Showing posts with label ராஜ தந்திரம் (2015)– சினிமா விமர்சனம் ( ராபரி த்ரில்லர்). Show all posts
Showing posts with label ராஜ தந்திரம் (2015)– சினிமா விமர்சனம் ( ராபரி த்ரில்லர்). Show all posts

Wednesday, July 29, 2020

ராஜ தந்திரம் (2015)– சினிமா விமர்சனம் ( ராபரி த்ரில்லர்)


Live Chennai: Rajathanthiram 2 be produced,Rajathanthiram 2,Veera

ஹீரோவும் , அவரோட  நண்பர்கள்  2 பேரும்  ஃபிராடுப்பசங்க, சாமார்த்தியமா  மத்தவங்களை  ஏமாற்றி  காசு  சம்பாதிக்கறவங்க  சாதா  திருடனா  இருக்கற  இவங்களை  ஒரு கோஷ்டி  ஸ்பெஷல்  திருடங்களா  அதாவது  கொள்ளைக்காரங்களா  மாத்த  விரும்புது , எம் எல் ஏவா இருக்கறவங்க எம் பி ஆக ஆசைபப்டற  மாதிரி.

நகரத்துல  மெயின்  ரோட்டில்  இருக்கும்  நகைக்கடையை கொள்ளை  அடிக்கனும், இதான் பிராஜெக்ட், ஆனா  ஹீரோ அதுக்கு ஒத்துக்கலை. அந்தக்கடுப்புல  அந்தக்கோஷ்டி  ஹீரோவை எக்கு தப்பா  மாட்டி விடுது

 கடுப்பான  ஹீரோ  நேரா   அந்த  நகைக்கடை  ஓனர் கிட்டேயே  போய்   இந்த மாதிரி  இந்த ஆள்  உங்க  நகைகக்டையைக்கொள்ளை  அடிக்க  பிளான் போடறாங்க அப்டினு போட்டுக்குடுத்துட்றார்

அதுக்கப்புறம்   எதிர்பாராத  சில  திருப்பங்கள்  நிகழுது

இன்ன தேதில  இன்ன டைம் ல நகைகக்டையைக்கொள்ளை அடிக்கப்போறோம்னு பப்ளிக்கா சவால்  விட்டு  ஒரு பக்கம்  போலீஸ்  காவல் இருக்க , இன்னொரு பக்கம் நகைக்கடை ஓனர் ஆட்கள்  இருக்க  அந்த  நகைகக்டை  எப்படி  சாமார்த்தியமா  கொள்ளை  அடிக்கப்படுது   என்பதுதான்  செமயான க்ளைமாக்ஸ்   

எனை  நோக்கி  பாயும் தோட்டா  படத்தின்  இசை  அமைப்பாளர்  தான் இந்தப்படத்தில்  காமெடியன் ரோல்,  சும்மா  வெளுத்து  வாங்கி  இருக்கார்

நடுநிசி  நாய்கள்  ஹீரோ வீராதான்  இதுல  ஹீரோ , அதுல வாங்குன  கெட்ட பேருக்கு  இது நல்ல   மாற்று. 

நாயகி  ரஜீனா  கேசண்ட்ரா. அதிக   வாய்ப்பில்லை  இருந்தாலும் வந்தவரை  ஓக்கே 


நரேன் ஒரு நல்ல  கேரக்டர்  பண்ணி இருக்கார் அவரது  குணச்சித்திர  நடிப்பு  மனசைத்தொடுகிறது

நகைக்கடை  ஓனர் நடிப்பு கலக்கல் ரகம். பச்சோந்தித்தனமான  நடிப்புல பட்டையைக்கிளப்பறார்

இளவரசு  தமிழ்  சினிமாவால் உரிய  மரியாதை  அளிக்கப்படாத  மிகப்பிரமாதமான  ஒரு நடிகர். அவர்  ரோலும் நடிப்பும் குட்

ஒ:ளிப்பதிவு , எடிட்டிங்  கலக்கல்  ரகம்,  திரைக்கதை  இயக்கம்  அபாரம்


சபாஷ்  டைரக்டர்

1        ஓப்பனிங்  சீனில்  பைக்கை  பேரம்  பேசி  தள்ளி  விடுவதும்  பின் ஆட்டையைப்போடுவதும்  செமயான  காட்ட்சி
2        மல்ட்டி லெவல்  மார்க்கெட்டிங்க்கு ஆள்  பிடிக்கும்  நாயகியை ஒரு கட்டத்தில்  நாயகன் தவறுதலாகப்பேச  அதற்குப்பின் வரும்  ஊடல்கள், சமாதானங்கள்  அனைத்தும்  கவிதை  ரகம்
3          நகைக்கடை  கொள்ளை  பற்றிய  பிளானை  நாய்கன் வில்லனுக்கு  ஃபோனில் அப்டேட்டிக்கொண்டே  காரியத்தைக்கச்சிதமாக முடிப்பது  கலக்கலான  காட்சி
4         ஃபைனான்ஸ்  கம்பெனி  ஆரம்பிக்க  வைத்து  , பிளாங்க்  செக்கில் சைன் பண்ன  வைத்து  வில்லன்  மாட்டி விடும்  நரித்தனம்  அருமை



நச்  டயலாக்ஸ்

1    வாழ்க்கைல  பணம்  தரும்  தைரியத்தை  வேற  யாரும் தரமுடியாது என்ற   உண்மையை தெரிஞ்சவன் நான்

2   அடுத்தவங்களோட பேராசையை முதலீடாவெச்சு நாங்க பணம் சம்பாதிக்கறோம் இது தப்பா?  ( சதுரங்க  வேட்டை சாயல்)

3   வாழ்க்கைல நடக்கும் பல சுவராஸ்யங்கள் நமக்கு முன் கூட்டியே தெரியாது  , அப்டி தெரிஞ்சா  அதுல சுவராஸ்யம் இருக்காது

4        முருகா!  என்னைக்காப்பாற்று, எல்லார் கிட்ட இருந்தும்  என்னைக்காப்பாத்து
5        பொதுவா டபுள் கேம் தான் ஆடுவாங்க, இந்தப்பொண்ணு நம்ம மூணு பேரையும் வெச்சு ட்ரிபிள் கேம் ஆடுதே?
6        பிளட்  டொனேட் பண்னப்போறேன்
 சரி போ, ஆனா உன் உடம்புல  பிளட்  எங்கே  இருக்கு? சொல்லிட்டுப்போ

7        ஆசைபப்டலாம், ஆனா பேராசைப்படக்கூடாது
8    இழந்தவங்களோட அழுகையை இன்னைக்குதான் முதன் முதலா பார்க்கறேன்

8        இழந்ததை  திரும்பப்பெற்று விட்டால் அது தனி மகிழ்ச்சி
9        நாம கடன் வாங்கிட்டு அவனைக்கடன்காரன்னு சொல்றோம்
10    உனக்குதான் எல்லா உண்மையும்  தெரிஞ்சுதே? அப்றம் ஏன் என் கிட்டே கேட்கறே?

 உன்மையை  உன் வாயால கேட்கனும்


11    சொல்றதெல்லாம் உண்மையா  இருந்தாப்போதும், உண்மையை எல்லாம் சொல்லனும்கறது இல்லை

12    நல்லது  பண்ண  ந்ல்ல  மனம்  இருந்தா  மட்டும் பத்தாது , பணமும் வேண்டும்

13 பணம்  போட்டுதான் லாபம்   சம்பாதிக்கனும்னு இல்லை ம் நம்பிக்கையை வெச்சும் பணம்  சம்பாதிக்கலா,ம்

13    நல்லது  பண்னனும்னு  நினைக்கறவங்க  அல்பாயுசுல  போய்டறாங்க  , கெட்டது  பண்ணனும்னு நினைக்கறவங்க  நீண்ட நாள்  வாழறாங்க ,
14    எதிரியை விட்டு விலகி இருந்தா  அவன் என்ன பண்றான்?னு நமக்குத்தெரியாது , அவன் கூடவே  இருந்தாதான்  அவன் திட்டம் நமக்குத்தெரியும்
15  நல்லது  பண்னனும்னு  நினைக்கறவங்க    கூட  நாம  இருக்கறதும்  ஒரு நல்லதுதான்
Rajathandhiram || Tamil Movie Stills / Posters - Veera, Regina Cassandra  (HD) - YouTube
லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1        பொதுவா  பைக்  செகன்ட்ஸ்  வாங்கறவஙக்  தன் தரப்பு மெக்கானிக் கிட்டே ஒரு கருத்து  கேட்டுட்டுதான் வேல்யூவேசன் போடுவாங்க . விற்க வர்றவன் தரப்பு மெக்கானிக் பேச்சைக்கேட்க மாட்டாங்க
2   ஆம்வே  மாதிரி  எம் எல் எம் பிஸ்னெஸ் க்கு ஆள் சேர்க்கும் நாயகி  தனக்கு எல்லாம் தெரியும், ஆண்கள்  எப்[படி எதுக்கு  வந்து  பேசறாங்க  என தெரியும், ஆனா ஒரு லிமிட்வெச்சிருக்கேன்  என்று சொல்வதும்  , குடும்பக்கஷ்டம்  அதான் என  சமாளிப்பதும்   மனதைத்தொடவில்லை . படிச்ச  பொண்ணுக்கு  எத்தனையோ வேலை கிடைக்குமே? ஏன் இதை தேர்வு செய்தார்? என்பதற்கு விடை இல்லை

2        நாயகன்  நாயகியிடம் இந்த  வேலை  செய்ய்றதுக்கு... என்ஃஅ ஆரம்பித்து  ஒரு தவறான்  சொற்றொடரைப்பிரயோகிக்கிறார். தான் காதலிக்கும் அல்லது  காதலை  வெளிப்படுத்த  நினைக்கும்  பெண்ணிடம்  யாரும்  இப்படிப்பேச மாட்டாங்க . ரொம்ப  டிராமாட்டிக்கான சீன் அது
3        நரேன்  வெளிநாடு  எங்கும்  போகவில்லை, எதுக்காக  பிளாங்க்  செக்  போட்டுத்தரனும் ? ஆன் லைன் பேமண்ட் , நெஃப்ட் , கூகுள்  பே இருக்கக்கவலை எதுக்கு ?
4  நகைக்கடை  உள்ளே  லாக்கர்  இருக்கும்  அறையில்  சிசிடிவி  கேமரா  வெச்சா  வேலை  முடிஞ்சது அடைச்செய்யாம  ஓனர்  செய்யும்  ஏற்பாடுகள்  எல்லாம் காடிஹ்ல் பூ   ரகம்

 சி.பி ஃபைனல் கமெண்ட்  -  ரத்த  சேதம்   இல்லாமல்  ,   டீசண்ட்டான  ராப்ரி  த்ரில்லர்  படம்  பார்க்க  நினைப்பவர்கள்  குடும்பத்துடன்  பார்க்க வேண்டிய  பிரமாதமான  படம்   ரேட்டிங்   3.5 / 5