Showing posts with label ஹாலிவுட் சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ஹாலிவுட் சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, July 25, 2012

THE JACKAL - ஹாலிவுட் த்ரில்லர் சினிமா விமர்சனம்

http://www.moviegoods.com/Assets/product_images/1020/196421.1020.A.jpg 


யுனைட்டட் ஸ்டேட்டோட FBI நிறுவனம்  வில்லனோட தம்பியை போட்டுத்தள்ளிடுது.. உடனே வில்லன் என்ன செய்வாரு? ஆள் வெச்சு பழிக்கு பழி வாங்குவாரு.. எஸ் அதே தான்... உலக அளவில் புகழ் பெற்ற வாடகை கொலையாளி ப்ரூஸ் வில்ஸ் ஸை நியமிக்கறாரு. அண்ணன் ப்ரூஸ் வில்ஸ் இப்போதான் ஹீரோ.. அப்போ ( 1997)  சத்யராஜ் மாதிரி பயங்கர வில்லன் போல ..

 அண்ணன் களம் இறங்குனது FBI நிறுவனத்துக்கு தெரிஞ்சுடுது.. அதை தடுக்கனும்.. இன்னா பிரச்சனைன்னா ப்ரூஸ் வில்ஸ்ஸை நேர்ல பார்த்த ஆள்ங்க யாரும் இல்லை, ஃபோட்டோவும் இல்லை.. எப்படி ஆளை பிடிக்க?குரூப் டிஸ்கஷன் நடக்குது. 

விசாரணைல இஸபெல்லான்னு ஒரு ஃபிகர்.. ப்ரூஸ் வில்ஸ் பற்றி தெரிஞ்ச ஆள்னு கண்டு பிடிக்கறாங்க.. ஆனா அந்த ஃபிகரை எப்படி கண்டு பிடிக்க? கடவுள் ஒரு கதவை மூடுனா இன்னொரு கதவை திறப்பாரு.. ரஞ்சிதா அந்தாண்ட போனா இந்தாண்ட ஆர்த்தி ராவ் வர்ற மாதிரி.. 


அந்த இஸபெல்லா இப்போ கடத்தல், கொலை எல்லாம் விட்டுட்டு  ஃபேமிலி விமன் ஆகிட்டாங்க.. அதாவது பங்களா ஒயிஃப். வீட்டோட இருந்தா அது ஹவுஸ் ஒயிஃப்.. அந்த ஃபிகருக்கு ஒரு முன்னாள் காதலர்.. அவர் தான் படத்தோட ஹீரோ.. அவரு ஜெயில்ல இருக்காரு.. இவரும் கேடிதான்.. ஆனாலும் நல்ல கேடி.. 


 கேடின்னாலே மோசம் தான். அதென்ன? நல்ல கேடி? கெட்ட கேடி? கேடி ஹீரோவா இருந்தா அவன் நல்ல கேடி, வில்லனா இருந்தா அவன் கெட்ட கேடி.. இந்த கேசை டீல் பண்ற ஒரு லேடி இன்ஸ்பெக்டர் தான் ஹீரோயின்.. இசபெல்லாவை சந்திச்சு ப்ரூஸ் வில்ஸ் பற்றி டீட்டெயில் வாங்கற பிராசஸ்ல ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் லவ் பிராசஸ் ஆகிடுது..

வில்லன் ஒரு பக்கம் கொலை செய்ய செம பிரில்லியண்ட்டான ஐடியாவோட களம் இறங்கறார்.. ஹீரோ, ஹீரோயின் , போலீஸ் குரூப் இன்னொரு பக்கம் அந்த வில்லனை தேடி களம் இறங்கறாங்க.. க்ளைமக்ஸ்ல ஒரு ட்விஸ்ட்.. என்ன நடக்குதுன்னு படத்துல பாருங்க.. பர பர ஆக்‌ஷன் த்ரில்லர்.. ஒரு சீன் கூட போர் அடிக்கலை.. 





படத்துல முத பாராட்டு ஹீரோவுக்கு.. ஆ. சாரி வில்லன் ப்ரூஸ் வில்ஸ்க்கு.. என்னா தெனாவெட்டு..  நடிப்பு, ஆக்‌ஷன், பாடி லேங்குவேஜ் எல்லாம் அசத்தல்.. 


ஹீரோ அவ்வளவா எடுபடலை.. ஹீரோயின் 65 மார்க் ஃபிகர்.. ஓக்கே.... அந்த இசபெல்லா ஒரு மொக்கை ஃபிகர்.. வேற ஆளை போட்டிருக்கலாம்.. 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
http://i296.photobucket.com/albums/mm191/ekuerste/CarlostheJackal.jpg


1. ஒரு ஆக்‌ஷன் படம் ஹிட் ஆகனும்னா எப்பவும் பவர் ஃபுல் ரோல்ல வில்லன் இருக்கனும்.. அந்த வில்லனை ஹீரோ ஜெயிச்சா தான் கெத்து.. நம்ம ஊர்ல கேப்டன் பிரபாகரன் மன்சூர் அலிகான் ஏற்று நடிச்ச வீரபத்ரன் கேரக்டர் மாதிரி.. அந்த வகைல இந்தப்படத்துல வில்லன் கேரக்டரைசேஷன் செம.. அதுக்கு ப்ரூஸ் வில்ஸ் உயிர் கொடுக்கும் நடிப்பு.. அம்சம்.. 



2. போலீஸ் ஆஃபீசரா வர்ற ஹீரோயின் , ஹீரோ இருவருக்குமான காதல் அரும்பும் இடங்கள்  ஏ ஆர் முருக தாஸ் படமான தீனா - அஜித் -லைலா மாதிரி ஒரு அழகிய கவிதை.. ரொம்ப நுணுக்கமா சொல்லபப்ட்டிருக்கு.. 



3. வில்லன் கொலை பண்ண யூஸ் பண்ணும்  மெகா பீரங்கி ஷேப் கன்னை வடிவமைக்கும் ஆள் அதிக தொகைக்கு ஆசைப்படுவதும் டெஸ்ட் ஷூட் ல வில்லன் அவனை போட்டுத்தள்ளும் பரபரப்பான பத்து நிமிடங்கள் சபாஷ் டைரக்சன்


4. வில்லன் ஆயுதக்கிடங்கில் பார்வையிடும்போது பல துப்பாக்கிகளைப்பட்ட விபரங்களை ஃபிங்கர் டிப்ஸில் வைத்திருந்து துல்லியமாக அது பற்றி விவரிப்பது..


5. கதைக்கு தேவை இல்லாத கேரக்டர் என தீர்மானித்து இசபெல்லா கேரக்டரின் கணவரை கடைசி வரை சீன்க்கு கொண்டுவராதது.. 



http://www.magweb.com/picts/actor/47439/diane_venora.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. மாறுவேஷத்தில் வரும்போது வில்லன் ஜஸ்ட் ஒரு ஒட்டு மீசைதான் வெச்சிருக்கார்? எங்க ஊர்ல கமல், சூர்யா எல்லாம் டோட்டலா முகத்தையே மாத்திக்கறாங்க.. இன்னும் எம் ஜி ஆர் காலத்துல இருந்தா எப்படி?


2. ஸ்பெஷல் கன்னை வடிவமைச்சுக்கொடுத்தவன் எதுக்காக திடீர்னு அதிக பணத்துக்கு ஆசைபப்டறான்.. இந்த மாதிரி சட்டத்துக்கு புறம்பான வேலைகளில்  இந்த மாதிரி பேச்சு மாறுவது டேஞ்சர்னு தெரியாதா? அப்படியே கேட்டாலும் வில்லன் டெஸ்ட் ஷூட்க்கு தனி இடத்துக்கு கூப்பிட்டதும் பலி ஆடு மாதிரி யாராவது தனியா போய் மாட்டுவாங்களா? 


3. வில்லன் தன்னை கொலை பண்ணப்போறான்னு தெரிஞ்சுடுச்சு.. முடிஞ்ச வரை எதிர்த்து போராடாம ஏன் அவன் அப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி நடுங்கறான்? பல துப்பாக்கிகளை வடிவமைப்பவன் தன் பாதுகப்புக்கு ஒரு கன் கூட வெச்சிருக்க மாட்டானா? ஏன் வில்லன் சொல்ற படி எல்லாம் ஆடறான்?



4. ஒரு சீன்ல ஹீரோ வில்லனை பார்பர்ல அடச்சே ஹார்பர்ல பார்க்கறான்.. அப்போ ஹீரோ நிராயுத பாணி.. வில்லன் கிட்டே கன் இருக்கு.. டக்னு சுட்டிருந்தா மேட்டர் ஓவர். வில்லன் ஸ்டைலா எதுக்கு டாட்டா எல்லாம் காட்டி டைம் குடுக்கறாரு?



5. பங்களாவுல நுழைஞ்ச போலீஸ் குரூப்பை டைவர்ட் பண்ண வில்லன் டேப் ரெக்கார்டரை தோட்டத்துல வெச்சு கவனத்தை திசை திருப்பறார்.. போலீஸ்ல பாதிப்பேரு திசை மாறுனா ஓக்கே./.  டோட்டல் குரூப்பும் பேக்கு மாதிரி அங்கே வந்து மாட்டுமா.?


6. படத்துல ஹீரோவோட முன்னாள் காதலிதான் இசபெல்லா.. இந்நாள் காதலி போலீஸ் ஆஃபீசர்.. அதனால வில்லன் இசபெல்லாவை ஷூட் பண்ற மாதிரி காட்டி இருக்கலாம்.. போலீஸ் ஆஃபீசரை அவன் ஏன் ஷூட் பண்ணனும்? அவனுக்கும், அந்தம்மாவுக்கும் என்ன பகை? சும்மா ஆடியன்ஸிடம் இரக்கத்தை சம்பாதிக்கவா? தன் இருப்பிடத்தை, தன்னைப்பற்றிய தகவலை தந்த இசபெல்லாவை சுட்டா அதுல ஒரு லாஜிக் இருக்கு.. 


7. க்ளைமாக்ஸ்ல ஹீரோ வில்லன் காரை பார்த்துடறார்.. அதுல தான் ஆட்டோமெடிக் ஷீட்டிங்க் கன்  ஃபிட் பண்ணி இருக்கு. பார்த்த உடனே அதை ஷூட் பண்ணி இருந்தா மேட்டர் ஓவர்.. ஆனா ஹீரோ நல்ல நேரம் பார்த்து டைம் வேஸ்ட் பண்றாரே? ஏன்?


http://files.mymovies.dk/Photos/965b54a7-20e7-439c-9085-453850c0698b.jpg
மனம் கவர்ந்த வசனங்கள்



1.  என் நண்பனுக்கே இந்த கதின்னா என் எதிரிக்கு என்ன ஆகும்னு கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாரு. 


2.  ஒரு ஆர்ட் என்பது எங்கே வேணாலும் இருக்கலாம்.. போலி ஐ டி கிரியேட்டிங்க்ல கூட ஆர்ட் ஒளிஞ்சிருக்கும்



3. எதுக்காக கனடா போறே?


 மீன் பிடிக்க 



4. இசபெல்லா எங்களுக்கு  உதவி செஞ்சா  ஸ்பெயினுக்கு எந்த மேட்டரும் தெரியாம நாங்க பார்த்துக்கறோம்.. 


 ஹா ஹா அப்போ மொத்தத்துல உங்களுக்கு இசபெல்லா,ஜாக்கல் 2 பேர் பற்றியும் எதுவும் தெரியாது..?


5. உங்க ஆஃபரை குப்பைல போடுங்க .. ரஷ்யாவுல எல்லாம் சரண்டர் ஆனா  யாரா இருந்தாலும் பெயில் குடுப்பாங்க 



6. அழகான பெண்ணைப்பார்த்தா எல்லாம் மறந்துடுது


7. என் பழைய விஷயம் எதையும் என் கணவர் தெரிஞ்சுக்க விரும்ப மாட்டார்.  அவரை நான் லவ் பண்ணாலே அவருக்கு போதும்



8. சாரி.. உங்களால அந்த நிம்மதியை தர முடியாது.. நைட் நான் கண்ணை மூடினா நிம்மதியா இப்போ தூங்கறேன்.. உங்க கூட இருந்தா அது முடியாது. 

 ( ஹலோ மேடம் தூங்க விடறவனை விட தூங்க விடாம அன்புத்தொல்லை தருபவன் தான் நல்ல புருஷன் ஹி ஹி )


9. பாஸ்கியோ இனத்தவர் கொடூரமானவர்கள், யாராவது பிடிகலைன்னா உடனே அவங்களை மர்டர் பண்ணிடுவாங்க ( ஜெயா டி வி பாஸ்கிக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?)


10. யாரையாவது கொல்றதை யே பெருமைன்னு அவன் நினைக்கறவன்.. ஒரு பெரிய  மனுஷனை, வி ஐ பியை கொல்றோம்கறது அவனுக்கு ஒரு திருப்தி, ஈகோ 



11.  தப்பு பண்ணுனா மன்னிப்பே கிடையாதுங்கற தொழில்ல அவன் இருக்கான். அவன் தப்பு பண்ணுவான்னு நீ எப்படி எதிர்பார்க்கறே?


12. தைரியசாலிங்க எப்பவும் ஓடி ஒளிய மாட்டாங்க


13. ரஷ்யன் கவர்மெண்ட் கிட்டே உளவாளியா ஒர்க் பண்றது சாதாரண விஷயம் இல்லை



14. வாழ்க்கைல யாரையாவது நம்பனும்...... 




http://i54.photobucket.com/albums/g103/Barrington_Bond/Babes/lifeforce095.jpg

சி.பி கமென்ட் - படம் விறு விறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லர்.. பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் கண்ணியமாக நெறியாள்கை செய்யப்பட்டிருக்கு. 



Cast






Directed by Michael Caton-Jones
Produced by James Jacks
Sean Daniel

Michael Caton-Jones

Kevin Jarre
Written by Chuck Pfarrer
Based on screenplay The Day of the Jackal by
Kenneth Ross
Starring Bruce Willis
Richard Gere

Sidney Poitier

Diane Venora
Music by Carter Burwell
Cinematography Karl Walter Lindenlaub
Editing by Jim Clark
Distributed by Universal Pictures
Release date(s)
  • November 14, 1997
Running time 124 min.
Language English
Russian
Budget $60 million[1]
Box office $159,330,280[1]a

Tuesday, July 24, 2012

A PERFECT WORLD -ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.moviegoods.com/Assets/product_images/1020/471090.1020.A.jpg 

ஜெயில்ல இருந்து ஹீரோவும்,  அவரோட சிறைத்தோழரும் எஸ் ஆகி நகரத்துக்குள்ளே வர்றாங்க.. 2 பேருக்கும் இன்னா டீலிங்க்னா எஸ் ஆகி அவரவர் ரூட்ல போய்க்கலாம்.. ஜெயில்ல இருந்து எஸ் ஆகற வரை தான் கூட்டணி.. அதாவது நம்ம டாக்டர் ராம்தாஸ் மாதிரி.. 

பூவாவுக்கு என்ன பண்றது? செம பசி.. ஒரு வீட்டுக்குள்ளே நுழையறாங்க . அங்கே ஒரு ஆண்ட்டி வித் 2 குட்டீஸ்.. நியாயமா ஜெயில்ல காஞ்சு போய் இருந்தவங்க பொண்ணை பார்த்ததும் இன்னா பண்ணனுமோ அதை பண்ணலை.. ஏன்னா இது ஏ படம் இல்லை.. ஏ கிளாஸ் படம்.. அதனால சாப்பிட்டுட்டு பணயக்கைதியா  பொடியனை கூட்டிக்கறாங்க . ( நானா இருந்தா ஐ மீன் நான் டைரக்டரா இருந்தா அந்த ஆண்ட்டியை பணயக்கைதி ஆக்கி இருப்பேன்.. செக்யூரிட்டிக்கு செக்யூரிட்டி, படத்துல கிளாமருக்கு கிளாமர்.. )



ஜெயில்ல இருந்து தப்பிச்சதால ஒரு போலீஸ் கேங்க் அவங்களை தேடிட்டு வருது.. டெக்சாஸ் பார்டரை அவங்க கிராஸ் பண்றதுக்குள்ளே கைதிகளை கேட்ச் பிடிச்சுடனும் ( கேட்ச்னா என்ன? பிடிச்சுடனும்னா என்ன?)அவங்க கிட்டே இருந்து எஸ் ஆகத்தான் பணயக்கைதியா அந்தப்பையன். ஆன் த வே 2 ஃபிட்ரண்ட்சுக்கும் சண்டை வந்துடுது.. ஒருத்தரை ஒருத்தர் முடிச்சுக்கட்ட கங்கணம் கட்டிட்டு இருக்காங்க.. ( கங்கனா ரனவத் அல்ல )

கேப்டனும் , ஜெயும் மாதிரி முறைச்சுக்கிட்டு இருந்தவங்க சான்ஸ் கிடைச்சதும் ஹீரோ அவர் ஜெயில் கைதியை சுட்டு கொன்னுடறாரு.. அந்த சின்னப்பையனும், ஹீரோவும் மட்டும் இப்போ.. அந்தப்பையனும், ஹீரோவும் மட்டும் இப்போ 


ஹீரோ தன் ஃபிளாஸ்பேக் கதையை சொல்றான்.ஹீரோவுக்கு அம்மா.. அவங்களை தப்பா பேசுன ஒருத்தனை கொன்னுடறான்.. ஹீரோவோட அப்பா பிரபுதேவா மாதிரி.. ஹீரோவோட அம்மாவை கழட்டி விட்டுட்டு ஓடிடறான்.. ரத்தினச்சுருக்கமா ஹீரோ தன் ஃபிளாஸ் பேக்கை சொல்லி முடிச்சதும் அந்த 8 வயசுப்பையனுக்கு ஹீரோ மேல ஒரு பிடிப்பு வந்துடுது.. 2 பேரும் ஃபிரண்ட்ஸ் ஆகிடறாங்க.. 

 http://i2.listal.com/image/1120104/936full-a-perfect-world-screenshot.jpg

அஞ்சாதே படத்துல க்ளைமாக்ஸ்ல ஒரு புல்வெளி காடு காட்டுவாங்களே அந்த மாதிரி ஒரு இடத்துல போலீஸ் அவங்களை ரவுண்டப் பண்ணிடுது. அதுக்குப்பிறகு என்ன நடக்குதுங்கறது சஸ்பென்ஸ்.. அது போக படத்துல இன்னும் 2 சஸ்பென்ஸ் இருக்கு. 1993 ல ரிலீஸ் ஆன படம்.. கதை நடக்கும் கால கட்டம் 1963.. கதைக்களன் டெக்சாஸ்.. நம்ம ஊரு பூவே பூச்சூடவா டைப்ல 2 கேரக்டர்கள், அவங்களுக்கிடையேயான பாசம், செண்ட்டிமென்ட் தான் படம்.. அனைவரும் பார்க்கும் விதம் கண்ணியமாக இயக்கி இருக்கார் இயக்குநர்

படத்துல அந்தப்பையன் நடிப்பு டாப் லெவல்.. ஹீரோவையே சில சமயம் தூக்காம சாப்பிட்டுடறான்.. அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் மைக்ல அழைக்கையில், அம்மா கூப்பிட்டும் மீண்டும் ஹீரோவிடம் போகும் காட்சி கண்ணீர்க்கவிதை. 


ஹீரோ அசால்ட்டான நடிப்பு,.. ஆக்‌ஷன் காட்சிகளில் அவர் ஜொலித்ததை விட செண்ட்டிமெண்ட் காட்சியில் கலக்கறார்.. படத்துல மெயின் இவங்க 2 பேரும் தான்.. ஜெயில் சக கைதியா நடிச்சவர் வில்லத்தனமான நடிப்பும் ஓக்கே. 



http://www.radiotimes.com/rt-service/image/render/A_Perfect_World.jpg?imageUrl=http://static.radiotimes.com.edgesuite.net/pa/92/64/webPerfectWorldD.jpg&width=580&height=327&quality=85&specialisation=film&mode=crop

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. தெளிவான திரைக்கதை இந்தப்படத்தின் முதல் பிளஸ்.. ஃபிளாஸ்பேக் உத்தி லொட்டு லொசுக்கு எல்லாம் இல்லாம கதை ஆரம்பிச்சதுல இருந்து முடிவு வரை ஒரே சீரா நீட்டா போய்ட்டிருக்கு


2. ஒளிப்பதிவு ரொம்ப இயல்பா இருக்கு.. பெரும்பாலான காட்சிகள் வெட்ட வெளில சூர்ய வெளிச்சத்துல எடுக்கப்பட்டிருபதால் செயற்கைத்தன்மை என்பதே இல்லை.. நேரில் நிகழ்வுகளை பார்ப்பது போல் இருக்கு.. 


3. ஹீரோ, அந்த பொடியன், வில்லன் 3 பேர் நடிப்பும் கன கச்சிதம்.. யாரும் ஓவர் ஆக்டிங்கே பண்ணலை.. 



4. க்ளைமாக்ஸின்  கடைசி சஸ்பென்ஸ் காட்சி கன கச்சிதம்.. ஹீரோவை சுட்டு விடும் போலீசை போலீஸ் ஆஃபீசர்கள் இருவரே அடிக்கும் சீன் நச்.. 


5. லேடி போலீஸ் ஆஃபீசர் பேசும் வசனங்கள் அநியாயத்துக்கு பெண்ணியம் வீசினாலும் அவரது அல்டாப்பை ரசிக்க முடிகிறது.. 



http://www.impdb.org/images/thumb/a/a8/A_Perfect_World_Bell.png/600px-A_Perfect_World_Bell.png



 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


 1. ஹீரோ, வில்லன், சின்னபையன் 3 பேரும் கார்ல.. ஒரு ஷாப்பிங்க் செண்ட்டர் ட்ட கார் நிக்குது.. ஹீரோ எந்த நம்பிக்கைல அந்த 8 வயசுப்பையன் கிட்டே ரிவால்வர் குடுத்து துப்பாக்கி முனைல வில்லனை உக்கார வெச்சு கடைக்கு போறார்? எவ்ளவ் டேஞ்சர்? அதுக்கு பேசாம அந்த பையனை பர்ச்சேஸ்க்கு அனுப்பலாமே?முன்னே பின்னே கன் யூஸ் பண்ணாத பையன் கிட்டே கன்னை குடுத்து வில்லனை அசையாம பார்த்துக்கோன்னு சொல்றது நம்பற மாதிரியே இல்லை.. 



2. ஹீரோ அந்த வீட்ல புகுந்து பிணையக்கைதியா சின்னப்பையனை கூட்டிட்டு போக ஏன் முடிவு எடுக்கறார்?ங்கறதுக்கு தெளிவான காரணம் இல்லை.. ஏன்னா சின்னபபசங்களை வெச்சு மேய்ப்பது கடினம்.. அவன் பாட்டுக்கு அம்மா வேணும்னு  அழ ஆரம்பிச்சா அவனை சமாளிக்கறது சிரமம்.  அதுக்குப்பதிலா அந்தப்பையனோட அம்மாவையோ அக்காவையோ கடத்தி இருந்தா  ஹீரோ வில்லனை கொலை பண்றப்போ சரியான நியாயம் காட்டி இருக்கலாம்.. திரைக்கதைல சுவராஸ்யம் ஜாஸ்தியா இருந்திருக்கும்



3. லேடி போலீஸ் ஆஃபீசர் பெண்ணிய வாதங்கள் இந்தக்கதைக்கு எந்த அளவில் யூஸ் ஆகுது? தேவையே இல்லாத பகுதி. 


4. ஹீரோவால அந்த சின்னப்பையன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது போலீஸ் உட்பட எல்லாருக்கும் தெரிஞ்சுடுது.. அதனால ஹீரோ அந்த பையனுக்கு ஏதோ கொடுக்க பாக்கெட்ல கை விடறப்போ அது துப்பாக்கின்னு தப்பா  நினைச்சு ஹீரோ அந்த பையனை கொல்லப்போறார்னு பயந்து போலீஸ் ஹீரோவை சுடும் சீனை ஏற்க முடியலை


5.ஹீரோ அந்த பையன் கிட்டே தான் இதுவரை 2 கொலைகள் மட்டும் தான் செஞ்சதா சொல்றார்/ 1. அவரோட அம்மாவை தப்பா பேசுனவனை  2. இப்போ அந்த சின்னப்பையனை கொல்ல முயன்ற வில்லனை.. ஆனா போலீஸ் ஆஃபீசர் ஹீரோ கேஸ் பற்றி டிஸ்கஸ் பண்றப்போ ஹீரோ தன் அப்பாவை கொன்னுட்டார். அப்டினு ஒரு டயலாக் வருது.. 


6. ஹீரோவிடம் சிக்கி இருக்கும் சின்னப்பையன் ஹீரோ கூட நல்லா நினேகம் ஆகிடறான் , ஹீரோவும் அவன் கேட்பதெல்லாம் வாங்கித்தர்றார்.. ஆனா அந்த ப்பையன் ஒரு சீன்ல கூட எங்கம்மா கூட அட்லீஸ்ட் ஃபோன்லயாவது பேசறேன், நான் நலம் என்பதை அம்மா கிடே சொல்லிடறேன் அப்டினு டிமாண்ட் பண்ணவே இல்லையே?



http://i2.listal.com/image/2924242/500full.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்



1. பெருசு, போய்ட்டு வர்றோம்..

 பார்த்து.. பத்திரமா போய்ட்டு வாங்க..

நாங்க என்ன டூரா போகப்போறோம்? ஜெயில்ல இருந்து தப்பிக்கப்போறோம்

2. கவர்னர்ட்ட நானே பேசிப்பார்க்கவா?

அவர் பேசறதை எல்லாம் யார் கேட்கறா?

3. ஹாய்.. மிஸ்.. வெளி இடத்துல காபி சாப்பிடற பழக்கம் உங்களுக்கு இருக்காதே..?

 ஏன் கேட்கறீங்க?

 ஹி ஹி , உங்களுக்குத்தர ஏதும் இல்லை, எங்களுக்கே இங்கே டெயிலி 2 டைம் தான் காபி தர்றாங்க..

4. அவர் ஏன் போறப்ப கார் சாவியையும் எடுத்துட்டு போறாரு?

அப்போத்தானே அவரை விட்டுட்டு போக மாட்டோம்?

ஓ! விட்டுட்டுப்போய்டுவீங்களா?

தாராளமா!


5. இன்னொரு வாட்டி என்னை இப்படி அடிச்சுடாதே..

 ஏன்? அடிச்சா அழுதுடுவியா?

6. லேடி போலீஸ் ஆஃபீசர் - டீம் ஒர்க்னா என்னன்னு தெரியாம மஞ்சள் பையை எடுத்துட்டு ஊர்ல இருந்து வந்தேன்னு என்னை நினைக்கறீங்களா?

7. திமிரு ஒருத்தனுக்கு எப்போ வரும் தெரியுமா? பொறுப்பு அதிகம் ஆகறப்போ !

8. உண்மையை சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்ட ஆள்?

 என்னை புரிஞ்சுக்கிட்டவங்களுக்கு நான் நல்லவன்

 புத்திசாலித்தனமா  பேசறதா நினைப்பா?

9. எனக்கு ஒரு டவுட்.. 


 உனக்கு டவுட் எப்போதெல்லாம் வரும்?எப்பவும் வருமா? எப்போதாவது வருமா?


சந்தேகமானவங்களை  பார்த்தா வரும்



10. உன் கூட நான் ஜாலியா பேசறேன்.. ஆனா இந்த மாதிரி எங்கப்பா என் கிட்டே பேசுனதில்லை


 



11. லோக்கல் போலீஸ் ஃபோன்ல “ அவனைப்பார்த்தா ஷூட் பண்ணிடவா?ன்னு கேட்கறாங்க. ஆர்டர் குடுக்கவா?


வேணாம்.. ஆர்வக்கோளாறுல அந்தப்பையனை சுட்டுடப்போறாங்க.. 



12. சின்ன வயசுலயே திருடுனா நீ உருப்படவா போறே..?


 ஓவரா வாய் பேசுறவங்களும் உருப்பட மாட்டாங்க .. 



13. திருடறது தப்பு.. ஆனா நாம ஒண்ணு கேட்டு அது நமக்கு கிடைக்கலைன்னா திருடறதுல தப்பு இல்லை ,கேட்டது கிடைச்சுட்டா ஏன் திருடறோம்?


14. அந்த எல்லையை தாண்டி அவனால போக முடியாது


 ஏன்?

 கவர்மென்ட் ரோடு போடலையே?



15. இவ்ளவ் விபரம் சொல்ற நீங்க கொலையாளி எங்கே இருப்பான்னும் சொல்லிட்டா எங்களுக்கு வசதியா இருக்குமே?



அப்புறம் நீங்க எதுக்கு டியூட்டி பார்க்கறீங்க?சம்பளம் வாங்கறீங்க?



16. இருபது வருஷம் முன்னால இங்கே போட ஆரம்பிச்ச ரோடு இன்னும் போட்டுட்டே இருக்காங்க.. 




17. நம்மைத்தவிர இந்த உலகத்துல யாரையும் நம்பக்கூடாது



18. ஒரு உண்மையைச்சொல்லவா? என் ஒரே நண்பன் நீதான்.. 





http://content.internetvideoarchive.com/content/photos/115/004838_14.jpg
சி.பி கமெண்ட் - பர பர ஆக்‌ஷன் காட்சிகள், சண்டைக்காட்சிகள் இல்லைன்னாலும் இது ஒரு வித்தியாசமான சைக்காலிஜிகல் அப்ரோச்சிங்க் ஃபிலிமே.. வித்தியாசமான சினிமா ரசிகர்கள் பார்க்கலாம்


தொழில் நுட்பக்கலைஞர்கள் விபரங்கள்


Directed by Clint Eastwood
Produced by Mark Johnson
David Valdes
Written by John Lee Hancock
Starring Kevin Costner
Clint Eastwood
Laura Dern

T.J. Lowther
Music by Lennie Niehaus
Cinematography Jack N. Green
Editing by Joel Cox
Ron Spang
Studio Malpaso Productions
Distributed by Warner Bros.
Release date(s) November 24, 1993
Running time 138 minutes
Language English
Box office $135,130,999
 
 140 நிமிடங்கள் ஓடும் படம்

படத்தின் ட்ரெய்லர்