Showing posts with label ரொமாண்டிக் காமெடி. Show all posts
Showing posts with label ரொமாண்டிக் காமெடி. Show all posts

Thursday, January 19, 2012

சந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0Rj3Ru_HpgSbiBcKGyJnk2ZOG9hAo5veDWyOD63FYaS2PG8JNdpeAzsm3PqOy1vTxkQFRprxQWCTkfXrrMG_b0MfiJf78HUYikrXZhoYHpN3bmr3vTi1JspP-Wlvj0dSR8MCByj93Os65/s1600/vinayaka-movie-review-6140854c.jpg 

1. ஃபாரீன் ஜிகிடி - தமிழர்கள் நீங்க தான் தமிழை மறந்துட்டீங்க.நான் தமிழ் கத்துக்கிட்டேன்.. ஏன் விசித்திரமா பார்க்கறீங்க?

2.  நாம கண்ணை மூடறப்போ  கண்ணுக்குள்ள என்ன கலர் தெரியுதோ  அதை வெச்சு நாம என்ன மூடுல இருக்கோம்கறதை சொல்லிடலாம்..  மஞ்சள் கலர் தெரிஞ்சா ஹேப்ப்பி மூடு, சிவப்பு கலர் தெரிஞ்சா டிஸ்டர்ப்பான மூடு, ஆரஞ்ச் கலர்னா குழப்பமான மன நிலை..  ( எனக்கு ஒண்ணு தான் புரியலை.. கண்ணை திறந்து வெச்சாத்தானே எதிர்ல கலரோ, ஃபிகரோ நிக்கறது தெரியும்,, அதையும் மூடிட்டா எப்படி தெரியும்?)

3.  சந்தானம் - டேய் , கொத்தனாரை கூட்டிட்டு வந்து  குறட்டை விடற அந்த வாயை குதறி எடு

4. கணவன், மனைவி 2 பேரும் ஒரே மன நிலைல இருந்தா ( SAME MENTALITY) வாழ்க்கை ரொம்ப நல்லாருக்கும்.. ( வாஸ்தவம் தான், மேரேஜ் ஆனாலே பாதிப்பேரு மென்ட்டல் ஆகிடறாங்களே, அப்புறம் எப்படி அந்த மெண்ட்டாலிட்டி வரும்?)

5.  என் கிட்டே ஏகப்பட்ட கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க.. எல்லாரும் செம அழகு.. 


அப்படியா? ஷேர் பண்ணிக்கலாமா? ஹி ஹி ( அடேய் அதென்ன ஒன் பை டூ டீ சாப்பிடற மாதிரியாடா?)



6.  1942 ல தேசியக்கொடி வெச்சிருக்கற மாதிரி ஒரு ஷாட் எடுத்திருக்கீங்க, அந்த  டாக்குமெண்ட்ரில ஆனா பாருங்க 1947ல தான் நேஷனல் ஃப்ளாக் வடிவமைச்சதே..( நீங்களே லாஜிக் மிஸ்டேக் சொல்லிட்டா அப்புறம் ஆடியன்ஸ் எங்களூக்கென்ன வேலை?

7. சானியா மிர்சா சொல்லி இருக்காங்க  FREE MARITAL SEXஸை நான் வரவேற்கிறேன் அப்டினு. ஆனா இங்கே நம்ம நாட்ல அதை ஒத்துக்க மாட்டாங்க.. 

அப்படியா? சரி... நீ மேரேஜ்க்கு முன்னால கில்மா பண்ணி இருக்கியா? இல்லையா?

வாட்?

கேட்ட கேள்விக்கு பதில், செய்வியா? மாட்டியா?


8. டேய்.. வாட்டர் டேங்க்ல இருந்து எந்திரிச்சு வர்றீங்களே, 2 பேரும் என்னடா பண்ணிட்டு இருந்தீங்க?

 கம்பைன் ஸ்டடி ஹி ஹி 

ம்க்கும், அவ மார்க் எடுக்க மாட்டா, 3 மாசம் கழிச்சு வாமிட் தான் எடுப்பா.. 


9.  அவனைப்பார்த்ததும் ஏண்டி பயப்படறே?

அலர்ஜி டி


10.  பேய் இல்லைன்னு எனக்குத்தெரியும், ஆனாலும் இருட்டுன்னா எனக்கு பயம் தான் ஹி ஹி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD-eGjomU8S10blm-Jygt9yyx4ggeRmIfPU9L3TagtKuMUB3vmOXem2-e1_fOxvgo2bAKD8hNw8meRxb9XtEJS1P3LQVrmQyFZeK7sOY5XwA5g6R8ZpCjrRcXi8gNmUMzjf57tsMb3y1fT/s1600/Vinayaka-movie-stills-4.JPG

11. எவனுக்கு தன்னை பிடிக்குதோ அவன் தன் மனைவியை நல்லா பார்த்துக்குவான்.. 


12.  ஜிகிடி - நம்ம 2 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு

என்னது?

நம்ம 2 பேரும் கே-ல ஸ்டார்ட் ஆகுது

அப்போ 2 பேரும் கேனையா?

13. நீ தான் இப்போ காஃபி போட்டியா?

ஆமா, ஏன்?என்னை பொண்ணு பார்க்க வந்தா ஆளூங்களை விரட்ட இப்போ இருந்தே ட்ரெயினிங்க் எடுக்கறேன்


14.  ஏண்டா, நான் குண்டா இருக்கறது என் தப்பா? குண்டா இருக்கறவங்க லவ் பண்ணக்கூடாதா?

அவ தாங்க மாட்டாடா..

15.  நோ சொல்றதுக்குத்தான் டைம் எடுத்துக்கறேன், அவன் கிட்டே எப்படி இதை சொல்றதுன்னு தான் தெரியல.. 


16. மியாவ் மியாவ் பூனை.. பர்ஸை போட்டுட்டு போகுது யானை..

17. அய்யய்யோ, இங்கே வெச்ச்சிருந்த மஞ்சள் கலர் ஃபைல் காணோம்.. 


இவ்ளவ் தானே, அதுக்கு ஏன் பதர்றே? இருக்கற ஃபைலுக்கு மஞ்சள் கலர்  அடிச்சு எடுத்துட்டு போ..

18.  உன் பாய் ஃபிரண்ட் ஃபயர் சர்வீஸ்ல இருக்கானா? எதுக்கு மிஸ்டு கால் தர்றே?

19. சந்தானம் - டேய் நாய் நக்குன நாரை மாதிரி ஏண்டா இருக்கே? 

20.. பொண்ணுங்க லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகுதான் ஓவரா சீன் போடறாங்க.. 
( எப்படியோ சீன் இருந்தா நல்லதுதான் ஹி ஹி )

http://timesofindia.indiatimes.com/photo/5883504.cms

21.  லேடீஸ் மாதிரி காதலை எக்ஸ்போஸ் பண்ண ஜெண்ட்ஸ்க்கு தெரியறதில்லை ( ஆமாங்க.. நாங்க எப்பவும் தத்தி,, நீங்க தான் அதுல புத்தி)

22.  அவ தான் க்ரீன் சிக்னல் குடுத்துட்டாளே.. ஏன் பேக் அடிக்கறே?

23. ஜிகிடி -  கிஸ் தர்லைன்னு புலம்புவானுங்க.. தந்தா அட்வாண்டேஜா எடுத்துக்குவானுங்க.. ( ஹி ஹி ஹி )

24.  வீட்ல நீ கண்ணாடியை பார்க்கறதே இல்லையா?

ஆ ஆ ஆ ஆ , மேக்கப் போட்டது பத்தாது போல..

25.  என் ஆல் செம குண்டு சுமோ மாதிரி இருப்பா.. 

26.  குட் ஃபிரண்ட்ஷிப்க்கு ஈகோ ஒரு தடையா இருக்கக்கூடாது.. 

27. உண்மையான காதலா இருந்தா மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க் வரவே கூடாது.. 

28. கணவன் மனைவிக்குள்ள  சண்டையே போடாம இருந்தா அது என்ன தாம்பத்யம்? (சின்ன சின்ன ஊடல்களும் அதற்குப்பின்னான கூடல்களும் தான் வாழ்க்கையை சுவராஸ்யம் ஆக்குகின்றன)

29. கோபத்துல இருக்கறப்ப தான் மனசுக்குள்ள இருக்கறது வெளீல வரும்.. ( அப்போ நாம வாயே திறக்கக்கூடாது போல )

30.  நான் இது வரை யார் கிட்டேயும் சாரி கேட்டதே இல்லை..

ஓஹோ சுடி மிடி தாவணி யாவது கேட்டிருக்கியா?

Friday, January 06, 2012

விநாயகா - HITCH பட தழுவலா?-சினிமா விமர்சனம்

 http://picasamusic.com/musicimg/Vinayaka.jpg 

சில பொண்ணுங்க பார்க்க செம ஸ்டைலிஸா இருக்கும், வீட்டுக்குப்போய் பார்த்தா அதுவும் மேக்கப் இல்லாதப்ப பார்த்தா மேஜிக் ரியலிஸம், மேக்கப் பொய்யிஸத்தோட மஹிமைலதான் அவங்க அழகானாங்கன்னு உண்மை தெரியும்.. அந்த மாதிரி இது ஏதோ ஒரு தெலுங்குப்ப்படம்.. தியேட்டருக்கு கூட்டம் வரவைக்கனும்கறதுக்காக சந்தானத்தை 8 சீன்ல நடிக்க வெச்சு ஒப்பேத்தி இருக்காங்க.. போஸ்டரை பார்த்ததும் நேரடித்தமிழ்ப்படம்னு தப்பா  நினைச்சுட்டேன்..

 ஹீரோ ஒரு குண்டு பார்ட்டி கம் ஓவர் குண்டு பார்ட்டி.. அவர் முகம் பார்க்காம ஒரு ஜிகிடி கூட சேட் பண்றாரு.. நேர்ல மீட் பண்ணலாம்னு முடிவு எடுத்தப்போ அந்த ஜிகிடி ஹீரோவோட குண்டான உடம்பை பார்த்து தான் யார்னு வெளிக்காட்டிக்காமயே எஸ் ஆகிடுது.. ஹீரோவுக்கு செம கடுப்பு.. அப்புறம் அவர் புதுசா ஜாயின் பண்ற கம்பெனில ஹீரோயினை பார்க்கறாரு.. பார்த்த உடனே அந்த லவ் அவருக்கு வந்து தொலைச்சிடுது.. 

ஹீரோயினுக்கு அப்படி எந்த அபிப்ராயமும் இல்ல.. அவங்க வீட்ல ஒரு மாப்ளையை பார்க்கறாங்க .. மாப்ள என் பொண்ணு கூட பழகி பாருங்கன்னு அனுப்பி வைக்கறாங்க.. தந்தையுமானவன், மாமாவும் ஆனவன்னு அப்பாவை வாழ்த்திட்டே ஹீரோயின் அந்த மாப்ளை கிட்டே லைட்டா பழகுது.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgr74oFD5yuIBI6vfrzaTzumxCKPCzeT4ORJUT1cmwcuec4wOnXMRLRum6cqAzFFi_LESty42_lBa8j8JJqHa2ohxAKucsoaA_phzQ0ruBATHwjuDdW1x9scYKuYfeOp657Q585gJooChM/s1600/Vinayaka+Movie+10.JPG

டீக்கடைல சொல்ற மாதிரி அதென்னா லைட்டா பழகறது, ஸ்ட்ராங்கா பழகறதுன்னா - அங்கங்கே லைட்டா தொட்டுக்கிட்டே , மொக்கை ஜோக் சொன்னாக்கூட  ஹா ஹா-னு சிரிக்கறது லைட்டா பழகறது.. அதுக்கு ஆப்போசிட் ஸ்ட்ராங்கா பழகறது..

6 ரீல் பழகுன பிறகு ஒரு சப்ப ரீசனுக்காக ஹீரோயின் டபக்னு ஜெ சசியை கழட்டி விட்ட மாதிரி கழட்டி விட்ருது.. ஹீரோ கூட அதுவரை வெறுப்பா, அருந்துதலா பழகிட்டு இருந்தவர் திடீர்னு கெக்கே க்கே பிக்கெக்கேன்னு சிரிச்சுட்டே பழகுது. 

என்னமோ லவ்வர்ஸ்க்குள்ளே ஏதோ டல் அடிக்குமே என்னாது? ஆங்க் அதான்பா ஊடல்.. அது அவங்க 2 பேருக்கும் வந்துடுது.. பொதுவா லவ்வர் எவ்வளவு கேவலமா திட்டுனாலும் நாமெல்லாம் அசால்ட்டா நிப்போம் . இங்கே நாமெல்லாம்னா நான் என அர்த்தம் ஹி ஹி , ஆனா பாருங்க ஹீரோவை ஹீரோயின் சுமோ, குண்டா என திட்னாங்காட்டி  என்னமோ ஓ பி எஸ் ஜெ கிட்டே கோபிக்கற மாதிரி  2 பேரும் பிரியறாங்க.. 

அவங்க மறுபடி இரு சப்பை மேட்டருக்காக எப்படி இணையறாங்க என்பதே கதை.. 

விஜய் யை வெச்சு லவ் டுடே தந்த பாலசேகரன் தானா இந்த பாலசேகரன்? தெரில..  இவர் அநேகமா விசு அல்லது பூரணம் விஸ்வநாதன் கிட்டே அசிஸ்டெண்ட்டா ஒர்க் பண்ணி இருப்பார்னு தோணுது.. படம் பூரா நாடகத்தனமா  ஏகப்பட்ட காட்சிகள்.. ரொம்ப ஸ்லோ.. 

ஹீரோவுக்கு நடிக்க வாய்ப்பு இருக்கு. க்ளைமாக்ஸ்ல மட்டும் கொஞ்சம் நடிக்கறார்.. இவர் சந்தானம் கூட பண்ற காமெடிங்கற பேர்ல நடத்தற கூத்து கடுப்பு அடிக்குது.. 

ஹீரோயின் பியா.சாயல்ல இருக்கறாரு.பையா படத்துல கார்த்தியோட தோழிகள்ல ஒருத்தரு, பேரு சோனியா . இவருக்கு சுருண்ட அலை பாயும் கூந்தலும் இந்திய தேசிய நிறமான மாநிறமும் அழகிய பிளஸ்.. சட் சட் என சிரிக்கும் கண்கள் , லிப்ஸ்டிக் போடாமலேயே ரோஸ் கலர் உதடு இவருக்கு கூடுதல் பிளஸ்.. ஆனால் சுவிட்ச் போட்ட மாதிர் பல இடங்களீல் டக் டக் என்று சிரிப்பது லேசா செயற்கை தட்டுது ( நாங்க எல்லாம் ஜிகிடியை ரசிச்சாலும் குறைகளை கரெக்டா கண்டுபிடிச்சுடுவோமாக்கும்.. ஹி ஹி )

சந்தானம் காமெடி வலிய திணிக்கப்பட்டது, அதனாலயே படத்தில் ஒட்டவில்லை.. கஷ்டபட்டு சிரிக்கவேண்டியதாகிறது.. 



http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/vinayaka/vinayaka-09.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோயின், ஹீரோயின் தோழியாக வருபவர், சந்தானத்தின் அண்ணியாகவும், ஹீரோவின் அக்காவாகவும் வரும் நடிகை என  ஸ்க்ரீனில் எப்போதும் ஒரு அழகிய பெண் கிராஸ் பண்ணீட்டே இருக்கு.. 

2.  சென்னை என தொடங்கும் டைட்டில் சாங்க், இது காதல் வரும் சமயம், அட ரோஜாக்கூட்டமா? என தொடங்கும் மெலோடி சாங்கும் கேட்க இதம்.. பாடல்கள் வைரமுத்து என்பதால் கவிதை லைனை குறை சொல்ல தேவையே இல்லை..

3.  ஃபைட், பஞ்ச் டயலாக் என எதுவும் வைக்காமல் ஒரு ஐ டி கம்பெனியில் நடக்கும் சம்பவங்களாகவே நீட்டாக எடுத்து முடித்தது..

ஹீரோவின் அக்காவாக வரும் நடிகை இவர்தான், இவரது கர கர வித்தியாசமான வாய்ஸ் செம பிளஸ்
இயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. ஒரு இண்ட்டர்வியூவில் பொதுவாக மேனேஜரோ அல்லது கேள்வி கேட்கும் நிலையில் உள்ள எதிராளியை எடுத்ததும் வா போ நீ என ஒருமையில் அழைக்க மாட்டார்கள், அதுவும் ஐ டி கம்ப்பெனியில் 

2. ஹீரோவின் அக்கா ரொம்ப ஒல்லி.. ஹீரோயின் மீடியம் ( குத்து மதிப்பு அவதானிப்பு) ஆனா ஹீரோயின் ஒரு டைம் மழைல நனைஞ்சுட்டு வரும் சீனில்  தன் அக்காவின் நைட்டியை ஹீரோயினுக்கு ஹீரோ தர்றார்..அவரோட “எல்லா” டிரஸ்ஸும் அவருக்கு மேட்ச் ஆவது எப்படி?

3. ஹீரோயின் ரொம்ப அட்வான்ஸ் டைப்.. பசங்க வழியறதை ஈஸியா கண்டுபிடிக்கறவ.. அவ ஹீரோவை பயங்கரமா கிண்டல் அடிச்சுட்டு 7 ரீல் வரை வெறுக்கறவ ஹீரோ ரவுடிகளை ஹீரோயின் கிட்டே இருந்து காப்பாத்துனதும் உடனே லவ் வந்துடுமா?

4. ஹீரோயின் ஹீரோவை கோபத்துல குண்டா-னு சொல்லிட்டதால ஊடல்.. இதுக்கு க்ளைமாக்ஸ்;ல ஒரு ஸாரி சொன்னா போதாதா? ஹீரோயின் மண்டி போட்டு மன்னிப்பு கேட்பது ஓவர்.. ஐ டி யில் படிக்கும் அலட்சிய அல்ட்ரா மாடர்ன் பெண் இப்படி நடப்பாளா?

5. ஹீரோயின் தோழி ஒரு டைம் அவளோட லவ்வர் செல்ஃபோன்ல கால் பண்றப்ப வீட்ல இருந்துக்கிட்டே இப்போ நான் பயங்கர டிராஃபிக்ல மாட்டி இருக்கேன்ன்னு பொய் சொல்றா.. ஏன் வேற ஏதாவது சாதா பொய் சொல்லலாமே? நான் பிசின்னு,. ஏன்னா ரூம் அமைதியா இருக்கு.. டிராஃபிக்னா பேக் கிரவுண்ட்ல  சத்தம் கேட்கனுமே?

6. ஹீரோயினின் தோழி பல ஆண்களோட கில்மாவுக்கு ரெடியா இருக்கறவ-னு எதுக்கு தேவையே இல்லாம க்ளைமாக்ஸ்ல ஒரு சீன் வருது? ( ஸீன்னா ஸீன் இல்ல ஹி ஹி )



டி வி ல போட்டா பார்க்கலாம்.. பாதி படம் தூங்கிட்டே தான் பார்த்தேன் .. 

இது தெலுங்கு டப்பிங்க் என்பதால் விகடன் விமர்சனம் இல்லை..இருந்தாலும் ஒரு ஒப்பீட்டுக்காக 

விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 35

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் பார்த்தேன்.. 

பொங்கல் வரை ஓடும் , அதாவது 7 நாட்கள்

வில்ஸ்மித் நடிச்ச ஹிட்ச் படத்தின் தழுவல் இந்தப்படம்னு சிலர் சொன்னாங்க, ஆனா அந்தப்படம் நான் பார்க்கலை ( டைட்டிலுக்கான விளக்கம்)

diSki

சந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா