Showing posts with label மல்லிகா ஷெராவத். Show all posts
Showing posts with label மல்லிகா ஷெராவத். Show all posts

Thursday, December 08, 2011

ஒஸ்தி - நாஸ்தி - காமெடி கும்மி கலாட்டா விமர்சனம்

http://vannimedia.com/wp-content/uploads/2011/12/Osthi-Movie-Wallpapers-51.jpg

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்  டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய் டேய்
ஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்  டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய் டேய்
ஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி

யாரும் பயந்துடாதீங்க.. படம் போட்டதுல இருந்து முடியறவரை ஹீரோ வர்றப்ப எல்லாம் இதுதான் பின்னணி இசை..சும்மாவே சிம்பு ஓவர் அலட்டல் பேர்வழி.. இதுல இன்ஸ்பெக்டர் ரோல் வேற.. பின்னே கேட்கவா வேணும்?விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்து சிம்புவோட நடிப்பை வியந்தவங்க எல்லாம் இந்தப்படம் பார்த்து வாழ்க்கையை வெறுப்பது உறுதி..

குருவி எனும் குப்பை படத்தை கொடுத்த தரணியைப்பார்த்து உலகம் வியந்தது.. தில் , தூள்,கில்லி என மெகா ஹிட் படங்கள் கொடுத்தவரா இப்படி ஒரு அட்டர்ஃபிளாப்பை கொடுத்தார்?என சந்தேகம், ஆனால் இந்தப்படத்தின் தோல்வி குருவியின் தோல்வியையும் தூக்கி சாப்பிட்டு விடும் போல இருக்கு.. 

படத்தோட கதை என்ன? ஹீரோவுக்கு ஒரு தம்பி.. அவர் நேரடி தம்பி இல்லை.. அம்மாவோட 2வது கணவரோட மகன்.. 2 பேருக்கும் ஆகாது...எல்லாரும் அண்ணனை கரிச்சு கொட்டறாங்க.. தம்பியை புகழ்றாங்க.. ஆனா அண்ணன் இன்ஸ்பெக்டர் ஆகறார், தம்பி வெத்து வேட்டு..

http://www.koodal.com/cinema/koodal_reel/2011/richa-14.jpg


ஹீரோ இருக்கற ஊர்ல எலக்‌ஷன்ல நிக்க வில்லன் வேட்பாளர்கள்க்கு பணம் பட்டுவாடா பண்ண ட்ரை பண்றாரு.. அதை எல்லாம் ஹீரோ தடுத்து தன் வீட்டு பீரோல வெச்சுக்கறாரு..ஏன்னா அந்த மாவட்டத்துல பேங்க்கே இல்லையா?னு கேக்கக்கூடாது.. வீட்லயே வெச்சிருந்தாத்தான் கதை நகரும்.. வில்லன் ஹீரோவோட அம்மாவை கொலை செஞ்சுடறாரு.. ஆனா பாருங்க இந்த சஸ்பென்ஸ் சீன் க்ளைமாக்ஸ்ல தான் இயக்குநருக்கே தெரியுது. ஆனா படம் பார்த்த சின்ன பசங்க கூட சொல்லிட்டாங்க அந்த  மேட்டரை..

அம்மாவை கொன்ன வில்லனை ஹீரோ எப்படி பழி வாங்கறாருங்கறதுதான் மிச்ச கதை.. தம்பி வில்லன் கூட சேர்றதும், க்ளைமாக்ஸ்ல திடீர்னு திருந்தி அவர் அண்ணாங்கறதும் இவரு தம்பிங்கறதும்.. எம் ஜி ஆர், சிவாஜி காலத்துலயே எங்கப்பா பார்த்துட்டாருங்கோவ்..

போலீஸ் யூனிஃபார்ம்க்கே புது கம்பீரம் கொடுத்த படங்கள் என இது தாண்டா போலீஸ், வைஜயந்தி ஐ பி எஸ் ..னு ஒரு லிஸ்ட் சொல்ற மாதிரி போலீஸ் பேரையே கெடுக்கற படமா ஒஸ்தியை சொல்லலாம்..

சாமி படத்துல விக்ரம் செஞ்சதை எல்லாம் தூக்கி சாப்பிடனும்கற உத்வேகத்தோட சிம்பு பண்ற அலம்பல்கள் தாங்கலை.. அவர் பல்லை கடிச்ச படி நெல்லைத்தமிழ் பேசும்போது பாவமா இருக்கு.. 


இதுல பிரமாதமா ஒரு ஸ்டைல் பண்றாரு.. அதாவது கூலிங்க் கிளாசை தூக்கி மேலே போடறாரு.. அது கரெக்டா அவரோட சட்டை காலர் பின்னால நச்னு சொருகிக்குது.. படத்துல ஒரு வில்லன் அமைச்சரா வர்றார்.. அவர் ஹீரோ கிட்டே இதுக்கு விளக்கம் கேக்கறார்.. அதுக்கு நம்ம அண்ணன் சிம்பு - எதிரிங்க பின்னால இருந்து குத்த வரும்போது தெரிஞ்சிக்க.. அடேய் அடேய் அண்ணே.. அது என்ன ரிவர்யூ மிரரா? அவ்வ்வ் 


 ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்பாய், மயக்கம் என்ன ஹீரோயின்.. தனுஷ் ஜோடியா நடிச்சவர்ங்கற ஒரே காரணத்துக்காக இதுல சிம்புவுக்கு ஜோடி.. பாப்பா பானை விக்கற பரம ஏழை, ஆனா பாருங்க 24 மணி  நேரமும் அவரோட இடுப்புல 15 பவுன்க்கு ஒரு ஒட்டியாணம் இருக்கு.. உலகத்துலயே பானை பிடித்தவள் பாக்ய சாலிங்கற பழ மொழிக்கு அர்த்தம் சொன்ன ஒரே கேரக்டர் இவர் தான் அடங்கொன்னியா..

ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் காதல் வர்ற சீன் செம காமெடி.. பானை விலை என்ன?னு கேக்கறார்.. ரூ 250னு ஹீரோயின் சொல்ல ரூ 500 குடுத்து ஒரு பானை வாங்கிட்டு மீதி சில்லறை அப்புறமா வாங்கிக்கறேன்னு ஹீரோ சொன்னதும் ஹீரோயின் இன்னொரு பானை கொடுத்து சில்லரையை கழிச்சுட்டு எனக்கு நேர்மை தான் முக்கியம்கறார். உடனே சிம்புவுக்கு காதல் வந்துடுது ஹய்யோ அய்யோ..

சந்தானம் இருக்கறதால ஏதோ கொஞ்சமாவது ஜாலியா படம் பார்க்க முடியுது.. இன்னொரு முக்கியமான விஷயம், இதுவரை எந்த ஒரு தமிழ்ப்படத்திலும்  ஹீரோ போலீஸ் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு குத்தாட்டம் போட்டு காக்கிச்சட்டையை இப்படி கேவலப்படுத்துனதே இல்லை..

ஆனா ஒரே ஒரு விஷயம் பாராட்டலாம். சிம்பு ஸ்டில்களில் பார்க்க அழகாக ஹிந்தி பட ஹீரோ மாதிரி ஜம்முனு இருக்கார்.. ஆனா படத்துல அவர் டயலாக் பேசறது மகா கொடுமை..

http://www.thedipaar.com/pictures/resize_20111126060151.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. மல்லிகா ஷெராவத்தை புக் பண்ணி அவரை ஹீரோ கூட ஆட விடாமல் வில்லன் கூட ஆட வைத்து சிம்புவை கடுப்பேற்றியது.. ( அப்புறம் போனாப்போகுதுன்னு 4 லைன்க்கு சான்ஸ்.. )

2. ஹீரோயினை கொடுத்த சம்பளத்துக்கு சரிக்கட்ட படம் பூரா முதுகு முழுக்க, இடை முக்கால் வாசி தெரியும் படி உடை வடிவமைத்தது..


3. சந்தானத்தை புக் செஞ்சு காமெடி வசனங்கள் சேர்த்து ரசிகர்களை ஓரளவு காப்பாற்றியது..

4. பாடல்கள் ஆல்ரெடி சூப்பர் ஹிட் என்றாலும் படத்தில் பார்க்கும்போது நடன அசைவுகள் பல இடங்களில் வெல்டன் சொல்ல வைத்தது..

5. ஜித்தன் ரமேஷை முடிஞ்சவரை கேவலப்படுத்தியது ( பாவம் சிம்புவுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனையோ?)

http://suriyantv.com/wp-content/uploads/2011/11/osthi-simbu-5.jpg

ஹீரோயின் போட்டிருக்கும் 15 பவுன் ஒட்டியாணம் ஹி ஹி
இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், ஆலோசனைகள்

1.  ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர் எப்படி எல்லா கேசுக்கும் மீடியாக்களிடம் பேட்டி தர்றார்? அட்லீஸ்ட் அவரை ஏ சி யாகவாவது காட்டி இருக்கலாம்.

2.  சிம்புவின் அம்மாவாக வரும் ரேவதி அவ்வளவு தத்தியா? சிம்பு கொண்டு வரும் கட்டுக்கட்டான பணத்தை எல்லாம் ஏது? எப்படி இவ்ளவ் பணம் என்றெல்லாம் கேட்காமல் பீரோவில் வைப்பது எப்படி?

3. ஒரு இன்ஸ்பெக்டரின் அம்மா இறந்ததும் அவர் அப்போதே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பண்ணீ இருக்க மாட்டரா? தலையணையால் தலையை அமுக்கி கொல்லப்பட்ட ரேவதி பிணத்தில் மூக்கில் ரத்தம் வந்திருக்குமே?

4. நாசர், ஜித்தன் ரமேஷ் இருவரும் அவர்கலது சம்பாத்யத்தை அனைத்தையும் பீரோவிலேயே தான் வைப்பாங்களா? அதென்ன போயஸ் தோட்டமா? வில்லன் அந்த பங்களாவை எரிச்சதும் நடுத்தெருவுக்கு வந்துடுவாங்களா?

5. எல்லா பணமும் போனதும் ஜித்தன் ரமேஷ் ஏன் வில்லனிடம் வேலைஆளாக சேர்கிறார்? சிம்புவிடம் போய் சொன்னால் தீர்ந்தது மேட்டர்..

6. க்ளைமாக்ஸில் எந்த வித டர்னிங்க் பாயிண்ட்டும் நடக்காமல் ஜித்தன் ரமேஷ் திடீர் என திருந்துவது எப்படி? படத்தை முடிக்கவா? அதே போல் சிம்பு 15 ரீல் வரை தன் அப்பாவை கரித்துக்கொட்டிட்டு இருந்தவர் திடீர்னு பாசம் பொங்க பேசுவது எப்படி?

7. ஜித்தன் ரமேஷ்  கல்யாணம் நடக்கும் சமயத்தில் சிம்பு தன் ஜோடியுடன் வந்து நான் தான் அண்ணன், எனக்குத்தான் முதல்ல மேரேஜ் நடக்கனும்னு தன் ஜோடியோட வர்றார், ஓக்கே, அவர் மணடபத்தை விட்டு போனதும் ரமேஷ் மேரேஜை நடத்தலாமே? ஏன் எழவு வீடு போல் எல்லாரும் எந்திரிச்சு போறாங்க?

http://www.freedownloadpond.com/wp-content/uploads/2010/10/richa_gangopadhyay_hot_navel_stills_01.jpg

படம் சிம்பு ரசிகர்கள் கூட பார்க்க முடியாது..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஈரோடு ஸ்ரீலட்சுமியில் படம் பார்த்தேன்

இந்தப்படம் 15 நாள் ஓடும் எல்லா செண்ட்டர்லயும்..

http://surfingall.files.wordpress.com/2010/12/richa-gangopadhyay-hot-in-black1.jpga


டிஸ்கி - வசனத்துக்கு தனி காமெடி கும்மி பதிவு இருக்கு ஹி ஹி

டப்பா படமான ஒஸ்தியில் சந்தானம் பேசும் டாப்பான காமெடி வசனங்கள்

 

Beauty and the Beast - ஹாலிவுட் பட விமர்சனம்