Showing posts with label ரிவாரி. Show all posts
Showing posts with label ரிவாரி. Show all posts

Sunday, September 15, 2013

2014 ஆம் ஆண்டின் இந்தியப்பிரதமர் மோடியின் அரியானா - ரிவாரி உரை



ரிவாரி: அரியானா மாநிலம் ரிவாரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்வதாக மேடையில் விழுந்து வணங்கி மரியாதை செலுத்தினார். இந்த இந்நேரத்தில் பலத்த கரகோஷமும், வாழ்த்துக்களும் தொண்டர்கள் எழுப்பினர். இந்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. 


தொடர்ந்து பா.ஜ., பிரதம வேட்பாளர் மோடி பேசுகையில்: இந்திய ராணுவ வீரர்கள் இந்த நாட்டை காத்து வருகின்றனர். அவர்களின் வீர, தீரம் போற்றுதலுக்குரியது. நீண்ட நாட்களுக்கு பின்னர் நான் ராணுவ வீரர்களுடன் இருப்பது பெருமையாக கருதுகிறேன். இவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க கடமை பட்டுள்ளோம். அக்னி 5 இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. மகிழச்சியான செய்தியை தந்த விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன். 2 நாட்களுக்கு முன்னர் என்னை பிரதம வேட்பாளராக அறிவித்துள்ளது எனது வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியம். இந்த அறிவிப்பு வந்த பின்னர் உங்கள் மத்தியில் பேசுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.


‘ நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவன் ’-




நான் மிக ஏழை குடும்பத்தில் பிறந்து வந்தவன். நான் பணம் சேமித்து வைத்து சைனிக் பள்ளி புத்தகங்கள் வாங்கியவன். எனது தந்தையிடம் பணம் கேட்ட போது அவர் தர மறுத்து விட்டார். நான் சிறுவனாக இருந்தபோது ராணுவ பள்ளியில் சேர்வதற்கான விளம்பரம் பார்த்தேன். இங்கு குறிப்பேடு வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை. 2 ரூபாய் கூட என்னிம் இல்லாமல் இருந்தது. நான் பணம் சேமித்து வைத்து வாங்கினேன். நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். ராணுவ வீரர்களுக்கு உணவு பரிமாறுவேன்.நான் சிறுவனாக இருந்தபோது எனது தந்தைக்கு தெரியாமல் எல்லைப்பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களுடன் இருந்துள்ளேன். இவர்களுக்கு நான் டீ மற்றும் உணவு பரிமாறுவேன். இது போன்று பல நாட்கள் இவ்வாறு செய்துள்ளேன்.



ராணுவ வீரர்களுடன் தீபாவளி :




குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட போது ராணுவ வீரர்கள் சேவை பெரும் பங்கு வகித்தது. இவர்கள் உயிருக்கு போராடியவர்களை இடிபாடுகளில் இருந்து காப்பாற்றினர். இந்திய - பாக்., எல்லையில் தாக்குதல் நடந்த போது நமது வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் நமது பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி , இது பாக்., படையினர் அல்ல. பாக்., ராணுவ சீருடையில்தான் பயங்கரவாதிகள் வந்தனர் என்கிறார். பீகாரை சேர்ந்த அமைச்சர் ஒருவர் சாவதற்குத்தான் நாம் ராணுவத்தில் சேருகிறோம் என்கிறார். நக்சல் மற்றும் பயங்கரவாதிகளால் நமது ராணுவ வீரர்களை இழந்து விட்டோம். ராணுவ வீரர்கள் அருமை நமது தலைவர்களுக்கு தெரியாமல் போய் விட்டது. நான் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது எல்லைக்கு போய் தீபாவளியை கொண்டாடுவேன் , வரும் தீபாவளியையும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவேன். 



வாஜ்பாய், அத்வானிக்கு பாராட்டு :




சீனா நமது எல்லையை பிடித்து ஆக்கிரமித்துள்ளது . அருணாசல பிரதேசத்தை பிடிக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஊடுருவல் தொடர்ந்து நடக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் திறமையற்ற காரணத்தினால் தொடர்ந்து சீனாவும், பாகிஸ்தானும் நம்மிடம் வாலாட்டி வருகிறது. சீனா, பாகிஸ்தான் எல்லையில் பிரச்னை வருவது மத்திய அரசின் கையாலாகாத்தனமே . கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு எல்லா வகையிலும் அழிவு பாதைக்கு கொண்டு சென்றுள்ளது. வாஜ்பாயும், அத்வானியும் வெளிநாட்டு விவகாரங்களில் திறம்பட தெளிவான முடிவு எடுத்தனர். பயங்கரவாதம் அழிப்பதிலும், வளர்ச்சி பணிகள் காண்பதிலும், உலக அமைதிக்கும், நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.



பாகிஸ்தானுக்கு அறிவுரை :




பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க கூடாது. இந்த போக்கை கைவிட வேண்டும் . இந்தியாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம். இது ஏழை மக்களுக்கு பயன் தராது. கல்வி அறிவை வளர்க்க, வறுமையை ஒழிக்க பாகிஸ்தான் பாடுபடட்டும். 



ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி:




வளமான இந்தியா, பலமான ராணுவம் உருவாக வேண்டும் என நாங்கள் கனவு காண்கிறோம். நமது ராணுவமே மதச்சார்பற்ற தன்மையின் அடையாளம். நமது பட்ஜெட்டில் அதிக பணம் ராணுவத்திற்கு செலவிடப்படுகிறது. இது குறிப்பாக சிறிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அதிகம் செலவழிக்கிறோம். அயல்நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர வேண்டும். குஜராத்தில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை துவக்கியிருக்கிறோம். ராணுவத்தினருக்கான பென்சன் கொள்கை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 


இந்த நாட்டிற்கு அரும்பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேலை அரசு மறந்து விட்டது. சர்தாருக்கு ஒவ்வொரு கிராமம் தோறும் சிலைகள் நிறுவப்பட வேண்டும். இங்கே கூடியிருக்கும் கூட்டம் போல் இதுவரை நான் பார்த்ததில்லை. எதிர்காலத்தில் நல்ல மாற்றம் நிகழப்போவது உறுதி. பாரத் மாதாக்கி ஜெ., பாரத் மாதாக்கி ஜெ., வந்தே, வந்தே என உரத்த குரலில் பேசி தனது உரையை மோடி நிறைவு செய்தார். 

50 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர்: பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன் முதலாக பங்கேற்கும் பொதுக்ககூட்டம் என்பதால் மோடி இன்று என்ன பேசப்போகிறார் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் இந்திய ராணுவ தளபதி வி.கே. சிங் மற்றும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். வி.கே.,சிங் பங்கேற்றது வரும் காலத்தில் பாஜ.,வுக்கு நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

பா.ஜ., தேர்தல் பிரசார குழு தலைவராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் மோடி இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் நடக்கும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசி வருகிறார். இதுவரை ஜெய்ப்பூர், ஐதராபாத், ராய்ப்பூர், உள்ளிட்ட நகரங்களில் தொண்டர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.




மென் போக்கு எடுபடாது: வி.கே., சிங்:




இன்றைய கூட்டத் துவக்கத்தில் பேசிய முன்னாள் ராணுவ தளபதி வி.கே., சிங் கூறியதாவது: நமது இந்திய ராணுவம் பலமாக இருக்க வேண்டும். ராணுவத்தினர் இருப்பதால் தான் நமது நாட்டு மக்கள் நிம்மதியாக தூங்க முடிகிறது. நமது ராணுவத்தினர் பலர் இந்த நாட்டிற்கு உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இவர்களை நாம் இப்போது நினைந்து பார்த்து அவர்களுக்கு சில நிமிடங்கள் மரியாதை செலுத்துவோம். சீன படையினரை விரட்டியடித்த பெருமை இந்த அரியானா மாநில ராணுவத்தினருக்கு உண்டு.


 நமது ராணுவம் இன்னும் பலப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். தற்போதைய சூழலில் முன்னாள் ராணுவ வீரர்களும் பயன்படுத்தப்பட வேண்டிய நேரத்தில் இருக்கிறோம். நமது படை பலவீனமானது அல்ல. ஆனால் நம்மை பலவீனப்படுத்த காரணமாக இருந்தவர்களை தூக்கி எறிய வேண்டும். அயல் நாட்டு விவகாரத்தில் நாம் இன்னும் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறோம் . இதன் காரணமாக எல்லை பகுதியில் ஊடுருல், மீறல்கள் அதிகரித்து வருகிறது.


thanx - dinamalar