Showing posts with label ஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள். Show all posts
Showing posts with label ஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள். Show all posts

Sunday, June 21, 2015

ஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள்

ஹெல்மெட் அணிவது தொடர்பாக நம்மிடையே சில மூட நம்பிக்கைகள் உள்ளன. அவற்றுக்கும் உண்மைக்கும் இடையே எவ்வளவு இடைவெளி உள்ளது?
நம்பிக்கை 1: ஹெல்மெட் அணிவ தால் பார்வைத் திறன் குறைகிறது.
இது உண்மையல்ல. ஹெல்மெட் அணியாதபோது 180 டிகிரி அளவிலும் ஹெல்மெட் அணிந்திருக்கும்போது 210 டிகிரி அளவுக்கும் சுற்றிலும் பார்க்க முடியும் என்கின்றன ஆய்வுகள். ஆகவே, ஹெல்மெட் அணிவதால் பார்வை மறைக்கப்படுவதில்லை. முழுவதும் முகத்தை மூடியிருக்கும் சில ஹெல்மெட்டுகளில் வேண்டுமானால் பார்வை மறைக்கப்படலாம். ஆனால், அதை அணிபவர்கள் எண்ணிக்கையில் குறைவு.
நம்பிக்கை 2: ஹெல்மெட் அணிவதால் போக்குவரத்து ஓசைகளைக் கேட்க இயலாது.
இதுவும் உண்மையல்ல. காற்றின் இரைச்சலைத் தடுத்து, கேட்கும் திறனைப் பாதுகாப்பதில் ஹெல்மெட்டுகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. சுமார் 100 கி.மீ. அளவிலான வேகத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றால் செவிப்பறைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஹெல்மெட்டோ புற ஓசைகளைப் பெருமளவில் குறைத்து செவிப்பறையைப் பாதுகாக்கிறது. அதே நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான போக்குவரத்து ஓசைகளைத் தெளிவாகக் கேட்கவும் முடியும். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளும் ஹெல்மெட் அணிந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தேவையான ஓசையைக் கேட்க இயலும் என்பதையே நிரூபித்துள்ளன.
நம்பிக்கை 3: ஹெல்மெட் அணிவதால் தலை சூடாகும்.
இல்லை. ஹெல்மெட்டின் உள்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மென்மையான பஞ்சு போன்ற பகுதி புற வெப்பத்தை உள்ளுக்குள் கடத்தாமல் பார்த்துக்கொள்கிறது. அதிகபட்சம் ஓரிரு டிகிரிகள் வெப்பநிலை வேண்டுமானால் உயரக்கூடும். நாம் நினைக்கும் அளவுக்கு அதிகப்படியான வெப்பநிலை உயர வாய்ப்பில்லை. மிகக் குறைந்த வேகத்தில் செல்லும்போது காற்று வரத்து பாதிக்கப்படுவதால் சிறிது வெப்பநிலை உயரலாம். இதுவும் அதிகப்படியான போக்குவரத்து நெருக்கடியான சூழலில் வெயில் பொழுதின்போது மிக மெதுவாகப் போக்குவரத்து ஊர்ந்து செல்லும்போது ஏற்படலாம். அதற்கும் புறச் சூழல்தான் காரணமே ஒழிய ஹெல்மெட் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நம்பிக்கை 4: ஹெல்மெட் அணிபவர்கள் அடிக்கடி விபத்தை எதிர்கொள்கிறார்கள்.
இதுவும் உண்மையல்ல. ஹெல்மெட் அணியாதவர்களைவிடக் குறைந்த அளவிலான விபத்துகளையே ஹெல்மெட் அணிபவர்கள் எதிர்கொள்கிறார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. வெள்ளை, அடர் வண்ணங்களிலான ஹெல்மெட்டுகளில் பெரும்பாலானவை வெளிச்சம் குறைந்த சமயத்திலும் ஒளியை நன்கு பிரதிபலிக்கின்றன. எனவே, ஹெல்மெட் அணிந்திருப்பவர்களை எளிதில் பார்க்க முடியும். ஆகவே, வெற்றுத் தலையுடன் செல்பவரைவிட ஹெல்மெட் அணிந்து செல்பவரை எளிதில் பார்க்கலாம்.
ஹெல்மெட் உண்மைகள்
பெரும்பாலான இரு சக்கர வாகன விபத்துகளில் தலையில் அடிபடுவதாலேயே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
உயிரிழப்புகளையோ தலையில் அடிபடுவதையோ 30 சதவீதத்துக்கும் மேல் தடுத்துவிடும் வல்லமை கொண்டது ஹெல்மெட்.
மோசமான விபத்துகளின்போது ஹெல்மெட் அணியாதவர்கள் உயிரிழக்க 40% அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
காரில் செல்பவரைவிட பைக்கில் செல்பவருக்கு விபத்தால் உயிரிழப்பு ஏற்பட 32 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.
விபத்து ஏதேனும் ஏற்பட்டால் ஹெல்மெட் அணிந்தவரைவிட அணியாதவருக்கு மூன்றிலிருந்து நான்கு மடங்கு மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.
இவற்றையெல்லாம் கூறுவது, உங்களைப் பயமுறுத்துவதற்காக அல்ல; மாறாக ஹெல்மெட்டால் நமக்கு ஏற்படும் அனுகூலங்களைச் சுட்டிக்காட்டுவதற்கே. ஹெல்மெட் அணிவதால் போக்குவரத்துக் காவலரைச் சமாளிக்கலாம்.
ஆனால், அது மிகவும் சிறிய விஷயம்தான். விபத்துகளையோ, அவற்றில் ஏற்படும் பாதிப்புகளையோ தவிர்ப்பதுதான் ஹெல்மெட் அணிவதன் முக்கியமான நோக்கம்.

நன்றி  - த இந்து

  • PRABU E  
    ஹெல்மெட் போடுவது மிகவும் நல்லதுதான். ஆனால் கவசம் அணியவில்லை என்றால் ஓட்டுனர் உரிமம் ரத்து என்பதெல்லாம் மிகையானது. ஆனால் இந்த நேரத்தில் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி அவர்கள் சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் ஒரு பேட்டியில் ஹெல்மெட் அணிந்தால் நீ விபத்தில் இறக்கமாட்டாய் என்று நான் உறுதி அளிக்க முடியாது. ஆனால் ஒரு நாயோ அல்லது எதோ ஒரு காரணத்தால் வாகனத்திலிருந்து நீ கிழே விழுந்தால் உன் தலையில் அடிபடுவதற்கான் வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆகவேதான் தலை கவசம் அணிய வேண்டும் என்று கூறுகிறேன் என்றார். அது முதல்தான் நான் தலைகவசம் அணிய ஆரம்பித்தேன்.மற்ற வாகன ஓட்டிகள் இடித்தாலும் தலைகவசம் அணியததால்தான் இறந்தான் ஆகவே அனைவரும் கவசம் அணிய வேண்டும் என்று கூறுவது மற்றவன் எப்படி வேண்டுமானும் ஒட்டுவான் நீ மட்டும் சட்டப்படி கவசம் அணியவேண்டும் என்று கூறுவது அறிவுடைமை ஆகாது. இது மத்தியதர வர்கத்தின் மீதான நீதிமன்றத்தின் தாக்குதல்.சாலை விதிகளை மதிக்காத அரசு வாகனங்களையும் வாகன ஓட்டிகளையும் இது வரை எத்தனை நீதி மன்றங்கள் தண்டித்துள்ளன.. டாட்டா magic தொடர்பான வழக்கில் நீதி மன்றத்தின் உத்தரவு என்ன அனது
    Points
    6410
    about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
    • Chandrashekar V  
      ஹெல்மட்ஐ கட்டாயம் என பண்ணுவது மேலோட்டமாக பார்த்தால் நன்மை. அனால் மோசமான ரோடுகளால் வரும் விபத்தை எந்த சட்டம் கட்டாயமாக்கும்? எனவே சென்னை மாதிரி உள்ள வெப்ப நகரத்திற்கு ஹெல்மட்ஐ மக்களின் விருப்பத்திற்கு விடுவதே நல்லது.
      a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Sriharan V  
        சர்தார்ஜீக்கள் ஹெக்மெட் போடா வேண்டுமா????
        a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Prathap  
          தமிழ் நாடு ல ரோடு ஒழுங்கா இருக்கா.. குடிச்சுட்டு வண்டி ஓடுறவன புடிக்க வேண்டியது தானே... சாராய கடைய அரசாங்கமே நடத்துது.. ஏற்கனவே போலீஸ் கை சரி இல்ல.. இன்னும் அசிங்கம் அகத்தான் போகுது..
          a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Mohanraj Raj  
            ராஜஸ்தான் தலப்பாகட்டு மாதிரி தஹலைய சுற்றி துணி கட்டினால் போதும். அல்லது துர்பன் கட்டினால் போதும். மக்களை பயமுர்த்தும் வீண் செலவுகள் தவிர்க்கவேண்டும். முக்கியமான செய்தி ஈந்தே ஹெல்மட் தயாரிக்க பயன்படும் பொருட்கள் சுற்று சுழல் பாதிக்ககுடியவை , கோடிகணக்கான ஹெல்மட் தயாரிக்கும்போது ஏஅந்த அளவுக்கு paathippu வரும். நேவே காடயமக்குதலை தவிர்க்கணும்.
            a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • RAJA  
              தமிழகத்தில் பெருகி வரும் கார் கலாசாரத்திற்கு, நீதிமன்றம் என்ன பதில் தர முடியும்? 7. இருசக்கர வாகன ஓட்டி தலைக்கவசம் போட்டு ஒட்டியும் நெஞ்சில் ஏறி உயிர் பறிக்கும் கனரக வாகனத்தின் வேகத்திற்கு நீதிமன்றம் என்ன பதில் சொல்ல முடியும்?கூட்டல் 'கணக்கு' போட்டு இருப்பார்களோ!?
              a day ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
              PRABUE  Up Voted
              • RAJA  
                4. 2000-2013 வரை தமிழக அரசு போக்குவரத்து வாகனங்கள் மூலமாக சுமார் 20,672 கோடிகள் வசூல் செய்துள்ளன. ஆண்டுக்காண்டு வாகனப் பதிவின் மூலமாக, சாலை வரி மூலமாக பல கோடிகள் வருமானம் பார்க்கும் அரசு சாலையின் நெரிசலை கண்டுகொள்ளாமல் வாகனப்போட்டியை ஏற்படுத்துவது பற்றி அரசிடம் நீதிமன்றம் கேள்விகேட்காதது ஏன்? தமிழகத்தில் நடக்கும் வாகனப்பதிவில் 20% சென்னையில் மட்டும் நடக்கிறது. 5. பொதுப்பணித்துறையில் 45% கமிஷன் தொகை போக மீதமுள்ள 55% தொகையில் போடப்பட்ட சாலைகள் ஐந்தே நாளில் அரை மணி நேர மழைக்கு மறைந்து போன சாலை என 'கின்னஸ்' சாதனைக்கு அனுப்பும் அளவில் ஊழல் மூலம் போடப்பட்ட தரமற்ற சாலையால் விபத்து விகிதம் கூடும் நிலையில் நீதிமன்றம் ஏன் கண்டுகொள்ளவில்லை? 6. 1993 முதல் 2013 வரை சுமார் 2 லட்சம் பேர் தமிழக சாலை விபத்தில் இறந்துள்ளனர். மோசமான, குறுகலான சாலை வசதி விபத்தின் எண்ணிக்கை உயர்வதால் புதிய வாகனப் பதிவை நீதிமன்றம் நிறுத்த முடியுமா? இந்தியாவில் அதிகமான கார் உள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை 4வது இடத்தில் உள்ளது. அதாவது, 100 பேரில் 43 பேர் கார் வைத்துள்ளார்கள். கோவை 9வது இடத்தில் உள்ளது.
              நன்றி - த இந்து