Showing posts with label பெரிய அண்ணனின் இன்டர்நெட் உளவு. Show all posts
Showing posts with label பெரிய அண்ணனின் இன்டர்நெட் உளவு. Show all posts

Saturday, July 13, 2013

கிழியும் முகத்திரை-பெரிய அண்ணனின் இன்டர்நெட் உளவு!


கிழியும் முகத்திரை

பெரிய அண்ணனின் இன்டர்நெட் உளவு!

ரமணன்

நீங்கள் தமிழனா, மலையாளியா, பெங்காளியா யாரா இருந்தால் என்ன? உங்களின் மெயில், ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக், இன்டர்நெட்டில் அனுப்பப்படும் போட்டோக்கள், ஸ்கைபில் பேசுவது, யு டியுபில் பார்ப்பது, அனுப்புவது எதுவாக இருந்தாலும் அமெரிக்க உளவுத் துறையால் எப்போது வேண்டுமானாலும் சர்வரிலிருந்து நேரடியாகப் பெற்றுப் பார்க்க முடியும். தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும். அதற்கான அதிகாரமும் அத்தனை வசதிகளும் அவர்களிடம் இருக்கிறது. ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், கூகுள், யாகூ போன்ற எல்லா நிறுவனங்களும் இதற்கு உதவ ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன, இந்தத் திட்டத்துக்குபிரிசம்’ (PRISM) என்று பெயர்.


உலகம் முழுவதும் உள்ள தனி மனிதர்களின் சுதந்திரத்தில் தலையிடும் மிகப்பெரிய குறுக்கீடு, மனித உரிமை மீறல் இதுஎன்ற அதிர்ச்சியான தகவலை, கடந்த வாரம் புகழ்பெற்ற தினசரிகார்டியன்வெளியிட்டது. ‘கார்டியன்இதழ் அதன் நம்பகமான செய்திகளுக்கும், ஆணித்தரமான தலையங்கங்களுக்கும் பெயர் பெற்றது. தொடர்ந்துவாஷிங்டன் போஸ்ட்தினசரியும் இது பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டது.

NSA தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி என்பது அமெரிக்க உளவுத் துறையின் ஓர் அங்கம். 1952லேயே தொடங்கப்பட்ட இது, முதல் 20 ஆண்டுகள் எங்கிருந்து இயங்குகிறது என்பதே தெரியாத அளவுக்கு ரகசியமானதாக இருந்தது. NSAஎன்றால்நோ ஸச் ஏஜென்சிஎன்றுகூட கிண்டல் செய்யப்பட்டது. 1975 முதல் இது வெளிநாடுகளில் அமெரிக்கப் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் சந்தேகத்துக்குரிய நபர்களின் செய்தித் தொடர்புகளைக் கண்காணிக்கிறது.





 அமெரிக்க மக்களின் தனி நபர் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை என்று இதன் அன்றைய தலைவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகித் தெரிவித்தார். ஆனால் இந்த நிறுவனம்தான் இப்போது அமெரிக்கா மட்டுமில்லை... உலகம் முழுவதும் உள்ள அத்தனை பேரின் அந்தரங்கத்துக்குள் ஊடுருவும் சர்வ வல்லமை பெற்றிருக்கிறது. இது அமெரிக்க அதிபரின் அனுமதியையும் பெற்றிருக்கிறது என்கிறது கார்டியன். என்.எஸ்.. இன்று ஆண்டுக்கு 20 கோடி டாலர் பட்ஜெட்டில் 1000 பேருக்கு மேல் பணியாற்றும் (பலர் ராணுவ சேவை என்ற போர்வையில்) நிறுவனம். பல வெளிநாடுகளில் அலுவலகங்கள் நிறுவி உலகின் மிகப் பெரிய கண்காணிப்பு நிறுவனமாக பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. இதன் கண்காணிப்புப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது இந்தியா. கடந்த மார்ச் மாதம் மட்டும் இவர்கள் ஆராய்ந்திருப்பது 63 லட்சம் இந்தியச் செய்திகளை!


அமெரிக்கச் சட்டத்தின்படி அமெரிக்கரின் அல்லது வெளிநாட்டவரின் தொலைபேசி மற்றும் எந்த ஒரு செய்தித் தொடர்புகளையும் கண்காணிக்க வேண்டுமானால் அரசு அதற்கென மட்டுமே இயங்கும் ஒரு கோர்ட்டில் ரகசிய ஆணையை வாரண்ட்டாகப் பெற வேண்டும். இது செனட் கமிட்டிக்குத் தெரிவிக்கப்படும். ஆனால் இப்போது இது என்.எஸ்..வின் நடவடிக்கைகளுக்குப் பொருந்தாது என அமெரிக்க அதிபர் விசேஷ அதிகாரம் அளித்திருக்கிறார். அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் யாருடைய இன்டர்நெட் கணக்கையும் கண்காணிக்க முடியும். இந்த அதிகாரம் புஷ் அதிபராக இருந்தபோது வழங்கப்பட்டது. ஒபாமா அதன் ஆயுட்காலத்தை இப்போது நீட்டித்திருக்கிறார். ஒபாமா தன் முதல் தேர்தலில்புஷ் நிர்வாகத்தில் அமெரிக்க மக்களின் தனி உரிமைகளில் அரசாங்கத்தின் தலையீடுகளைகண்டித்தவர்.

செய்தி வெளியாகி ஊடகங்கள் கலக்கிக் கொண்டிருந்தபோது, ‘பிரிசம்பற்றி எங்களுக்குத் தெரியாதே! நாங்கள் கோர்ட் கேட்கும் தகவல்களை மட்டுமே கொடுப்போம். எங்கள் வாடிக்கையாளர்களின் செய்திகளை நாங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை என எல்லா இன்டர்நெட் சேவை நிறுவனங்களும் தெரிவித்தன. எல்லா கம்பெனிகளின் அறிக்கைகளும் ஒரே மாதிரியான வாசகங்களைக் கொண்டிருப்பதிலிருந்தே உண்மை புரியவில்லையா? எனக் கேட்கிறது வாஷிங்டன் போஸ்ட்.



 அமெரிக்க அதிபர் ஒபாமாதேச நலனுக்காகச் செய்யப்படும் விஷயங்களில் எந்த நிர்வாகமும் 100% பாதுகாப்பும், 100% தனி உரிமையையும் 0% யாருக்கும் தொல்லையில்லாத வாழ்க்கையையும் அளிக்க முடியாதுஎன்று சொல்லி இருப்பது அவரின் ஆசியுடன்தான் இந்த விஷயங்கள் நடைபெறுகின்றன என்பதை உறுதி செய்கிறது. பிரிசம் பிரிவினருக்கு பயிற்சி அளிக்க தயாரிக்கப்பட்டிருந்த 41 ஸ்லைடு ((power point slides) கள் கார்டியனிடம் சிக்கியதால் வெளிச்சத்துக்கு வந்த விஷயம் இது. எப்படி இந்த அதி ரகசிய ஆவணம் லீக் ஆனது என்பதை விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ‘மக்கள் நலன் கருதி சொன்னது நான்தான்என எட்வர்ட் ஸ்னோடென் என்பவர் அறிவித்திருக்கிறார். இவர் என்.எஸ்..வின் முன்னாள் ஊழியர்.

இணைய உலக வாசிகள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். அமெரிக்காவில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இப்பிரச்னையை எழுப்பக் காத்திருக்கின்றன. மீடியாக்கள் எதிர்க்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் அகில இந்திய சேவை வழங்குவோர் சங்கம், அமைச்சர் கபில் சிபிலைச் சந்தித்து, பிரச்னை குறித்துப் பேச இருக்கிறார்கள்.


எது எப்படியோ... இனி மெயில் எழுதும்போதும் ஃபேஸ்புக் கமெண்ட் போடும்போது ஜாக்கிரதையாக (தலைவர் ஒபாமா வாழ்க?) எழுதுங்கள். பெரிய அண்ணன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.


thanx-kalki