Showing posts with label மேகா - கோவை இயக்குநர் vs இளையராஜா. Show all posts
Showing posts with label மேகா - கோவை இயக்குநர் vs இளையராஜா. Show all posts

Saturday, July 05, 2014

மேகா - கோவை இயக்குநர் vs இளையராஜா

இளையராஜாவின் பாராட்டு புத்துணர்ச்சி தந்தது’: இயக்குநர் கார்த்திக் ரிஷி பேட்டி

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டினை புது இயக்கு நர்களின் ஆண்டு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பல புதிய இயக்குநர்களின் படங்கள் இந்த ஆண்டு தமிழில் ரிலீஸாகியுள்ளது. அந்த வரிசை யில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் இயக்குநர் கார்த்திக் ரிஷி. கொஞ்சம் காதல், கொஞ்சம் த்ரில் என்று கலந்து இவர் இயக்கிவரும் ’மேகா’ என்ற திரைப்படம் இன்னும் சில நாட்க ளில் வெளியாகவுள்ளது. தன் முதல் படம் வெளியாக வுள்ள மகிழ்ச்சியில் இருந்த அவரைச் சந்தித்தோம்.



சினிமா உலகிற்குள் நீங்கள் எப்படி நுழைந்தீர்கள்?



நான் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவன். வாரம் ஒரு படத்தை பார்த்துவிட்டு இதை இப்படி செய் தால் நன்றாக இருக்கும் என்று பேசிக் கொண்டிருப்போம். மற்றவர்களின் படங்களை விமர்சிப்பதை விட நாமே ஏன் ஒரு படத்தை இயக்கக் கூடாது என்று தோன்றியது.



சென்னைக்கு வந்து எல்லா பெரிய இயக்குநர்களிடமும் துணை இயக்குநர் ஆக முயற்சி செய் தேன். அவர்களை பார்த்து பேசு வதே பெரிய விஷயமாக இருந்தது. கடைசியில் ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்தது. சுப்பிரமணிய சிவா விடம் ‘திருடா திருடி’, ‘பொறி’, ‘சீடன்’ ஆகிய படங்களில் பணியாற்றி னேன். வாழ்க்கையில் ஒரு நிமிடத் தைக்கூட வீணாக்கக் கூடாது என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அது என் முன்னேற்றத் துக்கு பெரிதும் உதவியது. அவரிடம் பெற்ற அனுபவங்களை வைத்து ஒரு இயக்குநராகும் அளவுக்கு என் தகுதியை வளர்த்துக்கொண்டேன்.



முதல் கதையாக நீங்கள் ‘மேகா’ படத்தை இயக்க என்ன காரணம்?



நான் அனுபவித்த, என் நண்பர் கள் அனுபவித்த விஷயங்கள் சேர்ந்து ஒரு கலவையாக இந்தப் படம் இருக்கும். திரைக்கதை யாக பார்க்கும்போது கஷ்டமாக இருந்தாலும் நான் அனுபவித்த விஷயங்களை எடுப்பது எனக்கு எளிதாக இருந்தது. அதனால் இதை முதல் படமாக இயக்குகிறேன்.



சிறு வேடங்களில் நடித்து வந்த அஸ் வினை, உங்களின் ‘மேகா’ மூலம் நாயகனாக்கி இருக்கிறீர்களே?



அஸ்வின் எனக்கு கிடைத்ததற்கு நான் அஜித்திற்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர் நடித்த ‘மங் காத்தா’ படத்தை நான் பல முறை பார்த்தேன். அப்படிப் பார்க் கும்போது அதில் அஜித்துடன் நடித்தவர்களில் அஸ்வின் எனக்கு தனியாகத் தெரிந்தார். என்னுடைய கதைக்கு அவர் பொருத்தமான ஹீரோவாக இருப்பார் என்று தோன்றியது. இதைத்தொடர்ந்து அவரை நாயகனாக நடிக்க வைத் தேன்.



உங்கள் முதல் படத்திற்கே இளைய ராஜா இசை அமைக்கிறார். இது எப்படி சாத்தியமானது?



நானே இதை எதிர்பார்க்க வில்லை. தயாரிப்பாளர் கதையைப் படித்துவிட்டு, “இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைத்தால் நன்றாக இருக்கும்” என்றார். இளையராஜாவிடம் நான் கதை சொல்லப்போகும்போது எல் லோரையும் போல அவர் ஓகே சொல் வாரா என்று பயந்தேன். ஆனால் என் அதிர்ஷ்டம்... இதற்கு அவர் ஒப்புக்கொண்டார். இந்த படத் துக்கு இசை அமைக்க அவர் 12 நாட்கள் உழைத்தார். பின்னணி இசைக் கோர்ப்புக்கு முன் படத்தை பார்த்துவிட்டு “சொன்னதைவிட நல்லா எடுத்திருக்கீங்க. எனக்கு பரீட்சை வைத்ததுபோல் இருக்கிறது, நான் இதை சரியாக செய்ய வேண்டும்” என்று கூறிப் பாராட்டினார். அது எனக்கு புத்துணர்ச்சி தந்தது. அவரைப் போலவே ரசிகர்களையும் இந்தப் படம் கவரும் என்று நம்புகிறேன்.


நன்றி - த இந்து