Showing posts with label மோடி நாளை திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் திருச்சி மாநகர். Show all posts
Showing posts with label மோடி நாளை திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் திருச்சி மாநகர். Show all posts

Wednesday, September 25, 2013

மோடி திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் திருச்சி மாநகர்- மக்கள் கருத்து

 
திருச்சி: நாளை நடக்க உள்ள, பா.ஜ.,வின், இளந்தாமரை மாநாட்டுக்கு, அக்கட்சியின், பிரதமர் வேட்பாளர் மோடி வருவதால், பலத்த பாதுகாப்பு வளையத்தில், திருச்சி மாநகரம் கொண்டு வரப்பட்டுள்ளது; மாநாடு நடக்கும் மைதானத்தை, குஜராத் உளவுத்துறை போலீசாரும் ஆய்வு செய்தனர்.

தமிழக, பா.ஜ., இளைஞரணி சார்பில், இளந்தாமரை மாநாடு, நாளை திருச்சி, "ஜி' கார்னர் மைதானத்தில் நடக்கிறது. மாநாட்டில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்கிறார். பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், இளைஞரணி தேசிய தலைவர் அனுராக்சிங் தாக்குர், தேசிய, மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்கின்றனர். நேற்று காலை முதல், மாநாடு நடக்கும் மைதானம் முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநாட்டு திடல் உள்ளே செல்லும் அனைவரும், போலீசாரின் அனுமதிக்கு பின், அனுப்பப்படுகின்றனர். மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று காலை,11:30 மணிக்கு, குஜராத் மாநில டி.ஐ.ஜி., ராவ், மைதானத்தில் ஆய்வு நடத்தினார். மதியம், தமிழக போலீசார், மாநாட்டு மைதானத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, ஆலோசனை நடத்தினர். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில், ஐந்து டி.ஐ.ஜி.,க்கள், 12 எஸ்.பி.,க்கள், ஏ.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் என, மொத்தம், 4,500 போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். விமான நிலையம் முதல், மாநாடு மைதானம் வரை, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சுழலும் பலூன் கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல், மேடை வரை, 15க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் குழுக்கள், 24 மணி நேரமும், மோப்ப நாய்களுடன், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மோடி வருகையை ஒட்டி, திருச்சி மாநகரம், போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.க்
மோடிக்கு இல.கணேசன் யோசனை:

இளந்தாமரை மாநாட்டில், தி.மு.க.,வை விமர்சிக்க வேண்டாம்' என, மோடிக்கு, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் யோசனை தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, திருச்சியில், வரும், 26ம் தேதி நடக்கும், இளந்தாமரை மாநாட்டிற்கு வருகிறார். அந்த மாநாட்டில், என்ன பேச வேண்டும் என்பது குறித்து,தமிழக பா.ஜ.,வின் முன்னணி தலைவர்களிடம், மோடி கருத்து கேட்டதாக கூறப்படுகிறது.இதற்கு, கட்சியின் மூத்த தலைவரான இல.கணேசன், தி.மு.க.,விற்கு எதிரான கருத்துகளை, கூட்டத்தில் முன்வைக்க வேண்டாம் என, மோடியிடம் கூறியிருப்பதாக, தகவல்வெளியாகி உள்ளது.

மேலும், ‘நம்மோடு கொள்கை ரீதியாக ஒத்துப் போனாலும், நடைமுறையில், அ.தி.மு.க., கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை. அதே நேரம், காங்கிரசுடன், கடைசி நேரத்தில் கூட, தி.மு.க.,விற்கு நெருடல் ஏ ற்படலாம்.அதனால், கடைசி நேரத்தில் கூட, நம்முடன், கூட்டணிக்கு வரலாம்.‘எனவே, முன்கூட்டியே, தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து, அந்த வாய்ப்பை கெடுக்க வேண்டாம்’ என, இல.கணேசன் யோசனை கூறியிருக்கிறார்.

நன்றி - தினமலர்


மக்கள் கருத்து 


1. அணைத்து மதத்தினரும் நம் இந்திய நாட்டுக்காக இம்முறை மோடியை ஆதரிக்க வேண்டும் . காங்கிரஸ் ஆட்சியில் நடுத்தர மக்களும் ஏழை மக்களும் பட்ட துன்பத்தை நினைவில் வைத்து இந்த ஒரு முறை மோடிக்கு வாய்ப்பளித்து பார்க்க வேண்டும் . 



2 அ.தி.மு.க வினர் மனதை மாற்றிக்கொண்டு, பா.ஜ வினருடன் கூட்டணி அமைக்க வேண்டும். வாக்குகள் சிதறினால், அது தானைய தலைவருக்கு தான் சாதகமாக அமையும். அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்காமல், கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும். 


3. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் மாலத்தீவு, மியான்மர் போன்ற குட்டி நாடெல்லாம் நம் நாட்டிடம் சவால் விடுகின்றன பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நாம் இழந்த அப்பாவி மக்கள் எத்தனை ஆயிரம் பேர் .?? தினந்தோறும் நடக்கும் துப்பாக்கி சண்டையில் நம் ராணுவ வீரகளை இழந்து கொண்டிருக்கிறோம் . ஆனால் நம் ராணுவ வீரர்களோ எங்களை இழிவாக பேசினாலும் பரவாயில்லை அரசியல் தலைவர்களையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பது எங்கள் கடமை என்று நமக்காக உயிர் தியாகம் செய்கிறார்கள் .ஆளும் கட்சியோ பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தவும் கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடரவும் முயற்சி செய்து வருகிறார்கள்



 . மறு பக்கம் ஏகே அந்தோணி பாக் ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் என்று வக்காலத்து வாங்கி பேசுகிறார் .இது போன்று இன்னும் பல சம்பவங்கள் . இதை மனதில் வைத்து மீண்டும் ஒரு மும்பை தாக்குதல் நடக்காமல் இருக்க சீன ஆக்கிரமிப்பு, பாக் அத்துமீறல் போன்ற நிகழ்வுகளை தடுக்க ஒரே தீர்வு மோடி மட்டும் தான் . நம் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தெரியாத காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி மோடிக்கு மகுடம் சூட்டுவோம் .வாழ்க மோடி வாழ்க இந்தியா 


4  குஜராத்தை விட வளர்ந்த மாநிலம் மகாராஷ்டிரா ....இப்போ ஒரு புள்ளி விவரங்கள் வந்துள்ளது ...நாட்டின் GDP வளர்ச்சியில் குஜராத் மத்யப்ரதேசை கோவா சேர்த்து அவைகளின் பங்கு 27 சதவிகிதம் என்றால் காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரா ,ஆந்திரா , ராஜஸ்தான் இவைகளின் பங்களிப்பு 37 சதவிகிதம் ...... 


5 பழைய பாஜக வை பற்றி சிந்தித்தால் நமக்கு வெறுப்பு தான் வரும் மோடி என்று நினைத்துப் பாருங்கள் குஜராத்தை போல் நம் இந்திய திருநாட்டை முன்னேற்றுவார் என்று நம்புவோம். 



6 ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பதில் கில்லாடிகள் அம்மாவும் , மோடியும்.....நியா நானா போட்டி வேறு....திமுக வுடன் என்ன திக வுடன் கூட கூட்டு வைப்பார்கள் ...


காங்கிரசில் உள்ளவர்களை போன்றே பா ஜ கவிலும் இல கணேசன் போன்றோர் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்கள் போன்றோரால்தான் தேசீய கட்சிகள் தமிழகத்தில் வளர்ச்சி காணவே இல்லை. இல கணேசன் போன்றோரின் பேச்சை கேட்டு பா ஜ க திமுகவோடு கூட்டணி சேரவே சேராது..அப்படி ஓர் வேலை சேருமே என்றால் அதன் வளர்ச்சி அதோகதிதான். திமுகவுக்கு வெட்கமே இருக்காது..



எப்படியாவது கூட்டணிக்கு தவமிருக்கும்..அப்போது சிறுபான்மையினர் பற்றியெல்லாம் தலீவர் கவலைப்படவே மாட்டார் என்பதும் தமிழக மக்களுக்கு தெரியும். இல கணேசனின் இந்த சேவைக்கு நன்கு பாராட்டப்பட்டிருப்பார் கருணா அவர்களால். திமுகவோடு சேருகின்ற பட்சத்தில் பா ஜ க தொண்டர்களே சொந்த கட்சிக்கு எதிராக களமிறங்குவர் என்பதும் உறுதிதான்..இல கணேசன் தனது பங்கிற்கு செவ்வனவே கூவிவிட்டார்..கேட்பதற்கு மட்டும்தான் ஆளில்லை..பசு பசுவாக இருகும்பட்ச்சத்தில்தான் பசுவுக்கு மரியாதை..பன்றியோடு சேர்ந்து திரியும்போது அதன் மரியாதை..? இதற்கும் மேல் சொல்ல ஏதுமில்லை..வீண் முயற்சியில் தமிழகத்தில் அம்மா கட்சியை தவிர பிற கட்சிகளின் நிலை பரிதாபத்திற்கு உரியதே.. 


 8 பா ஜ க தேசியக் கட்சி தி மு க தேசிய விரோத கட்சி .மத்திய பதவியில் இருக்கும் வரைதான் தேசியம் விலகிவிட்டால் பிரிவினைவாதம் .பா ஜ க மீதும் அதன் தலைவர்கள் மீதும் எப்போதுமே நல்ல அபிப்பிராயமில்லாத கட்சி தி மு க . அப்படி இருக்க எல் ஜி இப்படி அபிப்பிராயப் படுவது அவ்வளவு நன்றாக இல்லை. 



9 திரு.இல.கணேசன் தமிழ் நாட்டில் பா.ஜ.க.வின் திரு மோடி அலையை குழிதோண்டி புதைத்து விடுவார் போல இருக்கிறது. தமிழ் நாட்டில் கருணாவுடன் கூட்டணிவைதால் அது தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் இந்திய முழுவதும் இவர்களின் ஒட்டு சதவிகிதம் சரிந்து விடும். இந்திய முழுவதும் 2G கொள்ளைக்கு கரணம் யார் என்று அனைவருக்கும் தெறியும். தமிழ் நாட்டில் ம.தி.மு.க., தே.மு.தி.க.மற்றும் பா.ஜ.க இவர்களின் கூட்டணி அமைதல் குறைந்தது 10 இடமாவது கிடைக்கும். கருணாவுடன் கூட்டணி வைத்தாள் இவர்கள் போண்டி தான் 


10 இந்துக்கள் ,முஸ்லிம்கள் ஏழை ,பணக்காரன் என்று ஜாதி மதம் பார்க்காமல் நம் அனைவரையும் காக்கும் ராணுவ வீரர்களுக்கே நம் நாட்டில் மரியாதை இல்லை எல்லையில் நம்மை காத்துக் கொண்டிருக்கும் வீரர்களை கேலி செய்யும் ஒரு ஆட்சி காங்கிரஸ் ஆட்சி தான் .காஷ்மீர் எல்லையில் சோனியா ராகுல் ஏகே அந்தோணியை அனுப்பினால் நம் வீரர்களின் நிலைமை என்னவென்று புரியும் . 


 11 இல கணேசன் ,எப்போதும் மு க ஆள்.அதனால் ,சென்ற முறை ,விருது நஹ்ரில்,வை கோ விற்கு ,எதிராக ,நடிகர் கார்த்திக் களம் இறக்கி,15,000 ஓட்டுகளை,பிரித்தார் ,மு க ஆலோசனையின் பேரில்.வை கோ தோற்ற வித்தியாசம் ,இந்த 15,000 ஓட்டுக்களே.


திருச்சி: பா.ஜ., சார்பில் திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாட்டில், குண்டு துளைக்காத மேடையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.



தமிழக பா.ஜ., இளைஞரணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி பொன்மலை, "ஜி' கார்னர் மைதானத்தில், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. மாநாட்டில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுகிறார். மாநாட்டில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.


அத்வானி வருகை?

திருச்சி மாநாட்டுக்கு, கட்சியின் முக்கிய தலைவர் அத்வானியை அழைத்து வரவும், அக்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர போலீசாரால், நான்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டை மக்கள் மாநாடாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அக்கட்சியினர், மாநாட்டில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். ரயில்வே மைதானத்தில் மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.


புல்லட் புரூப் கார்:

மாநாட்டுக்காக தனி விமானத்தில் திருச்சி வரும் மோடி, விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மாநாட்டு மேடைக்கு வருகிறார். அவர் பயணம் செய்ய, "புல்லட் புரூப்' கார் வரவழைக்கப்பட உள்ளது. அதேபோல, மேடையில் ஒருவர் மட்டும் நின்று பேசும் வகையில், குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. "புல்லட் புரூப் கார், மேடை ஆகியவை, 24ம் தேதி டில்லியிலிருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும்' என, பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.