Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Tuesday, November 17, 2015

சுவாசங்கள் தொடர்ந்தால்தானே வாழ்க்கை?

பக்கத்துத் தெருவில் புதிதாகக் காய்கறிக் கடை வந்தது. சும்மா சொல்லக் கூடாது. கண்ணைப் பறிக்கும் நிறங்களில் அவர் காய்கறிகளைக் காட்சிப்படுத்தியதில் ஏற்கெனவே இருந்த காய்கறியாளர்கள் வாடியும், வதங்கியும் போனார்கள். ஆப்பிரிக்கா,நேபாள நாடுகளின் மாணவிகள்கூட அங்கே வந்து தங்கள் நிலத்தின் காய்கறிகளைக் கொய்தார்கள்.


காய்கறிக் கடைக்காரர்

நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இடையில் கடை மெல்ல அழகை இழந்தது. தக்காளி கேட்டால்கூட “ இல்லீங்களே...”; வெங்காயம்? “பக்கத்துக் கடைல இன்னிக்கு ஒரு நாளைக்கு வாங்கி அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க சார்.....” பக்கத்துக் கடைக்குச் செல்கிறவர் வெங்காயம் மட்டுமா வாங்கிப் போவார்...?


கடை இன்னும் இருக்கிறது. ஆனால், கூட்டம் மெல்லக் குறைந்து, இறுதிநாள் நோயாளி போல் “அமாவாசை தாண்டுமா...?” என்றிருக்கிறது. தாண்டிச்செல்லும் தனது வாடிக்கையாளர்களைக் குழப்பத்துடன் வெயில் முகத்திலடிக்க, பார்த்துக் கொண்டிருக்கிறார்-- “முன்னாள் காய்கறிக் கடைக்காரர்” என்ற பெயரை விரைவில் சூட இருப்பவர்.


கொஞ்சம் மனசு வச்சா?

நிறையப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி அடுத்தவர் கேட்கிறாரா, இல்லையா என்ற கவலை எதுவுமின்றிப் பிரச்சாரம் செய்வார்கள். குறிப்பாக, பள்ளிக்கூடங்களில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றிய பி.எச்.டி. அறிக்கையையே ஒப்படைப்பார்கள்.

அதிலும், இந்த அம்மாக்களின் ஆய்வுக் குறிப்புகளைத் தாங்க முடியாது. அதில் இடம்பெறும் முக்கியமான வாசகம் “டக்குன்னு புரிஞ்சுக்கறான்... கொஞ்ச நேரம்தான் படிக்கிறான்.. அதுலயே இவ்வளவு மார்க் வாங்கிர்றான். இன்னும் கொஞ்சம் மனசு வச்சு படிச்சாம்னா...,”

குறைந்த நேரப் படிப்பிலேயே அம்மாக்களை அசத்துகிறவர்களால் தொடர்ந்து ஏன் புல்லரிப்பை நிகழ்த்த முடியவில்லை ?

இரண்டு பிரச்சினையும் வெவ்வேறு விதமாகத் தோன்றினாலும் அவற்றின் பிறப்பு ரகசியம் ஒன்றுதான்.

அட்டகாச ஆரம்பம்

காய்கறியாளரின் முயற்சியிலும், ஆர்வத்திலும் குறை சொல்லவே முடியாது. அட்டகாசமாகவே தொடங்கி யிருக்கிறார். பின் தப்பு நடந்தது எங்கே என்றால், அவர் தொடர்ந்து முயலவில்லை. அதுதான் பிரச்னை..!
ஆரம்பநாட்களில் முயன்றால் போதுமா...? பின் அதுவாகவே தன்னை நகர்த்திக் கொண்டு போகும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்...?

தன்னிடம் வரும் வாடிக்கை யாளரைத் திருப்தி செய்யத் தொடர்ந்து முயற்சி செய்தால்தானே, அவர் களத்தில் நிற்க முடியும்? தினமும் எது தேவை? தனது பகுதியில் எது நன்றாகப் போகும் என்று கணித்து அதை வாங்கி வைக்க வேண்டும். இப்படி எதையும் செய்யாமல் கறிவேப்பிலைகூட இல்லாமல் உட்கார்ந்திருந்து “காலைல மார்க்கெட்டுக்கு லேட்டா போனேங்க்கா... அங்க வித்து போச்சு...” என்றால் “தனியே...தன்னந்தனியே... நான் காத்துக் காத்து இருந்தேன்” என்று பாட வேண்டியதுதான்.

மாணவச் செல்வங்கள் ஆடிக்கும், அமாவாசைக்கும் மட்டும் படித்தால் “அவனுக்கு இருக்கும் அறிவுக்கு எங்கேயோ போயிருக்கணும் சார்...” என்று தாயார்களின் புகழுரையைக் கேட்டுக் காலம் தள்ள வேண்டியதுதான்.


தொடர்ச்சி

வெற்றி பெற முயற்சி மட்டும் போதாது. அம்முயற்சிகளில் தொடர்ச்சித் தன்மை (consistency) தேவை.

கிரிக்கெட் தெரிந்த யார் வேண்டுமென்றாலும் ஒரு ஓவருக்கு பேட் செய்ய முடியும். ஆனால், கிரிக்கெட் என்பது ஒரு ஓவர் மட்டும் விளையாடுவது அல்ல. மேட்ச் என்றால் பகல் முழுவதும் நின்று ஆடுகிற உடல், மன வலிமைகளையும் வளர்த்துக் கொண்டால்தான் கிரிக்கெட் வீரராக முடியும். அதை விடுத்து “ஸ்டெயின் பால்லகூட நான் சிக்ஸ் அடிச்சேன்...” என்றால் மூளையின் ஆற்றலைச் சரிவரப் பயன்படுத்தாதவர்கள் வேண்டுமானால் சொல்லலாம். “அவனுக்கு இருக்கிற திறமைக்கு ...”

நம்மில் நிறையப் பேருக்கு அவ்வப்போது உடற்பயிற்சி ஆசை தாண்டவமாடும். அதற்கான ஷூக்கள்,ஆடைகள்; “காலை 6 மணியிலிருந்து 7 வரை நான் வாக்கிங் போயிருப்பேன். அப்ப ஃபோன் பண்ணாதீங்க” போன்ற செய்திகள், பயிற்சி முடித்து வந்த களைப்பைப் போக்கப் பிரத்தியேகப் பானங்கள்... ஒருநாள் நடந்துவிட்டுத் தொப்பையைப் பார்ப்பதென்ன, கண்ணாடியைப் பார்ப்பதென்ன ... என்று டீஸர், ட்ரெய்லர் எல்லாம் நன்றாகத்தான் இருக்கும்.

தெரிந்தவர்களைக் கேலி செய்வேன். “எப்போதும் முதல்நாள் உடற்பயிற்சியைவிட இரண்டாவது நா
ள் எளிமையாகத்தான் இருக்கும்.”
“பழகிரும்னு சொல்ல வர்றீங்களா..?”
“அது இல்லை...இரண்டாவது நாள்தான் நாம செய்யவே போறதில்லையே!”
நிறையப் பேர் முயற்சி என்றாலேயே அதை லட்சியத்துடன் தொடர்புபடுத்தியே பார்க்கிறார்கள். ஆனால், அன்றாட வாழ்வை சிரமமின்றி நகர்த்திச் செல்ல உதவும் எளிய வேலைகளில்கூடத் தொடர்ச்சியானத் தன்மை இருந்தால்தான் வாழ்க்கை சுமுகமாக நகரும்.

எல்லோராலும் வெகு சுலபமாகவும், பிரமாதமாகவும் எதை வேண்டுமானாலும் தொடங்க முடியும். நிறையப் பேர் தொடங்குவதே போதுமானது என்றும் தவறாக நினைத்து விடுகிறார்கள். அது திறமையே அல்ல. அது “ஆர்வக்கோளாறு” என்ற பிரிவிலேயே இடம் பெறும். .


தொடர்ந்தால்தானே?

ஆர்வக்கோளாறுகள் பெட்ரோல் இன்றி வழியில் நிற்கும். “அப்ப எல்லாம் ரொம்ப கஷ்டம். இப்ப இருக்கிற மாதிரி ஈஸி கிடையாது”, “எனக்கு நேரம் இல்ல, வாய்ப்பு வரல...” போன்ற சாக்குப்போக்குகளைச் சொல்லிப் புலம்பும்.

ஊக்குவிப்பு முகாம் ஒன்றில் கேட்டேன் “இப்போது போர் எதுவும் நடைபெறவில்லைதான். இந்திய ராணுவம் இந்தச் சூழலில் என்ன செய்து கொண்டிருக்கும்..? தூங்கி, சாப்பிட்டு, டி.வி பார்த்து, அரட்டையடித்து...”
“போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்...”என்றார்கள்.

வானில் எதிரி விமானங்கள் பறக்கத் தொடங்கிவிட்ட பிறகு, நீங்கள் விடுமுறையில் சென்ற உங்கள் சிப்பாயை வரவழைக்கப் புறாக்களின் காலில் கடிதம் கட்டி அனுப்புவதும், ஆயுதங்களைத் தூசு தட்டி அவற்றின் கேட்லாக்கைப் படிக்கத் துவங்குவதுமாக இருந்தால்,போரின் முடிவைச் சொல்ல வேண்டியதில்லை.

தொடர்ந்து பயிற்சி எடுக்கிறார்கள். தொடர் முயற்சிகளில் இருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் வீரர்களாகிறார்கள்... வாழ்க்கை என்பதும் போர்க்களம்தானே? சுவாசங்கள் தொடர்ந்தால்தானே வாழ்க்கை...?

thanks the hindu

Sunday, November 15, 2015

எத்தனை விதமாய் எண்ணங்கள்!

நம் அனுபவங்கள் தான் எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன என்பது எவ்வளவு தவறான கருத்து என்பதை முதலில் பார்ப்போம்.

10 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கையாடல் செய்து பிடிபட்டதால் வங்கி ஊழியர் தற்கொலை என்று படிக்கிறோம். கோடிக்கணக்கில் கையாடல் செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் மந்திரி சாதாரணமாகப் பேட்டி கொடுப்பார். சாலையில் வாகனம் செல்லும் தடத்துக்கு மிக அருகில் ஓரமாகப் படுத்து , எப்போதும் ஆபத்தை எதிர்நோக்கும் உணர்விலும் நன்றாக உறங்குவோர் பலர் நம் நாட்டில்.

இதே நாட்டில் தான் மிக வசதியான இடத்தில் படுத்தும் தூக்கம் வராமல் தூக்க மாத்திரை உபயோகிப்போர் எண்ணிக்கை மிக மிக அதிகம். 1100 மதிப்பெண்கள் எதிர்பார்த்து அது குறைந்ததால் மன அழுத்தத்தில் சிகிச்சைக்கு என்னிடம் வரும் மாணவர்களும் உண்டு. இரு முறை தோல்வி அடைந்தும் பதற்றப்படாமல் இருக்கிறானே என்று மன அழுத்தத்தில் என்னிடம் வரும் பெற்றோர்களும் உண்டு.

பணம் இருந்தால் கடன் அடைக்கலாம் என்பார்கள். நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் மைக்ரோ ஃபினான்ஸில் வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பித் தருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும் நிறுவனங்கள் அரசிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தருவதில் தாமதம். சிக்கல். ஏன்?

எல்லாம் மனசு தான்.

இரண்டு எண்ணங்கள்

விற்பனைப் பயிற்சியில் அதிகம் சொல்லப்பட்ட கதை இது:
காலணி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று ஒரு புதிய தீவில் கிளை பரப்ப எண்ணி 50 ஜோடி காலணிகளுடன் ஒரு விற்பனைக்காரனை அனுப்பியது. சென்றவன் அதே வேகத்தில் திரும்பினானாம். “அங்கு காலணி அணியும் பழக்கம் யாருக்கும் இல்லை. அதனால் கிளை திறக்கும் எண்ணத்தைக் கைவிடலாம். இங்கு விற்பனை சாத்தியமில்லை.”

இரண்டாம் ஆளை அனுப்பினார்கள். அவன் மறு நாளே செய்தி அனுப்பினானாம்: “யாருமே காலணி அணியவில்லை. உண்மை தான். அதனால் இதை விற்கப் போட்டியும் இல்லை. முழு சந்தையையும் நாமே பிடித்துவிடலாம். இன்னும் 200 ஜோடி காலணிகள் அனுப்புங்கள். விரைவில் கிளை திறக்க ஏற்பாடு செய்யுங்கள்!”

வாய்ப்புகளில் பிரச்சினைகளைப் பார்ப்பதும் பிரச்சினைகளில் வாய்ப்புகளைப் பார்ப்பதும் அவரவர் மன நிலையைப் பொறுத்ததே!
எண்ணம் தான் விதை. உணர்வு தளிர். செயல் விருட்சம். இதைப் புரிந்து கொண்டால் அனைத்தும் எளிதாக விளங்கும்.

செயலின் விதை
“ஏன் இப்படிச் செய்யறான்?” என்று கேட்பதற்கு முன் அந்தச் செயலுக்கு விதையான எண்ணம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள்.
பல ஆண்டுகளுக்கு முன், ஒரு பிரபலப் பத்திரிகையின் கேள்வி - பதில் பகுதியில் இதைப் படித்தேன்:
கேள்வி: “நடிகை ரோஜாவைக் கட்டிப் பிடிக்க ஆசை! ஒரு வழி சொல்லுங்கள்?”

பதில்: “ரோஜாவைக் கட்டிப்பிடிக்க நினைத்தால் முள் குத்தும்!”
அருகே நடிகை ரோஜாவின் படமும் ரோஜாப்பூவின் படமும் இணைந்ததாய் ஒரு கேலிச்சித்திரம். என்ன அரிய கருத்து!
சரி, இதை ஏன் ஒரு வாசகர் கர்மச் சிரத்தையாய்க் கார்டு வாங்கி எழுதி அனுப்புகிறார்? ஆயிரம் கேள்விகளில் ஏன் இதைப் பொறுக்கி எடுத்து அந்த உதவி ஆசிரியர் பதில் எழுதிப் பிரசுரிக்கிறார்? இதை ஏன் மெனக்கெட்டுப் படித்து ஞாபகம் வைத்து நான் இப்போது எழுதுகிறேன்?
ஒவ்வொருவர் எண்ணத்தை அறியவும் முயற்சி செய்யுங்கள். மூவரின் செயலுக்கும் உந்துசக்திக்கும் செயலுக்கும் விளக்கம் கிடைக்கும்.

எண்ணமே ஆதாரம்


“ஏன் முகம் கொடுத்துப் பேச மாட்டேன் என்கிறாள்?” “ஏன் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியாக இல்லை? “ஏன் இவர் செய்கின்ற எல்லாத் தொழிலும் தோல்வியில் முடிகிறது?” “ஏன் இவர் எங்குச் சென்றாலும் பிரபலமாகிறார்?” “எந்த வேலையையும் இவரால் மட்டும் எப்படி சரியான நேரத்தில் செய்ய முடிகிறது?” “இவரால் மட்டும் எப்படி எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?” “இவன் எல்லோரிடமும் சணடை போடுகிறானே, ஏன்?” இப்படி நம்மைச் சுற்றிய மனிதர்களின் செயல்களுக்கு ஆதாரமான எண்ணங்களை ஆராயுங்கள். அவர்களின் செயல்களின் காரணங்கள் புரியும்.
எதிராளியின் எண்ணம் புரியாத போது நாம் நம் உறவுகளைச் சீர் குலைய விடுகிறோம்.


அவர் எண்ணத்தைப் புரிந்து நாம் எடுக்கும் முடிவுக்கும் அடிப்படை நம் எண்ணம் தாம். என்ன விசு பட வசனம் மாதிரி இருக்கா? சரி, கொஞ்சம் எளிமை படுத்தலாம் வாங்க...!
ப்ரமோஷன் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார். மேலதிகாரியான உங்களுக்குக் குழப்பமாக உள்ளது. “எந்தக் கிறுக்கனாவது பணமும் பவரும் வேண்டாம்னு சொல்வானா? என்ன ஆள் இவன்?” என்று யோசிக்கிறீர்கள். பின்பு, விசாரித்ததில் புரிகிறது. தொழிற்சங்க உறுப்பினர் தகுதி ப்ரமோஷனால் பறி போகும். பதவி உயர்வை விடத் தொழிற்சங்க அடையாளம் பெரிது என்று எண்ணி அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.


இப்போது இந்த அறிதல் உங்கள் எண்ணத்தை இப்படி மாற்றலாம். “சரியான அரசியல்வாதி போல. இங்கேயே இருந்து என்னென்ன பிரச்சினை செய்வானோ? கொஞ்சம் ஜாக்கிரதையா டீல் பண்ணணும்!”
அல்லது இப்படி ஓர் எண்ணம் தோன்றலாம்: “என்ன ஒரு கொள்கைப்பிடிப்பு. அவ்வளவு தீவிரமான ஈடுபாடா? நாமெல்லாம் காசு கிடைச்சா போதும்னு நினைக்கறப்ப இப்படிப் பொதுக் காரணத்துக்கு உழைக்கும் ஆளைப் பாக்கறதே பெரிய விஷயம். அந்த ஆளைப் பாத்து இன்னும் நிறைய தெரிஞ்சக்கணும்!”
எந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீகளோ அது அவருடனான உங்கள் உறவை தீர்மானிக்கும்.
ஆம். நீங்கள் உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!
“நீங்கள் உங்கள் வியாதியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!” என்பார் தீபச் சோப்ரா. உங்கள் எண்ணம்தான் உங்களை நோய்வாய்ப்படுத்தும் என்றால் நம்புவீர்களா?


“அப்படியா ஆச்சர்யமாக இருக்கே.!” என்பதும் “ரொம்ப கதை விடறார்!” என்பதும் இரு எண்ணங்கள். எந்த எண்ணத்தை இப்பொழுது தேர்ந்தெடுத்தீர்கள் என்று பாருங்கள்.
உங்கள் தேர்வு உங்கள் தேடலை நிச்சயிக்கும்!

thanks the hindu

Sunday, September 06, 2015

ஜராசந்தன் போல் உங்கள் எதிரி இருந்தால் வீழ்த்துவது எப்படி?

  • ஓவியம்: வெங்கி
    ஓவியம்: வெங்கி
மகத நாட்டின் அரசர் பிரகத்ரதன். அவர் காசி நகர அரசரின் இரட்டைப் புதல்விகளை மணந்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்க வில்லை. அந்த வேதனையால் அரசர் கவுசிக முனிவரிடம் குழந்தைப் பேறு கிடைக்க வரம் வேண்டினார்.
கவுசிக முனிவர் ஒரு மாங்கனியை அரசரிடம் வழங்கி “நீ இதை உன் மனைவிக்குக் கொடுத்தால் விரைவில் குழந்தைப் பேறு உண்டாகும்” எனக் கூறி வாழ்த்தினார்.
அரசர் தனது இரு மனைவிகளுக்கும் பழத்தைச் சரிசமாகப் பிரித்து சாப்பிடுமாறு கொடுத்தார். முனிவரின் வாக்குப்படியே, மகத நாட்டு அரசரின் இரண்டு மனைவிகளும் கர்ப்பம் அடைந்தனர். இருவரும் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சமயத்தில் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
பாதிக் குழந்தைகள்
பாதிப் பழத்தைப் பிரித்து உண்டதனால் ஒருவருக்கு குழந்தையின் இடப்பக்கமும், மற்றொருவருக்கு வலப்பக்கமும் பிறந்தது. இரு பாதியாய், உயிரற்ற நிலையில் இருந்த குழந்தையின் உடலைக் கண்டு துடித்த அரசர் உடலை தூக்கி எறியுமாறு ஆணையிட்டார்.
அதைக் கண்ட ஜரா என்ற துர்தேவதை இன்று நல்ல உணவு கிடைத்ததாகக் கருதியது. குழந்தையின் இரு உடல்பாகங்களை இடப்பக்கமும், வலப்பக்கமும் வைத்த தருணத்தில் இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து அழகான ஆண் குழந்தை உருவானது.
இதைக் கண்ட துர்தேவதை ஆச்சரியமடைந்தது. குழந்தையை அரசரிடமே கொண்டுவந்து ஒப்படைத்தது. அவரும் குழந்தைக்கு ‘ஜராசந்தன்’ (ஜரா என்ற துர்தேவதை மூலம் ஒன்று சேர்க்கப்பட்டவன்) எனப் பெயரிட்டார்.
குழந்தை விரைவில் அனைத்துக் கலைகளையும் கற்றறிந்து வாலிபனாகியது. அவன் மாவீரனாய் திகழ்ந்தான்.
ஜராசந்தனை கிழித்த பீமன்
ஜராசந்தனை வென்றால் தான் பாண்டவர்கள் வெற்றியை அடைய முடியும் என்பதால் கிருஷ்ணர், அர்ஜுனனையும் பீமனையும் ஜராசந்தனிடம் போர் புரிய அழைத்து வந்தார். ஜராசந்தன் பீமனுடன் போரிட்டார்.
இந்த மல்யுத்தப் போர் 13 நாள்கள் ஆக்ரோஷமாக நடைபெற்றது. எவருக்கும் வெற்றி, தோல்வியில்லை. 14 ம் நாள் போட்டியில் கிருஷ்ணர் பீமனுக்கு ஓர் இலையை இரண்டாகக் கிழித்து ஒரு ஜாடை காட்டினார்.
அதைப் புரிந்துகொண்ட பீமன், ஜராசந்தனின் கால்களைப் பிடித்து அவரது உடலை இரண்டாகக் கிழித்து இரு பக்கத்திலும் வீசி எறிந்தார். ஆனால், சில வினாடிகளிலேயே வீசி எறியப்பட்ட இரு உடற்பாகங்களும் ஒன்று சேர்ந்து ஜராசந்தன் மீண்டும் உயிர் பெற்றார். முன்பைவிட அதிக பலத்துடன் பீமனைத் தாக்கினார்.
மாத்தி யோசி
பீமன் திகைத்தார். மீண்டும் முன்பு போல் அவரை இரண்டாகக் கிழித்தெறிந்தார். இப்பொழுதும் ஜராசந்தன் மீண்டெழுந்து பீமனைத் தாக்கினார். எத்தனை முறை ஜராசந்தனை இரண்டாகக் கிழித்தெறிந்தாலும் மீண்டும், மீண்டும் அவர் உயிர் பெற்று மீள்வதைக் கண்டு துவண்டு போனார் பீமன்.
இந்த நேரத்தில் பீமனுக்கு கிருஷ்ணர் முன்புபோல ஒரு இலையைப் பாதியாகப் பிரித்து, இலைத்துண்டுகளை இடது, வலதாக மாற்றி வீசி எறிந்து ஜாடை காட்டினார்.
இதை உணர்ந்த பீமன் மிகக் கடுமையான முயற்சிக்குப் பின் ஜராசந்தனின் உடலை முன்பு போல் இரு பாகங்களாகப் பிரித்து, வலப்பாகத்தை இடப்பக்கத்திலும், இடப்பாகத்தை வலப்பக்கத்திலும் மாற்றி வீசி எறிந்தார். பாகங்களை மாற்றி வீசி எறிந்ததால் ஜராசந்தனால் மீண்டும் ஒன்று சேர முடியாமல் போய், அவர் இறந்தார்.
மறுபிறவி எண்கள்
ஜராசந்தன் மறுபிறவி எடுத்ததைப் போல, கணிதத்தில் சில எண்கள் உள்ளன. அவை 2025, 3025, 9801 ஆகும். இந்த எண்களைச் சரிபாதியாகப் பிரித்து அதன் இருபடிகளைக் கண்டறிந்தால் அந்த எண்களே மீண்டும் தோன்றுவதை கவனியுங்கள்.
(20 + 25)2 = 45 2 = 2025
(20 + 25)2 = 2025
(30 + 25)2 = 55 2 = 3025
(30 + 25)2 = 3025
(98 + 01)2 = 99 2 = 9801
(98 + 01)2 = 9801 ஜராசந்தனின் உடலை பீமன் இருபாதியாகப் பிரித்து வீசும்போது, மீண்டும் அந்த உடற்பகுதிகள் ஒன்று சேர்ந்து உயிருடன் மீளும் பண்புடன் இதை ஒப்பிடலாம். பீமன், ஜராசந்தனை இரு பாதியாகப் பிரித்ததால் நாம் மேற்கண்ட சமன்பாடுகளில் இரு படிகளைக் கருதிக்கொண்டோம். மேற்கண்ட எண்களின் இருபடிகள் மீண்டும் ஒன்றுசேர்ந்து அந்த எண்களையே வழங்குவதை பீமன் எவ்வளவு முயன்றும் ஜராசந்தனை வதைக்க முடியாததோடு ஒப்பிடலாம்.
மாற்றிப் போடு!
2025, 3025, 9801 எனும் எண்களை இடப்பக்க இரு இலக்கங்களை வலப்பக்கத்திலும், வலப்பக்க இரு இலக்கங்களை இடப்பக்கத்திலும் மாற்றி அமைத்தால் கிடைப்பது, 2520, 2530, 0198 ஆகும். இந்த எண்களின் இருபடிகளைக் கண்டறிந்தால் கிடைப்பது
(25 + 20)2 = 45 2 = 2025
(25 + 20)2 = 2520
(25 + 30)2 = 55 2 = 3025
(25 + 30)2 = 2530
(01 + 98)2 = 99 2 = 9801
(01+ 98)2 = 0198
ஆகையால், 2520, 2530, 0198 என்ற எண்களின் இருபடிகளைக் கண்டறிந்தால் மீண்டும் அதே எண்கள் தோன்றாமல் வேறு எண்கள் உருவாகின்றன.
இது போலவே ஜராசந்தனின் இரு உடற்பகுதிகளை பீமன் மாற்றி வீசி எறிந்தார். அவற்றால் மீண்டும் ஒன்று சேர முடியவில்லை. ஜராசந்தன் வதைக்கப்பட்டார்.
மகாபாரதத்தில் வரும் இந்தக் கதைக்கும் இந்த எண்களின் தன்மைக்கும் உள்ள ஒற்றுமை மிகவும் சுவாரஸ்யம்.
தொடர்புக்கு: [email protected] shutterstock


நன்றி-த இந்து

Wednesday, September 02, 2015

அதிரடி - வில்லன் மன்சூர் அலிகான் ராதாரவிக்கு வில்லன் ஆன கதை -மன்சூர் அலிகான் சிறப்பு பேட்டி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் பெப்சி திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்துக்கும் கடந்த பல ஆண்டுகளால் நீடித்து வந்த சம்பளச் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் “சிறு முதலீட்டுப் படங்களுக்கு பெப்சியின் சம்பள விகிதங்கள் கட்டுப்படியாகாது; அதனால்தான் டாப்சி என்ற புதிய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தைத் தொடங்கியிருக்கிறேன். சினிமாவின் 24 பிரிவுகளுக்கும் வேலை செய்ய எங்கள் சங்கத்தில் 400 உறுப்பினர்கள் இணைந்திருக்கிறார்கள்” என்று கூறி அதிரடி கிளப்புகிறார் நடிகர் மன்சூர் அலிகான். ‘அதிரடி’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து:
நீங்கள் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது எப்படி உணர்கிறீர்கள்?
சினிமா வழியாகப் பல துணிச்சலான கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை உண்டு. இதுவரை 200 படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் ஐந்து படங்கள் வெள்ளி விழா கண்டிருக் கின்றன. 90 படங்கள் நூறு நாட்கள் ஓடியிருக்கின்றன. என்னைத் தேடி வந்த படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். அதேபோல மலிவான விலைக்கு நான் நடித்ததில்லை.11 படங்களை இயக்கி, நடித்து, தயாரித்திருக்கிறேன்.
நான் இயக்குநர், தயாரிப்பாளரின் நடிகன்.படப்பிடிப்பில் வசதி வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்ததில்லை. நான் நடிக்கும் ஒரு காட்சியை ஒரே ஷாட்டாக எடுத்தாலும் அதை ஓகே செய்துவிடுவேன். என்னால் ரீடேக் என்ற தலைவலியே இருந்ததில்லை. சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கிய ’நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது. அதில் ஒரு காட்சி. தலையால் முட்டி உடைத்து கதவைத் திறந்துகொண்டு போய் நடித்தேன். ஒரே ஷாட்தான். பெப்சி ஆட்களே கை தட்டினார்கள். எதற்கும் தயங்கிக்கொண்டிருந்தால் நடிகனாக இருக்க முடியாது.
சினிமாவில் நீங்கள் எதற்குமே தயங்கியதில்லையா?
கொள்கைக்கு ஆபத்து வரும்போது தயங்கியிருக்கிறேன். ஒரு படத்தில் சோற்றுப் பானையைக் காலால் உதைக்கச் சொன்னார்கள். முடியாது என்று அந்தப் படத்திலிருந்தே வெளியேறினேன். அதேபோல் அம்மாவை அடிப்பதுபோல் ஒரு காட்சி. வில்லன் வேஷம் என்றாலும் அந்தக் காட்சியில் நடிக்க மறுத்ததால் வில்லனாக வேறொரு நடிகரைப் போட்டு எடுத்தார்கள்.
இப்படி எனக்கென்று இருக்கும் கொள்கைகளை வாய்ப்புக்காக நான் விட்டுக்கொடுத்ததில்லை. என்னைத் தேடி நல்ல வேஷங்கள் வரவில்லையே என்ற மனக்குறை என்னை இன்றும் வாட்டிக் கொண்டுதான் இருக்கிறது. வணங்காமுடியாக இருப்பதால் வாழ்வில் இழப்புகள் இருந்தாலும் சுயமரியாதை மிச்சமிருப்பதுதான் ஒரே லாபம்.
நீங்கள் சினிமாவுக்கு வர யார் காரணம்?
எனது அண்ணன் முகமது அலிதான் காரணம். அவர் ஒரு கலை வித்தகர். எனது சொந்த ஊரான பள்ளப்பட்டியில் தற்போது வசித்துவருகிறார். அவர்தான் நான் சினிமாவுக்கு வருவதற்கு இன்ஸ்பிரேஷன். எனது அண்ணன்கள் மகாராஷ்டிராவில் வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் பத்தாம் வகுப்பு படித்தபோது நான் ஆறாம் வகுப்பு படித்தேன். அவர் பேச்சுப் போட்டி, மோனோ ஆக்டிங். கட்டுரைப் போட்டி எல்லாவற்றிலும் முதல் பரிசு வாங்குவார். அவரைப் பார்த்து நானும் முதல் பரிசுகளை வாங்குவேன். ஸ்கூல் நாடகத்தில் தங்கப் பதக்கம் சிவாஜியாக நடிப்பார். சினிமாவில் நடிக்க முயற்சித்தது அவருக்குக் கைகூடாமல் போய்விட்டது. நான் முயற்சித்தேன். எனக்கு வாய்ப்பு அமைந்துவிட்டது.
முன்புபோல போராட்டம், அரசியல் என்று இறங்குவதில்லையே?
சமூக நலன் பற்றி நான் பேசினால் அல்லது தெருவில் இறங்கிப் போராடினால் ஆட்சியதிகாரத்தில் யார் இருந்தாலும் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது. இவனை உள்ளே தூக்கிப் போடலாம், யாரும் கேட்கமாட்டார்கள் என்று வந்துவிடுகிறார்கள். இதனாலேயே நான் போராடுவதையும் அரசியல் ஈடுபாட்டையும் நிறுத்திக்கொண்டுவிட்டேன். கடைசியாக என் மீது நில மோசடி வழக்கு ஒன்றைப் போட்டார்கள். அதில் இதுவரை என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? நானும் அந்த வழக்கை விடுகிறமாதிரி இல்லை.
டாப்சி என்ற பெயரில் தனியாகச் சங்கம் தொடங்குகிற அளவுக்கு அப்படி என்ன நடந்தது?
டாப்சி தொடங்கியது காலத்தின் கட்டாயம் என்று சொல்ல வேண்டும். எங்கள் சங்கத்தின் பெயர் தமிழ்நாடு திரைப்பட படைப்பாளிகளின் ஒருங்கிணைந்த இந்தியக் கூட்டமைப்பு. இதன் சுருக்கம்தான் டாப்சி. அடிப்படையில் நான் பெப்சி உறுப்பினர். இசைக் கலைஞர்கள் சங்கம், டான்ஸர்ஸ் யூனியன் என்று பெப்சியுடன் இணைந்திருக்கும் பல சங்கங்களில் நான் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக உறுப்பினர். அப்படியிருந்தும் பெப்சியின் மீது எனக்குக் கோபம் வரக் காரணம் ஒரு சிறு முதலீட்டுத் தயாரிப்பாளரின் வலியை பெப்சி புரிந்துகொள்ளாததுதான் காரணம்.
நான் தற்போது ‘அதிரடி’ என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறேன் இந்தப் படத்தில் ராதாரவியை வில்லனாக நடிக்க அழைத்திருந்தேன். அவரும் வந்து நடித்துக் கொடுத்தார். ஆனால் இரண்டாவது நாள் சில பிரச்சினைகள் வந்தன. “எனது காஸ்டுயூமருக்கும் மேக் அப் மேனுக்கும் தனித்தனியே கார் வேண்டும்” என்று கேட்டார். நான் முடியாது என்றேன். அதில் ஆரம்பித்தது பிரச்சினை. எத்தனை பேருக்கு வேலை கொடுக்க வேண்டுமோ அதற்குக் குறைவான ஆட்களைப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் அலுவலக ஆட்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்றார்கள். நான் பத்துக் கோடியில் படமெடுப்பவன் இல்லை என்று வாக்குவாதம் செய்தேன்.
ஆனால் அவர்கள் அதையெல்லாம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. நான் இரண்டுமாத இடைவெளிக்குப் பிறகு பெப்சி ஊழியர்களை அழைத்து, திரும்பவும் படப்பிடிப்பைத் தொடங்கினேன். ஆனால் நான் படப்பிடிப்பில் ஊழியர்களைத் திட்டியதாகவும் அதற்கு மன்னிப்புக் கேட்டால்தான் வருவோம் என்று படப்பிடிப்புக்கே வராமல் போய்விட்டார்கள். ஒரு சிறு தயாரிப்பாளரின் வலி அவர்களைப் பொருத்தவரை வசையாகத் தெரிகிறது.
நான் எவ்வளவோ சமாதானதுக்கு முயன்றேன். அவர்கள் யாரும் காதுகொடுக்கிற மாதிரி தெரியவில்லை. இவர்களோடு இனியும் வேலை செய்ய முடியாது என்றுதான் சொசைட்டி ஆக்டில் தனியே தொழிலாளர் சங்கம் தொடங்கினேன். எங்களது டாப்சி சங்கத்திலிருந்து தற்போது சிறு படங்களுக்கு நிறைய தொழிலாளர்கள் சென்று வேலை செய்கிறார்கள். எனது படத்தையும் வெற்றிகரமாக முடித்துவிட்டேன்.
அதிரடி படத்தைப் பற்றிக் கூறுங்கள்?
சொன்னால் நம்ப மாட்டீர்கள். இந்தப் படத்துக்கு கடந்த 2013-ல் திரைக்கதை எழுதினேன். கடந்த பல ஆண்டுகளாக நாம் கண்களில் பார்க்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் சிரிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் மதுவுக்கு அடிமையாகி உயிரை விட்டவர்கள். இந்த உண்மையை போஸ்டருக்கு உரியவரின் வீடு தேடிப் போனால் நீங்கள் உணர்வீர்கள். இதை வைத்துத்தான் அதிரடி படத்தின் கதையை எழுதினேன். இது மதுவுக்கு எதிரான படம். இதில் நாயகன் என்ன மாதிரியான அதிரடிகளைச் செய்கிறான் என்பதைப் படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.


நன்றி - த இந்து

Thursday, August 13, 2015

பொசிஷனிங்: வெற்றியின் ரகசியம் இதுதான்!-வணிகம்-எஸ்.எல்.வி.மூர்த்தி

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.
அறிவுக்கும் வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை என்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். அதேபோல, தயாரிப்புப் பொருட்கள், நிறுவனங்கள், தனி மனிதர்கள், தலைவர்கள் என எதை, யாரை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் வெற்றிக்கு அடித்தளம், மக்கள் மனங்களில் அவர்கள் உருவாக்கியிருக்கும் நல்ல அபிப்பிராயம்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். இப்படி நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்துவதைத்தான் பொசிஷனிங் என்று மேலாண்மை மேதைகள் சொல்கிறார்கள்.
பிறர் மனங்களில் தெளிவான, சாதகமான பிம்பத்தை உருவாக்க, எல்லோரிடமும் நான்கு ஆயுதங்கள் இருக்கின்றன. இவற்றை நான்கு P-க்கள் என்று சொல்வார்கள். அவை:
Product (பொருள்)
Price (விலை)
Promotion (விற்பனை மேம்பாடு)
Physical Distribution (விநியோகம்/ பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முறை)
புத்திசாலிகள் இந்த நான்கு ஆயுதங்கள் மூலம் தங்களுக்குச் சாதகமான, தனித்துவ பிம்பங் களை மக்கள் மனங்களில் உருவாக் குகிறார்கள்.
பொருள் வழி
2003 ம் ஆண்டு, நோக்கியா நிறுவனம், தன் நோக்கியா 1100 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தார்கள். போன், டார்ச் லைட், அலாரம் கடிகாரம், சூரிய வெளிச்சம் பிரதிபலிக்காத ஸ்க்ரீன்கள், தூசி, வியர்வை ஆகியவை பாதிக்காத வடிவமைப்பு, கீழே விழுந்தாலும் பாதிக்கப்படாத உறுதியான அமைப்பு இந்தியக் கிராமப்புறங்களுக்காகவே வடிவமைத்தார்கள். இந்தியாவில் தொட்ட விற்பனைச் சிகரங்களால், உலகம் முழுக்க அரங்கேற்றினார்கள். விற்பனை எண்ணிக்கை 25 கோடிகள் தொட்டது: அதிகம் விற்பனையான செல்போன் என்னும் சாதனை படைத்தார்கள்.
பார்லே ஜி - உலகில் அதிகமாக விற்பனையாகும் பிஸ்கெட், 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருட விற்பனை கொண்ட பிஸ்கெட், 66 வருடங்களாகத் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டிவரும் பிஸ்கெட். எப்படி நடக்கிறது இந்த மேஜிக்? முக்கிய காரணங்கள் - மைதா மாவு, பால், குளுக்கோஸ் ஆகிய மூன்றும் சேர்த்துத் தயாரிப்பதால், பால் மணம், குளுக்கோஸின் இனிப்புச் சுவை இரண்டும் கொண்டதாய், குழந்தைகளின் உடல், அறிவு வளர உதவும் தனித்துவ பலம்.
வெல்வெட், சிக் ஷாம்பூகள், உஜாலா வெளுப்பான் (Whitener), ஆப்பிள் ஐபேட், ஐ போன், ஐ பாட், ஆப்பிள் வாட்ச், மெக்டொனால்ட்ஸ் பர்கர், கேஎஃப்சி (KFC) ஃப்ரைட் சிக்கன் எனப் புதுமைத் தயாரிப்புகளால் தொழில் உலகில் தனிமுத்திரை பதித்திருக்கும் பிரபலங்கள் பலர்.
விலை வழி
27 நாடுகளில் 11,000 கடைகள், 22 லட்சம் ஊழியர்கள். ஆண்டு விற்பனை 486 பில்லியன் டாலர்கள் (சுமார் 30 லட்சம் கோடி ரூபாய்).வால்மார்ட்டின் சாதனைப் பட்டியல். இதன் ரகசியம்? எப்போதும் குறைந்த விலை என்னும் தாரக மந்திரம்!
சோப்புத்தூள் உலகின் தனிக்காட்டு ராஜாவாக இருந்தது ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனியின் ஸர்ஃப். சர்வ வல்லமை கொண்ட இந்தப் பன்னாட்டுக் கம்பெனியைத் தன் குறைந்த விலை நிர்மாவால் புற முதுகிடவைத்தார் கஸன்பாய் பட்டேல். ஏராளமான தொழில் முனைவர்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும்போது, போட்டியாளர்களைவிட விலையைக் குறைத்து விற்கிறார்கள். இது நல்ல யுக்திதான். ஆனால், குறைவான விலை மட்டுமே போதும் என்னும் குறுகிய எண்ணத்தால், மற்ற 3 P க்களை உதாசீனம் செய்வதும், தரத்தைக் காவு கொடுப்பதும், தனக்குத்தானே குழி பறிக்கும் முயற்சிகள்.
விற்பனை மேம்பாடு வழி
சுவையான, புத்துணர்ச்சி ஊட்டும், தாகம் தீர்க்கும் குளிர் பானம் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தியதுதான் கோகோ கோலாவின் உலகளாவிய மாபெரும் விற்பனைக்கு முக்கிய காரணம். இந்தக் கோட்டையை பெப்ஸி தகர்த்ததும் பொசிஷனிங் மூலம்தான்.
மனதால் நீங்கள் இளைஞரா, பெப்ஸி உங்களுக்காக(Now it’s Pepsi for those who think young), துடிப்போடு வாருங்கள், உங்கள் தலைமுறை பெப்ஸி தலைமுறை (Come alive you’re the Pepsi generation) என்னும் விளம்பர முழக்கங்கள் மூலமாக, இளைய தலைமுறையினர் குடிக்கவேண்டிய ஒரே பானம் பெப்ஸிதான் என்னும் பொசிஷனிங்கை உருவாக்கி, அவர்களைக் கோகோ கோலாவிடமிருந்து விலக்கி, தனக்கு மட்டுமே பெப்ஸி சொந்த மாக்கிக்கொண்டது.
1977 வெளிநாட்டுக் குளிர் பானங்கள் இந்தியாவைவிட்டு வெளி யேற்றப்பட்டன. 1989 இல் தம்ஸ் அப், இளைஞர் இளைஞிகளின் இதயத் துடிப்பாக இருந்த இருபத்து நான்கு வயதான சல்மான் கானைத் தன் தூதுவர் (Brand Ambassador) ஆக்கியது. ஜெயித்தது.
அமுல் வெண்ணெய் அறிமுகம் செய்யப்பட்டபோது, அவர்களுடைய போட்டியாளர்கள் பிரம்மாண்ட பால்சன் (Polson) வெண்ணெய். வித்தியாச விளம்பரங்களால், அமுல் நம் மனங்களில் சிம்மாசனம் போட்டிருக்கிறது. .
சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்னும் முழக்கத்தோடு தனக்கெனத் தனியிடம் பிடித்திருக்கிறது லக்ஸ் சோப், சினிமா நடிக நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே விளம்பரங்களில் ஜொலித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பிசாசைத் தன் மாடலாகக் களமிறக்கிய ஒனிடா டிவி - இப்படி விளம்பரங்கள் மூலமாகத் தம்மைப் பொசிஷனிங் செய்துகொண்டிருக்கும் பொருட்கள் ஏராளம்.
விநியோகம் வழி
சாதாரணமாக நிறுவனங்கள், ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள், கடைகள் ஆகியவை மூலமாக வாடிக்கையாளர்களிடம் தங்கள் தயாரிப்புகளைக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களையே தங்கள் விற்பனைப் பிரதிநிதிகளாக்கும் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) என்னும் வித்தியாசப் பாதையில் தொடர்கிறார்கள்.
இன்னொருவிதமான விநியோகம், தங்கள் கடைகளில் மட்டுமே தங்கள் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்வது. எல்லா நகைக்கடைகளும் காலம் காலமாகப் பின்பற்றும் முறை இது.
கல்யாண் ஜூவல்லர்ஸ், லலிதா ஜூவல்லரி, ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ், ஜாஸ் ஆலுக்காஸ் போன்றவர்களின் நகைகளை நீங்கள் வேறு எங்கும் வாங்கமுடியாது: அவர்கள் கடைகளில் மட்டும்தான் வாங்கமுடியும்.
பாட்டா கம்பெனியும், தன் காலணிகளை இந்த விதத்தில்தான் விற்பனை செய்கிறார்கள்.
எந்த நாட்டுக்கும், எல்லோருக்கும் ஏற்ற கொள்கை
மேலே சொன்ன வெற்றிக்கதைகளை மனக்கண்களுக்கு முன்னால் கொண்டுவாருங்கள். சோப், பிஸ்கெட், கூல் டிரிங்க்ஸ், பர்கர், ஃப்ரைட் சிக்கன், ஷாம்பூக்கள், சோப்புத்தூள், உஜாலா வெளுப்பான் (Whitener), செல்போன், டி.விக்கள், ஆப்பிள் ஐபேட், ஐ போன், ஐ பாட், ஆப்பிள் வாட்ச், தங்க வைர நகைகள் விதவிதமான பொருட் களின் அமோக விற்பனைக்குப் பொசிஷனிங் மந்திரச்சாவியாக இருந்து வருகிறது.
இன்னொரு சமாச்சாரம். ஸ்வீடன் நாட்டு பர்னிச்சர் கம்பெனி ஐக்கியா (ikea), ஜப்பானின் QB ஹவுஸ் (QB House) சலூன், அமெரிக்க வால்மார்ட், அமேசான் இணையதளக் கடை, ஸ்டார்பக்ஸ் காபி, ஈ பே இணையதள ஏலக்கடை, சீனாவில் ஓரியோ பிஸ்கெட், மெக்ஸிகோவில் அல்ட்ரா சோப் பவுடர் என எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் கொள்கை பொசிஷனிங்.
பொருட்களின் இடங்களில் அரசியல் கட்சி, நாட்டுத் தலைவர்கள் ஆகியோரை வைத்துப் பாருங்கள். பொசிஷனிங் கச்சிதமாகப் பொருந்தும். பிசினஸ் செய்கிறீர்களா? உங்கள் விற்பனையில் சிகரம் காணப் பொசிஷனிங் ராஜபாட்டை போடும்: வேலையிலும், வாழ்க்கையிலும் உயரவேண்டுமா? பொசிஷனிங் மூலம் தனித்துவம் காட்டுங்கள்.
வெற்றிமீது வெற்றி வந்து உங்களைச் சேர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


நன்றி - த இந்து

Tuesday, August 11, 2015

விசாரணை -வெற்றி மாறன் -ன் அடுத்த ஹிட்- முன்னோட்டம்

சட்டத்தின் ஆட்சியையும், எல்லா மக்களுக்கும் நீதியையும் உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு, உண்மையில் என்ன நிலையில் இருக்கிறது? அதன் கைகளில் அப்பாவிகள் சிக்கினால் என்ன ஆவார்கள் என்பதை ‘விசாரணை’ படத்தின் டிரைலரே ரத்தம் உறையச் சொல்லிவிடுகிறது. உலகப்புகழ் பெற்ற வெனிஸ் உலகத் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிடவிருக்கும் 20 படங்களில், வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’-யும் இடம்பெற்றுள்ளது. போட்டிப் பிரிவில் வெனிசில் திரையிடப்படும் முதல் தமிழ்ப் படம் என்பதே விசாரணை குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
கோவையிலிருந்து 1983-ல் ஆந்திர மாநிலம் குண்டூர் சென்று பொய்யான குற்றச்சாட்டில் அப்பாவியாய் சிக்கிய மு.சந்திரகுமாரின் கதை இது. மூன்று நண்பர்களுடன் சட்டவிரோதக் காவலில் 13 நாட்கள் காவலர்களால் சித்திரவதை செய்யப்பட்ட மு.சந்திரகுமார் என்ற ஆட்டோ சந்திரன், தன் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘லாக்கப்’ நாவல் தான் ‘விசாரணை’யாக மாறியுள்ளது.
“இந்தியாவில் காவல் துறையினரால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கானவர்களின் அனுபவம் இது. எத்தனையோ துயரங்கள் பதிவாகாமலேயே போயிருக்கின்றன. சந்திரகுமார் தனது 13 நாள் சிறை அனுபவங்களை ஒரு டைரி போல எழுதியதன் மூலம் ஒரு காலகட்டத்தின் பதிவாக மாற்றியுள்ளார். அந்த நாவலில் இருந்த உண்மை என்னை ஈர்த்தது. ஆடுகளம் முடித்த பிறகு, ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த இடைவெளியில் பெரிய ஹீரோவை மையமாக வைத்துக் கதை பண்ணாமல் யதார்த்தமாக ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். அப்போது எனது நண்பர் பரிந்துரைத்த புத்தகம்தான் ‘லாக்கப்’.” என்றார் இயக்குநர் வெற்றி மாறன்.
ஒரு தேர்ந்த எழுத்தாளரின் கூர்மையுடன் எழுதப்பட்டிருக்கும் ஆட்டோ சந்திரனின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. இளம் வயதிலேயே வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு சென்னை, மதுரை, தூத்துக்குடி என்று அலைந்த இவருக்கு வாழ்வையே திருப்பிப் போடும் அனுபவம் நேர்ந்தது ஆந்திராவில். குண்டூரிலிருந்து 42 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு தெருவோர உணவு விடுதியில் பரிசாரகனாக வேலை கிடைத்தது. தினப்படிக் கூலி என்பது அவருக்கும் அவரைப் போன்ற நாடோடி நண்பர்களுக்கும் சந்தோஷமான விஷயமாக இருந்துள்ளது.
“நாள் முழுவதும் வேலை. அதற்கப்புறம் சினிமா பார்ப்பது, இரவில் நண்பர்களுடன் எதிர்காலத்தைப் பற்றி கனவுகளுடன் அசைபோடுவது என்று இருந்தபோதுதான் திருட்டுவழக்கில் என்னையும் மூன்று நண்பர்களையும் கைது செய்தார்கள். கேட்பதற்கு நாதியற்ற அநாதைகள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளை காவல்துறை எப்படி நடத்துகிறார்களோ அதேபோலவே நாங்களும் நடத்தப்பட்டோம். 13 நாட்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிதைக்கப்பட்டோம். நாங்களாகப் போராடித்தான் நீதிமன்றத்தின் பார்வைக்கே செல்ல முடிந்தது. பத்துக்கு பத்து அடி பரப்பளவே கொண்ட சின்ன அறையில் மார்ச் மாத வெயிலில் வழியும் வேர்வையுடன் மிருகங்கள் போல அடைக்கப் பட்டிருந்த அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. எங்களை ஜாமீன் எடுப்பதற்கோ, எங்களைத் தேடி காவல் நிலையத்துக்கு வருவதற்கோ யாரும் கிடையாது. அந்தக் கதையைத்தான் என் முதல் நாவலாக எழுதினேன்” என்கிறார் ஆட்டோ சந்திரன்.
நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகும் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையைக் கழித்துள்ளார் சந்திரன்.
இவர் எழுதிய 160 பக்கம் கொண்ட லாக்கப்புக்கு 2006-ம் ஆண்டில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அங்கம் வகிக்கும் மனித உரிமைக் கண்காணிப்பகம் ‘சிறந்த மனித உரிமைகள் ஆவணம்’ என்ற விருதைக் கொடுத்தது.
தமிழ் மட்டுமல்ல இந்திய வெகுஜன சினிமாக்கள் அனைத்திலும் காவல் துறையினர் கேலியாகவும் ஊழலாகவுமே சித்திரிக்கப்படுகிறார்கள். ஆனால் அதேவேளையில், என்கவுண்டர் செய்யும் போலீஸ் நாயகர்கள் கடவுள்களாகச் சித்தரிக்கப்பட்டு பெரும் வெற்றி அடைவதும் சாத்தியமாகவே உள்ளது. மோதல் சாவுகள் மட்டுமல்ல; காவல் கொலைகளும், சித்திரவதைகளும், காவல் நிலையத்தில் நடக்கும் வல்லுறவுச் சம்பவங்களிலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் எளிய மக்களாகவே இருக்கின்றனர். சமீபத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 20 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் ‘விசாரணை’ டிரைலரைப் பார்க்கும் போது ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்கவே முடியாது.
ஒரு நாவலின் கதையை எடுத்து திரைக்கதையை உருவாக்கி, அதை எழுதிய எழுத்தாளருக்கு சரியான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளார் வெற்றி மாறன். தமிழ் சினிமாவில் அரிதான போக்கு இது. விசாரணை திரைப்படத்தின் இறுதியில் கதாசிரியரைப் பற்றிய ஆவணப்படமாக ஒன்றரை நிமிடப் படம் ஒன்றை சேர்த்திருக்கிறார்கள். “தமிழ் சினிமாவில் எழுத்தாளனுக்குச் செய்யப்பட்டிருக்கிற ராஜமரியாதை இது” என்கிறார் ஆட்டோ சந்திரன்.
நடிகர் தனுஷும், வெற்றி மாறனும் ‘காக்கா முட்டை’-க்குப் பிறகு தயாரிப்பாளர்களாக இணையும் இரண்டாவது திரைப்படம் இது. இரண்டு திரைப்படங்களும் உலகத் திரைப்படவிழாக்களுக்குச் சென்ற பெருமையையும் பெற்றுவிட்டன.
இப்படத்தின் மூலம் வெற்றி மாறன், காவல் நிலையச் சுவர்களுக்குப் பின்னர் இருக்கும் குரூரமான யதார்த்தத்தையும், சொல்லப்படாத குமுறல்களையும் விசாரணை செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு நிஜமான அரசியல் திரில்லருக்கான நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது. இந்தப் படம் மூலம் அது சாத்தியப்படலாம்.

நன்றி- த இந்து

Sunday, April 19, 2015

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடியாத தலைவன் - ஒரு சுருக் பார்வை

பிரபாவதி - ஜானகிநாத் போஸ் தம்பதியரின் 9-வது மகனாக 23.1.1897-ல் கட்டாக் நகரில் பிறந்தார் சுபாஷ் சந்திர போஸ். அவருடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 14 பேர். வழக்கறிஞரான அவருடைய தந்தை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க சுபாஷை அனுப்பிவைத்தார். அங்கு படித்துப் பட்டம் பெற்ற சுபாஷ், இந்திய ஆட்சிப் பணிக்கான சிறப்புத் தேர்வையும் (ஐசிஎஸ்) எழுதி தேர்ச்சி பெற்றார். ஆனால், பிரிட்டி ஷாரிடம் அதிகாரியாகப் பணிபுரிய விருப்பம் இல்லை. தேச விடுதலைக்காக காங்கிரஸில் சேர்ந்தார்.
சுபாஷ் 1923-ல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரானார். 1924-ல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரானார். 1930-ல் கல்கத்தா நகர மேயரானார். பூரண சுதந்திரம்தான் லட்சியமாக இருக்க வேண்டும். அதற்காக எந்த வழிமுறையையும் கையாளலாம் என்பது சுபாஷின் நிலைப்பாடு. இது காந்திக்கும் சுபாஷுக்கும் இடையே பிளவு ஏற்பட வழிவகுத்தது.1938-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார். எனினும், காந்தியின் செல்வாக்கை மீறி அவரால் நீடிக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியைவிட்டு விலகினார். 1939-ல் காங்கிரஸில் இருந்து கொண்டே அனைத்திந்திய பார்வர்டு பிளாக் அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார்.
சுபாஷின் பேச்சுகளும் எழுத்துகளும் தீவிரக் கனல்கொண்டிருந்ததால், பிரிட்டிஷ் அரசு அவரை 1940-ல் கல்கத்தாவிலேயே வீட்டுக்காவலில் சிறை வைத்தது. மாறு வேஷத்தில் வீட்டிலிருந்து தப்பிய அவர், ஆப்கன், சோவியத் ஒன்றியம் என ஜெர்மனி சென்றார். ஹிட்லரைச் சந்தித்தார். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற ராணுவ உதவியைக் கோரினார். ஐரோப்பிய அரசியல் மாற்றங்கள், ஜெர்மனி - இத்தாலி - ஜப்பான் மீது அவருக்கு ஓர் ஈர்ப்பை உண்டாக்கியிருந்தன.
1934-ல் அவர் சந்தித்த அயல்நாட்டுப் பெண்ணான எமிலி ஷென்கல் - போஸ் இணையருக்கு இதே காலகட்டத்தில் குழந்தை பிறந்தது. அனிதா போஸ். 1940-களின் தொடக்கத்தில் தொடர்ந்த ஜப்பானிய வெற்றிகள், போஸை ஜப்பானை நோக்கி நகர்த்தியது. ஜப்பான் சென்றார் போஸ். ஜப்பானிய ஆதரவுடன் 1942-ல் ‘ஆசாத் ஹிந்த் ஃபௌஜ்’ என்னும் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் படையில் இருந்துகொண்டு ஜப்பானியர்களுக்கு எதிராகப் போரிட்டு, போரில் கைதிகளாகப் பிடிபட்ட இந்தியர்களையும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற கீழை நாடுகளில் வாழ்ந்த இந்தியர்களை குறிப்பாகத் தமிழர்களைத் தனது படையில் வீரர்களாகச் சேர்த்துக்கொண்டார்.
ஜப்பானிய ராணுவத் துணையுடன் களம் இறங்கிய சுபாஷின் படைகள், இந்தியாவை மீட்கக் களத்தில் இறங்கின. மணிப்பூர் மாநிலம் இம்பால் வரையில் முன்னேறி, நாட்டின் மூவர்ணக் கொடியை அங்கே பறக்கவிட்டன. ஆனால், தொடர்ந்து அடுத்தடுத்த தாக்குதல்களில் கடுமையான சேதத்தைச் சந்தித்த படைகள் தோல்வியைக் கண்டன. சில ஆயிரம் பேர் இன்னுயிர் நீத்தனர். ஏனையோர் போர்க் கைதிகளாகச் சிக்கினர்.
உலகப் போரில் ஜப்பானின் வீழ்ச்சிக்குப் பின் நிலைமை மேலும் மோசமானது. 18.8.1945-ல் பாங்காக்கிலிருந்து டோக்கியோ செல்ல விமானத்தில் புறப்பட்டார் போஸ். அந்த விமானம் விபத்தில் சிக்கி போஸ் இறந்ததாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 48. ஆனால், பலர் இதையெல்லாம் நம்பத் தயாராக இல்லை. அவர் என்றாவது வருவார், மாறுவேஷத்தில் வாழ்கிறார் - என்றாவது அரசியல் அரங்கின் மையத்துக்குத் திரும்புவார் என்று ஏராளமான நம்பிக்கைகள்... பெயர் சுபாஷ் என்றாலும் நேதாஜி என்பதே பின்னாளில் நிலைத்துநின்றது. நேதாஜி என்றால், தலைவர் என்று அர்த்தம்!

thanx -   the hindu

Thursday, February 12, 2015

தமிழ் சினிமா நாயகிகள் - கிளாமர்- கவர்ச்சி-நடிப்பு - யார் டாப்?ஒரு அலசல்

a
கதாநாயகிகளின் பேட்டி என்றால் எப்போதுமே ஒரு கவனம் கிடைக்கிறது. அதற்குக் காரணம் அவர்களது நடிப்புத்திறனை மீறி அவர்கள் மீது படிந்திருக்கும் கிளாமர் பிம்பம்.
நம்பர் ஒன் நடிகை ஆக வேண்டும் என்று அறிமுக நடிகைகள் பேட்டிகள் கொடுத்த காலம் ஒன்றிருந்தது. ஆனால், தற்போது அதையே கொஞ்சம் திருத்தி ரஜினி, கமல், அஜித், விஜயுடன் நடிக்க வேண்டும். அல்லது அவர்களது படங்களில் தலைகாட்டினால்கூடப் போதும் என்பார்கள்.
முன்பெல்லாம் படம் முழுக்க கதாநாயகிகள் வருவார்கள். அவர்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்குப் போதிய முக்கியத்துவம் இருக்கும். ராதிகா, குஷ்பூ காலகட்டத்தில் ஒரு கதாநாயகிக்கு ஒரே நடிகருடன் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.
அதற்குப் பிறகு சிம்ரன், ஜோதிகா நடிக்க வந்த தருணத்தில் கதாநாயகியே கவர்ச்சிப் பொருள் ஆனார். இப்போது அதில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு நான்கு காட்சிகள், மூன்று பாடல்கள்தான் கதாநாயகிக்கு என்ற நிலை வந்துவிட்டது.
கதாநாயகிக்கென்று கஷ்டங்கள் இருக்கின்றன. அதனால்தான் ஒரு கட்டத்தில் பணம் மட்டுமே குறிக்கோள் என்று கிடைத்த படங்களில் கவர்ச்சிக்குக்கூட மறுப்பு சொல்லாமல் தாராளம் காட்டி நடிக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இப்போது கதாநாயகி பாத்திரங்களுக்கான ஆயுள் குறைவு. மூன்று வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நீடிப்பது கடினம் என்று சொல்லப்படுகிறது.
காத்திருப்பு அவசியம்
இந்தச் சவாலை மீறி கதாநாயகிகள் பயணிக்கக் காத்திருப்பு அவசியமாகிறது. ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, எங்கேயும் எப்போதும் ஆகிய மூன்று படங்கள் அஞ்சலியின் சினிமா வாழ்க் கையில் மைல்கற்களாக அமைந்தன.
ஒரு நாயகிக்கு மிகச் சில வருடங்களில் இப்படிப்பட்ட அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைப்பது அபூர்வம். வழக்கமான கதாபாத்திரங்களுக்கிடையில், இப்படிக் கிடைக்கும் வாய்ப்பை அஞ்சலி மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.
பூ படத்துக்குப் பிறகு நல்ல கதாபாத்திரத்துக்காகக் காத்திருந்த பார்வதி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகே மீண்டும் தமிழில் நடித்தார். ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மரியான்’ படங்களில் நடித்த பார்வதி இப்போது கமலுடன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடித்துள்ளார். திறமையிருந்தாலும் கதாநாயகிகளுக்குக் காத்திருப்பு அவசியம் என்பதை அஞ்சலியும் பார்வதியும் நமக்கு உணர்த்துகிறார்கள்.
இந்தத் தருணத்தில் கிளாமர் என்பது ஒரு கட்டத்தில் போரடித்துவிடும். ஆனால், நடிப்பு என்பது எப்போதும் போரடிக்காது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் காலத்துக்கும் கதாநாயகியை யாரும் மறக்க முடியாது.
அதனால்தான் த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, ஜோதிகா என அனைவரும் பெண்களை மையப்படுத்தும் படங்கள் கிடைத்தால் இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறார்கள். ‘நீ எங்கே என் அன்பே’ படத்தில் கர்ப்பிணியாக நடிக்காத நயன்தாரா ‘மாயா’ படத்தில் ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்கிறார்.
‘ராணி ருத்ரம்மா தேவி’ சரித்திரப் படத்தில் தன் நடிப்புத் திறமையை நிரூபிக்க உள்ளார் அனுஷ்கா. நல்ல படத்தில் நடிப்புக்குத் திரும்ப வேண்டும் என்று காத்திருந்த ஜோதிகா ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ மலையாளப் பட மறு ஆக்கத்தில் நடித்து முடித்திருக்கிறார். த்ரிஷா மூன்று பெண்களை மையமாகக் கொண்ட ‘போகி’ படத்தில் நடிக்கிறார்.
விருது நடிகை பட்டம்
இவர்களது அழுத்தமான பாதை ஒருபுறம் இருக்க, இன்னும் சில கதாநாயகிகள் விநோதமாகத் திரையை அணுகுகிறார்கள்.
தேசிய விருது வாங்கி விட்டால் “விருது நடிகை” என்று பெயர் வந்துவிடுமாம். அதன் பிறகு வணிகப் பட வாய்ப்புகள் வராதாம். இப்படிக் கருதுபவர்களும் உண்டு.
பருத்தி வீரன் படத்தில் நடித்ததற்காகத் தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. கருத்த முகம், அசாதாரண உடல் மொழி, கண்களால் பேசும் அழகு என நடிப்பில் ஜொலித்தார். ஆனால் தேசிய விருது வாங்கியவுடன் மளமளவென கிளாமராக நடித்துத் தன்னை கிளாமர் நடிகை என நிரூபித்துக்கொண்டார். ஆனால் இப்போதும் பிரியாமணியைப் பருத்தி வீரன் படத்தைச் சொல்லித்தான் அடையாளம் கண்டுகொள்கிறோம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா கிராமத்துப் பெண்ணாக நடித்து, ஒரே படத்தில் ஓஹோ என வளர்ந்தார். நகரத்துப் பெண்ணாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காததால் வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன.
பிம்பத்தைத் தாண்டி
நடிகைக்கான அடையாளம் என்பது நடிப்புதானே தவிர கவர்ச்சி இல்லை என்பதைச் சொல்லும் நடிகைகள் இங்கே வெகு சிலரே. ‘யுத்தம் செய்' படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனும், ‘நந்தலாலா’ படத்தில் ரோகிணியும் மொட்டை போட்டு நடித்தார்கள். ஆனால், கதாநாயகிகள் அப்படித் தங்களை மாற்றிக்கொள்வதில்லை.
ஒரு படம் தயாரித்து முடித்து வெளியிடத் தடுமாறும்போது அந்தப் படத்தில் நடித்த சில கதாநாயகர்கள் பணம் கொடுத்து உதவுகிறார்கள். சம்பள பாக்கி இருந்தால் சில நேரம் விட்டுக் கொடுக்கிறார்கள். படம் நஷ்டம் அடைந்தால்கூடத் திருப்பித் தர நடிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் ஒரு கதாநாயகியைக் காட்ட முடியுமா? பாடல் வெளியீட்டு விழாக்கள் உள்ளிட்ட படத்தின் விளம்பர நிகழ்வுகள் நடிகைகள் இல்லாமலே நடக்கின்றன. ஆனால் இதற்கு நடிகைகள் மட்டும்தான் காரணமா என்பதையும் யோசிக்க வேண்டும்.
இந்தியில் ‘குயின்’ படத்தில் நடித்த கங்கணா ரணவத் அந்தப் படத்துக்கான கூடுதல் வசனங்களை எழுதியிருக்கிறார். ஆனால், தமிழில் அப்படியொரு மாற்றம் இன்னும் வரவில்லை என்பது கவனிக்க கூடிய உண்மை. சினிமா பற்றிய அக்கறையோ, அர்ப்பணிப்பு உணர்வோ பல நடிகைகளுக்கு இல்லை.
அபூர்வமாக ஒரு சில நடிகைகள் சினிமாவை நேசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியது. மற்ற நடிகைகள் எப்போது இதைப் புரிந்துகொள்வார்கள்?

thanx - the hindu

Tuesday, January 03, 2012

என் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்

http://www.viduppu.com/photos/full/couples/jothika_Diya_Birthday002.jpg 

24 வயசுலயே எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க, ஆனா பாருங்க எனக்கு செவ்வாய் தோஷம், அதனால  ஜாதகம் எதுவும் அவ்வளவு சீக்கிரம் அமையலை.. அதனால பெண் பார்க்கும் படலம் நடந்தது நடந்தது நடந்துட்டே இருந்தது..

18 பெண்கள் பார்த்தோம் (தேன்) அதுல 12 பேர் என்னை ரிஜக்ட் பண்ணிட்டாங்க (ஹி ஹி ) அந்த டீட்டெயில்ஸ்  எல்லாம் கூகுள் ல போய் என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் பாகம் 1,  பாகம் 2 ல போய் பார்த்துக்குங்க 

2001 டிசம்பர் மாசம் 9ந்தேதி எனக்கு மேரேஜ் ஆச்சு, பொண்ணு ஈரோடு தான்.. பேரு அரசி.. ( நான் சேவகன் அவ்வ்வ்)

2003 ஜனவரி 3 ந்தேதி  ஈரோடு கொல்லம்பாளையம் ஜோதி ஹாஸ்பிடலில் எனக்கு ( எங்களுக்கு) பொண்ணு பிறந்தது ..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS6BdBhyvbrtntMRDZaPD1qL_yXxGau8hOlNhgsIx395FPCaL37M-7ojM9WmkYcFa85E4DroD0UaXN6tIsQsB0Jxrv_IGEF1VFZDy-TYLQA0vXiPzHS_nCckCElIEX2EKkDHpdWtptiq26/s1600/work.jpg

சொந்தக்காரங்களும், சில நண்பர்களும் பொண்ணா?ன்னு கேள்விக்குறியோட கேட்டாங்க, என்னை பொறுத்தவரை குழந்தை என்பதே வரம் தான், அதுல பையன் என்ன ஏ கிரெடு? பொண்ணு என்ன பி கிரேடு?

தேவதை, மகாலட்சுமி என பொண்ணு பிறந்தா நாம கொண்டாடனும்.நாங்க கொண்டாடறோம்.

அபிராமின்னு பேர் வெச்சோம்..  அப்புறம் அபிராமி ஸ்ரீன்னு  ஸ்கூல்ல சேர்த்தாச்சு.. நான்  மற்ற புக்ஸ்ல என் சொந்தப்பேரிலும் ( சென்னிமலை சி.பி செந்தில்குமார்)பெண்கள் பத்திரிக்கைகளில் பாப்பா பேர்ல தான் எழுதுவேன் ( ஈரோடு எஸ் அபிராமி ஸ்ரீ)

பாப்பா செம சுட்டி.. இப்போ 3 வது படிக்கறா.. என்னை எப்பவும் ஒரே மாதிரி கூப்பிடறதே இல்லை.. சில சமயம், அப்பா , பல சமயம் டாடி , கோபமா இருந்தா.  டேய் செந்தில் ஹி ஹி 

எப்படி கூப்பிட்டாலும் சந்தோஷம் தான்.. ஏன்னா மழலை செல்வம் இல்லாம பல தம்பதிகள் கோயில், ஹாஸ்பிடல் என அலைந்து கோண்டு இருப்பதை பார்க்கறோம்.. அதனால தவம் செய்யாமல் கிடைச்ச வரமா பாப்பாவை கொண்டாடறோம்... 


http://www.baby-pictures.org/wp-content/uploads/2010/05/baby-kid-child-cute-cutie.jpeg
அவளுக்கு இன்று 9 வது பிறந்த நாள்.. என்னுடன் சேர்ந்து நீங்களும் வாழ்த்தலாம்..

Saturday, January 01, 2011

புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள்

health-studies.jpg (400×314)
1. தினமும் அதிகாலை 5 மணிக்கு துயில் எழ வேண்டும்.

2. காலைக்கடன்களை முடித்த பிறகு வெறும் வயிற்றில் 4 டம்ளர் தண்ணீர் குடுக்க வேண்டும்.

3. அருகில் உள்ள மைதானத்தில் 4 கி மீ நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

4. நேரம் இருந்தால் யோகா,மூச்சுப்பயிற்சி (பிராண யாமம்) உடல்பயிற்சி செய்ய வேண்டும்.

5.குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும். (சுடுநீரில் குளித்தால் சோம்பலும் ,தூக்கமும் வரும்)

6.காலை உணவை தவிர்க்கக்கூடாது.சிலர் பட்டினி இருந்தால் மெல்லிய தேகம் கிடைக்கும் என தவறாக நினைக்கிறார்கள்.

7.உணவு சாப்பிடும்போது பாதி வயிறு மட்டும் சாப்பிட்டு, கால் வயிற்றில் தண்ணீர் குடித்து கால் வயிற்றை காலியாக விட வேண்டும்.

8.அலுவலகத்தில் வேலை செய்யும்போது பர்சனல் செல் அழைப்புகளை தவிர்க்க வேண்டும்.

9.மதிய உணவில் மோர் சேர்த்துக்கொள்வது நல்லது.

10 இரவில் 8 மணியிலிருந்து 9 மணிக்குள் டின்னரை முடித்து விட வேண்டும்.
health.jpg (378×311)
11. இரவு 10 மணிக்கு தூங்கி விட வேண்டும். செகண்ட் ஷோ சினிமா பார்ப்பது,தூக்கத்தை கெடுக்கும் காரியங்கள் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.

12. பெரியவர்களுக்கு 7 மணி நேரத்தூக்கமும் குழந்தைகளுக்கு 9 மணி நேரத்தூக்கமும் அவசியம்.

13. சைவ உணவே சிறந்தது. அசைவ உணவு மிருக உணர்வை,பொறாமை குணத்தை ,கோபத்தை அதிகமாக்கும் சக்தி படைத்தது. தவிர்க்க முடியவில்லை எனில் குறைக்க முற்சிக்கவும்.

14. குடும்பத்துடன் பேச நேரம் ஒதுக்குங்கள்.குறிப்பாக குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் செலவு செய்யுங்கள்.

15. வாரம் ஒரு முறை விடுமுறை நாளில் குடும்பத்துடன் வெளியே செல்லவும்.அது நண்பர் வீடோ, பார்க்கோ,பீச்சோ எதுவாகவும் இருக்கலாம்.

16.ஈகோ பார்ப்பதை விட்டுத்தள்ளுங்கள்,வாக்குவாதம் செய்வதை தவிருங்கள்.

17. உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் .6 மாதத்திற்கு ஒரு முறை பற்களை சுத்தம் செய்ய பல் மருத்துவரை அணூகவும்.முழு உடல் பரிசோதனையை 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு வருடத்துக்கு ஒரு முறை செய்வது நல்லது.

18. பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து வாரம் குறைந்த பட்சம் ஒரு புக்காவது படிக்கவும்.

19.பட்டி மன்றம்,நகைச்சுவை அரங்கம் ,விழாக்கள்,ஊர் பண்டிகைகள் இவைகளில் கலந்து கொள்வது மனதை லேசாக்கும்.

20.பிறந்தநாள்கள் ,பார்ட்டிகள் இவற்றில் அநாதை ஆசிரமங்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்வது நல்லது.

டிஸ்கி - மொக்கைப்பதிவு போடும் நானே நல்ல பதிவு போடும்போது நல்ல பதிவு போடும் நீங்கள் இன்னும் சிறந்த பதிவுகளாக போடலாமே...

Thursday, December 02, 2010

ஈரோடு ஹாஸ்பிடலில் நடந்த நூதன மோசடி

http://www.aintreehospitals.nhs.uk/Library/2008_images/Operation%20taking%20place.jpg 
20 நாட்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் இது.சேலம் நகர தமிழ் முரசு

பத்திரிக்கையின் சப் எடிட்டர் திரு வேல்முருகன் அவர்களிடமிருந்து எனக்கு
 ஒரு ஃபோன் வந்தது.”செந்தில்,திருச்சில இருந்து நம்ம நண்பர் ஒருத்தர்
ஒரு மேரேஜ் அட்டெண்ட் பண்ண ஈரோடு வந்திருக்கார்.அவரும்,அவரது
மனைவியும்,மேரேஜ் முடிஞ்சி திருச்சி திரும்பறப்ப அவருக்கு திடீர்னு
ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு,இப்போ அவங்க ஈரோடு மூலப்பாளையம்
பக்கத்துலதான் இருக்காங்க,உடனே போய் பாருங்க,அவங்களுக்கு ஹெல்ப்
பண்ணுங்க” என்றார்.

நான் உடனே சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தேன்.108க்கு ஃபோன் போட்டிருக்கிறார்கள்.எங்கேஜ்டு டோனாக தொடர்ந்து வரவே  வேறு பிரைவேட் ஹாஸ்பிடலில் சேர்க்க முடிவு செய்தோம்.அருகில் சவீதா ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப் அருகே செங்குந்தர் ஸ்கூல் பக்கத்தில்
விஜயா ஹாஸ்பிடலில் சேர்த்தோம்.டாக்டர் செக் பண்ணி பார்த்து விட்டு
யுனிவர்சல் ஹாஸ்பிடல் என ஒரு ஹாஸ்பிடல் அருகில் இருப்பதாகவும் அங்கே சேர்க்கும்படியும்அறிவுறுத்தினார்.அதன்படியே செய்தோம்.பேஷண்ட் திருச்சி நகர தமிழ் முரசு

பத்திரிக்கையின் எடிட்டர்.அவரது மனைவி திருமணத்துக்கு வந்ததால் கழுத்து நிறைய நகையுடன் இருந்தார்.அவரது பகட்டான தோற்றத்தை பார்த்து டாக்டர் என்ன நினைத்தாரோ? (வேற என்ன நினைத்திருப்பார் ,கறந்துடலாம்னு நினைச்சிருப்பாரு). என்னை தனி அறைக்கு அழைத்தார்.

“ சார்,பேஷண்ட்டுக்கு மைல்டா ஹார்ட் அட்டாக் வந்திருக்கு,இதுக்கு உடனே ட்ரீட்மெண்ட் பண்ணனும்.ரூ 3000 க்கு ஒரு ஊசி போடனும்.இன்னொண்ணு ரூ 8000க்கு இருக்கு,லாஸ்ட்டா ரூ 25,000 க்கு ஒரு ஊசி இருக்கு.இதுதான் சேஃப்.நீங்க டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லுங்க.என்றார்.நான் நண்பரின் மனைவியிடம் போய் நிலைமையை சொன்னேன்.அவர் அழுதுகொண்டே
இருந்தார்.எதுவும் பேசக்கூடிய நிலையிலோ,முடிவு எடுக்கும் சூழ்நிலையிலோ அவர் இல்லை.இந்த மாதிரி நெருக்கடியான நேரத்தில் என்ன செய்வது என்று எனக்கும் தோன்றவில்லை.அவர் பணம் ஏதும் எடுத்து வரவில்லை
நண்பரின் பர்சில் ஏ டி எம் கார்டு எதுவும் இல்லை.எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து

நான் டாக்டரிடம் “சார் ,அவரது சொந்தக்காரங்க எல்லோரும் திருச்சியில்தான் இருக்காங்க.எனவே இப்போதைக்கு ரூ 3000 ஊசியே போடுங்க..ஓரளவு நிலைமை சரி ஆனதும் அவங்க திருச்சி போய்ட்ரீட்மெண்ட் பார்த்துக்குவாங்க.” என்றேன்.

உடனே டாக்டருக்கு கோபம் வந்து விட்டது”.எனக்கென்ன?நீங்க சொல்ற ஊசி போடறேன்.”என்று சொல்லி விட்டு ஐசி யூனிட்டுக்கு சென்று விட்டார்.அரை மணி நேரம் கழித்து பேஷண்ட்டை போய் பார்த்தோம்.ஸ்லீப்பிங்க் டோஸ் கொடுக்கப்பட்டிருந்ததால் அவர் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்.அவருக்கு வயது 47.இதற்கு முன் ஹார்ட் அட்டாக் வந்ததே இல்லையாம்.

சிறிது நேரம் கழித்து டாக்டர் அழைத்தார்,” சார்,கே எம் சி ஹெச் (கோவை மெடிக்கல் செண்ட்டர்) கொண்டுபோயிடுங்க.அதான் பெஸ்ட்.இந்த ஃபார்ம்ல கையெழுத்து போடுங்க ,அந்தம்மா கிட்டேயும் சைன் வங்கனும் என்றார்.

அவர் இன்னும் அழுது கொண்டே இருந்தார்.எனக்கு டாக்டரின் நோக்கம் தெளிவாக விளங்கி விட்டது. ஹாஸ்பிடல்களுக்குள் ஒரு லிங்க் இருக்கிறது.ஒரு டாக்டர் இந்த ஹாச்பிடலில் சேர்த்த் விடுங்கள் என்றால் அவருக்கு ஒரு கமிஷன் உண்டு.இப்படி மாற்றி விடுவதால் நமக்கு டாக்டர் மேல் நம்பிக்கை வரும்.மெண்ட்டல் டென்ஷன் ஜாஸ்தி ஆகும்மேட்டர் சீரியஸ் என செலவு செய்ய தயார் ஆகி விடுவோம். நான் சார் பேஷண்ட் கண் விழிக்கட்டும் ,அது வரை இங்கேயே இருக்கொம் “என்றேன்.

3 மணி நேரம் கழித்து பேஷண்ட் கண் விழித்தார்.நார்மல் நிலைக்கு கிட்டத்தட்ட வந்து விட்டர்ர், இப்போதான் அவரது மனைவிக்கு திருப்தியே,அழுகையை நிறுத்தி சகஜ நிலைக்கு வந்தார். டிஸ்சார்ஜ் ஆகி திருச்சி கிளம்பினர்.

இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேன்ண்டிய பாடங்கள்

1.  35 வயது நிரம்பியவர்கள் கம்ப்ளீட் பாடி செக்கப் செய்து கொள்வது நல்லது.

2.  எப்போதும் பேங்க்கில் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பில் வைத்திருக்கவேண்டும்.   ஏ டி எம் கார்டு கைவசம் இருக்க வேண்டும்.

3  .கல்யாணத்துக்கு வெளியூர் போகும்போது நகைகள் அதிகம் அணிய வேண்டாம்.கண்ணை  உறுத்தும் வகையில் அணிவதை தவிர்க்கனும்.

4.  பிரைவேட் ஹாஸ்பிடல் சேஃப்டி என்ற எண்ணத்தை அகற்றிக்கொள்ள வேண்டும்.

5.  40 வயதுக்குப்பிறகு தனியே வெளியூர் பயணம் செல்வதை தவிர்க்கனும்.

6.  சிக்கலான சூழ்நிலைகளில் பதட்டப்படாமல் முடிவு எடுக்க மனதை பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும்.

டிஸ்கி - பின் விசாரித்த வகையில் ஈரோட்டில் பல ஹாஸ்பிடல்களில் இந்த மாதிரி லிங்க் இருப்பதாகவும்,அட்மிட் பண்ணி 2 மணி நேரத்தில் அந்த ஹாஸ்பிடல் போ, இந்த ஹாஸ்பிடல் போ என பந்தாடப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.இது பற்றி விசாரனைகள் நடந்து நடவடிக்கை எடுக்கப்பட்டால் நல்லது.ரமணா படத்தில் வருவது போல் நடக்கும் ஹாஸ்பிடல் கொள்ளைகளைதடுக்க நம்மால் முடிந்தவரை பாடுபடுவோம்.

Thursday, November 25, 2010

நல்ல சினிமா vs நொள்ள சினிமா

http://tamildigitalcinema.com/wp-content/gallery/manmathan_ambu/manmathan-ambu-1.jpg
எப்படிப்பட்ட சினிமா வர வேண்டும் என பார்ப்பதற்கு முன் எப்படிப்பட்ட் சினிமா வந்து கொண்டு இருக்கு என்பதை பார்ப்போம்.

1.மதுரை தான் கதைக்களன் - ஹீரோ,வில்லன் அனைவருக்கும் வேலையே யாரையாவது வெட்டுவதுதான்,எப்போதும் கையில் அரிவாளோடு அலையனும்.படம் ஃபுல்லா ரத்தம் தெறிக்கோனும்.இடை இடையே ஒரு பாட்டு,ஒரு குத்துப்பாட்டு,ஒரு ரீ மிக்ஸ் பாட்டு.

2.காதல் கோட்டை ஹிட் ஆனாலும் ஆனது,அந்த படம் வந்த சமயத்தில் காதல் என்ற வார்த்தையை வைத்து 47 படங்கள் வெளியானது.நம்ம ஆட்களிடம் உள்ள கெட்ட பழக்கமே “போல செய்தல்”.  அதாவது ஒரு படம் ஹிட் ஆனால் அதே போல் தொடர்ந்து படம் தருவது.அகத்தியனே மறுபடி அதே ஃபார்முலாவில் காதல் கவிதை த்ந்தாரே?

3.சமீப காலமாக க்ளைமாக்சில் ஹீரோவை சாகடிப்பது தொடர்கிறது.ராவணன்,காதல் சொல்ல வந்தேன்,பாணா காத்தாடி.. என நீள்கிறது பட்டியல்.எதற்கு இந்த போலியான அனுதாப ஒட்டு வரவழைக்கும் போக்கு?கதை அனுமதித்தால் மட்டுமே ஹீரோ சாக வேண்டும்.வலுக்கட்டாயமா சாகடிக்ககூடாது.

4.ஹீரோ ஒரு ஊரில் இருப்பார்,ஏதோ வேலையாகவோ அல்லது வேலை வெட்டி இல்லாமலோ வேற ஒரு ஊருக்கு போவார்,அங்கே ஒரு ரவுடி அல்லது தாதாவின் கொட்டத்தை அடக்குவார்.இந்த ஃபார்முலாவில் விஜய்,விஷால் உட்பட பலரும் பல படங்களில் நடித்து விட்டார்கள்.


எப்படிப்பட்ட சினிமா வர வேண்டும்?

1.இலக்கியத்துல இருந்து கதை எடுக்கனும்.ஏராளமான நாவல்கள் இருக்கு.அதற்கு திரைக்கதை எழுதி படம் எடுக்கனும்.எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் ,அவர்களிடம் இருந்து கதை வாங்கனும்.அவர்களுடன் அமர்ந்து திரைக்கதை உருவ்வாக்கனும்.

2.நிறைய இயக்குநர்கள் கதை ,திரைக்கதை உட்பட அனைத்து பொறுப்புகளையும் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.அதெல்லாம் டி ஆர் கே பாக்கியராஜ் காலத்தோடு சரி.இனிமே ஒவ்வொரு இலாகாவுக்கும் ஒரு ஆள் தனியா செயல்படனும்.திரைக்கதை அமைக்க பெரிய டீம் வேணும்,அவஙக் பேரை டைட்டில்ல போடனும் (அப்போதான் அவங்க ஒழுங்கா ஒர்க் பண்ணூவாங்க)

3.விகடன் வார இதழில் கரையெல்லாம் செண்பகப்பூ எனும் தொடர் சூப்பர்ஹிட் ஆனது,அது சுஜாதாவின் சம்மதத்தின் பேரில் பிரதாப்போத்தன் ஹீரோவாக நடிக்க அதே டைட்டிலில் படமாக்கப்பட்டு தோல்வி அடைந்தது,காரணம் ஹீரோ செலெக்‌ஷன்.கணெஷ் மாதிரி ஒரு புத்திசாலி கேரக்டர் பிரதாப் மாதிரி ஒரு லூஸ் தனமான (மீண்டும் ஒரு காதல் கதை)ஆள் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.எனவே ஹீரோ செலக்‌ஷனில் கவனம் வேண்டும்.இவர் கால்ஷீட் கிடைச்சுடுச்சு படம் பண்ணிடலாம்னு இருக்கக்கூடாது.

4.மோகமுள் (தி.ஜானகிராமன்) அதே பெயரில் படமாக்கப்பட்டு விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வியாபார ரீதியில் தோல்வி.இதற்குக்காரணம் படத்துக்கு விளம்பரம் இல்லாமையும் ,புதுமுக நடிகர்களை போட்டதும்தான்.இந்த மாதிரி ரிஸ்க் உள்ள கதைக்கு ஃபேமஸ் ஹீரோவே சரி.படம் தயாரிக்க ஆகும் செலவில் 40% விளம்பரத்துக்கும் செலவு செய்ய வேண்டும்.

5.அதே போல் காயத்ரி,ப்ரியா, 2ம் ரஜினி படங்கள் சுஜாதா கதை .இதில் 2 படங்களும் ஹிட் தான் என்றாலும் சூப்பர்ஹிட் இல்லை.அதற்குக்காரணம் ஒரிஜினல் கதையில் கை வைத்தது.நாவல் ஆசிரியர் என்ன எழுதி இருக்காரோ அதை அப்படியே படம் எடுக்க முடியாதுதான்,அதற்காக 75% மாத்தினா இப்படித்தான் ஆகும்.

6..சுஜாதாவின் சூப்பர்ஹிட் நாவலான பிரிவோம் சந்திப்போம் கதையில் வந்த மதுமிதா,ரத்னா கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பை தமனாவோ,ருக்மணியோ,டைரக்டரோ ஏற்படுத்தமுடியவில்லை.அதனால் படம் வந்த சுவடே தெரியாமல் போனது.அந்தப்படத்தின் இயக்குநர் அந்த நாவலைப்படித்தே பார்த்திருக்க மாட்டார்,மேலோட்டமாக கதை கேட்டிருப்பார்.நாவலை படித்தால்தான் அந்த உணர்வுகளைஉள் வாங்க முடியும்.எனவே நாவலைப்படம் எடுக்கு இயக்குநர்கள் முதலில் முழுசாக நாவலைப்படிக்க வேண்டும்.

7..தங்கர் பச்சானின் கல்வெட்டு கதை  (அழகி)ஹிட்.மண் சார்ந்த பதிவாக அப்படி எடுக்கனும்.

8. நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் கதை சேரனின் சொல்ல மறந்த கதை யாகி ஜெயித்தது.அது போல் ஈடுபாட்டுடன் மொத்த டீமே உழைக்கனும்.

9.ஜேயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் கதை படமாகி ஹிட்.சம்பந்தப்பட்டா கதாசிரியரே ஆல் இன் ஆல் வேலை பார்த்தார்.

10.எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய சிறை கதை அதே பெயரில் படமாகி ஹிட்.ஆர் சி சக்தி மிக திறமையாக படம் பிடித்தார்.

11.

பாக்யராஜின் பவுனு பவுனுதான் தொடராக பாக்யாவில் வந்து பாராட்டை அள்ளினாலும் படம் படுதோல்வி.திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் இதில் சறுக்கியது ஏன்?ஹீரோயின் மார்பில் மாமனின் பெயரை பச்சை குத்தியதைப்போல வரும் சீன் ஏற்க இயலாததாக இருந்தது.நாவலில் ஏற்படுத்தாத நெகடிவ் பாதிப்பை சினிமா ஏற்படுத்தியது.

12.அப்புறம் ரெண்டரை மணி நேரம் எடுத்தே ஆகனும்னு ரசிகர்களை கொன்னெடுக்க தேவை இல்லை.சினேகா பிரசன்னா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு,பிரசாந்த் நடித்த ஷாக்,போன்ற படங்கள் ஒன்றரை மணீ நேர படங்களே,வித்தியாசமாக கொடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்பார்கள்

டிஸ்கி 1 - முதல்வன் படத்தில் வருவதுபோல் ஒரு நாள் டைம் குடுத்து ஒரு படத்தை டைரக்ட் பண்ணி ஹிட் பண்ணு பாக்கலாம் என யாராவது அழைத்தால் சாரி என்னால் முடியாது.அந்த அளவு நாலெட்ஜூம் இல்லை,அனுபவமும் இல்லை.எனக்கு விமர்சனம் மட்டுமே தெரியும்.

டிஸ்கி 2 - சில அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அடிக்கடி ஃபோன் பண்ணி என்னை மிரட்டுகிறார்கள்.அவர்கள் காலை 10 டூ 11 மணீக்கும்,இரவு 8 டூ 9 மணீக்கும் கூப்பிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.ஏன் எனில் காலை ஆஃபீஸ் மேனேஜர் அந்த டைமில் என்னை திட்டுவார்.மாலை அம்மா,அல்லது அக்கா திட்டுவார்.ஒரே சமயத்தில் 2 இடங்களில் திட்டு வாங்க முடியறது இல்லை

டிஸ்கி 3 - என்னை டீசண்ட்டாக திட்டுபவர்கள் 9842713441 என்ற எண்ணிலும்,இண்டீசண்ட்டாக திட்டுபவர்கள் 0424 2213095 என்ற எண்ணிலும் திட்டவும்.ஏன் எனில் லேண்ட் லைன் ஃபோனை அட்டெண்ட் பண்ணி திட்டு வாங்கவே ரூ 750 சம்பளம் கொடுத்து ஒரு பெண்ணை வைத்திருக்கிறேன்.

டிஸ்கி 4 - சாரி டூ சே,மறந்துடுச்சு,அந்தப்பெண்ணை வேலைக்கு வைத்திருக்கிறேன்,டபுள் மீனிங்கில் புரிந்து கொண்டு யாரும் சண்டைக்கு வர வேண்டாம்.

டிஸ்கி 5 - சிலர் மிஸ்டு கால் விடுகிறார்கள்.யாரோ என்னவோ என கூப்பிட்டால் கண்டபடி திட்டுகிறார்கள்.அவர்கள் சொந்தக்காசிலோ,கடன் வாங்கி டாப் அப் பண்ணியோ திட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.