Showing posts with label யாமிருக்க பயமே - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label யாமிருக்க பயமே - சினிமா விமர்சனம். Show all posts

Friday, May 09, 2014

யாமிருக்க பயமே - சினிமா விமர்சனம்

நாயகன்  பேருக்கு அப்பா மூலம் ஒரு பூர்வீகச்சொத்து வந்து சேருது . எல்லாப்பேய்ப்படங்கள்லயும் வர்ற மாதிரி ஒரு பாழடைஞ்ச பங்களா. அந்த பங்களாவை நாயகன் லாட்ஜா மாத்தறாரு. கூட அவருக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட் கம் காதலி , அசிஸ்டெண்ட் , அசிஸ்டெண்ட்க்கு ஒரு தங்கை.தங்கச்சியை வெச்சு வடிவேல் பேக்கரி வாங்குன மாதிரி இந்த அசிஸ்டெண்ட் தன் தங்கை மூலம்   கோடிக்கணக்கான சொத்து அடையலாம்-னு நினைக்கறாரு.


லாட்ஜுக்கு வரும் ஆட்கள் எல்லாம் வரிசையா செத்துட்டே  இருக்காங்க . ஆட்கள் சாக சாக இவங்க 4 பேரும் சேர்ந்து அதை புதைச்சுட்டே இருக்காங்க .2 ஜி ஊழல் விவகாரம் வெளில வராம காங்க் + திமுக கூட்டணி செயல் பட்ட மாதிரி. அந்த பங்களாவுல ஒரு லேடி பேய்  இருக்கு.பெரும்பாலும் பேய்க்கதைகள்ல பேய் ஒரு பெண்ணாதான் இருக்கும். ஏன்னா ஆம்பளைங்களுக்கு ஆஃபீஸ்  போற வேலை முதற்கொண்டு 1008 வேலைகள் இருக்கும்.பொண்ணுங்க அப்டி இல்லை.இன்னொரு  முக்கிய காரணம் தமிழன் பேய்ப்படம்னாக்கூட அது ஜெகன்மோகினி டைப் பேய்ப்படம்னாத்தான் ஆவலா வருவான் 



இந்த 4 பேரும்  சேர்ந்து அந்த பெண் பேயை எப்படி சமாளிக்கறாங்க  என்பதை  60 % காமெடி  25 % பயம் 15 % கிளாமரோட சொல்லி  இருக்காங்க . 


ஹீரோவா கழுகு கிருஷ்ணா. இந்தப்படத்துல இன்னும் நல்லா ஸ்கோர் பண்ணி இருக்கலாம். நல்ல வாய்ப்புள்ள கேரக்டர். ஆனாலும்   அடக்கி வாசிச்சிருக்கார் . டபுள் மீனிங்க் காமெடி டயலாக் பேசும்போது மட்டும் உற்சாகம் ஆகிடறார் மனிதர் . 

 அசிஸ்டெண்ட்டா வரும் கருணாகரன்  ஹீரோவை தூக்கி சாப்பிடும் கேரக்ட்ர் . அவர் வாய் முகூர்த்தம் எது சொன்னாலும் அது அப்படியே பலிக்கும்போது அவர் காட்டும் ஃபேஸ் எக்ஸ்பிரசண்ஸ் அபாரம் . திகில் , காமெடி  என எல்லா உணர்வுகளையும் பிரமாதமாக காட்டி நடித்திருக்கிறார் . கலைஞர்  டி வி நாளைய  இயக்குநர் குறும்பட அனுபவங்கள் கை கொடுத்திருக்கு


நாயகியா ரூபா பஞ்சரி . கர்லிங்க்  ஹேர் கட்டழகி. லிப்ஸ்டிக் மிதமா போட்ட உதட்டழகி .நய வஞ்சக நடிப்பு நல்லா வருது . கிளாமர் காட்ட முயற்சித்து  இருக்கார் . டபுள் மீனிங் டயலாக்னு தெரியாமலேயே பேசி  இருக்கார் 


பேக்கரி வளைக்க பிளான் போடும்  தேக்கடி கேக்கடி ஷோக்கடி தாக்கு தாக்குனு தாக்கடி  ஓவியா .ஓப்பனிங்க் ஷாட்லயே பாத்ரூம்ல குளிச்ட்டு வெளில வரும் கண்ணியமான  ரோல் . 

இரு நாயகிகளும் சக்களத்திசண்டை போடுவது காமெடி . 


 ஃபிளாஸ் பேக் கதையில் வரும்   அந்த புதுமுகம் கொள்ளை அழகு. அழகி பட  மோனிகா மாதிரி சாயல் நல்ல நடிப்பு 


சாமியாராக வரும் மயில்சாமி கலகலப்புக்கு





 

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. கோச்சடையான்  ரிலீஸ் தள்ளிப்போனதும்  அவசர அவசரமாய் அதே தியேட்டர்களில்  புக் பண்ணி  ரிலீஸ் பண்ணியது 


2 திரைக்கதையில் சாமர்த்தியமாய்  இரு ஹீரோயின்கள் கொண்டு வந்தது 


3 கருணாகரனை  புக் செய்தது . அவருக்கான காட்சிகளை நல்லா  டெவலப் செய்தது 

4  மயில் சாமி காமெடி காட்சிகள்  , 2 பாடல் காட்சிகளில்  போதிய அளவு  கிளாமர்  


5   டைட்டில் போடும் உத்தி அழகு,பின்னணி இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங்க் , ஆர்ட் டைரக்சன் அனைத்தும் பக்கா


இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.  நடிகை  சோனாவுக்காக அந்த பேக்கு பணக்காரன்  40 லட்சம்  ரூபாய் செலவு செய்வது . ஜஸ்ட் 40,000 ரூபாய் கொடுத்தாலே ஓடோடி வந்திருக்க மாட்டாரா? 


2 லாட்ஜுக்கு  யார் வந்தாலும் எந்தக்கேள்வியுமே கேட்காம டக்னு உள்ளே அனுப்பறாங்க. ஒரு அட்வான்ஸ் கூட கேட்கலை, ஐ டி ப்ரூஃப் கேட்கலை . 6 செட் ஆட்களிடம் அப்படியே ? யார் வந்தாலும் சேர்த்துக்குவேன் -னு கலைஞர் அறிவிச்ச மாதிரி 


3   மயில் சாமி 2 அழகிகளோட   ஆசிரமத்துல   படுத்திருக்கும்போது  பெட்ரூம் கதவை தாழ்ப்போடாம அப்படியா பெப்பரப்பேனு திறந்து போட்டுட்டு  இருப்பார் ? 


4   பேய்க்கு பவர் கம்மியா? மைனாரிட்டி பேயா? க்ளைமாக்ஸ் ல கதவைத்தட்டுது ? உடைக்கத்தெரியாதா? 

5 வழக்கமா எல்லாப்பேயும்  கொலுசு போட்டிருக்கும் . இந்தப்பேய் பெண்ணா இருக்கும்போது  கொலுசு போட்டிருக்கு , பேய் ஆன பின்   கொலுசு போடலையே , திருகாணி கழண்டுடுச்சா? 


6 அந்த லேடிப்பேய்க்கு அந்த பங்களாவில் யாரும் வருவது பிடிக்கலைன்னா  ஜெ  மாதிரி டகார்னு கட்  ரைட்டா கதவை சாத்திட வேண்டியதுதானே?எதுக்கு தவணை  முறைல பயம் காட்டுது ?


 


மனம் கவர்ந்த வசனங்கள்

1. என் ஹார்ட் ல ஓட்டை போட்டுட்டீங்க என் கிட்டே மருந்திருக்கு.வெச்சு விடவா? # யா ப

 2. மீன ராசி அன்பர்களே! சும்மா சும்மா டிபி மாத்திட்டிருக்காதீங்க.அம்மா மாத்து மாத்துனு மாத்துவாங்க .ஜக்கம்மா சொலறா

3. ரூபா மஞ்சரி = யோவ்.எனக்கும் பூரி சுடத்தெரியும்.என் பூரியைப்பாத்திருக்கியா? # யா ப

4. ரூபா - இனி என்னால வேற எந்த ஆம்பளையோடவும் நெருக்கமாப்பழக முடியாது கிருஷ்ணா = என்னாலயும் தான்

5. மோதல் இல்லாத காதல் எங்கே இருக்கு சொல்லு - ரூபா மஞ்சரி ( பாப்பா மஞ்சரி யின் அக்கா?) # யா ப

6. யோவ்.நீ குடுத்த டுபாக்கூர் மருந்தை சாப்ட்டு என் குருவி செத்துடுச்சு அதை ஏன் குருவிக்கு குடுத்தீங்க? அய்யோ ராமா.இது வேற # யா ப

7. சமோசாவுக்கு ஆசைப்பட்டு சாக்கடைல விழுந்த கதையா 


8 வந்தானுங்க பார்த்தியா தானா தற்கொலைக்கு




படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S

1. 129 நிமிடப்படம். டைட்டிலில் எல்லா டெக்னீசியன் பேரும் அவங்க போட்டோ ஓவியத்துடன் # யாமிருக்க பயமே








சி பி கமெண்ட் -யாமிருக்க பயமே - ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கான காமெடி + சஸ்பென்ஸ் + திகில் + பேய் ப்படம் = விகடன் மார்க் = 41 , ரேட்டிங்க் = 2.5 / 5


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங்-=  2.5 / 5


ஈரோடு  ராயலில் படம் பார்த்தேன்








a