Showing posts with label வைகோ. Show all posts
Showing posts with label வைகோ. Show all posts

Tuesday, January 05, 2016

விஜயகாந்த் ஏன் கருணாநிதி, வைகோ, பி.ஜே.பிக்கு தேவைப்படுகிறார்? - தி.மு.க. சர்வே சொல்லும் உண்மை!

2005-ல் விஜயகாந்த் 'அரசியல் என்ட்ரி’ கொடுத்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என புதிய கட்சியை ஆரம்பித்தபோது, உலகத் தமிழர்கள் அனைவரிடமும் ஒரு பிரமாண்ட எதிர்பார்ப்பு இருந்தது. 'நீண்ட காத்திருப்புக்கு பிறகு தமிழகத்துக்கு ஒரு நல்ல மாற்றம் வந்துவிட்டது' என்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட விஜயகாந்தின் ரசிகர்கள் உற்சாகமாக குரல் கொடுத்தார்கள்.
திரையில் பார்த்த அதே சிவந்த கண்களோடும் கோபத்தோடும் விஜயகாந்த் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையும் வறுத்தெடுத்தார். அவரது தீவிரப் பிரசாரமும் கணிசமான மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையும் சாதகமாக இருக்க... அப்போது நடைபெற்ற தேர்தலில் 8.38% வோட்டுக்களை அவர் குவித்ததோடு தன் கட்சி சார்பாக தனி ஒருவனாக சட்டமன்ற உறுப்பினராகவும் ஜெயித்தார்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சியினரால் எந்தத் தொகுதியிலும் ஜெயிக்க முடியவில்லை என்றாலும், தே.மு.தி.க. ஒரு கட்சியாக சுமார் 10% வோட்டுகளைப் பெற்றது. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விஜயகாந்த் உருவெடுத்தார். தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு மாஸ் காட்டி வந்த விஜயகாந்த், 2011 சட்டமன்றத் தேர்தலில் தனது முழு எதிர்ப்பையும் அப்போது ஆளும்கட்சியாக இருந்த தி.மு.கவின் மீது திருப்பினார். அவரோடு கூட்டணி வைத்துக் கொள்ள பலரும் அப்போது ஆவலாக இருந்தாலும்,  விஜயகாந்த் அ.தி.மு.கவோடு கூட்டணி சேர்ந்து சட்டசபை தேர்தலைச் சந்தித்தார். அந்தத் தேர்தலில்  தி.மு.கவை மூன்றாவது இடத்துக்கு தள்ளிய விஜயகாந்தின் தே.மு.தி.க., 29 சீட்டுக்களை வென்று பிரதான எதிர்கட்சி அந்தஸ்த்தைப் பிடித்தது. ஆனால், ஜெயலலிதாவுடனான விஜயகாந்தின் கூட்டணி நீண்டநாள் நீடிக்கவில்லை. அதனால் தனக்கு கைவந்த கலையான, தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் அவர் பழையபடியே தாக்கி,  அரசியல் அரங்கில் பரபரப்பு கிளப்பிக் கொண்டிருந்தார். 
ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தல் விஜயகாந்தின் செல்வாக்குக்கு ஒரு செக் வைத்தது. பி.ஜே.பி., பா.ம.க., போன்ற கட்சிகளோடு கூட்டணி வைத்து விஜயகாந்த் மூன்றாவது அணியாகத் தேர்தலில் போட்டியிட்டபோது, எதிர்பார்ப்புகள் எகிறியது. ஆனால், முடிவுகள் விஜயகாந்துக்கு சாதகமாக இல்லை. வெறும் 5% வோட்டுக்களையே அவரது கட்சியால் பெற முடிந்தது. அந்தத் தேர்தலில் தே.மு.தி.க.,  நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, அவரது கட்சியால் ஒரே ஒரு இடத்தைக்கூட ஜெயிக்க முடியவில்லை. அத்தேர்தலில் பி.ஜே.பி.,  விஜயகாந்தின் தே.மு.தி.கவை-விட அதிக வோட்டுக்களை வாங்கி மூன்றாவது இடத்தை பிடித்தது.
  (குறிப்பிட்ட வருடத்தை க்ளிக்கினால், அப்போதைய தேர்தலின் புள்ளிவிவரமும், கட்சிகளின் ஏற்ற இறக்கமும் தெரியவரும்!)


.

வைகோவின் ம.தி.மு.க., திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் என நான்கு கட்சிகள் சேர்ந்து அமைத்திருக்கும் மக்கள் நலக் கூட்டியக்கம்,  விஜயகாந்தை சந்தித்து தங்கள் கூட்டணியில் இணையுமாறு அழைத்த வண்ணமிருக்கின்றன.
’விஜயகாந்த் தங்கள் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சியே’ என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த முஸ்தீபுகளைக் கண்டு அரண்டு மிரண்டு, 'விஜயகாந்த் இன்னும் எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறார்' என்று பி.ஜே.பி. தொடந்து சொல்லிவருகிறது. இப்படி இவர்கள் எல்லாரும் சேர்ந்து விஜயகாந்தை, 'சி.எம்.  மேக்கர்’ அளவுக்கு நடத்துகிறார்கள். ஆனால், விஜயகாந்த் கட்சியின் வீரியம் அந்தளவுக்கு இல்லை என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.
'ம.தி.மு.க. மிக ஆரவாரமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு தேர்தலிலும் அது சரிவையே சந்தித்துக் கொண்டிருக்கிறது. வைகோவைப் போலவே விஜயகாந்தும் சரிவைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார். கூட்டணி வைக்கும் கட்சிகளை ஜெயிக்க வைக்கக்கூடிய சக்தியோ... அல்லது கூட்டணி வைக்காத கட்சிகளை தோற்கடிக்கக்கூடிய சக்தியோ விஜயகாந்துக்கு இல்லை. கூட்டணி பேரம் பேசும் வலிமையும் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது' என்கிறார் அப்சர்வர் ஆராய்ச்சி மைய இயக்குநர் என்.சத்தியமூர்த்தி.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி,  கூட்டணிக்காக விடுத்திருக்கும் அழைப்பில், விஜயகாந்துக்கான எச்சரிக்கையும் அடங்கியிருக்கிறது எனக் கருதுகிறார்  சத்தியமூர்த்தி. ’நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு,  நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளோடு எங்களோடு கூட்டணி அமைக்க வந்தால் சீக்கிரமாக வாருங்கள். இல்லையென்றால் உங்களுக்காக காத்திருக்க முடியாது' என காங்கிரஸுக்கான செய்தி விஜயகாந்துக்குமான சமிக்ஞையும் மறைந்திருக்கிறது என்கிறார் அவர்.
'2011-ல் விஜயகாந்துக்கு கூட்டணி பேரம் பேசக்கூடிய அளவுக்கு வலிமை இருந்தது. இப்போதோ, அவரது வாக்கு வங்கி கணிசமாக குறைந்துவிட்டது. ஆனால், அவரது பலத்தை எல்லாக் கட்சிகளுமே அதிகமாக மதிப்பிடுகிறார்கள். ஆனால், முந்தைய தேர்தலைவிட இந்த தேர்தலில் விஜயகாந்தின் செல்வாக்கு நிச்சயம் உயர வாய்ப்பில்லை. காரணம், சொந்த கட்சிக்காரர்களை பொது இடத்தில் அடிப்பது, கோபத்தில் கொந்தளிப்பது, உணர்ச்சிவசப்பட்டு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது என விஜயகாந்தின் பொதுவெளி செயல்பாடுகளும் பொதுவான வாக்காளர்கள் மத்தியில் அவர்மீது நம்பகத்தன்மையைக் குறைக்கலாம். ஒருவேளை தனது மனைவி பிரேமலதாவை முன்நிறுத்தி தேர்தலைச் சந்தித்தால், அந்த வியூகம் நல்ல பலன் கொடுக்கலாம்!’’ என்கிறார் மூத்த பத்திரிக்கையாளரான ஜி.சி.சேகர்.


இந்நிலையில் தி.மு.க. தேர்தல் பல்ஸ் அறிந்து கொள்ள தமிழகம் முழுக்க ஒரு சர்வே நடத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதன்படி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் அதற்கு 30-35 சதவிகித வாக்குகள் கிடைக்கலாம் என்று கணித்திருக்கிறார்களாம். இது தி.மு.க. தரப்புக்கு அதீத உற்சாகமளித்திருக்கிறது. 'இந்த சர்வே முடிவுகள் எங்களுக்கு தெம்பளித்திருக்கிறது. விஜயகாந்தோடு கூட்டணி சேர்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் நாங்கள் இல்லை. காரணம் இந்த சர்வேயின்படி விஜயகாந்துக்கு 6% வோட்டுக்கள் இருப்பதால்,  அவர் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவருக்குத்தான் நல்லது. அவரும் சேர்ந்துவிட்டால், சந்தேகமே இல்லாமல் அது வெற்றிக் கூட்டணி. ஆனால், அவர் சேராவிட்டாலும் அதை வெற்றிக்கூட்டணியாக மாற்ற நாங்கள் வியூகம் வகுத்துக் கொள்வோம்!’ என்று விறுவிறுக்கிறார்கள் தி.மு.க. தரப்பில்!    



இது தி.மு.கவின் நிலைப்பாடு. மக்கள் நலக் கூட்டணி ஏன் விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க முட்டி மோத வேண்டும்? ’’காரணம் பிஜேபிக்கு முதலமைச்சராக முன்னிறுத்த ஒரு வேட்பாளர் வேண்டும்’’ என்று சொல்லும் அரசியல் பார்வையாளர் என்.சத்தியமூர்த்தி,  ’’அதனால்தான் முதல்வர் வேட்பாளர் குறித்த தன் நிலைப்பாட்டில் இருந்து பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் இப்போது இறங்கி வந்து கருத்து தெரிவித்திருக்கிறார். இன்னொருபுறம் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வைகோவுக்கு விஜயகாந்த் தேவைப்படுகிறார். காரணம் அவருக்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே கதவுகளை அடைத்துவிட்டன. எப்படியும்  ஆட்சி அமைக்கும் அளவுக்கு வோட்டுக்கள் வாங்கப் போவதில்லை என்பதால், மக்கள் நல இயக்கம் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதில் அவர்களுக்கு எந்தச் சங்கடமும் இல்லை!’’ என்று முடிக்கிறார் சத்தியமூர்த்தி.


கட்சி துவங்கிய பின் சந்தித்த முதல் சில தேர்தல்களில்,  வாக்குகளைக் குவித்ததைத் தவிர சொல்லிக் கொள்ளுமளவுக்கு ஆக்கப்பூர்வமாக விஜயகாந்த் எந்த சாதனையும் செய்யவில்லை. ஆனாலும் அவருக்குச் சாதகமாக அரசியல் காற்று  இப்போது வீசுகிறது. இந்த சூழ்நிலையில்... கேப்டன் விஜயகாந்த் பிரமாண்ட பனிப் பாறையை நோக்கிச் செல்லும் தன் கப்பலை திசை திருப்பி கரை சேர்ப்பாரா... அல்லது பாறையில் மோதி கவிழவைப்பாரா என்பதை விஜயகாந்தின் வியூகமே தீர்மானிக்கும்! 

- Sandhya Ravishankar (@sandhyaravishan) 

தமிழில் : பி.ஆரோக்கியவேல்

ஓவியம்: கார்த்திகேயன் மேடி 

நன்றி - விகடன்

Saturday, March 09, 2013

இருப்பாய் தமிழா நெருப்பாய்! - சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் புரட்சி

மாணவர்கள் உண்ணாவிரதம் 2 வது நாளாக நீடிப்பு; வைகோ நேரில் ஆதரவு! ( படங்கள் ) 
 
 
 
 
சென்னை: இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, லயோலா கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 2 ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், அவர்களை வைகோ இன்று நேரில் சென்று பார்த்து தனது ஆதரவை தெரிவித்தார்.


ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தினால் பயன் ஏதும் இல்லை. லட்சகணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக சரவதேச விசாரணை வேண்டும்.


இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும். அதே சமயம் இந்த விசாரணையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பங்கேற்க கூடாது. இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனபது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன்,

 சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 

 சண்முகப்பிரியன், ஜோ.பிரிட்டோ, பால் கெனப், லியோ ஸ்டாலின், திருக்குறள் திலீபன், பிரசாத், அந்தோணி சாஜி, அனிஷ் குமார் ஆகிய  மாணவர்கள் நேற்று காலை லயோலா கல்லூரி அருகில் உள்ள ஏ.ஐ.சி.யு.எப்.எனப்படும் அகில இந்திய கத்தோலிக்க ஃபெடரேசன் அலுவலக வளாகத்திற்குள், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
இந்நிலையில் தங்களது உண்ணாவிரதத்தை சென்னை கோயம்பேடு பகுதிக்கு இடமாற்றம் செய்து, அவர்கள்,  தங்களது உண்ணாவிரதத்தை இன்று 2 ஆவது நாளாக தொடர்ந்தனர்.

முன்னதாக, நுங்கம்பாக்கம் பகுதியில் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர். பிற கல்லூரி மாணவர்கள், அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், நேற்று மாலை தங்களது போராட்டத்தை கோயம்பேட்டுக்கு மாற்றினர்.

லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சென்னை நந்தனம் கல்லூரி, கந்தசாமி கல்லூரி, பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டக் கல்லூரி மாணவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.



வைகோ ஆதரவு

இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்களை இன்று நேரில் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாணவ சமுதாயம் தன்னநலமற்றது என்றும், அவர்கள் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.





 மக்கள் கருத்து

1. ஸ்டுடென்ட் பவர் ; சூப்பர் பவர் ". மாணவ தோழர்களே மிகுந்த மகிழ்ச்சி; வாழ்த்துக்கள்; இந்தியாவில் ஒரு அமைதி புரட்சி தோன்றியது போல் உள்ளது; போராட்டம் மாணவர் சமுதாயம் கையில் எடுத்து உள்ளதால் இனிமேல் தமிழ்நாட்டின் அனைத்து மாணவர்களும் , பொதுமக்களும் பங்கேற்று இது மக்கள் போராட்டமாக உருவெடுக்கிறது; இனிமேலும் இலங்கை தப்பிக்கொள்ள அனுமதிக்ககூடாது; இலங்கை பிரச்னையை வைத்து முதலில் தி மு க வும் அ தி மு க வும் அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். வேண்டும் என்கின்றபோது டெசோ , தேவை இல்லை என்கின்றபோது டெசோ கலைப்பு; செய்தது இதே கருணாநிதி தான். 

இதை வைகோவோ அல்லது வேறு தலைவர்களோ கேட்டால், கேள்வி கேட்பவர் மீது அவர்களுக்கு "பதவி ஆசை -உள்ளே வர " ஆசை என்று கூறி தப்பிக்கிறாய் . கடந்த 60 ஆண்டு காலம் சிங்கள இனம் , (ஒரு கொசுறு நாடு), இந்தியனை , இந்திய தமிழனை , இலங்கை தமிழனை அழிக்கும் முயற்சியை, உங்கள் போராட்டம் ஒடுக்கும். வாழ்த்துக்கள் . அணி திரளுங்கள் "மக்கள் தலைவர்" "மக்கள் சக்தி" "மக்கள் போராளி" வைகோ பின்னால் ;

 2. தமிழகத்தின் கலங்கரை விளக்கே
ஈழத்தமிழர்களின் விடிவெள்ளியே
நேர்மையில் காமராசரே
எளிமையில் கக்கனே
வீரத்தின் நண்பனே
தென்னாட்டு காந்தியே
தொடரட்டும் உன் தமிழர் நலத்தொண்டு

3. 1965-ல் இப்படி ஆரம்பித்த போராட்டம் இந்திய அரசையே ஆட்டம் காண வைத்தது. ஆனால் அதன் பலனோ தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு சென்றது. இந்த முறை மாணவர்கள் தங்கள் போராட்டத்தை "இனப்படுகொலை", "போர்க்குற்றம்" என்ற இரண்டே வார்த்தைகளை முன்னிறுத்தி தீவிரப்படுத்த வேண்டும். இனத் துரோகிகளை அருகே வர அனுமதிக்க கூடாது. 

ட்விட்டர் போராளிகள் ஆதரவுக்குரல்கள்

Tweets Top / All / People you follow

1 new Tweet
  1. தெருவில் போகும் எவனோ போராடுகிறான் என்று நினைக்காமல், தயை செய்து உங்கள் ஆதரவை அந்த இளைஞர்களுக்கு கொடுங்கள்
  2. என்ன உதவியென்றாலும் அதை மதிமுக செய்ய தயாராக இருக்கிறது#கட்சி அலுவலகத்தில் தொண்டர்களோடு உண்மையாக உண்ணாவிரதமிருங்கள்
  3. RT ": ஊடகங்களே உங்களின் இந்த செயல் மாற்று ஊடகத்தை ஊக்கப்படுத்தும் #எச்சரிக்கை "
  4. முத்துகுமார் தீக்குளித்த போதே இதுபோல் ஒன்றுபட்டிருந்தால் ஈழம் அழிந்துபோயிருக்காது..
  5. அரசியல் பிழைப்போர் பதவிக்காக பல்லிளிப்போர். இங்கே மாணவர் நடத்துவது உரிமைக்கான பட்டினிப் போர்
  6. இந்த டேக் பாருங்கள் தல
  7. வெவ்வேறு டாகில் கீச்சும் போது நம் முழுப்பலமும் தெரியாது..
  8. Few Minutes B4 I Talked William eppadiyaavadhu ponum
  9. Loyola என்பது தான் சரி.. தோழர்களே தயவு செய்து ஒரே டாகில் கீச்சவும்..
  10. நிஜ கொலையின் கோரம் பார்த்து கதிகலங்கி போய்,என்ன செய்வது என்று திணறி இருப்பவரா நீங்கள், உங்களுக்காக எட்டு முன்னோடிகள்
  11. முத்துக்குமார் நெருப்பை ஊதி அணைத்ததுபோல் ஆகிவிடக்கூடாது. இம்முறை நெருப்பு பட்டினியில் பற்றவைக்கப் பட்டிருக்கிறது.
  12. மாணவர்களின் இம்முயற்சி பாராட்டத்தக்கது. இளைய சமுதாயத்தில் தக்க விழிப்புணர்வை இது ஏற்படுத்தும். #வரவேற்கிறோம்.
  13. இளைஞர்களின் போராட்டத்துக்கு பணம் தேவையில்லை, வசதி தேவையில்லை. நம்மை போன்றோரின் நல்ல மனம் இருந்தால் போதும்.
  14. As a Tamil, as a student, as a human, I want this hashtag trending everywhere !
  15. ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம்: கைவிடக்கோரினார் கருணாநிதி -மாணவர்கள் கொந்தளிப்பு
  16. தங்களின் ஆதரவை தெரிவிக்க ஒருங்கினைப்பாளர் வில்லியம்ஸை இந்த நம்பரில் 8148883228 தொடர்பு கொள்ளலாம்
  17. மாணவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும்- கருணாநிதி #அப்போ நீங்க போராடியிருந்தால் இந்த நிலை வந்துருக்காது
  18. இலவச மடிக்கணிணி கேட்டு போராடும் மாணவர்களே இவர்களை பாருங்கள்
  19. RT : பெரியவர்கள் போல் அல்ல. ஒருவன் போராடுகிறான் என்றால் கேள்விகளின்றி களத்தில் இருப்பான் சக மாணவன் "
  20. ஆர்மிக்காரனைப் பார்த்த உடனேயே வயிற்றில் கரைத்த புளிக்கு.. இன்று இந்த 8 பேர் பால் வார்க்கிறார்கள்..
  21. பகையாடி நமை வென்ற பாதகரை வீழ்த்திடு சினம் கொண்டு வா தமிழா..
  22. RT "பல "தலை" கொடுத்தேனும் எடுப்போம் ஒரு விடு"தலை" உணர்த்துகின்றனர் அந்த 8மா(வீரர்கள்)ணவர்கள்
  23. இந்த நேரத்துல சென்னையில் இல்லை என்ற பீலிங்கு வராமல் இல்லை. :-(
  24. "Mudhal vetri " RT : The police tightened the security. Law college students also expressed their support.
  25. We trended a lot of other things. This is not just another thing. Lets trend this !!
  26. planning to go to chennai and sit on fast with students!
  27. The police tightened the security. Law college students also expressed their support.  
  28. The loyola protestors have given a call to students across tamilnadu to join them in protest.  
  29. is the right tag! can you retweet and spread? thanks!!
  30. RT : RajaPaksha who Perpetrated genocide of lakhs of Tamils in is a NeoNazi.
  31. All pls mention and with the tag . They are the only medium to spread it across india.
  32. RT : Dear Ajithians make this tag to trend n India.. pls draw the attention of whole nation...
  33. : We need doctors to the regular BP checkups to be done for the fasting students please contact 9841010231 Pls RT
  34. Chennai Ambedkar Law University Students extend support to
  35. Dear Mr. do you or ur channel know/aware of happening in TN by Loyola college students!?
  36. If not now then when.. if not us then who.. support and spread the word
  37. We want international jurisdiction not for war crime but for
  38. Dear Tweeps please upload this picture as DP
  39. Dear - Kindly shed your Camera Lights on - 8 Brave students on indefinite fast against Srilanka !
  40. “RT: eelam tamils not only killed by weapons of sri-lanka also killed by silence of the world
  41. 0044207 396 4444 This Is Channel 4's Contract Number , anyone please inform ()
  42. Dear 8 Brave Students are on an Indefinite Fast protesting against SriLanka.Where are your Cameras ?
  43. ஆதரிப்போம்.. நிஜத்தில் கலந்து கொள்ள முடியாவிடினும் நிழலாய் இணைத்தில் இணைவோம்