Showing posts with label மகா ருத்ரம் (2015)-சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label மகா ருத்ரம் (2015)-சினிமா விமர்சனம். Show all posts

Friday, November 06, 2015

மகா ருத்ரம் (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : அலெக்ஸ் டீல்
நடிகை :ஜே கேஸ்ல்ஸ்
இயக்குனர் :ஜான் பம்கர்ட்னர்
இசை :கிறிஸ் கானோ
ஓளிப்பதிவு :பென் டிமாரி
ஹாலிவுட்டில் பிரபல நடிகர்களை கொண்டு, பிரமாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்படும் படங்களை குறைந்த பட்ஜெட்டில், சாதாரண நடிகர்களை வைத்து உல்டா செய்து எடுக்கப்படும் படங்களை மக்பஸ்டர் படங்கள் என்று அழைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் டுவைன் ஜான்சன்(ராக்) நடிப்பில் வெளியான படம் சான் அன்றியாஸ். அதில் பூகம்பத்தின் போது ராக் தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை படு சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டிருக்கும். 

மக்பஸ்டர் படங்களை எடுப்பதில் கைதேர்ந்த அஸ்லயம் நிறுவனம் சான் அன்றியாஸ் படத்தை சான் அன்றியாஸ் குவக் என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த படம் தமிழில் மகா ருத்ரம் என்ற பெயரில் வெளியாகிவுள்ளது.

மகா ருத்ரம் படத்தின் கதைப்படி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் புவியியல் ஆராய்ச்சியாளர் என்ற பெயரில் சுற்றிக்கொண்டிருக்கும் பெண் மோலி டன், இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை 12.7 ரிக்டர் பூகம்பம் தாக்கப் போவதை கண்டறிகிறார். ஆனால், அவரை ஒருவரும் நம்ப மறுக்கிறார்கள். இதனால் என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கும் மோலி டன், தன் குடும்பத்தை காப்பாற்ற முடிவு செய்கிறார். மொலி தன் குடும்பத்தை காப்பாற்றினாரா இல்லையா? என்பதை எந்த சுவாரசியமும் இல்லாமல், படுகேவலமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் படமாக்கியுள்ளார் இயக்குனர் ஜான் பம்கர்ட்னர்.

கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் ஜே கேஸ்ல்ஸ், அலெக்ஸ் டீல் உள்ளிட்ட பலர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறார்கள். கிறிஸ் கானோவின் இசை பெரிதாக எடுபடவில்லை.

மொத்தத்தில் ‘மகா ருத்ரம்’ மற்றொரு ஹாலிவுட் குப்பை.

-மாலைமலர்