Showing posts with label வன்முறை. Show all posts
Showing posts with label வன்முறை. Show all posts

Saturday, June 02, 2012

தடையறத்தாக்க - பர பர ஆக்‌ஷன் வித் ஓவர் வயலன்ஸ் - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK3T3ZT7NpoMg6zVjzdKysMaTYdQxeV_2rc5TTWZkiQ5ueK4Vc5LA1eewD4zws7YEsXFmS61fvvaTrNPYHp8nihbpKb_B_O4rOV2CjxF5kw1ZPxnRbsXsTKW9zAqLM5eEaIF53EL4xTA4/s640/thadaiyara-thaakka-latest-wallpapers-and-posters-1.jpg 

உதயம்,சத்யா வரிசைல ரொம்ப நாளுக்குப்பிறகு தமிழுக்கு வந்திருக்கும் ஆக்‌ஷன் படம் தான் இது. அருண்க்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு.. படத்தோட விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னால மென்மையான மனம் கொண்ட பெண்கள், கர்ப்பிணிப்பெண்கள் இந்தப்படத்தை பார்க்க முடியாத அளவு அதிக பட்ச வன்முறைக்காட்சிகளும், அந்த வன்முறைக்காகவே ஏ சர்ட்டிஃபிகேட் வாங்குன படம் என்ற எச்சரிக்கையோடு...... 


அண்ணன் , தம்பி 2 பேரு வில்லன்க..இவங்க பூர்வீகக்கதையே கொடூரம்,அம்மா நடத்தைல சந்தேகப்பட்டு அப்பாவே அம்மிக்கல்லால கொலை செய்ய மகனே அப்பாவை கொலை செய்யறார். அப்படி சின்ன வயசுலயே ரத்தம் பார்த்தவங்க பெரிய ஆள் ஆனா காந்தி கொள்கையா வளர்ப்பாங்க..? தாதா கம் ரவுடிங்க ஆகறாங்க.. 

இந்தியாவுலயே பெரிய கோடீஸ்வரரோட பெண்ணை கிட்நாப் பண்ணி பணம் பறிக்க செய்யும் முயற்சில அண்ணன் அந்த பெண்ணை ரேப் பண்ணிடறான்..அப்போ தம்பியோட அட்வைஸ் “அண்ணே, போதும் அவளை கொன்னுடலாம்”.. அண்ணனோட பதில்..”ஒரு டைம் பத்தாது, இவளை ஒரு பங்களாவுல வெச்சிருந்து அப்பப்ப யூஸ் பண்ணிக்கறேன்.. 


 இப்போ ஹீரோ.. அறிமுகம்.. அவர் தன் லவ்வரோட ரொமான்டிக்கா  இருந்தது பத்தாதுன்னு தன் ஏரியா லேடிக்கு ஒரு கந்து வட்டி தகறாருல உதவறாரு.. வில்லன் குரூப்க்கும் அவருக்கும் ஆகலை.. 1008 விஷால், விஜய் படங்கள்ல பார்த்த மாதிரி  தனி ஆளா 67 பேரை அடிக்கறாரு.. 



http://andhramasala.in/data/media/166/thadaiyara-thaakka-movie-stills-9.jpg



ஆரம்பத்துல அண்ணன்கார வில்லன் ஒரு ஃபிகரை ரேப்புனானே அவன்  யாரோலோ படு பயங்கரமா தாக்கப்பட்டு கோமா ஸ்டேஜ்ல ஹாஸ்பிடல்ல இருக்கான், தம்பிக்காரன் ஹீரோ மேல டவுட் பட்டு சேஸ் பண்றான். பரபரப்பான ஆக்‌ஷன் சீக்குவன்ஸ்ல  உலகத்துக்கே 3 வது ரீலில் தெரிஞ்ச சஸ்பென்சான கொலையை செஞ்சது ரேப் செய்யப்பட்ட ஃபிகர் தான் என்பது க்ளைமாக்ஸ்ல இயக்குநர் நமக்கு சொல்றார்..  அவ்ளவ் தான் கதை. 


ஆரண்ய காண்டம்க்குப்பிறகு ஆண்களால் அதிகம் ரசிக்கும் ஒரு விறுவிறுப்பான ஆக்‌ஷன் படம் கொடுத்தத்தற்கும், திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் சூப்பர் ஹிட்டே கொடுக்காத  அருண்விஜய்க்கு இது நிச்சயம் ஒரு  ஹிட் படம் ஆக்கிய இயக்குநருக்கு வாழ்த்துகள். ( பாண்டவர் பூமி நல்ல படம் தான் ஆனால் வசூல் ரீதியா பெரிய அளவில் ஹிட் இல்லை)


ஹீரோ அருண் விஜய்க்கு ஆகிருதியான  உடம்பு என்பதாலும், அவர் முகமே இறுகிய நிலையில் இருப்பதாலும் ரொம்ப  ஈசியா கேரக்டர்;ல  ஃபிட் ஆகிடறார்.. ரொமான்ஸ், ஆக்‌ஷன், ஃபைட் , சேசிங்க் என படம் பூரா இவருக்கு வேலை அதிகம்.. நிறைவான நடிப்பு.. வெல்டன் அருண்..


ஹீரோயின் மம்தா மோஹன் தாஸ். பொட்டு வைக்காத ஃபிகர்ல ஒருவர். இந்தியாவுல பிறந்த பெண் இண்ட்டர்நேஷனல் ஃபிகரா ஆனாலும் நெற்றில ஒரு குங்குமப்பொட்டு வெச்சாத்தான் மங்களகரமா இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து என்பதால் அதை விடுங்க.. ,மற்றபடி பாப்பாவுக்கு கொடுக்கப்பட்ட கவர்ச்சி காட்டும் பணியில் இயக்குநர் சொன்னபடி செய்து காஆஆட்டி இருக்கிறார்.. அவர் வரும் காட்சிகளில் எல்லாம் காட்சி ரீதியாகவோ, வசன ரீதியாகவோ கிளு கிளு நிச்சயம்.. ( இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா./)

ரேப் செய்யப்பட்ட பெண்ணாக வரும் ரகுல் ப்ரீத்தியும் பொட்டு வைக்காத ஃபிகர் தான், ஆனா அவருக்கு அதிகம் காட்சிகள் இல்லை என்பதாலும், பெரும்பாலும் அவர் வரும் காட்சிகள் எல்லாம் இருட்டாவே இருப்பதாலும் அவர் பொட்டு வெச்சா என்ன? வைக்காட்டி என்ன என்ற எண்ணமே ஏற்படுது.. 

படத்தில் காமெடி மருந்துக்குக்கூட இல்லை. சீட்டின் நுனியில் அமர வைக்கும் அதிரடிகள்.  இருப்பதால் அது தேவையும் இல்லை




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbgbi59DYkcs9EA9dD6OH7E3_Qi4Sx1Bek4VDxKxmIa9WhSXexsYqGO8FwD0TglOqwmTfWUEK5K8LUQ4PfvanBcBm6M2MNH_CIFHaFagqNli4blYNGgS6WLX8McXLGoRj0F6ywCh1DjT0/s1600/Thadaiyara+Thaakka+Movie+Stills+Mycineworld+Com+(7).jpg


இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்


1. ஹீரோ, ஹீரோயின்  2 பேரும் ஹோட்டல்ல சாப்பிட வர்றாங்க.. ஹீரோ ஆர்டர் பண்ணிட்டு ஹீரோயின் கிட்டே பாத்ரூம்  போறேன்னு சொல்லிட்டு பாத்ரூம் வந்து அங்கே இருந்து  ஜம்ப் பண்ணி பின்பக்கம் வந்து முகத்தை மறைச்சு வில்லன் ஆள்ங்களை அடிச்சு துவம்சம் பண்ணி பின் நல்ல பிள்ளை மாதிரி ஹீரோயின் கூட உக்காந்து பேசுவது செம சீன்.. தீனா படத்தில் தல ஆக்‌ஷன் நினைவு படுத்துத்து


2. ஹீரோயினை அல்ட்ரா மாடர்ன் கேர்ளாக காட்டவோ, அல்லது வித்தியாசமான பெண்ணாக காட்டவோ இயக்குநர் அவரை வெட்கத்தை கேட்டால் கவர்ச்சியைத்தருவேன் என்று சொல்வது மாதிரி கேரக்டராக பயன்படுத்திட்டார்.. ஹீரோ படம் பூரா கம்முன்னு இருந்தாலும் ஹீரோயின் அப்பப்ப ஹீரோவை கில்மாக்கு  தூண்டி விட்டுட்டே இருப்பது புதுசு.. சொகுசு ரவுசு.. 


3. ஹீரோயினுக்கு ஹீரோ அழகிய கலர் கலரான பட்டர்ஃபிளை டிசைடு பாண்ட்டீஸ் கிஃப்ட் பார்சல் வாங்கித்தருவதும், ஊடலான பொழுதுகளில் ஃபோன் பண்ணி இன்னைக்கு என்ன கலர் பட்டர்ஃபிளை எனக்கேட்டு கிளுகிளுக்க வைப்பதும் செம. ( காதலிக்கு ரோஸ், வாட்ச், கர்ச்சீஃப் வாங்கித்தர்ற காலம் மலை ஏறிப்போச்சுங்கோவ்)


4. காதலிக்கு முன் ஃபிரண்ட்சை விட்டுத்தராத ஹீரோவின் குணமும், அதைக்கண்டும் காணாமல் இருப்பது போன்ற ஹீரோயினின் அனுசரிப்புத்தனமும், அண்டர்ஸ்டேண்டிங்கும் கவிதை.. அது சம்பந்தமான காட்சிகளில் இயக்குநரின் தொடுகை.. ( அதான்பா டைரக்‌ஷன் டச்)


5. பல காட்சிகளில் விறுவிறுப்பான பதை பதைப்பு .. டெம்போ கூட்டுவதில் இயக்குநர் கை தேர்ந்தவரா இருக்கார்.. 


6. பூந்த,மல்லி புஷ்ப வல்லி டப்பாங்குத்து பாட்டு செம கலக்கல் டேன்ஸ் 





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjghg8mqWyqcsOSvCbrub3KI6gJEJIZJpGBfQ3bU_2c12Dzj28mbr6JeVjUffZkY03IrSXiqSOXYofcVFnnXYws3s1AArOm5kiz2csi_CKCxW9SzoZUuwxx2aDBBouPTFKL66ZCxtkYtfc/s1600/Mamta+Mohandas+In+Thadaiyara+Thaakka+Stills+Mycineworld+Com+%252815%2529.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்



1. வில்லன்க தண்ணி அடிக்கற சீன்ல லாங்க் ஷாட் யூஸ் பண்ணக்கூடாதா? க்ளோசப்ல சரக்கை காட்றதும், மிக்சிங்கை விலாவாரியா காட்றதும் உவ்வே.. 


2. படத்துல எதுக்கு அதிக பட்ச இருட்டும், வலிய திணிக்கப்பட்ட மணிரத்னம் டைப் உள்வாங்கும் வசனங்களும்,.. சராசரி ரசிகனுக்கு புரியாது ( அந்த சராசரி ரசிகன் நான் தான் )


3. ஹீரோயின் வீட்ல யாரும் இல்லை, அம்மா மார்க்கெட் போயிருக்காங்க.. ஹீரோயின் ஹால், வாசல் கதவை பெப்பெரப்பேன்னு திறந்து போட்டுட்டு பாத்ரூம்ல குளிக்குது./. எந்த ஊர்ல அப்படி குளிக்கறாங்க? ( ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்காக கேட்கறோம் ஏட்டய்யா )ஹீரோ நேரா உள்ளே வந்துடறாரு
( காட்சி கிளுகிளுப்பா இருந்தாலும் தமிழன் லாஜிக் பார்ப்பான் ஹி ஹி )


4. ஹீரோ 2 சீன்ல ஹோட்டல்ல ஒரு இங்க்லீஷ் ஃபார்ம் ஃபில்லப் பண்றாரு.. அவர் சாஃப்ட் வேர் கம்பெனி  டீலிங்க் எல்லாம் பண்றாரு. அப்படிப்பட்டவர்க்கு சாதாரண இங்க்லீஷ் வார்த்தையான சாரி (SORRY) என்பதற்குக்கூட ஸ்பெல்லிங்க் தெரியாதா? ஒரு சீன்ல தன் ஃபிரண்ட்ஸ் 5 பேர்ட்ட சாரிக்கு ஸ்பெல்லிங்க் என்ன?னு கேனத்தனமா கேட்கறார். அந்த லூசுங்களும் தெரியாதுன்னு சொல்லுது.. ஹய்யோ அய்யோ ( காமெடி சீன்னு நினச்சுட்டார் போல )


5. இடது கைப்பழக்கம் உள்ள ஹீரோ படத்துல பல காட்சிகளில் அதை மெயிண்டெயின் பண்றார்.. அவர் வாட்ச் கட்டறது கூட வலது கைல தான். ஆனா ஒரு சீன்ல அதாவது படம் போட்ட 57 வது நிமிஷத்துல அந்த போலீஸ் ஸ்டேஷன் சீன்ல , அப்புறம் ஒரு ஃபைட் சீன்ல  எல்லாரையும் போல இடது கைல தான் கட்டி இருக்கார்



http://www.teluguone.com/photos/uploads/Tamil%20Movies/Thadaiyara%20Thaakka%20Movie%20Stills/Thadaiyara_Thaakka_Movie_Stills17.jpg


6. வில்லன்க ஆள்ங்க ஒரு பாருக்கு வர்றாங்க, அங்கே ஒருத்தனை அடையாளம் காட்டனும்.. அதோ அந்த தாடி வெச்சவன் தான்னு சொன்னா வேலை முடிஞ்சது.. அவன் ஏன் கை நீட்டி காட்டிக்கொடுக்கனும்? அவன் பார்த்தா எஸ் ஆக மாட்டானா? 


7. ஒரு கிரிட்டிகலான சிச்சுவேஷன், ஹீரோ ஆட்டோல ஹீரோயின் கூட மிட் நைட்ல போறார்.. அவனுங்க வில்லன்க இருக்கற இடத்துல ஆட்டோவை ஓட்டி ஒரு சந்துல ஆட்டோவை நிறுத்தி ஓடுறாங்க.. இப்போ 24 பேர் வர்றாங்க .. ஆல்ரெடி ஹீரோ ஃபைட் எல்லாம் போட்டு வீரன்னு நிரூபிச்சாச்சு, இப்போ கூட காதலி. இந்த டைம்ல அவர் எவ்ளவ் முன் ஜாக்கிரதையா , வேகமா ஜாக்கிசான் மாதிரி சுறுசுறுப்பா ஃபைட் போடனும்? அதை விட்டுட்டு வில்லன் அடியாளுங்க கிட்டே வந்து 12 தடவை அடிச்சு பின் எம் ஜி ஆர் மாதிரி உதட்டுல ரத்தம் பார்த்த பின் ஃபைட் போடுவது ஓவர்


8. ஒரு சீன்ல ஹீரோ, ஹீரோயின் கார்னர் பண்ணப்படறாங்க, வில்லன் ஆளுங்க 64 பேர் இருக்காங்க , எல்லாரும் அரிவாளோட , தனி ஆளா ஹீரோ எந்த பாதிப்பும் இல்லாம ஃபைட் போட்டு ஜெயிக்கிறார், ஓக்கே ஹீரோயிஷம் தான். ஆனா வில்லன் ஆளூங்க அவ்ளவ் தத்தியா? ஹீரோயின் தேமேன்னு நிக்குது. 64 பேர்ல 4 பேரு ஹீரோயினை பணயப்பொண்ணா பிடிச்சா ஹீரோவை அடக்கலாமே? ரமணா டயலாக் மாதிரி இங்கே அடிச்சா அங்கே வலிக்கும் பாலிஸி.. அதை ஏன் யாரும் ட்ரை பண்ணலை?


9. கொலை செய்ய உபயோகப்படுத்துன கிரிக்கெட் பேட்டை  ஓடும் காரில் பார்க்கும் அந்த பெண் சாதாரணமா ஜன்னல் வழியா வெளில வீசினா மேட்டர் ஓவர்.. அவர் ஏன் மெனக்கெட்டு கார் பேனட்டுக்குள்ள வைக்கனும்? ஹீரோவை மாட்டி விடனும்கற எண்ணம் எல்லாம் இல்லை. ஏன் ரிஸ்க் எடுக்கறார்?



10. க்ளைமாக்ஸ்ல எல்லாம் சுபம்கற வேளைல அந்த பொண்ணு ஏன் தற்கொலை பண்ணிக்குது?  வில்லனை கொலை செய்யும் துணிவு உள்ள பெண், கோடீஸ்வரி  ஏன் அந்த முடிவை எடுக்கனும்? கதைக்கு அந்த முடிவு எந்த அளவில் யூஸ்?



http://3.bp.blogspot.com/_0vmsnzIJ81w/SwJBqbe9gpI/AAAAAAAADhE/rsos0mnOf7g/s1600/bodies21.jpg


மனதில் நின்ற வசனங்களில் நினைவில் நின்றவை 


1. சார்.. ஓப்பனா சொல்றேன், எனக்கு சுத்தி வளைச்சுப்பேசத்தெரியாது,உங்க பொண்ணை லவ் பண்றேன்,ஓக்கேன்னா சொல்லுங்க, இல்லைன்னா வேற பெண்ணை நான் மேரேஜ் பண்ணிக்கறேன், ஐ ஆம் பிராக்டிகல்


2.  எல்லாருக்கும் பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன்..


 ரொம்ப தாங்க்ஸ் டா..


 ஆனா செலவு உன்னுது



3. அவன் ஒரு பொம்பளையை வெச்சிருக்கானாமே? நீ அவளை பார்த்திருக்கியா?


யா யா, இந்த ஏரியாவுலயே அப்படி ஒரு ஃபிகரை பார்த்திருக்கவே முடியாது


4. நல்ல ஜோசியரா பார்த்து ஜாதகம் ரெடி பண்ணுடா, அப்பா கேட்கறார்


நாம பண்றதே ஃபிராடுத்தனம்.. இதுல நல்ல ஜோசியர் வேற வேணுமாக்கும்?


5. நான் பாத்ரூம்ல இருந்து வெளில வந்து அரைகுறையா நிக்கறேன், அவன் என்னை சுத்தமா கண்டுக்கவே இல்லைடி.. நான் என்ன அவ்லவ் சப்பை ஃபிகரா?நம்ம ஊரு பசங்க சுத்த சடையனுங்க டி. அவ்ளவ் கிளுகிளுப்பான போஸ்ல ஆலை பார்த்தும் ஏதும் தோண மாட்டேங்குதே ?

 ஓ, உன் பிரச்சனை  இப்போ புரிஞ்சுடுச்சு, அவன் உன்னை சீன் பார்த்தது கூட தேவலை, ஆனா அவன் உன்னை ஏதும் செய்யலை.. அதானே உன் ஆதங்கம்?



6. டியர், இந்த ஊர்லயே அவ மாதிரி ஃபிகர் யாரும் இல்லைனு பேசிக்கறாங்க, ஆனா அவளை பார்க்கவே முடியறதில்லை, எங்கே அவ வெளில வந்தாத்தானே?

அப்போ நீ ட்ரை பண்ணி இருக்கே?


7. சரி.. லட்டு எப்படி?

 உன்னை விட டேஸ்ட் கம்மிதான்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsqdb3nAdDeiHetCCgE9JcTewTXxAAUSez8BRdySjyKzwOgZMt8uAhzBXWGcszy8ORRz8EnPEJBmg2RslQp4VeltOvOQfIXtnevtFZEviSTu7tgjPKM8kqm3DMv76AW3_FIOjvJPXJDpA/s1600/Thadaiyara+Thaakka+Movie+First+Look+Mycineworld+Com+(3).jpg

8. இன்னைக்கு பச்சைக்கலர் பட்டர் ஃபிளைடா..

 வாட்? புரியலை?

 மண்டு, நீ கிஃப்டா குடுத்தியே பாண்ட்டீஸ்..





9. என்னடா அரை மணீ நேரமா அந்த பங்களாவை வாட்ச் பண்ணிட்டு இருக்கோம். அவ வெளில வந்த பாட்டைக்காணோம்?

அட..ச்சே இவ வேலைக்காரிடா..

 இவ கூட 10 வருஷம் முன்னே  செம ஃபிகரா நல்லா தான் இருந்திருப்பா..


10. டேய்.. இந்த லட்டை எந்தகக்டைல வாங்குனே? கேவலமா இருக்கு.. லாலா கடைல வாங்கி இருக்கலாம்.

 ஹி ஹி அடப்பாவி, என் ஆள் செஞ்சதுடா..

 பொய் சொல்லாத.. ஏதோ மட்டமான கடைல வாங்கி இருப்பே..


11. அவ அப்பன் முகம் மாதிரி இருக்கு.. அவ செஞ்ச லட்டும்

 நான் என்ன இல்லைன்னா சொன்னேன்.. அவ இருக்கறப்ப அப்படி சொல்லலாமா?

 சுத்தம் , கண்ணா கொஞ்சம் திருபிப்பாரு, உன் ஆள் நிக்கறா


12. ஸாரிக்கு உனக்கு ஸ்பெல்லிங்க் தெரியுமா?

 சாரி தெரியாது


13. பாய் ஃபிரண்ட்ஸ் கூட நாம ஃபைட் போட்டா நாமா வலியனா போய் பேசக்கூடாது, கெத்து போயிடும்..


14. டேய், இங்கே பாரு, நாம 2 பேரும் பெட்ரூம்ல இருக்கோம், அம்மா கிச்சன்ல இட்லி ஊத்தறாங்க, அவங்க இங்கே வர 20 நிமிஷம் ஆகும், வேணூம்னா என்னை யூஸ் பண்ணிக்கோ, எனக்குத்தேவை இல்லை.. ஹி ஹி உனக்கு வேணும்னா......


15. உன் ஃபிரண்ட் எங்கே?ன்னு சொல்லிடு.. இல்ல.. உன்னை ஒரு பொம்பள கூட யூஸ் பண்ண முடியாதபடி பண்ணிடுவோம்..

 ஆல்ரெடி நான் அப்படித்தாங்க இருக்கேன் ஹி ஹி 



6.


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 43


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - நன்று 




http://masscinema.in/wp-content/gallery/thadaiyara-thaakka-movie-stills/thadaiyara-thaakka-movie-stills-43.jpg


 சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் ரசிகர்கள், ஆண்கள், த்ரில்லர் பிரியர்கள் பார்க்கலாம். 18 வயதுக்கு உட்பட்டவர்கள், மாணவ மாணவிகள், குழந்தைகள் மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் காட்சிகள் அதிகம் என்பதால் தவிர்க்கவும்

 ஈரோடு தேவி அபிராமி, ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீநிவசா என 3 தியேட்டரில் ஓடுது..

50 நாள் கேரண்டி..  ஏ , பி, சி என எல்லா செண்ட்டர்களிலும் வசூலை அள்ளிடும். 

 நான் தேவி அபிராமில படம் பார்த்தேன்





http://media.onsugar.com/files/2011/02/08/3/1440/14400286/f4/mamta-01.jpg


டிஸ்கி -

மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/06/blog-post_01.html

Friday, December 09, 2011

போலீஸ் போலீஸ் போலீஸ் போலீஸ் போலீஸ் (5)

நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த கற்பை திரும்பப் பெற முடியாது எனக் கூறிய சென்னை ஐகோர்ட், சாதாரண மக்களுக்கு பொருந்தக் கூடிய சட்டத்தை, போலீசாருக்கு மட்டும் ஏன் அமல்படுத்தவில்லை என, கேள்வி எழுப்பியுள்ளது.


சி.பி - போலீஸ்னா மாமூல் தான் வாங்குவாங்க, இப்போ ரேப் பண்றதையும் ஆரம்பிச்சுட்டாங்க போல.. 


பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த நான்கு பெண்களை, யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக, திருக்கோவிலூர் போலீசார் மீது குற்றம் சாட்டப்பட்டது. 


சி.பி -பழங்குடி, ஆதி திராவிடர்கள்னாலே இவனுங்களுக்கெல்லாம் கேவலமா போயிடுது.. 



கடந்த மாதம் 22ம் தேதி நள்ளிரவில், இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.



சி.பி - நல்ல வேளை, எஸ் பி யாவது நல்லவரா இருந்திருக்காரு


இச்சம்பவம் தொடர்பாக, ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நான்கு பெண்களுக்கும், தலா ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, தமிழக அரசும் உத்தரவிட்டது.

சி.பி - ரேப் கேஸ்க்கு 10 வருஷமாவது தீட்டனும்,இது ரேட் ஆகிடும், அப்புறம் ஆளாளுக்கு பணம் இருக்குங்கற தைரியத்துல விளையாட ஆரம்பிச்சுடுவாங்க.. 


"இரவு நேரத்தில், பெண்களை போலீசார் அழைத்துச் சென்றது தவறு; பாலியல் பலாத்காரம் செய்த போலீசார் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை; இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்' எனக் கோரி, வழக்கறிஞர் புகழேந்தி மனு தாக்கல் செய்தார். 


 சி.பி - நைட்லதான் மப்புல இருந்திருக்கும் நாய்ங்க..


இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், கடந்த மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வந்தது. சம்பவம் தொடர்பாக, நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என, அட்வகேட்-ஜெனரல் தெரிவித்தார். 

 சி.பி - ஒரு வருஷம் சஸ்பெண்ட் பண்ணுனா ஆச்சா? டிஸ்மிஸ் செஞ்சாத்தானே மற்றவங்களூக்கு ஒரு பயம் இருக்கும்?


இதையடுத்து, நான்கு பெண்களையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசார் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கக் கூடாது எனவும், ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.


சி.பி - வேற மாவட்டத்துக்குப்போய் இதே வேலையைத்தான் அங்கேயும் செய்வானுங்க, கட் பண்ணி விட்டுடனும் நந்தா படத்துல வர்ற மாதிரி.. 

விழுப்புரம் எஸ்.பி., தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: ஒரு கிரிமினல் வழக்கில் புலன் விசாரணை செய்வதற்காக இன்ஸ்பெக்டர் சீனிவாசன், கான்ஸ்டபிள்கள் கார்த்திகேயன், பக்தவத்சலம் ஆகியோர் ஜீப்பில், இரவு 8 மணிக்கு டி.மண்டபம் என்ற இடத்துக்குச் சென்றுள்ளனர்.

 சி.பி - இவனுங்களே பக்கா கிரிமினல்ஸ்.. இந்த லட்சணத்துல கிரிமினல் கேஸை விசாரிக்க இவனுங்களை அனுப்பி?

இருளர் சமூகத்தைச் சேர்ந்த காசி, வெள்ளிக்கண்ணு உள்ளிட்ட சிலரை தேடியுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க முடியாததால், ஐந்து பெண்கள், மூன்று சிறுவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, மானம்பூண்டி பை-பாஸ் வரை சென்றுள்ளனர்.

சி.பி - போலீஸ்க்கு இதே பொழப்புதான்.. கைது செய்ய வேண்டிய ஆளுங்களை தப்பிக்க விட்டுட வேண்டியது.. அப்புறம் அவங்க வீட்ல இருக்கற அப்பாவி பெண்களை மானபங்கப்படுத்தவேண்டியது, இதுக்கு சரியான தண்டனை என்னான்னா  அவனுங்க மனைவி அல்லது மகளை அவன் கண் முன்னால தான் என்ன செஞ்சோம்கறதை ஒப்புதல் வாக்குமூலம் தரச்சொல்லி, பாதிக்கப்பட்டவங்க கால்ல விழ வெச்சு, கழுதை மேல உக்கார வெச்சு நகர் வலவ் வர வைக்கனும்

சீனிவாசனுக்கு தலைமை கான்ஸ்டபிள் தனசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் உதவியதாகத் தெரிகிறது. புலன் விசாரணைக்குப் பின், அனைவரும் பகல் இரண்டு மணிக்கு வீட்டில் விடப்பட்டனர். சம்பவம் தொடர்பாக ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

 சி.பி - துறை நடவடிக்கைன்னாலே ட்ரான்ஸ்ஃபர்னு அர்த்தம், இங்கே செஞ்ச அதே கேடு கெட்ட வேலையை அங்கே போய் செய்வானுங்க./.


இவ்வழக்கு நேற்று, "முதல் பெஞ்ச்' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அரசு தரப்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியன் ஆஜராகினர். வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "இரவு நேரத்தில் பெண்களை அழைத்துச் சென்றதை போலீசார் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை' என்றார்.


சி.பி - மாலை 6 மணீக்கு மேல லாக்கப்ல பெண்களை வெச்சிருக்கக்கூடாதுன்னு விதி இருக்கே? அப்புறம் என்ன இதுக்கோசரம் அதை மீறினாங்க?




அதற்கு அரசு தரப்பில், "போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது' என தெரிவிக்கப்பட்டது. உடனே நீதிபதிகள், "இரவு நேரத்தில் பெண்களை அழைத்துச் சென்றுள்ளனர். உடன், எந்த பெண் போலீசாரும் இல்லை. இது விதிமுறை மீறல் இல்லையா? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சாதாரண மனிதர்களுக்கு ஒரு சட்டம், போலீசாருக்கு ஒரு சட்டமா? கைது செய்யுமாறு ஏன் உத்தரவிடக் கூடாது?' என கேள்விகள் எழுப்பினர். இதையடுத்து, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், "நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த கற்பை பெற முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறப்பட்டது.



சி.பி - நஷ்ட ஈடுங்கற பேச்சே இருக்காக்கூடாது.. அப்புறம் ஆளாளுக்கு  கைல பணத்தை வெச்சுக்கிட்டு அட்டூழியம் பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க..   அட்லீஸ்ட் 10 வருஷமாவது தீட்டனும்..


சாதாரண நபருக்கான சட்டம் போலீசாருக்கு பொருந்தாதா: "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: போலீஸ் வாகனத்தில், பழங்குடியின பெண்கள் ஐந்து பேர் மற்றும் மூன்று சிறுவர்கள், இரவு 8 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். போலீசார் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஒரு பெண் புகார் அளித்துள்ளார். கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட பின், குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என, நாங்கள் கேட்டோம். அதற்கு, அரசு குற்றவியல் வழக்கறிஞர், "விசாரணையின் போது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல், அவர்களை கைது செய்ய முடியாது' என்றார்.


சி.பி - ஆமா, நீங்க எல்லாம் கிழிக்கறதுக்குள்ள அவங்க எங்கயாவது எஸ் ஆகிடுவானுங்க.. 



அரசு குற்றவியல் வழக்கறிஞரின் வாதத்தை, எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு பற்றி, ஒருவரது பெயரை குறிப்பிட்டு போலீசில் ஒரு பெண் புகார் அளித்தால், அந்த நபரை உடனடியாக கைது செய்ய, போலீசார் தயக்கம் காட்ட மாட்டார்கள். அப்படியிருக்கும் போது, சாதாரண நபருக்கு பொருந்தக் கூடிய சட்டத்தை, போலீஸ் அதிகாரிகளுக்கு ஏன் அமல்படுத்தவில்லை?

சி.பி - சட்டம்னா எல்லாருக்கும் பொதுதான், அதில் இவனுங்களுக்கு மட்டும் என்ன விதி விலக்கு ?



அரசு இந்த விஷயத்தை கடுமையாக கருதுகிறது என்றும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கியதாகவும், அட்வகேட்-ஜெனரல் குறிப்பிட்டார். நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த கற்பை பெற முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு வாரங்களுக்குள் விசாரணை முடிந்து விடும் என, அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே, மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்க, இந்த வழக்கு நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. புலன் விசாரணை திருப்திகரமாக இல்லை என்றால், தகுந்த உத்தரவை இந்த கோர்ட் பிறப்பிக்கும். இவ்வாறு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


சி.பி - இன்னிம் ஒரு  மாசம் போச்சுன்னா இதை அப்படியே மூடி மறைச்சுடுவானுங்க பாருங்க..  அப்புறம் அடுத்து வேற ஏதாவது பரபரப்பு வரும்.. அதை பிடிச்சுக்குவாங்க , இதை விட்டுடுவாங்க..