Showing posts with label விமர்சனங்கள். Show all posts
Showing posts with label விமர்சனங்கள். Show all posts

Friday, October 01, 2010

சூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடைத்தெறிந்த கோலிவுட் செண்ட்டிமெண்ட்ஸ்

எதிர்பார்த்ததைவிட எந்திரன் மெகா ஹிட் ஆகி இருக்கிறது.ரஜினி ரசிகர்கள்,பொதுமக்கள்,பதிவுலக நண்பர்கள்,பத்திரிக்கை உலக விமர்சகர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி கமெண்ட்ஸ்தான் வருகிறது.அது - படம் சூப்பர்,பின்னிட்டாங்க என்பதுதான்.

படம் ரிலீஸ் ஆகும் முன் ஆளாளுக்கு ஒரு மாதிரி கதை சொல்லி குழப்பினார்கள்.பிரம்மாண்டமாக எடுத்தாலும் கதையில் சொதப்பி கோட்டை விடுவார்கள்,எடுபடாது என.எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி சூப்ப்ர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது.

கோலிவுட்டில் பல செண்ட்டிமெண்ட்ஸ் இருக்கிறது.அவற்றை எல்லாம் எப்படி எந்திரன் முறியடித்தது என பார்ப்போம்.


1.ஐஸ்வர்யாராய் ஹீரோயினாக நடித்த எந்த தமிழ்ப்படமும் சூப்பர்ஹிட் ஆனதில்லை.ஜீன்ஸ் படம் ஷங்கருக்கே லேசான சறுக்கல்தான்.இருவர் மணிரத்னத்தின் நல்ல முயற்சி என்றாலும் கமர்ஷியல் ஹிட் இல்லை.கண்டுகொண்டேன் .கண்டுகொண்டேன் படம் நல்ல கதை ,ஆனால் ஓடலை .முக்கியக்காரணம் அதில் அஜித்துக்கு ஜோடியாக போடாமல் அப்பாஸ்க்கு ஐசை ஜோடியாகப்போட்டது என பலர் சொன்னார்கள்.ராவணன் அட்டர்ஃபிளாப்.இத்தனையையும் மீறி ஐஸ் நடித்த முதல் மெகா ஹிட் தமிழ்ப்படம் எந்திரன்.

2.ஷங்கருக்கு பர்சனாலாக ஒரு செண்ட்டிமெண்ட் உண்டு.அவருக்கு ராசியான எண் 8.அவர் ரிலீஸ் செய்யும் அனைத்து படங்களையும் 8 அல்லது கூட்டுத்தொகை 8 வரும் தேதிகளில் மட்டுமே ரிலீஸ் செய்வார்.அதாவது  8, 17, 26 இப்படி.ஆனால் முதன் முதலாக 1 ந்தேதில வந்து ஹிட் ஆகி இருக்கு.

3.ஷங்கர் படம் என்றால் இரண்டே ஃபார்முலாதான் ஒன்று ஊழல்,அநீதியை தட்டிக்கேட்கும்ஹீரோவின் கதை(ஜெண்டில்மேன்,இந்தியன்,முதல்வன்,அந்நியன்,சிவாஜி) அல்லது ஜாலியான லவ் ஸ்டோரி(காதலன்,ஜீன்ஸ்,பாய்ஸ்).இந்தப்படம் 2 சப்ஜெக்ட்டும் இல்லை.சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்.தமிழில் வந்து ஹிட் ஆன முதல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்.

4.அண்ணாம்லை படத்துக்குப்பிறகு ரஜினி பஞ்ச் டயலாக் பேசாத படமே இல்லை.அதற்கு அமோக வரவேற்பு இருந்ததால் அதே ஃபார்முலாவை ஆளாளுக்கு பின்பற்ற ஆரம்பித்தார்கள்.ஆனால் சந்திரமுகியில் பன்ச் டயலாக் இல்லாவிட்டாலும் அவர் பேசிய சூப்பர் ஹிட் டயலாக்கான லகலக லக பன்ச் டயலாக் என்ற கேட்டகிரியில்தான் சேர்த்த வேண்டும்.ஆனால் எந்திரனில் நோ பஞ்ச் டயலாக்.நோ ஸ்டைல்.ஒன்லி கேரக்டர்.
5.அதிக எதிர்பார்ப்பைக்கிளப்பிய எந்தப்படமும் ஹிட் ஆனதே இல்லை,அதே போல் நீண்ட காலத்தயாரிப்பில் இருந்த படங்களும் தோல்வியையே தழுவி இருக்கின்றன.(விதிவிலக்கு -கேப்டன் பிரபாகரன்.,இணைந்த கைகள்)ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என கமல் ரசிகர்கள் கிண்டல் அடித்தபோது நான் கூட கொஞ்சம் பயந்தேன்.ஆனால் அனைத்து எள்ளல்களையும் தவிடு பொடி ஆக்கி எந்திரன் ஹிட் ஆகி இருக்கிறது.


1.ஆளவந்தான் (2 வருடங்கள் தயாரிப்பு)ரிசல்ட் டப்பா
2.நாட்டுக்கு ஒரு நல்லவன் (1 வருடதயாரிப்பு) ரிசல்ட் ஃபிளாப்.
3.குற்றப்பத்திரிக்கை(16 வருடங்கள் சென்சார் பிரச்சனை)குப்பை
4.பீமா(3 வருடங்கள் )சுமார் ஓட்டம்
5.ராவணன் (2 வருடங்களுக்கு மேல்) அட்டர் ஃபிளாப்

6.கடந்த 20 வருடங்களில் ஈரோடு அபிராமி தியேட்டர் ரஜினி படத்தை மிஸ் பண்ணியதே இல்லை.எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் ரஜினி படம் கண்டிப்பாக எடுத்து விடுவார்கள்.சிங்கம் படம் ஓடும்போது சன்  பிக்சர்ஸ் நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக எந்திரன் படத்தை எடுக்காமல் கோட்டை விட்டது அபிராமி நிர்வாகம்.செண்ட்டிமெண்ட்டாக அதை சொல்லி சிலர் பயமுறுத்தினார்கள்.அதையும் தவிடுபொடி ஆக்கியது எந்திரனின் மெகா வெற்றி.


7.தீபாவளி,பொங்கல்.தமிழ்ப்புத்தாண்டு போன்ற பண்டிகை தினங்களில் வெளிவாராமல் சாதாரணமாக வந்து ஹிட் ஆன படம் என்ற பெருமையும் உண்டு.ரஜினி படம் ரிலீஸ் ஆனாலே அது தான் ரசிகர்களுக்கு தீபாவளி என்பது வேறு விஷயம்.

8.தமிழ் எழுத்தாளர்களின் நாவலோ,சிறுகதையோ இதுவரை படமாக்கப்பட்டு சூப்பர்ஹிட் எதுவும் ஆனதில்லை.(விதிவிலக்கு -உதிரிப்பூக்கள்,தில்லானா மோகனாம்பாள்)அமரர் எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா,மீண்டும் ஜீனோ இரண்டின் கலவை தான் எந்திரன்.(ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்து ஹிட் ஆனது)

1. கல்கி வார இதழில் கரையெல்லாம் செண்பகப்பூ எனும் தொடர் சூப்பர்ஹிட் ஆனது,அது சுஜாதாவின் சம்மதத்தின் பேரில் பிரதாப்போத்தன் ஹீரோவாக நடிக்க அதே டைட்டிலில் படமாக்கப்பட்டு தோல்வி அடைந்தது,காரணம் ஹீரோ செலெக்‌ஷன்.கணெஷ் மாதிரி ஒரு புத்திசாலி கேரக்டர் பிரதாப் மாதிரி ஒரு லூஸ் தனமான (மீண்டும் ஒரு காதல் கதை)ஆள் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

2.மோகமுள் (தி.ஜானகிராமன்) அதே பெயரில் படமாக்கப்பட்டு விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வியாபார ரீதியில் தோல்வி.

3.அதே போல் காயத்ரி,ப்ரியா, 2ம் ரஜினி படங்கள் சுஜாதா கதை .இதில் 2 படங்களும் ஹிட் தான் என்றாலும் சூப்பர்ஹிட் இல்லை.

4.சுஜாதாவின் சூப்பர்ஹிட் நாவலான பிரிவோம் சந்திப்போம் கதையில் வந்த மதுமிதா,ரத்னா கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பை தமனாவோ,ருக்மணியோ,டைரக்டரோ ஏற்படுத்தமுடியவில்லை.அதனால் படம் வந்த சுவடே தெரியாமல் போனது.

5.தங்கர் பச்சானின் கல்வெட்டு கதை  (அழகி)ஹிட்.

6நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் கதை சேரனின் சொல்ல மறந்த கதை யாகி ஜெயித்தது.

7/ஜேயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் கதை படமாகி ஹிட்.

8.எழுத்தாளர் லட்சுமி எழுதிய சிறை கதை அதே பெயரில் படமாகி ஹிட்.

9.பாக்யராஜின் பவுனு பவுனுதான் தொடராக பாக்யாவில் வந்து பாராட்டை அள்ளினாலும் படம் படுதோல்வி.

இப்போது ஒரு எழுத்தாளரின் கதை சூப்பர் ஹிட் ஆகி ஓடுவதில் சந்தோஷம்.அமரர் சுஜாதா ஆத்மா சாந்தி அடையவும்,அவரது குடும்பம் பெருமைப்படவும்,புதிய எழுத்தாளர்களின் கதைக்கு டிமாண்ட் ஏற்படவும் இப்பட வெற்றி துணை புரிந்தால் மகிழ்ச்சி.