Showing posts with label ஸ்ரேயா. Show all posts
Showing posts with label ஸ்ரேயா. Show all posts

Sunday, February 16, 2014

சந்திரா - திரை விமர்சனம் 35 1 / 2 +

அரச பரம்பரையினரின் சமகால வாழ்க்கை என்ற பெயரில் ஆபாசக் குப்பைகள் அவ்வப்போது பாலிவுட்டில் படமாக்கப்படும். பிரபல கன்னடப் பெண் இயக்குனரான ரூபா ஐயர் இயக்கியிருக்கும் இந்தப் படம் அந்த வகையைச் சேர்ந்ததல்ல. இந்தியக் கலாச்சாரத்தின் மீது ஆழமான நம்பிக்கையும் அழகுணர்ச்சியும் கொண்ட ஒரு பெண் மனத்தின் வெளிப்பாடாக, ஒரு பொழுதுபோக்குக் காதல் படத்தைக் கொடுத்திருக்கிறார் ரூபா. 



அரசாங்கம் எடுத்துக்கொண்டது போக மிச்சமிருக்கும் அரண்மனையில் வசிக்கிறது மைசூர் இளவரசியான சந்திரவதியின் (ஸ்ரேயா) குடும்பம் (படத்தில் காட்டப்படும் அரண்மனையை வைத்து, ஒரு வசதிக்காக மைசூர் ராஜவம்சம் என்று நினைத்துக்கொள்ளலாம்). அரண்மனை குருவின் (விஜயகுமார்) மகன் சந்திரஹாசன் (அறிமுகம் பிரேம்குமார்) இளவரசி சந்திரவதி இருவருக்கும் கண்டதும் காதல். பாரம்பரியக் கலைகள், ஆயுர்வேத மருத்துவம், மரபுக்கவிதை என்று கலாச்சாரத்தில் ஊறியவனாக இருப்பதால் சந்திரஹாசனைச் சந்திராவுக்குப் பிடிக்கிறது. ஆனால் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறியவனாக இருக்கும் மற்றொரு அரச குடும்பத்து வாரிசான ஆர்யாவுக்கு(கணேஷ் வெங்கட் ராம்) சந்திராவை நிச்சயம் செய்கிறார்கள். 



 சந்திரா - சந்திரஹாசன் காதல் இரண்டு குடும்பங்களுக்கும் தெரியவருகிறது. அவர்கள் காதலைக் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காதலர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் கதை. 

 

சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு, நடனம், அரங்க அமைப்பு, படத்தொகுப்பு கதை, திரைக்கதை, இயக்கம் என்று பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கும் ரூபா, ஒவ்வொரு காட்சியையும் ஓவியம் போலத் தீட்டியிருக்கிறார். அழகான ஒளிப்பதிவும் இசையும் பொருத்தமான நட்சத்திரத் தேர்வும் படத்தின் அசைக்க முடியாத பலம். ஆனால் இவை மட்டுமே ஒரு படத்துக்குப் போதாதே. ‘தூய்மையான காதல் கண்டிப்பாக வெல்லும்’ என்ற பழம்பெரும் கொள்கையைக் கருவாகக் கொண்டதில் பிரச்சினை இல்லை. அதைச் சொல்லும் முறையில் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் அல்லவா? 



அதுதான் சந்திராவில் இல்லை. அழுத்தமான சம்பவங்கள் இல்லாமல் திரைக்கதை ஆங்கங்கே தேங்கி நிற்கிறது. காதலுக்கு ஏற்படும் பிரச்சினை, இன்னொரு ஆணின் ஒருதலைக் காதலால் ஏற்படும் சிக்கல் ஆகியவறைச் சிறிதாவது புதுமையான காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கலாம். 



விளைவு, படத்தின் சிக்கல்களோடும் திருப்பங்களோடும் பார்வையாளர்களால் ஒன்ற முடியவில்லை. படத்தின் முடிவில் திருமண மஹால் காட்சியில், “நீ வந்து என்னைத் தாரை வார்த்துக் கொடு” என்று காதலனை இளவரசி அழைக்குப்போது, திரையரங்கில் ஆச்சரியத்துக்குப் பதிலாக ஏளனச் சிரிப்பலை. 

 

ஆனால் ஒரு பெண் இயக்குநராக சந்திராவதி கதாபாத்திரத்தின் வழியாக, பெண்மனத்தின் தனித்த ஏக்கங்களை சின்னச்சின்ன அடையாளங்கள் வழியாக வெளிபடுத்தியது பாராட்டுக்குரியது. எதிர்காலத்தில் க்ளிஷேக்கள் குறைந்த படத்தை இந்த இயக்குனரால் தர முடியும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுகிறது. 



இளவரசி சந்திராவதியாக ஸ்ரேயா சரண் வசீகரிக்கிறார். காதல் காட்சிகளில் நடிப்பதில் இவருக்கும் அறிமுக நாயகன் பிரேம்குமாருக்கும் சரியான போட்டி. இருவருக்கும் இடையிலான வாள் சண்டைக் காட்சியில், ஆண்மை, பெண்மை, காதல் ஆகிய மூன்று உணர்ச்சிகளையும் காட்சிப்படுத்திய விதம் அபாரம். பெண் தோழிகள் அதிகம் கொண்ட கதாபாத்திரத்துக்கு ஆர்யா என்று பெயர் வைத்தது இயக்குநரின் குறும்பு. 



முதல் பாதியில் சரியான இடங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகள் இரண்டாவது பாதியில் எக்குத்தப்பாகத் திணிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும் பாடல்களில் ஒளிப்பதிவாளர் பி.ஹெச்.கே. தாஸ், இசையமைப்பாளர் கௌதம் ஸ்ரீவஸ்தா இருவரும் அருமையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். 

 

காட்சிப்படுத்தும் விதம், சிறந்த நடிப்பை வாங்குதல், அழகுணர்ச்சி ஆகியவற்றில் சிறப்பாக வெளிப்படும் இயக்குநர் திரைக்கதையிலும் கதையை நகர்த்திச் செல்லும் சம்பவங்களிலும் கவனம் செலுத்தியிருந்தால் மிக நேர்த்தியான பொழுதுபோக்குப் படமாகியிருக்கும் சந்திரா. 

THANX - THE HINDU 




Friday, March 08, 2013

ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம்

 

எல்லா தமிழ் சினிமாக்களையும் கலாய்க்கும் எஸ் வி சேகரின் சினிமா சினிமா , ஷக்தி சிதம்பரத்தின் மகாநடிகன் , சி எஸ் அமுதனின் தமிழ்ப்படம் பாணியில் இன்னொரு படம் . முதல் பாதி ஹாலிவுட் படமான ஹேங்க் ஓவர் , பின் பாதியில் இன்று போய் நாளை வா  & கண்ணா லட்டு தின்ன ஆசையா?  அக்மார்க் உல்டா என கலந்து கட்டி மொக்கை போட்டிருக்கிறார்கள் .. உஷ் அப்பா முடியல


நண்பர்கள் 3 பேரு , திருப்தி இல்லாத மேரேஜ் லைஃப்ல இருந்து விடுபட  ஐடியா பண்றாங்க . இவங்க 3 பேருக்கும்  ஏன் மனைவி செட் ஆகலை அப்டினு தனித்தனி டிராக்ல சின்ன சின்ன கதை .அது முடிஞ்சதும் டான்ஸ் பார்ட்டில ஒரு ஃபிகரை பார்க்கறாங்க. அதுதான் ஹீரோயின் . அதை கரெக்ட் பண்ண 3 பேரும் படாத பாடு படறாங்க. யார் செட் பண்ணாங்க என்பதுதான் கதை . இதுல ஒரு ட்விஸ்ட் வேற இருக்கு க்ளைமாக்ஸ் ல . தில் இருக்கறவங்க தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க.. இந்த  கூத்துல பெரிய கூத்து என்னன்னா 2 வது பாகம் வேற வருதாம் .


ஹீரோ வினய்  என்பதே டைட்டில் ல தான் தெரியுது . எப்படி இருந்த ஆளு இப்படி ஆகிட்டாரே?  அய்யோ பாவம் , சத்யன் , பிரேம் ஜிக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட இவருக்கு இல்லை . இவர் அஜித்தை , ரஜினியை , விஜய் யை கலாய்ப்பதெல்லாம் ஓவர் . யார் யார் என்ன செஞ்சா நல்லாருக்கும்னு தெரிய வேணாமா?  ( அவர் கலாய்ச்ச ஆர்டர் படி பேர் போட்டிருக்கேன், இதுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க )


ஓப்பனிங்க் ஷாட்டில் ஒரு பாடலுக்கு வரும் பவர் ஸ்டார்க்கு அமோக வரவேற்பு , ஆனா பெருசா ஏதும் கவரலை . பவர் ஸ்டார் உஷார். இப்படி சில்க் ஸ்மிதா மாதிரி ஆடிட்டு இருந்தா உங்க பவர் போயிடும் . 




படத்துலயே எல்லார் மனமும் கவர்ந்தவர் சத்யன் தான். நல்ல காமெடி சென்ஸ். டயலாக் டெலிவரி , நடிப்பு எல்லாம் பக்கா 


பிரேம் ஜியை க்ளோசப் ல அடிக்கடி காட்டுவது ஏன்? அவர் வாய் என்ன சிம்ரனின் இடுப்பா? கேமராவைக்கொண்டு போய் கொண்டுபோய் அவர் வாய் கிட்டேயே வைக்கறாங்க >. முடியல 


 ஹீரோயின் லட்சுமி ராய். டைட்டில் ல அழகு தேவதைனு போடறாங்க. என்ன நிர்ப்பந்தமோ .. பில்லா நயன் தாரா கெட்டப்பில் க்ளைமாக்ஸ் சில் நல்லா பண்ணி இருக்கார் , ஜாக்கிங்க் போற சீன்ல நல்லா திறமையை காட்டி இருக்கார்.. (  ஜாக்கிங்க் போறதுல என்ன திறமை?னு கேட்கும் சின்னப்பசங்க எல்லாம் ஜவ் மிட்டாய் சாப்பிடவும் ). நீச்சல் டிரஸ் ல  10 நிமிஷம் வர்றார் , அதோட அவர் போர்ஷன் ஓவர் . 


 வினய்க்கு மனைவியாக வரும் அந்த குண்டு பொண்ணு ஆர்த்தி மாதிரி ஒரு ரவுண்ட் வர சான்ஸ் இருக்கு , அவரே 19 ரவுண்ட் நம்மை விட குண்டா தான் இருக்கார் . 


 கவுரத்தோற்றத்தில் (!!!!!!!!!) டான்ஸ் பார்ட்டி புகழ் சோனா . 1ம் சொல்றதுக்கில்லை.. அப்புறம் மந்த்ராஆஆ




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. போஸ்டர் டிசைனில் , விளம்பரங்களில் பவர் ஸ்டாரை போட்டு மார்க்கெட் பண்ணினது , அவர் ஒரு பாட்டுக்குத்தான் வர்றார் என்பது தெரியாத வண்ணம் பார்த்துக்கிட்டது 



2.  படத்தின் ஹீரோயின் லட்சுமிராய்  படம் போட்டு 97 வது நிமிடம் தான்  அதாவது இடைவேளை முடிஞ்சு 6 நிமிஷம் கழிச்சுத்தான் எண்ட்ரியே ஆகறார் என்பது தெரியாத படி ஃபுல் அண்ட் ஃபுல் அவர் தான் எல்லாம் என்பது மாதிரி பிரமோட் பண்ணது 



3. ஹீரோ வினய் என்பதே தெரியாத படி இருட்டடிப்பு பண்ணி பிரேம் ஜி , சத்யன் இவங்களை பூஸ்ட் அப் பண்ணது 



4.  பிரேம் ஜி - சோனா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளில் கடலோரக்கவிதைகளை நையாண்டி செஞ்ச விதம்  ( அடி ஆத்தாடி ) 


5. சத்யன் தன் ஜோடியுடன் பாடும் உயிரின் உயிரே ( காக்க காக்க) பாடல் காட்சி


6, மனைவியைப்பிரிந்த வாலிபர்கள் சங்கம்  ஆரம்பிச்சு பாடும் கானாப்பாட்டான  வா மச்சி வா குத்தாட்டப்பாட்டு ஆக்கியது ( பாடல் இல் இருந்த கிக் படமக்கத்தில் இல்லை ) 


7 . மனோபாலாவின் சம்சாரத்தை  வேறொரு நபர்  கிஸ்  அடிப்பதும் , அதை மன்னிக்கும் மனோபாலாவை ஒபாமா சந்திக்க விரும்பும் காமெடி டிராக்கும் ஆஹா! 


இயக்குநரிடம் சில கேள்விகள்



1. கலாய்த்தல் என்பது சம்பந்தப்பட்ட நபரே பார்த்தாலோ படிச்சாலோ அவங்களே ரசிக்கும் அளவு இருக்கனும். எல்லை மீறினால் ரொம்ப த்தப்பு . ரஜினி, கமல் , அஜித் , விஜய் 4 பேரையும் கலாய்ச்சு இருக்கீங்க , இதுல அவங்களோ, அவங்க ரசிகர்களோ பார்த்தா கடுப்பாகும்படி தான் காட்சிகள் இருக்கு .



2. ஹீரோ பேரு டேவிட் பில்லா , அவர் தடுமாறி கீழே விழும் காட்சியில் “ நீ நெம்பர் ஒன் நெம்பர் ஒன் அப்டினு சொன்னே, இப்போ கீழே விழுந்து கிடக்கே  “ இந்த டயலாக் எதுக்கு? அஜித் ஒரு நாளும் தன்னை நெம்பர் ஒன் அப்டினு சொன்னதே இல்லையே?  தனிப்பட்ட முறைல உங்களுக்கு ஏதாவது அஜித் கூடப்பகையா? 


3. சத்யன் ஒரு காட்சியில் துப்பாக்கி விஜய் ஸ்டைலில்  “ ஐ ஆம் வெயிட்டிங்க் “ அப்டின்னதும் ஃபிகர் “ போடா லூசு “ அப்டிங்குது. இது ரொம்ப ஓவர் 


4. யார் அவன் கோச்சடையான்? மண்டை மேல கொண்டை வெச்சுக்கிட்டு  என்ற டயலாக்கும் அத்து மீறலே , தியேட்டர்ல யாரும் சிரிக்கவே இல்லை பாஸ் 


5 . லொள்ளு சபா உட்பட எல்லாரும் பிரிச்சு மேஞ்ச நாயகன் வேலு நாயக்கர் கேரக்டர் உல்டா செம போர்..


6. மகளிர் தினம் அன்னைக்கு படம் ரிலீஸ் பண்ணிட்டு படம் பூரா பெண்களை மட்டம் தட்டிட்டே இருக்கீங்க.. டயலாக்ஸ் எல்லாம் நேரடி டபுள் மீனிங்க் ..  ஏஏஏ சர்ட்டிஃபிகேட் குடுத்ததில் தப்பே இல்லை 



7, கே எஸ் ரவிக்குமார் போலீசாக செய்யும் அலப்பறை செம மொக்கை 



8. க்ளைமேக்ஸ் வந்ததும் டகால்னு 3 பேரும் திருந்துவது எப்படி? 


9. படத்தின் கடைசி அரைமணி நேரம் சத்திய சோதனை , மகா இழுவை 

10 . ஒவ்வொரு தமிழ் சினிமாவையும் கலாய்க்கும்போது நல்லாவே தெரியுது என்ன படத்தை ஓட்டறீங்கனு, போதாததுக்கு அந்தந்தப்பட ஃபேமஸ் பி ஜி எம் மை வேற ஓட விடறீங்க , போதாததுக்கு படத்தோட டைட்டிலையும் கேரக்டரே சொல்லனுமா? படு செயற்கை  



மனம் கவர்ந்த வசனங்கள்


1. நாம 10 ரூபா கடனா கேட்டா தராத பசங்க பொண்ணுங்க கேட்டா மட்டும் 1000 ரூபா அயர்ன் பண்ணித்தருவானுங்க



2. நான் தல யையே பார்த்தவ.என் கிட்டேயே மங்காத்தாவா ? 


- நான் தல ,தளபதி 2 பேரையும் பார்த்தவ 




3. எல்லாரும் சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வெச்சவனைத்தான்  லவ் பண்ணுவாங்கன்னா என்னை மாதிரி சிங்கிள் பேக் எல்லாம் எங்கே போக ? 



4.  ஏய், டூ வட் ஐ ஸே.. 

 என்னது? வாட்டர்  சப்ளை வேணுமா?



5. ட்ரெட் மில்லுல என்னை இப்படி நடக்க விட்டதுக்கு ரோட்ல என்னை விட்டிருந்தா இந்நேரம் நான் கோயம்பத்தூருக்கே போய் இருப்பேன் 


6. ஹாய் மிஸ்.. என்ன இவங்க கை கொடுக்க மாட்டாங்களா?

 அவங்க கொஞ்சம் ஆர்த்தோடக்ஸ்

 ஆடு மேய்க்கறாங்களா? 


 அய்யோ, யாரையும் டச் பண்றது பிடிக்காதுன்னு அர்த்தம் 


 குட் ஹேபிட், ஆனா பேடு மேனர்ஸ் 



7.  இவ என் ஃபிரண்ட் சவுந்தர்யா 


 ரஜினியை கேட்டதா சொல்லுங்க 



8.  நாம 2 பேரும் பாம்பே ஓடிப்போலாம் 


 அங்கே வேணாம் , குஜராத் போலாம்// 


 இல்லை , பாம்பே படத்துல தான் அர்விந்த் சாமி மணீஷா கூட ஓடிப்போய் ரெட்டை குழந்தை பெத்துக்கிட்ட்டாரு  , அதே செண்ட்டிமெண்ட் ல நாமும் ட்ரை 



9.  தண்ணி குடு 

 இல்லை 


 இப்போதான் ஒரு 30 லிட்டர் கேனை உருட்டிட்டுப்போனே? ( அது ஒரு குஜிலி)



10.  டேய், இது எத்தனை நாளா நடக்குது? 


 இப்போத்தான் அரை மணி நேரமா 





11.  நான் உயிரோடு இருக்கும் வரை தப்பு பண்ண விட மாட்டேன் 


 ஓ, எப்போ சாவீங்க ?


12.  எதுல வேணாலும் விளையாடுங்க, ஆனா என் லவ் ல மட்டும் விளையாடாதிங்க


 அப்போ உன் லவ்வர் கூட விளையாடலாமா?  ( எந்த ஃபிரண்ட்ஸ் ஆவது இப்படி கேட்பாங்களா? )


13.  இந்த நாய்க்கு பூஜை, அர்ச்சனை செய்யனுமா? சரி நட்சத்திரம் என்ன?

 மிருக சீசரம் , கவுரவ கோத்திரம் 

 கூட இருந்து பிரசவம் பார்த்த மாதிரியே சொல்றானே



14.  என்ன பேசறீங்க? 

 தமிழ் தான் 


15.  ஏய்.. புரிஞ்சுக்க 


 முதல்ல புரியற மாதிரி பேசு


16.  புலி பசிச்சாலும் புரோட்டா தின்னாது 


17.  முழு புரோட்டாவா இருந்த நம்ம வாழ்வு மேரேஜ் ஆனதுல இருந்து கொத்து புரோட்டாவா ஆகிடுச்சு 


18.  நான் அஞ்சாவது படிக்கும்போது அஞ்சலை டீச்சரை லவ் பண்ணேன், பத்தாவது படிக்கும்போது பத்மா டீச்சரை , பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது பரிமளா டீச்சரை லவ் பண்ணேன் 




19.  அடடா, என்ன அழகு அழகு , உக்கார வெச்சு ஒரு மாசம் வேடிக்கை பார்க்கலாம் போல 


20 . எங்கே அவளைக்காணோம்? மைதா மாவு மாதிரி இருந்தாளே, தண்ணீருல கரைஞ்சுட்டாளா?





21.  மிஸ் , 17 சி பஸ் எங்கே நிக்கும்? 

 சாலி கிராமம் போய்க்கேட்டா சொல்வாங்க, இது பெங்களூர் 



22. அய்யோ , மேடம், ரொம்ப ஏறி ஏறி இறங்காதீங்க  ( அவுட் ஆகிடப்போகுது ) சென்சார் கட் வசனம் மியூட் ( டபுள் மீனிங்க் _)




23./ ஓமக்குச்சி கூட என்னைப்பார்க்க வர மாட்டான், ஒபாமா எதுக்கு வர்றாரு?


24.  அந்தக்கொரில்லா நீ எது சொன்னாலும் கேட்குமா? முட்டி போடுமா? 


 குட்டியே போடும்  ( அதாவது வாரிசு ) 



25. உன் மாமியார்  கராத்தாவுல பிளாக் பெல்ட்னு சொல்லவே இல்லை?


இதை பிரஸ் மீட் வெச்சா சொல்லிட்டு இருக்க முடியும்?


26. குத்துங்க எஜமான் குத்துங்க, இந்த மாமியார்களே இப்டித்தான்





எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


 சி. பி கமெண்ட் - எல்லாரும் பார்க்க முடியாது . பி , சி செண்ட்டர் ஆண் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். எல்லா தமிழ் சினிமாக்களையும் பார்த்தவங்க ஓரளவு ரசிக்கலாம் , டி வி ல பார்க்க ஏற்ற படம் . தியேட்டருக்குப்போனா 9 ல குரு  ஏழரை சனி - ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் 

 ரேட்டிங்க் -   2.25  / 5


Friday, August 12, 2011

ரவுத்திரம் - டெம்ப்போ இன் ஃபைட்டிங்க் சீன்ஸ் ,அம்போ இன் ஹிட்டிங் சான்ஸ் - சினிமா விமர்சனம்

http://tinselmovies.com/images/rowthiram2.jpg
சத்யா கமல் போல் ஒரு கேரக்டர் பண்ண வேண்டும் என்ற ஆதங்கம் ஜீவாவுக்கு வந்ததில் தப்பில்லை.ஆனால் அதற்கு ஸ்கிரிப்ட் பக்காவாக அமைந்தால் மட்டும் பத்தாது, பாடி லேங்குவேஜில் சூர்யாவின் அர்ப்பணிப்பு, பாடி மெயிண்டெனென்ஸில் விக்ரமின் உழைப்பு , பல வருட அனுபவம் எல்லாம் வேண்டும்.. அதை எல்லாம் விட்டு விட்டு இந்த பிஞ்சு முகத்தை வைத்துக்கொண்டு அவர் புரூஸ்லீ ரேஞ்சுக்கு எதிரியிடம் அடியே வாங்காமல் பாட்ஷா ரஜினி மாதிரி ஷோ காட்டினால் எப்படி?

படத்தில் முதல் ஹீரோ ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு .. பட்டாசைக்கிளப்புது ஃபைட்டுக்கான லீடும் ,அதை படமாக்கிய விதமும், ஸ்லோமோஷன் சண்டைக்காட்சிகளும்.. 

படத்தோட கதை என்ன? அநியாயம் எங்கே நடந்தாலும் தட்டிக்கேட்கும் கோப க்கார இளைஞன் தான் ஹீரோ. ( அநியாயம் எங்கே ஓடுனாலும் தட்டிக்கேப்பாரா?)அப்படி போடும் சண்டையில் எதேச்சையாக ரவுடியும் ,வில்லனும் ஆகிய கவுரிமேல்  அடி பட்டு விடுகிறது.. ஆனால் கவுரி வேறு ஒரு கேஸ்க்காக ஜெயிலில் இருக்கும் சூழலில் ஸ்ரேயாவுடன் லவ்விக்கொண்டு இருக்கிறார். வில்லன் வெளியே வந்ததும் வேட்டை ஆரம்பம்.. 

ஹீரோயின்க்கும் , படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எவனும் கேட்கக்கூடாது என்பதற்காக அவர் அசிஸ்டெண்ட் கமிஷனரின் மகள் என்று ஆரம்பத்திலேயே இயக்குநர் நம் வாயை அடைத்து விடுகிறார்..

ஜீவாவுக்கு தங்கை கேரக்டர், ஸ்ரேயாவுக்கு தோழி கேரக்டர் என ஆங்காங்கே கண்ணுக்கு குளிர்ச்சியாய் பல அழகு ஃபிகர்கள்.. அனுபவி ராஜா அனுபவி.. 

ஜீவாவின் தங்கைக்கு மாப்ளையாக வரும் சத்யனின் காமெடி உதார் நடிப்பு படத்தை ஜாலி மூடில் கொண்டு போக ரொம்பவே யூஸிங்க்... அதே போல் வழக்கமாக ஹீரோவின் ரவுடியிசம் கண்டு பயப்படும் ஹீரோயினாக  இல்லாமல் அவரைக்கண்டு ஆச்சரியம் கொள்ளும் ஹீரோயினாக ஸ்ரேயா வருவதும் , கொடுத்த சம்பளத்துக்கு பங்கம் வராமல் இயக்குநர் அவரை முழுதாக யூஸ் பண்ணியதும் ( படத்துல ) சபாஷ் போட வைக்கின்றன..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizOGRnTCa_lrRQ9LFphqL97JRu-bNnjDSMJg5gunAXGD3UrPTRQl3v4vFhA-3LGtZOMl9d6Jlv3vCBzweMbZHKKCZbr20YJuvi3h9wyZ4aeJlrUjgvAEz3mvPVyC8uzocSfzGqHX_pbWc/s1600/shriya1.jpg

ஆக்‌ஷன் படத்திலும் ரசிக்க வைத்த வசனங்கள்

1.  நீங்களும் தட்டி கேட்க மாட்டீங்க,கேட்கறவனையும் விட மாட்டீங்க.. 

2.  காபி ஷாப் கூப்பிட மாட்டீங்களா?

அட! அக்கவுண்ட்ல தருவாங்களா? அப்போ போலாம். 

3.  என்னடா காபி தர்றே? கட்டிங்க் மாதிரி இவ்வளவு கம்மியா?

4.  இது தான் உங்க ஊர்ல காபி ஷாப்பா?

ஆமா சொல்டா!

ஆமா.. ஹி ஹி 

5.  எதுக்கு என் செல்லை பிடுங்கறே? அதுல பேலன்ஸ் கிடையாது.. 

அது மாடலை பார்த்தாலே தெரியுது. 

6.   உன் கிட்டே ஃபோன் இருக்கா?

ஓ. என்னுது ஐ ஃபோன்.. காஸ்ட்லி, அதனால அதை வீட்லயே வெச்சுட்டு வந்துட்டேன்.. ஹி ஹி 

7. அப்பா பேரை உங்க பையனுக்கு வெச்சுட்டு அவனை அவரே , இவரே அப்டின்னு மரியாதையா கூபிடறதை இங்கே தாங்க பார்க்கறேன்.

8. ஒழுங்கா இருக்க முடியும்னா உன் பையனை இருக்க சொல்லு, இல்லைன்னா அவரை வீட்டை விட்டு கிளம்ப சொல்லு.. 

என்னடா?நம்மளை சொல்லிட்டு அவரு கிளம்பி போய்ட்டாரு?

9. உங்க பேரு அம்முவா? யார்.. உங்க அம்மா வெச்ச பேரா? 

தெரில.. யார் வெச்சாங்கன்னு.. அப்போ நான் சின்ன பொண்ணு..

10. அவனுங்க 4 பேரையும் பார்டா.. எக்ஸ்பேண்டபிள்ஸ் போஸ்டர் மாதிரியே ஃபிலிம் காட்டறதை.. அடங்குங்கடா... 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNbr4Ta9Z9zwLUXnnVBq0zsEqzJKsvAIZsTBebee44aYHQSWR8Sw6J9VcEDboDfkQqwJq_v1j5e-38iGB6eq7R0ZW7_WWRHIwsEeahLm96rvuB4PKWgorkeltKJTr-dpqtBoL1tjaH5zSj/s1600/1.jpg

11.  நீ இப்போ என்னைத்தானே பார்த்தே?

இல்லையே?

 கண் பொய் சொல்லாது.. சிவா.. 

12. வில்லனிடம் பஞ்ச் டயலாக் - இதுக்கு முன்னால உன்னை நான் பார்த்ததில்லை, இதுக்கு அப்புறமும் நான் உன்னை பார்க்கறதா இல்லை..

13.  அவருக்கு 28 வயசு, இது வரை 200 ஃபைட் போட்டிருப்பாரு.. உங்களுக்கு 50 வயசு இருக்கும் எத்தனை ஃபைட் போட்டிருப்பீங்க?

14.  ஒரு பொண்ணு பிறந்த வீட்ல எப்படி வேணாலும் இருக்கலாம்.ஆனா புகுந்த வீட்ல ....

அய்யய்யோ நீ எப்பம்மா இங்கே புகுந்தே?

15. சாரி.. நீ சொன்னபடி 4 மணிக்கு ரெஸ்டாரண்ட் வர முடியாது, 4.05க்கு வந்துடவா?

16. என்னை எப்படி மறந்தே?

உன்னை எப்போ நினைச்சேன்?

17. அவ கண் இருக்கே, ஊதாப்பூவை பிளாக் & ஒயிட்ல பார்த்த மாதிரி இருக்கும்.. 


18. வரமாட்டேன்னு சொன்னியே ,ஏன் வந்தே?

வரமாட்டேன்கறதை சொல்லிட்டுப்போலாம்னுதான் வந்தேன்

19. ஜூஸ் முடிஞ்சுது, இன்னும் ஏன் உறிஞ்சிட்டே இருகே? ஸ்ட்ராவை?வேணும்னா இன்னொண்னு சொல்லவா?

நோ.. நான் சிக்ஸ் பேக்கிற்கு ட்ரை பண்றேன். 

 உங்க ரேஞ்சுக்கு நீங்க எயிட் பேக்கிற்கே ட்ரை பண்ணலாம்.. 

20.  இவ்வளவு பில்டப் தர்றீங்களே? உங்க பேரென்ன?

ராமானுஜம்

சத்தியமா உங்க பேரை யூஸ் பண்ண மாட்டேன் போதுமா?

சரி , நான் ஷார்ட் டெம்பர் என்ற மேட்டரை உங்க தங்கைட்ட சொல்லிடாதீங்க. 




http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/04/shreya.jpg

21. அங்கிள், நான் பெரியவங்க கிட்டே எப்பவும் ரொம்ப ரெஸ்பெக்ட்டா நடந்துக்குவேன்.. 

அதான் பார்த்தேனே.. 

22.  அவ போய்ட்டாளா?

ம், அவளோட உங்க மானமும் போச்சு. உங்க சின்ன வயசுல எந்த டிரஸ்சும் போடாம பந்தாவா ஒரு போஸ் குடுத்துட்டு நிப்பீங்களே, அந்த ஃபோட்டோவை வாங்கிட்டு போறாரு..

23. சரி.. விடுங்கடா.. அழகான பொண்ணுங்கன்னா பசங்க ஃபாலோ பண்ணத்தான் செய்வானுங்க.. 

அதான்க்கா கேட்கறோம்.. உங்களை ஏன் ஃபாலோ பண்றானுங்க?

24.  அண்ணே, என் பையன் ஒருத்தனை அடிச்சுட்டான், நீங்க தான் காப்பாத்தனும்.. 

சரி , விடு.. இன்னைக்குத்தான்  கவுரி ( வில்லன்) ரிலீஸ் ஆகறாரு.. அவர் கிட்டே சொல்லிக்கலாம்.. 

என் பையன் அடிச்சதே அந்த கவுரி யைத்தான்.. 

25. நாங்க எல்லாம் பொத்திக்கிட்டு இருக்கோம்,உனக்கு மட்டும் ஏண்டா பொத்துக்கிட்டு வருது? 

அதுக்குப்பேருதான் ரவுத்திரம்

26.  என் தங்கை கல்யாணத்துக்கு கூப்பிடலை, ஓக்கே, அட்லீஸ்ட் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்லை?

27. அவனை தூரத்துல இருந்து ரசிச்சாலே போதும்  எனக்கு..

28.  அவன் மாறமாட்டான்மா.. 

எதுக்கு மாறனும்?

29. கவுரிக்கு எதிரா அரெஸ்ட் வாரண்ட் வாங்கியாச்சு, இப்பவே போய் அரெஸ்ட் பண்றேன்.. 

நாளை காலை வரை வெயிட் பண்ணுங்க சார்.. 


மிஸ்டர் அசிஸ்டெண்ட் கமிஷ்னர், உங்க மாப்பிள்ளை சிவாவை ரவுடி கவுரி கொன்னுடுவான்னு பயப்படறீங்களா?

இல்லை, ரவுடி கவுரியை மாப்பிள்ளை சிவா கொன்னுடுவான்னு பயப்படறேன்.. 

30. அரசியல்வாதிங்க நாம தான் ரவுடிகளை யூஸ் பண்ணனும், அவனுங்க நம்மை யூஸ் பண்ண நாம் விடக்கூடாது



http://www.kollynews.com/wp-content/uploads/2008/03/200803190153-1.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  இடைவேளை வரை படத்தோடு இணைந்து செல்லும் காமெடி

2. கையேந்திபவனில் ஸ்ரேயா தன் கையால் ஜீவாவுக்கு தோசை சுட்டுப்போடுவது.. 

3.  குடும்பத்தில் உள்ள அனைவர் பெயர்களிலும் மரக்கன்றுகள் வளர்க்கும் ஸ்ரேயா.. அதை பெருமையாக ஜீவாவிடம் காட்டுவது..

4.  அடியே என் நேசம் பாடல் காட்சியில் ஒளிப்பதிவு அழகை அள்ளியது.

5. ஓப்பனிங்க் ஃபைட் சீனும், தியேட்டர் பைக் ஸ்டேண்டில் நடக்கும் ஃபைட் சீனும் கலக்கல் ஸ்டண்ட் அமைப்பு. ( ஓப்பனிங்க் ஃபைட்டில் கூடவே ஸ்ரேயா குலுங்க குலுங்க ஓடி வருவது செம கிளாமர்)




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPttOOhIl25XV-52_f-PX7n6lIYozXN4T1E6txoEpYqrhLUiVNecZ9Wie7TJvSGUSQfPZvrAC1T5qzyRZcogzBHetG-lvReYE6PiWARIWWidPw_q5Ajrm5z7Y0ehwidKdUBY-QFfMNt5Od/s400/shriya-apr01.jpg

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1.   ஜீவா தன் தங்கைக்கு மிட்நைட் 3 மணிக்கு ஃபோன் பண்றாரு, அடுத்த ரிங்க்லயே எடுக்கறாரே, அது எப்படி? ( புது மணத்தம்பதிகள்னு சால்ஜாப்பு சொல்ல வழி இல்லை, மாப்ளை தூங்கிட்டு இருக்காரு, பொண்ணு மட்டும் விழிச்சுட்டு இருக்கே?)

2.  ஜீவா பைக்ல பெட்ரோல் குண்டு போடறாங்க , 15 நிமிஷமா பைக் எரியுது, ஜீவா ஃபைட்டா போடறார், ஆனா பைக் பெட்ரோல் டேங்க் வெடிக்கவே இல்லை.. ஏன்? 

3.  ஜீவா வீட்டுக்கு அவரோட அப்பா வர்றப்போ  வீட்ல எதுவுமே இல்லை, பால் உட்பட.. ஆனா வீட்ல ஃபிரிட்ஜ் உட்பட எல்லா வசதியும் இருக்கு. அர்த்த ராத்திரில ஹீரோவை வெளில  கிளப்பி விட வேற ஐடியா கிடைக்கலையா?

4.  ஜீவா படம் பூரா 67 பேர்ட்ட ஃபைட் போடறார், எல்லாரையும் ஒரே அடில வீழ்த்திடறார், அவர் அடியே வாங்கலை. அவர் என்ன அர்னால்டு ஸ்வார்ஷெனேகரா?

5. ஜீவா அநியாயத்தை தட்டிக்கேட்கறதையே ஃபுல் டைம் ஜாப்பா வெச்சிருக்காரே? அவர் பூவாவுக்கு என்ன பண்றார்? ( ரயில்வே வேலை வந்ததையும் வேணாம்கறாரு)



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgulps4JD0BC8w6WPA_bpEQshrETs_VI1AiGcSDkfZbHJBQQZhypCIi4zK_gqSebEYCTK_SbhQTWIbjIeYCR17NeQRrH7xRHcoC9LsqIH_qj1z5TuIGhvx-Dav8eNqwxJIFT0vpCK6FNlky/s1600/shriya-hot-10.jpg

இந்தப்படம் தெலுங்குல டப் பண்ணுனா நல்லா ஓடும்னு தோணுது.. தமிழ்ல சுமாராதான் போகும், ஏ செண்ட்டர்ல 30 நாட்கள், பி செண்ட்டர்ல 25 நாட்கள், சி செண்ட்டர்ல 15 நாட்கள் ஓடலாம்.. 

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40 

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - ஃபைட்  & ஆக்‌ஷன் பிரியர்கள் பார்க்கலாம்.. 


http://1.bp.blogspot.com/-8prMmWGqhO4/TfWw5zTJT7I/AAAAAAAAF9U/KB7UOntHyNM/s1600/26.jpg

 ஈரோடு அபிராமி,அன்னபூரணி, ஸ்ரீசண்டிகா, ஸ்ரீநிவாசா என 4 தியேட்டர்ஸ்ல போட்டிருக்காங்க. நான் அபிராமில பார்த்தேன்..