Showing posts with label ரஜினிக்கா? கமலுக்கா?. Show all posts
Showing posts with label ரஜினிக்கா? கமலுக்கா?. Show all posts

Tuesday, January 27, 2015

இளையராஜா இசை அமைக்காதது அதிக இழப்பு ரஜினிக்கா? கமலுக்கா?

ரஜினி, கமல், ராஜா


ராஜாவிடம் கமல் தந்த ஒவ்வொரு படமும் ராஜாவுக்கு அல்வா சாப்புட்றமாதிரி. ஒவ்வொரு படமும் டிமாண்டிங் ஆனா வெவ்வேறு மாதிரி! உதாரணம், குணாவில் வரும் 'உன்னை நானறிவேன்" பாடல், இது கமர்ஷியலா சூப்பர்டூப்பர் ஹிட் அடிக்கணும், ஒரு கண்ணே கலைமானே போல ஹிட் ஆகணும்னு எந்த பிரஷரும் ராஜாவுக்கு முன் வைக்கப்படலை(கிட்டதட்ட அதே சிச்சுவேஷன்) எனவே ராஜா, எந்த கமர்ஷியல் அழுத்தமும் இல்லாமல் ஒரு கலைஞனாக, மிக சுதந்திரமாக மெட்டமைக்கலாம்! இதுபோல் கமல் ராஜாவுக்கு தந்தது பல கலைப்படைப்புக்கள்! ராஜாவுக்கு இருந்த பெரும் கலைப்பசிக்கு, புகுந்து விளையாடவும் சேலஞ்சிங்காகவும் தன் திறமைக்கேற்ற அட்டகாசமான தீனியாகவும் அமைந்தன!

ஆனா ரஜினி படங்களோ, பலதும் கிட்டதட்ட அதே கதைகள்தான். கிட்டதட்ட ரிப்பீட் சிச்சுவேஷன் பலப்பல. அம்மா செண்டிமென்ட், தங்கச்சி/தம்பி செண்டிமென்ட், ஹீரோ இன்ட்ரோ, வில்லன் இன்ட்ரோ, திமிர்ப்பிடித்த நாயகி, காமெடி காட்சிகள் இப்படி பல ரிப்பீட்கள். ஆனாலும் ராஜா, ரஜினியின் ஸ்டைலுக்கு இசையால் சேர்த்த பரிமாணம் வாய்ப்பே இல்லை! வெகு சுமாரான அந்தப்படங்களில் நம்மை உட்காரவைத்ததும், ரசிக்கவைத்ததும், ஏன், சிலமுறை, ரஜினியின் ஸ்டைலை சரியானபடிக்கு ஹைலைட் செய்ததுமே ராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் தான்!

அதுவும், ரஜினியானவர், பணக்காரனாக நடித்தாலும் சரி, ஏழையாக நடித்தாலும் சரிம் ரொமான்ஸ் காட்சியிலும் சரி,ஜல்சா, நகைச்சுவை கோபம் சோகம் நகைச்சுவை, வில்லனிடம் சவால் வசனம், கூலாக பேசும் வசனம், இப்படி எல்லாவற்றிலுமே தன் அக்மார்க் ஸ்டைலோடு தான் பேசுவார் நடிப்பார் மேனரிசம் காட்டுவார்! சொல்லப்போனால், கிட்டதட்ட ஒரேமாதிரி அமைந்த அனைத்து கதைகளிலுமே, சுவாரசியம் கூட்டினது ரஜினியின் இந்த ஸ்டைல் தான்!

இந்த ஸ்டைலுக்கு ராஜா, தன் பின்னணி இசையின் மூலம் எத்தகைய பரிமாணம் கொடுத்திருக்கிறார் என அத்தனை படங்களிலும் பாருங்கள்!

ராஜாவுக்கு பின்னான இசையமைப்பாளர்கள், ரஜினிக்கு இன்ட்ரோ பாடல் என்றாலே, உடனே பிரம்மாண்டத்துக்காக Trumpet இசையை வைத்துவிடுவார்கள்! முத்து ஒருவர் ஒருவன் முதலாளி, சந்திரமுகி தேவுடா தேவுடா, அதாண்டா இதாண்டா, இப்படி பல உதாரணங்கள்! (தேவாவின் பாட்ஷா ஜேம்ஸ்பாண்ட் இசை, படையப்பா கிக்கு ஏறுதே, ஆரம்ப ஃப்ளூட் இசை போன்ற மிகச்சில exceptions மட்டுமே இருக்கிறது)

ஆனால் ராஜாவோ, ரஜினி என்றால் பயன்படுத்தும் இசைக்கருவிகள் ஆகட்டும், வாசிக்கும் இசை ஆகட்டும், எத்தனை வெரைட்டி! Bass Guitar, Classic guitar, Electric Guitar, Strings section, Trumpet, Sax type Wind instruments, Synth Music, Rythmsஇல் எக்கசக்க தாளவாத்திய கருவிகள், இப்படி, இசைக்கருவிகளிலாகட்டும் இசையிலாகட்டும், இளையராஜா ரஜினி படங்களில் ஒரு Musical SuperStar ஆகவே வலம் வந்து பட்டையை கிளப்பியிருக்கிறார்!

இப்படி, ராஜாவின் ரஜினிக்கான இசை என்பது மட்டுமே ஒரு தனி Genre! ராஜா, கமலுக்கு கூட, வேறு எந்த நாயகனுக்குமே இப்படி ஒரு சிறப்பை தந்ததில்லை! கமல் ஒருகட்டத்தில் முற்றிலும் வெவ்வேறு படங்களை தந்ததால் ராஜா சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். ஆனால் சிச்சுவேஷன் சாதா என்றால் பாடலும் சாதா தான்! உதாரணம், சத்யா படத்தில் 'நகரு நகரு' போன்ற பாடல்கள். ஒருவேளை, கமல் தொடர்ந்து காதல் இளவரசன் டைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தால், ராஜாவின் இசை output தரம் சற்றே குறைந்திருக்கும் என்று கூட எனக்கு தோன்றும்!

ஆனால், ரஜினியை ராஜா ட்ரீட் செய்த விதமே வேறு. வள்ளி படத்தில் டிங்கு டாங்கு ரப்பப்போ பாடலில் வரும் Guitar Strummingஐ கேளுங்கள்! அதுபோன்ற ஒரு Stylish இசை, வாய்ப்பே இல்லை! இதுபோல் கணக்கற்ற உதாரணங்கள் ராஜா இசையமைத்த ரஜினி படங்களுக்கு உண்டு!

அதிசயப்பிறவி படம், ஒரு லோ பட்ஜெட் படம். MD உள்பட எல்லாருக்குமே கொஞ்சம் குறைந்த சம்பளம் தான் தரப்பட்டிருக்கும். ஆனால் அதற்குக்கூட ராஜாவின் இசை, எந்தவித தரக்குறைவும் இல்லாமல் தான் இருக்கிறது!

இத்தனைக்கும், அப்போதெல்லாம் ரஜினிfilms (&கமல் films too) தொடர்ந்து ராஜாவிடம் போகாது! அவ்வப்போது சங்கர்கணேஷ் சந்திரபோஸ் என மற்றவர்கள் இசையமைப்பார்கள்! ஆனால் திரும்ப ராஜாவிடம் வரும்போது அதகளம் தான்!!

இன்றைய தேதியில், நிச்சயம் கமல், ரஜினி இருவருமே அவ்வப்போது ராஜாவிடம் சென்றிருக்கக்கூடாதா என்ற எண்ணம் தோன்ற காரணமே அவர் இதற்குமுன் இசையமைத்ததன் தரம் தான்!

அதுமட்டுமல்ல, ஒட்டுமொத்தமாகவே, கமலும் ரஜினியும், தம்முடைய மிக நீண்ட கேரியரில், வேறு யாருடனுமே( Same producer/heroine/comedian etc ) இத்தனை முறை, அசோசியேட் ஆனதே இல்லை! ரஜினி கிட்டதர்ர 80படங்கள் கமல் கிட்டதட்ட 68 படங்கள் ராஜாவுடன்! இதில், ராஜாவின் பாடல்கள், பின்னணி இசையை எடுத்துவிட்டு பார்த்தால், நிச்சயம் ஒரு மிகப்பெரிய மைனஸ் தெரியும்! (இந்த இசையோடு கம்பேர் செய்தால், இன்றைய காலகட்டத்தில் மற்றவர்கள் ரஜினி படங்களில் அமைக்கும் எத்தனை BGMs செல்ஃப் எடுத்திருக்கிறது, நினைவில் நிற்கிறது என நீங்களே ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவும்! ;)))

(மகாநதி விகடன் விமர்சனத்தில் சொன்னதைப்போலவே) பலப்பல ரஜினி படங்களிலும் அவரது ஸ்டைலையும் படத்தையும் நாம் ரசிக்க, நம்மையுமறியாமல் நம்மை இயக்கிய சக்தியாக ராஜாவின் பின்னணி இசை & பாடல்கள் இருந்திருக்கிறது!

எனவே, ரஜினி கமல் இருவருமே, ஒட்டுமொத்தமாகவே ராஜாவை புறக்கணித்தது நிச்சயம், இருவருக்குமே, (குறிப்பாக ரஜினிக்கு அதிகம்) பேரிழப்பு தான். இதில், கமல் ரஜினி என பிரித்துப்பார்க்க முடியாதபடி இருவரின் படங்களுக்குமே இழப்பு தான். 

நன்றி -