Showing posts with label 18ம்நூற்றாண்டு. Show all posts
Showing posts with label 18ம்நூற்றாண்டு. Show all posts

Tuesday, March 20, 2012

மகாவம்சம் - சாண்டில்யன் நாவல் ?? -சினிமா விமர்சனம்


 http://www.indiancinemagallery.com/Gallery2/d/734309-1/Mahavamsam+movie+wallpaper.jpg
சாண்டில்யனின் கடல் புறா நாவலில் இருந்து கொஞ்சம், எம் ஜி ஆர்-ன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இருந்து கொஞ்சம், நரசய்யா ஆனந்த விகடனில்  எழுதிய  கடற்காற்று கதையில் இருந்து கொஞ்சம் என்று கலந்து கட்டி ஒரு கதை ரெடி பண்ணி இருக்காங்க.. லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஓரளவு பிரம்மாண்ட படம்..

ரோமாபுரி இளவரசர்க்கு சீன இளவரசியை பொண்ணு கேட்கறாங்க. ஓக்கே சொல்லிடறாங்க. ஆனா ஒரு கண்டிஷன் என்னான்னா மன்னர் இல்லாத பூமியில் பவுர்ணமில தான் கல்யாணம்.. அது அவங்க சம்பிரதாயம்.. மாப்ளை வீட்டுக்காரங்க, பொண்ணு வீட்டுக்காரங்க தனித்தனியா கப்பல்ல கிளம்பி போறாங்க. வழில கடல் கொள்ளையர்கள் சீனா இளவரசியை கைப்பற்றிடறாங்க. அதாவது கையை எல்லாம் பற்றலை..  கஸ்டடில வெச்சுக்கிட்டு சீன அரசுக்கு தகவல் தர்றாங்க. 1000 பெட்டி நிறைய தங்கம் தந்தா இளவரசியை விட்டுடறோம்னு. 


கருடர் தலைவன் இருக்கானே அவன் தான் வில்லன். அவன் ஒரு தாயத்தை நெஞ்சுல கட்டி இருக்கான்.. ( நல்ல வேளை;) அது இருக்கறவரை அவனை யாராலும் எதுவும் செய்ய முடியாது. 

பாரசீக இளவரசர் தன் சகா வோட சேர்ந்து எப்படி இளவரசியை மீட்கறார் என்பதுதான் கதை..


http://www.cinemaparvai.com/wp-content/uploads/2012/01/mahavamsam-16.jpg
சாண்டில்யன் நாவல்ல வர்ற மாதிரியே இளவரசரா வர்றவர் ஹீரோ இல்லை. இளவரசர் பாடி கார்டு தான் ஹீரோ.. அவர் அடிபட்டு படுத்திருக்கறப்போ பார்த்துக்கற மருத்துவரோட  பொண்ணு தான் ஹீரோவுக்கு ஜோடி. ஆனா பாப்பா வர்ற சீன் மொத்தமே 5 தான்.. 

ஹீரோவா வர்றவர் ஆள் ரகுமான் ஹிம்ஸ் நல்லா சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் எல்லாம் வெச்சு நல்லா தான்  நடிச்சிருக்கார்.. அவரோட தோரணைக்கு முன்னால இளவரசரா வர்றவர் நடிப்பு எடுபடல.. அதுக்கு காட்சி அமைப்புகளும் காரணம்.. சாண்டிலயன் நாவல்களிலும் இதே போல் காட்சி அமைப்புகள் வரும்.. மன்னர், சக்ரவர்த்தியை விட படைத்தலைவன், தளபதி கேரக்டர் தான் முன்னிலைப்படுத்தப்படும்.. 

சீன இளவரசியா வர்ற ஃபிகர் 60 மார்க் ஃபிகர்னா ஹீரோவுக்கு ஜோடியா வர்றவர் 55 மார்க் ஃபிகர். ஆனா என்ன ஒரு கொடுமைன்னா யாருக்கும் டூயட்டே இல்லை.. ( விட்டா நாம சரித்திரக்கதைலயும் குத்தாட்ட சாங்க் கேட்போமே.. )

படத்துல பாராட்டப்பட வேண்டியது பிரம்மாண்டமான போர்க்களக்காட்சிகள் தான்.. கடல் போர் அப்படியே கண் முன் நிறுத்துது.. தேவை இல்லாத வளா வளா காட்சிகள் அதிகம் இல்லை.. என்ன கதையோ அதை நோக்கித்தான் படம் பயணிக்குது..

http://3.bp.blogspot.com/-8L7P5L_rB_8/TxbvBNxKxgI/AAAAAAAAfp8/xzlHaGbkHw0/s1600/Mahavamsam+Movie+Stills+%252813%2529.jpg

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. படத்தோட ஓப்பனிங்க்ல இருந்து இடைவேளை வரை தேவை இல்லாத காட்சிகள்னு எதையும் சொல்ல முடியாதபடி நீட்டா ஸ்க்ரீன்ப்ளே பண்ணி இருக்கார்.. சபாஷ்.. 

2. பாரசீக இளவரசர் இறந்துட்டதா ஆடியன்ஸும், ஹீரோயினும் நம்பற மாதிரி காட்சி வெச்சு இளவரசி படைத்தலைவனுக்கா? என்ற டெம்போவை 4 ரீல் வரை கொண்டு சென்றது


3. சில காட்சிகளே வந்தாலும் ஹீரோயின் ஹீரோவிடம் காட்டும் மின்னல் காதல், கவனிப்பு கவிதை.. 

4. கப்பல், கடல், போர்க்காட்சிகளில் பிரம்மாண்டம்.. சரித்திர நிகழ்வுகளை கண் முன் காட்டும் லாவகம்..


 http://chennai365.com/wp-content/uploads/movies/Mahavamsam/Mahavamsam-Movie-Stills-15.jpg

இயக்குநர் சறுக்கிய இடங்கள்


1. படத்தின் இடைவேளைக்குப்பிறகு பெரும்பான்மையான காட்சிகள் போர்க்காட்சிகளே! கொஞ்சம் போர் அடிக்கும் காட்சிகள்


2. யாராலும் வெல்ல முடியாத தாயத்தை அணிந்த வில்லனை இளவரசி சிருங்கார ரசம் காட்டி மயக்கி அபேஷ் பண்ணுவது ஓக்கே.. ஆனால் அந்த  லூஸு வில்லனுக்கு தாயத்து பறி போன விஷயம் அப்போத்தான் தெரியலை.. க்ளைமாக்ஸ் ஃபைட் வர்றவரை தெரியாதா?


3. வில்லன் பாசறைல தான் இளவரசி இருக்கா.. வில்லன் இளவரசி கிட்டே டெயிலி 3 டைம் கில்மாக்கு கெஞ்சிட்டு இருக்கான்.. ஏதாவது மயக்க மருந்தையோ, போதை மருந்தையோ கொடுத்து ஒரு டைம் மேட்டரை முடிச்சுட்டா தன்னால அவ வழிக்கு வர்றா ( ஹி ஹி ஹி )

4. சீன இளவரசி ஆண்கள்னாலே வெறுப்புத்தான்ன்னு ஓப்பனிங்க்ல கன் ஃபைட் காஞ்சனா மாதிரி வீராவேசம் காட்டுது.. அப்புறம் என்னடான்னா பூங்குழலி மாதிரி கவிதையா போட்டு தாக்குது.. ஒய் திஸ் தடுமாற்றம் இன் கேரக்டரைசேஷன்?

5. இறந்ததா கருதப்பட்ட இளவரசர் உயிரோட வர்றார்.. அதை பார்த்து சீன இளவரசி ஓடி வந்து ஸ்லோ மோஷன்ல கட்டி அணைச்சிருக்க வேணாம்? ( எங்களுக்கும் கொஞ்சம் கில்மாவா இருந்திருக்கும்.. வட போச்சே..) ஆனா பாப்பா என்ண்டான்னா திருமதி செல்வம் சீரியல் ஹீரோயின் மாதிரி பராக்கு பாக்குது..


http://www.kollytalk.com/wp-content/gallery/mahavamsam-movie-stills/mahavamsam-14.jpg

 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இல்லைன்னா, நல்லெண்னை.. விளக்கெண்ணெ...தேங்காய் எண்னெய்.. நீங்க எப்படிப்போனா எனக்கென்ன? ( ஆஹா.. டி ஆர் பேரன் போல )

2.  பேசித்தீர்க்க வேண்டியதை தீர்த்துட்டு பேசுவான் ( ராஜபக்சே மாதிரி..?)

3.  இன்னைக்கு உங்களுக்கு நல்ல நேரம் தான்.. கடவுள் தான் உங்களை காப்பாத்தி இருக்காரு.. 

 உங்களை நீங்களே கடவுள்னு சொல்லிக்கறிங்களா?

4. கல்யாணம் பண்ணிக்கிட்டா பறவையா அறைக்குள்ளேயே இருக்க வேண்டியதுதான்.. சுதந்திரமா பறக்க முடியாது..  ( அல்போன்சாக்கு கூடத்தான் 2 டைம் மேரேஜ் ஆச்சு,.,. மேடம் சுதந்திரமா இல்லையா?)

5.  சினம் கொண்ட புலியா இருந்தாலும் தன் குட்டியை தின்னாது.. 

6. சந்தோஷம் என்பது ஆடம்பரத்துல மட்டும் கிடைப்பதல்ல.. 


7. நேரமும் , காலமும் சேரும்போது நாம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு./.

http://mimg.sulekha.com/tamil/mahavamsam/stills/mahavamsam-cinema-034.jpg


யாரெல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்?

 சாண்டில்யன், கல்கி, விக்கிரமன் போன்ற வரலாற்று நாவல் ரசிகர்கள் பார்க்கலாம்.. எம் ஜி ஆர்  ரசிகர்கள்.. வரலாற்று கதைகள் விரும்பி படிப்பவர்கள் பார்க்கலாம்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38 ( இது ஹிந்திப்பட டப்பிங்க் என்பதால் விகடன்ல விமர்சனம் வராது, சும்மா போட்டிருக்கேன்)

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் -ஓக்கே

 சி.பி கமெண்ட் - முன் பாதி ஓக்கே.,. பின் பாதி இழுவை ( நோ டபுள் மீனிங்க்)

 ஈரோடு அண்ணாவில் பார்த்தேன்