Showing posts with label ராமராஜன். Show all posts
Showing posts with label ராமராஜன். Show all posts

Wednesday, October 09, 2013

ராமராஜன் லல்லு பிரசாத் யாதவை ஜெயில் தண்டனையில் இருந்து காப்பாற்றியது எப்படி?

 

மாட்டு தீவன ஊழலில் சிக்கிய லாலு நம்ம ஊர் பசுநேசன் ராமராஜனை சந்தித்தால் என்ன பேசுவார்? - ஒரு ஜாலி கற்பனை. 



ராமராஜன்: லாலு ஜி, மாட்டுக்கு தீவனம் வாங்கி நீங்க பல கோடி சம்பாதிச்சிங்க, மாட்டு மடியில இருந்து பால் கறக்கறமாதிரி நடிச்சு சில கோடிகளைச் சம்பாதிச்சவன் நான். 


லாலு: அச்சா... அச்சா... ஆனா உங்களை வாழ்வச்ச மாடு என்ன ஜெயிலில தள்ளிடுச்சே ராமராஜன்ஜி. 


ராமராஜன் : ஆடுற மாட்ட ஆடி கறக்கணும், பாடுற மாட்ட பாடி கறக்கணுங்குறது எங்க ஊரு பழமொழி லாலுஜி. எங்க ஊரு அரசியல் வாதிங்கள பாருங்க, எதையும் செய்ய மாட்டாங்க, ஆனா, திட்டப்பணி செஞ்சு முடிச்சதா பணத்த சுருட்டிட்டு ஜம்முன்னு சுதந்திரமா வெளியில நடமாட்டிட்டு இருக்காங்க. 



லாலு: ஒகே ஜி, நம்ம ரெண்டு பேரும் பசுமாடு விஷயத்துல ஒண்ணு. இப்ப எப்படி தப்பிச்சு வெளியில வரதுன்னு ஐடியா கொடுங்க ராமராஜன்ஜி. 


ராமராஜன்: தீவனம் போட்டவனுக்கு சானி அள்ள தெரியாதுங்கிற மாதிரி இருக்கு உங்க பேச்சு. முதல்ல உங்க காஸ்டியூம மாத்தனும், அரைக்கால் டவுசர், பச்ச முண்டா பணியன், சிகப்பு துண்டு தோல்ல போட்டுக்கிட்டு, ஊருக்குள்ள நடமாடியிருந்தா, பசு நேசன்னு, பீகார்வாசிங்க கொண்டாடியிருப்பாங்க. உங்க மேல சந்தேகப்பட்டு இருக்க மாட்டாங்க ஜி.


லாலு: உங்க படத்த பாக்காம போயிட்டேன் ராமராஜன் ஜி, இப்ப தப்பிக்க வழி என்னான்னு சொல்லுங்க ஜி. 


ராமராஜன்: வெரி சிம்பிள், மாட்டுக்கு என்னா வாங்கி ஊழல் செஞ்சீங்க... 


லாலு: தீவனம் வாங்கி. 


ராமராஜன்: இப்ப அந்த தீவனம் எங்க இருக்கு? 


லாலு: மாடுங்க சாப்பிட்டுடுச்சு. 


ராமராஜன்: எந்த வழக்கா இருந்தாலும், பார்த்த சாட்சி வேணும்: இல்லன்னா, உபயோகப்படுத்தப்பட்ட பொருள சாட்சியா நீதிமன்றத்தில ஒப்படைக்கணும். அப்பதான் வழக்கு நிக்கும். 


லாலு: ராமராஜன்ஜி, நீங்க பாடி பாடி மாட்ட அடக்கிறதலதான் ஸ்பெஷலிஸ்ட்டுன்னு நினைச்சேன். ஆனா, வழக்காடுறதலையும் சூப்பரப்பு. 


ராமராஜன்: (பேசிட்டு இருக்கும் போது, குறுக்கால பேசாத, சின்னபுள்ள தனமா, என்றபடி சிகப்பு துண்டால் லாலுவை அடித்து உட்கார வைத்தபடி) இப்ப தீவனத்த மாடு சாப்பிட்டுடுச்சு, அத சாப்பிட்ட மாடுங்க பாதி செத்து போச்சு. தீவணம் வாங்கினது உண்மை. அதுல ஊழல் நடந்து இருக்கிறதா நிருபிக்க, அத சாப்பிட்ட மாடுங்க சாட்சி சொல்லுனும், இல்லன்னா, ஊழல் நடந்ததா சொல்லுற தீவணத்த கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஒப்படைங்கன்னு, நீதிமன்றத்தல ஒரு போடு போடுங்க லாலுஜி, அப்புறம் உங்கள கம்பி எண்ண வெச்சவங்கள, நாம கம்பி எண்ண வைக்கலாம்.” 



(பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி.. என பாடியபடி ராமராஜன் இடத்தை காலி செய்ய, அவர் நடந்து போகும் அழகை பார்த்து, லாலுஜி, அந்த திசை நோக்கி பெரிய கும்பிடு போட்டபடி, வழக்கை எதிர்கொள்ள தயாராகிறார்.) 


thanx  - the  hindu tamil

Saturday, August 25, 2012

ராமராஜன். கிராமராஜன். ஆனது எப்படி? விகடன் பேட்டி - கிடாவெட்டு


ரு சின்ன ஃப்ளாஷ்பேக்...


 மதுரையை அடுத்து தீப்பெட்டி சைஸில் உள்ள கிராமங்களில் ஒன்றான மேலூர்...


டூரிங் டாக்கீஸில் டிக்கெட் கிழிக்கும் வேலையில் இருக்கும் இளைஞன் குமரேசன். டாக்கீஸுக்கு வெளியே காற்றாட உட்கார்ந்து இருக்கும்போது, உள்ளே திடீரென்று எழுந்த விசில் சத்தத்தையும் கைத்தட்டல் ஆரவாரத்தையும் கேட்டு, குமரேசன் என்னவென்று உள்ளே நுழைந்து ஆவலாக எட்டிப் பார்க்க...


ஆபத்தில் இருக்கும் ஒரு தாயைக் காப்பாற்ற வில்லன்களோடு ஹீரோ எம்.ஜி.ஆர். சிலம்புச் சண்டை போடும் காட்சி திரையில் ஓடுகிறது. தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரக் கூச்சல் குமரேசனின் அடிமனதில் புதைந்துகிடந்த கனவுகளை உசுப்பிவிடுகிறது.


'தானும் இதுபோல ஒரு நடிகர் ஆனால் என்ன’ என்ற கேள்வி பிறக்கிறது. அன்றே குமரேசன், கனவுத் தொழிற்சாலையான சென்னை கோடம் பாக்கத்தை நோக்கிப் புறப்படுகிறான்.



ஜிகினா சினிமா உலகம் வெளியே பளபளப் பாகத் தெரிந்தாலும், உள்ளே முட்களாகப்பரவிக் கிடப்பது குமரேசனுக்கு உள்ளே நுழைந்த பின்பு தான் தெரிகிறது. இருந்தாலும், கனவுகள் அவனுக்கு ஆறுதல் சொல்கின்றன. நம்பிக்கை ஊட்டுகின்றன. வருஷங்கள் ஓடுகின்றன... அந்த குமரேசன் அன்று கண்ட கனவு இன்று நிஜமாகி விட்டது. அன்றைய குமரேசன்தான் இன்றைக்கு பி, சி சென்டர்களில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டு இருக்கும் கிராமத்து ஹீரோவான நடிகர் ராமராஜன்.



''மிகக் குறுகிய காலத்தில் பி, சி சென்டர்களில் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் சைலன்ட் சூப்பர் ஸ்டார் இமேஜுக்கு எது காரணம் என்று நினைக்கிறீர்கள்?''


சி.பி - இளையராஜா, தமிழ் ரசிகனின் விதி,ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை, சிம்ரன் இல்லாத தமிழ் நாட்டில் தமனா இடை அழகி கான்செப்ட் தான் 


''மக்கள் என்னை விரும்பறதுக்கு முக்கியமான காரணமா நான் நினைக்கிறது நகைச்சுவை - சென்டிமென்ட்ஸ். இதோடு கலந்த கிராமத்துப் பின்னணியில் அமைந்த திரைக்கதைகள்தான். அடுத்து, முக்கியமா அம்மா மேல ரொம்பப் பாசமா இருக்கிற பிள்ளை ரோல் நான் நிறையப் பண்றதால, பெண்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.


 அடுத்து இளையராஜா என்னோட படங்களுக்குப் போடற அருமையான இசை. வரப்பிலே நடந்து போற கிராமத்துவாசியில் இருந்து வாகனத்துல போற ஆபீஸர் வரைக்கும் அனைவரையும் அவரோட டியூன் முணுமுணுக்கவெச்சிருக்கு. அடுத்து, விரசம் இல்லாத காமெடி. ஒரு சராசரிக் கிராமத்து இளைஞன் கேரக்டருக்கு நான் ரொம்ப இயல்பாப் பொருந்திப் போறதும் ஒரு காரணமா இருக்கலாம்.''


'' 'கரகாட்டக்காரன்’ படத்தின் மிகப் பெரிய வெற்றி, அடுத்த படம் இதைவிடப் பெரிய ஹிட்டாகணும் என்கிற பயத்தை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறதா?''



''பயமா, அது எதுக்கு சார்? இந்தப் படம் மட்டுமா ஓடியிருக்கு? இதுக்கு முன்னால வந்த என்னோட நாலஞ்சு படம்கூடத்தான் தொடர்ந்து நூறு நாள் போயிருக்கு. இந்தப் படம் அதிகமா சில்வர் ஜூப்ளி வரை ஓடியிருக்கு. அவ்வளவு தான்.

என்னோட இயக்கத்துல நாலு படம் பண்ணேன். 'மண்ணுக்கேத்த பொண்ணு’ படம் தவிர, வேறு எந்தப் படமும் சரியாப்போகலை. அப்பகூட நான் இடிஞ்சுபோயிடலையே? சந்தர்ப்பம் வரும்னு காத்துட்டு இருந்தேன். அப்புறம் நடிக்கறதுக்கு சான்ஸ் வந்தது. நடிகனா ஆயிட்டேன். எல்லாத்துக்கும் நேரம்தான் காரணம். நாளைக்கு எப்படி இருக்கோம்கிறதைப் பத்தி நான் கவலைப்படறது இல்லை. இன்னிக்கு நான் செய்ற வேலையை சின்சியரா செய்றேன். அவ்வளவுதான்.''
 http://123tamilgallery.com/images/2010/09/kollywood-actor-ramarajan-tamilnadu-actor-ramarajan-03.jpg

''பெரிய பேனர்களான ஏவி.எம்., சத்யா மூவிஸ் போன்ற நிறுவனங்களில் நீங்கள் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?''



''ஆமா, ஒப்புக்கறதில்லை. ஏன்னா, நீங்க சொல்ற பெரிய பேனர்கள், நான் நடிகனா அறிமுகமாகி ரெண்டு படம் வெளிவந்தப்போ, எனக்கு சான்ஸ் கொடுக்க முன்வரலையே. அன்னைக்கு என்னை வெச்சுப் படம் எடுக்க வந்திருந்தாங்கன்னா, அது என் வளர்ச்சிக்கு உதவுமேனு சம்பளம்கூட வாங்காம நான் நடிச்சுக் கொடுத்திருப்பேன்.


ஆனா, அப்போ அவங்க என்னை ஏறெடுத்துக்கூடப் பார்க்கல. இப்போ நான் பதினெட்டு படத்துக்கு மேல நடிச்சு முடிச்சதுக்கு அப்புறம்தான் என்னை வெச்சுப் படம் எடுக்க வர்றாங்க. அதை நான் ஒப்புக்கத் தயார் இல்லே.



அன்னைக்கு என்னை அறிமுகம் பண்ணினது ஒரு சின்ன தயாரிப்பாளர்தான். அதுக்கு நன்றிக் கடனா, புதுப் புதுத் தயாரிப்பாளர்களை சினிமாவுக்குக் கொண்டுவந்துட்டு இருக்கேன். நீங்க சொல்ற பெரிய தயாரிப்பாளர்கள்கிட்ட ஏற்கெனவே நிறையப் பணம் இருக்கு. இன்னும் எதுக்கு நான் வேற சம்பாதிச்சுத் தரணும்? சின்ன தயாரிப்பாளர்கள் சம்பாதிக்கட்டும். இன்னொரு காரணம் - பெரிய பேனர்ல நடிச்சா, நான் சுதந்திரமா செயல்பட முடியாது.''



''கரகாட்டக்காரனோட வெற்றியை நீங்கள் முன்கூட்டியே எதிர்பார்த்தீர்களா?''



''என்கிட்ட கங்கை அமரன் வந்து கதை சொன்னபோது, ரொம்ப வித்தியாசமா இருந்தது. நாட்டுப்புறக் கலையான கரகாட்டத்தை வெச்சு அதுவரைக்கும் தமிழ்ல ஒரு படம் கூட வரலை. இந்தப் படம் பெரிய சென்டர்களிலேயும் நல்லா ஓடுறத்துக்குக் காரணம், நல்ல கரகாட்டத்தை நகரத்தில் இருக்கிறவங்க நிறையப் பேரு பார்த்திருக்க மாட்டாங்க.''



''படத்துக்குப் படம் கமல் போன்றவர் கள் வித்தியாசமாகச் செய்யும்போது, நீங்களும் ஏன் வித்தியாசமான ரோல்களில் மாடர்ன் டிரெஸ்களில் நடிக்கக் கூடாது?''


''சார்... என் படப் பெட்டியெல்லாம் சென்னையில் இருந்து டெல்லி, கல்கத்தா போறதில்லே. மதுரை, கன்னியாகுமரிதான் போகுது. என்னோட அலட்டிக்காத நடிப்புதான் ஜனங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்க சொல்ற மாதிரி நான் பேகி பேன்ட்டும் டி-ஷர்ட்டும் போட்டு நடிச்சா, இப்படிப் புதுசா மாடர்ன் டிரெஸ் வந்திருக்குனு சின்ன ஊர்களிலே எத்தனை பேருக்குத் தெரியும்? ஏதோ கிறுக்குப்பயனு நினைச்சுடுவாங்க.


பட்டணத்துல இருக்கிறவங்க, நல்ல படம்னு எல்லோரும் சொன்னாதான் தியேட்டருக்கு வருவாங்க. ஆனா, கிராமத்து ஜனங்க 'நம்ம ராமராஜன் படம்’னு என்னோட எல்லாப் படத்தையும் பார்க்க வருவாங்க. எனக்கு பி,சி சென்டரே போதும்!''


''எதுக்காக படங்களில் எம்.ஜி.ஆர். ஸ்டைலைப் பின்பற்றி நடிக்கிறீங்க? ஒரு நடிகர்னு உங்களுக்கு என்று ஒரு தனித்தன்மை அவசியம் இல்லையா?''



''நான் சிகரெட் குடிக்கறதில்லே. மது அருந்தறதில்லே. அப்புறம் சினிமாவுல மட்டும் அந்தப் பழக்கம் இருக்கறதா ஏன் நடிக்கணும்னுதான் அந்த மாதிரி கேரக்டர் பண்றதில்லே. இன்னொண்ணு, என்னோட படத்துல வர்ற லேடீஸ் சென்டிமென்ட்ஸ்... இதெல்லாம் எதிர்பாராதவிதமா, எம்.ஜி.ஆரோட ஃபார்முலா மாதிரியே அமைஞ்சு போச்சு


. அதுக்காக எதையும் நான் வீணா திணிக்கிறது இல்லை. என்னை வெச்சுப் படம் எடுக்கிற எந்த டைரக்டர்கிட்ட வேண்டுமானாலும் கேளுங்க... அவங்க செய்யச் சொன்னாத்தான் எம்.ஜி.ஆர். ஸ்டைல்ல பண்ணுவேன்.''



''அரசியலில் நீங்க நுழைஞ்சதுக்கு அடிப்படைக் காரணம் என்ன? எம்.ஜி.ஆரோட பாதிப்பில் நடிக்க வந்தது மாதிரி அவரைப் போலவே அரசியலில் பேர் வாங்க ணும்னு உங்களுக்கு ஆசையா?''



''அரசியல்ல நான் நுழைஞ்சதுக்குக் காரணம், அந்த ஒரு சம்பவம்தான். தலைவரைச் சின்ன வயசில் இருந்தே எனக்குப் பிடிக்கும். கல்யாணம் ஆன புதுசுல என்னைத் தலைவருக்கு அவ்வளவா தெரியாது. அப்போதான் ரெண்டு படத்துல நடிச்சு முடிச்சிருந்தேன்.


என்னோட மனைவி நளினியை அவருக்குத் தெரியும். தலைவர், எங்க ரெண்டு பேரையும் அவரோட வீட்டுக்குக் கூப்பிட்டு, அவரோட சேர்ந்து சாப்பிடவெச்சு உபசரிச்சப்போ, என்னன்னு சொல்லத் தெரியலை... ஒரு உடன்பிறவா சகோதர ரைப் போல ஒரு அட்டாச்மென்ட் வந்துடுச்சு. தலைவரோட மறைவுக்குப் பிறகு, அவரோட இயக்கத்துக்காக நம்ம மேடத்துக்கு (ஜெயலலிதா) ஆதரவாப் பாடுபட்டுக்கிட்டு இருக்கேன்.''


''உங்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி. ஆகணும்னு ஆசை இருக்கிறதா? நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதே?''



''நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கங்க. எந்தவிதப் பலனையும் எதிர்பார்த்து இயக்கத்துல நான் சேரலை. அதேபோல, அரசியல்ல எந்தவிதமான பதவிக்கு ஆசைப்பட்டும் நான் பிரசாரத்துக்குப் போகலை. மேடத்தோட பலத்தை அதிகரிக்கத் தான் உதவி செய்யறேன். என் கையில் நிறையப் படங்கள் இருக்கு. அதை முடிக்கவே நேரம் இல்லை.


இதுல எனக்கு எதுக்கு அரசியல்? எலெக்ஷன் சமயத்துல பத்துப் பதினஞ்சு நாள் பிரசாரம் போவேன். ஒருவேளை, என்னை மேடமே கூப்பிட்டு நிற்கச் சொன்னாக்கூட... பணிவா, 'எனக்கு விருப்பம் இல்லை’னு சொல்லி டுவேன். என்னோட ஒரே விருப்பம், தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை தொகுதியிலேயும் அ.தி.மு.க. இயக்கத்தைச் சேர்ந்தவங்க ஜெயிக்கணும். அது போதும் எனக்கு.''



''உங்களுடைய வாழ்க்கை லட்சியம் நிறை வேறிவிட்டதாக நினைக்கிறீர்களா?''



''எனக்கு லட்சியம்னு ஒண்ணும் கிடையாது. நடிக்க ஆசைப்பட்டேன். நடிகனாயிட்டேன். பகவத் கீதையில சொல்லியிருப்பதுபோல, எப்பவும் நான் உழைச்சுக்கிட்டு இருக்கேன். பலனை எதிர்பார்க்கறது இல்லே!''



- ந.சண்முகம்

'நம்பிக்கை’ ராஜன்!
ன்றைய சூழ்நிலையில், ரஜினிகாந்த், கமல் கால்ஷீட் பெரிய பேனர்களுக்கு அல்லது சொந்த கம்பெனிகளுக்கு மட்டுமே! அதேபோல புதுத் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு இருந்தவர் விஜயகாந்த். தற்போது தன் சொந்த நிறுவனங்கள், கலைப்புலி தாணு, ஆபாவாணன், பீட்டர் செல்வகுமார், ரங்கராஜ், மணிவண்ணன், சுந்தரராஜன் என்று தனக்கென்று  ஒரு சர்க்கிள் அமைத்துக்கொண்டுவிட்டார்



. சத்யராஜுக்கும் அவருக்கென்று ஒரு சர்க்கிள் உண்டு. இப்படி எல்லாக் கதவுகளும் மூடப்பட்டுள்ள நிலையில், புதிய தயாரிப்பாளர்களுக்கு சொர்க்கவாசல்போல் நம்பிக்கை அளிப்பவர் ராமராஜன். பெரிய தயாரிப் பாளர் படை ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற ராமராஜனின் குறிக்கோள் அவருக்கு ஒரு ப்ளஸ் பாயின்ட்!



சினிமாவில் தனக்கொரு நிரந்தர மார்க்கெட் வந்துவிட்டதால், தனது ஆரம்ப நாள் நண்பர்கள், சென்னையில் தங்க உதவியவர்கள் என்று தனக்கு ஆதரவு அளித்தவர்களின் பட்டிய லைத் தயார்செய்து, அவர்களை வலிய அழைத்துத் தயாரிப்பாளர் ஆக்குகிறார் ராமராஜன். சைக்கிளில் வந்து ராமராஜனிடம் கால்ஷீட் பெற்று, தயாரிப்பாளர் அந்தஸ்து பெற்ற ஒரு புரொடக்ஷன் மேனேஜரும் உண்டு.



நிஜமாகவே கரகாட்டம்!


'கரகாட்டக்காரன்’ படம் வசூலில் சாதனை புரிந்திருப்பது பழைய செய்தி. படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் நியூஸ் - தியேட்டர்களில் நடக்கும் ஒரு தமாஷான விஷயம்தான். திருச்சி, மதுரை சேலம் போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமப்புற தியேட்டர்களில் இந்தப் படம் ஓடும்போது 'மாரியம்மா... மாரியம்மா...’ என்ற பாட்டு வந்த வுடன் பல பெண்கள் 'சாமி’ வந்து ஆட ஆரம் பித்துவிடுகிறார்கள்.



 எனவே, இதற்கென ஒவ்வொரு ஷோவின் போதும் இந்தப் பாட்டு வரும்போது, ஒரு நபர் தட்டில் கற்பூரம் ஏற்றிக்கொண்டு அரங் கத்தினுள் நுழைந்து, சாமி ஆடும் ஒவ்வொரு வருக்கும் திருநீறு போட்டு உட்காரவைக்கிறார்.


- பிரபா

நளினியின் ஆசை!
திருமதி நளினி ராமராஜன், நடிகை சீதா வின் பரம ரசிகை. தன் கணவருடன் சீதா ஜோடியாக நடிக்க வேண்டும் என்று நளினிக்கு அளவு கடந்த ஆசை. ராம ராஜனிடம் வரும் தயாரிப் பாளர்களிடம் நளினி கேட்கும் முதல் கேள்வி 'யார் கதாநாயகி?’ என்பது தான்.



பல தயாரிப்பாளர்களிடம் சீதாவை சிபாரிசு செய்தார் நளினி. படுபிஸியாக இருந்த சீதாவின் கால்ஷீட் கிடைக்கவில்லை. இப்போது நளினியின் ஆசை நிறைவேறிவிட்டது. 'மனசுக்கேத்த மகராசா’ படத்தில் ராமராஜனுக்கு ஜோடி சீதாதான்! இவர்கள் இணைந்த வண்ணப்படம் நமக்குத் தோதாகக் கிடைத்தது. அதுதான் இந்த இதழ் அட்டைப் படம்!

நன்றி - விகடன் பொக்கிஷம்