Showing posts with label போலீஸ். துப்பாக்கிச் சூடு. Show all posts
Showing posts with label போலீஸ். துப்பாக்கிச் சூடு. Show all posts

Wednesday, September 19, 2012

அணு உலை பாலிடிக்ஸ் @ கல்கி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJuzKTqPkOBNET9ttxJVtnRh3EEGnbUCuKMkz1gis3WnPWmoLBi2sM1qbTR4BLu8oBKMQQR7S8nLHdtZWm7io8DL5RrEGyqNNX76qcINFGltlYXhep41OgebcWvoYpI4qmD_HOrIPpdE_S/s400/koodankulam.jpg 

அணு உலை பாலிடிக்ஸ்

கொதிக்கும் கூடங்குளம்... அடக்கும் அரசாங்கம்!

ப்ரியன்

போலீஸ் துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகை என்று கூடங்குளமும், சுற்று வட்டாரமும் கலவரப் பூமியாகி இருக்கிறது. ‘என்னைக் கைது செய்தாலும், அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடரும்என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் சொல்லி இருக்கிறார். எதிர்ப்பலை ஓயவில்லை. இப்போது கூடங்குளம் தேசியப் பிரச்னையாக மாறியிருக்கிறது.

‘கூடங்குளம் அணுமின் உற்பத்திக்குத் தடைவிதிக்க வேண்டும்என்று உயர் நீதிமன்றத்தை அணுகியது, ‘பூவுலகின் நண்பர்கள்என்ற சுற்றுச்சூழல் அமைப்பு. அதைப்போல வேறு தனிப்பட்ட சமூக ஆர்வலர்களும் வழக்குப் போட்டார்கள். வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ‘பூவுலகின் நண்பர்கள்அமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. இது தொடர்பாக தில்லியில் இருந்த அந்த அமைப்பின் அறங்காவலர் ஜி.சுந்தர்ராஜனிடம் பேசினோம்.

 http://tamil.oneindia.in/img/2011/09/16-kudankulam-nuclear-power-pl.jpg

அணுமின் எரிபொருள் கசிவால் ஏற்படும் கதிர்வீச்சு மாபெரும் பேராபத்தை, மனிதகுலத்துக்கு உருவாக்கும் என்பது பல முறை சொல்லப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள எந்த அணுஉலையும் நூறு சதவிகிதம் பாதுகாப்பானது என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாது. ‘ஆபத்தான தொழில்நுட்பம், அதிகமான உற்பத்திச் செலவு, கதிரியக்க ஆபத்து ஆகியவை காரணமாக அணுமின் உற்பத்தி மனிதகுலத்துக்குப் பேரழிவை உருவாக்கும்என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் சொல்லியிருக்கிறார்


 அணுமின் நிலையத்தின் கழிவுகள் சாகாத் தன்மை கொண்டவை. அவற்றின் கதிரியக்க வீரியத்தை முற்றிலும் அழித்துவிடும் தொழில்நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்கா (த்ரீ மைல் ஐலேண்ட்) மற்றும் ரஷ்யாவில் (சென்னோ பில்) ஏற்பட்ட அணுமின் நிலைய விபத்துக்களுக்குப் பிறகு அந்த நாடுகள் அணுமின் நிலையம் குறித்து மறுபரிசீலனையில் இருக்கின்றன. ஆனால் தொழில்நுட்பம், மற்றும் அணுஉலை போன்றவற்றில் வர்த்தக நோக்கில் நம்மைப் போன்ற நாடுகளை வளைத்துப் போடுகின்றன.



நமது நாட்டில் அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் ஒரு விசித்திரமான அமைப்பு. அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை முற்றிலும் உறுதிசெய்து கொள்ளும் பொறுப்பு இந்த அமைப்புக்கு உண்டு. ஆனால் இது அணுசக்தித் துறையின் கீழ் இயங்குகிறதே தவிர, சுதந்திர அமைப்பு அல்ல. ‘இந்த அமைப்பு சுதந்திர அமைப்பும் கிடையாது; நம்பத்தகுந்ததும் அல்லஎன்று நமது கணக்குத் தணிக்கை அதிகாரி சொல்லியிருக்கிறார். இந்த அமைப்பின் தலைவராக இருந்த டாக்டர் கோபாலகிருஷ்ணன், ‘இது போலித்தனமான, மதிப்பில்லாத அமைப்புஎன்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட அமைப்பு கொடுக்கிற பாதுகாப்புச் சான்றிதழ் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும்?

 http://tamil.oneindia.in/img/2011/11/17-kudankulam-plant-300.jpg

ஜப்பானில் புகோஷிமா அணுஉலை விபத்துக்குப் பிறகு இந்தியாவில் உள்ள அணுஉலைகளின் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்திக் கொள்ள, மத்திய அரசு வல்லுனர்கள் பணிக்குழு (Task force) ஒன்றை நியமித்தது. அந்தப் பரிந்துரைகளில் ஆறு பரிந்துரைகள்தான் செயல் வடிவம் பெற்றிருக்கின்றன. இன்னமும் 11 பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை


 இவற்றை நிறைவேற்ற ஆறு மாதம் முதல் இரண்டு வருடம் வரை ஆகலாம் என்று அணுமின் ஒழுங்கு முறை வாரியம் சொல்லியிருக்கிறது. அப்படியிருக்க, அணுமின் நிலையம் இயங்க அவசரம் காட்டுவது ஏன்? இதில் ஒரு முக்கிய பரிந்துரை, இயற்கை பேரிடர்களால் (பூமி அதிர்வு, சுனாமி) அணுமின் உலை பாதிப்புக்கு உள்ளாகும்போது அதை குளிர்விக்கத் தேவையான மற்றும் தானாக இயங்க மாற்று நன்னீர் வசதி (fresh water). சுனாமி உருவாக வாய்ப்புள்ள கடல் பகுதியிலிருந்து கூடங்குளம் 1300 கி.மீட்டருக்கு தள்ளியிருக்கிறது என்கிறார்கள். சமீபத்தில் கூட கூடங்குளத்திலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள கடல் பகுதியில் அலைகள் ஆக்ரோஷம் காட்டின. இயற்கையின் செயல்பாடுகளை யாரும் வரையறுக்க முடியாது.



நமது நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் இயங்கிய காலத்தை விட, பழுதாகி இருந்த காலம் மிக அதிகம். அதேபோல் உற்பத்தியிலும் முழு அளவு எட்டவில்லை. எனவே, நமது எதிர்காலச் சந்ததிகளை மனத்தில் கொண்டு கூடங்குளம் பணிகளை உடனே நிறுத்த வேண்டும். ஆபத்தில்லாத மாற்று எரிசக்தி திட்டங்கள் தீட்ட வேண்டும். உச்சநீதிமன்றமும் எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிடில் மக்கள் மன்றத்தில் எங்கள் போராட்டம் தொடரும்." என்கிறார் ஜி.சுந்தர்ராஜன்.

13,500 கோடி செலவில் கடந்த 23 வருடங்களாக உருவாக்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு இறுதிக்கட்டத்தில் தடைகள் ஏற்படுத்துவது சரியல்ல; அதிலும் குறிப்பாக 3000 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ள தமிழகத்தின் தேவையில் சிறிதேனும் ஈடுகட்ட கூடங்குளம் அவசியம். மத்திய, மாநில வல்லுனர் குழுக்கள் ஆய்வு செய்து பாதுகாப்பானது என்று உறுதியளித்துள்ளன.


 அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் திருப்தியளிப்பதால்தான் உயர்நீதிமன்றமும் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி கொடுத்துவிட்டது. முக்கியக் கட்சிகள் எதுவும் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மக்கள் ஆதரவு இல்லாத அமைப்புகளும், கட்சிகளும்தான் எதிர்ப்பைக் காட்டுகின்றன. தமிழக மக்களிடம் கூடங்குளம் எதிர்ப்புக்கு ஆதரவு இல்லை. காரணம், தமிழகம் சந்திக்கும் மின் பற்றாக்குறை


 கல்பாக்கம் பகுதியில் மீனவர் வாழ்வாதாரத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. கூடங்குளத்தில் 8000 மெகா வாட் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே, திட்டத்தை முடக்க வேண்டாம்" என்கிறார்கருத்துக்களம்ஆசிரியர் இரா. தங்கத்துரை.

நன்றி - கல்கி , புலவர் தருமி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYo5WXppL687OCr3DJphXr2jyeyQHLFd2k45YHvKhTNGCQKwQS-LH-RrtEAWWoD5yQ3GindCbtnO68mdIf6Q3oMJr66o2oDEM82NtylZq5J4PAGYr7QAJoh6QxhZNLl_0n3NO1bTH-9dJW/s1600/koodangulam+anumin+nilayam+%25282%2529.jpg

Tuesday, September 18, 2012

அணுசக்தி வேண்டாம் - சுஜாதா -தினமணி (1-10-1988 -)

https://lh3.googleusercontent.com/-ME9RMc11jZI/Tp2IbxlOPxI/AAAAAAAAG3g/9145FLzFF5I/azsolarfarm1.jpg 

அணுசக்தி வேண்டாம்; சுஜாதா எழுதியது!!


அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.





எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.


விபத்துகள்:-


முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல
.

அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.

ஆபத்தான கதிரியக்கம்:-


அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.


அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.


சாம்பலை என்ன செய்வது:-


அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.


ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-

உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.



சூரியனே கதி


சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.


இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.


(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது.)


நன்றி - ஃபேஸ்புக் - கே ஆர் விஜயன் 

http://www.kalachuvadu.com/issue-143/pics/KUDANKULAM3.jpg