Showing posts with label பியா பிந்து மாதவி. Show all posts
Showing posts with label பியா பிந்து மாதவி. Show all posts

Friday, December 21, 2012

சட்டம் ஒரு இருட்டறை - சினிமா விமர்சனம்

http://www.starmusiq.com/movieimages/Sattam-Oru-Iruttarai_B.jpg

ஹீரோயின் ஒரு கொலையை நேர்ல பார்த்துடறா,வில்லன்க 3 பேரும் அவளைப்போட்டுத்தள்ளிடறாங்க. ஆனா அவங்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தர முடியல . ஆல்ரெடி அவங்க ஜெயிலுக்குள்ளே இருந்த மாதிரி பொய் ரெக்கார்டு வெச்சிருக்காங்க .அதே ஃபார்முலாவை யூஸ் பண்ணி ஹீரோ எப்படி பழிக்குப்பழி வாங்கறார் என்ற புளிச்சுப்போன மாவில் பழைய மொந்தையில் புதிய கள்ளு  ஃபார்முலா படி  விஜய்காந்த் எஸ் ஏ சி கூட்டணியின் பழைய படத்தை இப்போ ரீமேக் பண்ணி இழுக்கறாங்க சாரி ரீமேக் பண்ணி இருக்காங்க..

ஹீரோவா தமன். இவர் லவ் சப்ஜெக்ட் எல்லாம் 10 பண்ணிட்டு அப்புறமா இந்த மாதிரி ரிவஞ்ச் சப்ஜெக்ட் பண்ரது நல்லது. ஏன்னா  அதுக்கு எல்லாம் ஒரு மெச்சூரிட்டி வேணும். சிறு புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை உண்டு . மற்றபடி காதல் காட்சிகளில் ஓக்கே .


 ஹீரோயின் நெம்பர் ஒன்னா சுருட்டை கூந்தல் அழகி பியா. இவர் மேக்கப் இல்லாமயே ரொம்ப அழகான சிரிப்பழகிதான் , ஆனா இதுல மேக்கப் , ஹேர் ஸ்டைல் சொதப்பல் . படம் பூரா அவர் வர்ற காட்சிகள் எல்லாமே ஒரே ஒரு ஷார்ட்ஸ் , டி சர்ட் மட்டும் தான் ..


  ஹீரோயின் நெம்பர் டூ வா பிந்து மாதவி . இவருக்கு பிளஸ் என்னன்னா இவருக்கு மேல் உதடை விட கீழ் உதடு  ஒரே ஒரு செ மீ அகலம் அதிகம். லிப்ஸ்டிக் போடாமயே இலஞ்சிவப்பு , ஆனா மெரூன் கலர் லிப்ஸ்டிக் போட்டு படுத்தறாங்க


 அடுத்து திமிறும் காட்டாறு , உருமும் குதிரை  ரீமா சென் . போலீஸ் ஆஃபீசரா வர்றார். கெத்து ஓக்கே ,  விஜயசாந்தி கம்பீரத்துல பாதி கூட வர்லை

http://tamilmaxs.com/wp-content/gallery/actress-piaa-latest-hot-gallery-at-sattam-oru-iruttarai-movie-teaser-launch/piaa-hot-spicy-gallery-at-sattam-oru-iruttarai-movie-teaser-launch-1.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1. உயிரே உயிரே உன்னை ஒரு வரம் கேட்கிறேன் அழகான மெலோடி நல்ல பிக்சரைசேஷன் , ஒளிப்பதிவு , லொக்கேஷன்ஸ்  எல்லாம் அழகு



2. படத்துல நல்ல கண்ணுக்கு குளிர்ச்சியா 3 ஃபிகருங்க ( அதுல 1 ஆண்ட்டி ) ளை வளைச்சு போட்டது . பிந்து + பியா 2 பேரையும் படம் பூரா நல்லா வேளை வாங்குனது  ( நடிப்பில் அல்ல )


3. படத்துக்கு தேவை இருக்கோ இல்லையோ ஒரு லிப் கிஸ் டூ பிந்து மாதவி

இளைய தளபதி அருகில் இருப்பது படத்தின் இயக்குநர்

http://haihoi.com/Channels/cine_gallery/sattam-oru-iruttarai-movie-onlocaton14_S_162.jpg



 இயக்குநரிடம் பல சரமாறி கேள்விகள்



1. ஹீரோயினை வில்லன்க 3 பேரும் கார்ல அடிச்சுட்டு போறாங்க, அப்போ ஹீரோ ஐஸ் க்ரீம்கடைல ஐஸ் வாங்கிட்டு இருக்கார். கடைக்காரர் சொல்லித்தான் ஹீரோவே கொலையைப்பார்க்கறார். அவர் போய் ஹீரோயினைப்பார்த்து அழுது 3 நிமிஷத்துக்குள்ள கார் பறந்திருக்கனும், ஆனா 4 நிமிஷம் கழிச்சு ஒரு வில்லன் “ டேய், அவ என்ன ஆனா?னு பாரு?” அப்டினு சொல்ல  3 பேரும் எதுக்கு அங்கே பார்த்து தங்களை ஹீரோவுக்கு அடையாளம் காட்டறாங்க?வந்தமா? கார்ல இடிச்சமா?ன்னு போய்ட்டே இருக்கறதுதானே? கேனங்க மாதிரி தங்கள் முகத்தை ஏன் காட்டனும்?



2. வில்லன் பாட்டுக்கு  துரை  தயாநிதி மாதிரி தலைமறைவா ஃபாரீன்லயே இருந்தா ஹீரோவுக்கு அவன் எங்கே இருக்கான்னே தெரியாது . பேக்கு மாதிரி வில்லன் ஒரு பஞ்ச் டயலாக் பேசிட்டு வர்றார்  “ எமனுக்கு இன்விடேஷன் தர்ற முத ஆள் நீதான்” அப்டினு சவடால் பேசி லூஸ் மாதிரி இங்கே வந்து உயிரை விடறார்.. ஹய்யோ அய்யோ



3. போலீஸ் விசாரனைக்கு அழைக்கப்பட்டு வந்திருக்கும் ஈரோடு  மகேஷ் , பிந்து மாதவி 2 பேரும் ஆக்சுவலி பம்மிட்டு இருக்கனும், ஆனா பிந்து சொல்லுது “ நீ ஆம்பளையா இருந்தா எங்க காலேஜ் பக்கம் வந்து பாரு” இப்படி சொல்லிட்டு ஒரு பொண்ணு போலீஸ் ஸ்டேசனை  விட்டு வெளீல போயிட முடியுமா? இப்போ ரேப் சீசன் வேற .மகேஷ் காமெடிங்கற பேர்ல போலீஸை கலாய்ப்பது படு கேவலம் , இப்படி எல்லாம் நிஜத்துல நடந்தா லாடம் கட்டிடுவாங்க




4. ஒரு சீன்ல ஈரோடு மகேஷ் போலீஸ் கமிஷனர்ட்ட

“ சார் , உங்களுக்கு ஒயிஃப் இருக்கா?

இருக்கு ஏன்?

 ஒயிஃபை கூட்டிக்கொடுப்பதும் ,  நண்பனைக்காடிக்குடுப்பதும் ஒண்ணுதான்

 அப்டினு பஞ்ச் டயலாக் பேசி ஹாயா வெளீல வந்துடறார். போலீஸ் கமிஷனர் தேமேன்னு பார்த்துட்டு இருக்கார் . சென்சார்ல எப்படி விட்டாங்க? கைதட்டல் வரும்னு நினைச்சாங்க போல.. ஒரு பய கண்டுக்கலை



5. லாக்கப் ரூம்;ல  ராதாரவி & கோ சீட்டு விளையாடிட்டு இருக்காங்க, அப்போ கமிஷனர்   & போலீஸ் பட்டாளமே வருது , யாரும் எந்திரிச்சு நிக்கலை. போலீஸும் என்னப்பா விளையாடிட்டு இருக்கீங்க?ன்னு கேட்கலை



6. கொலையாளையை பியா ஃபோட்டோ எடுக்குது.  ஆனா டி வி ல  அவர்  எடுத்த வீடியோ காட்சின்னு ஒளிபரப்பறாங்க. அடுத்த சீன்ல யே வில்லன் “ அவ ஃபோட்டோதானே எடுத்தா? ஒரு ம... ரும் புடுங்க முடியாதுங்கறார், அதுக்கு அடுத்த சீன்ல ஹீரோ  வீடியோ அப்டிங்கறார், எடிட்டிங்க்ல கூட கவனிக்கலையா?



7. பியா தன் பாய் ஃபிரண்ட்னு முதல் முதலா ஹீரோவை தன் அக்கா கிட்டே அறிமுகம் பண்றா , முதன் முதலா  ஹீரோவைப்பார்க்கும் பியாவின்  அக்கா ஸ்வீட் பாய்னு ஹீரோ முகத்தை தடவிக்குடுக்குது , எதிர்ல்யே  அக்கா புருஷன் மிக்சர் சாப்பிட்டுட்டு நிக்கறாரு  ஹய்யோ அய்யோ



8. ஹீரோ ஹீரோயினை  ஃபாரீன்ல மீட் பண்றார். நீ யார்? எதுக்கு  நாலஞ்சு டைம் என் லைன்ல யே கிராஸ் பண்றே? அப்டினு ஹீரோயின் கேட்டதும்  ஹீரோ விதி நம்ம தலை விதி நாம லவ் பண்ணனும்னு இருக்குன்னு உளர்றாரு, அதுக்கு அந்த பதி விரதை சொல்லுது “ ஓக்கே இதே ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ்ல காலைல இருந்து மாலை வரை ரவுண்ட் அடிப்போம் , எதேச்சையா நாம மீட் பண்ணிக்கிட்டா லவ் க்கு ஓக்கேன்னு கெக்கே பிக்கேக்கேன்னு இளிச்சுக்கிட்டு சொல்லுது. அதே போல் மீட் பண்றாங்க , அந்த கேனம் தன் மோதிரத்தை கழட்டி ஹீரோவுக்கு போட்டு விட்டு  கி கி ந்னு இளிக்குது,.இதான் லவ்வா? ஹய்யோ


9 ஹீரோயின் ஒல்லி , அவங்க மோதிர விரல்ல போட்டிருக்கும் மோதிரம் பாடியா இருக்கும் ஹீரோ சுண்டு விரல்ல கூட பொருந்தாது , ஆனா க்ளோசப்ல காட்டறாங்க  , கனகச்சிதமா நாஞ்சில் , அதிமுக மாதிரி பின்னிப்பிணைஞ்சிருக்கு , எப்படி?


10. ஹீரோ 2 வதா ஒரு கொலை பண்ணிட்டு ஹேரே போச்சுன்னு போய்ட்டே இருக்கறதுதானே? எதுக்கு லூஸ் மாதிரி போலீஸ்க்கு ஃபோன் பண்ணி லொக்கேஷன் சொல்லி மாட்டிக்கறார்?


http://www.cinejosh.com/gallereys/movies/normal/sattam_oru_iruttarai_tamil_movie_stills_2111120956/sattam_oru_iruttarai_tamil_movie_stills_2111120956_033.jpg


11. ஹீரோவோட நண்பர்கள் 3 பேரும் ஹீரோவுக்கு முன்னாலயே ஹீரோயின் அங்கத்தை ஸ்டெப் ஸ்டெப்பா வர்ணிக்கறாங்க. என்ன கண்றாவிக்காதல் இது? கேனம் மாதிரி எல்லாரும் சிரிக்கறாங்க ஹீரோயின்க்கு கூச்சம்கிடையாதா? ஹீரோ தமிழனா? ஃபாரீனரா?



12. வில்லனை அரெஸ்ட் பண்ணும் போலீஸ்  ஏன் அவர் கிட்டே இருக்கும் செல் ஃபோனை கைப்பற்றலை? ஃபோனை ஆஃப் பண்ணச்சொல்லவும் இல்லை.. போலீஸ் ஒரு கைதியை  ஜீப்ல கூட்டிட்டுப்போகும்போது அவன் கிட்டே செல் ஃபோன் எல்லாம் விட்டு வைக்க மாட்டாங்க , போலீஸ் எதிரேயே அவன் செல் ஃபோன் எடுத்து பேசறான்



13. ஓப்பனிங்க் ஷாட்ல கொலை நடந்த இடத்தை பார்வையிட வரும் ரீமா சென் அங்கே இருக்கும் எஸ் ஐ கிட்டே அங்கே ஒரு கார் இருக்கே? அது யாரோடது? அப்டினு கேட்டபின் அந்த எஸ் ஐ பக்கத்துல நிக்கும் ஆசாமியிடம் அந்த கார் யாரோடதுன்னு கேட்கறார், அவருக்கு சொந்தமா கிட்னி நஹி?


14. ஹீரோ ஜிம்முக்குப்போறேன்னு சொல்லிட்டு ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டுப்போறார் ஹய்யோ அய்யோ



15. வில்லன் சுரேஷ்க்கு பவர் கண்ணாடியை பிடுங்கிட்டதும் அவர்க்கு கண் மங்கலாத்தெரியுது, சுத்தமா பார்வையெல்லாம் போகலை. அவர் பாட்டுக்கு ஒரு ஓரமா நின்னா மேட்டர் ஓவர் , அவர் ஏன் கேனம் மாதிரி ரோட்டை கிராஸ் பண்ணி வாகனங்கள் மேல மோதிக்கறார்?


16. அசிஸ்டெண்ட் கமிஷனர் கொலை நடந்த இடத்துக்கு வந்ததும் மீடியா கிட்டே “ அது விபத்து இல்லை கொலைன்னு பேட்டி தர்றார். அவர் இன்னும் இன்வெஸ்டிகேஷனே ஆரம்பிக்கலை அதுக்குள்ளே யாராவது லூஸ் டாக் விடுவாங்களா?


17. வாட் டூ யூ திங்க் அபவுட் மீ?

 நத்திங்க்

 இதே கான்வர்சேஷன் படத்துல ஹீரோ & ஹீரோயின் 13 டைம் பேசிக்கறாங்க, செம போர்



18. ஈரோடுமகேஷ் 1980ல வந்த SMS  ஜோகஸை சாரி மொக்கைகளை எல்லாம் சொல்லி அவரே சிரிச்சுக்கறாரு அம்மா தாங்க முடியல  . விகரமனின் சென்னைக்காதல்ல இப்படித்தான் கோவை குணா சொதப்பினார்.  ஈரோடு மகேஷ் மதுரை முத்து கிட்டே இருந்து கத்துக்க நிறைய இருக்கு. அவர் அப்பப்ப பத்திரிகக்கைகள்ல வர்ற அடுத்தவங்க ஜோக்ஸ் எல்லாம் மனப்பாடம் பண்ணி தன்னுது மாதிரியே சன் டி வி ல சண்டே காலை 10.30க்கு சுடச்சுட அப்டேட் பண்ணிடுவார், ஆனா மகேஷ் இன்னும் பழைய மொக்கைகளையே ஒப்பேத்துனா எப்படி?

http://g.ahan.in/tamil/Sattam%20Oru%20Iruttarai%20Movie%20Stills/Sattam%20Oru%20Iruttarai%20Movie%20(49).jpg



19. ஈரோடு மகேஷ் படத்துல  மொத்தம் 7 இடத்துல ஜோக் அடிக்கறார்.  ஒரு நமீதா சோற்றுக்கு ஒரு இலியானா பதம்கற மாதிரி ஒரு சாம்ப்பிள்

 ஹேய், ஹேப்பி தீபாவளி மாப்ளை

 டேய், இது பர்த் டே பார்ட்டிடா.. ஹேப்பி பர்த் டேன்னு சொல்லனும்


 ஹே ஹே ஹே ஹ்ய்ய்  அப்படியா ஹேப்பி பர்த் டே ஹே ஹே

 அப்டினு என்னமோ செம ஜோக் சொன்ன மாதிரி இவரே சிரிச்சுக்கறாரு


20 . ஹீரோவோட ஃபிளாஸ் பேக் கதை போலீஸ் ஆஃபீசர்  ரீமாவுக்கு ஆல்ரெடி தெரியும், ஆனா வில்லன்க 2 பேர் கொலை செய்யப்பட்டப்ப அவருக்கு தன் தம்பி மேல டவுட்டே வர்லை, ஆனா அவருக்கு கீழே ஒர்க் பண்ணும்  சாதா போலீஸ்க்கு டவுட் வருது ம் எபப்டி?




21. கொலையை நேரில் பார்த்த 2 ஹையர் ஆஃபீசர் இருக்கும்போது , ஹீரோ ஜெயில்ல இருந்ததா ஜெயிலர் சொல்லும் சாட்சி எப்படி செல்லுபடியாகும்? இது எப்படி இருக்குன்னா சி எம் ஜெ  ஒரு  கவர்னர் 2 பேரும் ஒரு அரசாணை வெளியிடும்போது டம்மி பீஸ்  ஓ பி எஸ் “ இது செல்லாது”ன்னு சொல்ற மாதிரி இருக்கு



22. ஹீரோவோட முதல் லவ்வர் கொலை செய்யப்ப்டறா. அடுத்த லவ்க்கு அட்லீஸ்ட் ஒரு வருஷம் கூடவா எடுத்துக்கக்கூடாது ? கிடைச்சா போதும்னு 2 வதுக்கு ஆள் ரெடி பண்றாரே? எப்படி? ஒரு சீன்ல கூட அவர் சோகமாவே இல்லையே? 

http://mimg.sulekha.com/tamil/sattam-oru-iruttarai/events/sattam-oru-iruttarai-movie-teaser-launch/sattam-oru-iruttarai-movie-teaser-launch-photos073.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்



1. பசங்களோட சேர்ந்து நீயும் பீர் குடிக்கறியே , இது உனக்கே நல்லாருக்கா?

 எஸ் , நல்லாருக்கே?


 ஷட்டப்



2.  புலிக்கு முன்னால போன மானும் , பொண்ணு பின்னால பொன ஆணும் பிழைக்க சான்ஸே இல்லை  ( 1989 எஸ் எம் எஸ் ஜோக்)





3.  ஏய்! என் செல் ஃபோன்ல சார்ஜ் இல்லை, சார்ஜ் ஏத்தித்தர்றியாடா?

 நான் சார்ஜ் ஏத்தினா ஏடாகூடம் ஆகிடும் ( டபுள் மீனிங்க் )




4. பசங்க மனசு ரஜினி மாதிரி , சொல்றதைத்தான் செய்யும் , செய்ய்றதைத்தான் சொல்லும், ஆனா பொண்ணுங்க மனசு சத்யராஜ் மாதிரி  அவங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியாது ( 2001 எஸ் எம் எஸ் ஜோக் )



 5.  என்னடா ஜிம் பாடின்னே , டெட் பாடி வந்திருக்கு ?  ( மவுலி யின் நாடக வசனம் )



6. உங்க தியேட்டர்ல மெயின் கேட் தவிர வேற ஏதாவது வழி இருக்கா?

 நோ மேடம், நீங்க சொன்னா இனிமே வேணா ஏற்பாடு பண்ணிடறேன் ( படத்தில் உள்ள ஒரிஜினல் ஒரே ஒரு ஜோக் இதுதான் )



7 . என்னடா , லவ் ஸ்டோரியை விளம்பரம் மாதிரி சுருக்கீட்டே?



http://southfilms.in/wp-content/gallery/sattam-oru-iruttarai-movie-stills/sattam-oru-iruttarai-movie-stills-9.jpg


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


 டெக்கான் கிரானிக்கல் ரேட்டிங் - 2.5 /5



சி.பி கமெண்ட் -  இந்த மாதிரி குப்பைப்படங்களை பார்க்காம இருப்பது உங்க டைம்க்கு, பர்சுக்கும் நல்லது. இந்த மக்கிய குப்பையை ஈரோடு தேவி அபிராமில பார்த்தேன்


http://www.123cinejosh.com/wp-content/uploads/2012/12/Bindu-Madhavi-Hot-Photos-At-Sattam-Oru-Iruttarai-Movie-Audio-Launch-12.jpg