Showing posts with label லிங்கா -ரஜினி மேடைப்பேச்சு- மக்கள் கருத்து. Show all posts
Showing posts with label லிங்கா -ரஜினி மேடைப்பேச்சு- மக்கள் கருத்து. Show all posts

Monday, November 17, 2014

லிங்கா -ரஜினி மேடைப்பேச்சு- மக்கள் கருத்து

தனக்கும் அரசியல் பற்றி தெரியும் என்ற நடிகர் ரஜினிகாந்த், அரசியலை நினைத்து தாம் பயப்படவில்லை என்றும், அதன் ஆழம்தான் தயக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார்.


கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'லிங்கா' இசை வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தவிர ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டார்கள். தமிழ், தெலுங்கு இசையினை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசியது:


"உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது, நான் பழைய மாதிரி நடிக்க முடியுமா என்று ஏங்கியது உண்டு. அது முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு பிறகு இரண்டரை வருடங்கள் உடம்பு சரியில்லை. நடிப்பதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. அப்புறம் தான் 'கோச்சடையான்' நடிச்சேன். அது முற்றிலுமே வேறு மாதிரியான படம். அந்த ஜானர் யாருக்குமே தெரியாது. அப்படத்தோட முழுச்சுமையையும் செளந்தர்யா மீது வந்தது. பாவம் அந்த பெண் மீது அவ்வளவு பெரிய மலையை வைத்து, கஷ்டப்படுத்தியது நான் தான். இராஸ் நிறுவனம், முரளி மனோகர் மாதிரியான் ஆட்கள் இருந்ததால் மட்டுமே அந்த படம் வெளியே வந்தது.

'கோச்சடையான்' மூலமாக கொஞ்சம் பணத்தை இழந்தால்கூட, செளந்தர்யாவிற்கு மிகப் பெரிய அனுபவம் கிடைத்தது. இனிமேல் வந்து அவங்க பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் சம்பாதித்த பணத்தை வேஸ்ட் பண்ணாமல் இருந்தாலே போதும். இனிமேல் ஜனங்க என்ன, திரையுலகம் என்ன, நேரம் என்றால் என்ன என எல்லாத்தையும் 'கோச்சடையான்' கற்றுக் கொடுத்திருக்கிறது. அந்தப் படத்தை ரிலீஸ் பண்ணாமல், மற்றொரு படத்தை பண்ண மனசு வரவில்லை. நிறைய கதை கேட்டிருந்தாலும், எதுவுமே தலைக்குள் போகவே இல்லை. முதல்ல 'கோச்சடையான்' வெளியாக வேண்டும் என்று இருந்தேன்.


ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், உடனே எந்த பிரச்சினையை முடித்துவிட வேண்டும். இல்லை என்றால் அந்த பிரச்சினை பெரிய பிரச்சினையாகி விடும். எவ்வளவு பெரிய பிரச்சினை இருந்தாலும், அதை உடனே முடித்துவிட வேண்டும். 'கோச்சடையான்' வெளியான பிறகு பார்த்த 20 பேர்களில் 10 பேராவது என்கிட்ட "என்ன சார், கடைசியிலாவது ஒரு சீன் வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்" என்று சொன்னார்கள். ஆரம்பித்திலாவது ஒரு ப்ரேமிலாவது வருவீங்கன்னு எதிர்பார்த்தேன் என்று சொன்னார்கள். நீங்க இப்போ எப்படி இருக்கீங்கன்னு பார்க்க ஆசைப்பட்டோம் என்று சொல்லவும், உடனே ஒரு படம் ஆரம்பிக்கணும் என்று திட்டமிட்டேன்.


படம் ஆரம்பிக்கணும் என்று சொன்னவுடனே ஆரம்பித்துவிட முடியாது. அரசியல் ஆசை இருந்தால் உடனே வந்துவிட முடியாது. மக்கள் எதிர்பார்க்கிற மாதிரி பண்ணனும் இல்லயா.. அது எவ்வளவு பெரிய கஷ்டம். அப்போ தான் கே.எஸ்.ரவிக்குமார் "சார்.. ஒரு கதை இருக்கு. என்னுடைய உதவி இயக்குநர் பொன். குமரன் ஒரு கதை வைச்சிருக்கார். சரியா இருக்கும். கேட்குறீங்களா" என்றார். சரி சார் கேட்குறேன் என்றேன். நான் சொல்ல மாட்டேன், பொன்.குமரனே சொல்லுவார் என்று சொல்லி அனுப்பி வைத்தார். கேட்டேன், பிடித்திருந்தது.


நிறைய கேப் விழுந்துவிட்டது, இந்த படத்தை பண்ண வேண்டும் என்றால் மூன்று வருஷமாகும். 6 மாதத்தில் செய்ய முடியுமா என்றால், அதை செய்யக் கூடிய ஒரே நபர் கே.எஸ்.ரவிக்குமார் தான். இதை ஷங்கர் சாரே ஒத்துக் கொள்வார். உடனே "சார். இதை நான் பண்றேன். மே மாதத்தில் ஆரம்பிக்கிறோம். 6 மாதத்தில் முடித்து, தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண முடியுமா?" என்று கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டேன். குடும்பக் கதையோ, எமோஷனல் கதையோ கிடையாது, ப்ரீயட் படம். பெரிய பெரிய செட் எல்லாம் இருக்குது. எனக்கு ஒரு ரெண்டு நாள் கொடுங்க என்றார். கே.எஸ்.ரவிக்குமாரோ சுதீப்பை வைத்து படம் பண்ணுவதாக கூறியிருந்தார். அந்த நேரத்தில் அவரிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டு வந்தார். உடனே யார் தயாரிப்பாளர் என்று யோசித்தோம்.


ராக்லைன் வெங்கடேஷைப் பற்றி எல்லாருக்குமே தெரியும். கர்நாடகாவில் அவர் ஆபத்பாந்தவன் மாதிரி. எதையுமே எதிர்ப்பார்க்காமல் என்ன பிரச்சினை என்றாலும் போய் நிற்பார். எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் எதையும் எதிர்ப்பார்க்காமல். நான் என்றைக்குமே நன்றியை மறக்க மாட்டேன். அவரை கூப்பிட்டு இந்த படத்தை நீங்க தயாரிக்க முடியுமா. ஆறு மாசம் தான் டைம் என்றேன். நீங்க தேதிகள் கொடுத்தால் போதும் சார். நான் பண்றேன் என்றார்.



அப்போது கே.எஸ்.ரவிக்குமார் "சார்.. நீங்க எனக்கு ஒரு கண்டிஷன் போட்டீங்க. எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு. ஏ.ஆர்.ரஹ்மான் இசை, வைரமுத்து பாடல்கள், ரத்னவேலு கேமிரா, சாபுசிரில் செட்" என்றார். அதெல்லாம் உங்க டிபார்ட்மெண்ட் சார். இதில் எல்லாம் நான் தலையிட மாட்டேன் என்றேன். அப்போது ஆரம்பித்தது இந்தப் படம். 10:30 மணிக்கு தான் முதல் ஷாட், மதியம் 3:30 மணி வரை ரெஸ்ட் என என்னை குழந்தை மாதிரி பார்த்துக் கொண்டார்கள். எப்போதுமே என்னைப் பார்த்துக் கொள்ள சுற்றி ஒரு 30 பேர் இருப்பார்கள். அவங்க காட்டிய அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. இந்தப் படத்திற்காக நிறைய பெர்மிஷன் கிடைக்காத இடங்களில் எல்லாம், பெர்மிஷன் வாங்கி படமாக்கி இருக்கிறார்கள்.


இவ்வளவு பெரிய பட்ஜெட், பெரிய டெக்னிஷியன்கள் எல்லாம் வைத்து கே.எஸ்.ரவிக்குமாரால் மட்டுமே முடியும். டிசம்பர் 12ம் தேதி வெளியிடுவதற்கு எல்லா வேலைகள் நடந்துக் கொண்டு இருக்கிறது.


அரசியல் தெரியும்...
அமீர், சேரன், விஜயகுமார், வைரமுத்து எல்லாம் அரசியல் பற்றி பேசினார்கள். ரஜினியோடு நெருங்கி பழகி இருக்கிறேன். அவருடைய பற்றி எனக்கே தெரியாது என்று வைரமுத்து கூறினார். என்னைப் பற்றி எனக்கே தெரியாது. சூழ்நிலை தான் என்னை இங்கு கொண்டு வந்து வைத்திருக்கிறது. நாளைக்கும் ஒரு சூழ்நிலை தான் தீர்மானிக்கும். அரசியல் பற்றி கொஞ்சம் எனக்கு தெரியும். எவ்வளவு ஆழம், ஆபத்து என்று தெரியும். யார் யார் தோள் மீது எல்லாம் மிதித்து அங்கே போகணும் என்று எனக்கு தெரியும். அவ்வாறு போனால் கூட, அங்கு சென்று நினைத்தை எல்லாம் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. காற்று அழுத்த தாழ்வு நிலை என்பது தானாகவே அமையும். அரசியலில் ஆழத்தை நினைத்து தயங்குகிறேன். அரசியலை நினைத்து பயப்படவில்லை, தயங்குகிறேன் அவ்வளவு தான்.



இவ்வளவு பேர் அரசியல் என்று பேசியதால், பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. பேசாமல் போய் இருந்தால் திமிராகி விடும். எது இருந்தாலும் கடவுள் தீர்மானிப்பார். அது என்னவோ எனக்கு தெரியாது. என்னவாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வேன்" என்றார். ரஜினிகாந்த் 


நன்றி  - த இந்து 

மக்கள் கருத்து


  • Ascendas  
    வாழ பொறுக்காத பூமி. என்றும் உங்கள் ரசிகன்
    Points
    165
    12 minutes ago ·   (1) ·   (0) ·  reply (0) ·
       
  • Ascendas  
    சார் நாங்க இருக்கோம் என்றும்
    Points
    165
    14 minutes ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • Ascendas  
    அப்பறம் எதுக்கு சாமி கோவா டு தமிழ்நாடு ரேஸ்
    Points
    165
    15 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Adhi  
    அவரு இப்படி சொல்லி தான் அவரு படம் ஒடனும்னு கெடயாது.....அவரு இந்த ஆடியோ ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடியே படம் 165 கோடிக்கு வித்துருச்சு.....அப்படி சொல்ற நீங்க தான் உண்மையான உளறல் பேர்வழிகள்.....அவர் என்னைக்குமே தன் ரசிகர்கள வச்சு அரசியல் பண்ணது கெடயாது.....அந்த அவசியமும் அவருக்கு கெடயாது....இப்போ இவ்ளோ பேசுற நீங்க யாரும் அவர் கட்சி ஆரம்பிச்ச போய் சேர போறதும் கெடயாது.....அவரு அரசியலுக்கு வந்து எல்லாத்தையும் இழந்து நின்னாலும் அவருக்கு உதவி செய்ய போறதும் கெடயாது....அவரு அரசியலுக்கு வரலேன்னு சொன்னா அவர் ரசிகர்கள் அவர் படத்த பாக்காம இருக்க போறதும் கெடயாது..... அதனால சும்மா ஒருத்தர திட்டி பேசி நம்ம publicity பண்றத விட்டுட்டு உருப்படியா செய்ய வேண்டிய வேலை எவ்வளவோ இருக்கு.....அதுல எதாவது செய்யலாம்....
    18 minutes ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • VE,MANNA  
    இவர் எல்லாம் அரசியளுக்குவரவேண்டும் என்று இங்கே யாரும் தவமிருக்கவில்லை..இவர் மக்களுக்கு என்று செய்தது என்ன.எதுவும் செய்யாமல் சினிமாவில் கிடைக்கும் popularity யை வைத்து இவர் பணம் சம்பாதிக்கலாம் .இவரைக்கண்டு யாரும் இங்கே பயப்படவில்லை அரசியலுக்கு வந்தால் இவரின் கொஞ்சம் நஞ்சம் மரியாதையை இழக்க நேரிடும்..இவரை வைதது சினிமாவில் பணம் சம்பாதிக்கலாம் அவ்வளவுதான் v
    Points
    490
    29 minutes ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
  • SRINIVASAKAN  
    உணமைலையே நடிகர் அஜித் குமார் தான் உண்மையான சூப்பர் ஸ்டார்.... ரசிகர்களை வைத்து வியாபாரம் பண்ணமாட்டார்...
    Points
    845
    about an hour ago ·   (3) ·   (1) ·  reply (1) · 
    Karthi · Ascendas  Up Voted
    • thalapathi  
      இங்க என்ன நடந்துட்டு இருக்கு நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க
      10 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • SRINIVASAKAN  
    படம் ஒடனும்னு மக்களை ஏமாத்துர வேலை.....
    Points
    845
    about an hour ago ·   (2) ·   (2) ·  reply (0) · 
    Karthi  Up Voted
    arivu  Down Voted
  • suresh  
    இவர் நல்ல நடிகன் என்று நீரூபிக்கிறார்
    about an hour ago ·   (4) ·   (1) ·  reply (0) · 
  • Karthi  
    ஒருநல்ல தலைவனுக்கு அத்தியாவசியத் தேவை உறுதியான முடிவெடுக்கும் திறன். அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பதையே இத்தனை காலம் முடிவெடுக்க முடியாமல் தினறும் தாங்கள் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறீர்கள்.
    Points
    6230
    about 2 hours ago ·   (12) ·   (1) ·  reply (0) · 
    SRINIVASAKAN · SRINIVASAKAN  Up Voted
  • Karthi  
    நடிகர்கள் அரிதாரம் பூசி நடிக்கட்டும். மூட்டை மூட்டையாக சம்பாதித்து பலதலைமுறைக்குச் சேர்த்து வைக்கட்டும். மக்களை காப்பாற்ற அரசியல்வாதி அவதாரமெல்லாம் எடுக்க வேண்டாம். ஏற்கனவே இருக்கும் முன்னாள் நடிகர்களால் தமிழ்நாடு கெட்டது பத்தாதா. இந்த புதிய மீட்பரையெல்லாம் நாடு நம்பத்தயாரில்லை.
    Points
    6230
    about 3 hours ago ·   (7) ·   (1) ·  reply (0) · 
  • S. Mohanarajan  
    தலைவா நீங்க அரசியலுக்கு வரவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. மற்றவை எல்லாம் இறைவன் செயல்
    about 3 hours ago ·   (5) ·   (2) ·  reply (0) · 
  • nc.mohandoss  
    பயம் இல்லேன்னா அப்புறம் எதுக்கு தயக்கம்..?எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி ஜல்லி ? சும்மா சொல்ல கூடாது -படம் ரிலீஸ் நேரம் தலைவருக்கு அரசியல் நாபகம் வந்துரும்..!
    about 3 hours ago ·   (6) ·   (1) ·  reply (0) · 
    Karthi  Up Voted
  • Inder  
    திரு ரஜினிகாந்த் அவர்கள் எப்பொழுதும் தன்னுடைய படத்தை வெற்றி பெற கையாளும் யுக்தி. இதை இவர் பல காலமாக கையாளுகிறார். படம் ஓடி முடிந்த பின்பு இந்த பேச்சை மாற்ற ஒரு அறிக்கை வெளியிடுவார். இது அவரின் வாடிக்கை.
    about 3 hours ago ·   (8) ·   (1) ·  reply (0) · 
    SRINIVASAKAN · SRINIVASAKAN · Karthi  Up Voted
  • hashif  
    நீங்க முதல்ல சச்சின் 28 வருசத்துக்கப்புறம் Retired ஆனமாதிரி நீங்களும் Retired ஆகுங்க ரொம்ப போர் அடிக்குது சும்மா சின்ன பொண்ணுங்க கூட டூயட் பாடிகிட்டு.
    Points
    570
    about 3 hours ago ·   (13) ·   (5) ·  reply (0) · 
    SRINIVASAKAN · SRINIVASAKAN · Karthi  Up Voted
  • KARUNAKARAN.M  
    அண்ணா... போதும் அண்ணா...! இன்னும் "மைக்" முன்னாடி நின்னா என்ன பேசறதுன்னே புரியாமல் உளற வேண்டியது. அதுக்கும் கண், மூக்கு, காது வச்சு இங்கே ஆளாளுக்கு ஒரு கதை விட வேண்டியது. 1996 ல் வேண்டுமானால் இங்கே ஒரு கூட்டம் உங்களுக்கு ஓட்டுப் போடத் தயாராக இருந்தது. அப்ப அதைக் கோட்டை விட்டுட்டீங்க. அதோடு முடிஞ்சு போச்சுண்ணா. இன்னும் உங்களுக்கு ஒரு "மாஸ்" இருக்கிறதா நெனைச்சுக்கிட்டு "மைக்" கெடைச்சா அரசியல் பற்றி உளறுவதை நிறுத்துங்க. நீங்க "அரசியலுக்கு வரப்போவதில்லை" என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டாலும் அதற்காகவெல்லாம் உங்கள் படம் ஒன்றும் "ஃப்ளாப்" ஆகிவிடப்போவதில்லை. சற்றே குறைந்த வயதில், உடலும், மக்கள் ஆதரவும் நன்றாக இருக்கும்போதே அரசியலுக்கு வரும் தைரியமில்லை. இப்போது 65 வயதில், பல "டூப்" போட்டுத்தான் நடித்தாக வேண்டிய உடல்நிலையில் "அரசியலுக்கு வர பயமில்லையாம்... ஆனா தயக்கமாம்... வருவது ஆண்டவன் கையிலாம்...". என்ன உளறல் இது? சிறு பதற்றத்தையே சமாளிக்க முடியாமல், "இமயமலைக்கு"ப் பறக்கிற ஆள் நீங்கள். உங்களை நம்பி தமிழக அரசியலும் இல்லை.. மக்களும் இல்லை... முடிந்த வரையில் நடித்து விட்டு ஓய்வெடுங்கள்.
    about 3 hours ago ·   (11) ·   (1) ·  reply (0) · 
  • saravanan  
    அரசியலுக்கு வர சேவை செய்யும் மனப்பான்மை இருந்தால் போதும். தனது சொத்தையும் புகழையும் பாதுகாக்கும் மனப்பான்மை இருக்க கூடாது........!!!!!!!!
    Points
    450
    about 4 hours ago ·   (6) ·   (3) ·  reply (0) · 
  • Michael Raj  
    இந்த உக்தியை என்று ரஜினி எடுத்தாரோ அன்று முதல் அவர் அரசியலில் இருந்து கொண்டுதான் இருக்கிறார் !!
    Points
    5535
    about 4 hours ago ·   (3) ·   (1) ·  reply (0) · 
  • Mohanasundarm  
    சார் கடவுள் தான் மக்களா சொல்றாங்க அரசியலுக்கு வாங்கனு தயங்கதிங்க "பயத்திற்கு இன்னொரு பேருதான் சார் தயக்கம்"
    about 5 hours ago ·   (6) ·   (2) ·  reply (0) · 
  • Ravi Jayavijayan  
    ரஜனிகாந்தின் நண்பர் சிரஞ்சீவிக்கு நேர்ந்த கதி ரஜனிக்கு நன்றாகத்தெரியும். அதனால்தான் இந்த தயக்கம் போலும். கர்நாடகத்தில் ராஜ்குமருக்குக்கூட அரசியல் ஆசை இருந்தது. அனால் அரசியலில் குதிக்க கடைசிவரை அவருக்கு தைரியம் வரவில்லை. எது எப்படியோ. 'லிங்கா' - அது என்ன 'லிங்கா'? நல்ல தமிழில் 'லிங்கம்' என்று பெயர் வைக்கக்கூடாதா? கன்னடப்பெயர் போல் உள்ளது! - படத்திற்கு நல்ல, பரபரப்பான விளம்பரம் கிடைத்து வருவது வசூலிற்கு மிகவும் உதவியாக இருக்கும். ரஜனி நல்ல நடிகர் மட்டுமல்ல; அருமையான பிசினெஸ்மெனும் கூட! ஜெ ரவி
    about 5 hours ago ·   (5) ·   (2) ·  reply (0) · 
  • Ram  
    ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டார். அப்படி வர முடிவ எடுத்தால் அது காலம் தாழ்ந்த முடிவாகத்தான் இருக்கும். அவர் அரசியலில் ஜொலிப்பதார்காகன காலம் முடிந்து விட்டது.
    Points
    7480
    about 5 hours ago ·   (2) ·   (2) ·  reply (0) · 
  • Ashok Kumar  
    நடிகண்டா நடிகண்டா!
    Points
    385
    about 6 hours ago ·   (4) ·   (5) ·  reply (0) · 
    Karthi  Up Voted
    Ascendas · Ascendas · Ascendas  Down Voted
  • srinivasan  
    ரஜினிக்கு பொலிடிக்ஸ் ஒத்து varathu
    about 6 hours ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
  • Vittalanand Rao  
    அய்யா ரஜினி அவர்களே. ஆசையை வேரறுக்க இமயமலைக்கு போகிறீர்கள். மனிதன் நிம்மதியாக இருக்கவேண்டுமானால் காமம், குரோதம், மோகம் ஏன்கிற மூன்றையும் விடவேண்டும். ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் படியுங்கள். வட மொழி அறிந்தவர்களிடம் விளக்கம் பெறுங்கள். நீங்களே மராத்திகாரர் ஆகவே உங்களுக்கும் அர்த்தம் புரியும். சேர்த்த செல்வங்களில் உங்கள் குடும்பத்துக்கு போக வீடில்லா ஏழை க்கு குடிசையாவது கட்டிக்கொடுங்கள்.அரசியலில் எல்லாம் புது மாப்பிள்ளைகளுக்கு ஒரு முறை தான் வெற்றி கிடைக்கும். விரோதம் வரும். தூக்கம் கெட்டுப்போகும். யாரையும் பகைத்துக்கொள்ளவேண்டியிருக்கும். வேண்டாம் இது.
    about 6 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
    Karthi  Up Voted
  • Vittalanand Rao  
    ஐடா சாமி பயம் இல்லை தயக்கம். நல்ல வியாக்கியானம்.தயக்கம் எங்கே அரசியலில் வெற்றிகிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயத்தினால் தான் வருகிறது. தூண்டில் போடுகிறார்கள் ஒரு தேர்தலில் வெற்றி நிச்சயம் அடுத்தட தேர்தலில் அட்ரஸ் இல்லாமல் போகும். வேண்டாம் இந்த விபரீத ஆசை. பாடுபட்டு சேர்த்த பணத்தை தான தருமங்களுக்கு செலவழியுங்கள்.ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம் படியுங்கள்.புத்தரின் உபதேசத்தை விட அதில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது காமம் குரோதம் மோகம் இவற்றினால் வரும் கேடுகளையும் மனிதன்வாழ வேண்டிய முறையும் சொல்லப்பட்டிருக்கிறது..கவினர் கண்ணதாசனின் தெளிவுரையுடன் கிடைக்கிறது.படித்து தெளிவு பெற்றால் இமயமலைக்கு போகவேண்டியிருக்காது. அரசியலிலும் புக வேண்டி இருக்காது.
    about 6 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
    Karthi  Up Voted
  • Ram  
    இந்தப் பேட்டியில் உள்ள விஷயங்களை ஏற்கனவே பலமுறை ரஜினி சொல்லிவிட்டார். இருந்தாலும், ஒவ்வொரு பட ரிலீசுக்கு முன்னும் ரஜினி நார்மலாக அடிக்கும் ஸ்டண்ட்தான் இது. தமிழ் படங்களில் நடித்து கோடி, கோடியாக சம்பாதித்தும் தமிழ்நாட்டில் அதில் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்யாத புத்திசாலி ரஜினியா தமிழக அரசியலில் இறங்குவார் ??? அட, திருந்துங்கப்பா, இதே கேள்வியை இன்னும் எத்தனை நாளைக்கு அவர்கிட்ட கேட்பீங்க ???
    Points
    185
    about 7 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
    SRINIVASAKAN · SRINIVASAKAN  Up Voted
  • Ashok  
    Building strong Basement weak
    about 7 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
    Karthi  Up Voted
  • sathyajith  
    உங்க மூஞ்சல்லாம் 30 செகண்டுக்கு மேல பாக்க முடியல சாமி ..இமயமலை போயிடுங்க ராஜா..
    Points
    12880
    about 7 hours ago ·   (6) ·   (3) ·  reply (0) · 
    SRINIVASAKAN · SRINIVASAKAN · Karthi  Up Voted
  • sathyajith  
    இன்னும் ஏன் ஹீரோவா நடிச்சு மக்கள வருத்தெடுக்கறீங்க.. நீங்க நடிக்கறத நிறுத்தனாலே நாட்டு மக்களுக்கு நல்லது பண்ணமாதிரி..
    Points
    12880
    about 7 hours ago ·   (6) ·   (2) ·  reply (0) · 
    SRINIVASAKAN · SRINIVASAKAN · Karthi  Up Voted
  • sathyajith  
    நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்கனும் சாமி. .. அதனால கட்டாயம் நீங்க அரசியலுக்கு வந்திராதீங்க..
    Points
    12880
    about 7 hours ago ·   (4) ·   (1) ·  reply (0) · 
    Karthi  Up Voted
  • Arulselvam  
    புரியுது ரஜினி..........படம் நல்லா பிசினெஸ் ஆகி கல்லாப் பெட்டி நெறயனும் அதானே............நீங்க குறைந்தது ஒரு இருபது வருஷமா ஒங்க படம் வரப் போற நேரத்துல மட்டும் மக்களுக்கு நல்லது செய்றதப் பத்தி பேசறீங்க.ஒரு இதையும் செய்யல.எதுக்குங்க சுத்தி வளைச்சி.........நேரடியா கெஞ்சுங்க,படம் பாக்க சொல்லி.நல்லாருந்தா பாக்கப் போறாங்க.ஆனா நீங்க சினிமாவுல நடிக்கிரிங்களோ இல்லையோ நெஜத்துல சும்மா ஆஸ்கார் லெவெலுக்கு பெர்பார்ம் பண்றீங்க சூப்பரு...........!