Showing posts with label ஷோபனா. Show all posts
Showing posts with label ஷோபனா. Show all posts

Tuesday, September 04, 2012

பரத நாட்டியக்கலைஞர் ”நம்ம ஆளு ” ஷோபனா பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSEPbYtt0OvcvjF12LNhrceGAOS66oltUS6g2tHtbBLf4NQ3mTA6VYcZ90i7FI0Kx_JDaULkTqyCGCkKF-FZhFZD0BRRS1H5WoBJpnYSGL7wffjjkItuhR45Xvi2dSaq8BWMC7mVSuBx4/s400/actress-shobana-in-maya-ravan-dance-avathar-stills-92.jpg 

கிருஷ்ணா மீது காதல் ஏன்?


மனம் திறக்கிறார் ஷோபனா


பேட்டி: ராகவ்குமார்


படங்கள் உதவி: எஸ்.சந்திரமெளலி



பத்மஸ்ரீ, நிருத்ய சூடாமணி போன்ற பட்டங்களைச் சூடியிருக்கும் ஷோபனா, நாட்டிய மேடையிலும், சினிமா வானிலும் பிரகாசமாக ஒளிரும் தங்கத் தாரகை! ‘கிருஷ்ணா’ என்ற பிரம்மாண்டமான ஆங்கில நாட்டிய நாடகத்தை சென்னையில் சமீபத்தில் மேடையேற்றினார். நடிகர் சூர்யா, ஷப்னா ஆஸ்மி, கொங்கனா சென், நந்திதாதாஸ், ராதிகா, பிரபு, மிலிந்த் சோமன் போன்றவர்கள் பல்வேறு கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்திருக்க, கிருஷ்ணனாகவும், யசோதையாகவும் இரட்டை வேடங்களில் அசத்தியிருக்கிறார் ஷோபனா.



‘யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே’ என்று பாடி நடித்தவரிடம் ஓர் இனிய பேட்டி...



ஆழ்வார்பேட்டை. அமைதியும் பெரிய மரங்களும் சூழ்ந்த ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலையில் நுழைந்தால், ஷோபனாவின் நடனப்பள்ளியான ‘கலார்ப்பணா’விலிருந்து இனிய சலங்கையின் நாதம் காற்றில் மிதந்து வருகிறது. அசோக மர இலைகள்கூட நட்டு வாங்கத்தின் ஜதிக்கு ஆடுவதுபோல் இருக்கிறது.



பள்ளிக்குள் நுழைந்தால் ஷோபனா பல்வேறு நடன அபிநயங்கள் கொண்ட புகைப்படங்களில் நம்மை வரவேற்கிறார். கூடவே நிஜ ஷோபனாவும்.

http://1.bp.blogspot.com/_HOCuXB2IC34/SkMGGQ6uK7I/AAAAAAAACck/0H8cr5wGH8A/s400/21%2Bshobana%2B(www.cute-pictures.blogspot.com).jpg


உங்கள் ‘கிருஷ்ணா’ யார்?



கிருஷ்ணா என்றாலே, கோபியருகளுடன் லீலை செய்வது, வெண்ணெய் திருடுவது, நடனமாடுவது என்ற அளவில் மட்டும் நம்மில் நிறைய பேர் நினைக்கிறோம். கிருஷ்ணாவின் இந்தச் செயல்களுக்குப் பின்னால் பெரிய தத்துவமே உள்ளது. சிறு வயதிலிருந்தே ‘கிருஷ்ணா’ கேரக்டரை நடனத்தில் ஏற்று ஆடி வந்தாலும், கிருஷ்ணாவைப் பற்றி, பல்வேறு அறிஞர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்தும் நிறைய அறிந்துகொண்டேன். நான் உணர்ந்த கிருஷ்ணாவை நாட்டிய நாடகமாகத் தர எண்ணி உருவானதே இந்தக் கிருஷ்ணா.



பொதுவாக நாட்டியத்தை கிளாசிக்கல் டான்ஸ் என்று சொல்வார்கள். ஆனால், என்னுடைய ‘கிருஷ்ணா’ கிளாசிக் (உயர்வான) வடிவம் என்பேன். காரணம் ஒரே ஒரு நடனத்தை மட்டும் தராமல் பல்வேறு வித நடனங்களையும் ‘கிருஷ்ணா’வில் தந்திருக்கிறேன். சினிமா பாடல்கள்கூட இதில் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.



கண்ணதாசன், ஓஷோ, இப்போ நீங்கள் என கிருஷ்ணா மீது காதல் ஏன்?



கிருஷ்ணாவை ஒரு குறியீட்டுக்குள் அடைத்துவிட முடியாது. குழந்தைத் தனம், கம்சனை வதம் செய்தது, காதல் நல்லவரா - இல்லையா என சில இடங்களில் குழப்பம், பகவத்கீதை அருளியது, தேரோட்டியாக இருந்தது என பன்முகத் தன்மை கொண்டவர் கிருஷ்ணா. ஆண்களில் சிலருக்கு கிருஷ்ணனைப் போல இருக்க வேண்டும் என்ற ஆசைகூட உண்டு!



எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு ‘கிருஷ்ணா’ கடவுள் மட்டுமல்ல; உயரிய படைப்புத் திறனுக்கும் கற்பனைக்கும் உயிரும் ஊட்டமும் தரக்கூடிய களம். எனவே கிருஷ்ணா மீது எங்களுக்கு காதல் வருவது இயற்கைதான்.

http://www.behindwoods.com/tamil-movie-news-1/july-08-02/images/shobana-10-07-08-01.jpg

துபாயில் கிருஷ்ணாவை எப்படி ரசித்தார்கள்?



இஸ்லாமிய நாட்டில் இந்த நாட்டிய நாடகத்தை எப்படி ரசிப்பார்களோ என்ற எண்ணம் இருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பித்து சில நிமிடங்களில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பூத்துவிட்டது. அந்த நிகழ்ச்சியை பிற மதத்தினர் பார்த்ததோடு மட்டுமில்லாமல் பாராட்டவும் செய்தனர்.



உங்கள் அத்தை நாட்டியப் பேரொளி பத்மினியிடம் இருந்து என்னக் கற்றுக் கொண்டீர்கள்?



பண்பு, அன்பு. இவையனைத்தையும்விட பெரிய ஸ்டாராக இருந்தபோதும் ஈகோ இல்லாத குழந்தைத்தனத்தைக் கற்றுக் கொண்டேன்.



ஏன் இப்போது சினிமாவில் நடிப்பதில்லை?



என்னிடம் 145 பேர் வரை நடனம் கற்றுக் கொள்கிறார்கள். இதில் பத்து பேர் ஆண்கள். நடனப் பள்ளியிலேயே எனது நேரம் சரியாக இருக்கிறது. பள்ளியை ஆரம்பித்தால் மட்டும் போதாது. மாணவர்கள் மீது சிரத்தையாக அக்கறை செலுத்த வேண்டும். அதனால்தான் சினிமாவுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கிறேன். ‘போடா போடி’ - படத்தில் சிம்புவுக்கு சால்ஸா சொல்லித் தரும் டீச்சராக நடிக்கிறேன்.


http://www.teluguwave.in/wp-content/gallery/shobana-pics/shobhana-3.jpg


ரஜினி, கமல்...



ரஜினி சாரின் ‘கோச்சடையான்’ படத்தில் ஒரு கேரக்டர் செய்கிறேன். ரஜினியைச் சந்தித்தபோது ஒரு குழந்தை பகிர்ந்து கொள்வதைப் போல ஆர்வத்துடன் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். சூப்பர் ஸ்டாருக்குள் இருக்கும் வெள்ளை உள்ளத்தை ரசித்தேன். ‘விஸ்வரூப’ கமல் சாரைப் பார்த்து பிரமிக்கிறேன். அவரது ‘கதக்’ நாட்டியத்தைப் பார்க்க உங்களைப் போலவே ஆர்வமாக இருக்கிறேன்.



பரத நாட்டியம் கற்றுக் கொள்வது காஸ்ட்லியான விஷயமாகப் பார்க்கப்படுகிறதே...



‘ஸ்டார் நைட் ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு ஐயாயிரம் பேர் வந்தால் பரத நாட்டியத்துக்கு ஐந்நூறு பேர்தான் வருகிறார்கள். இதற்கானக் காரணத்தை நாம் இப்போது ஆராய வேண்டாம். நடன ஆசிரியரும் வாழ்க்கை நடத்த வேண்டுமே? பெரும்பான்மையான ஆசிரியர்கள் அதிகக் கட்டணம் வாங்குவது கிடையாது. பல்வேறு பொருளாதாரப் பின்னணி கொண்ட என் மாணவர்களிடமிருந்து நியாயமான கட்டணம்தான் வாங்குகிறேன். இன்றைய சூழலில் பரத நாட்டியத்தை முழு நேரமாக எடுத்துச் செய்’ என்று சொல்ல தைரியமில்லை. இருப்பினும் எட்டு மாணவிகள் கேரளாவிலிருந்து இங்கு வந்து முழு நேரமாக நாட்டியம் பயில்கிறார்கள்.



மறக்க முடியாத பாராட்டு...?



மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்னுடைய நாட்டியத்தைப் பார்த்துவிட்டு, எழுத்துப்பூர்வமாகப் பாராட்டைத் தெரிவித்தார். மறக்க முடியாத பாராட்டு இது.



உங்கள் குடும்பம் பற்றி...?



இந்த நடனப் பள்ளியும், இங்குள்ள மாணவ - மாணவிகளும்தான் என் குடும்பம். முழுக்க முழுக்க கலைக்கே அர்ப்பணம் செய்துகொண்ட இந்த வாழ்க்கை மீதான பிரேமை எனக்குக் குறையவேயில்லை!"



கிருஷ்ணனின் காதலிக்கு வாழ்த்து!



http://media.onsugar.com/files/2011/03/11/4/1429/14297025/fb/shobana-hot-dance-photos_252818_2529.jpg

கிருஷ்ணா - சில துளிகள்!



கிருஷ்ணன் புரிந்த பல மாய லீலைகளைப் போல ஷோபனாவின் ‘கிருஷ்ணா’வும் மேடைகளில் பல்வேறு மாய ஜாலங்களை செய்கிறான். ஆடி பாடும் கோபியர்கள் திடீரென கருடனாக மாறுவது, சிசுபாலனை வதம் செய்ய சங்கு சக்கரத்தை வரவழைப்பது, விஸ்வரூபம் எடுப்பது என பல மேடை மேஜிக்குகள் இந்தக் கிருஷ்ணாவுக்கு அழகூட்டுகின்றன. ஆர்ட் டைரக்டர் ராஜீவனின் செட்டிங்ஸ், முருகனின் லைட்டிங்ஸ் போன்றவை கிருஷ்ணாவின் ஜீவன் என்றே சொல்லலாம்.



ராதேயாக நடித்த அனுருபிதா, ருக்மணியாக நடித்த அபிதா, அர்ஜுனனாக நடித்த ஸ்ரீவித்யா இவர்கள் அனைவரும் ஷோபனாவுக்கு இணையாக நடித்திருக்கிறார்கள்.



தேசிய விருது பெற்ற ரசுல் பூக்குட்டி ‘கிருஷ்ணா’வுக்கு சவுண்ட் டிசைன் செய்திருக்கிறார். பின்னணியில் ‘கிருஷ்ணா’ தொடர்பான பாடல்கள் ஹிந்தியிலும், மலையாளத்திலும் ஒலிப்பது புதுமை. தமிழில் ‘வராக நதிக்கரை ஓரம்’ பாடலுக்கு ஷோபனா குழுவினர் ஆடிய ஆட்டம் ஆடியன்ஸை ஒன்ஸ்மோர் கேட்க வைத்தது.



 நன்றி - கல்கி, புலவர் தருமி, கானாப்ரபா