Showing posts with label விழாவில் பங்கேற்ற விஐபிக்கள். Show all posts
Showing posts with label விழாவில் பங்கேற்ற விஐபிக்கள். Show all posts

Sunday, May 24, 2015

ஜெயலலிதா பதவியேற்பு விழா துளிகள் - நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக பணிவுசாலிகள்

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் | படம்: ம.பிரபு
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் | படம்: ம.பிரபு
சென்னை பல்கலைக்கழக அரங்கில் கோலாகல விழா: 5-வது முறை முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா - 28 அமைச்சர்களும் 2 குழுக்களாக பதவியேற்பு
தமிழக முதல்வராக 5-வது முறையாக ஜெயலலிதா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார். ஜெயலலிதாவுடன் 28 அமைச் சர்களும் 2 குழுக்களாக பதவி யேற்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் முதல்வர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை இழந்தார். செப்டம்பர் 29-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார்.
இதற்கிடையே, சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பதில் இருந்த சட்டரீதியான தடை நீங்கியது. அதைத் தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் கூடி, சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலி தாவை ஒருமனதாக தேர்வு செய்தனர். பின்னர், ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர் கே.ரோசய்யா, ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி, நேற்று முன்தினம் பிற்பகல் ஆளுநரைச் சந்தித்த ஜெயலலிதா, அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார்.
இந்நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது. காலை 8 மணி முதலே, அமைச்சர் பதவியேற்கவிருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அரங்குக்கு வந்துவிட்டனர்.
போயஸ் தோட்ட வீட்டிலிருந்து காலை 10.28 மணிக்கு ஜெயலலிதா புறப்பட்டார். காமராஜர் சாலையில் திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். காலை 10.57 மணிக்கு விழா அரங்குக்குள் வந்த அவரை ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் மற்றும் தலைமைச் செயலர் ஞானதேசிகன் ஆகியோர் வரவேற்றனர்.
11.01 மணிக்கு ஆளுநர் ரோசய்யா வந்தார். அவரை தலைமைச் செயலர் ஞானதேசிகன் மற்றும் உள்துறை செயலர் யதீந்திரநாத் ஸ்வைன் ஆகியோர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர். பூங்கொத்து கொடுத்து ஆளுநரை ஜெயலலிதா வரவேற்றார். பின்னர் அமைச்சராக பொறுப்பேற்க இருந்தவர்களை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதைத் தொடர்ந்து ஜெயலலி தாவுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநரை தலைமைச் செயலர் ஞானதேசிகன் கேட்டுக்கொண்டார். 11.08 மணிக்கு ஜெயலலிதா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பையடுத்து பதவியிழந்த ஜெயலலிதா, 238 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று முதல்வராக பதவியேற் றுள்ளார்.
25 நிமிடங்களில் முடிந்த விழா
ஜெயலலிதாவைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழக வரலாற்றில் முதன் முறை யாக அமைச்சர்கள் 14 பேர் வீதம் 2 குழுக்களாக பதவியேற்றுக் கொண்டனர். முதலாவதாக ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வ நாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, மோகன், வளர்மதி, பழனியப்பன், செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, வி.செந்தில் பாலாஜி, எம்.சி. சம்பத், எஸ்.பி.வேலுமணி, டி.கே.எம்.சின்னையா ஆகிய 14 பேரும், அதைத் தொடர்ந்து, எஸ்.கோகுல இந்திரா, சுந்தர்ராஜன், எஸ்.பி.சண்முகநாதன், சுப்பிரமணி யன், கே.ஏ.ஜெயபால், முக்கூர் சுப்பிரமணியன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, பி.வி.ரமணா, கே.சி.வீரமணி, தோப்பு வெங்கடாசலம், பூனாட்சி, அப்துல் ரஹீம், சி.விஜயபாஸ்கர் ஆகிய 14 பேரும் பதவியேற்றனர்.
25 நிமிடங்களில் பதவியேற்பு விழா முடிவடைந்தது. விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள், தூதரக அதிகாரிகள், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, இல.கணேசன் மற்றும் ரஜினிகாந்த், பிரபு, சரத்குமார், சிவகுமார், கார்த்தி, அர்ஜூன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பங்கேற்றனர்.
மோடி வாழ்த்து
தமிழக முதல்வராக பொறுப் பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து வெளியான செய்தியில், “தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கும் அவரது அமைச்சர்களுக்கும் நல்வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துக்கொண்டார்” என்று கூறப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்றத் தால் ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட போதும் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
ஜெயலலிதா பதவியேற்பு விழா துளிகள்
* பதவியேற்பு விழா நடந்த சென்னை பல்கலைக்கழக வளாகத்துக்கு காலை 7 மணி முதலே அதிமுகவினர் வரத் தொடங்கினர்.
* நூற்றாண்டு விழா அரங்கின் வாயில்கள் மலர்களால் அலங் கரிக்கப்பட்டிருந்தன.
* அந்தப் பகுதி முழுவதும் அதிமுக கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
* போயஸ் தோட்டம் முதல் பல்கலைக்கழகம் வரை ஜெயலலிதாவை வரவேற்று அதிமுகவினர் பேனர்கள் வைத்திருந்தனர்.
* சாலை ஓரங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டு பொதுமக்களும் தொண்டர்களும் நிற்க வைக்கப்பட்டனர். காலை 8.30 மணி முதல் 11 மணி வரை அதற்குள்ளேயே எல்லோரும் நின்றிருந்தனர்.
* கடற்கரை சாலை முழுவதும் அதிமுகவினர் கட்சிக் கொடியுடன் உற்சாகமாக திரண்டிருந்தனர்.
* நடிகர் ரஜினிகாந்த் காலை 10.20 மணிக்கு அரங்குக்கு வந்தார். அவரைக் காண எல்லோரும் முண்டியத்து சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
* ஜெயலலிதாவின் கார், வாலாஜா சாலைக்கு சரியாக 10.56-க்கு வந்தது. பூக்களை தூவியும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும் அவரை தொண்டர்கள் வரவேற்றனர்.
* பதவியேற்பு நிகழ்ச்சிகளை வெளியில் நிற்பவர்கள் காண்பதற்காக 4 டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டிருந்தன.
* ஜெயலலிதா பதவியேற்கத் தொடங்கியதும், வெளியில் நின்றிருந்த அதிமுகவினர் ஆரவாரத்துடன் கைகளை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
* ஜெயலலிதா பதவியேற்ற சில நிமிடங்களில் அவரது காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றிவிட்டு, தேசியக் கொடியை அதிகாரிகள் பொருத்தினர்.
* ஜெயலலிதா வெளியேறிய பிறகு தடுப்புகளை உடைத்துக்கொண்டு பொதுமக்கள் சாலைக்கு நடுவே வந்தனர். அதனால், அமைச்சர் களின் கார்கள் நெரிசலில் சிக்கிக்கொண்டன.
* ரஜினிகாந்த், பிரபு, சரத்குமார், சிவகுமார், கார்த்தி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வெளியே வந்தபோது, அவர்களைக் காண அதிமுகவினர் முண்டியடித்து வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
* பாதுகாப்பு கெடுபிடிகள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால், பல இடங்களில் அதிமுகவினர் காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
* எழிலக கட்டிடத்தின் மாடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்ட 2 ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டிருந்தன.
* பதவியேற்பு விழாவையொட்டி சுமார் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
விழாவில் பங்கேற்ற விஐபிக்கள்
* சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.விமலா, வி.எம்.வேலுமணி, எஸ்.மணிகுமார், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
* மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை சட்டப்பேரவை தலைவர் பி.தனபால், துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமானுஜம், மதுரை ஆதீனம், சமக தலைவர் சரத்குமார், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் என்.சீனிவாசன், திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், பிரபு, ராம்குமார், அர்ஜூன், கார்த்தி, விக்ரம்பிரபு, ராமராஜன், ஆனந்தராஜ், மனோபாலா, தியாகு, குண்டுகல்யாணம், நடிகைகள் எம்.என்.ராஜம், குமாரி சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, விந்தியா, இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
* இதுதவிர, துணை வேந்தர்கள் ஆர்.தாண்டவன் (சென்னை பல்கலை.), வீணை காயத்ரி (இசைப் பல்கலை), ஜி.விஸ்வநாதன் (ஆசிரியர் கல்வியியல் பல்கலை), பி.வணங்காமுடி (சட்டப் பல்கலை) உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.


நன்றி - த இந்து