்."
அன்று சூர்யா; இன்று வருண்

சூர்யா, சிம்ரன், ஜோதிகா, சுவலட்சுமி, சுர்வீன், லாசினி என்று டைரக்டர் வஸந்தால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாகச் சேர்ந்திருப்பவர் ரித்விக் வருண். வஸந்த் தம் டைரக்ஷனிலேயேமூன்று பேர் மூன்று காதல்படத்தில் ஒரு பாடல் காட்சியின் மூலமாக வருணை அறிமுகப்படுத்துகிறார். லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்திருக்கும் வருண், மணிரத்னத்திடம் கொஞ்ச நாள் பயிற்சி பெற்றவர்.
மகனை நடிகராக்கும் ஐடியா திடீரென்று எப்படி வந்தது?" என்று கேட்டபோது, மூன்று பேர் மூன்று காதல் படத்தில் ஒரு ஸ்பெஷல் ரோலுக்கு, வருணையே நடிக்க வைக்க முடிவு செய்தேன். அவனிடம் விஷயத்தைச் சொன்னபோது, அவனுக்கு ஆச்சர்யம். உடனே .கே. சொன்னான். காரணம், அவனுக்கும் நடிக்க ஆர்வம் இருந்திருக்கிறது. இந்தப் படம் அவனுக்கு ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும் என்பது நிச்சயம்" என்றார் வஸந்த்.
மகனை நடிக்க வைப்பது என்று முடிவானதும், தமது குருநாதர் கே. பாலசந்தரிடம் அழைத்துக் கொண்டு போனார் வஸந்த். ‘உன்னுடைய உயரமும், பர்சனாலிடியும் உனக்கு பெரிய பிளஸ் பாயின்ட்என்று சொல்லி வாழ்த்தினார் கே.பி. அடுத்து பாலுமகேந்திராவை சந்தித்தபோது, ‘உனக்கு நல்ல போட்டோஜீனிக் முகவெட்டு இருக்கு!’ என்று சொன்னார். இயக்குனர் மகேந்திரன் தானே வரைந்த சத்யஜித்ரே படம் ஒன்றைப் பரிசளித்து வாழ்த்தினார். பிரசாத் லேப்பில் நடந்த நிகழ்ச்சியில் கே.பி., ரித்விக் வருணை அறிமுகப்படுத்தினார்.

நன்றி - கல்கி